Thursday, November 29, 2007

துச்சாதனர்களால் தான் நல்வழி பிறக்கும்

பிறவியில் மிகவும் பொறுமைசாலிகள் நாமெல்லாம்.
ஊரே பற்றி எரிந்தாலும், நம் வீட்டுக்குள் நெருப்பில்லை என்றால், அக்கடா என்று வேடிக்கை பார்க்கும் கூட்டம் நமது.

பட்டப் பகலில் நம் கண்முன்னே நடக்கும் பல கேடுகெட்ட அயோக்யத்தனங்களை, கண்டும் காணாமல், நம் பிழைப்பே பிரதானம் என்று சீரிய நடையில் செல்வது நமக்கு ரொம்பவே பழகிவிட்ட ஒன்று.

மலேரியா முதல் சிக்கன் குனியா வரை, கொசுக்களால் புதுப் புது வியாதிகள் வருவது தெரிந்தாலும், தெருவில் ஓடும் திறந்த சாக்கடையில் சாக்கடை தேங்குவதைப் பற்றி ஒரு நாளும் கவலைப் படாத கர்ம யோகிகள் நாம்.
சாக்கடையைத் தாண்டிச் செல்லும்போது மட்டும், மூக்கை நாசூக்காக மூடியபடி 'Dirty Fellows' என்று நாம் பக்கத்து வீட்டாரை திட்டுவதும், அவர்கள் நம்மை திட்டுவதும், தினசரிக் காட்சி.

தார் பார்த்து ஆறு வருடம் ஆன, ரோடு. வண்டியில் போகும் போது, மறவாமல், அரசாங்கத்தை அசிங்க அசிங்கமாக மனதிற்குள் வசைபாடி, டிப்-டாப்பாக அலுவலகம் செல்லும் கூட்டம் நமது.

தவறுகள் நடக்கும்போது நூற்றில் ஒரு பத்து பேராவது, எதிர்த்துக் கேட்டால் தான், தவறுகள் திருத்தப்பட, கொஞ்சமாவது வாய்ப்பிருக்கிறது.
'எவனாவது பாத்துப்பான்' என்னும் நமது ஒவ்வொருவரின் எண்ணம் தான், நம் இன்றைய நிலைக்குக் காரணம்.

இந்தியா மிளிரத்தான் செய்கிறது. நகரத்தின் வசதிகளும் பள பளப்புகளும் வியக்க வைக்கிறது. எப்படியோ இருந்த நாம், கடந்த பதினைந்து வருடத்தில் வளர்ந்த வேகம் பிரமிப்பு. ஆனால், சற்றே உள்புரம் புகுந்து பார்த்தால், நம் மக்கள் வாழும் வசிப்பிடங்களின் கீழ் மட்ட நிலை புரியும்.
சீரமைக்கப் படாத சாலைகள், சாக்கடைகள், என்று அடுக்கிக் கொண்டே போகலாம். இவை எல்லாம் சரியாகும் நாள் என் கண்ணுக்குப் புலப்படவில்லை. அதற்கான சின்ன அறிகுறி கூட தென்படவில்லை.

தெரிஞ்ச கதைதான், இது என்ன நமக்கு புதிதா என்கிறீர்களா?

புதிது இல்லைதான்.

ஒரு மந்த நிலையிலேயே வாழப் பழகிக் கொண்டு விட்டோம் நாமெல்லாம்.
சுலப வாழ்க்கை வாழ, எவ்வளவு கீழ்தரமாகப் போக முடியுமோ அவ்வளவும் இறங்கி வாழ்கிறோம்.
எவன் எக்கேடு கெட்டாலும் கவலைப் படுவதில்லை. நம் வயிறு நிறைவதே பிரதானமாய்க் கொண்டுள்ளோம்.

இன்றைய தினசரியில் அஸாமில் நடந்த கொடுமைகள் கலர் படங்களுடன் வந்திருந்தது.
பத்தாம் வகுப்பு ஆதிவாசி மாணவியை துகிலுரித்து நடு ரோட்டில் ஓட விட்டிருக்கிறார்கள் துச்சாதனர்கள்.
இன்னொரு பெண்ணின் உடையை கிழித்து, அவளது பிறப்புறுப்பில் காலால் எட்டி உதைக்கிறான் ஒரு கொடியவன்.

இதை எல்லாம் கண்டு வேடிக்கை பார்த்து உச்சு கொட்டியிருக்கிறது ஒரு கூட்டம். இன்னொரு கூட்டம், போட்டி போட்டுக் கொண்டு கேமரா ஃபோனில் படம் பிடித்து ஊரெல்லாம் பரப்ப்யிருக்கிறது பெண்னின் நிர்வாணத்தை.
ஊடகங்கள் சும்மா இருக்குமா? அவர்கள் பங்கிற்கு அவர்களும் பரப்பினார்கள் இந்த 'த்ரில்லிங்' காட்சிகளை. மக்களாகிய நாமும் கண்டு ரசித்தோம்.

இந்த அக்ரமத்தைக் கண்ட 'பர்மன்' என்ற 36 வயது மனிதர் மட்டும், கொஞ்சம் வித்யாசமாக, மனிதாபிமானத்தோடு, சிந்தித்து, செயல்பட்டிருக்கிறார்.
நிர்வாணமாக ஓடிய மாணவியைக் கண்டு பதறிப்போய் தன் சட்டையை கழற்றி அவளுக்கு மாட்டி, அவளை போலீஸ் வண்டியில் பாதுகாப்பாய் ஏற்றி காப்பாற்றியிருக்கிறார். அவளின் நிலை கண்டு கண்ணீர் விட்டாராம்.

ஆதிவாசிகள் 'பர்மனின்' கடையை சூரையாடிய பொழுதும், காழ்ப்புணர்ச்சி இல்லாமல், ஆதிவாசி மாணவிக்கு உதவி இருக்கிறார்.
ஆதிவாசிகளை தாக்கியவர்கள், கண்டிப்பாய் அஸாமியர்களாய் இருக்க முடியாது. அவர்கள் வேளி ஆட்கள். அஸாமியர்கள் நற்குணம் கொண்ட சாதுக்கள் என்று தன் இனத்தையும் விட்டுக் கொடுக்காமல் எல்லா பேட்டிகளிலும் சொல்லி வருகிறார்.

வழக்கம் போல், ஏதாவது ஒரு ஓட்டு ஓநாய், இதை எல்லாம், தூண்டிவிட்டு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்திருக்கும் என்பதில் ஐயம் இல்லை.

இந்த மாதிரி செய்திகளையெல்லாம் படிக்கும் போது, மனது பதறுகிறது.
கோபம் வருகிறது. எரிச்சல் வருகிறது. பல கேள்விகள் பிறக்கிறது.
இந்த மிருகங்கள் வாழும் நாட்டில் நாம் வாழ்கிறோம் என்பதே வெட்க்கக் கேடாகத் தோன்றுகிறது. எங்கிருந்த வருகிறது இத்தனை திமிர் இந்த ஓநாய்களுக்கு?

ஆனால், நாளிதழின் அடுத்த பக்கம் திருப்பியவுடன் இதை விடவும் சுவாரஸ்யமான சினிமா செய்தியோ, வேறு பல கிசு கிசுக்களோ வந்திருந்தால், ஆதிவாசிப் பெண் மறந்தே போகிறாள்.

நம்முடைய இந்த selective amnesia தான் ஓநாய்கள் தொடர்ந்து ஆட்டம் போட வழி வகுக்கிறது.

துச்சாதனர்கள் தொடர்ந்து செய்யும் அமளிகளைப் படித்துப் படித்து, எரிச்சல் ஏறி ஏறி, என்றாவது ஒரு நாள், இதற்கு மேலும் பொறுக்க முடியாது என்ற நிலை வரலாம்.

அப்படி நிகழ, இன்னும் ஒரு நாற்பது ஐம்பது ஆண்டுகள் ஆகலாம்.

அன்றுதான் ஒரு மாற்றம் பிறக்கும்.

இந்தியா, உண்மையில் மிளிர அன்றுதான் வழி பிறக்கும்.

துச்சாதனர்களே, தொடர்ந்து எங்கள் பெண்களை நிர்வாணமாக்குங்கள்.
அப்படியாவது எங்களுக்கு சொரணை பிறக்கிறதா என்று பார்க்கலாம்.

Rathnesh's related post here.



ஜெய்ஹிந்த்!

Monday, September 24, 2007

ஜெய் ஸ்ரீராம்! உடைத்தெறிவோம் பாலத்தையும், சூட்சிகளையும்!

தையோ, காவியமோ, சரித்திரமோ, ஏமாற்றும் தந்திரமோ, எப்படி வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும்.
டவுள் பலமுறை அவதரித்திருக்கிறான், ஒவ்வொருமுறையும் ஒரு குணாதசியத்தை வெளிப்படுத்தி, அதன் மூலம் மக்களுக்கு சில செய்திகளை சொல்லிச் சென்றிருக்கிறான், என்று வைத்துக் கொள்வோம்.

அவதாரங்களில் ஒன்று ராம அவதாரம். மனிதனாய் எடுத்த அவதாரம்.
மந்திரஜாலம் செய்யும் திறமை எல்லாம் இல்லாமல், சாதாரண மனதினாய் அவதரித்து, நம்மைப் போல் வாழ்ந்து, நாம் படும் இன்ப துன்பங்களை அனுபவித்து, அதன் மூலம், நல்லவை அல்லவைகளை புரிய வைக்க, கடவுளை ராமனாய் சித்தரித்து பல கதைகள்.

தந்தை சொல் தட்டாத நல்ல மகன்,
தம்பிமார் மேல் பாசம் கொண்ட நல்ல அண்ணன்,
பழகுவோர்க்கெல்லாம் நல்ல நண்பன்,
ஏக பத்னி வ்ரதன்,
இன்று போய் நாளை வா என்ற பெரும் குணம் கொண்ட நல்ல எதிரி,
என்று இவன் நற்குணங்கள் அடுக்கிக் கொண்டே போகலாம்.

அதே போல்
மனைவியை சந்தேகித்த அற்பன்,
மறைந்திருந்து வாலியைக் கொன்ற சூட்ச்சிக்காரன்,
சுயநலத்திர்க்காக பெரும் போர் தொடுத்து பல உயிர் மாய்த்தவன்,
என்றும் இவன் தீய குணங்களாகக் காட்டப் படுவதை அடுக்கிக் கொண்டே போகலாம்.

நாரதர் சொல்லி வால்மீகி எழுதி, இடையில் பலரும் பலவேறு கதைகளை பல்வேறு கால கட்டங்களில் நுழைத்து, கம்பனை போன்ற பல கவிஞர்கள் கற்பனையில் வரையப்பட்டு, இராமாயணம் ஒரு பெரிய காவியமாக உருப்பெற்றுள்ளது.

அதில் கூறப்பட்டதையெல்லாம் உண்மை என்று கண்மூடித்தனமாக நம்பும் ஒரு கூட்டமும் உண்டு. என் பாட்டி உள்பட.
தினமும் மாலை, ராமாயணத்திலிருந்து ஒரு பாடலை ஜெபித்தால், புண்ணியம் என்று, விளக்கு வைத்ததும், ராமாயணப் புத்தகத்தை தொட்டுக் கும்பிட்டு, ஒரு பாடலை வாசித்து விட்டுத்தான் அடுத்த வேலை பார்ப்பார்.
அதை ராகத்துடன் வாசிப்பதைக் கேட்க நன்றாய்த்தான் இருக்கும்.

ஒரு கதை நாயகனை கடவுள் என்று நம்பவைத்தது பெரிய விஷயம் தான். அந்த நம்பிக்கையில் பல்லாயிரம் ஆலயங்களும் பலகோடி பக்தர்களும் ராமனின் புகழ் பாடுவது ஆச்சரியமாய்த் தான் இருக்கிறது.
பலருக்கு வாழ்க்கையில் ஒரு பிடிப்பையும், சிலருக்கு வாழ்க்கையும் தரும் ராமன் ஒரு மகா அவதாரம் தான்.

ராமன் கடவுள் தான் என்ற நம்பிக்கை ஒரு புறம் இருந்துவிட்டுப் போகட்டும். ராமாயணக் கதையில் வரும் சம்பவம் அத்தனையும் நடந்தது என்று நம்புவது மடமை அல்லவா?

இலங்கையில் பத்து தலை கொண்ட ராவணன் இருந்தானா?
வானரப் படைகள் இருந்தனவா?
அனுமன் மலையைப் பெயர்த்துக் கொண்டு பறந்து சென்றானா?
சீதா மண்ணுக்குள்ளிருந்து குழந்தையாய்க் கிடைத்தாளா?

இதை எல்லாம் கூட நடந்ததாய் நம்புகிறீர்களா? அப்படி நம்புவது கற்றவர்களுக்கு அழகா?

வானரப் படை கல்லைத் தூக்கிக் கடலில் போட்டதாம், கல் மேலே மிதந்ததாம், அதில் நடந்து இலங்கைக்குச் சென்றார்களாம். கதாசிரியரின் கற்பனனயை பாராட்டலாம்.
ராமர் மேற்பார்வையில் கட்டிய பாலம் இன்னும் இருக்கிறதாம். அதை அழிக்கக் கூடாதாம். ஒரு கூட்டம் கொக்கரிக்கிறது.
ராமர் கடவுள் என்ற நம்பிக்கை உண்டா அந்த கூட்டத்துக்கு? கடவுள் வெறும் பாலம் மட்டுமா கட்டினார்?
உலகைப் படைத்ததும், அதில் உள்ள அனைத்தையும் படைத்ததும் ராமன் தானே?

நாட்டுக்குள்ளே உள்ள அனைத்து வனங்களும் அழிக்கப் படுகின்றன, கங்கையில் சாக்கடை கலக்கப் படுகிறது, மனிதனை உயிருடன் எரித்து காட்டுமிராண்டித்தனம் செய்கிறார்கள், பட்டினி கிடந்தே பல்லாயிரம் மக்கள் இறக்கிறார்கள் - இதையெல்லாம் தடுத்து நிறுத்த முதலில் யத்தனிக்க வேண்டாமா?

ஓட்டுப் பொறுக்கிகளாய் மட்டுமே இருக்கும் இந்த அரசியல் வாழ்க்கையில் எப்பொழுதுதான் மாற்றம் வரும்?

எங்கோ ஒரு மூலையில் இருக்கும் மணல் திட்டை காக்க ஏன் இவ்வளவு நேர விரையமும் உயிர் பலியும்?
கால்வாய் கட்டினால் பொருளாதாரம் உயரும், பலருக்கு வேலை வாய்ப்புக் கிட்டும் என்கிறார்களே? நடந்தால் நன்மைதானே?

பனாமா கால்வாய் கட்ட 20000 உயிர்கள் பலியானதாம். பல கிராமங்களும், வனங்களும் மூழ்கிப் போனதாம். ஆனால், இன்று செழிப்பான வளமையுடன், பொறுளாதார வளர்ச்சி பெற்று நன்றாகத்தானே இருக்கிறார்கள் அவர்கள்.

83 கோடி பேர் ஒரு வேளை உணவுக்கு வழி இல்லாமல் இருக்கும் அவலம் நம்மூரில். யாரையும் முன்னேர விடாமல் தடுக்கும் இந்தக் கயமை ஏன்?
எப்பொழுது அடங்கும் இவர்களின் சுயநல வெறி? அடுத்த சந்ததியாவது உருப்படும் என்ற ஆசையும், இந்த வீணர்களின் பொறுக்கித்தனங்கள் கண்டு, மங்கிக் கொண்டே வருகிறது.

திருந்துமா ஜென்மங்கள்?

0 மத்திய அரசும்,மாநில அரசும், நீதி மன்றங்களும், வல்லுநர்களும், ஒன்றாய் செயல் பட்டு, சேது கால்வாய் திட்டத்தின் நல்லவை கெட்டவைகளை ஆராய்ந்து, சடுதியில் இதை முடிக்க பாடு படவேண்டும்.

0 ஒரு மாநிலத்தின் முதலமைச்சர். ஐந்து முறை மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டு ஆட்சியில் அமர்ந்தவர். பெரும்பான்மை மக்களின் நம்பிக்கைகள் தெரிந்தும், குதர்க்கமாக வார்த்தை ஜாலம் செய்யும் மடமையைக் கைவிடவேண்டும். ஏதோ ஒரு முலையில் இருக்கும் குப்புசாமி அல்ல இவர். தோன்றுவதையெல்லாம், வாயிலிருந்து உதிர்த்து விட. திருக்குறள் தெரியாதவரா? சொல்லின் சக்தி தெரிந்தவர்தானே? பொறுப்பாக நடக்க வேண்டும். உயிர் சேதங்கள் விளைவிக்கும் வீண் வார்த்தை ஜாலம் இனியாவது தவிர்க்க வேண்டும். வயதுக்கேத்த பக்குவம் பேசுவதில் வேண்டும்.

0 காற்றிலிருந்து அமிர்தமே பிரித்து எடுத்து ஏழைக்குப் பசியார கொடுத்தாலும், எதிர்கட்சி செய்வது குற்றமே என்று ஓயாமல் கூப்பாடு போடும் ஓட்டுப் பொறுக்கிகள் ஒழிய வேண்டும். அன்று தான் உண்மையான ராம ராஜ்யம் ஏற்படும்.

0 ராமர் பெயரைச் சொல்லி, ஆட்சியைப் பிடிக்க எண்ணும் ஒரு காட்டுமிராண்டிக் கூட்டம். ராம ராஜ்யம் ஏற்படுத்த ராமருக்கு கோயில் கட்டியும், ராமர் கட்டாத மண் மேடையைக் காப்பாற்றினாலும் மட்டும் போதாது. ஐந்தாண்டு கால ஆட்சி கிடைத்ததே? இந்த வைராக்கியங்களை லஞ்சம் இல்லாத ஒரு இந்தியாவை உருவாக்குவதில் காட்டியிருக்கலாமே? செய்தீர்களா? கர சேவை என்ற பெயரில் காட்டிக் கூட்டிய பயங்கரவாதமே இன்னும் நினைவில் இருந்து அகல வில்லை. அதற்குள், மணல் மேடைக் காக்க வரிந்து கட்டிக் கொண்டு போடும் காவி வேஷம். தூ. வெட்கம் வெட்ட பிழைப்புவாதிகளே. ராமன் பெயரைச் சொல்லி கிராமங்களுக்கு சென்று கல்வி சொல்லித் தாரங்கள். குஷ்ட ரோகிகளுக்கு சேவை செய்யுங்கள். புண்ணியம் கிட்டலாம். ஆசிரமத்துக்குள் இருந்துகொண்டு தொப்பையை வளர்த்து வாய்ச்சவடால் விடுவது உடலுக்குக் கேடு. உங்களால் எங்களுக்கும் கேடு.

0 மூன்று மாதங்களில் போட்டு முடிக்க வேண்டிய ஒரு சின்ன சாலையைப் போட்டு முடிக்க மூன்று வருடங்கள் எடுத்துக் கொண்டு. 4 லட்சம் செலவு செய்ய வேண்டிய வேலையை, 3 கோடி செலவு செய்தும் சரியாகச் செய்யாமல், பாதிக்கும் மேலான பணத்தை திருடித் தின்னும் கூட்டத்தின் நடுவில், இவ்வளவு பெரிய கால்வாய்த் திட்டம் சரிவர செய்து முடிக்கப் படுமா என்ற பெரிய கேள்வி என் மனதுள் எழாமல் இல்லை. திருடித் தின்னுங்கள். சுரண்டித் தின்னுங்கள். ஆனால், எப்படியாவது, மக்களுக்கு வேண்டியதைச் செய்தும் முடியுங்கள்.

0 கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் (நான் உள்பட) ஒன்றை மனதில் கொள்ளுங்கள். ராமனே அந்தப் பாலத்தைக் கட்டியிருந்தாலும், மக்களுக்கு நல்லது நடக்க, அதை வெடி வவத்துத் தகர்த்தாலும், ராமன் யாரையும் தண்டிக்க மாட்டான். அப்படி தண்டித்தால், அவன் கடவுள் இல்லை. ஓட்டுப் பொறுக்கிகளை விட கேவலமான நிலையை அடைவான்.

0 பத்து அவதாரம் தான் கடவுளுக்கா? பத்துக்குப் பிறகு விடுமுறையில் இருக்கிறாரா கடவுள்? பதினோரு அவதாரமாய் எமக்கும் எம்மக்களுக்கும் ஒரு நேர்மையான, சுய நலம் இல்லாத தலைவன் கிட்ட வேண்டும்.

0 ராமனைப் பற்றிக் கேவலமாய் எழுதும் பதிவர்கள் கவனத்தில் கொள்ளுங்கள். ராமனை விரும்பும் பல கோடி மக்கள் உங்கள் மத்தியில் இருக்கிறார்கள். ராமன் அயோக்கியன் அல்ல. அவன் பெயரைச் சொல்லி அரசியல் செய்யும் பேடிகள் தான் அயோக்கியர்கள். தன் தந்தையையும் தாயையும் பழிக்கும்போது எழும் வேதனை, தன் கடவுளைப் பழிக்கும்போது சிலருக்கு எழும். அடுத்தவர் மனதை புண்படுத்தும் எழுத்துக்கள் எழுதவா படித்தீர்கள்? பகுத்தறிவை அழகாய் சொல்லத் தெரியவில்லையா உங்களுக்கு? அழகாய் அனைவருக்கும் புரியும்படி சொன்னால்தான், உங்கள் கருத்து பரவும், வாசிக்கப் படும். வீண் சவடால் எழுத்துக்கள் எரிச்சல் ஊட்டி, உங்கள் பகுத்தறிவு கொள்கை காட்டுமிராண்டிக் கொள்கையாகத் தான் காட்சி தரும். சுதாரித்து எழுதுங்கள். 2 BCல் எழுதப்பட்டதாம் ராமாயணம். இவ்வளவு காலமாய் இருக்கும் ராம பக்தி முறியடிக்க, ஞாயமான புத்திசாலித்தனமான வாதங்களால் மட்டும்தான் முடியும். எழுத்தொழுக்கம் இல்லா பதிவுகளால் முடியாது.

நல்லவை நடக்கட்டும். நல்ல புத்தி கிட்டட்டும். தீமையை நிறமறிந்து பிரித்துப் பார்க்கும் திறன் நம்மக்களுக்குக் கிடைக்கட்டும்.

ஜெய் ஸ்ரீ ராம்!

சேது சமுத்திர திட்டத்தைப் பற்றிய நல்ல விளக்கங்கள் இங்கே காணக் கிட்டும்.

உங்கள் நம்பிக்கையைப் பகிருங்கள். இந்த திட்டம் நல்லதா கெட்டதா? நடக்குமா நடக்காதா? நடக்க வேண்டுமா கூடாதா?

Thursday, August 30, 2007

எந்த ஆணும் மூழு ஆணல்ல

கீழே Click செய்து மேல் விவரங்கள் படிக்கலாம்.

......எந்தப் பெண்ணும் முழு பெண்ணல்ல!

Don’t harbor hatred, it only tears down your soul
Don’t hold grudges, it only eats you up whole
Smile, GOD has given you another day
Laugh, no matter what people say
Do good, it makes you feel a world apart
Love others, it’s good for your heart
Live, Laugh and Love – Life is too short not to

-Yorlanda Jackson

இந்த மாதிரி தமிழில் எழுதி பதியுங்களேன்.

தேங்கி நிற்கும் சாக்கடை விலகி, நீரோட்டம் பெருகட்டும்.

கவிதை வெள்ளப்பெருக்கில் கசடுகள் அகலட்டும்.

Wednesday, August 15, 2007

தேன்கூட்டில் சில புற்றீசல்கள்

எப்படியெல்லாமோ கஷ்டப்பட்டு, உழைப்பையும், பணத்தையும், சொந்த நேரத்தையும் செலவு செய்து ஒரு அழகான தேன்கூடு கட்டப்பட்டது.

கூட்டைக் கட்டியதும் தன் கடமை முடிந்ததென ராஜாத் தேனீ பறந்து வேறிடம் சென்றது.

தேனீக்களும் தன்னால் முடிந்த தேனை சேகரித்து, கூட்டை நன்றாகவே பேணிக் காத்தன.

ஆனால், யார் கண் பட்டதோ, புற்றீசல்கள் சில அந்த தேன்கூட்டை சூழ்ந்து, தேன் கெட்டுப் போகும் அளவுக்கு தங்கள் விகாரங்களை வித்திட்டன.

கூடு பிழைக்குமா? புற்றீசலின் கனம் தாங்காமல், தரையில் விழுந்து உடையுமா?

ராஜாத் தேனீ, வருத்தத்துடன் மேலிருந்து வட்டமிட்டுப் பார்த்துக் கண் கலங்குகிறது.

...................................................
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்.

புற்றீசல்களை பிய்த்தெடுத்து, தேனீக்கள் வாழ வழி பிறக்கட்டும்!

ஜெய்ஹிந்த்!
...................................................

Monday, August 06, 2007

ஆதிமூலம், சென்னை - by, மரக்காணம் பாலா

இன்னொரு துப்புரவுத் தொழிலாளியின் கண்ணீர் கதை. மரக்காணம் பாலாவின் புகைப்படங்களை மேயும் பொழுது கண்ணில் பட்டது.

யாராவது இந்த வேலை செய்தாகவேண்டுமே, இதை ஏன் இவ்வளவு பெரிது படுத்த வேண்டும் என்று எனக்கும் தோன்றியுள்ளது.
அமெரிக்காவிலும் கூட‌ இந்த வேலையை செய்பவர்களை டி.வியில் பார்த்திருக்கிறேன்.
ஆனால், அவர்களெல்லாம் உடல் முழுக்க மூடிக்கொள்ளும் ரப்பர் உடையும், முகத்தில் முகமூடியும் போட்டு பத்திரமாகத் தான் செய்வார்கள்.

ஆதிமூலம் உடம்பில் துணியும் இல்லை.
வேலை முடிந்து அவர் பேருந்தில் செல்ல முடியாதாம்.
நடந்தேதான் செல்வாராம். மற்றவர்களுக்கு நாற்றம் எடுக்கும் என்ற கவலை அவருக்கு.
கண்பார்வையும் சரியில்லையாம்.

ஹ்ம். பாவம், என்று தான் விடியுமோ இவர்களுக்கெல்லாம்.

நாமும் கூட, இந்த மாதிரி ஆட்களை வழியில் பார்த்தால், தூர விலகி நடந்து போய்விடுவோம்.

இனியாவது, ஒரு நிமிடம், அந்த மனிதர்கள் படும் வேதனையை சிந்தித்துப் பார்த்து, உங்களால் முடிந்தால், உங்கள் ஊரில் பொருப்பில் உள்ள‌ மேலாளர்களுக்கு எடுத்து கூறி ஏதாவது செய்யப் பாருங்கள்.

பூனைக்கு ஒருவர் மணி கட்டினால், பல ஊரிலும், பல ஆதிமூலர்கள் பயன் பெறுவார்கள்.

முழு சோகத்தையும் படிக்க இங்கே செல்லுங்கள்.

More Pictures - here & here.

ஹ்ம். இந்தியா ஒளிருமா?

மரக்காணம் பாலா, தொடரட்டும் உங்கள் பணி.
இப்படிப்பட்ட உண்மை சோகங்கள் படித்துப் படித்து, என்றாவது ஒரு நாள் நமக்கு சுரணை வந்து ஏதாவது நல்லது நடக்கும்.

Wednesday, June 27, 2007

நல்ல பதிவுகளை யாரும் சீண்டுவிதில்லையோ?

துப்புரவு தொழிலாளர்களின் வலியை நமக்கு உரைக்கும்படி இதைவிட யாரும் தெளிவாக எழுத முடியாது.

படித்துப் பாருங்கள்.

இந்தக் கையால தான சோறு அள்ளித் தின்றோம்

நம்மைச் சுற்றியுள்ள சுய தேவைகளை கவனித்துச் சுகிக்கவே நேரம் சரியாக இருக்கிறது.
ஹ்ம். மற்றவர்கள் குறைகளைக் காணும்போது, ஏக்கப் பெருமூச்சு விட்டே நம் வாழ்க்கை முடிந்து விடும்.

மற்றவர்களுக்காகவும் சிந்திக்கப் பழக வேண்டும்!

நம் சுய நலச்சிந்தனையை மாற்ற என்ன வழி?

Saturday, April 21, 2007

நீங்கள் சிகப்பா, நீலமா, வெள்ளையா, மஞ்சளா ?

இதற்க்கு முந்தைய பதிவில், ஒரு மனிதனின் குணாதிசியங்கள் எப்படி பிறப்பிலேயே நிச்சயிக்கப் படுகிறது என்பதைப் பற்றி எழுதியிருந்தேன்.

அதில் வந்த பின்னூட்டத்தில், இதைப் பற்றிய மேல் விவரங்கள் தேடிப் பகிருமாறு கேட்டுக் கொண்டார் அனானிமஸ் ஒருவர்.

இணையத்தில் அலசியபோது, சுவாரஸ்யமான ஒரு பக்கம் கண்ணில் பட்டது.

நான் முந்தைய பதிவில் கூறியிருந்த 'Personality test' ஒன்று இலவசமாக எடுத்துக் கொள்ள அந்தப் பக்கத்தில் வசதி உள்ளது.

அதில் கேட்க்கும் சின்ன சின்ன கேள்விகளுக்கு விடை அளித்தால், நிங்கள் சிகப்பு, நீலம், வெள்ளை, மஞ்சள் நிறப்பிரிவுகளில் எந்தப் பிரிவை சேர்ந்தவர் என்பதை சொல்வார்கள்.

இந்தப் பிரிவின் விளக்கங்கள் இங்கே:

RED (Motive: POWER)—These are the power wielders. Power, the ability to move from point A to point B, and get things done is what motivates and drives these people. They bring great gifts of vision and leadership and generally are responsible, decisive, proactive and assertive.

BLUE (Motive: INTIMACY)—These are the do-gooders. Intimacy, connecting, creating quality relationships and having purpose is what motivates and drives these people. They bring great gifts of quality and service and are generally loyal, sincere, and thoughtful.

WHITE (Motive: PEACE)—These are the peacekeepers. Peace, or the absence of conflict, is what motivates and drives these people. They bring great gifts of clarity and tolerance and are generally kind, adaptable, good-listeners.

YELLOW (Motive: Fun)—These are the fun lovers. Fun, or the joy of doing something just for the sake of doing it, is what motivates and drives these people. They bring great gifts of enthusiasm and optimism and are generally charismatic, spontaneous, and sociable.

என் நிறம் நீலம். நீங்களும் முயன்று பார்த்து உங்கள் நிறத்தை தெரிவியுங்களேன். - Click here.


ஜெய்ஹிந்த்!

Thursday, April 19, 2007

REAL HEROES are BORN, not MADE

1) நம் அனைவருக்கும் உள்ள சில முக்கிய குணாதிசியங்கள், பிறப்பிலேயே நிச்சயிக்கப்படுகிறதாம்.

நாம் அமைதியானவரா, சாதனை செய்யத் துடிப்பவரா, கொடுமைக்காரரா, வீரரா, கோழையா, சோம்பேரியா என்ற நிர்ணயங்கள் 99% பிறக்கும்போதே நடந்து விடுகிறது என்பது உண்மையா?

உண்மையாகத்தான் இருக்கும்.

எங்கோ பிறந்து எப்படியோ வளர்ந்து பெரிய நிலைக்கு வளர்பவர்களும், தாழ்பவர்களும், அவர்களின் உழைப்பை மட்டுமே கொண்டு அந்த நிலை அடைகிறார்கள் என்பது உண்மைதான்.
ஆனால், அந்த உழைப்பை செய்ய வைப்பதும், செய்யாமல் இருக்கச் செய்வதும், தன் உடம்பில் உள்ள ஏதோ ஒரு காரணியின் வேலையாகத் தான் இருக்க வேண்டும் என்பது கணிப்பு.

ஒருவரின் இயற்க்கையான சக்தி என்ன (natural talent) என்பதை கண்டறிய, பல ஆராய்ச்சியாளர்கள், பல விதங்களில் வழிமுறைகளை வகுத்துள்ளார்கள்.
'Personality tests' எனப்படும் இவை, management நிலை ஆட்களை வேலைக்கு அமர்த்தும் முன்னர் அவர்களின் இயற்க்கை சக்தியை கண்டறிய பயன்படுத்தப் படுகிறது.

அதென்ன இயற்க்கை சக்தி, செயற்க்கை சக்தி என்று இருவித சக்தி இருக்கிறதா என்ன?

இருக்கிறதாம்.

ஒருவனுக்கு 'தலைவனாக' வேண்டிய குணாதிசியங்கள் இயற்க்கையில், இல்லாமல் போகலாம். ஆனால், தன் கடின முயற்ச்சியால், தன் இயற்க்கை குணாதிசியத்திலிருந்து சற்று மாறுபட்டு (bend from natural abilities), தலைவனாகும் திறமையை கற்றுணர்ந்து உண்டாக்கலாம் (acquired talent).
ஆனால், இந்த கற்றுணர்ந்து உண்டாக்கிய திறமையை நீண்ட காலம் பிரயோகித்தல், ஒருவருக்கு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ப்ரச்சனையை (stress) உண்டாக்கலாம்.

சிலரை பார்க்கும்போது, எப்பொழுதும், சிரித்த முகத்துடன், சந்தோஷமாக இருப்பார்கள்.
சிலர், எப்பொழுதும், ஒரு மன உளைச்சலுடன் இருப்பார்கள்.

இந்த முதல் ரகம், தங்கள், 'இயற்க்கை சக்தி'க்குட்பட்ட வேலையை செய்பவர்கள்.
இரண்டாம் ரகம், 'இயற்க்கை சக்தி'யால் செய்ய முடியாத வேலையை கொஞ்சம் சிரமப்பட்டுச் செய்பவர்கள். வெளியில் அப்பட்டமாக தெரியாவிட்டாலும், இது தான் இவர்கள் இருவருக்கும் இருக்கும் வித்யாசமாம்.

குப்பைமேட்டில் இருந்து, தலைவன் உருவாவதர்க்கும்,
அரண்மனையில் உதவாக்கரை உருவாவதர்க்கும் இந்த 'இயற்க்கை சக்தி' யே காரணமாய் இருக்கும்.

Nature has reasons for everything. நமக்குப் புலப்படாதவை பல இருக்கு.

ஒருவனின் திறமை, பிறப்பிலேயே முடிவு செய்யப்பட்டால், பிறகு எதர்க்கு உழைக்க வேண்டும் என்று நீங்கள் எண்ணலாம்.
வைரமே ஆனாலும், பட்டை தீட்டினால் தான் பிரகாசிக்கும்.
வைரம்தானே என்று அப்படியே விட்டுவிட்டால், கரிக்கட்டையாகத்தான் தோற்றமளிக்கும்.

வைரத்தைவிட சற்று குறைந்த ரக கல்லாயிருந்தால். அதை ஓரளவுக்குத்தான் பட்டை தீட்ட வேண்டும். நாமும் வைரம் ஆகலாம் என்று பட்டை தீட்டிக் கொண்டே இருந்தால், கல் உடைந்து விடும்.

எதையோ படிக்கப் போய், வேறு எதுவோ கண்ணில் பட வந்த வினை இந்த பதிவு.

புரிந்தவர்கள், மேல் விவரங்கள் கொடுங்கள்.
புரியாதவர்கள், கேள்விகளைக் கேளுங்கள்.

2) தலைப்புக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?

இந்த வார badnews, அமெரிக்காவில் உள்ள ஒரு கல்விச்சாலையில், 23 வயது "சோ" என்ற மாணவன், தன் சக மாணவர்களை சுட்டுக் கொன்றது.
காரணமே இல்லாமல், ஒரு வித மன உளைச்சலால் பாதிக்கப்பட்டு, இந்தக் கொடூரச் செயலைச் செய்துள்ளான் என்று சொல்கிறார்கள்.

Librescu என்ற எழுபது வயது பேராசிரியர், துப்பாக்கியுடன் வந்த "சோ"வை தன் வகுப்பறைக்குள் நுழைய விடாமல், வாசலை மறித்து நின்று தன் மாணவர்களை காப்பாற்றி தன் உயிரைக் கொடுத்தாராம்.
அதைப் படிக்கும்போதே கண்ணில் நீர் பெருகியது.
இந்த மனதிடம் உங்களுக்கும் எனக்கும் வருமா என்று தெரியாது.
நம்மில் பலர், தெருவில் ஒருவனுக்குத் துன்பம் என்றால், எதிர் திசையில் அவனை பாராமல் நடக்கப் பழகியவர்கள்.
Librescu போன்ற பெரியவர்கள், பெரியவராகவே பிறக்கிறார்கள். உருவாக்கப் படுவதில்லை.

911 சம்பவம் நடந்த அன்று United-93 என்ற விமானம் மட்டும், தீவிரவாதிகள் எண்ணப்படி, Washington Capitol கட்டடத்தில் இடிபடாமல், அதர்க்கு பல மைல் முன்னாலேயே விழுந்து நொறுங்கியது.
தன்னுயிர் பற்றிக் கவலைப் படாமல், பிற உயிருக்காக போராடிய, சில விமானப் பயணிகளின் தீரச் செயலால் நிகழ்ந்தது அது.
மிகவும் கடினமான சூழ்நிலையிலும், பிறரைப் பற்றி எண்ணி, தன்னுயிர் பற்றி கவலைப்படாமல் இருந்த HEROES நிச்சயம் பிறப்பிலேயே அப்படி வந்தவர்களாகத் தானிருக்க வேண்டும்.
(United93 என்ற திரைப்படம் கிடைத்தால் பாருங்கள்).

எஸ்.கே அவர்களின் கவிதையில் அனுஷா என்ற 10 வயது சிறுமியை பற்றிச் சொல்லியிருந்தார். பள்ளிக்குச் சென்ற வழியில், வாகனத்தில் அடிபட்டு மறைந்த துயரம் கொடுமை.
ஆனால், இந்த வயதிலேயே "நல்லவராய் இருந்தால் பத்தாது. நல்லது செய்ய வேண்டும்" என்ற உணர்வைக் கொண்டவளாய் இருந்திருக்கிறாள்.
அவள் மறைவுக்குப் பிறகு, அவளின் உடல் உருப்புக்களை தானமாய் கொடுத்த, அவளின் பெற்றோரின் மனம் எவ்வளவு உயர்வானது பாருங்கள். They are HEROES too, and they are born that way.

3) நாம் HEROES எல்லாம் ஆக வேண்டாம். ஆனால், நமக்குக் கிடைத்த இயற்க்கை சக்தியை வைத்து, கண்டிப்பாய், ஒரு மரம் நடுதலோ, ஒரு ஏழைக்கு கல்வி அறிவு கிடைக்கச் செய்வதோ, துப்புரவாக நம் சுற்றத்தை வைத்துக் கொள்வதோ செய்ய முடியும், சின்ன விதயாசங்கள் காட்டி 'வேடிக்கை மனிதனாக' வாழ்ந்து கழியாமல் இருக்க முடியும்.

நீங்கள் உயிரைக் கொடுக்க வேண்டாம். உங்கள் குழந்தைகளும், பேரக் குழந்தைகளும் வாழ நல்ல சூழலை உருவாக்கினால் போதும்.
GLOBAL WARMING என்ற slow poisoning வளர்ந்து கொண்டிருக்கிறது. 100 வருடங்களுக்குப் பிறகு தாக்கும் என்பதெல்லாம் போய், இப்பொழுது, 30 வருடத்துக்குள்ளரே, பெரிய சீற்றங்கள் நடக்கப் போகிறது என்கிறார்கள்.

நமக்கென்ன என்று மெத்தனமாய் இல்லாமல், உங்களால் முடிந்த 'சேமிப்பை' செய்து, இயற்க்கையை காப்பாற்றுங்கள்.

நானும் செய்கிறேன்.

Belated, தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

ஜெய்ஹிந்த்!

பி.கு: BadNewsIndia பக்கத்தில், ஊருக்கு உபயோகமான, நல்ல விஷயங்களை எடுத்துச் சொல்ல கட்டுரைகள் வரவேற்க்கப்படுகின்றன. உங்கள் பெயருடனோ, அனானிமஸாகவோ எப்படி வேண்டுமானாலும், உங்கள் விருப்பப்படி பிரசுரிக்கலாம்.
விருப்பம் உள்ளவர்கள், உங்கள் கட்டுரையை எழுதி எனக்கு அனுப்புங்கள். badnews_india at yahoo.com என்ற முகவரிக்கு. நீங்கள் எழுதுவதை மறு பிரசுரமாகவும் ஆக்கலாம். தெரியப் படுத்துங்கள்.

Monday, April 02, 2007

பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு - உதவி தேவை

Merit அடிப்படையில் இல்லாமல், ஒருவரின் சாதி அடிப்படையில் வழங்கப்படும் இட ஒதுக்கீடு எனக்கு சிறுவயதிலிருந்தே புரியாத புதிராகத்தான் இருந்தது.

ஓரளவுக்கு விவரங்கள் புரிய ஆரம்பித்த கல்லூரி நாட்களில், ஒடுக்கப்பட்டவர்களுக்காக உருவான இந்த இட ஒதுக்கீட்டின் அவசியம் புரியத் துவங்கியது.

ஆனால், 8 லாரி சொந்தமாக வைத்துக் கொண்டு 'தொழிலதிபராக' வாழ்ந்து வந்த 'ராஜாங்கம்' என்பவரின் மகனுக்கும் இந்த இட ஒதுக்கீட்டினால் லாபம் கிட்டியது.

சின்னக்கண்ணு என்ற வண்டிக்காரர். ஒரே ஒரு குதிரை வண்டி அதை இழுக்கும் நோஞ்சானான ஒரு குதிரைக்கும் சொந்தக்காரர். Mortuary யிலிருந்து, பிணத்தை வீட்டுக்கு எடுத்துச் செல்ல உதவும் கடின வேலை. இவர் மகனுக்கும் இந்த இட ஒதுக்கீட்டினால் லாபம்.

சின்னக்கண்ணுவுக்கு, கண்டிப்பாக இந்த இடஒதுக்கீட்டின் பலன் கிடைக்க வேண்டும். அவர் மகன் படிக்க உதவ வேண்டும். அவர் மகன் நல்ல வேலையில் சுலபமாகச் சேரவும் உதவ வேண்டும்.

ஆனால், ராஜாங்கத்திற்க்கு இந்த 'சுலப' வழி எதற்க்கு? அவர் பிள்ளை merit அடிப்படையில், survival of the fittest உலக நியதிப்படி, போராடி முன்னேறட்டுமே?

அவரை ஒதுக்கினால், சின்னக்கண்ணுவை போல் உண்மையாக கஷ்டப்படும் இன்னொரு நல்லக்கண்ணு பிழைப்பான் இல்லையா?

பொருளாதார அடிப்படையில், இட ஒதுக்கீடு வழங்குவதில் என்ன பிழை இருக்கிறது?
இதை முறைப்படுத்துவது கஷ்டமான காரியம்தான் - அதற்க்காக செய்யாமல் இருப்பது நியாயமா?

am I missing something?

தெளிவு படுத்துங்களேன். வேறு யாராவது இதைப்பற்றி பதிவு எழுதியிருந்தால் பின்னூட்டத்தில் தெரியப்படுத்தவும்.

எனக்குத் தெரிந்த யாருமே, இட ஒதுக்கீட்டுக்கு எதிராளி கிடையாது.

சரியான புரிதல் கிடைத்தால், அனைவரும் ஒரே குரல் எழுப்பலாமே?

உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்.

நன்றி.

Friday, March 30, 2007

Happy April 1st

பிற்படுத்தப்பட்டோரின் முன்னேற்றத்துக்காக உருவாக்கப்பட்டது இட ஒதுக்கீட்டுத் திட்டம்.

பிற்படுத்தப்பட்டோர் இந்த திட்டத்தினால் முன்னேறிய பிறகு, இட ஒதுக்கீட்டின் அவசியம் இருக்காது என்று இதை நிறுவும் போதே அன்றைய தலைவர்கள் கூறியிருந்தார்கள்.

ஆனால், ஒவ்வொரு தேர்தலின் போதும் அரசியல் கட்சிகள் இடஒதுக்கீட்டை, துருப்புச் சீட்டாக பயன் படுத்தி, இதை அணையா விளக்காக காத்து வருகிறார்கள்.

தேர்தலில் ஓட்டு சேகரிக்கும் தந்திரமாக இதை பயன் படுத்த துவங்கியதால், அதற்க்கு பங்கம் விளைவிக்கும் எல்லா ஏற்பாட்டையும், இரும்பு கரம் கொண்டும், குள்ள நரி வித்தைகள் கொண்டும் தடுத்து வருகிறார்கள் நம் இன்றைய தலைவர்கள்.

100 குழந்தைகள் படிக்கும் பள்ளியில், 80 நோஞ்சான் குழந்தைகளும் 20 புஷ்டியான குழந்தைகளும் இருந்தார்கள்.
இந்த 80 நோஞ்சான் குழந்தைகளுக்கு புஷ்டி ஆகாரம் கொடுத்தால் நன்றாய் படித்து முன்னுக்கு வருவார்கள் என்று பல வருடங்களுக்கு முன் சட்டம் தீட்டி செயல் படுத்தினார்கள்.
இந்த நல்ல திட்டத்தினால் 80 குழந்தைகளும் புஷ்டி ஆனார்கள், முன்னேறினார்கள்.

ப‌ள்ளியில் மேலும் 100 குழந்தைக‌ள் சேர்ந்த‌ன‌ர். இதிலும் 80 நோஞ்சான், 20 புஷ்டி.
இப்பொழுது, ஒட்டு மொத்த‌மாக‌ 120 புஷ்டியும், 80 நோஞ்சான் பிள்ளைக‌ளும் இருந்த‌ன‌ர்.
இதில், புஷ்டி ஆகார‌ம் 80 நோஞ்சான் பிள்ளைக‌ளுக்கு வ‌ழ‌ங்கினால், ஏற்க‌ன‌வே உண்டு கொழுத்த‌ 80 பிள்ளைக‌ளும் இதில் ப‌ங்குக்கு வ‌ருகிறார்க‌ள்.
குழ‌ம்பிய‌ நிர்வாக‌மும் இருக்கும் 80 உண‌வு பொட்ட‌ள‌த்தை 160 குழந்தைக‌ளுக்கு பிரித்து வ‌ழங்கிய‌து.
ஏற்க‌ன‌வே புஷ்டியாகிய‌ பிள்ளைக்கு பெரிய‌ பாதிப்பில்லை. புதிதாக‌ சேர்ந்த‌ நோஞ்சான் பிள்ளை பாவ‌ம், புஷ்டியாக‌ வ‌ழியே இல்லாம‌ல் நலின்தே கிட‌க்கிற‌து.

ஏற்க‌ன‌வே புஷ்டியாக‌ உள்ள‌வ‌ர்க‌ளையும், ச‌த்துண‌வு வ‌ழ‌ங்கி புஷ்டி ஆக்க‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளையும், ச‌ரியாக‌ பிரித்து அறிந்து உண்மையான‌ நோஞ்சான் பிள்ளைக்கு ச‌த்துண‌வு வ‌ழ‌ங்க‌ வேண்டும்.

இதைச் ச‌ரியாக‌ செய்யத் தெரியாம‌ல் இருப்ப‌து ப‌ள்ளிக்கூட‌த்தின் நிர்வாக‌க் கோளாறு.

பிற்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌ வ‌குப்பை சேர்ந்த‌வ‌ர்க‌ள் ப‌ல‌ர் முன்னேறி இருக்கிறார்கள். (கலாம், நாராயணன் உள்பட) இந்த‌ முன்னேறிய‌வ‌ர்களில் பலர், நாம் தான் முன்னேறிவிட்டோமே, இனி இந்த‌ இட‌ ஒதுக்கீட்டை ந‌ம் பிள்ளைக‌ளுக்கு ப‌ய‌ன் ப‌டுத்தாம‌ல், உண்மையிலேயே ந‌லிந்த‌வ‌ர்க‌ளுக்கு வ‌ழி விடுவோம் என்று தானாய் எண்ணி‌ வ‌ழி விட‌ மாட்டார்க‌ள்.

பிற்ப‌டுத்த‌ப்ப‌ட்டோரில் முன்னேறிய‌வ‌ர்க‌ள், முன்னேறாத‌வ‌ர்க‌ள் யாரென க‌ண்ட‌றிந்து உண்மையில் வாடுப‌வ‌னுக்கு ச‌லுகைக‌ள் கிடைக்க‌ச் செய்வ‌து அர‌சின் க‌ட‌மை அல்ல‌வா?

சாதி அடிப்படையில் வழங்கி வரும் சலுகைகள், பொருளாதார ரீதியில் வழங்கச் செய்தல் எப்படித் தவறாகும்?

அப்படி வழங்கினால் தானே, இடஒதுக்கீட்டின் உண்மைப் பலன் கிட்டும்?

இந்தியா மாதிரி ஒரு பெரிய நாட்டில், பொருளாதார ரீதியாக மக்களை அளவெடுத்து, வரிசை படுத்துவது கடினம் தான்.

கடினம் என்பதால், ஒரு செயலை செய்யாமல் இருப்பது சரியா?
இதைக் கூட செய்ய முடியாத நாம் எப்படி வளர்ந்து வல்லரசாகப் போகிறோம்? இதற்க்கு ஒரு திட்டம் தீட்டி செயல் படுத்த முடியாத மடையர்களா நாம்? நம்மை நம்பியா அயல் நாட்டிலிருந்து வேலைகள் வந்து குவிகின்றன?

இந்த மாதிரி சர்ச்சை கிளம்பும்போதெல்லாம், பந்த், கடை அடைப்பு, போராட்டம் என்று திசை திருப்பி, முன்னேற்றத்துக்கான வழி கிடைக்காமலே செய்து வரும் கொடுமை என்று தான் மாறும்?

அரசியல்வாதி தானாய் திருந்துவானா? உச்ச நீதிமன்றம் இதையெல்லாம் சரியான பாதையில் வழி நடத்தத்தானே இருக்கிறது? உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமிக்கவே இட ஒதுக்கீடு வேண்டுமென்பது, கண்மூடித்தனமான, சிறுபிள்ளைத் தனம்.

இணையத்திலும், எல்லா சர்ச்சைகளுக்கும், கண்மூடித்தனமாக எதிர்ப்பையோ ஆதரவையோ வழங்காமல், அறிவுபூர்வமாக ஒவ்வொன்றையும் அலசவேண்டும்.

ஊருக்குள் இருக்கும், அரசியல் சார்பானவர்களின் நெறிகெட்ட செயல், இணையத்திலும் பரவ வேண்டாம்.

பாவம் நமது ஏழைகள். அவர்கள் வஞ்சிக்கப்பட்டவர்கள். நமது அரசாலும், நம்மாலும். அவ‌ர்க‌ளுக்கு தேவ‌யான‌ ச‌லுகைக‌ள் கொடுத்து, அதை அவ‌ர்களுக்கு ம‌ட்டுமே முழுதாகக் கிடைக்குமாறும் வ‌ழி செய்வோம்.

இன்னும் எத்தனை காலம்தான், ஏழைகளை ஏழைகளாகவே வைத்திருக்கப் போகிறோம்?

Happy April 1st!

thoughts?

-BNI

தினகரனில் ப்ரசுரமான, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் சாரம்:


More links on this topic:
ஏன் வேண்டும் இடஒதுக்கீடு - குழலி

வாழ்க சனநாயகம் - நாகை சிவா

இட ஒதுக்கீடும், இடைக்காலத்தடையும் - ravi srinivas

இடஒதுக்கீடு இடைக்காலத் தடை: நம் கடமை - Prince Ennares Periyar.S

என் சமுதாயமே விழித்தெழு!! - சிவபாலன்

பந்த் - யார் முட்டாள் - IdlyVadai

Saturday, March 24, 2007

செய்தி - தெய்வம் நின்று கொல்லும் - 2

மஞ்சுநாத் என்று ஒரு இளைஞர் இருந்தார்.
IIT, IIM எல்லாம் படித்துவிட்டு $ சம்பாதிக்க வெளிநாடுகளுக்கு செல்லாமல், உள்ளூரிலேயே வேலைக்கு சேர்ந்தார்.
Indian Oil Cororation (IOC) நிறுவனத்தில் விற்பனைத் துறையில் சேர்ந்தார்.

உத்தர் ப்ரதேசத்தில் உள்ள ஒரு பெட்ரோல் வினியோக நிலையத்தில், கலப்படம் செய்து டீஸல் விற்கப்படுவதை கண்டித்து, கடைக்கு ஸீல் வைத்துவிடுவேன் என்று எச்சரித்தாராம்.

லஞ்சம் வாங்கிக் கொண்டு, எவன் எக்கேடு கெட்டால் என்ன என்று நினைத்து அடுத்த வேலையை பார்க்கத் தொடங்காமல், தன் கடமையை நேர்மையாக செய்தவர் மஞ்சுநாத்.

ஆத்திரம் அடைந்த கடையின் முதலாளி Monu Mittal அடியாட்களுடன், மஞ்சுநாத்தை வெட்டிக் கொன்றுவிட்டான்.
November 2005 நடந்த இந்த நிகழ்ச்சி பெரிய துயரத்தைத் தந்தது.

இந்த வழக்கில் Monu Mittal உள்பட 8 ஆட்களுக்கு குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்க முடிவு செய்யப் பட்டுள்ளது.

மகனை இழந்து தவிக்கும் மஞ்சுநாத்தின் பெற்றோருக்கு, இது ஆறுதல் தரும் செய்தி.

மேலும் விவரங்கள் இங்கே இருக்கிறது - Manjunath

கொலைகாரர்களுக்கு தண்டனையும் வழங்கப்பட்டு விட்டது. Monu Mittal gets death sentence, while others receive life sentencing.
விவரங்கள் இங்கே - Click here.

Saturday, March 03, 2007

Google செய்யும் இந்தி திணிப்பு?

Google தரும் பல நல்ல சேவைகளில் Google News உபயோகிக்க எளிதான அருமையான சேவை.
செய்திகளை பிரித்து கட்டம் கட்டி அழகாக காட்டும் google news முகப்புப் பக்கம் உபயோகமான ஒன்று.

அதில், ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு பக்கம் அமைத்து அந்த நாட்டுக்கான செய்தியை பிரித்து வழங்கி வந்தனர்.

சைனா, ப்ரான்ஸ் போன்ற நாடுகளுக்கு அவர்கள் மொழியிலேயே பக்கம் அமைந்திருக்கும்.

இந்தியாவுக்கான பக்கம் ஆங்கிலத்தில் அமைத்திருந்தார்கள். சட்டென்று ஒரே பக்கத்தில் முக்கிய நடப்புகளை அறிந்து கொள்ள உதவிய பக்கம், இன்று பார்த்தால் 'ஹிந்தி'க்கு உருமாறியிருந்தது.

'ஹிந்தி' தெரியாத என்னைப் போன்ற பலருக்கு இது ஏமாற்றம் அளிக்கிறது. வரும் நாட்களில், மற்ற மாநில பாஷைகளுக்கும் பக்கம் அமைக்க முயற்சி செய்வார்கள் என்று நம்புகிறேன்.

Sensationalize செய்வதர்க்காக இடப்பட்ட தலைப்பு அல்ல; தெரிந்தவர்களிடம் விவரம் அறியலாம் என்ற அவாவில் வைத்தது. விவரம் தெரியாதவர்கள் என்னைப் போல் Google news உபயோகிப்பவர்கள், கூகிளிடமே முறையிடலாம் - Google Contact Us page.



Friday, March 02, 2007

ஏமாற்றாதே, ஏமாற்றினாலும் ஏமாறாதே!

மாற்றப்படுதல் என்பது நாம் அனைவரும் வாழ்க்கையில் பல இடங்களில் சந்தித்த ஒன்றே.

சிறு வயதில் 'காக்கா தூக்கிட்டு போச்சு' என்று, அம்மா விளையாட்டாக, நம் கையில் சிக்கக் கூடாத பொருட்களை, ஒளித்து வைத்ததில் இருந்து தொடங்குகிறது இந்த ஏமாறுதல்.
அம்மா, நம் நன்மைக்காகச் செய்யும் ஏமாற்றுதல் போல், சின்ன சின்ன ஏமாற்றுதல்கள் பெரிய அளவில் பாதிப்புத் தராது.

பள்ளிப் படிப்பில், சில ஆசிரியர்கள், தனக்கு பிடித்த மாணவனுக்கு எப்பொழுதும் சற்று தூக்கலாகவே மதிப்பெண் போட்டு, நம்மை 'கீழேயே' வைத்திருக்கும்போதும், ஏமாற்றம் பெரிய அளவில் புரியாது.

வளர்ந்து வயதாகி, கல்லூரி, வேலை என்று எத்தனிக்கும் போது கிடைக்கும் பல ஏமாற்றங்கள் வேதனையையும் விரக்தியையும் தரத் துவங்கும்.
சமுதாயம் ஏற்படுத்திய ஏமாற்றங்கள் ஒரு பக்கம், தனி மனிதனால் தொடுக்கப்படும் துரோகங்கள் ஒரு பக்கம்.
மகளின் திருமணம், பிள்ளையின் கல்வி, வீடு வாங்க சேமிப்பு என்று குருவி போல் பார்த்துப் பார்த்து சேமித்ததெல்லாம், அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு, துரோகிகளிடம் கொடுத்து ஏமாந்த கூட்டம் பெரிது.

அரசியல் ஏமாற்றங்கள் சொல்லி மாளாது. இந்தப் பதிவு அதற்காக அல்ல.

இந்த ஏமாற்றங்களை வடிவமைத்து ஒரு தொழிலாகவே செய்பவனை என்னதான் செய்வது? இவர்கள் இப்படித் துணிய யார் காரணம் - அவர்களுக்கு ஏற்பட்ட ஏமாற்றங்களும் விரக்திகளும் இருக்குமோ? அல்லது, சுலப வழியில் நோண்டித் தின்னும் கேவல மனம், இயற்கையே அவனுக்குத் தந்ததா?

இப்படி ஏமாற்றிப் பிழைக்கும் கூட்டத்துக்கு உண்ணும் உணவு ஜீரணிக்குமா?
மன நிம்மதி கிட்டுமா?
கிட்டுமென்றால், நாம் மட்டும் என்ன முட்டாள்களா -- நேர்மை தவறாமல் வாழ்வதர்க்கு?

ஒரு வேளை, இந்த உதவாக்கரைகளை தெய்வம் நின்று கொல்லுமோ?

எது எப்படியோ, ஏமாற்றுபவர்களின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. அவன் தானாய் திருந்தப் போகும் சூழல் நம் வாழ்நாளில் இல்லை.
ஒட்டு மொத்த சமுதாய முன்னேற்றமும், கல்வி அறிவும், விழிப்புணர்வுகளும் தான் நம் மக்களை ஏமாளிகள் ஆகாமல் இருக்க உதவும்.

அதிக வட்டி ஆசையூட்டி, நுட்பமான வழியில் கொள்ளை அடிப்பவனிடம் படித்தவனும் ஏமாந்துதான் போகிறான்.
இதே ரீதியில், Internet மூலமாக phishing எனப்படும் திருட்டு நுட்பம் கொண்டு பல கோடிக் கணக்கில் களவு நடக்கிறது.

இதே போல் (இந்த பதிவு எழுதக் காரணமான), 1-million dollar லாட்டரி விழுந்ததாகவும், அந்தப் பணம் நமக்கு வந்து சேர, ஒரு சிரிய தொகையை ( $100 ) அவர்களுக்கு processing fee அனுப்ப வேண்டும் என்றும் விதம் விதமான கதைகளுடன் ஈ.மெயில் அனுப்பும் ஒரு திருட்டுக் கூட்டமும் உண்டு.
அயல் நாடுகளில் இருக்கும் பலருக்கு, இது ஏமாற்று வேலை என்று தெரிந்திருக்கும்.

இந்தியாவில் இருக்கும் நண்பர்களுக்கு, இந்தப் புதிய திருட்டு நுட்பம் பற்றி, அதிகம் தெரியாததால், ஏமாறும் வாய்ப்பும் அதிகம். (ஒரு நண்பன் ஏமாறும் விளிம்பில் நின்று கொண்டிருந்தான். நல்ல வேளை மற்றவரிடம் விசாரித்ததால் பிழைத்தான்).

நண்பர்களே, ஒன்று தெரிந்து கொள்ளுங்கள் -
In this world, absolutely NOTHING comes for FREE.

இந்த மாதிரி மடல்கள் மூலம் வரும் மறைமுகத் திருடர்களிடமோ அல்லது நிஜ வாழ்க்கை திருடர்களிடமோ உங்களின் கடின உழைப்பால் வந்த பணத்தையோ, பொருளையோ கொடுத்து ஏமாறாதீர்கள்.
If its too hard to be true, it is probably a fake!

நண்பர்களே, உங்கள் சுற்றத்தில் இதுபோல் யாரும் ஏமாறாமல் இருக்க விழிப்புணர்வு கொடுங்கள்.

இதோ ஒரு சாம்பிள் திருட்டு மடல், உங்கள் பார்வைக்கு:
NO_22 ORANGE GROVE
JOHNNESSBURG
SOUTH AFRICA
+27-782-630-326

EMAIL:livinusjomo
ATTN:

Dear sir/madam,

With all due respect My good friend. My name is MR.LIVINUS JOMO, the eldest son of MR FRANK JOMO of ZIMBABWE. It might be a surprise to you where I got your contact address, I got it from the South African Information Network Online (SAINO)/South Africa Trade Centre.And it is coming to you with good intention. During the current crises against the farmers of Zimbabwe by the supporters of our President,ROBERT MUGABE to claim all the white owned farms in our country, he ordered all the white farmers to surrender their farms to his party members and their followers.

My father was one of the great and best farmers in the country and knowing that he did not support the president’s political ideology, the president’s supporters invaded my father’s farm burnt down everything, shot him and as a result of the wounds sustained, he became sick and died after five days.

And after his death, I with my younger brother decided to move out of Zimbabwe for the safety of our lives to South-Africa which is a neighbouring country. BUT, before he died HE WROTE HIS WILL, which reads"(MY BELOVED SON ,I WISH TO DRAW YOUR ATTENTION TO THE SUM OF($20,000,000=00).TWENTY MILLION U.S DOLLARS WHICH I DEPOSITED IN A BOX WITH A SECURITY COMPANY IN JOHANNESBURG (SOUTH-AFRICA). IN CASE OF MY ABSENCE ON EARTH CAUSED BY DEATH ONLY". You should solicit for reliable foreign partner to assist you to transfer this money out of SOUTH AFRICA for investment purpose. I deposited the money in your name and it can be claimed by you alone with the deposit code. your mother has all the documents. Take good care of your mother and brother."

From the above, you will understand that the lives and future of my family depends on this money as much, I will be very grateful if you can assist us. I with my younger brother are now living in South-Africa as POLITICAL ASYLUM SEEKERS and the financial law of SOUTH-AFRICA does not allow ASYLUM SEEKERS certain financial rights to such huge amount of money .In view of this, I cannot invest this money in South-Africa, hence I am asking you to assist me transfer this money out of South-Africa for investment purposes. For your efforts,

I am prepared to offer you 20% of the total fund,5% for charity, while 5% will be set aside for local and international expenses and 70% will be kept for me and my family . Finally modalities on how the transfer will be done will be conveyed to you once we establish trust and confidence between ourselves. Looking forward to your urgent reply .For detailed information, please contact me on my e-mail address or via my telephone.

NOTE: THE KEY WORD TO THIS TRANSACTION IS ABSOLUTE CONFIDENTIALITY AND SECRECY. THIS TRANSACTION IS 100% RISK FREE. YOUR URGENT RESPONSE WILL BE HIGHLY APPRECIATED.

REMAIN BLESSED.

LIVINUS JOMO
{for the family}

Tuesday, February 20, 2007

மரண கடிகாரம்

மரணத்தை பற்றி இந்தப் பதிவு எழுதியபோது, கண்ணில் பட்டது, இந்த

மரண கடிகாரம்.

முயன்று பாருங்கள். முடிவுகள் பார்த்து ரொம்ப யோசிக்கவோ/கவலைப் படவோ வேண்டாம்.

இருக்கும் நாட்களில், நல்லவை தொடர்வோம், தீயவை களைவோம்!

Life is too good to be spent, worrying.

மரணத்துக்கு பயந்திடு, தயாராகு, திட்டமிடு, உடனே!

மரணத்தை எண்ணிக் கலங்கிடும் விஜயா, மானிடர் ஆன்மா மரணம் எய்தாது. மறுபடிப் பிறந்திருக்கும், என்று கண்ணன் அர்ஜுனனைப் பார்த்து பாடுவது போல் ஒரு காட்சி கர்ணன் படத்தில் வரும். அடுத்தவரின் மரணத்துக்கு காரணமாவதைப் பற்றி கலங்காதே, கடமையை செய், என்று எடுத்துக் கூறும் பாடல்.

மரணம் ஒரு சாதாரண விதிக்கப்பட்ட நிகழ்வுதான். அதை எண்ணிப் பயந்து, நம் வாழ் நாளில், வாழ வேண்டிய நாட்களை அனுபவிக்காமல் இருப்பது முட்டாள் தனம்.

ஆனால், மரணம் அப்படியே புரம் தள்ள வேண்டிய விஷயமுமல்ல.

நாம் முற்றும் துறந்த சன்யாசிகளாக இருந்தால், மரணத்தை கண்டு பயப்படத் தேவையில்லை.

நம்மை சுற்றி ஒரு சார்பு வட்டம் இருக்கும் போது, மரணத்தை பயந்து தான் ஆக வேண்டியிருக்கிறது.

ஒரு பத்து நிமிடம் தனியாக அமர்ந்து சிந்தித்துப் பாருங்கள். இந்தக் கணம், உங்களுக்கு மரணம் வாய்த்தால் (god forbid), உங்களைச் சுற்றி என்ன நடக்கும்?

உங்கள் வாழ்க்கைத் துணை, பிள்ளைகள், பெற்றோர், உறவினர் என்று உங்களை சுற்றி இருக்கும் வட்டத்தில் வாழ்பவர்களின் அடுத்த சில நாட்கள் எப்படி இருக்கும்?

மனதளவில் துக்கம் வாட்டி எடுக்கும் அவர்களை.
அதர்க்கு உங்களால் ஒன்றும் செய்ய முடியாது.
ஒரு விதத்தில், அவர்கள் துக்கப் படுதலால், நீங்கள் வாழ்ந்த வாழ்வு அர்த்தமானது என்று புலப்படும்.
பலர் துக்கப்பட்டால், நீங்கள் வாழ்ந்த விதம் ஒரு எடுத்துக்காட்டாக இருந்தது என்றும் புலப்படும்.

உங்கள் பிரியமானவர்கள் மனதளவில் படும் துன்பத்திர்க்கு உங்களால் ஒன்றும் செய்ய முடியாது. செய்யத் தேவையுமில்லை. காலம் அதர்க்கான மருந்தை தினம் கொடுத்து, அவர்கள் வேதனையை மறையச் செய்யும்.

ஆனால், இது நாள் வரையில் நீங்கள் தூணாக இருந்து, பொருளாதார ரீதியில் அந்த வட்டத்தை தாங்கிப் பிடித்தவராயிருந்தால் உங்கள் மறைவுக்குப் பிறகு, உங்கள் பிரிய வட்டத்திர்க்கு, வாழ்க்கை பாரமாகிவிடும் அபாயம் இருக்கிறது.

தூணாக இருப்பவர்கள், இந்த 10 நிமிட சிந்தனையில், உங்கள் அன்பு வட்டத்தில் இருப்பவர்களின் பாரம் குறைய என்ன செய்ய வேண்டும் என்று சிந்திக்க வேண்டும்.

நம்மில் பலர், வங்கிக் கணக்கு, பங்குச் சந்தையில் முதலீடு, வீடு, மனை, காப்பீடு, என்று இன்னும் பல வகைகளில் நம் சம்பாத்யத்தை சேர்ப்பவர்கள்.
இன்னும் சிலர், சுய தொழில் செய்தும் வருபவர்கள் - இதில் வரவேண்டியவை, தர வேண்டியவை என்றும் பெரிய கணக்குகள் இருக்கும்.

இந்த கணக்குகள், முதலீடுகள் பற்றி எல்லாம் உங்களுக்கு மட்டும் தெரிந்தால் போதுமா?

அறிவியல் வளர்ச்சி, கணிப்பொறி, internet என்று வளர்ந்து வழும் சூழலில், முன்னர் இருந்தது போல், கையில் ஒரு 'திட' சாட்சியங்கள் கூட இருக்காது (bank passbook, deposit certificates, stock certificate,etc...). எல்லாமே e-வடிவில் தான் இருக்கும்.

திடீரென்று நீங்கள் விட்டுச் சென்றால், உங்களை நம்பி இருப்பவர்கள் நிலை?

அவர்களுக்கு தெரியாத இடங்களில் நீங்கள் முதலீடு செய்து வைத்திருக்கும் பொருள், அவர்களுக்கு கிடைக்காமலேயே போய்விடும் அபாயம் இருக்கிறது.

உங்களை வேதனைப் படுத்த எழுதிய பதிவில்லை இது.

இணைய நண்பன் சாகரன் கல்யாணின், மறைவு எழுப்பிய கேள்விகள் இவை.
என்ன செய்கிறார்கள் அவர் குடும்பத்தினர்?
தேன்கூடு ஆரம்பித்து, வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கிறதே, இப்படி ஒன்று இருப்பது அவர்களுக்குத் தெரியுமா? இன்னும் பல பல கேள்விகள் நெஞ்சில் எழுந்ததால் வந்த பதிவு இது.

நண்பர்களே, வேக வாழ்க்கை இது. ஒரு பத்து நிமிடம் ஒதுக்கி, முதலீடுகளை பட்டியலிட்டு, உங்களைச் சுற்றியுள்ள நம்பிக்கையானவர்களிடம் கொடுத்து வையுங்கள்.


தேவைப் படலாம்! தேவைப் படாமல் இருக்க ஆண்டவன் அருளட்டும்.

வேறு சுலப வழி தெரிந்தவர்கள், உங்கள் கருத்துக்களைத் தெரிவியுங்கள்.

இணையத்தில் வேறு ஏதோ தேடப் போனபோது கண்ணில் பட்ட: மரண கடிகாரம்.

நன்றி!

Saturday, February 17, 2007

செய்தி - தெய்வம் நின்று கொல்லும்

2000 ஜனவரியில், ப்ளெஸண்ட் ஸ்டே ஓட்டல் வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஓராண்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கியது அனைவருக்கும் ஞாபகம் இருக்கும்.

2001ல் ஜெயலலிதாவும் சகாக்களும் உத்தமர்கள் என்று கூறி நீதிமன்றம் இவர்களை அந்த வழக்கிலிருந்து பின்னர் விடுவித்தது.

இப்படி அடிக்கடி நடப்பது நம் நாட்டு அரசியலில் ஒன்றும் புதிதில்லை. எவ்வளவோ வழக்குகள் போடப் படுவதும், விலக்கிக் கொள்ளப் படுவதும் தினம் தினம் நடப்பதுதான்.

எந்த அரசியல் வாதியும் பெரியதாக தண்டனை அனுபவித்த மாதிரி என் நினைவுக்குத் தெரிந்து இல்லை.

இந்த ஜனவரி 2000 தீர்ப்பில், ஜெயலலிதாவுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்ததை எதிர்த்து, ( கட்சியின் வெறி நாய்கள் சிலதுகளின் தூண்டலின் பேரில்?), தர்மபுரியில் பெரிய கலவரம் வெடித்தது.

சுற்றுலா சென்றிருந்த கல்லூரி மாணவிகளின் பஸ் ஒன்றை வழி மறித்து கொளுத்தினர் இந்த வெறியர்கள். இதில் 3 மாணவிகள் கருகி உயிரிழந்தனர் என்பது உங்களுக்கு நினைவிருக்கலாம்.

கோகிலவாணி, ஹேமலதா, காயத்ரி - எவ்வளவோ கனவுகளும், ஆசைகளும், சிந்தனைகளும் இருந்திருக்கும் மாணவிகள். ஒரு சிலரின் சுய லாபத்துக்காக இந்த கொடூர முறையில் இறந்திருக்கிறார்கள்.

அந்த கொடூரச் செயலை செய்த கூட்டத்தில், 3 பேருக்கு தூக்கு தண்டனையும், 25 பேருக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் விதித்துள்ளார்களாம். சற்று நிம்மதி!

எய்தவன் என்ன ஆனான் என்று தெரியவில்லை.

அயல் நாடுகளில் அரசியல், ஜாதி காரணங்களுக்காக இப்படி கொலைகள் நடப்பது இல்லையே?

அவர்கள் மட்டும் மேன் மக்களா?

நாம் இன்னும் காட்டுமிராண்டிகளாக, சுயநலப் பேய்களாகத் தான் இருக்கிறோமா?

என்று தான் விடிவு?

Wednesday, February 14, 2007

சாகரன் - அஞ்சலி

சாகரன் கல்யாணை நேரில் கண்டதில்லை.

பதிவு எழுத ஆரம்பித்த போது இருந்த சில technical கஷ்டங்களை உடனுக்குடன் நிவர்த்தி செய்து கொடுத்தார். அந்த அளவில் மட்டுமே பரிச்சயம். கேட்க்கும் கேள்விகளுக்கு உடனுக்குடன் பதில் வரும். அவர் உலகின் வேறு மூலையில் இருந்தது இப்போழுதுதான் தெரியும்.

32 வயது இளைஞன் என்ற விஷயமும் இப்பொழுதுதான் தெரியும். மற்ற பதிவர்கள் அவர் மறைவு குறித்து வேதனைப் படுவதைப் பார்த்தால், அவர் எவ்வளவு இனியவர் என்பது நன்கு புரிகிறது.

திறமைசாலிகள் சிறு வயதில் மறைவது ஒன்றும் புதிதில்லை - விவேகானந்தன் தொட்டு, பாரதி, ராமானுஜன் என்று தொடர்ச்சியாக நடக்கும் ஒரு விடயம் தான் இது. ஏன் என்றுதான் இன்று வரை புரியவில்லை.

அவர் மனைவியும், குழந்தையும், பெற்றோரும், நண்பர்களும், இன்று அனுபவிக்கும் கொடுமை, அப்பப்பா, நினைத்தால் நெஞ்சு நின்று விடும் அளவிர்க்கு கனமாகிறது. எவ்வளவு கொடுமையான ஒரு இழப்பு இது!

இறைவா, இதை தாங்கும் வல்லமையைக் கொடு அவர்களுக்கு.

மனிதர்களை மனிதர்களாய் பாவித்து, ஜாதி மதம் பாராமல் பழகி இருக்கிறார் மனிதர்.
பணம் ஈட்டுவதை முதல் குறிக்கோளாக்காமல், நட்பு, சேவை என்ற ரீதியில் வாழ்ந்திருக்கிறார்.

தமிழ் வளர்க்கும் ஆர்வத்தை, தன் அறிவை உபயோகித்து திறம் பட பல முனைகளில் முடுக்கி விட்டு, ஆலமரம் போல் நமக்கெல்லாம் விட்டுச் சென்றுள்ளார்.

பரஞ்சோதியின் இரங்கல்பா படியுங்கள். மற்ற பதிவர்களின் பதிவுகளையும் படியுங்கள்.

சாகரன் கல்யாணின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டிக் கொள்ளுங்கள்.
கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள்... ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்துங்கள்.

இந்த வாரத்திலேனும், அமைதி காத்து, ஒருவரை ஒருவர் சாடாமல், இணையத்தில் சுத்தம் பேணுங்கள் நண்பர்களே! அவரை பற்றித் தெரிந்தவர்கள் பதிவுகள் எழுதினால் உங்களுக்கும் மற்றவர்களுக்கும் ஆறுதல் கிடைக்கும்.

When You Go Home, Tell Them Of Us And Say,
For Their Tomorrow, We Gave Our Today


நன்றி.


பி.கு: அவர் குடும்பத்தாருக்கு இந்த சமயத்தில் உடன் இருந்து மன பலம் கொடுப்பதே முக்கியம். உடன் இருக்கும் நண்பர்கள் அதை செய்வார்கள். வரும் காலத்தில், அவர் குடும்பத்திர்க்கு தேவை என்ன என்பதை உடன் இருக்கும் நண்பர்கள் அறிந்து தெரிவித்தால், நம்மில் பலர் இணைந்து தேவையானதை செய்யக் காத்திருக்கிறோம்.
அவர் குடும்பத்தை மறந்து விடக் கூடாது நண்பர்களே!!

Monday, February 05, 2007

அனானிமஸாக வரும் அழுக்கு மடல்களும், சில STAR பதிவர்களும்...

நம் இணையத்தில் நடக்கும் 'அசிங்க' தாக்குதல்கள் பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கும்.

ஒருவர் பதிவின் கருத்துக்கு எதிர் கருத்து உள்ளவர்கள், அந்த எதிர் கருத்தை கண்ணியமான முறையில் பின்னூட்டமாகவோ/பதிவாகவோ எழுத வேண்டும்.

இப்படிச் செய்யாமல், கெட்ட கெட்ட வார்த்தைகளில், அனானிமஸாக பின்னூட்டம் இடுவதும், மடல் அனுப்புவதும், இந்த எதிர் கருத்து ஆசாமிகளால் செய்யப்படுகிறது.

வக்கிர மனம் படைத்த சிலர், அனானி முகமூடி போட்டுச் செய்யும் இந்த செயல் கண்டனத்துக்குரியது. எதைச் சாதிக்க இப்படி செய்கிறீர்கள்?
இப்படி எல்லாம் ஒருவருக்கு எழுதி அனுப்ப எப்படி மனம் வருகிறது?

கண்ணியம் இல்லாத இந்த அசிங்க psycho வாழ்க்கைக்கு காரணம் என்ன? உங்களின் வளர்ப்பு? தாய்/தந்தை/பாட்டி/தாத்தா வழி வந்த 'gene'? நட்புச் சூழல்?
எதய்யா உன்னை இப்படி செய்யத் தூண்டுவது.

நம் நாடு அழகான வளமையும், கலாச்சாரமும் மிக்க நாடு. இருக்கும் சில கேடுகளும் குறைந்து ஒளிமயமான திக்கை நோக்கி நடை போட்டுக் கொண்டிருக்கிறது.
உன்னால் ஒன்றுக்கும் உதவ முடியவில்லையா? பரவாயில்லை. முன்னேறுபவர்களையும், முன்னேற்றுபவர்களையும் உபத்திரவம் செய்யாமல் தூரக் கிட!!!

மா.சிவகுமார் ஒரு பெண் பதிவருக்கு வந்த அசிங்க மடல் பற்றி பதிவெழுதியிருந்தார். இப்படி எல்லாம் ஒரு பெண்ணுக்கு மடல் அனுப்பிய அனானி, உண்மையில், மன நலம் பாதிக்கப் பட்டவனாகத் தான் இருக்க முடியும். இவ்வளவு வக்கிர புத்தி உடையவன், வாழ்க்கையில் என்ன சாதிக்கப் போகிறானோ? அவன் இல்லத்தார், உற்றார், உறவினர் அனைவருக்கும் இவனால் என்னென்ன கேடுகள் வருமோ.

அனானி நண்பரே - வேண்டாமய்யா இந்த வேலையெல்லாம். மாட்டிக் கொண்டால் வாழ்க்கையே திசை மாறிப் போகும். படித்தது வீணாகும். நண்பர், தாய், தந்தையர் முகத்தையெல்லாம் பார்க்கவே கூசும். யோசித்து செயல் படு!

இந்த மாதிரி தாக்குதலை சந்திக்கும் நண்பர்கள், இதை துச்சமாக மதித்து உதாசீனப் படுத்தலாம்.
உதாசீனப் படுத்த விரும்பாதவர்கள், இதற்காக நியமிக்கப்பட்டுள்ள காவல் நிலையங்களில் தைரியமாக புகார் கொடுக்கலாம் (அமெரிக்கா, சிங்கப்பூர், இந்தியா வில் இதற்கு வழி வகைகள் உண்டு). இன்று புகார் கொடுத்தால் நாளை விடை கிடைக்காது. பொறுத்திருந்து, பொறி வைத்து மெதுவாக செயல்படுவார்கள்.

இன்னொரு விஷயம், இந்த மாதிரி controversy topics பற்றி யாராவது பதிவு எழுதினால், நம் வலையுலகில் இருக்கும் சீனியர் பதிவர்கள் பல பேர் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்வதில்லை. ஏன் இப்படி ஒதுங்கி இருக்கிறீர்கள்?

நமக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகள் மறந்து, இந்த வக்கிர தாக்குதலுக்கு எதிராக அனைவரும் குரல் கொடுக்க வேண்டும்! எல்லோரும் சொன்னாலாவது, வக்கிரங்கள் குறையுமா என்று பார்க்கலாம்.

சிவகுமாரின் அந்த பதிவு இங்கே.
உங்கள் SUPPORT காட்டுங்கள் பார்ப்போம்.

நன்றி நண்பர்களே!

அனானி,
சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து

சாந்தி, முதல்வர், பெண்மை, துயரம், உயரம், நம்பிக்கை !

ஓட்டப் பந்தைய வீராங்கனை சாந்தி சந்தித்த பிரச்சனைகள் எல்லோருக்கும் ஞாபகம் இருக்கும். அவரின் பேட்டி ஒன்று விகடனில் படிக்கக் கிடைத்தது.

அதிலிருந்து சிலவற்றை இங்கு பதிகிறேன்.

மனதை கனமாக்கும் அவரின் அனுபவங்கள் வேதனையத் தந்தாலும், தடைகளைத் தாண்டி அவர் அடைந்துள்ள உயரம் வியக்க வைக்கிறது.

பி.கு. படத்தின் மேல் தட்டினால், படம் பெரிதாகத் தெரியும்.


---

---

---

---




வாழ்க பாரதம்!

நன்றி: விகடன்

Monday, January 29, 2007

விளம்பரம்: தமிழ்மணம் - நம்மால் ஏன் முடியவில்லை!

தமிழ்மணத்தில் 'நம்மால் ஏன் முடியவில்லை?' என்று அழகான தலைப்புடன் ஒரு விவாத களம் அமைத்துள்ளார் மா.சிவகுமார்.

ஜப்பான் குறுகிய காலத்தில் அடைந்த வளர்ச்சியை நம்மால் ஏன் அடைய முடியவில்லை என்பதே களத்தின் கரு.

அருமையான தலைப்பு. அனைவரும் சென்று தங்களின் கருத்துக்களை தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
நம்மால் ஏன் இதுவரை முடியவில்லை, என்ன செய்தால் முடியும், என்ன செய்தால் முடியாது என்று நன்றாக சிந்தித்துப் பதியுங்கள்.

சிங்கப்பூர், அமெரிக்கா போன்ற அயல்நாடுகளில் சுற்றும் போது, அவர்களின் வளர்ச்சியும் வாழ்க்கைத் தரமும் பெரும் வியப்பைத் தரும். நம் வாழ்க்கைத் தரத்தை எண்ணி பெருமூச்சு வரும். இவ்வளவு உயர்வான சுலப வாழ்க்கை அமைத்துக் கொடுத்த அவர்களது அரசாங்கத்தையும் தலைவர்களையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

அதே சமயம், அவர்களின் மக்களும் (பெரும்பான்மை) பொது வாழ்வில் ஒழுக்கமானவர்கள். சட்டதிட்டத்தை மதிப்பவர்கள். நேர்மையானவர்கள்.

உதாரணம்:
பேருந்து நிலையங்களிலும் இன்னும் பல இடங்களிலும், செய்தித்தாள் விநியோகிக்கும் பெட்டிகள் இருக்கும். ஒரு செய்தித்தாளுக்கு வேண்டிய $1 அங்கிருக்கும் 'உண்டியலில்' போட்டுவிட்டு தனக்கு வேண்டிய செய்தித்தாளை எடுத்துச் செல்வர். 'Honor system' என்று நம்பிக்கை அடிப்படையில் இயங்கும் இந்த முறை, நம்மூரில் நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒன்று.

இதே போல், இரவு 12 மணி ஆனாலும், வாகனங்களில் செல்பவர்கள், சிக்னலை மதித்துச் செல்வார்கள்.

நம்மிடம் என்ன இல்லை?
1) திறமையுள்ள பொதுநலம் விரும்பும் தலைவன் ( சிங்கப்பூரின் லீ-க்வான்-யூ மாதிரி )
சில நல்ல தலைவர்கள் இருந்தார்கள். அவர்களிடம், பொது நலம் இருந்தால், ஆட்சியாளும் திறமை இல்லை; ஆட்சி ஆளும் திறமை இருந்தால் பொது நலம் இல்லை; இரண்டும் இருந்தால், மக்களால் தேர்ந்தெடுக்கப் படுவதில்லை;
We lack visionories. தொலை நோக்குப் பார்வை கொண்டு நம்மை கரை ஏற்றும் வல்லமை யாரிடமும் இருந்ததில்லை.
அரசியலில் மட்டுமல்ல. வணிக நிறுவனங்களிலும் பெரிய சாதனை படைத்ததில்லை. Toshiba, sony, toyota, hitachi, panasonic, sharp போன்ற நிறுவனங்கள் படைத்த சாதனையில் இம்மி அளவும் நம் நிறுவனங்கள் படைத்ததில்லை. இந்த நிறுவனங்கள் எல்லாம் வானத்தில் இருந்து வந்ததல்ல. உழைப்பை மட்டுமே கொண்டு முன்னேறி இன்று உலகத்தைக் கைக்குள் வைத்திருக்கும் நிறுவனங்கள் இவை. நம்மால் முடிந்திருக்காதா? எது தடுக்கிறது. IIT, IIM, IISC எல்லாம் உருவாக்கும் புத்திசாலிகள் நினைத்தால் செய்யலாம். சிலர் செய்தும் வருகிறார்கள். ஆனால், ஜப்பானிய வளர்ச்சி அடைய எது தடையாக இருக்கிறது? Creativity? அரசியல்? இதுவரை பெயர் சொல்லும்படி ஒரு PRODUCT கூட நம்மூரில் இருந்து வெளிவரவில்லை.
Sony, toyota மாதிரி கூட வேண்டாம். கணினித் துறையில், out-sourcing வல்லரசாகி இருக்கும் நாம் ஒரு Windows போன்றோ, SAP போன்றோ ஏன் உருவாக்கவில்லை?

2) மக்களுக்குள் ஒற்றுமை
சாதீயமும் வர்ண பேதமும் பேசிப் பேசி நம்மை பிரித்தவர்கள், அவர்கள் பணி முடிந்து அவர்களுக்கு வேண்டியதை சாதித்து விட்டார்கள். அவன் ஏற்படுத்திய விரிசலை அடைய விடாமல், சில சக்திகள், அந்த விரிசலை பெரிது படுத்தி அதில் குளிர் காயத் துவங்கி உள்ளார்கள்.
ஜப்பானிலும், சிங்கப்பூரிலும் இந்த வர்ண பேதமெல்லாம் இல்லை. வீழ்ந்திருந்த காலத்தில் தலைவன் காட்டிய வழியில், ஒரு சக்தியாக பாடுபட்டு அவர்கள் இந்நிலையை அடைந்து உள்ளார்கள். ஊர் மக்களுக்குள் அங்கு காழ்புணர்ச்சி கிடையாது.
இந்தியாவில் அப்படியா? சாதி, மதத்தின் பேரில் நாம் நமக்குள் வளர்த்திருக்கும் பகை நம்மை கூடி வாழ விடாமல் செய்கிறது. ஒரெ சக்தியாக சேர்ந்து முயற்சி செய்யாமல், பெரிய சாதனைகளை அடைவது கடினம்.

3) தனி மனித ஒழுக்கம்
இரத்தத்தில் வந்த வியாதியா? இல்லை நம் இனத்தின் சாபக்கேடா தெரியவில்லை. பெரும்பான்மையான (நான் பார்த்தவரை) இந்தியர்கள் சுயநலவாதிகள். தன் வீடு, தன் பிள்ளை, தன் தேவை இது ஒன்றைப் பற்றித் தான் கவலை அவனுக்கு. அவன் வீட்டுக்கு வெளியே எது எப்படி இருந்தாலும் அவனுக்குக் கவலை இல்லை.
வீட்டுக்கு வெளியில சாக்கட ஓடுதா? கதவை அடைத்துக் கொண்டு மூக்கில் துணி கட்டிக் கொண்டு வாழ்ந்து விடுவான்.
தெருவில் ஒரு அப்பாவியை பத்து பேர் போட்டு அடிக்கிறார்களா? நமக்கு ஏன் வம்பு, வானத்தை பார்த்து பொழுதை கழிப்பான்.
தன் வேலை முடிய வேண்டுமா? சுலப வழியில் சென்று முடித்துக் கொள்வான்.
ரோட்டில் அடிபட்டு ஒருத்தன் கிடக்கிறானா? யாராவது பார்த்துக் கொள்வார்கள். நாம் ஏன் வம்பை விலை கொடுத்து வாங்க வேண்டும் என்று ஒதுங்குவான்.
ஏய்ப்பு - வரி ஏய்ப்பு முதல் வேலையில் ஏய்ப்பு வரை அனைத்தையும் அத்துப்படியாக எல்லா குறுக்கு வழிகளிலும் செய்வான்.

என்னதான் செய்வது?
நாம் இன்று இருக்கும் நிலையில், பெரிய ஆசையெல்லாம் படக்கூடாது. சிங்கப்பூர், அமெரிக்கா போல் வாழ்க்கை தரம் கிடைக்க பல ஆண்டுகள் ஆகும்.
அதுவும், நீங்களும் நானும் இன்று முயற்சியை தொடங்கினால்தான் கிட்டும்.
பெரிய புரட்சி எல்லாம் நாம் செய்யப் போவதில்லை.

நான், எனக்கு, என் குடும்பம் என்ற வட்டத்தை விட்டு பொதுஜனத்திர்க்காக வாழும் புனிதர்களாக over-nightல் மாறிவிட முடியாது.

உங்களால் முடிந்தது, தனி மனித ஒழுக்கம். அதை இம்மியளவும் பிசகாமல் கடை பிடியுங்கள்.
சட்ட திட்டங்களை மதியுங்கள்; தண்ணீரைச் சேமியுங்கள்; உங்கள் வீட்டுக்குள்ளாவது மரம் நடுங்கள்; முடிந்தவரை லஞ்சம் கொடுக்காதீர்கள்; உங்கள் நட்பு வட்டாரத்தை பெருக்கி, உங்கள் தெரு, உங்கள் அக்கம் பக்கத்தை சுத்தமாய் வைத்திருங்கள்; இல்லாதாருக்கு இயன்றதைக் கொடுங்கள்.

உங்கள் சுற்றம் சரியானால், உங்கள் வட்டத்தை பெருக்கி பக்கத்து வீடு, பக்கத்து தெரு என்று உங்கள் சேவையை தொடருங்கள்.
குழந்தைகளுக்கு நல்லொழுக்கமும், சீரிய சிந்தனையும் வர வகை செய்யுங்கள்.

நல்லவற்றை படியுங்கள். சாதனயாளர்கள் பற்றியும், அவர்கள் கையாண்ட விதம் பற்றியும் படியுங்கள். நல்ல ஊக்க டானிக் இவை.

உங்களால் முடிந்ததை செய்யுங்கள்!

அமெரிக்கனோ, சிங்கப்பூர்காரனோ அவன் வேலையை மட்டும் செய்து முடித்து விட்டு week-end சந்தோஷமாக கழிக்கலாம். அவன் இன்று நல்ல வாழ்க்கை வாழ அவனுக்கு முன்னிருந்த தலைமுறை வழி செய்துள்ளது.
நாம் அப்படி இருந்தால், நம் சந்ததியின் week-day கூட ஒழுங்காக இருக்காது. சில தியாகங்களை செய்து, மெத்தனத்தை குறைத்து, சோம்பலை முறித்து உங்களால் இயன்றதை செய்தால்தான், உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல வாழ்க்கை வாழும் சூழல் கிட்டும்.

வரும் தமிழ் புத்தாண்டுக்குள், உங்களால் முடிந்த ஏதாவது நல்லவை செய்து உங்கள் வெற்றிக் கதையையும், கையாண்ட விதத்தையும் பதியுங்களேன்? முடியுமா?

நானும் முயல்கிறேன்.

(தமிழ்மணம் தொடர்ந்து இது போல் உபயோகமான தலைப்பை விவாதகளத்தில் அமைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். அனைவரையும் பங்கு பெறுமாறும் கேட்டுக் கொள்கிறேன்). ஒருவரை ஒருவர் இகழ்ந்து நேர விரையம் செய்வதை குறையுங்கள்!

...வேடிக்கை மனிதரை போல் வீழ்ந்து விடாதீர்கள்...'


-BNI

Sunday, January 21, 2007

அழகான விநாயகப் பெருமானும், வீண் விதண்டாவாதங்களும்...


சமீபத்தில் படித்த ஒரு பதிவில் திரு.பெரியார் அவர்கள் ஆற்றிய உரையை காபி/பேஸ்ட் செய்து, பெரியாரின் கொள்கைகளை பரப்ப முயன்றிருந்தார்கள். உரையில் வழக்கம் போல் இறை மறுப்பும், இறை அவமதிப்பும் அடங்கி இருந்தது. திரு. பெரியார் பல நல்லவைகளை செய்ததாகத்தான் நான் எண்ணுகிறேன். சில விஷயங்களை மட்டும் வழக்கமான அரசியல்வாதியை போல் கையாண்டு வேண்டா வெறுப்பை வளர்த்துக் கொண்டவர்.

அவரின் சொற்பொழிவு இணையத்தில் பதிவது நல்லதுதான். ஆனால், அவற்றில் நல்ல கருத்துக்கள் சொல்லப்பட்டவைகளை மட்டும் பதியலாம். விதண்டாவாதங்கள் நிறைந்ததை ஒதுக்குதல் நலம்.

பலராலும் தாய் தந்தையருக்கு நிகராக எண்ணி வணங்கப்படும் தெய்வங்களை ஏளனம் செய்வதும், விபச்சாரிகள் என்பதெல்லாம் சிறு பிள்ளைத்தனம். வீண் விதண்டாவாதம்!

anyway, அந்த பதிவில் இட்ட பின்னூட்டம் பதிவாக இங்கே கொடுத்திருக்கிறேன்:

உங்களின் சுய கருத்துன்னு நெனச்சு 'அசிங்கமாய் எழுதுவதை தவிருங்களேன்' என்று சொல்ல வந்தேன்.

பாத்தா பெரியார் பேசினதா சொல்றீங்க. அட ராமச்சந்திரா, அவரே இப்படின்னா, தொண்டர்கள குறை சொல்லி ஒண்ணும் பிரயோஜனம் இல்லை.
அவரவர் நம்பிக்கை அவரவர்க்கு.
கடவுள் இல்லை என்பதும் ஒரு நம்பிக்கை. அதையும் மதிக்க வேண்டும்.

கடவுள் இல்லைன்னு சொன்னவர் என்பதர்க்காக அவர் சிலையை போய் செருப்பால் அடித்தால் நல்லாவா இருக்கும்? கோடி மக்கள் நம்பிக்கை வைத்திருக்கும் கடவுளர்களை விபச்சாரி என்பதெல்லாம் இங்கிதம் தெரியாத வரட்டு அரை கூவல்கள்.

உங்களுக்கு நம்பிக்கைகள் இல்லையா என்ன? உங்கள் குடும்பத்தினர் மீது இருக்கும் பாசம்; உங்கள் மனைவி மக்கள் மீது இருக்கும் நம்பிக்கை - இதெல்லாம் கண்ணில் தெரியாது தம்பி - மனதளவில் உணர்வது.

இந்த உணர்வை போன்றுதான் -கடவுள் இருக்கிறார்; ஆபத்தில் உதவுவார்; என்ற நம்பிக்கையும்.

கண்ணுக்கு தெரியாது என்பதால், சுற்றம்/நட்பு மீது பாசம்/நம்பிக்கை இல்லை என்றால் வாழ்வதே வீண்!

நடுக்கடலில் யாரும் இல்லாத ஒரு தீவில் மாட்டிக் கொண்டு (god forbid) வெளியே வர வழி தெரியாமல் இரண்டு நாள் தவித்தால், கடவுள் நம்பிக்கை தானாய் வரும். :)

கோயில்கள் இருப்பதால் தான் இன்னும் 'இழி' பிறப்பாக இருக்கிறீர்கள் என்பதெல்லாம் சுத்த மடமை. கையாலாகாத்தனம். சோம்பேறிப் பேச்சு.

அம்பேத்கார் எல்லாம் முன்னுக்கு வரலியா? கடவுள் சிலைகளை செருப்பால் அடிப்பதர்க்கு முன்னரே வளர்ந்து உயர்ந்தவர்தானே அவர். அவரை எந்த 'பார்ப்பானும்' தடுக்கவில்லையே. அவர் எழுதிய சட்ட திட்டங்களை தானே இன்னும் பின்பற்றுகிறோம்.

முயன்றால் முடியும்.

வாய் சொல்லில் வீரர்களாக மட்டும் இருக்காதீர்கள். விபூதி பூசிக் கொள்வதால், கீழ் நிலை மக்கள் இன்னும் கீழ் நிலையிலேயே இருக்கிறார்கள், விபூதி அவர்களை கட்டிப்போடுகிறது என்பதெல்லாம் பிதற்றல்கள்.
உழைப்பு உயர்வுக்கு வழி. இதை உலகிற்க்கு காட்டியவர்கள் பலர் இருக்கிறார்கள், அம்பேத்கார் உள்பட.

அவர்கள் எல்லாம் மூலையில் அமர்ந்து கொண்டு என்னை ஒதுக்குகிறான், என்னை இழிவு படுத்துகிறான் என்று கூறிக் கொண்டு நேர விரையம் செய்யவில்லை. வாழ்ந்து காட்டினார்கள்.

வெட்டிப் பேச்சை குறைத்து, ஆக்கபூர்வமாக ஏதாவது செய்யுங்கள்.
இறைவன் இல்லை என்ற நம்பிக்கை இருக்கிறதா - ஒ.கே. உண்டியலில் காசை போடாதீர்கள். இலவசக் கல்விச் சாலை அமைக்க பண உதவி கொடுங்கள்.
கீழ் நிலையில் உள்ள குடும்பங்களை தத்தெடுங்கள். அவர் குழந்தைகளின் கல்விக்கு உதவுங்கள். ஆளுக்கு ஒரு குடும்பத்தை கரை ஏற்றுங்கள்.

பொருளாதாரமும், கல்வி அறிவும் உயர்ந்தால் ஏற்றத் தாழ்வுகள் தானாய் மறையும்.

நம்மில் பலர், தாய் தந்தையரை விட விநாயகக் கடவுள் மீது அதிகம் பற்றும், பாசமும், பக்தியும் கொண்டவர்கள். உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ, இவ்வளவு கேவலமாக அந்தக் கடவுளை பற்றி பேசுவதும் எழுதுவதும் மிகத் தவறு. நாகரீகமான செயல் அல்ல இது.

முகமது பற்றி கிண்டலாக வந்த கார்டூன் ஏற்படுத்திய தாக்கம் நினைவிருக்கிறது இல்லையா? அமைதியாகப் பொறுத்துப் போவதால் சொறிந்து கொண்டே இருப்பது சரி அல்ல.

சிவன் ஏன் மண்டை ஓடு வைத்திருக்கிறான்; ஏன் பாம்பை அணிந்திருக்கிறான்; கிருஷ்ணன் ஏன் கோபிகைகளுடன் குலாவினான் -- எல்லாத்துக்கும் ஒரு காரணமும் அர்த்தமும் இருக்கு - தெரியாமல் ஹா ஹா ஹா என்று நையாண்டி செய்வது சிறு பிள்ளைத் தனம்.

பெரியார் ஏன் மணியம்மையை திருமணம் செய்து கொண்டு வீட்டம்மையாக்கினார்? திருமணம் செய்து கொண்டு ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ வேண்டும். விலங்கு போல் ஊருக்கு ஒன்று என்று வாழக் கூடாது என்ற கோட்பாடெல்லாம் எங்கிருந்து வந்தது. அதில் ஏன் நம்பிக்கை வைத்து அதை பின்பற்றினார் அவர்? இதெல்லாம் கூட நம் கலாசாரத்தில் இருந்து வந்ததுதானே. கடவுளை மட்டும்தான் இந்துக்கள் படைத்தனரா. வாழ்வியலை வேறு ஒருவன் படைத்தானா?

நல்ல கூத்து போங்க!

கண்ணுக்குத் தெரியாத கடவுள் மேல் பயமும் பக்தியும் இருக்கும்போதே நாட்டில் இவ்வளவு பிரச்சனைகள். இதில் பெரியார் வழியை ஊரே பின்பற்றி, கடவுள் இல்லை என்று வெற்று வாழ்க்கை எல்லாரும் வாழத் தொடங்கினால், காட்டுமிராண்டித்தனம் மிகுந்து ஒருவரை ஒருவர் அடித்துக் கொல்லும் நிலைதான் மிஞ்சும்.

முதலில் கல்வி அறிவு எல்லோருக்கும் கிட்டட்டும். கடவுள் வேண்டுமா வேண்டாமா என்பது பின் அவனவன் முடிவு செய்து கொள்ளட்டும். அதுவரை விநாயகனை பழிப்பதும், முகமதை நையாண்டி செய்வதும், பெரியாரை ஏளனம் செய்வதும், இன்னும் எரிந்து கொண்டிருக்கும் சாதீய வாதங்களும் வேண்டாமே!

ஆண்டவன் அருள் புரியட்டும்!"


-BNI

நான் படித்த விவகாரப் பதிவு இங்கே: Click

Friday, January 19, 2007

Art Buchwald - மரணத்தை வென்றவர்!




Art Buchwald - ஆங்கில தினசரிகளை படிக்கும் பலருக்கு பரிச்சயமான பெயர் இது. குறிப்பாக இந்து நாளிதழில் இவரின் ஹாஸ்ய துணுக்குகள் மிகப் பிரபலம்.

எழுத்துலகின் Oscarஆக கருதப்படும் Pulitzer பரிசை வென்றவர் என்ற சிறப்பும் இவருக்கு உண்டு.

சர்கரை வியாதியால் kidney பாதிக்கப்பட்ட நிலையில் dialysis முறையை கையாண்டு வாழ்ந்து வந்த Art B, கடந்த ஆண்டின் தொடக்கத்தில் dialysis தொடர வேண்டாம் என்று முடிவெடுத்து மரணத்தை வரவேற்றார்.

Dialysis நிறுத்திய நிலையிலும் கூட, பல நேர்காணல் மூலமாகவும், புத்தகம் மூலமாகவும் தன் நகைச்சுவைத் திறனை வெளிக்காட்டினார்.

கடந்த புதன் கிழமை திரு. Art Buchwald காலமானார்.

NPRல் இவரைப் பற்றி வந்த செய்தி ஸ்வாரஸ்யமானது: Columnist Art Buchwald Leaves Us Laughing

இவரின் துணுக்குகளில் இருந்து சில quotes:

  • As a humor columnist, I need President Nixon more than he needs me. I worship the quicksand he walks on.
  • Whether it's the best of times or the worst of times, it's the only time we've got.
  • Dying is easy; parking is impossible
  • The best things in life aren't things.
  • If you attack the establishment long enough and hard enough, they will make you a member of it.

Friday, January 05, 2007

உயிர்வலி by PhotoBala - விளம்பரம்



உயிர்வலி என்ற பதிவை இன்று படித்தேன்.
Balachandran என்ற பத்திரிகையாளரின் பதிவு அது.
அவர் profileல் "கிராமத்தான் என்பதில் பெருமை கொள்கிறேன். பத்திரிகையாளனாக பணி. முகத்தில் தாடியுடனும், கையில் காமிராவுடனும் எங்கேயாவது அலைந்து கொண்டிருப்பேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.

உயிர்வலி என்ற பதிவில் தெரு ஓரத்தில் படுத்துக் கிடந்த ஒரு 105 வயது முதியவரின், கஷ்டங்களையும், அவருடன் நடந்த உரயாடலையும் எளிமையாக எழுதி இருக்கிறார்.

கவனிக்க ஆள் இல்லாத முதியோர்கள் படும் துயரங்கள் பற்றி எடுத்துக் காட்டும் மிக நல்ல பதிவு. படித்து முடித்தவுடன் ஒரு 'கனம்' மனதை அழுத்தியது உண்மை.

அவர் எடுத்த புகைப்படங்களும் மிக மிக அருமை.

பின்னூட்டங்கள் ஒன்றும் அந்தப் பதிவில் காணாததால், I thought, you guys might have not seen the post.

So, உங்களுக்காக அந்த பதிவின் லிங்க் இங்கே: உயிர்வலி

இவரது பதிவில் இருக்கும் எல்லா புகைப் படங்களும் அருமை. (well, he is a professional, it better be அருமை :) )

பாலச்சந்தர், இதைப் படிக்க நேரிட்டால், நல்ல புகைப்படம் எடுப்பது எப்படின்னு ஒரு பதிவையும் போடுங்களேன். ரொம்ப உதவியா இருக்கும். நன்றி!

Thursday, January 04, 2007

point is to Return - நற்செய்தி!

நான் முன் ஒரு பதிவில் GoodNewsIndia.com நடத்தும் திரு.ஸ்ரீதரன் பற்றி சொல்லி இருக்கிறேன்.

மனிதர் 64 வயதிலும் துள்ளித் திரிந்து, நமது நாட்டின் பல மூலைகளில் அலட்டலில்லாமல் நல்லது செய்யும் Heroeக்களை தேடிப் பிடித்து அவர்களின் சாதனையை எழுதி வருகிறார்.

2006ல் இவர் தொடங்கி இருக்கும் ஒரு முயற்சி தான் 'point Return... point is to Return'.

17 ஏக்கர் கரிசல் நிலத்தை வாங்கி, அதை செம்மை படுத்தி, மரம் நட்டு, உதவாத நிலத்தை வளமான நிலமாக மாற்றுவதுதான் நோக்கம்.
சென்னையின் அடுத்துள்ள 'ஜமீன் எண்டதூர்' என்ற இடத்தில் இதற்கான நிலத்தை வாங்கி முதல் கட்ட வேலையை செய்து வருகிறார்.

இதை ஒரு 'ஆராய்சி' போல் செய்து, இது வெற்றி பெற்றால் இதைப் போல் பரவிக் கிடக்கும் பல கரிசல் பூமிகளை செம்மை படுத்த முடியும் என்பது அவர் கணிப்பு.
இதன் மூலம் சிலருக்கு வேலை வாய்ப்பும், பலருக்கு in-direct உபயோகங்களும் கிட்டும்.

இவர் எடுத்த இந்த முயற்சியின் முதல் கட்டம் முடிவடைய இன்னும் 5 வருடங்கள் பிடிக்கும். முழுவதும் முடிய 12 வருடங்கள் ஆகும் என கணக்கிட்டுள்ளார்.

இவர் மாதிரி பொது சேவை செய்வது மட்டுமே வாழ்க்கையாக வாழ்வது எல்லாராலும் முடியாத ஒன்று.
இவருக்கு இந்த மன ஓட்டத்தை கொடுத்தது எவரோ/எதுவோ, அதற்கு நன்றி.

இந்த புத்தாண்டில், இவர் எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெற, எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

நீங்களும், அவ்வப்பொழுது அவர் வலைத்தளத்திர்க்கு சென்று மற்ற விவரங்களை அறிந்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

வாய்ச் சொல்லில் மட்டுமே வீரராக நம்மில் பலர் இருக்கிறோம். ஸ்ரீதரன் போல் வெகு சிலரே அதிகம் பேசாமல் களமிறங்கி செயல் புரிபவர்கள்.
ஸ்ரீதரன் போல் பலர் கிடைக்க இறைவன் அருளட்டும்.

point Return வலைத்தளம் இங்கே: Click here

point Return பற்றி, ஸ்ரீதரனின் எண்ணங்கள் சில:

pointReturn aims to be a campus self-sufficient in water, energy, food and cash, created on land that was abandoned as useless.
Objectives of the project are many. These follow in random order:

♦Demonstrate techniques to reclaim wasteland
♦Demonstrate conservation and optimal use of natural resources, ecological sensitivity and sustainable consumption for living well
♦Become a profit centre
♦Inspire people to return to land
♦Revive sound practices of rural India, that have been over-run by ‘progress’
♦Document the pointReturn experience so that it serves as a guide for prospective back-to-landers
♦Serve as a retreat for people to recharge and re-inspire themselves
♦Serve as a learning centre for children and adults
♦Be a well-equipped facility for hands-on experimenters to develop their practical ideas in architecture and building, energy, useful devices, teaching and learning, solutions for vexatious municipal problems and marketable products derived from nature’s surpluses
♦Conceive, develop and perfect micro-businesses that differently-educated young people can take away and run
♦Demonstrate how when one plans for local geographies, alternatives to petro-fuels, food retail chains and distributed water supplies are possible