2000 ஜனவரியில், ப்ளெஸண்ட் ஸ்டே ஓட்டல் வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஓராண்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கியது அனைவருக்கும் ஞாபகம் இருக்கும்.
2001ல் ஜெயலலிதாவும் சகாக்களும் உத்தமர்கள் என்று கூறி நீதிமன்றம் இவர்களை அந்த வழக்கிலிருந்து பின்னர் விடுவித்தது.
இப்படி அடிக்கடி நடப்பது நம் நாட்டு அரசியலில் ஒன்றும் புதிதில்லை. எவ்வளவோ வழக்குகள் போடப் படுவதும், விலக்கிக் கொள்ளப் படுவதும் தினம் தினம் நடப்பதுதான்.
எந்த அரசியல் வாதியும் பெரியதாக தண்டனை அனுபவித்த மாதிரி என் நினைவுக்குத் தெரிந்து இல்லை.
இந்த ஜனவரி 2000 தீர்ப்பில், ஜெயலலிதாவுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்ததை எதிர்த்து, ( கட்சியின் வெறி நாய்கள் சிலதுகளின் தூண்டலின் பேரில்?), தர்மபுரியில் பெரிய கலவரம் வெடித்தது.
சுற்றுலா சென்றிருந்த கல்லூரி மாணவிகளின் பஸ் ஒன்றை வழி மறித்து கொளுத்தினர் இந்த வெறியர்கள். இதில் 3 மாணவிகள் கருகி உயிரிழந்தனர் என்பது உங்களுக்கு நினைவிருக்கலாம்.
கோகிலவாணி, ஹேமலதா, காயத்ரி - எவ்வளவோ கனவுகளும், ஆசைகளும், சிந்தனைகளும் இருந்திருக்கும் மாணவிகள். ஒரு சிலரின் சுய லாபத்துக்காக இந்த கொடூர முறையில் இறந்திருக்கிறார்கள்.
அந்த கொடூரச் செயலை செய்த கூட்டத்தில், 3 பேருக்கு தூக்கு தண்டனையும், 25 பேருக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் விதித்துள்ளார்களாம். சற்று நிம்மதி!
எய்தவன் என்ன ஆனான் என்று தெரியவில்லை.
அயல் நாடுகளில் அரசியல், ஜாதி காரணங்களுக்காக இப்படி கொலைகள் நடப்பது இல்லையே?
அவர்கள் மட்டும் மேன் மக்களா?
நாம் இன்னும் காட்டுமிராண்டிகளாக, சுயநலப் பேய்களாகத் தான் இருக்கிறோமா?
என்று தான் விடிவு?
Saturday, February 17, 2007
Subscribe to:
Post Comments (Atom)
12 comments:
எய்தவன் என்ன ஆனான் என்று தெரியவில்லை
நேற்றிலிருந்து இந்த கேள்விதான் என் மனதில் ஓடிக்கொண்டிருக்கிறது.
திட்டம் இல்லாமல் பெட்ரோல் எதற்கு அங்கு வந்தது?
3 சிறுமிகளை இழந்தது தான் மிச்சம்.
"கொடுமை"
இங்கேயும் தெய்வம் நின்று கொல்கிறதோ?
http://sivabalanblog.blogspot.com/2007/02/blog-post_13.html
உணர்ச்சிப் பெருக்கால் நடக்கும் அசம்பாவிதங்கள் ஓரளவுக்கு புரிந்து கொள்ளலாம்.
இதைப் போல் தீவைத்துக் கொல்வது எல்லாம், கண்டிப்பாய், திட்டமிட்ட செயலாகத்தான் இருக்கும்.
அவர்கள் மேதாவித்தனத்தை காட்ட சிறுமிகளும், அப்பாவிகளும் கொல்லப்பட வேண்டும் - என்ன ஒரு கொடூரம். நாய்கள்!
எய்தவனையும், தெய்வம் நின்று கொல்லும்! கொல்லட்டும்!
BNI
எல்லா இடங்களிலும் அரசியல் விளையாட்டு நடந்து கொண்டுதான் இருக்கிறது.
ஆனால் இது கொடுமையான சம்பவம். அதிர்ச்சியளிப்பது. யாரும் எதிர்பாராதது.
நம் நாட்டில் இது போன்று எப்போதாவது நடக்கிறது. அதற்காக நாம் ஒட்டுமொத்த சமுதாயத்தை குறை சொல்ல முடியாது.
கல்வி ஓரளவு இது போன்ற காட்டுமிராண்டி செயல்களை குறைக்கலாம். ( சில விடுபட்டவை உண்டு)
இந்த தீர்ப்பை பொருத்தவரையில் மரண தண்டைனையை நான் எதிர்க்கிறேன். அவர்களை வாழ் நாள் முழுவதும் சிறையில் தள்ளலாம்.
அனானி, பின்னூட்டத்திர்க்கு நன்றி!
ஆப்ரிகா போகாத கடவுள், பதிவை, நானும் பார்த்தேன்.
கடவுள் இல்லையோ என்று தோன்றும் தருணங்கள் தரும் பதிவு அது.
அந்த கோலத்தில் இருக்கும் குழந்தையையும் அரவணைத்து பாதுகாக்கிறாளே, அந்த தாயில் இருப்பதும் கடவுள் தான்.
அந்த பதிவில் கடைசி புகைப்படத்தை எடுத்து விருது வாங்கிய, புகைப்படக்காரர் kevin மூன்று மாதம் கழித்து தற்கொலை செய்து கொண்டாராம். அடுத்தவருக்காக வேதனை படும் இதயங்கள் அனைத்திலும் கூட இறைவன் இருக்கிறான்.
இதைக் கண்டு நாம் ஒன்றும் செய்யாமல், அடுத்த பதிவை பார்க்கப் போய்விடுகிறோமே, நம்மில் தெய்வம் இல்லை!!!!!!!
சிவபாலன், உங்கள் பதிவில் இப்பொழுதுதான் என் பின்னூட்டம் இட்டு வந்தேன்.
--கல்வி ஓரளவு இது போன்ற காட்டுமிராண்டி செயல்களை குறைக்கலாம்--
உண்மைதான். இந்த செயலை
எய்தவன், நன்றாய் படித்தவன் தானே?
--இந்த தீர்ப்பை பொருத்தவரையில் மரண தண்டைனையை நான் எதிர்க்கிறேன். அவர்களை வாழ் நாள் முழுவதும் சிறையில் தள்ளலாம்--
முழு மனதுடன், தெளிவுடன் இருந்த ஒருவன் இந்த சிறுமிகளை கொன்றிருந்தால், அவனை தூக்கில் போடுவதில் ஒரு தவறும் இல்லை.
அவனுக்கு வாழ் நாள் சிறை கொடுத்து, நம்மிடம் குறைவாக இருக்கும் பணத்தை விரையம் செய்வது வீண் சிவபாலன்.
sir,
i am very close to Hema's family,i know that how much that family suffered after hema's loss,apart from her loss,they got torture from ADMK to withdraw case and also they got torture form DMK not to withdraw case.....really where we r going? ...our politicians are like devils and there is no humanity with them...first we should not boycott elections...verybody should vote and choose good leader.....
regards
rudra
//அயல் நாடுகளில் அரசியல், ஜாதி காரணங்களுக்காக இப்படி கொலைகள் நடப்பது இல்லையே?//
என்னா இப்படிச்சொல்லீடீங்க, நம்மவங்க எல்லாம் குழந்தைங்க தெரியுமா.
ரொம்ம நல்லவங்க. செய்யிறத வெளிப்படையா பச்சையா செய்துடுவாங்க.
இந்த அயல்நாட்டுக்காரங்க எல்லாம் அமுசட்டக்கிங்க கணக்கா அமுக்கமா செய்துடுவாங்க. உங்ககிட்ட எல்லாம் பேரெடுத்துடுவாங்க.
நாடகமே இந்த உலகமையா!
--how much that family suffered after hema's loss,apart from her loss,they got torture from ADMK to withdraw case and also they got torture form DMK not to withdraw case.....--
salutes to Hemas family for withstanding the political pressures and getting justice for Hemas killing.
--என்னா இப்படிச்சொல்லீடீங்க, நம்மவங்க எல்லாம் குழந்தைங்க தெரியுமா.
ரொம்ம நல்லவங்க. செய்யிறத வெளிப்படையா பச்சையா செய்துடுவாங்க.
இந்த அயல்நாட்டுக்காரங்க எல்லாம் அமுசட்டக்கிங்க கணக்கா அமுக்கமா செய்துடுவாங்க.--
அனானி, அப்படி இல்லீங்க. நம் ஊரில் இருக்கும் இந்த கேவலம் வெளியில் இல்லை. அதுக்குன்னு சொமாலியா, ர்வாண்டா நாடுகளோடு நம்மை கம்பேர் பண்ணக் கூடாது. நம்மை விட மோசமான இடங்களும் உண்டு. மேலே இருப்பதை பார்த்து நாம் முன்னேற வேண்டும்.
//நம் ஊரில் இருக்கும் இந்த கேவலம் வெளியில் இல்லை.//
அதேமாதிரி நம்ம ஊரில இருக்கிற சிறப்பும் வெளியில இல்ல தெரியுங்களா!
எல்லாம் இக்கரைக்கு அக்கரைப் பச்சைதாங்க புரிஞ்சுக்கோங்க.
--அதேமாதிரி நம்ம ஊரில இருக்கிற சிறப்பும் வெளியில இல்ல தெரியுங்களா!
எல்லாம் இக்கரைக்கு அக்கரைப் பச்சைதாங்க புரிஞ்சுக்கோங்க.--
தெரியுங்க. நம்ம ஊரில் கண்டிப்பா பல சிறப்பு இருக்கு.
ஆனா, இங்க இருக்கும் அசிங்கங்கள் பல வளர்ந்த வெளி நாடுகளில் இல்லை.
இக்கரைக்கு அக்கரை பச்சை தான். அக்கரையில் இருக்கும் பச்சையை நம் ஊரில் விதைப்பது ஒன்றும் தவறில்லையே?
Post a Comment