Tuesday, October 24, 2006

ஏற்றிவிடய்யா! வேண்டாம் இனி திராவிட,பார்ப்பன விவாதங்கள்!!!







ஜயராமன் என்பவர் "திராவிடம் என்ற திராவகத்தின் விளைவு" என்று ஏதோ ஒரு பதிவில் பின்னூட்டமாக இட்டிருந்ததை copy அடித்து வைத்திருந்தேன். நல்ல ஆக்கம் என்று தோன்றியதால் இங்கே பதிகிறேன்.
ஜயராமன் சொல்வதை போல, நமது இரு திராவிட கட்சிகளும் வருமை கோட்டுக்கு கீழே இருப்பவனை மேலே கொண்டு வரவே இல்லை.

இனியும் கொண்டு வராது!!

இது உங்களுக்கும் தெரியும், எனக்கும் தெரியும்.

ஒரு சாதாரண business செய்பவன் கூட, ஒரு வருடமோ, இரண்டு வருடமோ லாபம் ஈட்டவில்லை என்றால், கடையை மூடிவிட்டு கிளம்பி விடுவான்.

ஆனால் நம் அரசியல் மேதைகள், 60 வருடங்களுக்கும் மேலாக administration தெரியாமல், பிரிவினையையும், ஊழலையும் பெருக்கி நாட்டை பாதாளத்திர்க்கு அழைத்துச் சென்றாலும், எந்த ஒரு பாதிப்பும் சொரணையும் இன்றி கிடக்கிறார்கள்.

இதை எல்லாம் நன்கு உணர்ந்த படித்த சிலரும், பார்ப்பன / திராவிட வீண் விவாதம் செய்து அவன் biased, இவன் biased என்று நேரம் விரயம் செய்கிறார்கள்.

இது வரை இருந்த அரசியல் மேதைகள் எப்படியோ இருந்து விட்டுப் போகட்டும். காலம் அவர்களுக்கு தகுந்த கூலி தரும். யோசித்துப் பாருங்கள், நம்பியவர்களை வஞ்சித்தவர்கள் எங்காவது வாழ்ந்த சரித்திரம் உண்டா?

இனி என்ன செய்தால், அடுத்த வேளை சோற்றிர்க்கு கஷ்ட்டப்படும் நம் சகோதரர்களுக்கு வழி பிறக்கும்?
என்ன செய்தால் சுகாதாரமற்று கிடக்கும் நம் தெருக்கள் சுத்தமாகும்?
என்ன செய்தால் 5 வயதிலேயே வேலைக்குச் செல்லாமல் நம் குழந்தைகள் அனைவரும் ஆரம்ப நிலை கல்வி யாவது படிக்கும் வசதி கிட்டும்?
என்ன செய்தால் சாலை வசதியும், தண்ணீரும், மற்ற basic வசதிகளும் கிட்டும்?
என்ன செய்தால் நம் மக்களுக்கு சுய மரியாதையும் சுய புத்தியும் திரும்ப வரும்?

சும்மா எழுத்தில் மட்டும் இல்லாமல், ஆக்க பூர்வமாக எப்படி, என்ன, எங்கே, என்று, அவர்களை கரை ஏற்றுவது?

என்னை கேட்டால், உங்கள் வட்டத்தில் இருக்கும் 'கைவிடப்பட்ட சகோதரர்களை' உங்களால் முடிந்த வரை முயற்சி செய்து ஏற்றிவிடுங்கள். அவர்கள் பிள்ளைகள் படிக்க உதவுங்கள். ஊழலுக்கு துணை போகாதீர்கள்.

A/C ல் அமர்ந்து கொண்டு, பொழுது போவதர்க்காக, கோர்வை தமிழில் எழுதினால் மட்டும் போதாது நண்பர்களே.
முடிந்தவர்கள் களம் இறங்கி field-work செய்ய வேண்டும். முடியாதவர்கள், field-work செய்பவர்களுக்கு முடிந்த உதவி செய்ய வேண்டும்.

வலைப்பதிவர்கள் கூடி உண்மையான தொண்டு செய்ய வேண்டும்.

கண் மூடி திறக்கும் முன், உங்களுக்கு நரை கூடி தளர்ச்சி சேர்ந்து விடும். இளமை இருக்கும் பொழுதே முடிந்தவரை அடுத்தவர்களுக்கு உதவுங்கள். சும்மா படிக்கும் போது ரோஷம் வந்து விட்டு, படித்து முடித்தவுடன் சீரியல் பார்க்க கிளம்பி விடாதீர்கள்.

என்னால் எழுத மட்டும் தாங்க முடியும் என்று நினைப்பவர்கள், பிரிவினை எழுதாதீர்கள், தேவையானதை மட்டும் எழுதுங்கள்! atleast, உங்களையாவது மாற்றிக் கொள்ளுங்கள் - துணிந்து நில்லுங்கள். உரிமையை விட்டுக் கொடுக்காதீர்கள். லஞ்சம் கொடுக்காதீர்கள். சுகாதாரம் பேணுங்கள். குறுக்கு வழியை கை விடுங்கள். உங்கள் குழந்தைகளுக்கு பிரிவினை போதனை செய்யாமல் நல்ல சிந்தனை ஊட்டுங்கள்.

ஜாதியைப் பற்றி போதிக்காமல், 'மனிதம்' என்ற உணர்வை மட்டும் ஊட்டுங்கள்.

ஒரு news-letter உருவாக்கி உங்கள் தெருவில் வசிப்பவர்களுக்கு நல்ல சிந்தனைகள் பரவ வழி செய்யுங்கள்.
தினகரனிலும், தினமலரிலும், தினத்தந்தியிலும், இந்துவிலும், துக்ளக்கிலும் இல்லாத உண்மைகளை புலப்படச் செய்யுங்கள்.
முடிந்ததை செய்யுங்கள்!

ஐயா, ஏதாவது பண்ணணும்க. பாரதி சொன்னது போல் 'தேடிச் சோறு தினம் தின்று...' மாதிரி ஆகி விடாதீர்கள்.

சாக்கடை அவ்வளவு கலங்கி இருக்கிறது. நல்லது செய்ய வேண்டும் என்று களம் இறங்கும் ஒரு சில நல்லவர்களும் விழி பிதுங்கி விடும் அளவிர்க்கு நிலமை கிடக்கிறது.

வந்தாரை வாழ வைத்த தமிழன் இன்று வறுமை கோட்டின் கீழே! ஏற்றி விடுங்கள்!!!

POSITIVE thoughts are the need of the hour!

வேண்டாம் இனி திராவிட, வன்னிய, பார்ப்பன விவாதங்கள்!!!
கூடி வாழ்ந்தால், கோடி நன்மை கிட்டுமோ இல்லையோ, ஆனால், கெடுதல் வராது!

சுதாரியுங்கள்!

------- 0 -------- 0 -------- 0 -------- 0 --------

இனி கீழே வருவது ஜயராமனின் ஆக்கம்:

================================
திராவிடம் என்ற திராவகத்தின் விளைவு!!

இந்த திராவிடம் நம் ஏழைகளுக்கு கொடுத்தது என்ன தெரியுமா??

அறுபதுகளில், பதவிக்காக பகுத்தறிவு பட்டறை திறந்து, இன வெறியூட்டி, தேசிய நீரோட்டத்திலிருந்து தமிழகத்தை பிறித்தது இனக்கொலை.

எழுபதுகளில், கலை விளம்பர வெறியூட்டி, ஒவ்வாத செல்லுலாய்ட் கனவுகளுக்கு கடை போட்டு, பகட்டுசதையும் பாட்டுவாயும் கொண்டு தமிழர்களை மயக்கத்தில் எதிர்காலத்தை மாய்த்தது கலாசாரக்கொலை.

எண்பதுகளில், பதவிக்காக சாதி வெறியூட்டி, கொள்கைக்கும் தகுதிக்கும் கல்லறை கட்டி அதில் பதவிக்கோட்டை கட்டியது வாழ்க்கைக்கொலை.

தொன்னூறுகளில், நாணயத்தை விலை பேசி, கூட்டமாக கொள்ளைசாத்திரம் இயற்றி, காற்றற்றபோதும் தூற்றப் பயின்று, நாவிழந்தாலும் நாற்காலி இழக்க மறுத்து, வாழ்ந்தது நம்பிக்கைக்கொலை.

இப்போது, இரண்டாயிரங்களில், இசைக்கூட்டமே வசைக்கூட்டமாகி, ஒழிக்கப்படுவதற்குமுன் ஒழிக்கும் கலை வளர்த்து, கால் தளர்ந்து அரைத்துணி நழுவியும் அரைக்காசும் நழுவா பிடி கொண்டு, புகழ்ச்சிக்கு புத்தகம், சால்ராக்கு சங்கம் போட்டு, நடப்பதோ தன்மானக்கொலை.

இத்தனை கொலைகளுக்கு பின் காலியாகிப்போன தமிழக அரசியல் மயானத்தில் இப்போது நடப்பதோ மிஞ்சிய அழுகிய எலும்புகளுக்கு ஆர்ப்பரிக்கும் இரு போட்டி ஓநாய்களின் ஓலம்!!!

ஒவ்வொரு தேர்தலிலும் காதை மூடிக்கொண்டு சும்மா இருக்கும் படித்த கூட்டம், ஓநாய்கள் ஓய்ந்தபிறகுதான் வெளியே வரும்.

நன்றி ஜயராமன். நல்லா சொன்னீங்க!!
============================================

39 comments:

said...

testing 1,2,3...

Anonymous said...

DHENAM ORU POLAMBALA? VELAYA PAARU.

Anonymous said...

Anony..As per anony munnetra kazhagap padi, nalla pathivukalukku varavetpu kodukkanum. nee poli anony-ya?

Nallana thodarattum pathivare

said...

//A/C ல் அமர்ந்து கொண்டு, பொழுது போவதர்க்காக, கோர்வை தமிழில் எழுதினால் மட்டும் போதாது நண்பர்களே.
முடிந்தவர்கள் களம் இறங்கி field-work செய்ய வேண்டும். முடியாதவர்கள், field-work செய்பவர்களுக்கு முடிந்த உதவி செய்ய வேண்டும்.
//
இந்த பதிவெழுதி அதில் இப்படியான அறிவுரைகளை அள்ளி வழங்கும் நேரத்தில் இதற்கான நேரத்தையும், இதற்கு ஆன செலவையும் நீங்கள் சொன்ன ஃபீல்ட்-ஒர்க்கை செய்திருக்கலாமே? நீங்கள் ஏற்கனவே ஃபீல்ட்-ஒர்க் செய்பவரென்றால் இதை எழுதிய நேரத்தில் வலைப்பதிவில் செலவழிக்கும் நேரத்தில் இன்னும் கொஞ்சம் கூட ஃபீல்ட்-ஒர்க் செய்திருக்கலாமே?

நீங்கள் யார் எவரென்றெல்லாம் எனக்கு தெரியாது, சில பிரச்சினைகளை வெகுசன ஊடகங்கள் ஒதுக்கி வைத்துள்ளன, வெகுசன ஊடகங்களில் உள்ள உயர் சாதி ஏகாதிபத்தியத்தினால் வரையறை செய்யப்பட்ட சில எல்லைகளை இன்று தமிழகத்திலும் உயர்சாதியினரின் ஆதிக்கம் இல்லாத பத்திரிக்கைகளிலும் எதிரொலிக்கின்றன, இந்த பிரச்சினைகளை பொது தளத்தில் பேசவே கூடாது, கல்யாணத்திலிருந்து கருமாதி வரை சாதியை வைத்து தேய்த்துக்கொண்டு சாதிப்பற்றி பொதுவில் பேசுவது கேவலம் என்று உருவாக்கி வைத்துள்ள புனித பிம்ப முயற்சிகள் இங்கே உடைத்தெறியப்படும் போது இங்கு அந்த பிரச்சினைகளைப்பற்றி பேசுபவர்களை விலக்க வேறு மாதிரியான உத்திகள் கையாளப்படுகின்றன, அதில் நீங்கள் மேலே சொன்ன ஒன்றும் கூட, நீங்கள் வேண்டுமென்று கையாண்டீர்களா அல்லது ஊடகங்கள் ஏற்படுத்தி வைத்திருக்கும் புனித மயக்கத்தில் வந்ததா என்பது எனக்கு தெரியாது...

Anonymous said...

முதலில்உங்களைGood News India
என்று மாற்றுங்கள்,

நல்ல விசயங்களைச் சொல்லும்
நீங்களும் நல்ல பெயரைச்
சூட்டலாமல்லோ?


தர்மத்தை நிலை நிறுத்த
கிருஸ்ணரை விரைந்து வலிந்து அழையுங்கள்.

நிச்சயம் வருவார்,

said...

anony1,
வருகைக்கு நன்றி.
என் வேலையை நான் பார்த்துக் கொள்கிறேன்.

உங்களுக்கு இங்கு பிடித்தது/பிடிக்காதது சொல்லிட்டு போங்க.

வீட்டுக்குள்ள வந்துட்டு ஒண்ணும் சொல்லாம போனா எப்படி?

said...

anony2,
வருகைக்கு நன்றி.
தோள் கொடுப்பதர்க்கும் நன்றி!

said...

anony3,

//
தர்மத்தை நிலை நிறுத்த
கிருஸ்ணரை விரைந்து வலிந்து அழையுங்கள்//

நான் ஏற்கனவே ஒரு பதிவில் சொன்னது போல், புத்தன், ஏசு, காந்திக்கெல்லாம் காத்திருந்து பயனில்லை.

காந்தி அப்படி நினைத்து இன்னொரு காந்திக்கு காத்திருந்திருந்தால் நாம் இன்றும் அடிமைகளாகத்தான் இருந்திருப்போம். ( that is a fact,but, Gandhi யை பிடிக்காதவங்க வேறு மாதிரி நினைக்கலாம்)

தர்மம் காக்க கிருஷ்ணரையும், ஏசு வையும், அல்லாவையும் வேண்டுதலில் தவறு ஒன்றுமில்லை.

ஆனால், உங்களால் இயன்றதையும் தவறாமல் உடனே செய்ய வேண்டும்.

said...

குழலி சார்,

நான் ஒரு சராசரி மனிதனே. வெறும் வெட்டி பேச்சு பேசி நேரிடையான உதவிகள் செய்யாமல் இருந்தவந்தான்.
எப்பொழுதாவது ஒரு சுனாமியோ, ஒரு பூகம்பமோ வரும்போது அஞ்சோ பத்தோ கொடுத்து திருப்தி பட்டுக்கொள்ளும் சாதாரணன்.

எல்லாரும் அப்படி இருக்கவேண்டாம் என்பதுதான் என் வேண்டுகோள்.
உயர் சாதி ஏகாதிபத்தியத்தினால் பிரச்சனை இருந்தது உண்மைதான். இன்னும் சில இடங்களில் இருப்பதும் உண்மைதான்.

ஆனால் அதையெல்லாம் சும்மா பேசிக் கொண்டு உங்களுக்குள் வாதங்கள் செய்து கொண்டிருந்தால் யாருக்கென்ன பயன்? உங்கள் பதிவுகளை படிக்கும் ஒரு 100 பேருக்கு பொழுது போவதை தவிர?

அதனால்தான் சொன்னேன், அடிமட்ட ஏழைகளில் ஒருவருக்காவது வழி பிறக்க வகை செய்யுங்கள் என்று. அவனுக்கு தோள் கொடுத்து தூக்கி விடுங்கள்.

இரு தரப்பிலும் நல்லவர்களும் இருக்கிறார்கள், கெட்டவர்களும் இருக்கிறார்கள்.

நீங்கள் நல்லவரா? கெட்டவரா?

said...

குழலி,

said...

குழலி, நான் உங்கள் 'திமுக அரசின் கரும்புள்ளி' என்ற பதிவில் இட்ட பின்னூட்டம் இங்கேயும் பொறுந்தும்.

//
நல்ல பதிவுதான். சபாஷ்.

ஆனால், நீங்கள் இன்னும் நமது திராவிட தலை(?)வர்களின் 'brain wash'ல் இருந்து மீளவில்லை போல் தெரிகிறதே.
பிரிவினையை ஊட்டி நம்மை மடையர்கள் ஆக்கிய ஆங்கிலேயனை விரட்டி விட்டோம். உள்ளூர் பிரிவினை வாதிகளை விரட்ட அவரவர் மனதில் ஒளி பிறக்க வேண்டும்.
இதுக்காக இன்னொரு காந்தி வருவதர்க்கெல்லாம் காத்திருக்க முடியாது.

100 வருடதிர்க்கு முன்னர் வேண்டுமானால், நீங்க சொல்ற மாதிரி, சில ஆதிக்கங்கள் ஜாதி பேர்ல இருந்திருக்கலாம். இப்ப அதெல்லாம் கிடையாது (அல்லது ரொம்ப கம்மி).

ஒரு ஒரமா தனியா ஒக்காந்து அமைதியா யோசிச்சு பாருங்க. உங்களுக்கே புரியும். எனக்குத் தெரிஞ்சு நீங்க எல்லாம் தெரிஞ்சும் சும்மா ஒரு வாதத்துக்கு இந்த மாதிரி கதை கட்டரீங்கண்ணு நெனைக்கறேன்.

நல்லா எழுதரீங்க. ஆக்க பூர்வமா எல்லாரையும் சிந்திக்க வைக்கர மாதிரி எழுதுங்க. பிரிவினை வேண்டாம்.
யாரு கண்டா, உங்க எழுத்த படிச்சுட்டு இங்கிருந்தே கூட அடுத்த தலைவர் ரெடி ஆகலாம்.

பட்டதை சொன்னேன். அம்புடுதேன்!!

நடப்பவை நன்மைக்கே - nature has its way. எல்லாத்துக்கும் கணக்கு இருக்கு. பதில் சொல்லும் நாள் கண்டிப்பாய் வரும்.
//

said...

சார்..
நீங்க எங்க குழலி அண்ணனுக்குச் சொல்றதெல்லாம் அவருக்குப் புரியும்னு எனக்கு நம்பிக்கையில்லை. அவர் அப்படித்தான்.. அவரைச் சொல்லிக் குத்தமில்லை.. அவரைத் மாத்தற நேரத்துல இன்னும் நூறு அல்லது ஆயிரம் பேரைத் மாற்றிவிடலாம். வலையுலகத்துல அவர் சொல்லி நிச்சயம் பெரிய பாதிப்பெல்லாம் வந்திரும்-னு நெனக்கிறமாதிரியெல்லா பெரிய ஆபத்தொன்றுமில்லை.

அவரை இப்போதைக்கு விட்டுருங்க.. டயம் வேஸ்ட்.. அவரா அப்புறம் மாறிடுவாரு..


சீமாச்சு...

said...

சீமாச்சு, வருகைக்கு நன்றி!
முடிந்த வரை அனைவரையும் நடு நிலை வாதிகளாக மாற்றுவதே என் பதிவின் நோக்கம்.

நான் சொன்ன மாதிரி குழலி அவர்கள் அமைதியாக அமர்ந்து யோசித்துப் பார்த்தால், உண்மை விளங்கி, ஜாதிப் பிரிவினை பற்றி எழுதுவதை குறைத்து ஆக்கத்திர்கு வழி வகுக்கலாம்.

Everyone has a reason for taking his/her stance. I respect that. Hope time will convince them to take the right path!

said...

jeyaraman articlea padicha athey nerathila dharumi,thamizsasi article padichu vimarsanam senchu iruntheena ok. Avar ezuthina kalakattahil thaan dravidan muzhithukondan. En englishkaran periodla pathi ezuthala. Avar ezhutha matar ivarum patikamatar enna andrayailirudhu oru inam eppadi matra inathai aatu mandaikalai, sinthikkavidama sathi pesi keez matathil vaithirundhu. Naam "indian" enneum vattathil irudhu "Human" enra vattathil vandu piragu yosikalame, en jaathi peyaruku pinnal ottikittu thiriyudu. indiavil mattimilama America, canda enru engu ponalam jaathi peruku pinnal pottu azhagu pakkudhu. TVS companiyil velaiku pona enna jaathi,unga kula thozhil enna enru kekkuthu. Ithil matrathai kondu varungal pinnal moolayil utkarnthu yosinga enru Kuzalikkum, dharumikkum en enakkum yasanai sollalam. Perila jaathi parkarudu, pechil jaathi parkarudu (eelam maraimugamai thaan), ehuthil jaati parkarudu, cinema director, pathrigai ellathilayum jaathi parkarudu, anaal yaravadu kettaal naan sarbatravan, neutral person, secular, nationalist endru ooruku yosanai vazhangivadu..Ellam anniyan, gentleman, jeyaraman effectoo vera. Poi Hindu, Thuklaq, Jeyaram,Bala matrum srinivas enru pala nanbarkal blogsai padithu ooruku ubadesam pannuppa raja.

said...

Mr. VVanniyan,
I will give you a detailed response after some time.
But, it looks like you didn't read my posting fully.
please do read again.

I suggested this:
//ஒரு news-letter உருவாக்கி உங்கள் தெருவில் வசிப்பவர்களுக்கு நல்ல சிந்தனைகள் பரவ வழி செய்யுங்கள்.
தினகரனிலும், தினமலரிலும், தினத்தந்தியிலும், இந்துவிலும், துக்ளக்கிலும் இல்லாத உண்மைகளை புலப்படச் செய்யுங்கள்.
முடிந்ததை செய்யுங்கள்!
//

and you are saying this:
//
Poi Hindu, Thuklaq, Jeyaram,Bala matrum srinivas enru pala nanbarkal blogsai padithu ooruku ubadesam pannuppa raja.
//

I have full respects for Dharumi. I will try to get his opinion on my posting separately.

thanks for your opinions!

said...

ஒரு சாதாரண business செய்பவன் கூட...என்று ஆரம்பித்துள்ளீர்களே அதிலிருந்து உங்கள் கருத்துக்களில் எனக்கு உடன்பாடு உண்டு. பேசிக்கொண்டிருப்பதைவிட ஏதாவது செய் என்கிறீர்கள். அது சரி.

//ஜாதியைப் பற்றி போதிக்காமல், 'இந்தியன்' என்ற உணர்வை மட்டும் ஊட்டுங்கள்.//
நன்றாயிருக்கிறது பேசுவதற்கு.
இந்தக் கவிதைகளை
வாசித்து விட்டு ஜாதியைப் போதிக்காமல் இருக்கவேண்டியது யார்? போதிக்காமல்தான் இருக்கவேண்டுமா? என்பதையும் முடிவு செய்து கொள்ளுங்கள்.

//ஜயராமன் சொல்வதை போல, நமது இரு திராவிட கட்சிகளும் வருமை கோட்டுக்கு கீழே இருப்பவனை மேலே கொண்டு வரவே இல்லை.//
தமிழ்நாட்டில் திராவிடக் கட்சிகள் இப்படி வறுமையைக் கட்டிக் காத்து வந்துவிட்டதாக வைத்துக் கொண்டால், மற்ற மாநிலங்களில் மற்றைய அரசியல்கட்சிகள் தேனும் பாலும் ஓட வைத்து விட்டார்களா?

ஜயராமனின் "ஆக்கம்" எனக்கு முற்றிலும் உடன்பாடல்ல. "அவன் biased, இவன் biased என்று நேரம் விரயம் செய்கிறார்கள்..." என்று நீங்கள் எழுதியிருப்பது ஒருவேளை அவருக்காகத்தானோ?

said...

அழைத்தவுடன் உடனே வந்து படித்து விமர்சனம் தந்ததர்க்கு நன்றி.

கவிதைகளை படித்தேன். பகீரென்றது. எவ்வளவு வெறுப்பு இருந்தால் இந்த மாதிரி எல்லாம் எழுதத் தோன்றும்.
புரட்சிகரமாக இருந்தாலும் இப்படியா?
பாரதியும் புரட்சி கரமாக எழுதியவர்தானே - அதை படிக்கும் போது இந்த பகீர் வரவில்லை. ஒரு உந்துதல்தான் வந்தது.

ஜாதியை பேசி மட்டம் தட்டாதே என்று தான் கவிஞர் வலியுறுத்துகிறார். அதே தான் என் நிலையும்.
தூற்றுபவன் இருக்கத்தான் செய்வான். ஆனால் இங்கு பதியும் நல்லவர்களும் உனக்கு நான் சளைத்தவன் இல்லை என்பது போல் போரிடுவது தான் வேண்டாதது என்கிறேன்.
இருவரும் தோளோடு தோள் கொடுத்து ஆக்கத்திர்க்கு வழி வகுக்கவே சொல்கிறேன்.

எனது இப்பொழுதைய கவலை என் மாநிலத்தை பற்றி மட்டும்தான். அடுத்த மாநிலம் எக்கேடு கெட்டாலும் இப்பொழுதைக்கு கவலை இல்லை.

இரு திராவிட கட்சிகளும் நம்மை கவிழ்த்து விட்டன என்பதில் உங்களுக்கும் உடன்பாடு உண்டென்றே கருதுகின்றேன்.

அவன் biased இவன் biased என்று எல்லாரையும் மனதில் வைத்துத்தான் சொல்கிறேன்.

உங்களுக்கு ஜயராமனை தெரியுமா?. அவரின் பதிவுகள் எது என்று எனக்கு தெரியாது. அறிந்தால் இங்கே பின்னூட்டமிடவும்.
நீங்கள் நினைக்கும் ஜயராமன் தான் நான் பதிந்த விவரம் சொன்னார் என்பதும் எனக்குத் தெரியாது.

எதோ ஒரு பின்னூட்டதில் இருந்த துண்டு விஷயம் பிடித்ததால் பதிவினேன்.

கருத்துக்கு மிக்க நன்றி சார்!

ஜாதி என்ற வார்த்தையையே உபயோகித்தில் இருந்து எடுக்க வேண்டும் என்பது தான் நிலை!

said...

விவன்னியன்,
ஜயராமனின் மற்றய பதிவுகளில் அவர் ஒரு தலை பட்சமாக இருந்திருக்கலாம். அவர் பதிவு இடும் யு.ஆர்.எல் என்னிடம் இல்லை. கிடைத்தால் கண்டிப்பாக படித்து, என் கருத்தை அவருக்கு தெரிவிக்கிறேன்.

இந்த பதிவின் தகவல் என்ன வென்றால், இதுவரை இருந்த ஜாதி ஆதிக்கங்களை பின்னில் தள்ளிவிட்டு இனி எப்படி மேலெழுவது என்பதுதான்.

100 வருடங்களுக்கு முன் ஜாதி ஆதிக்கம் பயங்கரமாக இருந்தது தான். அதை நான் மறுக்கவில்லை.
இன்று 88% ஒடுக்கப்பட்டவர்கள் என்கிறார்கள். பாக்கி உள்ள 12%, 'மேல்' ஜாதி ஆட்களை பார்த்து சும்மா குரைத்துக்கொண்டிருந்தால் போதுமா?

88% ல் நீங்களும் ஒருவரானால், உங்கள் மக்களுக்கு உண்மையான தொண்டு செய்து மேலே ஏற்றி விடுங்கள் என்றுதான் சொல்கிறேன். 12% ல் இருப்பவன் என்னை வளர விட மாட்டேன்கிறான் என்பதெல்லாம் பிதற்றல். இப்பொழுது அதெல்லாம் எங்கும் நடப்பதில்லை.

TVS ல் ஜாதியை கேட்க்கிறான் என்கிறீர்கள். யாரை கேட்டார்கள்? கேட்டு விட்டு ஜாதியின் காரணத்தினால் வேலை கொடுக்காமல் இருப்பது சட்டப்படி குற்றம். அப்படி செய்திருந்தால் அதை ஒரு பிரச்சனையாக எழுப்புங்கள். சட்டப்படி complaint கொடுங்கள். செய்தீர்களா?

ஒடுக்கப்பட்டவனுக்கு ஜாதியின் பேரில் வேலை தராமல் ஏமாற்றப்பட்டிருந்தால் அவனுக்கு தோள் கொடுத்து அவன் உரிமையை வாங்கிக் கொடுங்கள். செய்வீரா?

ஒடுக்கிவிட்டான் ஒடுக்கிவிட்டான் என்று சொன்னால் போதாது. துணிந்து எதிர்த்தால் மிச்சம் இருக்கும் ஏகாபத்தியங்களும் (இன்னும் இருந்தால்) அழியும்.

அதை விட்டு விட்டு எல்லாருக்கும் 'நீ கெட்டவன்' என்று சாயம் பூசி தானும் திருந்தாமல், மற்றவரையும் திருந்த விடாமல் இருக்க செய்வது மிக மிக வருந்தத் தக்க செயல் சார்!

திருந்துங்கள்!

said...

//TVS ல் ஜாதியை கேட்க்கிறான் என்கிறீர்கள். யாரை கேட்டார்கள்? கேட்டு விட்டு ஜாதியின் காரணத்தினால் வேலை கொடுக்காமல் இருப்பது சட்டப்படி குற்றம். அப்படி செய்திருந்தால் அதை ஒரு பிரச்சனையாக எழுப்புங்கள். சட்டப்படி complaint கொடுங்கள். செய்தீர்களா? // Romba nandri. Thirundha try pannukiren. Jaathi kettadhu yaro illai, Satchath ennai thaan. Interview sendradhu TVS Mills, Mudakuchalai, varudam 2003.TVS jaathi paarka matarkal endru PSG college Of tech, coimbatore la poi kettu parunga iya. Naan solvadhu 1988-1992 kaala katathil. Case poda solgireegal. OK Jaathi kettan enraa? Namba courtin vaadagal theriyada alladhu theriyadadhu pol pesugireera? Naanum bolg ezhutha arampitha athu Kuzhali polo alladhu Lucklook polo akapogudhu. Oru mukyamana onrai marundupoi vitten. En unmai peyar "Balaji". Puridhavarl purindhal sari.
Namdri Good sorry "Bad News India".

said...

விவன்னியன், உங்கள் நிலை புரிகிறது.

//அப்படி செய்திருந்தால் அதை ஒரு பிரச்சனையாக எழுப்புங்கள். சட்டப்படி complaint கொடுங்கள். செய்தீர்களா?//

செய்தீர்களா, செய்வீர்களா என்று நான் கேட்டது, உங்களுக்கே இந்த பிரச்சனை ஆகியிருக்கும் என்று நினைத்து அல்ல.

வேறு ஒருவருக்கு ஆகியிருந்தால், இப்பொழுது நல்ல நிலையில் உள்ள நீங்கள் உதவப் பார்த்திருக்கலாமே என்று நினைத்துதான்.

உங்களுக்கு இப்படி ஆனது வருத்தம் தருகிறது. படித்து முடித்தவுடன் இப்படி ஆகியிருந்தால், கண்டிப்பாக உங்களால் அவர்களை எதிர்த்து ஒன்றும் செய்திருக்க முடியாது என்பதை ஒப்புக்கொள்கிறேன்.

ஜாதி அடிப்படையில் TVS போன்ற நிறுவனங்கள் இன்னும் ஒடுக்கிகொண்டிருந்தால், அதை வன்மையாக கண்டிப்போம். பாதிக்கப்படுபவர்களுக்காக குரல் கொடுப்போம்.

TVS ஆட்களிடம் இருந்து சில விவரம் திரட்ட பார்க்கிறேன்.
இந்த விஷயத்தில் நமது எரிச்சலை அவர்களுக்கு வெளிப்படுத்த வழி செய்யலாம்.

TVSல் வேலை செய்யும் யாரேனும், அங்கு ஜாதி அடிப்படையில் எவ்வளவு % ஆட்கள் இருக்கிறார்கள் என்று விசாரித்து சொன்னால் உதவியாக இருக்கும்.

said...

//தினகரனிலும், தினமலரிலும், தினத்தந்தியிலும், இந்துவிலும், துக்ளக்கிலும் இல்லாத உண்மைகளை புலப்படச் செய்யுங்கள்.
முடிந்ததை //

பேசாம முரசொலி மற்றும் நமது எம் ஜீ ஆர் எல்லாருக்கும் வாங்கி கொடுத்துடலாம்..இது இரண்டும் தான் எனக்கு தெரிந்த பார்பனீய ஆதிக்கசக்தி இல்லாத உண்மை மட்டுமே பேசும் பத்திரிகைகள்.

This will be a cheaper solution.

பாலா

said...

பாலா,
வருகைக்கு நன்றி

//This will be a cheaper solution.//

என்னமோ நல்ல விஷயம் சொல்லப் போறீங்கண்ணு பாத்தா. ஏமாத்திட்டீங்களே.

இங்க இருக்கர கும்பல் சரி இல்ல. முக்கால் வாசி பேர் வாயால் முழம் போடுபவர்கள் மட்டும்.

குத்தவாக்கம் இளங்கோ போல் எவ்ளோ பேருக்கு மனதும் தைரியமும் வரும்?

Anonymous said...

உதயமூர்த்தி சார் மாதிரி

அறிவுள்ளவங்கள முன்னால்

அழைத்து வாருங்கள்.

said...

அனானி, உதயமூர்த்தி போல் பலர் இல்லாதது நம் துரதிர்ஷ்டமே.

9-5 வேலையில் இருப்பவன், சனி ஞாயிறு விடுமுறை இருப்பவன் - ஊருக்கு ஏதாவது செய்ய முயற்சி பண்ணணும்.
டி.வி முன்னாடி சினிமா ஆட்டம் பாத்தா அப்படியே வயசாயிடும். பொறந்தென்ன பயன் அப்பறம் ?

Anonymous said...

I just read this. Very useful thoughts Sir.

said...

அனானி,

//I just read this. Very useful thoughts Sir. //

நன்றி அனானி. உங்களால் முடிந்ததை செய்யுங்கள்.

Anonymous said...

//ஜாதியைப் பற்றி போதிக்காமல், 'இந்தியன்' என்ற உணர்வை மட்டும் ஊட்டுங்கள்.
//

//எனது இப்பொழுதைய கவலை என் மாநிலத்தை பற்றி மட்டும்தான். அடுத்த மாநிலம் எக்கேடு கெட்டாலும் இப்பொழுதைக்கு கவலை இல்லை.
///

:):):)

said...

இந்தியனாக இருக்கும் தமிழா

////ஜாதியைப் பற்றி போதிக்காமல், 'இந்தியன்' என்ற உணர்வை மட்டும் ஊட்டுங்கள்.
//
//எனது இப்பொழுதைய கவலை என் மாநிலத்தை பற்றி மட்டும்தான். அடுத்த மாநிலம் எக்கேடு கெட்டாலும் இப்பொழுதைக்கு கவலை இல்லை.
///
//

வளரும் குழந்தைகளுக்கு 'இந்தியன்' என்ற உணர்வை ஊட்டணும். (அவன் வளர்ந்து ஆளானவுடன், ஜாதி, மதம், இனம் என்று அவன் அப்பா,பாட்டனார் ஆடிய ஆடக் கூடாது என்பதே எண்ணம்)

நாம் நமது தெரு, ஊர், மாநிலத்தில் உள்ள அவலங்களை நீக்கி சுத்தப் படுத்தணும். குழந்தை வளர்வதர்க்குள் மாநிலப் பிரச்சனைகள் சரி ஆகி, ஒளிமயமான இந்தியாவில் வாழும் சூழ்நிலை குழந்தைகளுக்குக் கிட்டும்.

நடக்குங்கறீங்க?

said...

//A/C ல் அமர்ந்து கொண்டு, பொழுது போவதர்க்காக, கோர்வை தமிழில் எழுதினால் மட்டும் போதாது நண்பர்களே.//
ஆஹா..."பாலுங்கிற பேருக்குப் பின்னால தேவர்ங்கிறது நீங்க படிச்சு வாங்கின பட்டமா?"-னு சத்தியராஜை அந்த சின்ன பையன் கேட்டது போல கேட்டுட்டீங்களே!!!

//இந்த பதிவெழுதி அதில் இப்படியான அறிவுரைகளை அள்ளி வழங்கும் நேரத்தில் இதற்கான நேரத்தையும், இதற்கு ஆன செலவையும் நீங்கள் சொன்ன ஃபீல்ட்-ஒர்க்கை செய்திருக்கலாமே? //
குழலி, இப்படி சொல்லுறதுக்காகவாவது யாராவது வேண்டும் இல்லையா. விதன்டாவாதமாக தெரிகிறது. Something is better than Nothing. So it is better to be Something, rather than Nothing.

//This will be a cheaper solution.//
ஆமாங்க! உண்மையிலேயே இது 'cheaper' solution தான்.

said...

வாங்க சீனு,

//குழலி, இப்படி சொல்லுறதுக்காகவாவது யாராவது வேண்டும் இல்லையா. விதன்டாவாதமாக தெரிகிறது. Something is better than Nothing. So it is better to be Something, rather than Nothing.
//

சரியாச் சொன்னீங்க. atleast நம்மள்ள பத்து பேர் இத செய் அத செய்னு நல்ல விஷயங்கள எடுத்து சொன்னா, செய்ய முடிஞ்சவங்க செய்வாங்க.

வெட்டி பேச்சுக்கு நடுவில் நம்மால் முடிந்த நல்லவற்றையும் எடுத்துக் கூறுதல் நலம்.

Anonymous said...

So Mr.குழலி / Kuzhali ....trying to do following

No one should say good things...Everyone should follow what he says or his thalaivar says...

Yes there is a reason, he may be partner with No-1 welthiest people in the tamilnadu . If people get knowledge its knowledge they cannot utilize the tamilnadu people innocence...

There is a Tamil Leader(!) saying that he can buy someone if he has 30 Crore....So he wants everyone to support his leader to buy another leader....

Heeee....Please publish this....
Kunnathooran

Anonymous said...

என்னைய்யா இப்படி ஆளாளுக்கு சண்டை போட்டுக்குறீங்க. ''இந்தியனாக இரு, தமிழனாக இரு'''ன்னு பேசறீங்களே ஒழிய எவனும் ''மனிதனாய்'' இருப்பதைப் பற்றி பேசக் காணோம். ஏ.சி அறையில் உட்கார்ந்து கொண்டு எழுதுவதால் எந்த பயனுமில்லை என்று எவன் சொன்னான்? உங்களுடைய எல்லா கருத்துக்களுமே படித்தைலிருந்து திரட்டியவை தானே!

''எழுத வேணாம் போய் பீல்டு ஒர்க் பண்ணு'' அப்டீன்னா?. எழுதுறதுனால எல்லாம் முடியும்'னு எனக்குத் தெரியும். ஜாதி என்கிற பெயரை வித்து சம்பாதித்தவனுங்க தான் ஊர்ல அதிகம். அதுவும் குறிப்பா ''தலித்'' என்கிற பெயரை வித்து சம்பாதிக்கறவனுங்க இருக்கானுங்களே! அவனுங்கள செருப்பால அடிச்சாக்கூட சரிப்பட்டு வராது.

முதல்ல நாம மனுசனா இருப்பதைப் பற்றி மத்தவங்களுக்கு சொல்வோம். மற்றதைப் பற்றி அப்புறம் சொல்லுங்கள்.

said...

வாங்க பாலசந்திரன்,

//ஏ.சி அறையில் உட்கார்ந்து கொண்டு எழுதுவதால் எந்த பயனுமில்லை என்று எவன் சொன்னான்?//

இணையத்தில் 'பதிவு' எழுதுவதால் மட்டும் ஒரு பயனும் வரப்போவதில்லை. நீங்க எழுதரத படிக்கறது இன்னொரு a/c ரூம்ல இருக்கும் நண்பர். கடைகோடி ஜனத்துக்கு உதவ field-work செய்தாகத்தான் வேண்டும்.

உங்க பக்கத்துல அந்த 105 வயசு தாத்தாவ பத்தி எழுதினீங்க. எழுதி மட்டும் இருந்தா, அந்த தாத்தாவுக்கு 35 ரூபாயும், டீயும், பரிவான வார்த்தையும் கெடச்சிருக்குமா?

//''இந்தியனாக இரு, தமிழனாக இரு'''ன்னு பேசறீங்களே ஒழிய எவனும் ''மனிதனாய்'' இருப்பதைப் பற்றி பேசக் காணோம்.//

இது ரொம்ப கரெக்ட், இந்தியனை, மனிதம் என்று மாற்றி விட்டேன். தவறுதான்.

நன்றி!

Anonymous said...

அய்யா! நான் ஒரு விஷயத்தை எழுதுகிறேன், அது உங்களைத் தூண்டுகிறது. நல்லதும் நடக்கலாம், கெட்டதும் நடக்கலாம். பத்திரிகையில் எனது படைப்புகளை படித்துவிட்டு பயனடைந்தவர்களைப் பற்றி எனக்கு நேரடியாகத் தெரியும்.

பாதிக்கப்பட்ட ஒரு பெண்னைப் பற்றி எழுதினேன். கடல் கடந்தும் உதவி வந்தது, நீங்கள் சொன்ன ஏ.சி. அறையிலிருந்தும் உதவி வந்தது. என்னைப் பொறுத்த வரையில் எழுதுவதும், படிப்பதும் தான் முதல் கடமையாக கருதுகிறேன்.

ஊரை அடிச்சி உலையில் போடுகிற அரசியல்வாதிகளைப் பற்றியும், காவல் நிலையத்திலேயே கற்பழிக்கிற போலீஸ்காரர்களைப் பற்றியும் எழுதுவதினால், பின் அதைப் படிப்பதினாலும் தான் ஓட்டளிக்க நீங்கள் ஒரு முடிவுக்கு வர முடியும். துரதிஷ்டவசமாய் கவர்[உள்ளே கத்தையாய் பணம் இருக்கும்] வாங்கிக் கொண்டு செய்தி கவர் பண்னுகிற பத்திரிகையாளர்கள் தான் அதிகம்.

''உயிர்வலி'' பரணிக் கவுண்டரைப் படித்துவிட்டு ஒரு நண்பர் என்னைத் தேடி வந்தார். முதியோர் இல்லத்தில் வைத்து அவரை நன்கு பராமரித்துக் கொள்வதாக உறுதியளித்தார். தாத்தாவிடம் கேட்டேன் ''ஏங்கூட வந்திட்றியா! சாப்பாடுலாம் தந்து நல்ல படுக்க வசதி பண்னித் தர்றேன்''னு.

''வாணாம் உடு. எனுக்கு இதே ப‌ழ‌கிப் போச்சு. நீ எங்க‌ இருந்தாலும் ந‌ல்லா இரு''ன்னார். இன்னைக்கும் அவ‌ர் புதுச்சேரி நேரு வீதியில் அதே இட‌த்தில் தான் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார். அதனால சொல்றேன், ஏ.சி. அறை என்பது முக்கியமில்லை. யாரு உக்காந்துனு இருக்காங்கன்றது தான் முக்கியம்.

வேண்டுமானால் புதுச்சேரிக்கு ஒரு ந‌டை போய் பார்த்து வாருங்க‌ள். தெருவுக்கு தெரு ச‌ர‌க்கு ந‌ல்லா கெடைக்கும். இப்ப‌ல்லாம் ம‌ந்திங்க‌, க‌வ‌ர்னருலாம் கூட அதே க‌தின்னு க‌ட‌க்குறாங்க‌.

said...

பாலா,

சும்மா, பொழுது போவதர்க்காக எழுதினா மட்டும் போதாது. ஊருக்கு பிரயோஜனப் படர மாதிரி 'நேரிடையா' எதையா செய்யுங்க என்கிறேன்.

நீங்கள் எழுதுவதை பார்த்து அந்த 'நேரிடையான' உதவி வேறு யாராவது செய்தாலும் சரிதான்.
எனக்கு அதில் ஆட்சேபனை இல்லை சார் :)

முடிவில், நல்லது நடக்கணும். அம்புடுதேன்.

(இந்த பதிவை எழுதிய நேரத்தில் நமது இணையத்தில் வேண்டாத பல வாக்குவாதங்களும், வீண் விவாதங்களும் நடந்து கொண்டிருந்தது. அதன் விளைவே இது)

Anonymous said...

சாதி ஒழியவேண்டும் என்பதை நினைத்து்ச்செய்ல் படவேண்டியது ஒவ்வொருவரின் கடமை.அதுதான் நாம் படிதிருக்கிறோம் பண்பட்டிருக்கிறோம் என்பதன் அடையாள்ம்.
உண்மையிலேயே தொண்டு செய்வதுதான் உண்மையான் மகிழ்ச்சியைக் கொடுக்கும்.அது அனுபவிப்பவர்களுக்குத்தான் தெரியும்.
EXNORA வில் சேர்ந்து உழைத்துப் பாருங்கள்.

Anonymous said...

////இனி கீழே வருவது ஜயராமனின் ஆக்கம்:

================================
திராவிடம் என்ற திராவகத்தின் விளைவு!!

இந்த திராவிடம் நம் ஏழைகளுக்கு கொடுத்தது என்ன தெரியுமா??

அறுபதுகளில், பதவிக்காக பகுத்தறிவு பட்டறை திறந்து, இன வெறியூட்டி, தேசிய நீரோட்டத்திலிருந்து தமிழகத்தை பிறித்தது இனக்கொலை.//////

ஜெயராமன் அவர்களே, இன உணர்வு வந்ததால்தான் குலக்கல்வியிலிருந்து விடுதலை பெற்றது ஒரு இனம்.

இதைத்தான் பெரியார் சொன்னார் அன்று, இதற்கு பெயர் இன வேறியா?


நாடு, மொழி, கடவுள், மதம், சாதி என்று எந்தபற்றுமின்றி, மானுடப் பற்றுடன் அறிவைக் கொண்டு தங்குதடையின்றி சிந்தித்துச் செயல்புரிவதே பகுத்தறிவாளர் கடமையும், பொறுப்புமாகும். தீண்டாமை என்பதே சாதி காரணமாக ஏற்பட்டதே தவிர, அதற்கு வேறு காரணமே ஆதாரமே இல்லை. சாதியை வைத்துக்கொண்டு தீண்டாமை ஒழிய வேண்டும் என்பது சிறிதும் அறிவுடைமையாகாது..

--பெரியார்


பகவத்கீதை படித்து கொண்டு , பண்டாரங்களின் காலில் விழுந்து தேசிய்நீரோட்டத்தில் கலக்கவில்லை என்கிற ஆதங்கமோ...

பீகார், ஒரிசா, அசாம் மற்றும் பல மாநிலங்கள் தேசிய நீரோட்டத்தில் கலந்துதான் இரூந்தன...என் தமிழ்நாடு இவைகள் அனைத்தைஇஉம் விட உயர்வானது.

BADnews india,

உங்கள் கருத்துகள் சிறப்பு ஆனால் ஜெயராமன் போன்றவர்களின் உதவாக்கரை வாதங்களை எடுத்துகாட்டாக சொல்வதினால் உங்கள் கருத்துகள் பொதுநலனை நோக்கியா இல்லை கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே என்கிற அடிமைத்தனத்தை நோக்கியா?

தமிழ்நாடு வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஒரு வேளை ராசாசி முறையில் குலக்கல்வி முறையை பின்பற்றி இருன்ந்தால் ஜெயராமன் பேஷ் பேஷ் நன்னா ஆட்சி பண்றா அப்டினு சொல்லி இருப்பாரோ.
என்னவோ!!!!!!

மற்றபடி உங்கள் கருத்துகள் நன்று.

Anonymous said...

What was the use of all the arguements over 60 years about this caste and that caste? Going downhill is the only price we have paid. We have become insensitive, indecent and selfish. It is tiresome to argue and fight on caste and religion.

As you have rightly said, without hate let us live and let live. Let us do what each one can to help others.

There are people with good intentions in all the castes and religions.

When a job is done with positive feelings and intentions, it can be accomplshed.

Plese do continue writing. You awake and ask disturbing questions. One is compelled to find answers for those..

said...

கருத்துக்களுக்கு நன்றி.

ஜெயராமன் யார் என்று நினைவில்லை. வேறு ஒரு பதிவில் கண்ணில் பட்ட பின்னூட்டத்தை இங்கே பதிர்ந்தேன்.
பின்னூட்டத்தில் உள்ள கருத்துக்கள் பொருந்தவே செய்கின்றன.

Jayalakshmi, Thanks for your kind words. If everyone works together with a common resolve, we may be able to solve atleast a few problems.