Friday, October 13, 2006

ரா றா ரா றா - உதவிக்கு ரா றா

தமிழில் பிழை இல்லாமல் எழுத பல பல முயற்ச்சி செய்தும், இன்றுவரை தோல்விதான்.

முக்கியமாக எந்த இடத்தில் ர் உபயோகிப்பது, எந்த இடத்தில் ற் உபயோகிப்பது என்ற மாபெரும் சந்தேகம் ஒவ்வொரு முறையும் வந்து சஞ்சலப்படுத்துகிறது.

ர் ற் உபயோகிக்க ஏதேனும் விதி அல்லது டிப்ஸ் இருக்கிறதா?

தெரிந்தால் சொல்லுங்கள். பிழைகள் குறைக்க மற்ற டிப்ஸ் இருந்தாலும் பின்னூடுங்கள்.

நன்றி. நன்றி.

20 comments:

துளசி கோபால் said...

ராரா....... ராரா.......
இப்படிப் பிழையெல்லாம் வருவது சகஜம். எனக்கும் அவ்வளவா தமிழ் தெரியாது. என் தாய் மொழி தமிழ் அல்ல(-:

கண்டுக்காதீங்க. நீங்க பாட்டுக்கு எழுதுங்க. கொஞ்ச நாளிலே பழகிரும்( எங்களுக்கு!!!!)

ச்சும்மா ஒரு கலாட்டா.

பிழை வந்துட்டா தலையிலே கொட்டவோ, இல்லை எழுத்தாணியிலே தன்னையே குத்திக்கவோ ச்சீத்தலை சாத்தனார்னு ஒருத்தர் இருந்தாராம். இப்ப இல்லை. அவர் இறந்துட்டாருன்னு கேள்வி:-)))

BadNewsIndia said...

:)

நான் பாட்டுக்கு எழுதறே(?)ன். அப்பப்போ உங்கள மாதிரி யாராவது வந்து பிழை திருத்திட்டுப்போங்க.

வேந்தன் said...

தப்பில்லாமத்தானே எழுதியிருக்கீங்க,அப்புறமென்ன?

வேந்தன் said...

First you should do comment moderation. It's highly important

சாத்தான் said...

தமிழ் நடைக் கையேடு என்று ஒரு புத்தகம் இருக்கிறது. அதை வாங்கிப் படியுங்கள். அடையாளம் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது என்று நினைக்கிறேன்.

புதுமை விரும்பி said...

//கண்டுக்காதீங்க. நீங்க பாட்டுக்கு எழுதுங்க. கொஞ்ச நாளிலே பழகிரும்//

இது தான் என்னோட அறிவுரையும்.

ஒரு காலத்துல தமிழ் வலைப்பதிவுகளில் எழுத்துப் பிழை என்ற ஒருத்தர் இருந்தார். அவரோட வேலையே எல்லாரோட பதிவுலையும் போய் எழுத்துப் பிழை சரி செய்வது தான். இப்ப அவர ரொம்ப நாளா காணோம்.

BadNewsIndia said...

vendhan, thappu naraya varathaan seidhu.

thanks for your input regarding the comment moderation.

idhu varaikkum prachanai varala. ini vandhaal moderate pannalaamnu irukken. paappom.

BadNewsIndia said...

sathaan, thanks for the info.
book ellam padikkara vayasu thaandiyaachu sir.

chinna ra, periya RA, ubayogam eppadi pannanumnu yaaravadhu solvaanganu paathaa, onnum varaliye?

enna madhiridhaan ellaarum irukkaangalaa?

BadNewsIndia said...

pudhumai virumbi,

vaathiyaar maadhiri poi thirutharadhum nalla ideadhaan.
thulasi gopal, did that to me.

thanks

ஷைலஜா said...

ரா எனக்கும் ஒருகாலத்துல சங்கடம் செஞ்சிது..எப்டீன்னா தகராறுக்கு கடைசி ர எதுன்னு அப்றோம் மாவை அரைக்கணுமா அறைகக்ணுமா என்று..
நாய் குறைக்குதா குரைக்குதா என்றெல்லாம் ..சிலகாலம் இதெல்லாம் தொந்தரவாத்தான் இருக்கும்...என் தம்பி சின்னவயதுல ஒருகடிதம் எழுதினான்
அன்புள்ள அப்பாவுக்கு
எப்படி இறுக்கீங்க?
நான் இங்க நல்லா இறுக்கேன்
லீவுமுடிச்சி சுறுக்க ஊறுக்கு வறேன்
இங்க கிறாமத்துல மாடெல்லாம் இறுக்கு
நான் பசுமாட்டை தொழுவத்துல கயிரு வச்சி இருககட்டினேன்.

அப்பா அவனை ஊருக்கு வந்ததும் தூண்ல இறுக்கக்கட்டிபோட்டு உதைச்சி தமிழை சரிசெய்தார்!
அன்புடன்
ஷைலஜா

BadNewsIndia said...

ஷைலஜா, எல்லாம் சொன்னீங்க சரி, ஆனா எப்போ எந்த 'ரா றா' போடணும்னு சொல்லாம போயிட்டீங்களே.

அதுக்கு ஏதாவது இலக்கண விதி இல்லாமலா இருக்கும்?

for example in English, we should use the article AN infront of a word starting with a vowel use 'A' in front of words starting with consonants( an elephant, a bike)

anyone?

BadNewsIndia said...

காத்திருந்து மண்டை காய்ந்த்திருந்த வேளையில், மஞ்சூர் ராஜா என்ற நண்பர் சில விளக்கங்களை ஈ-மெயிலில் அனுப்பினார்.
மஞ்சூர், நன்றி, நன்றி, நன்றி!

matter இதுதான்:
[
pronounciationஐ பொருத்து சின்ன ரா, அல்லது பெரிய றா உபயோகிக்கணும்.
ஒரு வார்த்தையை பேசும்போது நுனி நாக்கு மெதுவாக மேல் வாயை தடவி உச்சரிக்கப்படுவது சின்ன 'ரா' வைத்து எழுத வேண்டும்.
உதாரணம் - அரம், மரம், கரம்,

அழுத்தி உபயோகிக்கும்போது, பெரிய றா வரும்.
உதாரணம் - கறுப்பு, வெறுப்பு.
]

ஆனா, "வார்த்தை" என்ற சொல்லில் 'ர்' வருது, ஆனா அழுத்திதான் சொல்ரோம்.

ஹ்ம், என்னமோ போங்க சொக்கனதான் கேக்கணும்.

நெல்லை சிவா said...

//*[
pronounciationஐ பொறு(ரு)த்து சின்ன ரா, அல்லது பெரிய றா உபயோகிக்கணும்.

உதாரணம் - அ(ற)ரம், மரம், கரம்,

அழுத்தி உபயோகிக்கும்போது, பெரிய றா வரும்.
உதாரணம் - கறுப்பு, வெறுப்பு.
]

ஆனா, "வார்த்தை" என்ற சொல்லில் 'ர்' வருது, ஆனா அழுத்திதான் சொல்றோ(ரோ)ம்.
*//


நிறைய தமிழ் எழுத்துக்கள் படிங்க. (மின்மினி கூட படிக்கலாம். :))படிக்கிறப்ப கவனிங்க. நீங்க எழுதறப்ப சந்தேகம் வந்தா, கூகிள் தேடல் தமிழ் வலையில் தேடுங்க.

இதப்பத்தியெல்லாம் ரொம்ப கவலைப்படாதீங்க..உங்க எழுத்துக்களில் பிழையாய் இருந்தாலும், எண்ணத்தில் பிழை இல்லையே..கண்டிப்பாய் வாசிக்கப் படும், உங்கள் முயற்சியைத் தொடருங்கள்.

BadNewsIndia said...

நன்றி நெல்லை சிவா! நிறைய படித்தால்தான் சொல்லின் சரியான உபயோகம் புரியும்.
மின்மினி யும் படிக்கிறேன் :)

BadNewsIndia said...

ஷைலஜா அவர்கள், எனக்கு அனுப்பிய பின்னூட்டம் இங்கே:

//
இன்னும் ர ற குழப்பம்போகல போல்ருக்கே?
ஊரைத்திருத்தணும் திறுத்தக்கூடாது என்ன?:)
அவல்பொரி தெரியும் அது என்ன கணிப்பொரி?
கணிப்பொறி தான் சரியா இருக்கணும்.னு யூகம்.


ற் பக்கத்துல மெய்யெழுத்துவராதுன்னு சொல்வாங்க....பழக்கத்திற்கு,
வரவேற்பிற்கு இப்படி..


எதுக்கும் இரவா மாதிரி தமிழ் வல்லுநர்கள் இதை தெளிவா சொல்லுவாங்க..


வாழ்த்துக்கள் கூட தவறாம் நான் யாரையோ அப்படி வாழ்த்தி முன்னே
வாங்கிக்கட்டிக்கிட்டேன்.
கதவு..ஒருமை
கதவுகள்.. பன்மை
பூட்டு..ஒருமை
பூட்டுகள்..பன்மை
(அதுபோல) வாழ்த்து..ஒருமை
வாழ்த்துகள்..பன்மை


.
ர ற தகராறுக்கு வாசிப்பு பழக்கம் தான் உதவும்..ஆனாலும் என்ன 'இந்தியாவின் கெட்ட
செய்தி,'போகப்போக சரியாயிடும்! கலக்குங்க!
ஷைலஜா
//

BadNewsIndia said...

ஷலைஜா, றா ரா ல இவ்ளோ matter
இருக்கா. தகவலுக்கு நன்றி.

பேசாம நான் எழுதிட்டு
உங்களுக்கு spell-check பண்ண
அனுப்பிடறேன்.
டிப்ஸ் கு நன்றி.

உதவுங்கள், சேந்து ஊரை
திருத்திடுவோம். :)

(oh oh ! ற பக்கதுல
மெய்யெழுத்து
வராதுன்னீங்களே.. நன்றி ல
வருதேங்க ?? )

வல்லிசிம்ஹன் said...

சீத்தலைச் சாத்தனார் இல்லை. சரிடான் மத்தவங்க தப்புக்கு நாம ஏன் தலையிலெ கொட்டிக்கணும். இது என்ன வம்பாப் போச்சே.
சார், ற் பக்கத்திலே மெய் வராதுனு படிச்சிருக்கோம்.
ற் க்கு அந்தப் பக்கம் . அதாவது வலது பக்கம்.
ற வைத் தொறட்டி ற என்று முன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்னக் காலத்தில சொல்லுவார்கள்:-)

BadNewsIndia said...

நன்றி வல்லிசிம்ஹன்,

என்னத்த சொல்றதுங்க. படிக்க வேண்டிய வயசுல ஒழுங்க படிச்சிருந்தா இந்த பிரச்சனை எல்லாம் வந்திருக்காதோ?

என் தமிழ் ஆசிரியை நல்லாதான் சொல்லிக் கொடுத்தாங்க - "அழகான குறும்படங்கள்" பதிவுல வர மாதிரி, "by example" சொல்த்தரலியோ?

BadNewsIndia said...

சற்று முன் கிடைத்த தகவல் from சிந்தாநதி,

//
றகர ரகர வேறுபாடு

அரம் - ஒரு கருவி
அறம் - தருமம்,

அரை - மாவாக்கு, பாதி
அறை - வீட்டு அறை, அடித்தல்

ஆர - முழுமையாக
ஆற - சூடு குறைய

இரங்கு - கருணைகாட்டு
இறங்கு - கீழே வா

இரந்தான் - யாசித்தான்
இறந்தான் - செத்தான்

இரை - உணவு, கத்திப்பேசுதல்
இறை - கடவுள்,நீரை இறைத்தல்

உரை - சொல், பொருள்கூறு
உறை - தலையணை உறை, அஞ்சல் உறை

எரி - தீ
எறி - வீசு

ஏரி - நீர்நிலை
ஏறி - மேலே போய்

கரி - அடுப்புக்கரி
கறி - காய்கறி, இறைச்சி

கருப்பு - பஞ்சம்
கறுப்பு - கருநிறம்

கரை - கடற்கரை, ஆற்றங்கரை
கறை - மாசு, அழுக்கு

குரை - நாய் குரைப்பு
குறை - குறைபாடு, சுருக்குதல்

கூரிய - கூர்மையான
கூறிய - சொல்லிய(து)

பரந்த - பரவிய, விரிவான
பறந்த - பறவை பறத்தல்

பாரை - கடப்பாரை
பாறை - கல்

பெரு - பெரியது
பெறு - அடைதல்

பொருப்பு - மலை
பொறுப்பு - உத்தரவாதம்

பொரித்தல் - குஞ்சு பொரித்தல், வறுத்தல்
பொறித்தல் - கல்லில் எழுத்துப் பொறித்தல்

பொருக்கு - செதிள்
பொறுக்கு - ஒவ்வொன்றாக எடு

மாரி - மழை
மாறி - மாற்றம்

வருத்தல் - துன்புறுத்தல்
வறுவல் - கிழங்கு வறுவல்

//

✪சிந்தாநதி said...

இலக்கணம் நிறைய இருக்கிறது.

http://www.pudhucherry.com/pages/gram.html

எளிமையான புரிதலுக்காக முன்பு இணையத்திலிருந்து கிடைத்ததை நான் என் சேகரிப்பில் இருந்து தந்தேன்.

ஒற்றுப் பிழைகள்

அப்புறம் றகர ஒற்று தனியாகத்தான் வரும் ரகர ஒற்று மற்றொரு ஒற்றுடன் இணைந்தே வரும்.

அதாவது 'இதற்க்கு' என்பது
இலக்கணப்படி தவறு. 'ற்'
வருமிடத்து தொடர்ந்து
மற்றொரு ஒற்று வரக்கூடாது;
'ர்' வருமிடங்களில் மட்டுமே
தொடர்ந்து மெய்யெழுத்து
வரலாம். 'இதற்கு' என்பதே
சரியானது. ஒற்றுப்பிழை
என்பது இதுதான்.

உதாரணம்.

தற்பெருமை (தற்ப்பெருமை அல்ல),கற்பு (கற்ப்பு அல்ல)

கர்ப்பம், சர்ப்பம்,

கற்பூரம் தமிழ்ச்சொல் அல்ல, ஆனாலும் தமிழில் கற்பூரம் அல்லது கர்ப்பூரம் என்று எழுதலாம் கற்ப்பூரம் அல்லது கர்பூரம் தவறு.

 
Statcounter