Saturday, October 28, 2006

மனிதர்களா நாமெல்லாம்? தூ !!!

தூ

இன்று இணையத்தில் கண்ட ஒரு புகைப்படம் மனதை வாட்டி எடுத்தது.

ஒரு பாட்டி மனித கழிப்பை சுத்தம் செய்வதும், ஒரு வாட்ட சாட்டமான இளைஞன் இடுப்பளவு கழிவு நீரில் நின்று கொண்டு சுத்தம் செய்வதை காட்டும் புகைப்படங்கள்.

இதர்க்கு முன் பல பதிவுகளில் நான் சொன்னது போல் மனித கழிவை சுத்தம் செய்வது என்பது ஒன்றும் மட்டமான வேலை கிடையாது. ஒரு நர்ஸ் செய்வது போலத்தான் இந்த வேலையும்.

(ராஜ தந்திரம் செய்து, இந்த வேலையை ஒடுக்கப்பட்டவர்களை மட்டுமே இது நாள் வரையில் செய்ய வைத்துக் கொண்டிருப்பதாக பலர் எழுதப் படித்திருக்கிறேன்.
அது வேறு பல பதிவுகளில் விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள். இங்கே அதை சொல்ல வரல.)

மனித கழிவை சுத்தப்படுத்தும் வேலை செய்வது ஒடுக்கப்பட்டவனோ இல்லை 'உயர்' ஜாதிக்காரனோ, அதை விடுங்கள். யாராவது செஞ்சுதான ஆவணும். என்ன இயந்திரம் வந்தாலும், மனிதனின் தயவு இல்லாமல் எந்த வேலையும் நடக்காது.

ஆனால், 2006 ஆம் வருடமாகிய இன்று,
20000 கோடிகள் செலவு செய்து மனிதனை விண்வெளிக்கு அனுப்பலாமா என்று அரசு யோசிக்கிறது;
20 லட்சம் தொலைக்காட்ச்சி பெட்டிகள் இலவசமாக தரப்படுகிறது;
கோடானு கோடிகள் சும்மா பெட்டிகளில் வைத்து பூட்டிக் கிடக்கிறது அரசியல் வாதிகளிடம்;
பஸ்ரா ஏவுகணை, மிக் விமானம் வாங்கும்போது கோடிகள் பல லஞ்சமாக கைமாறுது;
நகரங்களில் அரசுக்கு ஒவ்வொருவனும் பல்லாயிரங்கள் வரி செல்லுத்துகிறான்.

ஆனால், இன்னமும் கழிப்பறைகள் ஒரு வசதியும் இல்லாமலா கட்டப்படுகிறது? flush வசதி கூட வேண்டாம், ஆனால் ஒரு septic tank கட்டி கழிவு சேர்வதர்க்கு வகை செய்ய முடியாதா என்ன?

படத்தில் உள்ளது "திருநெல்வேலி தச்ச்நல்லூர் வார்டு மூளிக்குளம் பெண்கள் கழிப்பிடம்".

எவன் அந்த மாநகராட்சிக்கு தலைவன்? எவ்வளவு budget போட்டான் இதைக் கட்ட? கழிப்பிடத்தின் அருகில் ஒரு septic தொட்டி கட்ட பணமில்லையா, மனமில்லையா? இல்லை பணம் செலவு செய்த மாதிரி கணக்கு காண்பித்து, அவன் வீட்டிர்க்கு டி.வி வாங்கிக் கொண்டானா? இல்லை இதெல்லாம் எதர்க்கு என்ற ஒரு சின்ன அறிவு கூட அவனுக்கு இல்லையா? சபிக்கிறேன் அவனை!!

A/C ல் அமர்ந்து 'routine work' செய்ய வரும் நம்மில் சிலருக்கு, காலை எழும் போதே "என்னடா வேலை இது என்று, அலுப்பாக இருக்கும்".

பாவம் அந்த வயதான பாட்டி தினம் தினம் கழிவை கூடையில் அள்ளும் இந்த வேலையை செய்கிறாளே. ஒவ்வொரு நாள் காலையில் எழுந்திருக்கும் போதும் எப்படி இருக்கும் அவளுக்கு? உணவு உண்ண முடியுமா அவளால்? சந்தோஷம்னா என்னன்னு இல்ல கேப்பாங்க.
அந்த இளைஞன் வாழ்க்கையை நினைத்துப் பாருங்கள். அவனுக்கு குழந்தைகள், மனைவி இருப்பார்களே. ஒவ்வொரு நாளும் வேதனை இல்லையா அவனுக்கு?

கொடுமை இல்லையா இதெல்லாம். இன்னும் இது மாதிரி எவ்வளவு இடங்கள் இருக்கோ?
60 வருஷம் ஆச்சு, நாம் நமது சொந்தக் காலில் நின்று.
ஒரு கும்பல் காரென்ன, பைக்கென்ன, கலர் டி.வி, fridge, A/C, flight, disco, foreign tour என்று குதூகலித்துக் கொண்டிருக்க, இன்னொரு கும்பல் கழிவில் குளித்து வாழ்க்கை வாழ்கிறார்கள்.

கேவலமாயில்லை நமக்கு இது? தூ !!!

நல்ல நிலையில் இருக்கிறாயா? ஒடுக்கப்பட்டவன் ஒருவனுக்காவது உதவு.
இல்லயேல் நாற்றம் அடிக்கட்டும், நீ ஒவ்வொரு நாளும் உண்ணும் உணவு!!!



பி.கு: திருநெல்வேலியில் இருப்பவர்கள், அந்த மாநகராட்சி தலைவரை பார்த்து ஒழுங்காக ஏதாவது செய்ய சொல்லலாமே? பணம் இல்லை என்றால் தெரியப்படுத்த சொல்லுங்கள். இங்கிருந்தே பலரும் கொடுப்பார்கள்.
இந்த மாதிரி வேறெங்கு இருக்கிறதோ, அதை highlight செய்து பதிவுகள் போடுங்கள்!
சும்மா பேசிட்டிருந்தா காரியம் நடக்காது தம்பி!

32 comments:

Anonymous said...

nurse velayum idhuvum onnaa? yaaruyyaa sonnaa? innum keettaa, hospitallayum, nurseku padhilaa asingaththa alradhu keezha jaadhi aayaadhaan.
paavam aaaya.

BadNewsIndia said...

கல்கி, யாரு வேலைய செய்ராங்கண்ணு சொல்ல வரல நான்.
ஏன் இன்னும் அப்படி 'வசதி' இல்லாம அருவருப்பான வேலைய செய்யணும்னு சொல்றேன்.

நர்ஸ் கிட்ட வேலை செய்ற ஆயா, pan எல்லாம் வச்சு அறுவருப்பு இல்லாமதான் செய்வாங்கண்ணு நம்புவோம்.

Muthu said...

நியாயமான ஆதங்கம்.நல்ல பதிவு.

டிவி தர முடியற அரசாங்கத்தால் இந்த இழிவை நீக்க முடியாதா என்று கேள்வி சூப்பர்

லொடுக்கு said...

அரசியல்வாதிங்களுக்கு இதுக்கெல்லாம் எங்க சார் நேரமிருக்கு... அவனுங்களை இந்த வேளை செய்ய வைக்கனும்

சோத்துக்கட்சி said...

நல்ல பதிவுங்கய்யா.

சில மக்கள் பாலை எடுத்துட்டு, கள்ள விடுவாங்க. சிலமக்கள், கள்ள எடுத்துட்டு பால விடுவாங்க.

உங்க பதிவுல மக்கள் விடுற கருத்தும் அது மாதிரிதான்.

Anonymous said...

இரண்டு பாயிண்டுங்க.
1. சுலபு சுகிச்சாலயா என்பவர்கள் மிகவும் குறைந்த விலையில், மனிதம் மதித்து கட்டித்தருகிறார்கள். மனிதத்துவம் சேர்த்து கழிவினை அப்புறப் படுத்தும் வழியே இல்லை என்றில்லை இன்று.

2. RTI என்னும் புதிய முறையின்படி, ஒரு வட்டார அரசியல்வாதி எந்த எந்த பணிகளுக்கு அரசாங்கத்திடம் எவ்வளவு பணம் வாங்கினார், அவற்றை எவ்வாறு செலவு செய்தார் என்று கேட்கலாம். அதிலும் பெண்கள் பொது கழிப்பறைகளுக்கு எனக்கு தெரிந்து ஒவ்வொரு முறையும் கிட்டத்தட்ட எண்பது லட்சம் ஒவ்வோரு எம்.எல்.ஏ.வுக்கும் கிடைக்கிறது.

இரண்டும் சேர்த்துப் பார்த்தால், விடிவு காலம் விரைவில் வரும் என்று சொல்லலாம். சொல்லி என்ன பயன்? ஏதாவது செய்யலாம் - காந்தி போல், இந்த உலகில் நாம் காண விரும்பும் மாற்றம் நாமாக இருப்போம். என்னால் முயன்றதை நான் செய்கிறேன். நல்ல பதிவு.

ஆனால், ஒரு விஷயம் என்னை மிகவும் வருத்ததுக்குள் ஆக்குகிறது. முறையாக உபயோகிக்க பட்ட கழிப்பறை அல்ல அது. மனிதர்கள் மிருகங்கள் போல் வெட்கம் கொள்ளாமல், கடவுள்கள் போல் கண்ட இடத்திலும் இருப்பது ஃபோட்டாவில் வெளிப்படையாக தெரிகிறது. இந்த மனப் போக்கை எப்படி மாற்றுவது என்று சலிப்பாய் இருக்கிறது.

BadNewsIndia said...

மதுரா, வருகைக்கு நன்றி.
80 லட்சமா? என்ன பண்ணாங்க அத?
சுரண்டல் பேர்வழிகள் ஒழியணும்.

RTI உபயோகித்து, நாம்தான் கேள்வி கேட்க்க வேண்டும்.
கேள்வி கேட்டா ஆசிட் பல்பு எறிவானாம்.
அச்சம் தவிர்த்து துணிந்து நிற்க வேண்டிய காலம் இது.

குப்பை தொட்டி இருந்தாலும், குப்பைக்கு வெளியே குப்பயை போடும் சோம்பேறிகள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
அப்படி செய்யும் போது அருகில் இருப்பவன் அவன் கைலையே போடணும். அப்பத்தான் அறிவு வரும்.

காந்தி சொன்ன மாதிரி, மாற்றம் விரும்பு நாம், முதலில் மாற வேண்டும்.

RTI போட்டு யார் கேப்பா அந்த திருநெல்வேலி மாநகராட்சி தலைவனை?
அந்த பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் கூட்டு சேர்ந்து முயற்சி பண்ணலாமே? யாராவது இருக்கீங்களா அப்படி?

உன்னால் முடியும் தம்பி!

BadNewsIndia said...

செநாமரை சார், வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

//திருநெல்வேலி மாவட்டத்தில் வி.கே.புரம், பாபநாசம் பகுதியில் உள்ள ஆதிக்க சாதிக்கார£¢களின் வீடுகளில் நீங்கள் சொல்கிற செப்டிக் டேங்க் இல்லாத கழிப்பறைதான் இருந்தது. இந்த கழிப்பறையில் கழிவுகளை குடையில் அள்ளி தலையில் வைத்து தூக்கிச் சென்றவர்கள் ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண்கள்தான். ஆதிக்க சாதிக்காரர்கள் இல்லையே? ஏன்?
எந்த வேலையை யார் செய்தால் என்ன என்றால், கழிப்பறை சுத்தம் செய்யும் வேலையை எத்தனை ஆதிக்க சாதிக்காரர்கள் செய்கிறார்கள்? எங்கு செய்கிறார்கள்?
//

வீடுகளிலேயே இன்னும் இப்படித்தான் கழிப்பறை இருக்கிறது என்பது கேட்க்கவே கேவலமா இருக்கு.
காந்தி காலத்திலேயே அவர் சுகாதாரத்தை பற்றி பல தடவை போதித்திருக்கிறார்.
பல இடங்களில் சரியாக கட்டப்படாத கழிப்பறைகளை அவரே தன் கையாலேயே சுத்தப் படுத்தி, நல்ல கழிப்பறைகள் வர வகையும் செய்திருக்கிறார் (சத்திய சோதனை யில் விலாவரியாக பல பக்கங்கள் இதர்க்காக ஒதுக்கியிருக்கிறார் அவர்).

கழிப்பறை கழுவுவது அருவருப்பான வேலைதான் - அவன் உயர் ஜாதிக்காரனோ, ஒடுக்கப்பட்டவனோ என்பதால் அல்ல - வாழ்க்கையில் இதை விட 'better options' இருப்பவன், கண்டிப்பாக இந்த வேலயை செய்ய விருப்பப்படமாட்டான்.

வேறு வழியே இல்லாமல் இருந்தால், வயிற்றுப்பசி போக்க, 'ஆதிக்க' ஜாதிக்காரன் என்ன, நீங்களும், நானுமே கூட இந்த வேலையை செய்ய தயங்க மாட்டோம்.

அதை விட கடினமான வேலைகளும் நாட்டில் உண்டு. யாரென்றே தெரியாத நோயாளிகளை பேணுவதும் இதில் ஒன்று.

நல்ல கழிப்பறையை வசதிகள் இருந்தும் கட்டாமல் பிண்டம் போல் வாழ்கின்றவர்கள் திருந்தட்டும்.

BadNewsIndia said...

முத்து (தமிழினி) சார்,
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

BadNewsIndia said...

sadai appa,
கருத்துக்கு நன்றி.

//நிச்சயமாக மேலே உள்ள காரணம் அல்லாமல் வேறு என்னவாக இருக்க முடியும்.//

சுகாதாரம் பற்றி சரியான விழிப்புணர்வு இல்லாததாலும் இருக்கலாம்.

உடை இல்லாமல், கண்டதையும் தின்று வாழ்ந்தவர்கள் தானே நம் மூதாதயர்கள்.
காலப்போக்கில் civilized ஆளுங்கள பாத்து ஒவ்வொருத்தரா மாறினாங்க.
அந்த மாநகராட்சி தலைவன் என்னும் 'civilized' ஆகல போலருக்கு.

BadNewsIndia said...

லொடுக்கு, வருகைக்கு நன்றி!

அரசியல்வாதிகளுக்கு கண்டிப்பா நேரம் இருக்கு. மனசு தான் இல்ல.
நல்லவனும் இருக்கான்.

ஒரு வேலையிடத்தில், எல்லாரும் சரியா வேலை செய்யலண்ணா, அங்கு மேனேஜர் சரி இல்லை என்றுதான் அர்த்தம். சரியா வேலை வாங்கத் தெரியாம, வெட்டி கத பேசிட்டு பொழுத கழிச்சிருப்பான் மேனேஜர்.

அந்த மேனேஜர் மாதிரி, நாமும் இருப்பதால் தான் பிரச்சனையே.
ஒழுங்கா அரசியல் வாதிகிட்ட வேலய வாங்கணும். கேள்வி கேக்கணும். வேலை நேரத்துல தூங்க விடக்கூடாது.

இதேல்லாம் பண்ண ஆரம்பிக்கணும் நாம் ஒவ்வொருவரும்.

BadNewsIndia said...

சோத்துக்கட்சி,

//சில மக்கள் பாலை எடுத்துட்டு, கள்ள விடுவாங்க. சிலமக்கள், கள்ள எடுத்துட்டு பால விடுவாங்க.
உங்க பதிவுல மக்கள் விடுற கருத்தும் அது மாதிரிதான்.//

சரியா சொன்னீங்க. பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும்.
எதனால் பிரச்சனை இன்னும் பிரச்சனையாகவே இருக்குன்ர ஆராய்ச்சிக்கெல்லம் நேரமில்ல.

Anonymous said...

எங்கள் தெருவில் ரோட்டோரத்தை கழிப்பிடமாக உபயோகிக்கிறார்கள். இதனால் சுகாதாரம் மிகவும் கெடுகிறது. எத்தனை கட்சிகள் ஆட்சிக்கு வந்தாலும் இதை திருத்த முடியாது போல தெரிகிறது. :-(((

BadNewsIndia said...

The Man,

//எங்கள் தெருவில் ரோட்டோரத்தை கழிப்பிடமாக உபயோகிக்கிறார்கள். இதனால் சுகாதாரம் மிகவும் கெடுகிறது. எத்தனை கட்சிகள் ஆட்சிக்கு வந்தாலும் இதை திருத்த முடியாது போல தெரிகிறது. :-((( //

பல தெருக்களில் இந்த நிலை தான்.
படிக்காதவர்கள் செய்யும் பணி இது. அவர்களைச் சொல்லி குற்றமில்லை.

என் வீட்டினருகே இதே நிலை இருந்தது. வீட்டில் இருக்கும் குழந்தைகளை இது போல் தெருவில் 'இருக்க' சொல்லி விடுவார்கள்.
நானும் எனது நண்பனும் அந்த குழந்தைகளின் பெற்றோரிடம் பேசி, இப்படி செய்வது தவறு என்பதை புரிய வைத்தோம்.
குழந்தைக்கு இந்த வயதிலேயே சுகாதாரம் பற்றிய விழிப்பை கொடுங்கள், இல்லையேல் வயதானால் கண்ட நோயும் நொடியும் சேரும் என்று புரிய வைத்தோம்.

அந்த தெருவில் இப்பெல்லாம் யாரும் தெருவில் செய்வதில்லை.

சில தெருக்களில், அதர்கான வசதிகள் இல்லாமல் இருக்கும் - அவர்களுக்கு, நீங்களு உங்கள் நண்பர்கள் படையும் சேர்ந்து மாநகராட்ச்கிக்கு கோரிக்கை அனுப்பி நல்ல பொது கழிப்பறை கட்ட வகை செய்யுங்கள்.

களத்தில் இறங்கும் வரைதான் இது பெரிய வேலையாகத் தெரியும். செயலை முடித்தவுடன், ஒரு நிம்மதியும் ஆனந்தமும் கிட்டும்.

உங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்!

BadNewsIndia said...

The Man,
உங்க பதிலுக்கு காத்திருக்கும்,
-BNI

Anonymous said...

சார் அவங்க கள்வெடுக்கல்ல, கொள்ள அடிக்கல்ல
அவங்க வயுத்துப் பிளைப்புக்கு ஏதோ செய்யும் தொழிலே
தெய்வம்னு செய்துக்கிட்டு வாழ்ந்துகிட்டு இருக்காங்க.
அவங்க பொளைப்புல ஏன் சார் மண்ணப் போடுறீங்க.
அவங்களுக்கு வேற புளைப்பக் காட்டீட்டு இதில
கைய வையுங்க சாரே.

BadNewsIndia said...

அனானி,

//சார் அவங்க கள்வெடுக்கல்ல, கொள்ள அடிக்கல்ல
அவங்க வயுத்துப் பிளைப்புக்கு ஏதோ செய்யும் தொழிலே
தெய்வம்னு செய்துக்கிட்டு வாழ்ந்துகிட்டு இருக்காங்க.
அவங்க பொளைப்புல ஏன் சார் மண்ணப் போடுறீங்க.
அவங்களுக்கு வேற புளைப்பக் காட்டீட்டு இதில
கைய வையுங்க சாரே.
//


அவங்க பொழப்புல கை வைக்கல சார். அவங்க வேலையில் இன்னும் கொஞ்சம் சுகாதாரம் ஏற்பட வழி செய்யணும்னு சொல்றேன்.
செய்யும் தொழில்தான் தெய்வம்!

சபாபதி சரவணன் said...

வேளைப் பளு காரணமாக ரொம்பவும் தாமதமாக இந்தப் பதிவினை படிக்குமாறு நேர்ந்தது. மிக நல்ல பதிவு. பாராட்டு

//ஆனால், 2006 ஆம் வருடமாகிய இன்று,
20000 கோடிகள் செலவு செய்து மனிதனை விண்வெளிக்கு அனுப்பலாமா என்று அரசு யோசிக்கிறது;
20 லட்சம் தொலைக்காட்ச்சி பெட்டிகள் இலவசமாக தரப்படுகிறது;
கோடானு கோடிகள் சும்மா பெட்டிகளில் வைத்து பூட்டிக் கிடக்கிறது அரசியல் வாதிகளிடம்;
பஸ்ரா ஏவுகணை, மிக் விமானம் வாங்கும்போது கோடிகள் பல லஞ்சமாக கைமாறுது;
நகரங்களில் அரசுக்கு ஒவ்வொருவனும் பல்லாயிரங்கள் வரி செல்லுத்துகிறான்.//

//A/C ல் அமர்ந்து 'routine work' செய்ய வரும் நம்மில் சிலருக்கு, காலை எழும் போதே "என்னடா வேலை இது என்று, அலுப்பாக இருக்கும்".

பாவம் அந்த வயதான பாட்டி தினம் தினம் கழிவை கூடையில் அள்ளும் இந்த வேலையை செய்கிறாளே. ஒவ்வொரு நாள் காலையில் எழுந்திருக்கும் போதும் எப்படி இருக்கும் அவளுக்கு? உணவு உண்ண முடியுமா அவளால்? சந்தோஷம்னா என்னன்னு இல்ல கேப்பாங்க.
அந்த இளைஞன் வாழ்க்கையை நினைத்துப் பாருங்கள். அவனுக்கு குழந்தைகள், மனைவி இருப்பார்களே. ஒவ்வொரு நாளும் வேதனை இல்லையா அவனுக்கு? //

மிகுந்த அக்கறையுடன் சாட்டையை சுழற்றியிருக்கிறீர்கள்.

நீங்கள் சொன்ன அந்த நகராட்சித் தலைவர் கழிப்பிடம் கட்டி கொடுத்திருக்கிறார். ஆனால் பராமரிப்பில் கோட்டை விட்டிருக்கிறார்கள். இங்கு மக்களின் மெத்தன மனபோக்கையும் மனதில் கொள்ள வேண்டும் BNI. நான் வசிக்கும் பகுதி இரண்டு பெரும் சேரிகளை உள்ளடக்கியது. மிகவும் மெனக்கட்டு, கவுன்சிலர், சட்டமன்ற உறுப்பினர் இவர்களை நிர்பந்தித்து, சில பொதுகழிப்பிடங்களை கட்டித் தருமாறு செய்தோம். ஏற்கனவே இருந்த பொதுகழிப்பிடங்களை சீர் செய்தோம். சில நாட்களுக்குள் உபயோகிக்கும் தகுதி இழந்து நாறிப் போயின. எனவே அப்பகுதியிலேயே இருக்கும் வயதானவர்களை நியமித்து, 50 காசு கட்டண கழிப்பிடமாக மாற்றினோம். அந்த வயதானவர்கள் அந்த காசைக் கொண்டு பராமரித்துக் கொள்ள வேண்டும். மீதியை அவர்கள் எடுத்துக்கொள்ளலாம்.

சில நாட்களுக்கு பின்னர் பராமரிக்கும் கிழவியிடம் நிலைமை எப்படி இருக்கிறது என விசாரித்தேன். "நீயே உள்ளே போய்ப் பாரு நைனா" என்று சொன்னாள். உள்ளே சென்ற எனக்கு உடம்பு கூசியது. உபயோகித்த அனைவரும் தங்களை மட்டும் சுத்தம் செய்து கொண்டு சென்றுவிட்டனர் போலும். அப்படி அப்படியே இருந்தது. தண்ணீர் வசதிக்கு குறைவில்லை. ஒரு வாளி தண்ணீர் ஊற்றிவிட்டு போய் இருக்கலாம். ஆனால் அவர்கள் பாரம் இறங்கியவுடன் எனக்கென்னவென்று சென்றுவிட்டனர். உபயோகித்துவிட்டு வெளியே சென்ற ஒருவரை நிறுத்தி தண்ணீர் ஊற்றிப் போலாமே என்றேன். அதான் 50 காசு வாங்குறாங்களே, அவங்களே ஊற்றுவார்கள் என்று சொன்னார். நல்ல வேளை, மேற்கொண்டு 50 காசு தருகிறேன் என் புட்டத்தை கழுவி விட சொல்லுங்கள் என்று சொல்லாமல் போனார்.

இத்தனை கழிப்பிடம் இருந்தும் தங்கள் குழந்தைகளை சாலை ஓரங்களிலேயே அமர்த்தும் தாய்மார்களை பல முறை கண்டிப்பேன். "இன்னா சார் செய்றது கொய்ந்திங்க கக்கூசில உக்காரதுக்கு பயப்படுதுங்க" என்கின்றனர். பேருந்து, லாரி, கார், ஆட்டோ என்று பெரும் வாகனப் போக்குவரத்திற்கு நடுவில் உட்கார பயப்படவில்லையாம், ஆனால் கழிப்பிடம் கண்டு பயப்படுகிறார்களாம். இதை என்னென்பது. என் தலை தெரிந்தாலே "அய்யோ மாமா வரார், ஒடுடா" என குழந்தைகள் டவுசர்களை தூக்கிக்கொண்டு தலைதெறிக்க ஓடுவார்கள். இதைக்கண்ட நண்பர்கள் "பேண்டவனை தடுத்த சிகாமனி" என்று பட்டம் சூட்டியது வேறு கதை.

BadNewsIndia said...

சபாபதி சரவணன், வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி! வேலை பளு குறைந்ததா?

//நீங்கள் சொன்ன அந்த நகராட்சித் தலைவர் கழிப்பிடம் கட்டி கொடுத்திருக்கிறார். ஆனால் பராமரிப்பில் கோட்டை விட்டிருக்கிறார்கள். இங்கு மக்களின் மெத்தன மனபோக்கையும் மனதில் கொள்ள வேண்டும் //

மக்களின் மெத்தனத்தைத் தான் உங்களைப் போன்றோர் எழுத்தாலும் பேச்சாலும் மாற்றிக் கொண்டிருக்கிறீர்கள். இதை தொடர்ந்து செய்ய வேண்டும் சார்.
நகராட்சி தலைவன் கட்டிக்கொடுத்ததும் சரி இல்லையே. வெறும் தரையை மட்டுமா கட்டுவது கழிப்பிடத்திர்க்கு? ஒரு தொட்டி கட்டி சுலபமா கழிவு வெளியேறுவது போல் கட்ட வேண்டாமா?

உங்கள் ஊரில் நீங்கள் ஏற்பாடு செய்தது போல் பல இடங்களில் நம்மவர்கள் முன் வந்து கழிப்பிடம் ஒழுங்காக கட்டவும், அதை பராமரிக்கவும் வழி செய்யணும்.
ஒரு முன்மாதிரியா நீங்களும் மற்றவர்களும் இதை செய்தீர்கள் என்பது ரொம்ப சந்தோஷமான விஷயம்.

//இத்தனை கழிப்பிடம் இருந்தும் தங்கள் குழந்தைகளை சாலை ஓரங்களிலேயே அமர்த்தும் தாய்மார்களை பல முறை கண்டிப்பேன். "இன்னா சார் செய்றது கொய்ந்திங்க கக்கூசில உக்காரதுக்கு பயப்படுதுங்க" என்கின்றனர்//

இதை நானும் பல இடத்தில் பார்த்திருக்கிறேன். infact, அவங்க வீட்லயே வசதி இருந்தும், தெருவில் அமர வைப்பார்கள். சில நேரம் இது பொறுப்பில்லாமல் செய்யப்படுவது. ஆனால் பல சமயம் 'விவரக்கேடினால்' செய்யப்படுவது. சுகாதாரம் பற்றிய சிந்தனை விதைக்கப் படாததால் இப்படி.

ஒவ்வொருவரும் நம்மை சுற்றி உள்ள இடங்களில், உங்களை போல், சிரமம் பாராது தொடர்ந்து சுகாதாரம் பரப்பினால், ஒளி மயமாகும் எதிர்காலம்.

Anony said...

Hello Bad,

நீங்களும் பூனூல் போட்ட பாப்பானா?

Balloon MaMa said...

அக்கறையான பதிவு!

எங்கே தவறு செய்கிறோம் தெரியுமா?
குழந்தை வளர்ப்பில்?

ஏன் தெரியுமா?
பெற்றோருக்கே தெரிவதில்லை.
ஏன் தெரியுமா?
அவர்கள் தேர்ந்தெடுத்த அரசாங்கம் எதில் பணம் வருமோ அதன் பின்னால் செல்கிறது.

ஏன் தெரியுமா?
மக்கள் தான் தேர்ந்தெடுத்த அரசாங்கத்தை கண்காணிப்பது இல்லை.

ஏன் தெரியுமா?
மக்களுக்கே எது தேவை என்பது தெரியவில்லை.

ஏன் தெரியுமா?
...

இப்படி பல சொல்லிக் கொண்டே போகலாம்.

குழந்தைகளுக்கு அடிப்படைச் சுகாதாரத்தை கற்பிக்க வேண்டியது ஆசிரியர்/பெற்றோரின் கடமை.

கக்கூஸே இல்லாத பள்ளிகள் எத்தனை உள்ளது ? வீடுகள் எவ்வளவு உள்ளது?
இந்த சூழ்நிலையில் இருந்து வரும் குழந்தை பெரியவனானதும் தான் செய்வதை ஒரு தவறாகவே எடுத்துக் கொள்வது இல்லை.

ஒரு **நல்ல** அரசாங்கம் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.

சபாபதி சரவணன் அவர்களின் முயற்சியைப் பாராட்டுகிறேன்.

நல்ல இயந்திரங்களை உற்பத்தி செய்வதுபோல் இன்று முதல் குழந்தைகளை வயது 1 ல் ஆரம்பித்து நல்ல வழியில் உருவாக்க்கினால் இன்னும் 20 ஆண்டுகளில் (அவர்கள் 20 வயது ஆகும் போது ) இந்தியா திருந்திவிடும்.இது பெற்றோர் அரசாங்கம் கூட்டு முயற்சியாக இருக்க வேண்டும்.

காட்டுப்புத்தூர் குத்தம்பாக்கம் போல் எல்லா ஊர்களும் மாற வேண்டும்.

Balloon MaMa said...

ச்சீ..தூ.ன்னு துப்ப நிறைய மேட்டர் இருக்கு ..இதையும் பாருங்க :-((( கொடுமை

http://www.dinamalar.com/2006nov10/specialnews1.asp?newsid=3

BadNewsIndia said...

கல்வெட்டு சார், வருகைக்கு ரொம்ப நன்றி!

//எங்கே தவறு செய்கிறோம் தெரியுமா?
குழந்தை வளர்ப்பில்?
//

ரொம்ப ரொம்ப ரொம்ப சரியா சொன்னீங்க!
இன்றைய குழந்தைகளை சுகாதாரம் சொல்லிக் கொடுத்தும், நல்லதை மட்டுமே சொல்லிக் கொடுத்தும் வளர்ப்பது மட்டுமே முன்னேற்றம் அடையக் கூடிய ஒரே வழி.

ஏன் ஏன் ஏன் என்று கேள்வி கேட்டால் ஒன்றுமே நடக்காது. கேள்விக்கு பதில் தர வேண்டியவர்கள் அக்கறை இல்லா ஜடங்கள். அதனால், நாம் தான், சபாபதி போல், இளங்கோவை போல், GoodNewsIndia ஸ்ரீரீதரனை போல், களத்தில் இறங்கி ஆக்கம் செய்ய வேண்டும்.

வளரும் குழந்தைகளின்/இளைஞர்களின் எண்ணத்தை கறை படியாமல் பார்த்துக் கொள்வதும் நம் கடமை.

நன்றி! சீரிய கருத்துக்கள்!

BadNewsIndia said...

கல்வெட்டு,

//ச்சீ..தூ.ன்னு துப்ப நிறைய மேட்டர் இருக்கு//

மிகவும் வேதனையான செய்தி. எப்படி மனது வந்ததோ இந்த மாதிரியெல்லாம் செய்ய.
அது சரி, தினமலர் ஆளுங்க என்ன பண்ணாங்கன்னு போடலியே? போட்டோ எடுத்துட்டு வேல முடிந்ததுன்னு கிளம்பிட்டாங்களா?

மங்கை said...

நல்ல பதிவு...

மக்களுக்கும் அதிகாரிகளுக்கும் விழிப்புணர்ச்சியும் சமுதாய லொறுப்பும் வேண்டும்....

//சும்மா பேசிட்டிருந்தா காரியம் நடக்காது தம்பி//

நூறு சதவீதம் உண்மை

நல்ல பதிவு..

நாடோடி said...

நீங்க மதுரை தெப்பகுளத்த பாத்திருக்கீங்களா?.. இதைவிட படுமோசமா இருக்கும்.

BadNewsIndia said...

வாங்க அனானி,

//Hello Bad,
நீங்களும் பூனூல் போட்ட பாப்பானா?//

ஏங்க இப்படி கேக்கறீங்க. பாப்பானா என்ன? எனக்கு தெரிஞ்சு இது ஒரு இழி சொல்லாமே ( சூத்ரன், பரயன் என்பது போல்)? பிராமணனானு கேளுங்க.

நான் பிராமணன் இல்லை.

BadNewsIndia said...

மங்கை, வருகைக்கு நன்றி!

//மக்களுக்கும் அதிகாரிகளுக்கும் விழிப்புணர்ச்சியும் சமுதாய லொறுப்பும் வேண்டும்.... //

அதிகாரிகளுக்கு தானா வராது. 60 வருஷமா வரலியே.
மக்கள் தான் கண் தொறக்கணும். மெத்தனத்தை களைந்து, வேண்டியதை கேட்டுப் பெற வேண்டும்.

BadNewsIndia said...

நாடோடி, வருக வருக!

//நீங்க மதுரை தெப்பகுளத்த பாத்திருக்கீங்களா?.. இதைவிட படுமோசமா இருக்கும். //

நீங்க பிரமிட் பாத்திருக்கீங்களா, ஆல்ப்ஸ் பாத்திருக்கீங்களா, க்ரேட் வால் பாத்திருக்கீங்களா என்பது போல் இருக்கு உங்க கேள்வி ;)

நம் தலை எழுத்த பாருங்க தெப்ப குளம் ரொம்ப பிரசித்த பெற்ற இடம் என்று தான் இது நாள் வரை நினைத்திருந்தேன். எதர்க்கு பிரசித்தி பெற்றது என்பது, நீங்க சொல்லி தான் தெரியுது.
நீங்க அந்த ஊரா, தயவு செய்து உங்க நண்பர்கள் சிலர கூட்டிக்கிட்டு அந்த இடத்தை சுத்தம் பண்ண ஆள் வைத்து, சபாபதி சார் மாதிரி தொடர்ந்து நல்லா இருக்க ஏதாவது ஏற்பாடு பண்ணுங்களேன் ப்ளீஸ்.

மனதின் ஓசை said...

அரசாங்கம் இதனை சரி செய்ய இயலாத என்ற கேள்வி சரியானதுதான்.

//நல்ல நிலையில் இருக்கிறாயா? ஒடுக்கப்பட்டவன் ஒருவனுக்காவது உதவு.
இல்லயேல் நாற்றம் அடிக்கட்டும், நீ ஒவ்வொரு நாளும் உண்ணும் உணவு!!//

சரியே.. ஒடுக்கப்பட்டவன் என்பதை விட உதவி தேவைபடுபவன் யாராக இருந்தாலும் உதவக்கூடிய சக்தி நமக்கு இருந்தால் உதவ வேண்டும்.


(இட ஒதுக்கீடு, ஜாதியையெல்லாம் விட்டு விட்டு பார்த்தால்) நல்ல பதிவு..

BadNewsIndia said...

மனதின் ஓசை,

வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

//சரியே.. ஒடுக்கப்பட்டவன் என்பதை விட உதவி தேவைப்படுபவன் யாராக இருந்தாலும் உதவக்கூடிய சக்தி நமக்கு இருந்தால் உதவ வேண்டும்.//

ரொம்ப சரி. அது ஒண்ணுதான் இந்த பாட்டி மாதிரி ஆளையெல்லாம் காப்பாத்தும்.

//(இட ஒதுக்கீடு, ஜாதியையெல்லாம் விட்டு விட்டு பார்த்தால்) நல்ல பதிவு..//

நன்றி. ஜாதிப் பிரச்சனைக்கெல்லாம் அப்பாற்பட்டது, 2006 ஆம் வருடத்திலும் இப்படி சுகாதாரம் துளி கூட இல்லாத சூழல் நிலவுவது.
இதுக்கு அந்த நகராட்சி அதிகாரியின் மெத்தனம் மட்டுமே காரணம். இதைப் பார்த்தும் பார்க்காமல் போகும் பொது ஜனமும் சேர்ந்து செய்யும் நாசம்.

Anonymous said...

விவரமுள்ள பதிவு. இதுக்கெல்லாம் காரணம் அந்த வீணா போன நகராட்சி ஆளுக தான்.
ஆனா ஒழுங்க கட்டின் இடமும் சரியா ப்ராமரிக்காம அழுகி கெடக்கு.
தலித் தலித் னு கத்தினா போதாது. அந்த தலித்துக்கு சுகாதாரமும் சொல்லித்தரோணும். அசிங்கம் புடிச்ச பசங்க.