Friday, October 06, 2006

ஊரைத் திருத்தலாம் வாங்க நண்பரே. ஒரு simple ஐடியா!

பதிவுகளில் நாம் நமது பல சிந்தனைகளை பதிவு செய்கிறோம். ஆனால் இவை படித்த மேல் மட்ட மக்களையே சேர்கிறது. உங்கள் தெருவில் எவ்வளவு பேர் வீட்டில் computer, internet-connection இருக்கும்?

சமூக சிந்தனை உள்ள பல பதிவுகள் இதனால் பலர் பார்வை படாமலே இருந்துவிடும். படித்து ந்ல்ல நிலையில் உள்ளவர்கள் மட்டும் படித்தால், அந்த பதிவினால் ஒரு பயனும் நிகழாமல் போய்விடும்.

குப்பனும், சுப்பனும் மற்றும் சாதாரண நிலையில் இருப்பவர்களுக்கும் நமது நல்ல ச்ந்தனைகள் சென்றடையச் செய்து அவர்களையும் சிந்திக்க வைக்க வேண்டும்.
சித்தியிலும், அண்ணியிலும், மெட்டி ஓலியிலும், சினிமாவிலும் மயங்கிக் கிடக்கும் சகோதர சகோதரிகளை எழுப்ப வேண்டும். தங்களை சுற்றி நடக்கும் அழிவினை அவர்களுக்கு விளங்கச் செய்ய வேண்டும்.

உள்ளாட்சி தேர்தல்கள் தொடங்க இருக்கும் இந்த நேரத்தில் சில ப்ரச்சனைகளை எல்லாவரும் உணரச் செய்தால், தாமதம் இன்றி பதில்கள் கிடைக்கும் வாய்ப்பும் அதிகம்.
இந்த அடிப்படையில் தான் இந்த யோசனை.

கீழே இரு கோட்டிற்க்கு நடுவில் உள்ள வரிகளை cut செய்து, print செய்து, நீங்கள் வசிக்கும் தெருவில் உள்ள அனைவருக்கும் வினியோகம் செய்தால், நல்ல பலன் இருக்கும் என்பது என் கணிப்பு. anonymous ஆக செய்ய விரும்புவோர், ஒரு தபால் கவரில் போட்டு எல்லா இல்லங்களுக்கும் அனுப்பலாம்.
வெறுமனே நமக்குள்ளேயெ புலம்பிக் கொண்டிருந்தால் ஒன்றும் நடக்கப் போவதில்லை. இந்த் மாதிரி சில முயர்ச்சிகள் செய்து பார்க்கலாமே.
நண்பர்களே, சிரமம் பார்க்காது, இதை முயன்று பாருங்களேன்.
என் தெருவில் நான் செய்து விட்டேன் - சில பலன்களும் காண்கிறேன். நீங்கள் வெளியூரில் இருப்பவரானால், உள்ளூரில் இருக்கும் உங்கள் நண்பரை இப்பணி செய்ய ஏற்பாடு செய்யுங்கள்.

இந்தப் பதிவை உங்கள் பிளாக்-கில் link செய்ய தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி! நன்றி! நன்றி!

(feel free to change the following text to make it appropriate for your place.)
==============================================
அன்புடயீர்,
வணக்கம். நான் ஒரு ஒய்வு பெற்ற அரசு அதிகாரி. அடயாரை சேர்நதவன். உஙகள் தெருவிற்க்கு 3 மாதங்களூக்கு முன்னால் உறவினர் ஒருவரை சநதிக்க வநதிருந்தேன். இதற்க்கு முன்னால் 1999ல் ஒரு முறை வந்திருக்கிறேன்.
உங்கள் தெரு, 1999ல் இருந்ததை விட இப்பொழுது மிகவும் மோசமாக காட்சி அளிக்கிறது.
99ல் இருந்ததை விட நமது நாட்டின் தரம் இன்று பல மடங்கு பெருகி இருப்பினும், உங்கள் நகரின் நிலமை பல மடங்கு கீழ் போயிருப்பதை உணர்கிறேன்.
காட்டில் இருப்பதை பொல மேடு, பள்ளம், கற்கள் நிறைந்த சாலை. திறந்த கழிவு நீர் பாதை. முற்றிலும் பொருப்பற்ற நிலயில் வாழும் மக்கள். இவ்வளவு அழுக்கு வாழ்க்கை வாழ்கிறோம் என்பது கூட தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்.
உங்கள் பிள்ளைகள் விளயாட ஒரு சிரு பூங்கா கூட இல்லை. இருக்கும் ஒரிரு இடமும் புதர்கள் அடர்ந்து பராமரிக்கபடாமல் இருக்கிறது.
இந்த பேரழிவிர்க்கு காரணம் அரசு அதிகாரிகள் மட்டுமல்ல் - ஒரு பொருப்பற்ற நிலையில் வாழும் நீஙகளும் இதற்கு முழு காரணம்.
சாலையில் எவ்வளவு குண்டு குழிகள் இருந்தாலும், புலம்பிக்கொண்டு வளைந்து நெளீந்து தினமும் சென்று விடுகிறீர்கள். சரியாக கட்டப்படாத கழிவு நீர் கால்வாயில் எவ்வளவு துர்நாற்றம் வந்தாலும், மூக்கை மூடி கொண்டு அடுத்த வேலைகளை பார்க்கிறீர்கள். உங்கள் இல்லத்தை பெருக்கி குப்பையை தெருவில் கொட்டுகிறீர்கள்.
இப்படி ஒரு பொருப்பற்ற வாழ்க்கை வாழ்ந்தால், இன்னும் 5 வருடங்களில் உங்கள் நகரம் மனித வாழ்க்கைக்கு ஒவ்வாத ஒரு இடமாக வெகு விறைவில் மாறிவிடும். ஆனால், அது தெரியாமல் எருமை மாட்டுக் கூட்டம் போல் நீங்களும் ஒரு மந்த வாழ்க்கை வாழ்வீர்கள்.
சாக்கடைகளை திறந்த வெளியில் விட்டால், மழையில் கெட்ட நீர் ஊரி, உங்கள் வீட்டுக்கிணற்று நீர் கெட்டுப்ப்போகும். மூன்று கிணறுகள் இது போல் கெட்டு போய் இருக்கிறது. இன்னும் மற்றவைகளுக்கும் இதெ நிலை வர வெகு நாட்கள் இல்லை.
எல்லாவற்றிர்க்கும் காரணம், சுலபமான வழியை கைய்யாண்டு, எதிர் காலத்தை பற்றி கவலை இல்லாத மெத்தன வாழ்கை வாழ்வதே ஆகும். நாளை உம் பிள்ளைகளும் பேரன் பேத்திகளும் பெரும் துயரத்துடன் வாடும் நிலயை உருவாக்கி இருக்கிறீர்கள்.
இவ்வளவு படித்தவர்கள் வாழும் தெருவிலே ஒரு மரம் கூட சாலையில் இல்லை. சாலை ஒர மரங்களிருந்தால், அதனால் கிடைக்கும் பயன் தெரிந்தும் கூட இதை செய்யாமல் இவ்வளுவு வருட காலம் எப்படி இருந்தீர்கள்?
அப்படி என்ன உஙகளுக்கு அவ்வளவு ஒரு அலட்சியம் உங்கள் பிள்ளைகளின் எதிர் காலத்தில் அக்கறை இல்லையா?
தெருவின் அன்றாட பிரச்சனைகளை அலசி பராமரிக்க ஒரு குழு அமைத்து சாலை துப்புறவு, மரம் நடுதல், போன்ற சின்ன சின்ன தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டாமா?
'கலாம்' களும், 'நாராயண மூர்த்தி' களும், 'மன்மொகன் சிங்' களும் ஒரு பக்கம் நாட்டை உயர்த்த பாடு படுகிறார்கள். உங்களால் ஆனதை நீங்களும் செய்து, வாழும் இடத்தை நல்ல இடமாக வைத்துக் கொள்ளுதல் உங்கள் கடமை இல்லையா?
ஒரு குழு அமைத்து மாதத்திர்க்கு ஒரு முறை ஒன்று சேருங்கள் - சாலையை சுத்தம் செய்யுங்கள் - கழிவு நீரை தேங்க விடாதீர்கள் - மரங்களை வளருங்கள் - பூங்காவை பராமரித்து உம் பிள்ளைகள் விளயாட வழி செய்யுங்கள்.
உங்களில் பலர் என்னை போலே ஒய்வு பெற்ற அதிகாரிகள் தாம். இன்னும் 10 அல்லது 20 வருடங்கள் தான் நாம் இந்த மண்ணில் இருக்கப் போகிறொம். ஒரிரவு உறங்கி மருநாள் உணராமல் உயிர் பிரியும். அதற்க்கு முன்னால் உங்களுக்கு நல்ல வாழ்க்கை வழங்கிய இந்த சமுதாயத்திற்க்கு ஏதாவது நல்லது செய்ய முயற்சி செய்யுங்கள்.
குடும்ப தலைவிகள் தொலைக்காட்சியில் 12 மனி நேரம் செலவிடும் நேரத்தில் ஒரு சில மணி நேரத்தை, தெரு மேம்பாட்டிற்க்கு செலவிட வேண்டும்.
சில யோசனைகள்:
1) தெருவின் தேவைகளை பராமரிக்க ஒரு குழுவை உருவாக்குஙள்.
2) ஆண்டு சந்தாவாக 100 - 200 வரை எல்லாரிடமும் வசூல் செய்யுங்கள்.
3) பெண்களிடம் பண வசூல் மற்றும் பூங்கா சீரமைப்பை ஒப்படையுங்கள்.
4) ஆண்கள் - சாலை பராமரிப்பு, சாலை ஒரத்தில் மரம் நடுதல், அதன் பராமரிப்பு, கழிவு நீர் பராமரிப்பு, தெரு விளக்கு பராமரிப்பை கவனியுங்கள்.
5) 6 மாதத்திற்க்கு ஒருமுறை, அனைவரும் பூங்காவில் திரண்டு நன்கு வசிக்கும் சூழலை உருவாக்க நேரம் ஒதுக்குங்கள்.
6) அரசு செய்து தர வேண்டிய வசதிகளை உடனுக்குடன் போராடி கேட்டு பெருங்கள்.
7) மெத்தனத்தை குறையுங்கள்!!
8) உங்களது பக்கத்து தெருக்களிலும், இதேபோல் செய்ய ஆவன செய்யுங்கள்.

எல்லோரையும் குறை சொல்ல முடியாது. 'Leadership skill' இருப்பவர்கள் மற்றவர்களை ஒன்று திரட்டி வழி நடத்திச் செல்ல வேண்டும். நீங்கள் இது நாள் வரையில் பெற்ற அனுபவத்தை உஙகள் தெருவின் முன்னேற்றத்துக்கு பயன் பெறுமாறு ஆட்க்களை வழி நடத்தி செல்ல வேண்டும்.
உங்களால் இயன்றதை உடனே செய்யுங்கள்.
==============================================

15 comments:

said...

நல்ல அறிவுரைகள்!

ஆனால் // ..'நாராயண மூர்த்தி' களும், 'மன்மொகன் சிங்' களும் ஒரு பக்கம் நாட்டை உயர்த்த பாடு படுகிறார்கள். // இப்படி சொல்லி காமடி பண்ணாதீர்கள். :-))

said...

இப்படி சொல்லி காமடி பண்ணாதீர்கள் - what do you mean by this? Do you think Narayana Murthi and Manmohan are not doing much for the country?
I totally believe that they are pillars behind our growth in recent years!!
without Manmohans initial reforms we would have gone to stone-age before 15 years.

said...

கருணாநிதி,ஜெ போல் மன்மோகனும் ஒரு சாதாரண அரசியல்வாதியே. We the people அசுரன் போன்றோரின் பதிவுகளையும் படிக்கவும். உங்களின் நல்ல நோக்கத்தை திசை திருப்ப விரும்பவில்லை.விரிவாக இங்கே...

http://kalvetu.blogspot.com/2006/10/blog-post_09.html

Lakshmi said...

I agree with badnewsindia. Though Singh and Narayan are not perfect, they are far far better than our regular politicians.
We need more of Kalams and Narayans.

said...

திறுத்தலாம் = திருத்தலாம்:-)

said...

துளசி கோபால்,
தவரு திருத்தியதர்க்கு நன்றி.

ர் ற் - பயன்படுத்த இலக்கண விதிகள் என்ன? சொன்னால் உதவியாக இருக்கும்.

said...

சிறுதுளி என்ற water conservation movement தொடங்கிய வனிதா மேனன் பற்றிய செய்தி.

http://www.hindu.com/2006/10/23/stories/2006102305230500.htm

Babusundaram said...

sameeba kaalamaa thamizmanam, thamiz naathamaa aayittu irukku.
naan paaththa oru sila nalla vishayangalla unga intha padhivum adangum.
neenga sonna maadhiri idha print panni enga theruvula 25 veettukku kuduthen.

adhukku aduththa naallaye evanum kuppaya velila kottaradha niruththittaan. rendu peru maramum nattu vacchirukkanga.
paduthirundha association thirumba aarambichuttom.

thodarndhu ezudhunga sir. rendu maram valandhaa andha sadhanai ungalathaan serum.

hats off.

said...

babusundaram,

உங்க பின்னூட்டம் ரொம்ப ஊக்கம் கொடுத்தது.
என்னடா சும்மா எழுதி என்ன ஆவப்போது என்று இன்று கூட நினைத்தேன்.

//thodarndhu ezudhunga sir. rendu maram valandhaa andha sadhanai ungalathaan serum.//

இனி கண்டிப்பா எழுதிக் கொண்டே இருப்பேன்.
ஊக்கத்திர்க்கு நன்றி!

said...

நினைப்பதுவே அல்லாமல் வே*?ரொ?*ன்றறியேன்
*ற*

றகர ரகர வேறுபாடு

அரம் - ஒரு கருவி
அறம் - தருமம்,

அரை - மாவாக்கு, பாதி
அறை - வீட்டு அறை, அடித்தல்

ஆர - முழுமையாக
ஆற - சூடு குறைய

இரங்கு - கருணைகாட்டு
இறங்கு - கீழே வா

இரந்தான் - யாசித்தான்
இறந்தான் - செத்தான்

இரை - உணவு, கத்திப்பேசுதல்
இறை - கடவுள்,நீரை இறைத்தல்

உரை - சொல், பொருள்கூறு
உறை - தலையணை உறை, அஞ்சல் உறை

எரி - தீ
எறி - வீசு

ஏரி - நீர்நிலை
ஏறி - மேலே போய்

கரி - அடுப்புக்கரி
கறி - காய்கறி, இறைச்சி

கருப்பு - பஞ்சம்
கறுப்பு - கருநிறம்

கரை - கடற்கரை, ஆற்றங்கரை
கறை - மாசு, அழுக்கு

குரை - நாய் குரைப்பு
குறை - குறைபாடு, சுருக்குதல்

கூரிய - கூர்மையான
கூறிய - சொல்லிய(து)

பரந்த - பரவிய, விரிவான
பறந்த - பறவை பறத்தல்

பாரை - கடப்பாரை
பாறை - கல்

பெரு - பெரியது
பெறு - அடைதல்

பொருப்பு - மலை
பொறுப்பு - உத்தரவாதம்

பொரித்தல் - குஞ்சு பொரித்தல், வறுத்தல்
பொறித்தல் - கல்லில் எழுத்துப் பொறித்தல்

பொருக்கு - செதிள்
பொறுக்கு - ஒவ்வொன்றாக எடு

மாரி - மழை
மாறி - மாற்றம்

வருத்தல் - துன்புறுத்தல்
வறுவல் - கிழங்கு வறுவல்

said...

சிந்தாநதி,
வருகைக்கு நன்றி!

றா ரா விளக்கத்துக்கும் நன்றி!
(mistake corrected)

எல்லாம் சொன்னீங்க சரி, ஆனா இதுக்கு ஏதாவது இலக்கண ரூள் இருக்கான்னு சொல்லலியே? அனுபவம்தான்னு சொல்றீங்களா?

இதுக்காக ஒரு பதிவே போட்டிருக்கேன் நான்! அங்கு உங்களின் இந்த விஷயத்தை பதிகிறேன்:

றா ரா உதவிக்கு றா ரா

Anonymous said...

fix your tamil.

said...

தலைப்பில் இருப்பது தவிர பதிவெங்கும் எழுத்துப் பிழைகள் இருக்கின்றனவே. கொஞ்சம் பார்த்து சரி செய்யுங்களேன்.

said...

நல்ல விஷயங்களை எழுதியிருக்கிறீர்கள்... பாசிடிவான விஷயங்களை நாட்டில் எதிர்ப்பார்க்கும் மனிதர் என்று நினைக்கிறேன்.. அதென்ன Badnews India? நெகடிவான தலைப்பு?

எழுத்துப் பிழைகளை ஏற்கனவே பலர் சுட்டிக்காட்டி விட்ட படியால்... நல்ல முயற்சி வாழ்த்துக்கள்... நன்றி...

said...

இங்கு (சிங்கையில்) இதை அமுல் படுத்த முடியாத நிலமையில் உள்ளேன்.
சிறு சிறு குழுவாக செய்யும் போது கண்ணுக்கு தெரிகிற மாதிரி முன்னேற்றம் தெரியும்.