Monday, October 16, 2006

சுவரொட்டி அல(சி)ங்காரம் - தடுப்பது எப்படி?

சமீபத்தில் சூரிய தொலைக்காட்ச்சியில், கருணாநிதியிடம் ப்ரபலங்கள் பலர் கேள்விகள் கேட்க்கும் நிகழ்ச்சி ஒளிபரப்பானது.

கமல், ரஜினி உள்பட தமிழகத்தின் ஜாம்பவான்கள் ஒருவர் பின் ஒருவராக ஒன்றுக்கும் உதவாத கேள்விகளைக் கேட்க, அதற்க்கு கருணாநிதி சார், திருவிளையாடல் சிவாஜி போல் அழகாக பதில் சொல்லிக் கொண்டிருந்தார்.

உருப்படியாக ஒரே ஒரு கேள்வி நடிகர் விவேக்கிடம் இருந்து வந்தது. ஊரெல்லாம் உள்ள சுவர்களை அசிங்கப்படுத்திக் கொண்டிருக்கும் சுவரொட்டிகள் ஒழிய வழி கேட்டார் நண்பர் விவேக்.
முதல்வர் பொறுப்பில் இருக்கும் கருணாநிதி "எல்லார் மனதிலும் ஒளி பிறக்க வேண்டும்" என்று சப்பையான ஒரு பதில் கொடுத்தார்.
இதையெல்லாம் சரி செய்ய அவர் மனதில் ஒளி இருக்கிறதென்று நம்பித்தானே அவரை முதல்வராக்கினோம்.
இவரும் சப்பைக் கட்டு கட்டினால் என்னத்த பண்றது. என்னமோ போங்க.

சரி, சொல்ல வந்த விஷயத்துக்கு வருவோம். சுவரொட்டி அசிங்கம் பல பேர் பண்றாங்க. ஆனால் சென்னையில் திரும்பிய இடத்திலெல்லாம் கண்ணுக்கு பட்டது 'APOLLO Computer Education' என்ற நிருவனத்தின் ஒட்டிதான். பேருந்து நிறுத்தங்கள், பொது சுவர்கள், பெயர் பலகைகள் என்று பாரபட்சம் இன்றி அசிங்கப் படுத்தி இருக்கிறார்கள்.

அவர்கள் தொலைபேசி எண் - 44-22640291
முகவரி:
No-4/31 Pillayar Koil Street
Pallavaram, Chennai 600043

உங்களால் முடிந்தால் அவர்களை தொலைபேசியில் அழைத்தோ, அல்லது கடிதமாகவோ
" உங்க சுய லாபத்துக்காக ஏன்(டா / டி)ஊர இப்படி சுவரொட்டி அடிச்சு நாஸம் பண்றீங்க. ஊர கெடுக்கர உங்க கிட்ட எங்க பிள்ளைகளை படிக்க அனுப்ப மாட்டோம் "
என்று தெரியப்படுத்துங்களேன்.

உங்களுக்கு தெரிஞ்ச மற்ற நிறுவனங்களின் முகவரியையும் பின்னூடுங்கள். நம்ப அரசியல் கட்சி நண்பர்கள் பேர் வேண்டாமே. அதான் ஊருக்கே தெரிஞ்சதாச்சே. நம்ப சொல்லியா திருந்தப் போறான் அவன்.

இந்து நாளிதழில் சுவரொட்டி அசிங்கம் பற்றி படத்துடன் செய்தி கீழே. (apollo ஆளுங்க பளிச்னு ஒட்டி இருக்கராங்க பாருங்க)

13 comments:

said...

எல்லோரும் போன் பண்ணுவோம். இவனுங்களுக்கெல்லாம் எப்படித்தான் புத்தி சொல்றதோ?

நல்லா எழுதறீங்க.. எழுதுங்க.. they should get bad publicity and should affect them very badly.

என்ரென்றும் அன்புடன்,
சீமாச்சு

said...

சீமாச்சு சார், எனது பதிவுக்கு வருகை தந்ததர்க்கு நன்றி.

நீங்கள் சிறுவர்கள் கல்விச் செலவிற்க்கு உதவுவதாக படித்து அறிந்து கொண்டேன். நல்ல செயல். வாழ்த்துக்கள்.

said...

saw another post in hindu.com indicating the poster menace which points out Apollos irresponsible act.

Click here to view the post

said...

நல்ல விஷயம், தொடர்ந்து எழுதுங்கள்

said...

என்னைப் பொருத்தவரை ஒரே ஐடியா தான்...

அந்த ஓனரைப் பிடித்து அவரையே வாளியில் தண்ணீர் கொண்டு வந்து சுத்தம் செய்யச் சொல்லவேண்டும்....

அரசியல் கட்சி போஸ்டர் என்றால் பல்லிழித்துக் கொண்டு போஸ் கொடுத்த மடையர்களை கூப்பிட்டு வரவும், அல்லது அந்த ஊர் கட்சி தலைமையை கூட்டிட்டு வந்து சுத்தம் செய்ய வைக்கவேண்டும்.

பொதுச் சொத்தை நாசப்படுத்துவதில் காட்டும் அக்கரை பொதுச் சொத்தைப் பாதுகாப்பதில் காட்டினால் நாடு உருப்படும்.

said...

நான் கூட பலான படங்களின் சுவரொட்டிகளுக்கு எதிரான பதிவோ என்று நினைத்தேன். உங்கள் கவலை 'அந்த' சுவரொட்டிகள் பற்றிய கவலை என்றால் நிச்சயம், அவசியமான ஒன்று. ஆனால், இது மாதிரி விளம்பர சுவரொட்டிகள் ஒன்றும், இப்பொழுதைக்கு அவ்வளவு முக்கியமான விசயம் இல்லை. இந்த விளம்பர நிறுவனங்களை, நாம் ஏதோ ஒரு வகையில் இப்படிச் செய்வதை நிறுத்திவிட முடிந்தாலும், கட்சிகள் செய்யும் அரசியல் சுவரொட்டிகளுக்கு நம்மால் என்ன செய்ய முடியும்? இப்பொழுதைக்கு உடனடியாக கவனிக்க வேண்டிய மற்ற விசயங்கள் நமக்கு இருக்கின்றன என்பதே என் தாழ்மையான கருத்து. உங்கள் இந்த பணி சிறக்க என் வாழ்த்துக்கள்.

said...

வேந்தன், வஜ்ரா, புதுமை விரும்பி - வருகைக்கு நன்றி.

புதுமை விரும்பி, எல்லா போஸ்டர்களும் ஊரை அசிங்கப் படுத்தும் வகைதான்.
நீங்க சொல்ற மாதிரி, பெரிய எவ்ளவோ விஷயங்கள் திருத்துவதர்க்கு இருந்தாலும், இந்த மாதிரி சின்ன சின்ன விஷயங்கள் சரி செய்வதும் தள்ளிப் போடக்கூடாது.

சின்ன விஷயங்கள் சரி பண்ணதும் மீதம் இருக்கர பெரிய விஷயத்தின் கனம் கம்மியாயிடும், அவற்றை சரி செய்வதும் சுலபமாகலாம்.

இத சரி செய்ரது ரொம்ப எளிது -- இளைஞர்கள், உங்கள் நண்பர் படையுடன் ஒய்வு நாட்களில், உங்களை சுற்றியுள்ள இடங்களில் இருக்கும் சுவரொட்டியை கிழித்து எறியுங்கள். கொஞ்ச நாள்ள தானா சரி ஆயிடும்.

முடிந்ததை உடனே செய்யுங்கள்.

நான் பல தடவை ஏர்கனவே சொன்னது போல, சும்மா இங்க பேசினா மட்டும் ஊர் திருந்தாது. கொஞ்சம் field-work பண்ணணும்.

நன்றி!

said...

இப்பொழுது போன் பண்ணி என் கண்டனத்தைத் தெரிவித்தேன். அவர்களிடம் என் இமெயில் முகவரியையும் தந்துள்ளேன்.. மானேஜர் இல்லையென்று எடுத்த பெண்ணொருவர் சொன்னார்.

என் பெயர் மற்றும் முகவரியைத் தந்துள்ளேன். இது போல் இன்னும் பலரும் போன் செய்தால் ஒருவேளை திருந்துவார்களாயிருக்கும்.

என் இமயிலுக்கு ஏதாவது பதில் வந்தால் பகிர்ந்து கொள்கிறேன்.

பப்ளிக் இந்தமாதிரி எதிர்மறையாக நினைக்கிறார்களென்று தெரிந்தால் ஏதாவது நல்லெண்ணம் ஏற்படலாம்.

இதற்காக அமெரிக்காவிலிருந்து போன் செய்தேன் என்று சொல்வதை மறைத்துவிட்டேன். இதுவே அவர்களின் விளம்பரத்துக்கு ஒரு வெற்றியாக அவர்கள் நினைத்துவிடக்கூடாது பாருங்கள்...


என்றென்றும்
அன்புடன்,
சீமாச்சு..

said...

சீமாச்சு,

உங்களின் பின்னூட்டம் மனதிர்க்கு மிகுந்த நிறைவை தந்தது.
எல்லோரும் இத செய்லாம், அத செய்லாம் என்று சொல்லிக் கொண்டு இருக்கிறாரே தவிர, field-work செய்ய தயங்குகிறார்கள்.

Hats off to you!

நான் கூப்பிடும்போதும், உடைந்த ஆங்கிலத்தில் ஒருவர் பேசி, "அப்படியா சார், தெரியலியே சார்" என்ற பதில்தான் கிடைத்தது.

அவர்களின் ஈ-மெயில் கிடைத்தால் பின்னூட்டம் இடுங்கள், தனிப் பதிவு ஒன்று போட்டு பலரையும் புகார் அனுப்பச் சொல்லலாம்.

said...

இப்பொழுது அழைக்கும் போதும் அதே பதில்தான்.

"Manager இல்ல வெளில போயிருக்காரு. பசங்க வேற எடத்துக்கு வேலையா போயிருக்காங்க வந்ததும் கிழிச்சிட சொல்றேன்"

'public interest petition' போடலாமோ? உச்ச நீதி மன்றத்தில் petition அனுப்ப online வசதி இருப்பதாக படித்த நியாபகம். விசாரிக்கிரேன்.

said...

இப்போதான் (23.10.'06 காலை 11.07மணி) அப்பல்லோவுக்கு தொலைபேசினேன். மேனேஜரிடம் பேசுங்கள் என்று பணிவாகக் கூறி அவரின் கைத்தொலைபேசி எண்ணும் கொடுத்தார் குரலுக்குரிய பெண்மணி.

அந்த எண்: 99426 64366; பெயர்: முத்து.

அந்த எண்ணுக்குப் பேசினேன். முத்து பிரச்சனையைப் புரிந்துகொள்ள மறுக்கிறார். இதில நான் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும்? என்று கேட்கிறார். இதப் பத்தி உனக்கென்ன என்பது போன்ற மனப்பான்மையுடன், எல்லோரும் ஒட்டுகிறார்கள் நாங்களும் ஒட்டுகிறோம் என்கிறார். நாளிதழ், ப்ளாக் இங்கு உங்கள் பெயரோடு சேர்த்து இந்தப் பிரச்சனை உள்ளதால் உங்களுக்கு, உங்கள் கம்பெனியின் பெயருக்கு ஏற்பட்டுள்ள களங்கத்தை நீக்க செய்யுங்கள் என்றேன். "ஆகட்டும் பார்க்கலாம்" என்பது போன்ற ஒரு பதில்.

போஸ்டர் பிரச்சனையை விட நான் யார், என் எண் என்ன, எதற்காக நான் இதைப் பற்றிப் பேசுகிறேன் என்பது போன்ற கேள்விகளே முத்துவிடமிருந்து வந்தன...மற்றபடி அவர் ஏதும் இதற்கு முயற்சியெடுப்பார் என்று தோன்றவில்லை.

கல்லைவிட்டு எறிவோம்...விழுந்தால் மாங்காய்... - இது பழமொழி.

said...

இனி தொலைபேசுவோர் நான் மேலே கொடுத்துள்ள எண்ணுக்கு மானேஜர் முத்துவிடம் பேசலாமே...

said...

நல்ல நோக்கம், நல்ல பதிவு.
நன்றி தொடருங்கள்.