Friday, October 13, 2006

கலாமுக்கே சோதனையா?

இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் சூடான செய்தியில் இஸ்ரேல் பராக் மிஸைல் வாங்கிய விவகாரம் முதலில் நிற்கிறது.

பெர்நாண்டஸ் நல்லவர் என்ற என் எண்ணத்திற்க்கு இந்த செய்தி ஒரு இடி. கடற் படையின் மூத்த அதிகாரிக்கும் சதியில் பங்கா - ஹ்ம்ம், என்னத்தைச் சொல்ல.

அதுமட்டுமல்லாது, கலாமின் பெயருக்கும் களங்கம் கற்பிக்கும் நடவடிக்கைகளில் இந்த தேச துரோகிகள் இறங்கி உள்ளார்கள்.

கலாமின் மேல் தவறு இல்லை என்று வரும் தகவல்கள் மகிழ்சியை தருகிறது. நாட்டுக்காக வாழ்க்கையை அர்ப்பணித்தவர்க்கு இந்த நீசர்களின் செயல் மன வருத்தத்தை கொடுக்காது என்று எண்ணுவோம்.

தகவல்கள் சில இங்கே -
www.hindustantimes.com/news/5922_1818547,0015002100000000.htm

விசாரணைகள் முடியும் வரை பொறுத்துப் பார்ப்போம். எந்த புற்றில் எந்த பாம்பு இருக்கிறதோ?

ஆண்டவனே என் நாட்டை காப்பாற்று !!!

6 comments:

said...

எம்பி3 பாடல்கள்.......
ஐயா என் வலைப்பூவிற்கு வருகை தந்து கருத்து விட்டுச் சென்றதற்கு நன்றி.
தவறு தான். மன்னிக்கவும். ஆனால் பல ஆயிரம் மைல் தொலைவில் வாழும் எம் போல் தமிழருக்கு இணையத்தில் கிடைக்கும் தமிழ் புத்தகங்கள், பாடல்கள், திரைபடங்களே ஒரு பெரிய ஆறுதலாகவும் தமிழ் நாட்டுடன் ஒரு இணைப்பு பாலமாகவும் இருக்கிறது. இதை அறிந்த தமிழ் திரைப்படத்துறையினர் இணையத்திலும் அவர்களுடையா படைப்புகளை வெளியிட்டால் அதை காசு கொடுத்து வாங்கிப் ரசிக்கவும் தயாராக இருக்கிறோம். நன்றி.

said...

ரொம்ப நல்லா இருக்கு!!ஹும் கலாமுக்கே சோதனையா!!

said...

leomohan, வருகைக்கு நன்றி.
உங்கள் நிலை புரிகிறது.
ஆனாலும் இது தவறான செயல்தான். இணையத்தில் பல இடங்களில் இப்பொழுது பாடல்களை காசு கொடுத்தும் வாங்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.
musicindiaonline.com, raaga.com போன்ற இடங்களை பாருங்கள்.

நேர்மையான வழி சிரமமாக இருப்பதால் குறுக்கு வழி நாடுவது நமது இயல்பாக மாறி வருவதை குறைக்க வேண்டும், எல்லா விஷயத்திலும்.
நானும் யோக்கியன் அல்ல, இந்த விஷயத்தில்.

நன்றி.

said...

nateshan,
வருகைக்கு நன்றி.
ஹ்ம், சோதனைகள் பல செய்து சாதனைகள் பல பெற்றவருக்கே சோதனைதான்.

பெர்நாண்டஸ், பி.ஜெ.ஜேக்கப் இவர்கள் நிலை என்ன என்பதை விசாரணைக்கு பிறகு பார்ப்போம்.

ஆனால், இது வரைக்கும், கோடிகள் பல முழுங்கிய எந்த அரசியல் பெருச்சாளியும் களி தின்றதாக என் ஞாபகத்தில் இல்லை.

Anonymous said...

கலாமுக்குப் பின் இந்திய ஜனாதிபதியாக இன்போசிஸ் நாராயண மூர்த்தி வரவேண்டும் என்பது என்னுடைய அவா. நடக்குமா? நண்பர்களே தங்களின் கருத்துக்களையும் பகருங்களேன்.
-அன்புடன்,
பாசில், காரக்காமண்டபம்.

said...

அனானி, வருகைக்கு நன்றி!
நல்ல யோசனைதான்.
ஆனால், நாராயண மூர்த்தியை அமர்த்தினால் பிரிவினை வாதிகள் ஆட்சிக் காலம் முழுவதும் அவரை ஒன்றும் செய்ய இயலாத வாறு செய்து விடுவார்கள்.

கலாமே இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். என்ன செய்ய கலாமையே தூற்றுபவர்கள் தானே நாம்.

கலாமை போன்ற கலப்படமில்லாதவர்களில் யார் வேண்டுமென்றாலும் வரலாம். எனக்கு சந்தோஷமே.

இதைப் பற்றிய debate வேறோர் இடத்தில் படித்தேன். அங்கு Tagore 'ன் disciple "Amartya Sen" நல்ல தகுதியானவர். பதவிக்கு புகழ் சேர்ப்பார் என்று பார்த்தேன்.

சோனியா தானே இதை எல்லாம் முடிவு செய்யணும்? நமக்கேன் இந்த வேலை?