Wednesday, December 20, 2006

சபாபதி சரவணனின் - சிலுவையில் அறையப்படும் மாணவர்கள்

வேலை பளு காரணமாக இப்பெல்லாம் பதிவுகளை படிப்பதோடு சரி. எழுத அவகாசம் கிடைப்பதில்லை.

இன்று படித்த ஒரு நல்ல பதிவு சபாபதி சரவணன் சாரின் "சிலுவையில் அறையப்படும் மாணவர்கள்".

அதற்கான விளம்பரம் மட்டுமே இது
இங்கே சொடுக்கி படிக்கவும் சிலுவையில் அறையப்படும் மாணவர்கள்

சபாபதி சரவணன், தொடரட்டும் இந்த மாதிரி சமூக நலம் பேணும் பதிவுகள்.

-BNI

Tuesday, December 05, 2006

இந்தியா முன்னேறலயா? தாராளமயம் ஒரு சாபக்கேடா?

ஒரு பக்கம் அந்நியச் செலாவணி போதும் போதும் என்னும் அளவுக்கு கையிருப்பு அதிகமாகிக் கொண்டே இருக்கிறது.
இந்தியனின் மூளை இல்லை என்றால், பல நிறுவனங்கள் ஸ்தம்பித்துவிடும் நிலையும் பல இடங்களில் காணக் கிடைக்கிறது.
முதல்வரும், பிரதமரும், ஜனாதிபதியும், தொழிலதிபர்களும் 2020 ல், இந்தியா வல்லரசு ஆகிவிடும் என்று தினமொரு கதை சொல்லுகிறார்கள்.
பங்கு சந்தை அமெரிக்காவுக்கு போட்டியாக மேலேறுகிறது.

இதை எல்லாம் பார்க்கும் போது, எனக்கும் நம்பிக்கை துளிர் விடத்தான் செய்கிறது. வல்லரசு ஆயிடுவோமோ?

ஆனால்,
  • ஊரில் நான் காணும் இடம் எங்கிலும் அத்தியாவசியமான சுகாதார வசதி கூட இன்னும் கிடைக்காதோர் பலர் இருக்கிறார்கள்.
  • ஒரு வருடம் மழை பொய்த்தால், ஒருவரை ஒருவர் தண்ணீருக்காக அடித்துக் கொல்லும் நிலை.
  • என்ன ஆனாலும் சரி, திருந்தவே மாட்டோம். பொதுநலமாவது மண்ணாவது என்று அலைந்து கொண்டிருக்கும் அரசியல் காட்டுமிறாண்டிகள் ஒருபுரம்.
  • அவரவர் வீட்டின் வேலிக்குள் மட்டும் ஒழுங்காக இருந்தால் போதும். ஊரும், தெருவும் எப்படி இருந்தால் எனக்கென்ன என்று மெத்தென வாழ்க்கை வாழும் பொதுஜனம்.
  • அசந்தால் அடுத்தவர் தலையைக் கூட விழுங்கத் தயங்காத கயவர் கூட்டம் ஒருபுறம்.
  • வளர்த்த சமூகத்தை பற்றி ஒரு சிந்தனையும் இல்லாது, தான், தனக்கு என்று மட்டும் எண்ணும் படித்த கூட்டம் ஒரு புறம்.
  • நண்பர் ராஜவனஜ் சுட்டிக்காட்டிய இந்தப் பதிவில் விவசாயிகள் அனுபவிக்கும் கொடுமைகளையும் பாருங்கள்.

    எங்கே சென்று கொண்டிருக்கிறோம்? வலைப்பதிவில் எழுதுபவர்/படிப்பவர்களாகிய நாம் நல்ல உத்யோகத்தில் இருக்கிறோம். இதை எல்லாம் படித்து சப்புகொட்டி அடுத்த வேலையை பார்க்க கிளம்பி விடுவோம்.

    இப்படி எல்லோரும் இருப்பதால் தான், மேலே உள்ள குறைபாடுகள் நம் ஊரில் பஞ்சமில்லாமல் த்ழைத்து வாழ்கிறது.

    5 ஸ்டார் ஓட்டலில் சாப்பாடும், plasma டி.வி யும், Hyundai காரும், தாய்லாந்து சுற்றுப்பயணமும் கொண்டு சொகுசு வாழ்க்கை மட்டும் வாழ்ந்தால், நாளை உங்கள் குழந்தைகளுக்கு நல்ல சமுதாயமும் வாழும் இடமும் கிடைக்குமா?

    atleast, ஓய்வு பெற்றவர் யாரேனும் இருப்பீராயின், களமிறங்கி இந்த குறைபாடுகள் நடக்குமிடத்தில், அவ்வப்போது எதிர்ப்பை காட்டவேண்டும்.
    மற்றவர்கள், தங்களால் முடிந்ததை செய்ய வேண்டும்.

    உங்களால் முடிந்தது என்ன?
  • உங்கள் ஊரில் நடக்கும் அநியாயங்களுக்கு எதிர்ப்பை காட்டுங்கள். தைரியமில்லையா? அனானி பெயரில், பதிவாகவாவது எழுதுங்கள்.
  • முடிந்தவரை லஞ்சம் கொடுக்காதீர்கள். லஞ்சம் கேட்பவரைப் பற்றி பதிவாக எழுதுங்கள்.
  • நொடிந்தவர் குழந்தைகள் கல்விக்கு உதவுங்கள்.
  • விவசாயிகளின் நிலை? - என்னிடம் இதர்க்கு தீர்வு இல்லை. அவர்களே புரட்சி செய்தால் தான் உண்டு(?) எந்தத் தலைவனை நம்பியும் பிரயோஜனமில்லை.
  • உங்களுக்கே தெரியும் என்ன பண்ணணும்னு, அதை செய்ய விடாமல் தடுக்கும், மெத்தனத்தை குறையுங்கள்.


    சிங்கபூர், அமெரிக்கா, ஐரோப்பா மாதிரி எல்லாம் வளரலன்னாலும், எல்லா இந்தியனும் உடுத்த துணியும், உண்ண உணவுமாவது கிடைக்குமா 2020ல் ?

    கலாம் மாதிரி (பொதுநலத்தை மட்டும் எண்ணும்) 1000 MLA/MP கிடைத்தால் நடக்கலாம். கிடைப்பாரா?

    What is your take on this? Please DO comment. Thanks!

    பி.கு. படித்த இளைஞர்கள் சிலர் வலையில் தேவை இல்லா சண்டை போட்டு நேரத்தை விரையம் செய்யாமல், கூட்டு முயற்சியுடன் ஒரு வலைதளம் தொடங்குங்களேன் (தேன்கூடு,தமிழ்மணத்துக்கு போட்டியாக அல்ல). வலை தளத்தில், நாட்டில் நடக்கும் அக்கிரமங்களை எல்லாம் பட்டியலாக சேர்க்கும்படி செய்தால், உபயோகமாக இருக்கும். (உ.ம் லஞ்சம் வாங்குபவன், ஏய்ப்பவன், ஒன்றும் செய்யாத MLA/MP, விவசாயியை கவனிக்காத உள்ளூர் தலைவர், etc.. ). பின்னூட்டத்தில் ideas தெரிவியுங்கள்.
  • Friday, December 01, 2006

    அவசர சந்திப்பு - கருணாநிதி, ஜெயலலிதா, விஜய்காந்த், வை..(part2)



    Technical difficulties in previous post. please click link below to read the post:

    Click here

    Sunday, November 26, 2006

    அவசர சந்திப்பு - கருணாநிதி, ஜெயலலிதா, விஜய்காந்த், வை..(2)



    இதன் முதல் பாகத்தை இங்கே படிக்கவும். (அதை படிச்சுட்டு இத படிங்க. இல்லன்னா continuity போயிடும். ஒண்ணும் புரியாது. அப்பறம் examla திரு திருனு முழிக்க வேண்டியதாயிடும் :) )

    அவசர சந்திப்பு - பாகம் ஒண்ணு
    ...
    தொண்டையை adjust பண்ணியபடி கருணாநிதி பேச ஆரம்பிக்க எல்லாரும் அமைதியாக கேட்க ஆரம்பித்தனர்.

    அனைவருக்கும் இளநீர், காபி, டீ வழங்கப்பட்டது. ஜெயலலிதாவுக்கு flask'ல் இருந்து பாதாம் பால் எடுத்துக் கொடுத்துக் கொடுத்தார் சசி.

    'லூசுப் பெண்ணே' என்று பி.ஜெ.பி கணேசனின் செல்-போன் திரும்ப சிணுங்கியது. எல்லோரும் அவர் பக்கம் திரும்பி முறைக்க, அசடு வழிந்து கொண்டே செல்-போனை அணைத்து உள்ளே வைத்தார்.

    கருணாநிதி பேச ஆரம்பித்தார் "அன்பார்ந்த கழக நிர்வாகிகளே, கூட்டணி நண்பர்களே, எதிர் கட்சி தலைவர்களே, வணக்கம். அழைத்தவுடன் வந்தமைக்கு நன்றி. (சசிகலாவை பார்த்து)அழைக்காமல் வந்தமைக்கு வந்தனம். சேரன், சோழன், பாண்டியன் என்று செங்கோல் பூண்டு ஆட்சி செய்த மன்னர்கள்"...

    "I object" என்று விஜய்காந்த் குரல் கொடுத்து மேசையை தட்டினார்.
    தட்டிய தட்டில், ஜெயலலிதா குடித்துக் கொண்டிருந்த சூடான பாதாம் பால் மேசையில் கொட்டி வைகோவின் முகத்தில் தெறித்தது. எரிச்சலில் ஓ என்று கத்தினார் வை.கோ.

    "என்ன வை.கோ, planned execution மாதிரி தெரி்யுது. அம்மா வேணும்னே சான்ஸ் கடச்ச உடனே, பால் எடுத்து உங்க மேல கொட்டிட்டாங்களோ" என்று மெதுவாக வை.கோவின் காதில் ஓதினார் ராமதாஸ்.

    'ச ச, அதெல்லாம் இல்ல தாஸ்,accidents happen. இது கை தவறி நடந்ததுதான். பு.தலைவி அப்படி எல்லாம் பண்ண மாட்டாங்க. விஜய்காந்த் வேணும்னா, ஏதாவது மனசுல வச்சு இப்படி தட்டி இருக்கலாம். அவர வேணா கேட்டுப்பாருங்க", என்று வை.கோ திரும்ப ஓதினார்.

    தான் பேசும்போது 'object' சொன்ன விஜய்காந்தை பார்த்து, கடுப்பான கருணாநிதி, "ஏய்யா விஜயகாந்து, என்னய்யா objection உனக்கு? இன்னும் நான் பேசவே ஆரம்பிக்கல, அதுக்குள்ள என்ன ஆச்சு உனக்கு" என்றார்.

    "அதில்ல CM sir, இங்க இருக்கறது நம்ப மட்டும் தான். நீங்க என்னுமோ பொதுக்கூட்டத்துல பேசுர மாதிரி, தூய தமிழ்ல அடுக்கிக்கிட்டே போறீங்க. பல்லவன், சோழன் எல்லாம் பேசாம, சொல்ல வந்தத சீக்கிரம் சொன்னீங்கன்னா, கேட்டுட்டு shooting போவேன். அதுக்குத்தான் object போட்டேன்" என்று கட்டைக் குரலில் விஜய்காந்த் பதிலினார்.

    கணேசன் இதை கேட்டவுடன், தானும் மேசையை தட்டி, "எனக்கும் ஜவுளி கட திறக்க தாம்பரம் போகணும். விஜய் சொல்ற மாதிரி சட்டுனு பேசி முடிச்சீங்கன்னா, நல்லா இருக்கும்" என்றார்.

    மற்றவரும் இதை ஆமோதிக்க, அன்பழகன், கருணாநிதியின் script ஐ எடுத்து கீழே போட்டார். "கருணா, எல்லாரும் சொல்றது சரிதான் எழுதி வச்சத படிக்காம, மனசுல பட்டத அப்படியே சொல்லு. இப்பெல்லாம் தூய தமிழ்ல நீ பேசினா கேக்கர மக்களுக்கு ஒரு எரிச்சல் வருதுனு loyola தாடிக்காரர் survey எடுத்து சொன்னது சரிதான் போல" என்று கருணாநிதியின் காதில் கிசுகிசுத்தார்.

    "You too அன்பு" என்பது போல் அன்பழகனை ஒரு பார்வை பார்த்து, "சரிப்பா நீங்க சொல்றது சரிதான். சொல்ல வந்தத சொல்றேன் கேளுங்க" என்று பேச ஆரம்பித்தார் கருணாநிதி.

    "எனக்கு வயசாவுது. தமிழனுக்காக உழைச்சு 70 வருஷத்துக்கு மேல ஆச்சு. என் மொத்த வாழ்க்கையும் தமிழனின் நலனுக்கு மட்டும் தான் அற்பணிச்சிருக்கேன். அண்ணா காட்டிய வழியில் இவ்ளோ நாள் பயணிச்சாச்சு. மக்களுக்காகவே இவ்வளவு நாள் வாழ்ந்தும், இன்னும் பலர் நான் என்னமோ அவங்கள ஏமாத்திட்டதாகவும், பலரின் பட்டினிக்கு நான்தான் காரணம் என்ற ரீதியில் பேசிக்கராங்க.
    மனசு அளவுல யாருக்கும் கெடுதல் நெனச்சதுல்ல நான். என் தமிழனின் வாழ்வு வளம் பெறணும் என்ற ஒரே எண்ணம் தான் என் எல்லா முடிவுகளிலும், திட்டங்களிலும் இது நாள் வரையில் இருந்திருக்கு.
    இடயில், சில, பல பல சுய லாபங்கள், நானும், என் குடும்பத்தாரும் அடைந்திருக்கலாம்.
    என்ன பண்றது, நல்லவனா இருந்தா மட்டும் போதாதே, பண பலமும், படை பலமும் இல்லன்னா இங்க அரசியல் பண்ண முடியாத மாதிரி சூழல் உருவாக்கி வச்சிருக்கமே.

    இன்று ஊழல் பெருகவும், கயமை உருவாகவும், சுய நலம் பொது நலத்தை மீறவும், இந்த அரசிய சூழல் தான் காரணம்.

    கொஞ்ச நாளுக்கு முன் என் பேரனிடம் பேசிக் கொண்டிருந்தேன். அவன் பாடத்தில் epitaph என்று ஒரு கவிதைத் தொகுப்பு. உயிருடன் இருக்கும்போதே பிரபலங்கள் பல தங்கள் கல்லரையில் எழுதி வைக்கச் சொன்ன வாக்கியங்கள் தான் epitaph.
    அதில் கருத்தாழமிக்க ஒன்று ஒரு போர் வீரனுக்காக எழுதியது
    To save your world you asked this man to die:
    Would this man, could he see you now, ask why?


    என் கண்ணை திறந்த இரு வரிகள் இவை. என்னையும் என் கட்சியையும் இது நாள் வரை ஆதிரித்து, கேட்க்கும் போதெல்லாம் வாக்களித்து, எனக்காக உயிரையும் விட்டவர் பலர். நான் இறந்த பின் இவர்களை எல்லாம் காண நேரிட்டால், இவர்களின் கேள்விகளை எப்படி எதிர் கொள்வேன்?
    பல முன்னேற்றங்களை என் தமிழ் நாட்டுக்கு நான் செய்திருந்தாலும், இன்னும் பல இடங்களில் பசியும், பட்டினியும், சுகாதாரமும், சாதிக் கலவரமும் கணக்கிலடங்காமல் பெருகிக் கிடக்கிறதே.
    இவையெல்லாம் போக்க ஒரு தீர்க்கமான திட்டம் இது நாள் வரையில் தீட்ட முயற்ச்சி மேற்கொள்ளாமல், என் 70 வருட பொதுவாழ்வு வீணாய் போனதோ என்ற திடீர் கலக்கம் எனக்கு."

    மடமட என பேசிய கருணாநிதி கண்கள் கலங்க மௌனமானார்.
    இதைக்கேட்டுக் கொண்டிருந்த மற்றவர்களும் திகைத்துப் போய் கருணாநிதியை பார்த்தனர்.

    "என்ன புதுவிதமான ஸ்டண்ட்டா இருக்கே. எதுக்கு இப்படி அடி போடறாரு" என்று வை.கோ ராம்தாசின் காதில் கிசுகிசினார்.
    தயாநிதி, கண்கள் கலங்க அன்பழகனின் தோளில் சாய்ந்தார். "டேய் படம் காட்டாத, சும்மா இரு" என்று அன்பழகன் சொன்னதும் எழுந்து தள்ளி நின்றார்.

    "Ok ok. So, what?" என்று ஜெயலலிதா கேள்வி கேட்டார்.
    கேள்வி கேட்ட ஜெயலலிதாவை பார்த்து ஷ்ஷ்ஷ் என்றார் அன்பழகன்.
    எழுந்து போகப்பார்த்த சசிகலாவை பிடித்து அமர்த்தினார் ஜெயா.

    "Mr. கருணாநிதி, இப்பவாவது தப்ப ஒப்புக்கொண்டீர்களே. அப்படியே, என் கல்யாண மண்டபம் இடிப்பதும் தப்புதான்னு இது கூட சேத்து, எல்லாத்தையும் மொத்தமா ஒரு பெரிய அறிக்கையா நாளைக்கு கொடுத்துடலாம் சார். அப்ப நீங்க ராஜினாமா பண்ண போறீங்களா?" என்று வாயெல்லாம் பல்லாக விஜயகாந்த் கேள்விகளை அடுக்கினார்.

    "தம்பி விஜய்காந்து, சினிமால நடிச்சு பேரும் புகழும் சம்பாதிச்சு, அடுத்து என்ன பண்றதுன்னு தெரியாம நிக்கும் போது, உனக்கு மக்கள் மேல அக்கரை வந்திருக்கு தம்பி. நான் பிறந்தவுடன் என் தமிழனுக்கு என் வாழ்வை அற்பணித்தவன். ரெண்டு படம் ஓடலன்னா, உன் நிலை இப்படியே இருக்குமான்னு தெரியாது. என் கதை அப்படியல்ல. மரணப் படுக்கை வரை என் தமிழனுக்கான போராட்டம் தீராது. சும்மா சத்தம் போடாதே. அமர்" என்று கடுப்பானார் கருணாநிதி.

    "சரி சரி CM சார், சும்மா வெளையாட்டுக்கு சொன்னேன். மேல சொல்ல வந்தத சட்டுனு சொல்லுங்க தலைவரே" என்று அசடு வழிந்தார் விஜய்காந்த்.

    ஜெயலலிதாவுக்கு, பாதாம் பால் இன்னொரு கப் ஊற்றிக் கொடுத்தார் சசி. ஜெயலலிதா மிகவும் குழம்பியவராய் காணப்பட்டார்.

    "இன்னும் இருக்கப் போறது கொஞ்ச வருஷம்தான். அதுக்குள்ள என்னால் முடிஞ்ச வரை, எழைகள் வாழ்வில் வளம் ஏற்றவும், என் தாய் தமிழகம் ஒளி பெறவும் ஏதாவது செய்யணும்னு முடிவு பண்ணேன்.
    பல வருடங்கள் நானும், நண்பன் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதா அம்மையாரும் மாறி மாறி ஆட்சி செய்தோம். ஒரு பெரிய முன்னேற்றமும் கொடுக்கவில்லை நாங்கள். (ஜெயலலிதா ஏதோ பேச எழ, பேசாமல் அமரச் சொன்னார் கருணாநிதி).
    எம்.ஜி.ஆர் நல்லவன். பல கனவு அவனுக்கு இருந்தது. ஏழைகளே இருக்கக்கூடாது அவன் ஆட்சியில் என்று எண்ணினான்.
    ஆனால், எங்கள் இருவருக்கு இடையில் இருந்த நட்பை விட, பெறுகி இருந்த ஈகோவும் காழ்ப்புணர்ச்சியும், ஒருவரை மற்றொருவர் தாழ்த்தி, ஒரு நல்லதும் செய்ய விடாமல் செய்தது.
    அவரவர் பணபலமும், படை பலமும் பெருக, ஆட்சியில் இருக்கும்போது, லஞ்சமும் கயமையும் பெறுகியது.
    மற்ற முக்கிய பிரச்ச்னைகளில் கவனம் செலுத்த முடியாமல், ஆட்சியை பிடிப்பதிலும், காப்பதிலுமே நேரம் விரையமானது.
    அவனுக்கு பிறகு வந்தவர்களும், இதைத் தொடர்ந்து, மொத்த கூட்டமும் பொது முன்னேற்றத்திர்க்கு வழி பண்ணாமல், சுய முன்னேற்றமும், தன் சுற்றத்தின் முன்னேற்றமுமே பேண முடிந்தது.

    எல்லா நிலைகளிலும் லஞ்சம் பெறுகியது. கட்சிக்கு ஆதாயம் என்பதால், கேள்விகள் பல கேட்கப்படாமல் மௌனமாக நம் தமிழகம் அழிந்து கொண்டு வந்திருக்கிறது.

    விவசாயியை எல்லோரும் மறந்தோம். தேர்தல் சமயத்தில் மட்டும், சில சலுகைகள் கொடுத்து ஓட்டு வாங்குவதில் மட்டுமே நம் கவனம் இருந்தது. கொடுத்த சில சலுகைகளும் அவனுக்கு சேர்கிறதா என்று சரி வர கவனிக்காமல், பல குடும்பங்கள் பலியாக காரணமானோம்.

    வரிப்பணத்தில் செய்யும் பல வேலையிலும் லஞ்சம் புகுந்து பலருக்கு பெரும் துயர் ஏற்பட வழி வகுத்தது. மழையில் பல் இளிக்கும் சாலை, வெயிலில் தண்ணீர் பஞ்சம், விவசாயிக்கு கிடைக்க வேண்டிய வசதி கிடைக்காதிருத்தல், உணவு/மருந்து பற்றாக்குறை, பேருக்குக் கூட சுகாதார வசதி இல்லாமல் பல இடங்கள், அரசியல் லாபத்துக்காக மூடப்படும் சாதி சண்டைகள், கல்வி கிட்டாத பல குழந்தைகள், இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

    இதில், அறிந்தும் அறியாமலும், என் பங்கும் உண்டு.
    "

    என்று மூச்சு முட்ட கர கரத்த குரலில் பேசினார் கருணாநிதி.

    "என்ன சார் அப்பா இப்படி கவுக்கராரு. போற போக்க பாத்தா, எல்லாத்தையும் மக்களுக்கு எழுதி வச்சு எனக்கு துண்டு கொடுத்துடுவார் போல இருக்கே" என்ற ஸ்டாலின், அன்பழகனிடம் "கொஞ்சம் கண்ட்ரோல் பண்ணுங்க சார் அவர" என்று கூறினார்.

    கணேசன் பேச ஆரம்பித்தார் - "நீங்க சொன்னதத்தான் தேர்தல் சமயத்துல நானும் கிராமம் கிராமமா போய் கத்தினேன். ஒரு பயலும் கேட்ட மாதிரி தெரியலையே. திரும்ப உங்களுக்குதான் ஓட்ட போடறான். மயக்கி இல்ல வச்சிருக்கீங்க ரெண்டு பேரும். ரெண்டு டி.வி ஸ்டேஷன் வச்சுக்கிட்டு மக்கள மாத்தி மாத்தி ப்ரெய்ன் வாஷ் இல்ல பண்றீங்க. போதா கொறைக்கு ராமதாஸ் வேற இன்னொரு டி.வி ஆரம்பிச்சிட்டாரு. என்னதான் முடிவு இதுக்கெல்லாம்?"

    "கணேசன். நாங்க இவ்ளோ வளரலன்னா இந்நேரம் ராம் டி.வி யோ, கை டி.வி யோ வந்து, என் மொத்த மக்களையும் இல்ல வசியம் பண்ணி அறியாமைல தள்ளி இருக்கும். உக்காருங்க. உக்காருங்க." என்று அன்பழகன் கணேசனை அமரச் சொன்னார்.

    "கருணா, ராகு காலம் ஆரம்பிக்கப் போவுது, நேத்து தீட்டின திட்டத்தோட print-out எடுத்து எல்லாருக்கும் கொடுத்து, நம்ப எடுத்த முடிவ சீக்கிரம் சொல்லுப்பா" என்று கருணாநிதியை பார்த்து அன்பழகன் சொன்னார்.

    "சொல்றேன்பா. ஸ்டாலின், இந்த பேப்பர எல்லார் கிட்டயும் கொடு. இயற்கை அழைக்கிறது. 1 வேலைய முடிச்சுட்டு வரேன். நீங்களும் ஒரு short-break எடுத்துட்டு சீக்கிரம் வந்துடுங்க. தம்பி விஜய், shooting க்கு கலம்பிடாதப்பா, நமீதாவ வீட்டுக்கு போயிட்டு நாளைக்கு வர சொல்லு. முக்கியமான விஷயம் இனிதான் இருக்கு. கவனமா எல்லாரும் கேக்கணும்" என்று உள்ளே சென்றார். கீழே விழுந்த மஞ்சள் துண்டை எடுத்துக் கொண்டு பின்னேயே ஓடினார் தயாநிதி. "Uncle" என்று கத்தியபடி....

    ..தொடரும்.


    பி.கு: எல்லாம் உடான்சே, உடான்சை தவிர வேறொன்றுமில்லை..



    .

    Tuesday, November 14, 2006

    IF YOU ARE ABUSED ON INTERNET

    Saw the following 'anonymous' comment on one of the 'problem blogs' today.
    Thought some of the useful information will help everyone.

    I made some updates to anony's comments. Removed certain individuals names and a groups name to make it GENERIC.

    Note: இந்த பதிவுக்கு கசா முசானு வரும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தப்படும். நேரம் வீணாக்காதீர்கள்.
    அப்படியே, கீழே சொன்ன மாதிரி நடவடிக்கை எடுக்க பிள்ளையார் சுழியும் போடப்படும்.
    ஆரோக்கிய சூழலை உருவாக்குவோம்.

    நன்றி அனானி!

    பி.கு: Cyber Crime police in India: http://www.naavi.org/cl_editorial_04/cyber_Crime_ps.htm

    Dear Friends,

    My area of interest is cyber crimes and how to prevent it. I have been doing academic research on this subject for few years. Being a Tamil, I also read Tamil on Internet and reading Tamil blogs for few years. I often read postings accusing of abuse/harassment/stalking/identity theft in Tamil Blogs. Though I see everyone complains big time about it, I have not seen anyone taking any concrete actions to prevent it. People should report the abuses to the police and not to the magazines that will make sales out of it.

    Cyber Crime Laws are taking shape even in under developed countries for sometime now. A victim needs some time and perseverance to follow through the complaints to get justice. For example, Malaysia has passed cyber crime laws way back in 1999 or so. You could request Malaysian police to track down any cyber crime culprits through the police department of your country. I am sharing some of the trivial information that could be useful to the victims of cyber crimes on Tamil Internet. The following website has excellent material and guidance to the victims of cyber abuses in Tamil Blogs. Please feel free to contact them.

    I have also explained in my research papers few times about the nature of abuses that go on in Tamil Web. However, as I am not affected, I could not give any official complaints. I have tracked poli dondu, karuppupaiyan et all for my research work for sometime and have solid information about them. However, authorities cannot take action without complaints from few current USA residents. So, please use the following links to save yourself. If you need any proof on who is Poli Dondu, after giving a written complaint to your local police authorities, give their e-mail and address in this blog. I will send it to the police department directly.

    Go To http://www.wiredsafety.org. This site is a treasure to the victims to get justice.

    You can report CyberAbuse online here
    http://www.wiredsafety.org/911/index.html

    This page has a drop down box to choose the type of complaint. Choose the appropriate one and file your grievances under it. Alternatively, you could also e-mail your complaints to cyber911team AT wiredsafety DOT org.

    Abuses of Poli Dondu, Tamil Bartender, Special Aappu, Doondu can be reported under CyberStalking (Online Stalking) or Harassment. This can also be additionally reported under Cyber Bullying.

    There is also another easy online reporting form available at
    https://www.wiredsafety.org/forms/stalking.html

    Please mention that you were abused in Tamil Blogs by so and so blogger. Also if you suspect that blog aggregators collect abuses against you in the name of free speech, you could mention their names too here. Not only the blogger, even those who allow comments of abuse and those who collect or reproduce them can come under the purview of justice.

    Karuppupaiyan writes hatred against a section of people (called Brahmins). Most of his writings will fall under the purview of Hate Crimes. Many people including scholars from USA comment on his blog appreciating him. You could ask law enforcement to take action on Karuppupaiyan. For example, even if Karuppupaiyan lives outside USA, you could still complain about him in USA. USA authorities will try to track him down. Also they will put a tab on his supporters in USA and watch them.

    Similarly, Sundaravadivel's Savilum pizhaikum parpana kutam post would qualify under racial profiling of brahmins. Any profiling is a crime in USA.

    It has been clearly established that Karuppupaiyan is poli dondu and complaints were lodged against him in India, Malaysia and USA already. May be law is giving him a long rope now to catch not only him but also his co-conspirators. USA is not India where they dont care much about cyber crimes. USA takes cyber crimes seriously. So, the chances are more that the guilty will be punished if you report to USA agencies.

    Get Live Chat Help from a cybercrime expert if you were one of the affected.

    If you were stalked, the following page gives self-help about how to handle it:
    http://wiredsafety.org/cyberstalking_harassment//stalking_self_help/

    If you were affected by Cyber Crimes and want to prevent others from being affected you may also become a volunteer at CyberCrime Team. They welcome volunteers. Become a volunteer and save someone from being abused.

    Is there no way that woman can surf safely online? Surely they can.. Wiredsafety says,

    "In the early days of the Web, women had to proceed with caution. They were in the minority and were often targeted by cyberstalkers, scam artists and other predators. As women became more familiar with the technology, things began to change. Equality arrived in the guise of women cyberstalking men and each other and joining the ranks of the cyberabusers, not only the victims.

    But women are still targeted by sexual and harassing cyberabuses more than their male counterparts. The ratio is about 3:1, three female victims to every male one.

    While many safety and privacy tips apply equally to men and women, there are some situations that are unique to women and some tips that apply to their special vulnerabilities. To learn more, visit the UK site. Learn about how one of our volunteers fought back when she was conned by someone posing as a widower.

    There is no longer any reason why women can't be as safe online as men. Most of our senior executives here at WiredSafety.org are women, including our founder and executive director, cyberlawyer, Parry Aftab. If you need someone to speak to your community or women's group about women's online issues, let us know. We're happy to help."

    So, all women affected by Poli Dondu/others irrespective of the country they live in, please contact wiredsafety. Crimes against women and children are taken seriously.

    When you go to wiredsafety, sometimes they will ask you to go to online FBI website or local police department and give a complaint. FBI or police department gets thousands of complaints everyday like this. At the most, they will give you an interview and hear your case. They may not act beyond it. However, if you go to wiredsafety and inform your complaint details, wiredsafety follows up with the police. When wiredsafety follows up, FBI/Police act normallly and do something.

    For example, if you suspect someone as supporting or doing abuses, you could even mention in your complaint that you are suspecting that person. Police will not punish you even if its wrong. Even if you dont mention it, they ask you normally whether you have any list of suspects.

    Even if you prove to the world the abuses yourself, no one will be caring much. The guilty will get smarter and move on to a different place or under a different name and continue to harass others. So blogs like this post will serve no purpose.

    Few months back, a Canadian movie director was refused entry into USA. What did he do. Directed a movie where the USA President was killed. In Tamil blogs, there is open support for terrorism, violence, punishments by terror groups and justifications for the killings of many foreign leaders/diplomats. Those who do write such posts bring a world of harm to themselves without even knowing about it. A person can also report it to wiredsafety as suspicious activity or support for terror. After 9/11, police encourage people to contact them to report suspicious activities.

    I strongly advise you all not to take law in your own hands to expose the guilty. Go to the law enforcement authorities. It may take some time and efforts on your side, but when abusers are put behind the bars, there will be none to write in support of them.

    Thursday, November 09, 2006

    ஜாதிகள் இருக்குமடி பாப்பா...

    இணையத்தில் நிலவி வரும் ஜாதி வெறித் 'தாக்குதல்கள்' பெரும் துயரத்தைத் தருகிறது.

    ஒரு பக்கம் இவர் அவரை சாடுவதும்; இன்னொரு பக்கம் அவர் இவரை சாடுவதும்; நடுவில் சிலதுகள் என்னடா நடக்குது என்று புரியாமல் வருந்துவதும் தினமும் நடந்தேறுகிறது.

    ஊரில் மக்களை ஏய்ப்பவர்கள் பலர் இருக்க இப்படி ஜாதி பற்றி விதண்டாவாதம் பேசி விவாதிப்பது எல்லாம் தேவையா?

    அணைந்த பிரச்சனையை (அல்லது அணையும் நிலையில் உள்ள) பிரச்சனையை இணையத்தில் இப்படி அலசி அதை அணையவிடாமல் இருக்க செய்யும் முயற்சி மடத்தனம் இல்லையா?

    பள்ளி, கல்லூரி மாணவர்கள் பலர் நம் பதிவுகளை படிக்கிறார்கள். உங்கள் வீட்டு பிள்ளை களும் இதில் உண்டு.
    உங்கள் பதிவிலிருந்து அவர்கள் தெரிந்து கொள்ளும் பாடம் என்னவாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

    "டேய் நான் சங்கரன் பையன் டா. நான் கடவுளுக்கு சமம் டா. நீ கீழ் ஜாதி. நீ தீட்டு டா"
    "டேய் நான் குப்பனோட பையன் டா. என் குடும்பத்த கஷ்டப்படுத்தின பார்ப்பானை விட மாட்டேண்டா. ஒரு கை பாக்கரேண்டா அவன"
    இப்படி இந்த வயதிலிருந்தே அவர்கள் 'தயார்' நிலையில் தான் வளர வேண்டுமா?

    சிறு வயதில் ஏற்பட்ட ஜாதிக் கொடுமைகளால் தான், இணையத்தில் ஜாதியை பற்றி பேசி, தங்கள் ஒடுக்கப்பட்ட இனத்தவருக்கு தொண்டு செய்வதாக சிலர்.
    சிலர், நான்தான் பெரியவன் என்ற ரீதியில் மற்றவரை மட்டம் தட்டியும் கிண்டலடித்தும் பொழுதை போக்குகிறார்கள்.
    சிலர் 'பார்ப்பனீய' கலாச்சார அடையாளங்களை ஒழித்தால்தான் இரு பக்கமும் ஒன்றாக்க முடியும் என்கிறார்கள்.
    பல குழப்பவாதிகள், மனதளவில் அழுக்கை வைத்துக் கொண்டு மிகவும் கேவலமான பதிவுகள் எல்லாம் கொடுக்கிறார்கள்.

    எதை சாதிக்க முயல்கிறோம்?

    நீங்கள் யார்?
    1) ஜாதி வெறி இன்னும் இருக்கு. அதை ஒழிச்சுட்டுதான் மறு வேலை. இணையத்தில் 'உயர்' ஜாதிக்காரன தினமும் திட்டி அதை ஒழிப்பேன்.
    2) நான் உயர்ந்த ஜாதி. கீழ் ஜாதி காரன் கீழ தான் இருக்கணும். எனக்கு சமமா அவன் வரக் கூடாது.
    3) ஜாதி வெறி இருந்தது. இன்னும் கொஞ்ச இடத்தில் இருக்குது. ஒடுக்கப்பட்டவனுக்கு உண்மையான உதவி நேரிடையாகச் செய்வேன். இணைய தாக்குதல் எல்லாம் waste of time.
    4) சும்மா டைம் பாஸுக்கு ஜாதி வெறி இருக்குன்னு பேசறேன். பேசுவதைத் தவிர வேற ஒண்ணும் செய்ய மாட்டேன்.
    5) சும்மா டைம் பாஸுக்கு ஜாதி வெறி இல்லன்னு பேசறேன். பேசுவதைத் தவிர வேற ஒண்ணும் செய்ய மாட்டேன்.
    6) என் வழி தனி வழி. யாருக்கும் தொல்லை இல்லா வழி.

    ஜாதி யை வைத்து ஒடுக்குபவர்கள் இன்னும் இருக்கிறார்கள் என்று கூறுபவர்கள். உங்கள் ஊரிலோ உங்கள் அலுவலகத்திலோ இப்படி 'ஒடுக்கும்' கயவர்களின் பெயர்/முகவரி யை பதியுங்கள்.
    என் சொந்த செலவில், அந்த நபருடன் தொடர்பு கொண்டு, அவர்கள் மன ஓட்டத்தை அறிந்து அவர்களை திருந்த என்ன வழி என்று பார்க்கிறேன்.

    ஒருவரையாவது ( இன்னும் ஒடுக்கிக் கொண்டிருந்தால்) திருத்தலாமே ?


    அதேபோல் இணையத்தில் நான் கூறிய மேலே உள்ள வகையராக்களில் எந்தெந்த பதிவுகள் உள்ளது என்றும் பின்னூடுங்கள். இதை எல்லாம் படித்து, கோர்த்து நமது மந்தையில் உள்ள கருப்பு ஆடுகள் யார் என்று ஒரு black-list பதிவு அடுத்ததாகக் போடுகிறேன்.

    திருந்த/திருத்த வேறு என்னதான் வ்ழி? ஒரு பொதுவான OATH ரெடி செய்து எல்லாரையும் எடுக்கச் சொல்லலாமா?

    தெளிவாகுங்கள் நண்பர்களே!

    வருத்தத்துடன்,
    -BadNewsIndia

    பி.கு: இணையத்தில் எழுத ஆரம்பித்தது, ஊரில் ரோடு சரி இல்லை, தண்ணி இல்லை, லஞ்சம், ஊழல் இதைப் பற்றி எல்லாம் எழுதத் தான். இங்கே வந்தால், அதை விட பெரிய பிரச்சனையாக ஜாதி பேச்சு பெரிதாக நாறுகிறது. அரசியல்வாதியே பரவால்ல போலருக்கே.
    GOOGLE'ல் உலகம் முழுவதும் படம் பிடித்து zoom செய்து பார்க்கும் படி செய்திருக்கிறார்கள் என்று ஒரு நண்பர் சொன்னார்.
    ஆவலுடன், அமெரிக்காவையும், ஐரொப்பாவையும் மற்ற நாடுகளையும் கண்டு களித்தோம். அந்த ஊரில் உள்ள வசதிகளும், வாழ்வின் தரமும் உயரத்தில் இருந்து பார்த்தாலே 'பளிச்' என்று தெரிகிறது.
    சென்னையையும் அதை சுற்றி உள்ள இடங்களையும் பார்த்த எனக்கு பெறுத்த அதிர்ச்சி. மற்ற நாடுகளில் எல்லாம் சாலைகள் கருப்பாக பார்ப்பதர்க்கு நேர்த்தியாகத் தெரிந்தது.
    சென்னை மாநகரில் எங்கு பார்த்தாலும் ஒரு பொட்டு கருப்பு கூட கண்ணுக்கு தெரியவில்லை. சாலையெல்லாம் மண் நிறத்தில் வாயிளித்து பார்க்கும் அவலம் ஊர் முழுவதும்.
    வருடா வருடம் கிடைக்கும் MLA யின் 1 கோடியும், MP யின் 2 கோடியும், பல கோடி வரிப் பணமும் எங்கய்யா போவுது ? ஹ்ம்!! இந்த பதிவுக்கு சம்பந்தம் இல்லாதது. அதை தனியா அலசறேன். இப்பொழுதைக்கு ஜாதி பிரச்சனைக்கு ஒரு முடிவு என்னன்னு பார்ப்போம்.

    Wednesday, November 08, 2006

    இலவசமாய் தந்துவிடு (கவிதை)

    தூக்கம் இல்லை என்றால்
    இலவசமாய் கூட பஞ்சணை வேண்டாம்

    பசி இல்லை என்றால்
    இலவசமாய் கூட உணவு வேண்டாம்

    பார்வை இல்லை என்றால்
    இலவசமாய் கூட நிறங்கள் வேண்டாம்

    பாசம் இல்லை என்றால்
    இலவசமாய் கூட சொந்தங்கள் வேண்டாம்

    உண்மை இல்லை என்றால்
    இலவசமாய் கூட நண்பன் வேண்டாம்

    கண்ணே, உன் காதல் இல்லை என்றால்
    மரணத்தை தந்து விடு. இலவசமாய்!!!


    -BNI

    பி.கு: போட்டிக்கு எழுதினது இல்ல. போட்டிகதை இங்கே - லாட்டரி கோவிந்தன் ( தேன்கூடு போட்டிக்கு )

    Tuesday, November 07, 2006

    லாட்டரி கோவிந்தன் ( தேன்கூடு போட்டிக்கு )


    கோவிந்தனுக்கு அவன் கண்ணயே நம்ப முடியல. கைல இருந்த நாயர் கட தினத் தந்தி பேப்பர இன்னொரு தடவ நல்லா பாத்தான். இன்னொரு கைல நேத்து ராத்திரி வாங்கின லாட்டரி சீட்டு.
    லாட்டரி சீட்டையும் பேப்பரையும் மாத்தி மாத்தி பாத்தவன் கண்ணு அகலமா தொறந்தது.
    "டேய் முருகா. ஜாக்பாட் அடிச்சுடுச்சுடா. 20 லட்சம் ரூபாடா" - கோவிந்தன் கத்தின கத்து தெரு ஓரத்துல இருந்த ஆட்டோ காரனெல்லாம் திரும்பி பாத்தான்.

    முருகன் கொஞ்சம் கூட அலட்டிக்காம் "கோவிந்து சும்மா உடான்ஸ் வுடாத. போய் வேலய பாருடா" ன்னு சொன்னான்.

    "டேய் நாயே மெய்யாலுமாடா. இத நீயே பாரு" னு சொல்லி பேப்பரையும் சீட்டையும் முருகன் கிட்ட கொடுத்தான்.

    முருகன் லாட்டிரி சீட்டையும் பேப்பரையும் மாத்தி மாத்தி பாத்து பேயரஞ்ச மாதிரி அப்படியே நின்னான். "டேய் மாப்ள. அதே நெம்பரு தாண்டா. படுபாவி மச்சந்தாண்டா உனக்கு. ஜாக்பாட்ரா. 20 லட்சம் டா.", கத்தினான் முருகன்.

    "ஹி ஹி ஹி" கோவிந்தனுக்கு சந்தோஷத்துல தல கால் புரீல. கத்தி சிரிச்சிட்டே இருந்தான். மூச்சு முட்டிச்சு.

    "முருகா 20 லட்சம் டா, இப்ப என்னடா பண்றது" - முருகன பாத்து கேட்டான்.

    "எங்கடா வாங்கின சீட்ட. மொதல்ல அந்த சீட்டை டவுசர்ல பத்திரமா வை. அப்பால அந்த கடைல போயி காசு எங்க வாங்கரதுன்னு கேக்கலாம்" - முருகன் மூச்சு விடாம பேசிட்டே இருந்தான்.

    "ஸ்கூல் பக்கத்துல நம்ம மொதலியார் கடைல தான் வாங்குனேன். வாங்கும் போதே அந்த ஆளு சண்ட வேற போட்டான். இது வரைக்கும் இருக்கர கடன செட்டில் பண்ணு கோவிந்தானு. நான் தான் வழக்கம் போல எஸ்கேப் ஆயிட்டேன்" மூச்சு முட்ட முட்ட கத்திப் பேசினான் கோவிந்தன்.

    "என்ன மறந்துடாத கோவிந்தா" - முருகன் இளிச்ச வாயோட சொன்னான்.

    "அட நாயே. உன்ன எப்படிடா மறப்பேன். உனக்கும் உன் தங்கச்சிக்கும், ஆளுக்கு ஒரு லட்சம் தாரேன். கால் டாக்ஸி வாங்கி ஜமாய் டா முருகா" - கோவிந்தன் சட்டுனு சொன்னத கேட்டு முருகன் கண்ணுல தண்ணி விந்திடுச்சு. கோவிந்தன அப்படியே தோள்ள தூக்கி ஒக்கார வச்சான் முருகன்.

    ரெண்டு பேரும் மொதலியார் கடய பாத்து நடக்க ஆரம்பிச்சாங்க.

    ----- 0 ----- 0 ----- 0 ----- 0 ----- 0 ----- 0

    கோவிந்தனும் முருகனும் சின்ன வயசுலேர்ந்தே பழக்கம். ரெண்டு பேரும் செங்கல்பட்டு பஸ் ஸ்டாண்ட் கிட்ட இருக்கர ஒரு சேரிலதான் இருக்காங்க.

    கோவிந்தனுக்கு கல்யாணம் ஆயி நாலு வருஷத்துலயே பொண்டாட்டி மஞ்சக் காமால வந்து செத்து போயிடுச்சு.
    ராமு, வள்ளி னு 11 வயசு பையனும், 7 வயசு பொண்ணும் இருக்கு.

    அம்மா இல்லாத்ததால ரொம்ப பாசமா வளப்பான் பசங்கள. அடிக்க மாட்டான்.

    கோவிந்தனுக்கு சரியான வேல கெடயாது. மூணாம் கிளாஸ் மட்டும் படிச்சிருக்கான்.
    குப்பைத் தொட்டில இருக்கர ப்ளாஸ்டிக், இரும்பு, பாட்டில் சாமான பிரிச்சு எடுத்து ஒரு கோணிப் பைல போட்டு பழைய பேப்பர் கடை வச்சிருக்கர ரங்கப்பன் கிட்ட விப்பான்.
    ரங்கப்பன் கோணில எவ்ளோ கனம் இருந்தாலும், ஒரு நாளைக்கு 14 ரூபாய்க்கு மேல கொடுக்க மாட்டாரு.

    மழை காலத்துல 14 ரூபாயும் கெடைக்காது. சாப்பாட்டுக்கே கஷ்டம்தான்.

    மழை காலத்துல மத்த என்ன வேல கெடைக்குதோ அத செய்வான்.

    முக்கியமா, பக்கத்து ஊர்ல இருக்கர வீடுகள்ல தோட்ட வேல, தண்ணி எறைக்கரது இந்த மாதிரி வேலையும் செய்வான். ஆனா, இதெல்லாம் செஞ்சா 10 ரூபாதான் கொடுப்பாங்க.

    மூத்த பையன் ராமுவ பள்ளிக்கூடம் அனுப்பணும்னு ரொம்ப நாள் ஆச. ஆனா வசதி தான் இல்ல. வள்ளியயாவது ஒழுங்கா சாப்புட வச்சு படிக்க அனுப்பணும்னு, ராமு கிட்டயும் ஒரு கோணிப்பய்ய கொடுத்து தொழில் கத்துக் கொடுத்துட்டான்.
    ராமுவும், வீட்டு நெலம தெரிஞ்ச நல்ல பையன். தெனமும் கெடைக்கர 10 ரூபாய கோவிந்தன் கிட்ட கொடுத்திருவான். அவனுக்காக ஒண்ணும் வாங்கிக்க மாட்டான்.

    அப்பனும் புள்ளயும் சேந்து வள்ளிய பள்ளிக்கூடத்துல சேத்து விட்டு அவளுக்கு வேண்டியதேல்லாம் கஷ்டப்பட்டு செஞ்சாங்க.

    ஒரு நாள் ராமு கோவிந்தன் கிட்ட வந்து "யப்பா, கண்ணன் இருக்கான்ல, அவன் ஒரு நாளைக்கு 40 ரூபா சம்பாதிக்ரான். நம்ம ரத்னம் மாமா இருக்காருல்ல, அவரு கூட போயி சாக்கடையெல்லாம் கழுவி விட்டா 40 ரூவா தருவாராம். மதியானம் சாப்பாடும் வாங்கி கொடுத்துருவாராம். நானும் போட்டாப்ப?" என்றான்.

    "டேய். அதெல்லாம் வேணாம்டா. இந்த வேல பாரு போதும். எனக்கு நல்ல வேல கெடச்சா நீயும் பள்ளி கூடம் போவணும். சாக்கட அள்ராராம் சாக்கட. போடா" கோவத்துடன் கத்திவிட்டான் கோவிந்தன்.

    மறு நாளே, ரத்னம் மாமாவை பார்த்து, "சாக்கடை கழுவுர வேலைக்கு நானே வரேன்னு" சொல்லி கோவிந்தனே போய் கேட்டுப் பாத்தான். என்ன இருந்தாலும் 40 ரூபா தெனமும் கடச்சா பசியார பசங்க சாப்பிடலாமே. மெதுவா வேற நல்ல வேல பாத்து அப்பறம் மாறிக்கலாம் னு மனசுல கணக்கு போட்டான்.

    முருகன் லாரில மணல் லோட் அள்ளிப்போடர வேல. கோவிந்தனுக்கும் அந்த வேல ஏற்பாடு பண்ண ரொம்ப நாளா ட்ரை பண்றான். மொதலாளி படிய மாட்றாரு.

    சாக்கட கழுவரது ஒண்ணும் அவ்ளோ கஷ்டமா தெரீல ஆரம்பத்துல. ஆனா, அடப்பு ஜாஸ்தி இருந்தா சாக்கடேல கால விட்டு கொத்தி விடணும். செல நாள் கால்ல புண்ணு வந்துடும். நாத்தம் கொடல பொரட்டும். சாப்பாடு கூட எறங்காது.

    பஸ் ஸ்டாண்ட் பக்கத்துல இருக்கர சாக்கடை வாரத்துக்கு ஒரு தடவ அடச்சுக்கும். பஸ்க்கு நிக்கரவன் எல்லாம் குப்பைய கரெக்டா சாக்கடைல போட்டுருவானுங்க. தண்ணி போகாம அப்படியே நிக்கும். குச்சி எல்லாம் விட்டு குத்தினாலும் தண்ணி போவாது.
    வேற வழியே இல்லாம என்னா பண்றதுன்னு யோசிச்சுனு இருந்தான் ஒரு நாள்.

    "கோவிந்தா என்னடா நோவாம குத்தினு இருக்கர. மூலைல man-hole இருக்கு பாரு. அந்த மூடிய பொரட்டி போட்டு மெதுவா உள்ள எறங்கு. உள்ள கை விட்டு துழாவி அடச்சுக்கினு இருக்கர பேப்பரையெல்லம் எடுத்து வெளில போடு சரியாயிடும்" - ரத்னம் மாமா சூப்பரா ஐடியா கொடுத்தாரு.
    உள்ள எறங்கி கடல்ல முத்து குளிக்கர மாதிரி முங்கி முங்கி குப்பய எடுத்து போட்டான் கோவிந்தன்.
    அடச்ச சாக்கடையும் ஓடிச்சு, அன்னிலேர்ந்து அவனுக்கு சாப்பிடர ஆசையும் ஒடிச்சு. அன்னிக்கு பூரா வாந்தி எடுத்து படுத்துட்டான்.

    ஏதோ ப்ரொமோஷன் கொடுத்த மாதிரி, அன்னிலேருந்து எங்க சாக்கட அடச்சாலும் "கூப்புடு கோவிந்தன" என்று ரத்னம் மாமா கத்துவாரு.
    முத்து குளிக்கும் நாள் மட்டும் 60 ரூபா கெடைக்கும். கவுர்மெண்டுல 100 ரூபா கொடுப்பாங்களாம், ஆனா 40 ரூபாய ரத்னம் மாமா அமுக்கிடராருனு யாரோ பேசும் போது கேட்டான் கோவிந்தன். ஆனா அத பத்தி அவன் ரத்னம் மாமா கிட்ட ஒண்ணும் கேட்டுக்கல.

    ராமு கிட்ட இந்த வேல செய்றத பத்தி சொல்லல. வள்ளி மட்டும், "யப்பா என்னப்பா உன் மேல இப்படி நாத்தம் அடிக்குது. எங்க பொரண்டுட்டு வர" னு கேப்பா.
    "வேர்வ நாறுது, நான் போயி குளிச்சுட்டு வரேன்னு" வெளில கெளம்பிடுவான்.

    "ராமுவ இந்த வேலயெல்லாம் செய்ய விடக்கூடாது. நல்லா படிக்க வெக்கணும். பாவம் புள்ள நம்மள மாதிரி ஆயிடக் கூடாது" னு ஒப்பாரி வச்சான் முருகன் கிட்ட.

    வேற நல்ல வேலை ஒண்ணும் கெடைக்காததால மொதலியார் கடைல தெனம் ரெண்டு ரூவா கொடுத்து லாட்டரி வாங்குவான்.
    மொதலியார் ஒவ்வொரு தடவயும் "டேய் லாட்டரி கோவிந்தா, இருக்கர பாக்கிய கொடுத்துட்டு அப்பரம் லாட்டரி வாங்குவியோ, வெஷத்த வாங்குவியோ ஏதாவது பண்ணு. இனிமே இந்த பக்கம் வராதன்னு" சொல்லுவார்.

    கோவிந்தனும் சிரிச்சிட்டே "நாளிக்கு குடுத்துடரேன் மொதலியாரு. சீட்ட குடு நீ. நாளிக்கே பம்பர் அடிச்சுதுன்னா மொதல்ல உன் பாக்கி கொடுத்துட்டு தான் மறு வேல" - சொல்லிட்டு சீட்ட வாங்கிட்டு ஒடிடுவான்.

    லாட்டரி வாங்க ஆரம்பித்து 2 வருஷம் ஆச்சு. அதுல விட்ட காச வச்சு புது சொக்காவாவது வள்ளிக்கும் ராமுவுக்கும் வாங்கி கொடுத்துருக்கலாம்னு அப்பப்ப தோணும்.
    ஆனாலும், விக்ரமாதித்தன் மாதிரி தெனமும் லாட்டரி வாங்கரது ஒரு பழக்கமாயிடுச்சு.

    ----- 0 ----- 0 ----- 0 ----- 0 ----- 0 ----- 0

    மொதலியார் கடைக்கு நடக்க ஆரம்பிச்ச கோவிந்தன், "டேய் முருகா, 20 லட்சம்னா எவ்ளோ நூறு ரூபாடா? என்ன வேணா வாங்கலாம்ல?" - முருகனை பாத்து கேட்டான்.

    "கோவிந்தா. நல்லா கேட்டடா. நம்ம போஸ் ஒரு பழைய ஆட்டோ வாங்குணானுல்ல. அது 2 லட்சம்தான். அத மாதிரி 10 வாங்கலாம்டா. ஆட்டோ மொதலாளி ஆயிடலாம்டா நீ. ஹ்ம்ம் 18 வாங்கலாம். எனக்குதான் 2 லட்சம் தரேன்னியே" - அசடு வழிஞ்சான் முருகன்.

    "அடேங்கப்பா. இனி ஒரு கவலயும் இல்லங்கர. புள்ளையார் காப்பாத்திட்டான். டேய், உனக்கு 2 லட்சம் என்னடா என்ன வேணாலும் தரேன். ராமு, வள்ளி, உன் பசங்க எல்லாத்தையும் நல்ல ஸ்கூல்ல சேக்கணும்டா. என்னா சொல்ற" - இது கோவிந்தன் சொன்னது.
    முருகனுக்கும் இதக் கேட்டு சந்தோஷம் - "பண்ணிடலாம்டா கோவிந்தா" சொல்லிட்டே நடந்தான்.

    ----- 0 ----- 0 ----- 0 ----- 0 ----- 0 ----- 0

    மொதலியார் வழக்கம் போல் ஒரு பழைய வேட்டியில் இருந்தார். சட்டை அணியாமல் தொப்பையை தடவியபடி "என்னடா கோவிந்தா. காலைலியே வந்துட்ட. துட்டு கொண்டாந்தியா" - வழக்கம் போல கேட்டாரு.

    "மொதலியார், யார பாத்து இன்னா கேக்கர. நம்ம கோவிந்தன் நேத்து உன்னாண்ட வாங்கின லாட்டரி சீட்டுக்கு 20 லட்சம் விழுந்திருக்கு. கொஞ்சம் சரி பாத்து, எங்க காச வாங்கணும்னு சொல்லு" - மிரட்டல் கொரல்ல முருகன் கேட்டான்.

    இத கேட்ட மொதலியாரும் நம்ப முடியாம, கோவிந்தன் குடுத்த சீட்டையும் தினத் தந்தியையும் மாத்தி மாத்தி பாத்துட்டு கத்தினாரு - "கோவிந்தா அதிர்ஷ்டக்காரண்டா நீ. நெஜமாவே 20 லட்சம் அடிச்சிருக்குடா."

    கோவிந்தனுக்கு இத கேட்டதும் இன்னும் சந்தோஷம் ஜாஸ்தி ஆயிடுச்சு. "மொதலியார் காச எங்க போயி வாங்கணும். சீக்கரம் சொல்லுங்க. பணத்த வாங்கிட்டு மொதல்ல பசங்கள்ட போயி விஷயத்த சொல்லணும்" - இப்படி சொல்லிக்கொண்டே போனவன பாத்து, மொதலியார் "அவசரப் படாத, மொதல்ல லாட்டரி கம்பெனிக்கு போன் போட்டு பேசிடரேன்" சொல்லிக்கிட்டே போன் போட்டு மொதலியார் விவரத்த கேட்டாரு.

    போன் வச்சுட்டு "கோவிந்தா. சீட்ட கொண்டு போய் பக்கத்துல இந்தியன் பாங்க் இருக்குல்ல அங்க குடுத்தா, பிடித்தமெல்லாம் போக 18 லட்சத்தி 40 ஆயிரம் ரூபா கொடுபாங்களாம். எனக்கும் 20 ஆயிரம் ரூபாய், கமிஷன் இருக்காம். அத தபால்ல அப்பறமா அனுப்புவாங்களாம். நானும் உன் கூட வரேன். வா பாங்குக்கு போயிட்டு காச வாங்கி, உன் பேர்ல ஒரு சேமிப்பு கணக்கும் ஆரம்பிச்சு அதுல காச போட்டுருவோம். கையில அவ்ளோ காசு இருந்தா நல்லதுல்ல" - தனக்கு காசு வரப்போவுது னு தெரிஞ்ச குஷீல மொதலியாரும் உதவரதுக்கு துடிச்சாரு.

    கடையை சாத்தி விட்டு, பக்கத்துல இருந்த ஆட்டோவ மொதலியார் கூப்பிட்டு "பாங்க் போணும்பா" என்றார். கோவிந்தன், முருகன் ஏற வழிவிட்டு இவர் கடைசியா ஏறினார்.

    ----- 0 ----- 0 ----- 0 ----- 0 ----- 0 ----- 0

    வங்கிக்குள் செல்வதர்க்குள் சேதி பரவி கூட்டம் சேர்ந்துடுச்சு. "கோவிந்தா மச்சம் தாண்டா உனக்கு" இப்படி சொல்லி எல்லாரும் கை கொடுத்தாங்க. முதுகுல தட்டிக் கொடுத்தாங்க.

    ரத்தினம் மாமா, "லாட்டரி கோவிந்தா. நம்பள எல்லாம் மறந்துடாதப்பா" - இப்படிச் சொல்லி கோவிந்தனை கட்டிப்புடிச்சாரு.

    முருகன், கும்பலுக்கு நடூல வழி பண்ணி, கோவிந்தன பாங்க் மானேஜர் கிட்ட கூட்டிட்டு போனான்.
    மொதலியாரும் எழுத வேண்டியத எழுதி கொடுத்து லாட்டரி பணத்தை வாங்கி கோவிந்தன் பேரில் சேமிப்பு கணக்கு ஆரம்பிச்சு கொடுத்தாரு.
    மானேஜர் "இப்ப செலவுக்கு எவ்ளோ வேணும் சார்" என்று பவ்யமா கேட்டாரு.

    "1000 ரூபா கொடுங்க ஐயா" - வெளில கேக்காத மாதிரி கோவிந்தன் சொன்னான்.

    ----- 0 ----- 0 ----- 0 ----- 0 ----- 0 ----- 0

    1000 ரூபாயுடன், கோவிந்தனும், முருகனும் வெளியில் வந்தார்கள்.

    "மாப்ள, மொதல்ல கடைக்கு போயி, பசங்களுக்கு சாப்பிட ஏதாவது வாங்கறேன். வள்ளிக்கு நாயர் கடை போண்டானா உசுரு. ராமு பஸ் ஸ்டாண்ட் கிட்ட தான் எங்கயாவது குப்ப பொறுக்கிட்டிருப்பான், நீ போயி அவன தேடி வூட்டுக்கு கூட்டியாந்துடு. நானும் வீட்டுக்கு வந்துடறேன்" - கோவிந்தன் மட மடனு பேசிட்டே போனான்.
    "டேய், இந்தா 200 ரூபா. அப்படியே உன் பசங்களுக்கு ஏதாவது வாங்கிட்டு போ" முருகன் கிட்ட 200 ரூபாய நீட்டி கோவிந்தன் சொன்னான்.

    ----- 0 ----- 0 ----- 0 ----- 0 ----- 0 ----- 0

    ஓட்டமும் நடயுமாக நாயர் கடைக்கு வந்து 10 போண்டா வாங்கினான்.

    ராமைய்யா கடையில், வள்ளிக்கும், ராமுவுக்கும் புது டவுசர், பாவாடை வாங்கினான். இது நாள் வரை ரத்னம் மாமா கொடுத்த பழையது மட்டுமே போட்டுக் கொண்டிருக்கும் ராமுவையும் வள்ளியையும் நினைத்து ஒரு கணம் கண்ணில் நீர் கசிந்தது அவனுக்கு. "இனி ஒரு கஷ்டமும் இல்ல". இப்படி மனசுல நெனச்சுக்கிட்டே ராமைய்யா கிட்ட 150 ரூபா எடுத்து கொடுத்தான்.
    லாட்டரி விஷய்ம் தெரிஞ்ச ராமைய்யாவும் "என்னடா கோவிந்தா. உனக்கு ஒண்ணும் வாங்கலியா" ன்னு கேட்டாரு.
    "ஓ. எனக்கு அப்பறம் வாங்கிக்கறேன். மொதல்ல பசங்கள பாக்கணும்" என்று ஓட ஆரம்பிச்சான்.
    வழியில் பலூன்காரன் கிட்ட 10 பலூனும், கோமதி பாட்டிகிட்ட இரண்டு ஐஸ், தெரு ஓரத்தில் பம்பரம் விற்பவனிடம் பம்பரமும் வாங்கி மூச்சு வாங்க ஓடினான்.

    வள்ளி இரண்டு வாரத்துக்கு முன்னால, செருப்பு வேணும்னு கேட்டுச்சு. ஒரு செருப்பு 35 ரூபா கொடுத்த வாங்க முடில. அது ஞாபகம் வந்த ஒடன்ன, செருப்பு கடைய பாத்து அவசரமா ஓடினான். 100 ரூபாய்க்கு அழகா ஒரு செருப்பு வாங்கினான்.
    ராமுக்கு அப்படியே ஒண்ணு வாங்கினான்.

    எல்லாத்தையும் எடுத்துட்டு வீட்டுக்கு வந்த கோவிந்தன "யப்பா 20 லட்சமாப்பா?. எனக்கு என்னப்பா வாங்கின?" - ஆர்பாட்டம் பண்ணாங்க ராமுவும், வள்ளியும்.

    ரெண்டு பேரையும் ரெண்டு தோள்ள தூக்கி வச்சு ஆடினான் கோவிந்தன்.

    அங்க இருந்த முருகன் கிட்ட டவுஸர்ல இருந்த மிச்ச ரூபாயில் 300 ஐ எடுத்து கொடுத்திட்டு, "முருகா கடைக்கு போயி உன் பசங்களுக்கும் புது சொக்கா வாங்கி கொடு. கறிகாய் வாங்கி உன் பொண்டாட்டிய சமச்சு போட சொல்லு. நானும் என் பசங்களோட, பஸ் ஸ்டாண்ட் பக்கத்துல இருக்கர ஓட்டலுக்கு போயி சாப்பிடப் போறேன். நாளைக்கு காலேல வந்துடு. நாளிக்கு பாங்க் போய் உனக்கு 2 லட்சம் எடுத்து தரேன்" என்றான்.

    முருகன் "ஓ" னு அழ ஆரம்பிச்சுட்டான் இத கேட்ட ஒடன. "கோவிந்தா. சும்மா வெளயாட்டுக்கு தான் சொல்றேன்னு நெனச்சேண்டா" என்றான்.

    "டேய் முருகா. நீ எனக்கு பண்ண ஒத்தாசிக்கெல்லாம் முன்னாடி, 2 லட்சம் எல்லாம் என்னடா பெரிய பணம்" என்று கோவிந்தனும் அழுதான்.

    முருகன் போனதும், "ராமு, வள்ளி, ரெண்டு பேரும் சட்டுனு குளிச்சுட்டு புது சொக்கா போட்டுக்கங்க. சாப்பிட ஹோட்டலுக்கு போலாம்" என்றான்.

    இத கேட்டது ரெண்டு பேரும் சந்தோஷமா "டுர்ர்ர்ர்ர்" னு கற்பனை கார் ஓட்டி தெரு ஓர குழாய்க்கு குளிக்க ஓடினார்கள்.

    திடீர் சந்தோஷம் தந்த பதட்டம் இப்பதான் கொஞ்சம் கம்மியாச்சு கோவிந்தனுக்கு.

    "ஹப்பா, ஒரு நாள்ள என்னவெல்லாம் நடக்குது. புள்ளயாரே காப்பாத்திட்டப்பா" - இப்படி மனசுக்குள்ள நெனச்சு வீட்டுக்குள்ள இருந்த புள்ளயார் படத்தில் இருந்து விபூதி எடுத்து பட்டயாக பூசிக்கொண்டான்.

    குடிசைக்கு வெளியே வந்தான். வெளீல சூரியன் மறைய ஆரம்பிச்சு இருந்தது. அழகா தங்க நெறத்துல வானம் தக தகனு இருந்தது.

    கைத்துக் கட்டில்ல மெதுவா படுத்தான். காலேலேருந்து ஓடி ஆடின களைப்புல, கண்ணு ஒடனே சொருகி தூக்கம் வந்துடுச்சு.
    பசங்க வரதுக்குள்ள குட்டி தூக்கம் போடலாம்னு தூங்கினான்.

    "கோவிந்தா. டேய் கோவிந்தா. எலேய் எழுந்துருடா டேய்" என்று அலறிய குரல் கேட்டு பதறி எழுந்தான்.

    "டேய் பரதேசி. இன்னும் என்னடா தூங்கிக் கிட்டு இருக்கர ராஜா மாதிரி. காத்தால 8 மணி ஆச்சு. இன்னும் ஆள காணலியேனு பாத்தா, ஐயா இங்க தூங்கிக்கினு இருக்காரு. தூ. எழுந்து பொழப்ப பாருடா" என்று ரத்னம் மாமா சரமாரியா திட்டினாரு.
    ரத்னம் மாமா ஓட்டிட்டு வந்த குப்பை வண்டியின் நாத்தம் கொடலை பொரட்டியது.

    வீட்டுக்குள்ளே இருந்து வெளியில் வந்த ராமு, சுவத்துல மாட்டி இருந்த கோணிப்பை எடுத்து தோள்ள போட்டு "யப்பா. போய்டு வரேன். இன்னிக்கு பஸ் ஸ்டாண்ட் கிட்ட தான் சுத்திக்கினு இருப்பேன். இன்னிக்காவது லாட்டரி வாங்காம, வள்ளி பொண்ணுக்கு செருப்பு வாங்கினு வாப்பா" னு சொல்லிட்டு 'வேலைக்கு' கெளம்பிட்டான் ராமு.

    "யப்பா, இன்னிக்காவது செருப்பு வாங்கிட்டு வாப்பா" என்று உள்ளே இருந்த கிழிந்த பாவாடையுடன் வள்ளி வந்தா.

    வள்ளி யை பாத்ததும்தான் நிதர்ஸனம் உரைத்தது கோவிந்தனுக்கு. லாட்டரி, 20 லட்சம், புது சொக்கா, வள்ளிக்கு வாங்கிய செருப்பு, எல்லாம் வெறும் கனவு என்ற உண்மை புரிந்தது.

    கைகள் நடுங்கியது.

    "ஐயோ எல்லாமே கனவா. ஆண்டவா" என்று கூறிக் கொண்டு தலையில் அடித்து அழத் தொடங்கினான்.

    ஒன்றும் புரியாத வள்ளி, சற்று தள்ளி நின்று பயத்துடன் அவனுடன் சேர்ந்து அழுதாள்.

    ரத்தினம் மாமா குப்பை வண்டியுடன் காத்துக் கொண்டிருந்தார்.


    ----- 0 - முற்றும் - 0 ----- 0 ----- 0 ----- 0

    -BadNewsIndia

    Wednesday, November 01, 2006

    20. என்னை போன்ற பலரை உந்திய பாரதியார் கவிதை...



    பாரதியார் போல் இனி ஒரு கவிஞன் வரப் போவதில்லை.

    அவன் புலமை ஆகட்டும், புரட்சிக் கருத்துக்கள் ஆகட்டும், தன்நலம் தேடாத மனிதம் ஆகட்டும் - அவனை மிஞ்ச ஒரு மனிதன் இருந்ததும் இல்லை, இனி இருக்கப் போவதும் இல்லை.

    ஒவ்வொரு கவிதையும் படிப்பவர் உள்ளத்திலே ஒரு கிளர்ச்சியை உண்டு பண்ணும்.

    இனிய நடை, தேர்ந்த கற்பனை, கூரிய கருத்து, நல்ல சிந்தனை - இதை எல்லாம் போட்டு, கலந்து கொடுத்த ஒவ்வொரு படைப்பும் திகட்டாத இன்பம்.

    பாரதியார் கவிதைகளை ஆராய/விமர்சிக்க எனக்குத் தகுதி கிடையாது.

    அவன் எழுதிய இந்தக் கவிதை என்னை போலே பலருக்கு ஒரு உந்துதல் கொடுத்து, routine-life ல் இருந்து சற்றே வெளியில் வந்து பொது நல சிந்தனை வேண்டும் என்று நினைவு படுத்தியது. ஏதாவது உருப்படியா செய்யலாமே என்று எண்ண வைத்தது.

    அந்த அற்புதப் படைப்பு இதோ.

    ------ . ------ . ------ . ------ . ------ . ------
    தேடிச் சோறு நிதந்தின்று
    பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
    மனம் வாடித் துன்பம் மிக உழன்று
    பிறர் வாடப் பல செயல்கள் செய்து
    நரை கூடி கிழப் பருவமெய்தி
    கொடுங் கூற்றுக்கிரையெனப் பின் மாயும்
    பல வேடிக்கை மனிதரைப் போலே
    நான் வீழ்வேனென்று நினைத்தாயோ
    ...
    இனி புதியதோர் உயிர் கொண்டு
    மதி தன்னை தெளிவாக்கி
    என்றும் சந்தோஷம் கொண்டிருக்க செய்வாய் !!!
    என்றும் சந்தோஷம் கொண்டிருக்க செய்வாய் !!!
    ------ . ------ . ------ . ------ . ------ . ------

    உங்களையும் உந்தி இருக்கும் என்று நினைக்கிறேன் (ஏற்கனவே உந்தப்படாமல் இருந்திருந்தால்).

    இதை ஒரு படத்தில் திரு. கமல்ஹாசன் படிப்பது போல் ஒரு காட்சி வரும். மிக அருமை.

    எல்லா பாரதியார் கவிதைகளும் ஒலித் தட்டுகளாக வந்தால் நன்றாக இருக்கும். பாடல்களாக இல்லாமல், பாரதியின் மன ஓட்டம் என்னவாயிருந்திருக்கும் என்று உணர்ந்து அந்த கவிதைகளை கமல் மாதிரி ஆட்கள் யாராவது வாசித்துப் பதிய வேண்டும்.

    பாரதிராஜா, கமல், மனோகர்,ஹெரான் ராமசுவாமி, கீரன், வைரமுத்து - இவர்களில் யாராவது இதை செய்தால் நன்றாய் இருக்கும்/இருந்திருக்கும். ( ஹெரான், கீரன், மனொகர் இப்பொழுது இல்லை)

    வேறு யார் படித்தால் நல்லா இருக்கும்?

    எஸ்.கே மாதிரி யாராவது ஏற்பாடு பண்ணுங்களேன் சார் :)

    Tuesday, October 31, 2006

    இலங்கை பிரச்சனை காஷ்மீர் பிரச்சனை - சரியா தப்பா?





    (repost due to technical difficulties)

    இது என் புரிதலுக்காகவும், தெளிவாக இல்லாத மற்ற சிலருக்கும் உதவும் என்ற எண்ணத்தில் கேட்க்கப்படும் கேள்வி.

    1) காஷ்மீர் பிரச்சனை - தனி நாடு வேண்டும் என்று, இந்திய அரசை விரும்பாத ஒரு கூட்டம் தொடுக்கும் போராட்டம். ( மதம் சம்பந்தப்பட்டது? )

    2) இலங்கை பிரச்சனை - தனி நாடு வேண்டும் என்று, சிங்கள அரசை விரும்பாத ஈழத் தமிழர்கள் தொடுக்கும் போராட்டம். ( இனம் சம்பந்தப்பட்டது? )

    இந்திய/தமிழ் மக்களாகிய நம் கண்ணோட்டத்தில்:

    காஷ்மீர் போராட்டம் - சரியா/தவறா - ஏன் ?
    இலங்கை போராட்டம் - சரியா/தவறா - ஏன் ?

    உங்கள் நிலையை கூறுங்களேன், சில வரிகளில்.

    உங்களுக்கு தெரியாதென்றால், 'தெரியாது' என்று comments கொடுங்கள்.
    உங்களுக்கு அக்கரை இல்லை என்றால், 'dont care' என்று comments கொடுங்கள்.

    நன்றி! நன்றி! நன்றி!

    இலங்கை vs காஷ்மீர் - வித்யாசங்கள் என்ன?

    இந்த பதிவை பார்க்கவும். reposted due to tech. glitches.

    Monday, October 30, 2006

    அட, இதைத்தானே எதிர்பார்க்கிறேன்! கலக்கு ராசா!!!



    பொளாச்சியில் உள்ள திருமூர்த்தி அணை யின் அருகே காடு வளர்ப்புத் திட்டத்தின் கீழ் 1975 ஆம் ஆண்டு 1000 மரங்களை நட்டார்களாம்.

    பசுமை படர்வதர்க்கும், அணையின் உறுதிக்கும் இந்த திட்டம் நல்ல விதத்தில் உதவி வருகிறது.

    31 வருடங்களுக்கு பிறகு இப்பொழுது, பொள்ளாச்சி வனலாகாவினர், இந்த மரங்களை வெட்டுவதர்க்கு அனுமதி அளித்துள்ளனராம்.
    அதுவும் 30 லட்சம் பெறுமானம் உள்ள மரங்களை வெறும் 3.68 லட்சத்திர்க்கு விற்றுள்ளனராம்.

    இந்தக் கொடுமையை பார்த்து, நம்மில் சிலரைப் போல் 'அச்சச்சோ' என்று உச்சு கொட்டி அடுத்த வேலயை பார்க்காமல், வி.சதீஷ் என்ற சட்டக்கல்லூரி மாணவன் இதை எதிர்திருக்கிறானாம்.

    எதிர்த்ததோடு நின்று விடாமல் நீதி மன்றத்தில் ஒரு பொது நல வழக்கையும் தொடர்ந்து, அந்த contract க்கு 'தடை உத்தரவு' வாங்கி விட்டானாம்.

    காடும் பிழைத்தது. பல லட்சமும் தப்பியது.

    நன்றி: இந்து நாளிதழ்.




    வி.சதீஷுக்கு வாழ்த்துக்கள்!!! You are setting a great example Sathish! Hats off to you!

    Saturday, October 28, 2006

    மனிதர்களா நாமெல்லாம்? தூ !!!

    தூ

    இன்று இணையத்தில் கண்ட ஒரு புகைப்படம் மனதை வாட்டி எடுத்தது.

    ஒரு பாட்டி மனித கழிப்பை சுத்தம் செய்வதும், ஒரு வாட்ட சாட்டமான இளைஞன் இடுப்பளவு கழிவு நீரில் நின்று கொண்டு சுத்தம் செய்வதை காட்டும் புகைப்படங்கள்.

    இதர்க்கு முன் பல பதிவுகளில் நான் சொன்னது போல் மனித கழிவை சுத்தம் செய்வது என்பது ஒன்றும் மட்டமான வேலை கிடையாது. ஒரு நர்ஸ் செய்வது போலத்தான் இந்த வேலையும்.

    (ராஜ தந்திரம் செய்து, இந்த வேலையை ஒடுக்கப்பட்டவர்களை மட்டுமே இது நாள் வரையில் செய்ய வைத்துக் கொண்டிருப்பதாக பலர் எழுதப் படித்திருக்கிறேன்.
    அது வேறு பல பதிவுகளில் விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள். இங்கே அதை சொல்ல வரல.)

    மனித கழிவை சுத்தப்படுத்தும் வேலை செய்வது ஒடுக்கப்பட்டவனோ இல்லை 'உயர்' ஜாதிக்காரனோ, அதை விடுங்கள். யாராவது செஞ்சுதான ஆவணும். என்ன இயந்திரம் வந்தாலும், மனிதனின் தயவு இல்லாமல் எந்த வேலையும் நடக்காது.

    ஆனால், 2006 ஆம் வருடமாகிய இன்று,
    20000 கோடிகள் செலவு செய்து மனிதனை விண்வெளிக்கு அனுப்பலாமா என்று அரசு யோசிக்கிறது;
    20 லட்சம் தொலைக்காட்ச்சி பெட்டிகள் இலவசமாக தரப்படுகிறது;
    கோடானு கோடிகள் சும்மா பெட்டிகளில் வைத்து பூட்டிக் கிடக்கிறது அரசியல் வாதிகளிடம்;
    பஸ்ரா ஏவுகணை, மிக் விமானம் வாங்கும்போது கோடிகள் பல லஞ்சமாக கைமாறுது;
    நகரங்களில் அரசுக்கு ஒவ்வொருவனும் பல்லாயிரங்கள் வரி செல்லுத்துகிறான்.

    ஆனால், இன்னமும் கழிப்பறைகள் ஒரு வசதியும் இல்லாமலா கட்டப்படுகிறது? flush வசதி கூட வேண்டாம், ஆனால் ஒரு septic tank கட்டி கழிவு சேர்வதர்க்கு வகை செய்ய முடியாதா என்ன?

    படத்தில் உள்ளது "திருநெல்வேலி தச்ச்நல்லூர் வார்டு மூளிக்குளம் பெண்கள் கழிப்பிடம்".

    எவன் அந்த மாநகராட்சிக்கு தலைவன்? எவ்வளவு budget போட்டான் இதைக் கட்ட? கழிப்பிடத்தின் அருகில் ஒரு septic தொட்டி கட்ட பணமில்லையா, மனமில்லையா? இல்லை பணம் செலவு செய்த மாதிரி கணக்கு காண்பித்து, அவன் வீட்டிர்க்கு டி.வி வாங்கிக் கொண்டானா? இல்லை இதெல்லாம் எதர்க்கு என்ற ஒரு சின்ன அறிவு கூட அவனுக்கு இல்லையா? சபிக்கிறேன் அவனை!!

    A/C ல் அமர்ந்து 'routine work' செய்ய வரும் நம்மில் சிலருக்கு, காலை எழும் போதே "என்னடா வேலை இது என்று, அலுப்பாக இருக்கும்".

    பாவம் அந்த வயதான பாட்டி தினம் தினம் கழிவை கூடையில் அள்ளும் இந்த வேலையை செய்கிறாளே. ஒவ்வொரு நாள் காலையில் எழுந்திருக்கும் போதும் எப்படி இருக்கும் அவளுக்கு? உணவு உண்ண முடியுமா அவளால்? சந்தோஷம்னா என்னன்னு இல்ல கேப்பாங்க.
    அந்த இளைஞன் வாழ்க்கையை நினைத்துப் பாருங்கள். அவனுக்கு குழந்தைகள், மனைவி இருப்பார்களே. ஒவ்வொரு நாளும் வேதனை இல்லையா அவனுக்கு?

    கொடுமை இல்லையா இதெல்லாம். இன்னும் இது மாதிரி எவ்வளவு இடங்கள் இருக்கோ?
    60 வருஷம் ஆச்சு, நாம் நமது சொந்தக் காலில் நின்று.
    ஒரு கும்பல் காரென்ன, பைக்கென்ன, கலர் டி.வி, fridge, A/C, flight, disco, foreign tour என்று குதூகலித்துக் கொண்டிருக்க, இன்னொரு கும்பல் கழிவில் குளித்து வாழ்க்கை வாழ்கிறார்கள்.

    கேவலமாயில்லை நமக்கு இது? தூ !!!

    நல்ல நிலையில் இருக்கிறாயா? ஒடுக்கப்பட்டவன் ஒருவனுக்காவது உதவு.
    இல்லயேல் நாற்றம் அடிக்கட்டும், நீ ஒவ்வொரு நாளும் உண்ணும் உணவு!!!



    பி.கு: திருநெல்வேலியில் இருப்பவர்கள், அந்த மாநகராட்சி தலைவரை பார்த்து ஒழுங்காக ஏதாவது செய்ய சொல்லலாமே? பணம் இல்லை என்றால் தெரியப்படுத்த சொல்லுங்கள். இங்கிருந்தே பலரும் கொடுப்பார்கள்.
    இந்த மாதிரி வேறெங்கு இருக்கிறதோ, அதை highlight செய்து பதிவுகள் போடுங்கள்!
    சும்மா பேசிட்டிருந்தா காரியம் நடக்காது தம்பி!

    Friday, October 27, 2006

    அவசர சந்திப்பு - கருணாநிதி, ஜெயலலிதா, விஜயகாந்த், வை...



    உளவுத் துறையில் இருக்கும் நண்பர் ஒருவரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு.
    அவர் சொன்ன விஷயம் கேட்டு பயங்கரமான ஆச்சரியம் எனக்கு. அவரை உடனே புறப்பட்டு என் வீட்டுக்கு வரச் சொன்னேன்.
    "ஆமா, சோனியா அதுக்கு என்ன சொன்னாங்க" என்றேன்.

    "ok. Mr. Karunandhi. I respect your decision and my support will always be there for you. Your plans when established will stand as a good example for others. I know you are a poet, but your imagination and creativity has reached new proportions. Make sure you provide Vasaaan what we agreed earlier. Once you finish your meeting with your folks, meet me and Mr.Singh on Sunday evening at my place. Don't bring Maran with you." இதுதான் அவங்க அனுப்பின fax ல இருந்தது.

    "அட, கருணாநிதி சொன்ன மாதிரி மீட்டிங் எற்பாடு பண்ணி பேசிட்டாரா" என்ற என் கேள்விக்கு.
    "எல்லாம் முடிச்சாச்சு. இதுவரை உலக அரசியல்லயே நடக்காத உன்னத விஷயமிது. நடந்தத கவனமா சொல்றேன் கேளு" என்று ஒரு நாவலில் வருவதை போல எல்லாத்தையும் சொல்ல ஆரம்பித்தார் நண்பர்.

    ---- o ---- o ---- o ---- o ---- o ---- o ---- o ----


    மகாபலிபுரம் செல்லும் வழியில் கடலோரத்தில் சவுக்கு தோப்பின் அடர்த்திக்குள் வெளியில் இருந்து பார்த்தால் தெரியாத ஒரு பெரிய கட்டிடம்.
    உள்ளே வெள்ளை நிற அம்பாஸிடர் கார்கள் பல வரிசையாக இல்லாமல் அவசரத்துக்கு பார்க் செய்தது போல் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்தது.
    மேல் மாடியில் ஒரு பெரிய round-table ஐ சுற்றி வெள்ளைச் சட்டைக் காரர்கள் பலர் அமர்ந்திருந்து கோப்புகளை புரட்டிக் கொண்டிருந்தார்கள்.
    மேசையை சுற்றிய, இருக்கையில் கருணாநிதியும் அவரருகில் அன்பழகனும் இருக்க, அவர்களுக்கு பின்னால் மாறனும், ஸ்டாலினும் பவ்யமாக நின்றிருந்தார்கள்.
    வைகோ அடுத்தும், அதற்கடுத்து ராமதாஸும் இருந்தார்கள். ராமதாசுக்கு பின்னால் அன்புமணி பவ்யமாக நின்றிருந்தார். அவ்வப்பொழுது தொலைபேசியில் "வேணுகோபால், வேணுகோபால்" என்று ஏதோ பேசிக்கொண்டிருந்தார்.
    அதனை அடுத்த இருக்கையில் விஜயகாந்த் வழக்கத்து மாறாக கோட் ஸூட்டில் வந்திருந்தார்.
    "ஏசி கூட்டி வைங்கப்பா. புழுங்குது" என்று அங்கிருந்த IAS அதிகாரியிடம் கட்டளை இட்டுக் கொண்டிருந்தார்.
    IAS உம் "shooting முடிச்சுட்டு dress change பண்ணாம யாரு வரச் சொன்னா" என்று முனகிக் கொண்டே ஏசி யை கூட்டினார்"
    திருமாவளவன், விஜயகாந்துக்கு அருகே அமர்ந்து கொண்டு "ஒரு படத்துல எவ்வளவு லாபம் கெடைக்கும்? நம்ப மச்சினனுக்கு உங்க படத்துல ஒரு வேஷம் கெடைக்குமான்னு பாருங்களேன். அப்படியே என் ஒண்ணு விட்ட சித்தப்பு பையனுக்கு உங்க கட்சில ஒரு எடம்" என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
    தொல்லை தாங்காமல் விஜயகாந்த் ஒரு இருக்கை தள்ளி பிஜேபி கணேசனின் அருகில் அமர்ந்தார்.
    அறையின் உள்ளே அவசர அவசரமாக நுழைந்த கி.வீரமணி "தலைவரே, எதுக்கு உடனே புறப்பட்டு வான்னு SMS அனுப்பனீங்க, அதுவும் emergency mahal க்கு" என்று கேட்டவாரே உள்ளே நுழைந்தவர் சுற்றி அமர்ந்திருக்கும் எல்லோரையும் பார்த்தவுடன் அவசரமாக நெற்றியில் இருக்கும் விபூதியை அழித்தார். கருணாநிதியின் அருகில் அமர்ந்து "எல்லாரும் இருக்காங்க உஷார்னு ஒரு SMS அனுப்பக் கூடாதா? நம்ப மட்டும் தான்னு நெனச்சு வர வழில சிவன் கோயிலுக்கு போய் அர்ச்சன பண்ணி சுண்டல் கொண்டு வந்துட்டேன்" என்று அசடினார்.
    அதைப் பார்த்து வைகோ இளித்துக் கொண்டிருந்தார்.

    பொறுமை இழந்த விஜயகாந்த் "Mr. கலைஞர் என்ன விஷயம்? மீட்டிங் எப்போ ஆரம்பிக்க போறீங்க? ஷூட்டிங் இருக்குய்யா. நமிதா வெயில் தாங்க முடியலண்ணு வேற சொல்லிச்சு. சீக்கிரம் விஷயத்துக்கு வாங்க'' என்றார்.

    கருணாநிதி: வைகோ தம்பி, உங்க மேடத்துக்கு SMS அனுப்பி ரொம்ப நேரம் ஆவுது. எங்கப்பா அவங்க கூப்பிட்டு கேளு.
    வைகொ: இப்பத்தான் பேசினேன். வந்துட்டே இருக்காங்க. cell phone range இல்லியாம் போயஸ் தோட்டத்துல. ஆளும் கட்சி சதி னு சொல்லிட்டு இருந்தாங்க. வர வழில சசி மேடம பிக்-அப் பண்ணிட்டு வராங்க, அதுதான் லேட்டு. வந்துருவாங்க.
    ராமதாஸ்: (வைகோவின் காதருகே) என்ன மாட்டரா இருக்கும்? இது நாள் வரைக்கும் எல்லாரையும் இப்படி ஒண்ணா கூப்புட்டதே இல்லியே? சிக்கன் குனியா ஒழிப்புக் கூட்டமா?

    அதர்க்குள் வாசலில் ஏதோ பரபரப்பு. சைரன் சத்தம் ஒலிக்க 10 கார் புடை சூழ ஜெயலலிதாவும், சசிகலாவும் வந்து சேர்ந்தனர்.
    சசிகலா நொண்டி நொண்டி வருவதை கண்ட கருணாநிதி. "என்ன சகோதரி. ஏன் நொண்டறீங்க" என்று கிண்டலடித்தார்?

    "எல்லாம் உங்க ஆட்சியின் அஜாக்ரதை தான். கொசு அடிக்க தெரியல உங்களுக்கு. சசிக்கு சிக்குன் குனியா வந்து பாடா படுத்துது" என்று உடனே பதிலடித்தார் ஜெயலலிதா.

    சிக்குன் குனியா என்றதும், அன்புமணியும், மாறனும் round-table அடியிலே டகால் என்று பதுங்கி மூக்கை கைக்குட்டையால் கட்டிக் கொண்டார்கள்.

    "மானத்த வாங்காதடா மவனே" என்று அன்புமணியின் காதை பிடித்து வெளியே இழுத்தார் ராமதாஸ்.

    "Uncle நான் கொஞ்சம் urgentaa வெளில போணும். Zimbabwe யில இருந்து மந்திரி வராரு. 10 ஏக்கர் வேணுமாம் என்னமோ பண்ண. போயிட்டு வந்துடவா" என்று முகமூடியுடன் எழுந்து நின்று மாறன் கெஞ்சினார்.

    "உக்காருடா தயா. சசிய கடிச்ச கொசு பறந்து நம்பள கடிக்கறதுக்குள்ள, அவங்க சென்ட் வாசனையிலேயே செத்து போயிரும். பதறாம உக்காரு" என்றார் கருணாநிதி.

    சசியும், ஜெயாவும் கருணாநிதியின் நேரெதிரே அமர்ந்தார்கள்.
    "பங்களா புதுசா இருக்கு. யாரு பேருல இருக்கு பாரு. கருணாநிதி பேர்லன்னா சொத்து குவிப்பு வழக்கு ஒண்ணு புதுசா போடலாம்" என்று சசி ஜெயலலிதாவின் காதை கடித்தார்.

    "சசியம்மா, இது கட்சியின் சொத்தம்மா.
    இதை வாங்க எனக்கேது பணமம்மா?
    சொத்து பல வாங்கினது ஜெயாம்மா
    ஊர காத்து நிற்பதே என் விருப்பமம்மா
    "
    என்றார் கருணாநிதி.
    "வாரே வா" என்று விசிலடித்த திருமாவை, அமரச் சொல்லி கேட்டுக் கொண்டார் அன்பழகன்.

    "லூசு பெண்ணே லூசு பெண்ணே" என்று cell phone சிணுங்க அதை எடுத்து பேசினார் கணேசன்.
    அது வரை அமைதியாயிருந்த பிஜேபி கணேசன் சட்டென்று எழுந்து, "எனக்கு நேரம் ஆகுது. தாம்பரத்துல ஜவுளி கடை தொறக்க வரேன்னு சொல்லி இருக்கேன். சீக்கிரம் சொல்லுங்க சொல்ல வந்தத. 4 மணினு SMS ல இருக்கு. 6 மணி ஆச்சு" என்று அங்கலாய்த்தார்.

    "பொறு கணேசன் சார். பாற்கடலை கடையும் போது அந்த கணபதியே பொறுத்தான். உனக்கென்ன அவசரம் கணேசா" என்றார்.
    "உவமை எல்லாம் தப்பு தப்பா சொல்றீங்க" என்று அன்பழகன் காதை கடித்தார்.

    தொண்டையை adjust பண்ணியபடி கருணாநிதி பேச ஆரம்பிக்க எல்லாரும் அமைதியாக கேட்க ஆரம்பித்தனர்.










    ..தொடரும்..

    பிகு: ஊரைத் திருத்த கருணாநிதி கூட்டிய meeting ல் இருந்து மற்ற விஷயங்கள், கூடிய விரைவில்.
    (சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே. ofcourse :) Friday ஆச்சே, lightaa கொடுக்கலாம் என்று எண்ணியதால் இப்படி. கருணாநிதியின் ஆக்க திட்டங்கள் அடுத்த பதிவில் தொடரும்.)

    -BNI

    Thursday, October 26, 2006

    என் பேரு நந்தினி. நான் மேலே போயிட்டேன்!!


    மெத்தனத்தால் உயிரிழந்தவள்
    நந்தினி என்ற 4 வயது DAV பள்ளிக் குழந்தை சுற்றுலா சென்ற இடத்தில் ஆசிரிய/அதிகாரிகளின் கவனக் குறைவால், பாசி படர்ந்த தண்ணீர் தொட்டியில் மூழ்கி, இறந்து போன செய்தி ப்ளாகில் படித்து மனது மிகவும் வேதனை அடைந்தது.

    சபாபதி சரவணன் இதைப்பற்றி எழுதியது இங்கே - இதோ மற்றொரு குழந்தை நமது வன்முறைக்கு பலியாகிவிட்டது

    Accidents can happen and sometimes cannot be prevented என்றாலும், 4 வயது குழந்தைகளை அழைத்துச் செல்லும் போது 100 மடங்கு அதிகமான கவனம் இருக்க வேண்டாமா?

    பெற்றோர்களின் வலி, இனி அவர்கள் மரிக்கும் வரை தீருமா? எவ்வளவு எவ்வளவு கனவுகள் இருந்திருக்கும்?

    விபத்து நடந்த இடத்தில் இருந்த தண்ணீர் திடலை சுற்றி காப்பு சுவர் கட்டப்படாமல் இருந்ததே இந்த துயரம் நடக்கக் காரணம்.
    அந்தத் தண்ணீர் திடலை தடுப்பு சுவர் இல்லாமல் கட்ட ஒப்புதல் அளித்தவனை என்ன செய்வது?
    குழந்தை இறந்த செய்தி அறிந்து அவன் மனம் வருந்தி இருந்திருக்குமா? அல்லது இந்த மாதிரி பல அவலங்கள் செய்தும் அதனால் ஏற்பட்ட பல கெட்ட விஷயங்களை அறிந்தும் மறத்துப் போயிருப்பானா அந்த ஜடம்? என்னதான் செய்வது இந்த உதவாக்கரைகளை?

    இப்பொழுதைக்கு என்னால் முடிந்தது, அந்த பெற்றோரின் துயரத்தில் பங்கு எடுத்துக்கொள்வது தான்.

    ஆனால், அதனால் ஒன்றும் மாறப் போவதில்லையே?

    இந்த பெரும் துயரத்திர்க்கு பல விதிகளை மீறி முதல் வடிவம் கொடுத்த பள்ளி நிர்வாகத்திர்க்கு சூடாக நம் வேதனையையும் கோபத்தையும் சொன்னால் அடுத்த சுற்றுலா செல்லும் போதாவது கவனமாக இருப்பார்கள் இல்லையா? இனியும் ஒரு நந்தினியை DAV ல் இருந்து இழக்க வேண்டாமே?

    இதோ அவர்கள் முகவரி. ஒரு 4 ரூபாய் செலவு செய்து தபாலோ, தந்தியோ கொடுங்கள்
    "நிர்வாகமே. குழந்தைகளைக் கொல்லாதே. ஒரு நந்தினி பலி கொண்டது போதும். இனியாவது ஒழுங்காயிரு!" என்று

    DAV Matriculation Higher Secondary School,
    25 Lloyds Road Gopalapuram,
    Chennai 600086
    Phone: 28351988

    நான் செய்துவிட்டேன். நீங்கள் ?

    தகவலுக்கு நன்றி: சபாபதி சரவணன்.

    பி.கு: அண்ணா நகர் டவரில் உள்ள பூங்காவிர்க்கு குழந்தை நந்தினியின் பெயர் வைக்கவும் சொல்லலாம். அங்கு வேலை செய்பவர்களுக்கும் வருபவர்களுக்கும் அது இந்த சம்பவத்தை நினைவு படுத்தும்.

    Wednesday, October 25, 2006

    BadNewsIndia விலிருந்து ஒரு GOOD NEWS!



    BadNewsIndia என்று பெயர் வைத்துக்கொண்டு நம்மை சுற்றி நடக்கும், நாட்டின் முன்னேற்றத்தை குலைக்கும், சில பல கெட்ட நிகழ்வுகளை சுட்டிக்காட்டவே விரும்பினேன்.

    என் சில பதிவுகளை கண்ட நண்பர்கள், "BadNewsIndia னு பேர் வச்சுக்கிட்டு சில நல்ல விஷயங்கள் சொல்றீங்களே, பேசாம GoodNewsIndia னு பேர் வச்சுக்கோங்களேன்" என்று அட்வைஸினார்கள்.

    நான் இங்கு சொல்வது சின்ன சின்ன அறிவுரைகள்தான். ஆனால், உண்மையாகவே நம் நாட்டில் நடக்கும் நல்ல விஷயங்களை தொகுத்து வழங்கும் உன்னத பணியை சென்னையை சேர்ந்த நண்பர் டி.வி.ஸ்ரீதரன் செய்து வருகிறார்.

    http://www.goodnewsindia.com என்று பெயரிட்ட தளத்தில் அவரது motto வாக
    "News from India : of positive action, steely endeavour and quiet triumphs ~ news that is little known" என்று கூறி நண்பர் ஸ்ரீதரன் 6 வருடங்களுக்கு மேலாக இந்த மேலாய பணியை ஒரு பிரதிபலனும் எதிர் பார்க்காமல், அவரது சொந்த செலவிலேயே செய்து வருகிறார்.

    அவர் ஆற்றி வரும் பணிகளை பார்க்கும் போது நாம் எல்லாம் எம்மாத்திரம் என்றுதான் தோன்றுகிறது.

    பல ஊர்களுக்குச் சென்று real Heroes தேடிக் கண்டு பிடித்து, அதை அவர் பதிவுகளில் அழகாக சேர்க்கிறார். இதை இவ்வளவு வருடங்கள் படித்து motivate ஆனவர்கள் பல பேர்.

    பொது நல சேவை செய்கிறேன் என்று சொல்வது சுலபம். களத்தில் இறங்கினால் தான் அதர்க்கு எவ்வளவு பொறுமையும், நிதானமும் தேவை என்பது புலப்படும்.

    சும்மா ஒரு சின்ன circular (என் பதிவு: "ஊரை திருத்தலாம் வாங்க நண்பரே! ஒரு simple idea" பாருங்கள்) 100 பேர் வாழும் தெருவில் விநியோகிப்பதர்க்கே மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கி ஒரு நாள் முழுவதும், கொஞ்சம் சொந்தப் பணமும் செலவானது. , ஏன் ஆரம்பித்தோம் இதை என்ற தளர்ச்சியும் கூடவே.

    ஸ்ரீரீதரன் பல மைல்கள் பயணம் செய்து தேடித் தேடி நம் கிரமாங்களை முன்னேற்றும் இளைஞர்களையும், நாட்டை மேம்படுத்தும் புனிதர்களையும் அவர்கள் பணியையும் நமக்கு எடுத்துக் காட்டி ஒரு positive air படரச் செய்ய எவ்வளவு சிரமங்கள் இருக்கும் என்பது field ல் இறங்கினால்தான் தெரியும் நண்பர்களே.

    anyway, GoodNews சொல்வதர்க்கு Mr.ஸ்ரீரீதரன் போதும். அவரின் ஆக்கங்களை படித்து ஆதரவளியுங்கள் அவருக்கு.

    btw, Mr.ஸ்ரீதரன் 64 வயது இளைஞர் என்பதை சொல்ல மறந்துவிட்டேன்!!

    பல கட்சிகள் சேர்ந்து சுரண்டியும், வஞ்சித்தும் இன்னும் சொமாலியா போல் வீழாமல் நம் நாடு இருப்பதர்க்கு காரணம், இவர் போல் பொதுநலம் கருதும் தோழர்களால்தான்.



    Sridharan, Hats Off to you Sir!!!

    Tuesday, October 24, 2006

    ஏற்றிவிடய்யா! வேண்டாம் இனி திராவிட,பார்ப்பன விவாதங்கள்!!!







    ஜயராமன் என்பவர் "திராவிடம் என்ற திராவகத்தின் விளைவு" என்று ஏதோ ஒரு பதிவில் பின்னூட்டமாக இட்டிருந்ததை copy அடித்து வைத்திருந்தேன். நல்ல ஆக்கம் என்று தோன்றியதால் இங்கே பதிகிறேன்.
    ஜயராமன் சொல்வதை போல, நமது இரு திராவிட கட்சிகளும் வருமை கோட்டுக்கு கீழே இருப்பவனை மேலே கொண்டு வரவே இல்லை.

    இனியும் கொண்டு வராது!!

    இது உங்களுக்கும் தெரியும், எனக்கும் தெரியும்.

    ஒரு சாதாரண business செய்பவன் கூட, ஒரு வருடமோ, இரண்டு வருடமோ லாபம் ஈட்டவில்லை என்றால், கடையை மூடிவிட்டு கிளம்பி விடுவான்.

    ஆனால் நம் அரசியல் மேதைகள், 60 வருடங்களுக்கும் மேலாக administration தெரியாமல், பிரிவினையையும், ஊழலையும் பெருக்கி நாட்டை பாதாளத்திர்க்கு அழைத்துச் சென்றாலும், எந்த ஒரு பாதிப்பும் சொரணையும் இன்றி கிடக்கிறார்கள்.

    இதை எல்லாம் நன்கு உணர்ந்த படித்த சிலரும், பார்ப்பன / திராவிட வீண் விவாதம் செய்து அவன் biased, இவன் biased என்று நேரம் விரயம் செய்கிறார்கள்.

    இது வரை இருந்த அரசியல் மேதைகள் எப்படியோ இருந்து விட்டுப் போகட்டும். காலம் அவர்களுக்கு தகுந்த கூலி தரும். யோசித்துப் பாருங்கள், நம்பியவர்களை வஞ்சித்தவர்கள் எங்காவது வாழ்ந்த சரித்திரம் உண்டா?

    இனி என்ன செய்தால், அடுத்த வேளை சோற்றிர்க்கு கஷ்ட்டப்படும் நம் சகோதரர்களுக்கு வழி பிறக்கும்?
    என்ன செய்தால் சுகாதாரமற்று கிடக்கும் நம் தெருக்கள் சுத்தமாகும்?
    என்ன செய்தால் 5 வயதிலேயே வேலைக்குச் செல்லாமல் நம் குழந்தைகள் அனைவரும் ஆரம்ப நிலை கல்வி யாவது படிக்கும் வசதி கிட்டும்?
    என்ன செய்தால் சாலை வசதியும், தண்ணீரும், மற்ற basic வசதிகளும் கிட்டும்?
    என்ன செய்தால் நம் மக்களுக்கு சுய மரியாதையும் சுய புத்தியும் திரும்ப வரும்?

    சும்மா எழுத்தில் மட்டும் இல்லாமல், ஆக்க பூர்வமாக எப்படி, என்ன, எங்கே, என்று, அவர்களை கரை ஏற்றுவது?

    என்னை கேட்டால், உங்கள் வட்டத்தில் இருக்கும் 'கைவிடப்பட்ட சகோதரர்களை' உங்களால் முடிந்த வரை முயற்சி செய்து ஏற்றிவிடுங்கள். அவர்கள் பிள்ளைகள் படிக்க உதவுங்கள். ஊழலுக்கு துணை போகாதீர்கள்.

    A/C ல் அமர்ந்து கொண்டு, பொழுது போவதர்க்காக, கோர்வை தமிழில் எழுதினால் மட்டும் போதாது நண்பர்களே.
    முடிந்தவர்கள் களம் இறங்கி field-work செய்ய வேண்டும். முடியாதவர்கள், field-work செய்பவர்களுக்கு முடிந்த உதவி செய்ய வேண்டும்.

    வலைப்பதிவர்கள் கூடி உண்மையான தொண்டு செய்ய வேண்டும்.

    கண் மூடி திறக்கும் முன், உங்களுக்கு நரை கூடி தளர்ச்சி சேர்ந்து விடும். இளமை இருக்கும் பொழுதே முடிந்தவரை அடுத்தவர்களுக்கு உதவுங்கள். சும்மா படிக்கும் போது ரோஷம் வந்து விட்டு, படித்து முடித்தவுடன் சீரியல் பார்க்க கிளம்பி விடாதீர்கள்.

    என்னால் எழுத மட்டும் தாங்க முடியும் என்று நினைப்பவர்கள், பிரிவினை எழுதாதீர்கள், தேவையானதை மட்டும் எழுதுங்கள்! atleast, உங்களையாவது மாற்றிக் கொள்ளுங்கள் - துணிந்து நில்லுங்கள். உரிமையை விட்டுக் கொடுக்காதீர்கள். லஞ்சம் கொடுக்காதீர்கள். சுகாதாரம் பேணுங்கள். குறுக்கு வழியை கை விடுங்கள். உங்கள் குழந்தைகளுக்கு பிரிவினை போதனை செய்யாமல் நல்ல சிந்தனை ஊட்டுங்கள்.

    ஜாதியைப் பற்றி போதிக்காமல், 'மனிதம்' என்ற உணர்வை மட்டும் ஊட்டுங்கள்.

    ஒரு news-letter உருவாக்கி உங்கள் தெருவில் வசிப்பவர்களுக்கு நல்ல சிந்தனைகள் பரவ வழி செய்யுங்கள்.
    தினகரனிலும், தினமலரிலும், தினத்தந்தியிலும், இந்துவிலும், துக்ளக்கிலும் இல்லாத உண்மைகளை புலப்படச் செய்யுங்கள்.
    முடிந்ததை செய்யுங்கள்!

    ஐயா, ஏதாவது பண்ணணும்க. பாரதி சொன்னது போல் 'தேடிச் சோறு தினம் தின்று...' மாதிரி ஆகி விடாதீர்கள்.

    சாக்கடை அவ்வளவு கலங்கி இருக்கிறது. நல்லது செய்ய வேண்டும் என்று களம் இறங்கும் ஒரு சில நல்லவர்களும் விழி பிதுங்கி விடும் அளவிர்க்கு நிலமை கிடக்கிறது.

    வந்தாரை வாழ வைத்த தமிழன் இன்று வறுமை கோட்டின் கீழே! ஏற்றி விடுங்கள்!!!

    POSITIVE thoughts are the need of the hour!

    வேண்டாம் இனி திராவிட, வன்னிய, பார்ப்பன விவாதங்கள்!!!
    கூடி வாழ்ந்தால், கோடி நன்மை கிட்டுமோ இல்லையோ, ஆனால், கெடுதல் வராது!

    சுதாரியுங்கள்!

    ------- 0 -------- 0 -------- 0 -------- 0 --------

    இனி கீழே வருவது ஜயராமனின் ஆக்கம்:

    ================================
    திராவிடம் என்ற திராவகத்தின் விளைவு!!

    இந்த திராவிடம் நம் ஏழைகளுக்கு கொடுத்தது என்ன தெரியுமா??

    அறுபதுகளில், பதவிக்காக பகுத்தறிவு பட்டறை திறந்து, இன வெறியூட்டி, தேசிய நீரோட்டத்திலிருந்து தமிழகத்தை பிறித்தது இனக்கொலை.

    எழுபதுகளில், கலை விளம்பர வெறியூட்டி, ஒவ்வாத செல்லுலாய்ட் கனவுகளுக்கு கடை போட்டு, பகட்டுசதையும் பாட்டுவாயும் கொண்டு தமிழர்களை மயக்கத்தில் எதிர்காலத்தை மாய்த்தது கலாசாரக்கொலை.

    எண்பதுகளில், பதவிக்காக சாதி வெறியூட்டி, கொள்கைக்கும் தகுதிக்கும் கல்லறை கட்டி அதில் பதவிக்கோட்டை கட்டியது வாழ்க்கைக்கொலை.

    தொன்னூறுகளில், நாணயத்தை விலை பேசி, கூட்டமாக கொள்ளைசாத்திரம் இயற்றி, காற்றற்றபோதும் தூற்றப் பயின்று, நாவிழந்தாலும் நாற்காலி இழக்க மறுத்து, வாழ்ந்தது நம்பிக்கைக்கொலை.

    இப்போது, இரண்டாயிரங்களில், இசைக்கூட்டமே வசைக்கூட்டமாகி, ஒழிக்கப்படுவதற்குமுன் ஒழிக்கும் கலை வளர்த்து, கால் தளர்ந்து அரைத்துணி நழுவியும் அரைக்காசும் நழுவா பிடி கொண்டு, புகழ்ச்சிக்கு புத்தகம், சால்ராக்கு சங்கம் போட்டு, நடப்பதோ தன்மானக்கொலை.

    இத்தனை கொலைகளுக்கு பின் காலியாகிப்போன தமிழக அரசியல் மயானத்தில் இப்போது நடப்பதோ மிஞ்சிய அழுகிய எலும்புகளுக்கு ஆர்ப்பரிக்கும் இரு போட்டி ஓநாய்களின் ஓலம்!!!

    ஒவ்வொரு தேர்தலிலும் காதை மூடிக்கொண்டு சும்மா இருக்கும் படித்த கூட்டம், ஓநாய்கள் ஓய்ந்தபிறகுதான் வெளியே வரும்.

    நன்றி ஜயராமன். நல்லா சொன்னீங்க!!
    ============================================

    Monday, October 23, 2006

    சுவரொட்டி அல(சி)ங்காரம் - தடுப்பது எப்படி? (part 2)

    எனது முந்தைய பதிவான "சுவரொட்டி அல(சி)ங்காரம் - தடுப்பது எப்படி?", சில பல நல்ல உள்ளங்களை தட்டி இருக்கிறது.

    வெறும் வாயளவில் இல்லாமல் செயலிலும் நமது நண்பர்கள் சிலர் களம் இறங்கி உள்ளார்கள்.

    என் பதிவில் சுட்டிக்காட்டிய சுவரொட்டி அசிங்காரம் செய்யும் "APOLLO COMPUTER EDUCATION" க்கு, எனக்குத் தெரிந்து இது வரை 8 பேர் தொலைபேசியில் அழைத்து, பொது இடத்தில் மக்களுக்கு இடைஞ்சல் தரும் சுவரொட்டி விளம்பரங்களை அப்புறப்படுத்த கேட்டிருக்கிரார்கள்.

    சூட்டோடு சூடாக மேலும் சிலர் அழைத்தால், வெற்றி நிச்சயம்!
    ( இல்லை என்றால், நானே பல குரலில் பேசவும் தயார்! )

    அவர்கள் தொலைபேசி எண் - 44-22640291
    முகவரி:
    No-4/31 Pillayar Koil Street
    Pallavaram, Chennai 600043

    சுவரொட்டி இருக்கும் இடம் - குரொம்பேட்டை பஸ் ஸ்டாண்ட்.

    என் முந்தைய பதிவு இங்கே - http://badnewsindia.blogspot.com/2006/10/blog-post_15.html



    நாட்டில் எவ்வளவோ பிரச்சனை இருக்கிறது, சுவரொட்டி ஒழிப்பதா முக்கியம் என்று நண்பர் ஒருவர் கேட்டார் - ஒவ்வொரு ஓட்டையாக அடைக்க வேண்டும். மொத்தமாக செய்ய நம்மால் முடியாது. சின்ன ஓட்டையை முதலில் அடைக்கலாமே.

    என்ன சொல்றீங்க? நீங்க அழைத்து பேசிய போது அவர்கள் கூறிய பதிலை பின்னூட்டம் இடவும். நன்றி!!!

    நன்றி வெங்கட், பாபு, நடராஜன், சீமாச்சு, daylight, goodbadugly, தருமி, அனானி1

    Saturday, October 21, 2006

    அழகான குறும்படங்கள், தேவையான செய்திகளுடன்!

    பார்த்தவுடன் 'அட' போட வைத்தது 'mug up மங்கம்மா' என்ற குறும்படம்.

    ஆசிரியர்களின் கடமையை அழகாக சுட்டிக் காட்டும் விதம் ரொம்ப அருமை.
    பல குரலில் பேசும் அந்த சிறுவனின் நடிப்பும் அருமை.

    நீங்கள் ஒரு ஆசிரியர் என்றால் கட்டாயம் பாருங்கள்.
    ---- ---- ---- ---- ----- ---- ---- ---- ---- -----
    இரண்டாவது குறும்படம், 'கல்வெட்டு'. வெறும் 6 நிமிடம்தான் ஒடுகிறது. முடியும் போது ஒரு பகீர் கொடுக்கிறார்கள். நல்ல வெளியீடு.
    சிறுவனின் கொஞ்சு தமிழ் அருமை!

    மேலும் பல இது போலே வந்தால் நன்றாக இருக்கும்!

    நம்முள் யாராவது இந்த மாதிரி குறும் படம் எடுக்கும் திறமை உள்ளவர்களா? ஏதாவது நல்ல கருத்தை இம்மாதிரி குறும்படமாக எடுக்கலாமே? anyone?

    'Nalanda Way', Great work!. Keep it coming!

    மக் அப் மங்கம்மா



    கல்வெட்டு



    பி.கு: பழைய செய்தியா? எனக்குப் புதியது. என் போல் பலருக்கும் புதியதாக இருக்கலாம்.

    Friday, October 20, 2006

    என் புருஷனை கொண்ணுட்டேன் சார்! ஒரு tricky situation!

    காலை 6 மணி இருக்கும். கையில் ப்ரூ காபி யுடன் பேப்பர் காரன் விசிரி எறிந்த இந்து பேப்பருடனும் பால்கணியில் அமர்ந்து கொண்டிருந்தேன்.
    வழக்கம் போல் இன்றும், நடந்து முடிந்த தேர்தலில் நடந்த வன்முறையை பற்றி அலசி இருந்தார்கள்.
    வன்முறையை செய்தது அவர் என்றும், இல்லை இவர் என்றும் உயர்நீதி மன்றத்தில் இரு தரப்பும் வாதாடியதை போட்டிருந்தார்கள்.
    யார் செய்தால் என்ன, ஆட்சி பொறுப்பில் இருந்தவர்கள்தானே இதர்க்கு பொறுப்பேர்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டே, விளையாட்டுச் செய்திகள் படிக்க தாவினேன்.

    அந்த நேரம் பார்த்து cell phone ல், ரஹ்மானின் வந்தே மாதரம் ring tone அலறியது.
    "ஹலோ" என்றேன் நான்.
    "ஐயா, என் பேரு கௌரி. ராயப்பேட்டைலேருந்து பேசரேன். உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்" என்று பதட்டதுடன் பேசினார்.
    கௌரிக்கு ஒரு 35-40 வயது இருக்கும் போல் தோன்றியது. பேசுவதை பார்த்தால் ஏதொ பெரிய ஆபத்தில் இருப்பதை போல் தோன்றியது.

    "நீங்க உடனே பொறப்பட்டு ராயப்பேட்டை அரசினர் பள்ளி கிட்ட வரணுங்க" என்றாள் பதறியபடி.

    "நான் எதுக்கும்மா அங்க வரணும். என் நம்பர் உனக்கு எப்படி கடச்சுது. பதறாம விஷயத்த சொல்லு. ஏன் இப்படி அழற???" என்று கேள்விகளை அடுக்கினேன்.

    "நீங்க BadNewsIndia எழுதரவர்தான? உங்க நண்பர் ஜெயபால் மூலமா நீங்க பண்ற விஷயங்களெல்லாம் தெரியும். உங்க பதிவுகளையும் தவறாம படிப்பேன். ஜெயபாலன் சார் தான் இந்த நம்பர் கொடுத்தாரு. நீங்க தான் சார் என்ன காப்பாத்தணும்" என்று மீண்டும் பலமாக அழத்தொடங்கினாள்.

    ஜெயபாலனை மனதில் நொந்தபடி என்னடா வம்பு இது என்று, "சரி சரி, அழாம விஷயத்த சொல்லு" என்றேன்.

    "ஐயா இங்க ஸ்கூல்ல வாத்தியாரா இருக்கேன். 3ஆம் வகுப்புக்கு தமிழ் சொல்லித்தரேன். என் புருஷன் மளிகை வியாபாரம் வச்சிருந்தாரு. எல்லாமே நல்லாதான் போயிட்டிருந்தது. எங்க பள்ளிக் கூடத்து சத்துணவு கூடத்துக்கு இவருதான் அரிசி, காய்கறி எல்லாம் வித்துட்டிருந்தாரு.
    சந்தோஷமா தான் இருந்தோம். சத்துணவு கூடத்துல புதுசா ஒரு சமையல் காரன் வந்தான். என் புருஷன் அவன் கூட தெனமும் அரட்டை அடிக்க ஆரம்பிச்சாரு. அப்பறம் ரெண்டு பேரும் சேந்து சாரயக் கடைக்கு போக ஆரம்பிச்சாங்க.
    அதுக்கப்பறம் ரெண்டு பேரும் சேந்து சத்துணவு கூடத்துக்கு விக்கர அரிசி காய்கரிகள்ல எல்லாம் தில்லு முல்லு பண்ண ஆரம்பிச்சாங்க.
    ரொம்ப மட்ட ரக அரிசி, பருப்பு, அழுகி போன காய்கறி னு ஒண்ணுத்துக்கும் உதவாத எல்லாத்தையும் சின்ன பசங்க சாப்பிடர உணவுக்கு பயன் படுத்த ஆரம்பிச்சாங்க.
    லாபத்துல ரெண்டு பேருக்கும் பங்கு வேற." என்று மூச்சிரைக்க சொல்லிக் கொண்டிருந்தாள் கௌரி.

    "சரிம்மா. இதுக்கும் நான் அங்க வரதுக்கும் என்னம்மா சம்பந்தம்?", என்றேன் தயக்கத்துடன்.

    "இப்படி கலப்படம் பண்ணி லாபம் சம்பாதிக்க ஆரம்பிச்சதும், ஆசைல, தேதி முடிஞ்சு போன பால் பௌடர், எண்ணை னு, இவங்க அநியாயம் ஜாஸ்தி ஆயிட்டே இருந்தது.
    போன வாரம் கெட்டு போன உணவை சாப்டதால 4 ஆம் வகுப்பு பசங்க வாந்தி பேதி ஆயி ஆஸ்பத்திரில சேத்துட்டாங்க.
    நான் இவர் கிட்ட எவ்வளவோ தடவ சொல்லியும் கலப்படத்த விடர மாதிரி தெரீல. சில தடவ இத கேக்கும் போது என்னையும் அடிக்க ஆரம்பிச்சிடுவாரு.

    நேத்தும் பால் பௌடர் டப்பாக்கள வண்டீல எடுத்து வச்சுட்டிருந்தாரு. பல டப்பாக்கள் 'seal' எல்லாம் போயி திறந்த மாதிரி இருந்தது. ஒண்ண எடுத்து பாத்தா உள்ள புழுவெல்லாம் இருந்தது. அத காமிச்சு சத்தம் போட்டேன். ஏங்க சின்ன பசங்க சாப்பிடறதுக்கு புழு இருக்கரத கொடுக்கறீங்களேன்னு கேட்டேன். உடனே அவரு, ஒரு ஜல்லடயால பால் பௌடர ஜலிச்சு திருப்ப டப்பால போட்டு மூடிட்டு பேய் சிரிப்பு சிரிச்சாரு." என்று கூறிக்கொண்டே பலமாக அழுதாள் கௌரி.

    ஸ்தம்பித்துப் போன நான், "சரிம்மா அழாத, உன் புருஷனுக்கு நான் வேண்ணா வந்து புத்தி மதி சொல்லட்டுமா" என்றேன் நான்.

    மேலும அழுதவளாக, "இல்லீங்க ஐயா, கொழந்தைங்க சாப்பிடற பாலுக்கு, புழு இருக்கர விஷத்த அனுப்பராரேனு எனக்கு பயங்கர கோபம் வந்துடுச்சு.
    நேத்துதான் வேற உங்களோட கனம் கதைல பாக்யலக்ஷ்மி, அவ புருஷனோட நலனுக்காக, புருஷனையே கொண்ணத படிச்சேன். அது தப்புல்லன்ணா, கொழந்தைங்க நலனுக்காக என் புருஷன கொல்றது தப்பில்லண்ணு பட்டுது. பக்கதுல இருந்த கட்டைய எடுத்து என் புருஷன் தலைல ஒங்கி அடிச்சிட்டேன். ரத்தம் சொட்ட சொட்ட கீழ சாஞ்சுட்டாரு" என்று சொன்னவள் அழுகை இன்னும் அதிகரித்தது.

    "நான் செஞ்சது தப்பா" என்று கதறினாள்.

    என்னடா வம்பு இது, நம்ப கதை இவ்வளவு inspire பண்ணுமா ஒருவரை என்று கலங்கியபடி,
    "நாலு பேருக்கு நல்லது செய்யறதுண்ணா, எதுவும் தப்பில்லம்மா" என்று நாயகன் கமல் போல் கூறினேன்.

    ................ .......... ........... ............

    இன்னிக்கு என்ன எழுதலாம்னு யோசிக்கும்போது, கற்பனை குதிரை கொஞ்சம் track மாறி ஒடியதால் இப்படி. btw, மேலே உள்ள அனைத்தும் கற்பனையே ( இத சொல்லலண்ணா மட்டும் உங்களுக்கு தெரியாதா என்ன. நம்மாளுங்க அரசியல் வாதி கிட்ட வருஷம் மாறி வருஷம் ஏமாந்துகிட்டே இருப்போம். மத்ததுல கெட்டி ).

    இதை மாதிரி பல மடங்கு கற்பனை வளம் உள்ள நண்பர்கள் தேன்கூடு போட்டிக்காக எழுதிய கதையை படிக்க இங்கே சொடுக்கி படித்து மகிழ்ங்கள். - தேன் கூடு போட்டிக் கதைகள்

    படித்த கதைக்கு விமர்சனமும், பிடித்த கதைக்கு வாக்கும் அளிக்க மறவாதீர்.

    பலகை அவர்களின் அருமையான விமர்சனங்கள் இங்கே - பலகை கதை விமர்சனம்

    பாக்யலக்ஷ்மி, சச்சிதானந்தன் நடித்த கனம் கதை இங்கே - கனம் by BadNewsIndia

    அடுத்த மாத போட்டிக்கு நீங்களும் எழுதி அனுப்புங்க.

    Winning is secondary - participation is the key.

    எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும்! வாழ்க வளமுடன்!

    [sorry, if I wasted your time ;) ]

    Tuesday, October 17, 2006

    பெறுதர்க்கரியன் பெருமானே - இளையராஜாவின் தேனமுது!



    சென்ற வாரத்தில் ஒரு நாள் வீட்டில் தனியாக இருக்கும் பொழுது நமது ராஜாவின் திருவாசகம் பாடல்களை கேட்க்க ஆவல் பிறந்தது.
    இதற்க்கு முன் எவ்வளவோ முறை இந்த பாடல்களை கேட்டிருந்தாலும், தனியாக அமர்ந்து, மற்ற எந்த ஒரு சிந்தனையும் இல்லாமல், இதனை கேட்டால் கிடைக்கும் சுகத்தை வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது.

    திருவாசகம் ராகம் இல்லாமல் படிக்கும் போதே இனிமையாக இருக்கும். அதர்க்கு ராஜாவின் இசையும் சேர்த்தால் கேட்க்க வேண்டுமா?

    முதல் பாடலிலேயே 'பெருதர்க்கரியன் பெருமானே' என அவர் உருகும்போது நமக்குள் நிகழும் பரவசம் விவரிக்க இயலாதது.

    அமாடியஸ் (Amadeus) என்ற Mozart ன் வாழ்க்கை வரலாரை சித்தரிக்கும் அருமையான படம். அதில் ஒரு காட்சியில் Mozart 20 நிமிடங்கள் தொடர்சியாக வரும் ஒரு புதிய பாடலை பற்றி அற்புதமாக விவரிப்பார்.
    அதன் தாக்கமோ என்னமோ (ராஜாவும் கமலும் இந்த படத்தை பல முறை பார்த்ததாக எங்கோ படித்த நினைவு), ராஜா திருவாசகத்தில் 'பொல்லா வினையேன்' பாடலை 20 நிமிட ப்ரவாகமாக அள்ளித் தெளித்திருக்கிரார்.
    'நமச்சிவாய வாழ்க. நாதன் தாழ் வாழ்க' என்று உருகும் இடத்திலும் நாமும் சேர்ந்து உருகித்தான் போகிறோம்.

    எல்லோருக்கும் இந்த 'பரவசம்' வருமா என்று தெரியவில்லை - என் சூழலை போல், நீங்களும் தனியாக இருக்கும் பொழுது கேட்டுப்பாருங்களேன்.

    சரி BadNewsIndia பேர் வச்சிருக்கரதால, இன்றைய அறிவுரை இதுதான் -
    [
    ராஜா, ரஹ்மான், விஸ்வநாதன், மஹாதேவன்,... என்று பொக்கிஷங்கள் பலரை பெற்ற நாம், அவர்களையும் அவர்கள் படைப்புக்களையும் ஆதரிக்க வேண்டும்.
    பணம் கொடுத்து வாங்காமல் MP3 ல் ஓசியில் எல்லா பாடல்களையும் கேட்க்கும் பழக்கம் மாற வேண்டும்.
    இவ்வளவு திறமை படைத்தவர்கள், நமது பொக்கிஷங்கள்.
    அவர்கள் படைப்புகள் நமக்கு அளவிட முடியாத இன்பத்தை பல வருடங்களாக தந்து கொண்டிருக்கிறது.

    கொட்டிக் கொடுங்கள் அவர்களுக்கு.

    மேன் மேலும் திருவாசகம் போல் பல படைப்புகள் வந்தால் நமக்குத்தானே லாபம்?
    வரட்டும் - ரஹ்மானின் குரானும், ஹாரிஸின் பைபிளும், ராஜாவின் கீதையும் வந்து ஜாதி மத பேதமின்றி நம் எல்லோருள்ளும் கலக்கட்டும்!!
    இசையாலாவது உடைந்த்தை ஒட்ட முயற்ச்சிக்கலாம்.
    ]

    என்ன சொல்றீங்க?

    இதோ என்னருமை ராஜா இன்னொருமுறை -



    Please add a comment if you read this - will help us know what kind of articles to concentrate more on. Thank you.

    Monday, October 16, 2006

    சுவரொட்டி அல(சி)ங்காரம் - தடுப்பது எப்படி?

    சமீபத்தில் சூரிய தொலைக்காட்ச்சியில், கருணாநிதியிடம் ப்ரபலங்கள் பலர் கேள்விகள் கேட்க்கும் நிகழ்ச்சி ஒளிபரப்பானது.

    கமல், ரஜினி உள்பட தமிழகத்தின் ஜாம்பவான்கள் ஒருவர் பின் ஒருவராக ஒன்றுக்கும் உதவாத கேள்விகளைக் கேட்க, அதற்க்கு கருணாநிதி சார், திருவிளையாடல் சிவாஜி போல் அழகாக பதில் சொல்லிக் கொண்டிருந்தார்.

    உருப்படியாக ஒரே ஒரு கேள்வி நடிகர் விவேக்கிடம் இருந்து வந்தது. ஊரெல்லாம் உள்ள சுவர்களை அசிங்கப்படுத்திக் கொண்டிருக்கும் சுவரொட்டிகள் ஒழிய வழி கேட்டார் நண்பர் விவேக்.
    முதல்வர் பொறுப்பில் இருக்கும் கருணாநிதி "எல்லார் மனதிலும் ஒளி பிறக்க வேண்டும்" என்று சப்பையான ஒரு பதில் கொடுத்தார்.
    இதையெல்லாம் சரி செய்ய அவர் மனதில் ஒளி இருக்கிறதென்று நம்பித்தானே அவரை முதல்வராக்கினோம்.
    இவரும் சப்பைக் கட்டு கட்டினால் என்னத்த பண்றது. என்னமோ போங்க.

    சரி, சொல்ல வந்த விஷயத்துக்கு வருவோம். சுவரொட்டி அசிங்கம் பல பேர் பண்றாங்க. ஆனால் சென்னையில் திரும்பிய இடத்திலெல்லாம் கண்ணுக்கு பட்டது 'APOLLO Computer Education' என்ற நிருவனத்தின் ஒட்டிதான். பேருந்து நிறுத்தங்கள், பொது சுவர்கள், பெயர் பலகைகள் என்று பாரபட்சம் இன்றி அசிங்கப் படுத்தி இருக்கிறார்கள்.

    அவர்கள் தொலைபேசி எண் - 44-22640291
    முகவரி:
    No-4/31 Pillayar Koil Street
    Pallavaram, Chennai 600043

    உங்களால் முடிந்தால் அவர்களை தொலைபேசியில் அழைத்தோ, அல்லது கடிதமாகவோ
    " உங்க சுய லாபத்துக்காக ஏன்(டா / டி)ஊர இப்படி சுவரொட்டி அடிச்சு நாஸம் பண்றீங்க. ஊர கெடுக்கர உங்க கிட்ட எங்க பிள்ளைகளை படிக்க அனுப்ப மாட்டோம் "
    என்று தெரியப்படுத்துங்களேன்.

    உங்களுக்கு தெரிஞ்ச மற்ற நிறுவனங்களின் முகவரியையும் பின்னூடுங்கள். நம்ப அரசியல் கட்சி நண்பர்கள் பேர் வேண்டாமே. அதான் ஊருக்கே தெரிஞ்சதாச்சே. நம்ப சொல்லியா திருந்தப் போறான் அவன்.

    இந்து நாளிதழில் சுவரொட்டி அசிங்கம் பற்றி படத்துடன் செய்தி கீழே. (apollo ஆளுங்க பளிச்னு ஒட்டி இருக்கராங்க பாருங்க)

    Friday, October 13, 2006

    கலாமுக்கே சோதனையா?

    இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் சூடான செய்தியில் இஸ்ரேல் பராக் மிஸைல் வாங்கிய விவகாரம் முதலில் நிற்கிறது.

    பெர்நாண்டஸ் நல்லவர் என்ற என் எண்ணத்திற்க்கு இந்த செய்தி ஒரு இடி. கடற் படையின் மூத்த அதிகாரிக்கும் சதியில் பங்கா - ஹ்ம்ம், என்னத்தைச் சொல்ல.

    அதுமட்டுமல்லாது, கலாமின் பெயருக்கும் களங்கம் கற்பிக்கும் நடவடிக்கைகளில் இந்த தேச துரோகிகள் இறங்கி உள்ளார்கள்.

    கலாமின் மேல் தவறு இல்லை என்று வரும் தகவல்கள் மகிழ்சியை தருகிறது. நாட்டுக்காக வாழ்க்கையை அர்ப்பணித்தவர்க்கு இந்த நீசர்களின் செயல் மன வருத்தத்தை கொடுக்காது என்று எண்ணுவோம்.

    தகவல்கள் சில இங்கே -
    www.hindustantimes.com/news/5922_1818547,0015002100000000.htm

    விசாரணைகள் முடியும் வரை பொறுத்துப் பார்ப்போம். எந்த புற்றில் எந்த பாம்பு இருக்கிறதோ?

    ஆண்டவனே என் நாட்டை காப்பாற்று !!!

    ரா றா ரா றா - உதவிக்கு ரா றா

    தமிழில் பிழை இல்லாமல் எழுத பல பல முயற்ச்சி செய்தும், இன்றுவரை தோல்விதான்.

    முக்கியமாக எந்த இடத்தில் ர் உபயோகிப்பது, எந்த இடத்தில் ற் உபயோகிப்பது என்ற மாபெரும் சந்தேகம் ஒவ்வொரு முறையும் வந்து சஞ்சலப்படுத்துகிறது.

    ர் ற் உபயோகிக்க ஏதேனும் விதி அல்லது டிப்ஸ் இருக்கிறதா?

    தெரிந்தால் சொல்லுங்கள். பிழைகள் குறைக்க மற்ற டிப்ஸ் இருந்தாலும் பின்னூடுங்கள்.

    நன்றி. நன்றி.

    Thursday, October 12, 2006

    கனம் - (தேன்கூடு-போட்டிக்கு)

    அம்மா கொஞ்சம் தள்ளி உக்காருங்க என்ற சத்தத்தால் தன் சிந்தனை கலைந்து எழுந்து நின்றார் பாக்கியலக்ஷ்மி.
    எதிரே, ரூமை சுத்தம் செய்ய வந்த ஆஸ்பத்திரி வார்ட் பாய் நின்று கொண்டிருந்தான்.
    அவள் சற்று தள்ளி அமர்ந்ததும் தரையை துடைத்து விட்டு சென்று விட்டான்.

    கட்டிலில் பாக்கியலக்ஷ்மியின் கணவர் சச்சிதானந்தம் ஆழ்ந்த் உறக்கத்தில் இருந்தார். மூக்கில் ஸ்வாசிக்க உதவும் கருவிகளும், வயிற்றில் சிறுநீர் வெளியேர சில குழாய்களும் பொறுத்தப்பட்டு இருந்தது.
    74 வயதாகிறது சச்சிதானந்தத்திற்கு. இதுவரை ஒரு நாள் கூட நோய் நொடி என்று படுத்ததில்லை. தலை வலி வந்தால் கூட, ஒரு கைக்குட்டையை இருக்கமாக தலையில் கட்டி கண்ணை மூடிக் கொண்டு பொறுத்துக் கொள்பவர்.

    நான்கு தினங்களுக்கு முன்பு ஒரு நாள் இரவு "பாக்கி வயத்த பயங்கரமா வலிக்குதும்மா" என்றவர் மயங்கி கீழே விழுந்து விட்டார். என்ன செய்வதென்று தெரியாத பாக்கியலக்ஷ்மி மிகவும் பதறிப் போனார்.
    பாக்கியலக்ஷ்மியின் சப்தம் கேட்டு எதிர் வீட்டில் வசிப்பவர்கள் விவரம் அறிந்து, ஒரு ஆட்டோவில் சச்சிதானந்தத்தை ஆஸ்பத்திரியில் சேர்த்தார்கள்.

    ------- ------- ------- ------- ------- ------- ------- -------

    மூத்த பிள்ளை பாஸ்கரன் ஆக்ராவில் பணிபுரிகிறான். இரண்டாவது பெண் பார்வதி திருமணமாகி பூனாவில் வசிக்கிறாள்.
    இருபது வருடங்களுக்கும் மேலாக சச்சிதானந்தமும் பாக்கியலக்ஷ்மியும் தனியாகத்தான் வசிக்கிறார்கள்.

    வருடத்துக்கு ஒரு முறை பாஸ்கரனும் பார்வதியும் வந்து போவதுண்டு.
    தங்களுடன் ஆக்ராவில் வந்து வசிக்குமாறு சில முறை பாஸ்கரன் கேட்டாலும், சச்சிதானந்தத்திற்க்கு அதில் உடன்பாபடில்லை.
    "பாக்கி, நம்பளால முடிஞ்ச வரைக்கும் அடுத்தவங்களுக்கு கஷ்டம் கொடுக்கக் கூடாதும்மா" என்பார்.

    "இன்னும் கொஞ்ச நாள் போகட்டும். அப்பறம் பாப்போம் பாஸ்கரா" என்று ஒவ்வொருமுறையும் தட்டிக் கழிப்பார்.

    பாஸ்கரனுக்கு, இரண்டு பிள்ளைகள், வேலைக்குச் செல்லும் மனைவி, நல்ல உத்யோகம் என்று நன்றாகவே இருந்தான். ஒவ்வொருமுறை பெற்றோரை தன்னுடன் வந்து இருக்குமாறு அழைக்கும் போதும் அவனது மனைவி அருகில் வந்து "ஏங்க அவங்க தான் வரலன்னு சொல்றாங்களே அப்பறம் ஏன் கேட்டுக் கிட்டே இருக்கீங்க. நம்ப வீட்டுல நம்ப சாமான் வெக்கவே எடம் இல்ல, இவங்களும் வந்துட்டா என்ன பண்றது. நான் ஆபீஸ் போவேனா, இவங்கள கவனிப்பேனா" என்று சுடு சொற்களை எரிவாள். இவளுக்கு பயந்தோ என்னவோ பாஸ்கரன் பெற்றோரை கூப்பிடுவதை குறைத்துக் கொண்டான்.

    ------- ------- ------- ------- ------- ------- ------- -------

    பாக்கியலக்ஷ்மி சச்சிதானந்தத்தின் உறவினர் மகள் தான். பள்ளிப் பருவத்திலிருந்தே இருவரும் இணக்கமாக இருந்தவர்கள். சிறு வயதிலேயே இரு வீட்டார் பெற்றோரும் "சச்சிதானந்தத்துக்குத்தான் பாக்கியலக்ஷ்மி" என்று ஊர்ஜீதம் செய்து விட்டதால், எல்லா இடத்திலும் ஜோடிப் புறாக்கள் போல் வலம் வந்தவர்கள்.
    பாக்கியலக்ஷ்மியை பாக்கி என்றும், சச்சிதானந்த்தத்தை ஆனந்தா என்றும் சுருக்கி விளித்து பரவசமாக சுற்றிய காலங்கள் பல.

    இரும்பு உருக்காலையில் சூப்பர்வைஸராக வேலை. பணி இடத்தின் அருகிலேயே வாடகைக்கு வீடு எடுத்திருந்தார்கள். பணி முடிந்தததும் வீட்டிற்கு வந்து பாக்கிலக்ஷ்மியுடன் ஊர் கதை பேசி, அடுத்துள்ள கோவிலுக்கு பொடி நடை செல்வார்கள்.
    மிடுக்காக சவரம் செய்த சிரித்த முகமும் கருகரு சுருட்டை முடியும் சச்சிதானந்தனிடம் பாக்கியலக்ஷ்மிக்கு மிகவும் பிடித்தது.
    மூத்த மகன் பாஸ்கரன் பிறந்தான். பிரசவத்தின் போது வலியில் துடித்த மனனவியை பார்த்து கலங்கிய சச்சிதானந்தன் "பாக்கி இந்த ஒரு குழந்தை போதும்டி. இவ்ளோ கஷ்டம்னு தெரிஞ்சிருந்தா குழந்த்தயே வேணாம்னு இருந்திருக்கலாம்" என்று சொல்லிப் பதறினான்.

    பாஸ்கரனின் பள்ளி வெகுதூரம் தள்ளி இருந்ததால், பள்ளிக்கு அருகாமையில் வீடு பார்த்து குடியேறினார்கள். சச்சிதானந்தன் தினமும் சைக்கிளில் உருக்காலைக்கு சென்று வந்தார். பிள்ளைக்காக செய்த முதல் அட்ஜஸ்ட்மண்ட் அது.
    மூன்று வருடத்திர்க்கு பிறகு பார்வதியும் பிறந்தாள். இந்த முறை பாக்கியின் வலி கண்ட சச்சிதானந்தம் இனி குழந்தை வேண்டாம் என்று தீர்க்கமாக சொல்லி விட்டார்.

    அக்கம் பக்கத்தில் சச்சிதானந்தத்திற்க்கு நல்ல மதிப்பு இருந்த்தது. யாருக்கும் எந்த தொல்லையும் கொடுக்காமல், மற்றவர்களுக்கு தன்னால் முடிந்த அளவுக்கு உதவிகள் செய்வார்.
    வயது ஆனாலும், அவர் மிடுக்கு குறையவில்லை. வெள்ளை வேட்டி சட்டையில் வலம் வரும் கணவரை காணும் போது பாக்கியலக்ஷ்மிக்கு அவளை அறியாமல் ஒரு புன் முறுவல் வரும்.

    ------- ------- ------- ------- ------- ------- ------- -------

    ஆஸ்பத்திரிக்கு தந்தையை காண பாஸ்கரனும் பார்வதியும் வந்து விட்டார்கள். மூன்று வருடம் ஆகிவிட்டது, பாக்கி இவர்களை பார்த்து. பாஸ்கரன் வேளை பளு காரணமாக ரொம்பவே மாறிப் போயிருந்தான்.
    "இப்ப எப்படி டாக்டர் இருக்கு. எப்ப டிச்சார்ஜ் பண்ணலாம்" என்ற பாஸ்கரனின் கேள்விக்கு நீண்ட பதில் அளித்துக் கொண்டிருந்தார் டாக்டர்.
    பாக்கியலக்ஷ்மிக்கு கேட்டதெல்லாம் "organ failure, urinary track failure" போன்ற வார்த்தைகள்தான். நடுங்கிப் போனாள் இதைக் கேட்டு விட்டு.

    இந்த நான்கு நாட்களில் ஒரு நாள் கூட சச்சிதானந்தன் கண் திறந்து இவளை பார்க்கவில்லை.
    திருமணமான ஐம்பது வருடத்தில் பேசாமல் ஒரு நாளும் இருந்ததில்லை.

    டாக்டரிடம் பேசி விட்டு வந்த பாஸ்கர், பாக்கியலக்ஷ்மியிடமும் பார்வதியிடமும் பேச ஆரம்பித்தான் "அப்பாக்கு major infection ஆகி இருக்காம். multiple organ failure ஆனதால lungs கும் urinary bladder கும் ட்யூப் வச்சிருக்காங்க. 8 மணீ நேரத்துக்கு ஒரு தடவை ஒரு பெரிய ஊசி போடணுமாம். அது போட்டாதான் ஒவ்வொரு பார்ட்டும் வேலை செய்ய ஆரம்பிக்க வாய்ப்பிருக்காம்" என்று கண்ணீருடன் கூறினான்.
    பாக்கியலக்ஷ்மிக்கு அவளை சுற்றி பூமி அதிர்வது போன்றிருந்தது. செவி அடைத்து மயங்கி விழுந்தாள்.

    ------- ------- ------- ------- ------- ------- ------- -------

    "ஒவ்வொரு ஊசியும் 4000 ரூபாயாம்டி. அப்பாக்கு ரொம்ப வயசானதால ஊசி வேலை செய்றதும் நிச்சயம் இல்லையாம். ஏற்கணவே 6 போட்டாச்சு. எனக்கு வேற எக்கச்சக்க வேல இருக்கு ஊர்ல. என்ன பண்றதுண்ணே தெரில" என்று பார்வதியிடம் சொல்லிக் கொண்டிருந்தான் பாஸ்கரன்.

    "எனக்கும் போணும் பாஸ்கர். நான் இல்லாம பசங்கள மேய்க்க அவரு ரொம்ப கஷ்டப்படறாரு. நீ கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணேன். நான் நாளைக்கு கெளம்பி போறேன். ஏதாவது சீரியஸ்னா phone பண்ணு அவரையும் கூட்டிட்டு வரேன்" என்று அவள் பங்கிற்கு பார்வதி சொன்னாள்.

    'ஆஸ்பத்திரி செலவு மட்டும் இது வரைக்கும் 65000 ரூபாய் ஆயிருக்கு. நான் தான் அதப் பாத்துக்கறனே, நீ இங்க கொஞ்ச நாள் இருந்து பாத்துக்கவாவது கூடாதா" என்று குரலை உயர்த்தினான் பாஸ்கரன்.

    பாக்கியலக்ஷ்மி இவர்களின் பேச்சை கேட்டு கண் விழித்தாள்.
    "நீங்க ரெண்டு பேரும் போய் உங்க வேலையை பாருங்கப்பா. அப்பாக்கு ஒண்ணும் ஆகாது. நான் பாத்துக்கறேன். குணம் ஆனதும் phone பண்றேன். பசங்களோட பொறப்பட்டு வாங்க போதும். இங்கதான் ந்ர்ஸ் நல்லா பாத்துக்க்றாங்களேப்பா கவலப்படாம பொறப்படுங்க" என்றாள் பாக்கி.

    ------- ------- ------- ------- ------- ------- ------- -------

    பாஸ்கரனும் பார்வதியும் அரை மனதோடு புறப்பட்டு சென்றார்கள். பாக்கியலக்ஷ்மிக்கு அவர்கள் மேல் கோபம் வரவில்லை. கணவனின் இப்பொதைய நிலை தான் அவளுக்கு நெஞ்சடைக்கும் துக்கத்தை கொடுத்தது.

    "கொஞ்சம் தள்ளி நில்லுங்கம்மா" என்று சொல்லிக்கொண்டு வந்தாள் நர்ஸ். பாக்கி நகர்ந்ததும், சச்சிதானந்த்தத்தின் உடம்பில் ஒரு வெள்ளை துண்டில் வெண்ணீரால் துடைத்து விட்டாள். மூக்கில் இருக்கும் ட்யூபை எடுத்து, சிலிண்டரை மாற்றினாள். வயிற்றில் சொருகி இருந்த ட்யூபிலிருந்து வ்ழியும் சிறு நீரை அகற்றி புதிய கருவி பொறுத்தினாள். மற்ற பல கருவிகளையும் மாற்றிப் பொறுத்தினாள்.
    சலனம் அற்றுக் கிடக்கும் சச்சிதானந்தமும் இழுத்த இழுப்பிற்க்கெல்லாம் வந்தார்.
    இதைக் கண்ட பாக்கியலக்ஷ்மிக்கு நெஞ்சு கனத்த்து.

    என்றோ ஒரு பௌர்ணமி நாளன்று, மொட்டை மாடியில் "உங்ளுக்கு முன்னாடி நான் போய் சேர்ந்திடணும்க, சுமங்கலியா" என்றவளிடம், "அடிப்பாவி, நீ போயிட்டா என்ன யாரு பாத்துப்பா" என்று புன்முறுவலுடன் கணவன் கூறியது நினைவுக்கு வர, கண்களில் கண்ணீர் பெருகி வழிந்தது. ஆறுதல் கூற யாரும் இல்லாமல் வெகு நேரம் அழுது விட்டாள் பாக்கியலக்ஷ்மி.

    கணவர் அருகில் சென்று அவரின் அமைதியான முகத்தை கண்டாள். கணவரின் நெற்றியை வருடியபடி "இப்படி பண்ணிட்டியே ஆனந்தா. என் கூட இனி எப்ப பேசுவ. பாஸ்கரும், பார்வதியும் உனக்கு சரி ஆன உடனே வருவாங்க. சீக்கிரம் சரியாகணும்.." என்று முனகினாள்.

    சற்று நேரம் வெறித்து கணவரை பார்த்த பாக்கியலக்ஷ்மி சச்சிதானந்தத்தின் மூக்கில் இருந்த ட்யூபை மெல்ல வெளியே எடுத்துப் போட்டாள்.

    சச்சிதானந்தம் உடம்பு சலனம் இல்லாமல் முழுதும் அமைதியானது.

    கணவனின் நெற்றிக்கு முத்தமிட்ட பாக்கியலக்ஷ்மியின் கண்களில் தாரை தாரயாக நீர் சுரந்தது.

    ஆனால், அவள் முகத்தில் இப்பொழுது ஒரு தெளிவு தெரிந்தது.

    ------- முற்றும் ------- ------- ------- ------- -------

    நல்ல காலம் பொறக்குது! நல்ல காலம் பொறக்குது!

    என்னடா இவன் Bad News India னு பேரு வச்சுக்கிட்டு நல்ல காலம் பொறக்குதுன்றானேன்னு பாக்கறீங்களா?

    ஊர்ல இப்ப நடக்கற சில நல்ல விஷயங்கள பாக்கும் போது ஒரு நம்பிக்க வருது நம்ம நாட்டு எதிர்காலத்து மேல.

    உள்ளாட்சி தேர்தல்ல இந்த தடவை சில Ward ல, இது வரைக்கும் ஊர கெடுத்து குட்டிச் சுவர் ஆக்கிட்டிருக்கற அரசியல் கட்சி ஆளுங்கள எதிர்த்து சாதாரண மக்கள் சுயேட்சயா நிக்கறாங்களாம்.
    இந்த மாதிரி மாற்றங்கள்தான் நமக்கு தேவை. சும்மா அது சரியில்ல, இது சரியில்லனு பொலம்பிட்டு அடுத்த வேலய பாக்காம, சிலர் தைரியமா களத்துல குதிச்சிருக்கறது ரொம்ப நல்ல விஷயம்.

    பொது நலம் காக்க வந்த நல்லவர்களை இரு கரம் கூப்பி வரவேற்க்கிறேன்.

    அனைத்து கடவுளர்களும் அவர்களுக்கு துணையிருக்கட்டும்.

    வாழ்க பாரதம்!!!

    அடுத்த உள்ளாட்சி தேர்தலில் இந்த நிலை தொடர வேண்டும், பன்மடங்கு!!!

    சென்னையில் உள்ள பம்மலில் சுயேச்சை வேட்பாளர்கள் பற்றி வந்த செய்தி - http://www.hindu.com/2006/10/12/stories/2006101216660400.htm

    சென்னையில் உள்ள மாதவரம் சுயேச்சை வேட்பாளர்கள் பற்றி வந்த செய்தி - http://www.hindu.com/2006/10/12/stories/2006101215610300.htm

    இது தொடற்பாக உங்களுக்கு தெரிந்த சேதியையும், யு.ஆர்.எல் லையும், பின்னூட்டதில் இடுக. நன்றி!!!


    நல்ல காலம் பொறக்குது! நல்ல காலம் பொறக்குது! நம் நாடு சுதாரித்துக் கொண்டு வீரு கொண்டு எழும் நாள் ரொம்ப தூரத்தில் இல்லை!!!

    Friday, October 06, 2006

    ஊரைத் திருத்தலாம் வாங்க நண்பரே. ஒரு simple ஐடியா!

    பதிவுகளில் நாம் நமது பல சிந்தனைகளை பதிவு செய்கிறோம். ஆனால் இவை படித்த மேல் மட்ட மக்களையே சேர்கிறது. உங்கள் தெருவில் எவ்வளவு பேர் வீட்டில் computer, internet-connection இருக்கும்?

    சமூக சிந்தனை உள்ள பல பதிவுகள் இதனால் பலர் பார்வை படாமலே இருந்துவிடும். படித்து ந்ல்ல நிலையில் உள்ளவர்கள் மட்டும் படித்தால், அந்த பதிவினால் ஒரு பயனும் நிகழாமல் போய்விடும்.

    குப்பனும், சுப்பனும் மற்றும் சாதாரண நிலையில் இருப்பவர்களுக்கும் நமது நல்ல ச்ந்தனைகள் சென்றடையச் செய்து அவர்களையும் சிந்திக்க வைக்க வேண்டும்.
    சித்தியிலும், அண்ணியிலும், மெட்டி ஓலியிலும், சினிமாவிலும் மயங்கிக் கிடக்கும் சகோதர சகோதரிகளை எழுப்ப வேண்டும். தங்களை சுற்றி நடக்கும் அழிவினை அவர்களுக்கு விளங்கச் செய்ய வேண்டும்.

    உள்ளாட்சி தேர்தல்கள் தொடங்க இருக்கும் இந்த நேரத்தில் சில ப்ரச்சனைகளை எல்லாவரும் உணரச் செய்தால், தாமதம் இன்றி பதில்கள் கிடைக்கும் வாய்ப்பும் அதிகம்.
    இந்த அடிப்படையில் தான் இந்த யோசனை.

    கீழே இரு கோட்டிற்க்கு நடுவில் உள்ள வரிகளை cut செய்து, print செய்து, நீங்கள் வசிக்கும் தெருவில் உள்ள அனைவருக்கும் வினியோகம் செய்தால், நல்ல பலன் இருக்கும் என்பது என் கணிப்பு. anonymous ஆக செய்ய விரும்புவோர், ஒரு தபால் கவரில் போட்டு எல்லா இல்லங்களுக்கும் அனுப்பலாம்.
    வெறுமனே நமக்குள்ளேயெ புலம்பிக் கொண்டிருந்தால் ஒன்றும் நடக்கப் போவதில்லை. இந்த் மாதிரி சில முயர்ச்சிகள் செய்து பார்க்கலாமே.
    நண்பர்களே, சிரமம் பார்க்காது, இதை முயன்று பாருங்களேன்.
    என் தெருவில் நான் செய்து விட்டேன் - சில பலன்களும் காண்கிறேன். நீங்கள் வெளியூரில் இருப்பவரானால், உள்ளூரில் இருக்கும் உங்கள் நண்பரை இப்பணி செய்ய ஏற்பாடு செய்யுங்கள்.

    இந்தப் பதிவை உங்கள் பிளாக்-கில் link செய்ய தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
    நன்றி! நன்றி! நன்றி!

    (feel free to change the following text to make it appropriate for your place.)
    ==============================================
    அன்புடயீர்,
    வணக்கம். நான் ஒரு ஒய்வு பெற்ற அரசு அதிகாரி. அடயாரை சேர்நதவன். உஙகள் தெருவிற்க்கு 3 மாதங்களூக்கு முன்னால் உறவினர் ஒருவரை சநதிக்க வநதிருந்தேன். இதற்க்கு முன்னால் 1999ல் ஒரு முறை வந்திருக்கிறேன்.
    உங்கள் தெரு, 1999ல் இருந்ததை விட இப்பொழுது மிகவும் மோசமாக காட்சி அளிக்கிறது.
    99ல் இருந்ததை விட நமது நாட்டின் தரம் இன்று பல மடங்கு பெருகி இருப்பினும், உங்கள் நகரின் நிலமை பல மடங்கு கீழ் போயிருப்பதை உணர்கிறேன்.
    காட்டில் இருப்பதை பொல மேடு, பள்ளம், கற்கள் நிறைந்த சாலை. திறந்த கழிவு நீர் பாதை. முற்றிலும் பொருப்பற்ற நிலயில் வாழும் மக்கள். இவ்வளவு அழுக்கு வாழ்க்கை வாழ்கிறோம் என்பது கூட தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்.
    உங்கள் பிள்ளைகள் விளயாட ஒரு சிரு பூங்கா கூட இல்லை. இருக்கும் ஒரிரு இடமும் புதர்கள் அடர்ந்து பராமரிக்கபடாமல் இருக்கிறது.
    இந்த பேரழிவிர்க்கு காரணம் அரசு அதிகாரிகள் மட்டுமல்ல் - ஒரு பொருப்பற்ற நிலையில் வாழும் நீஙகளும் இதற்கு முழு காரணம்.
    சாலையில் எவ்வளவு குண்டு குழிகள் இருந்தாலும், புலம்பிக்கொண்டு வளைந்து நெளீந்து தினமும் சென்று விடுகிறீர்கள். சரியாக கட்டப்படாத கழிவு நீர் கால்வாயில் எவ்வளவு துர்நாற்றம் வந்தாலும், மூக்கை மூடி கொண்டு அடுத்த வேலைகளை பார்க்கிறீர்கள். உங்கள் இல்லத்தை பெருக்கி குப்பையை தெருவில் கொட்டுகிறீர்கள்.
    இப்படி ஒரு பொருப்பற்ற வாழ்க்கை வாழ்ந்தால், இன்னும் 5 வருடங்களில் உங்கள் நகரம் மனித வாழ்க்கைக்கு ஒவ்வாத ஒரு இடமாக வெகு விறைவில் மாறிவிடும். ஆனால், அது தெரியாமல் எருமை மாட்டுக் கூட்டம் போல் நீங்களும் ஒரு மந்த வாழ்க்கை வாழ்வீர்கள்.
    சாக்கடைகளை திறந்த வெளியில் விட்டால், மழையில் கெட்ட நீர் ஊரி, உங்கள் வீட்டுக்கிணற்று நீர் கெட்டுப்ப்போகும். மூன்று கிணறுகள் இது போல் கெட்டு போய் இருக்கிறது. இன்னும் மற்றவைகளுக்கும் இதெ நிலை வர வெகு நாட்கள் இல்லை.
    எல்லாவற்றிர்க்கும் காரணம், சுலபமான வழியை கைய்யாண்டு, எதிர் காலத்தை பற்றி கவலை இல்லாத மெத்தன வாழ்கை வாழ்வதே ஆகும். நாளை உம் பிள்ளைகளும் பேரன் பேத்திகளும் பெரும் துயரத்துடன் வாடும் நிலயை உருவாக்கி இருக்கிறீர்கள்.
    இவ்வளவு படித்தவர்கள் வாழும் தெருவிலே ஒரு மரம் கூட சாலையில் இல்லை. சாலை ஒர மரங்களிருந்தால், அதனால் கிடைக்கும் பயன் தெரிந்தும் கூட இதை செய்யாமல் இவ்வளுவு வருட காலம் எப்படி இருந்தீர்கள்?
    அப்படி என்ன உஙகளுக்கு அவ்வளவு ஒரு அலட்சியம் உங்கள் பிள்ளைகளின் எதிர் காலத்தில் அக்கறை இல்லையா?
    தெருவின் அன்றாட பிரச்சனைகளை அலசி பராமரிக்க ஒரு குழு அமைத்து சாலை துப்புறவு, மரம் நடுதல், போன்ற சின்ன சின்ன தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டாமா?
    'கலாம்' களும், 'நாராயண மூர்த்தி' களும், 'மன்மொகன் சிங்' களும் ஒரு பக்கம் நாட்டை உயர்த்த பாடு படுகிறார்கள். உங்களால் ஆனதை நீங்களும் செய்து, வாழும் இடத்தை நல்ல இடமாக வைத்துக் கொள்ளுதல் உங்கள் கடமை இல்லையா?
    ஒரு குழு அமைத்து மாதத்திர்க்கு ஒரு முறை ஒன்று சேருங்கள் - சாலையை சுத்தம் செய்யுங்கள் - கழிவு நீரை தேங்க விடாதீர்கள் - மரங்களை வளருங்கள் - பூங்காவை பராமரித்து உம் பிள்ளைகள் விளயாட வழி செய்யுங்கள்.
    உங்களில் பலர் என்னை போலே ஒய்வு பெற்ற அதிகாரிகள் தாம். இன்னும் 10 அல்லது 20 வருடங்கள் தான் நாம் இந்த மண்ணில் இருக்கப் போகிறொம். ஒரிரவு உறங்கி மருநாள் உணராமல் உயிர் பிரியும். அதற்க்கு முன்னால் உங்களுக்கு நல்ல வாழ்க்கை வழங்கிய இந்த சமுதாயத்திற்க்கு ஏதாவது நல்லது செய்ய முயற்சி செய்யுங்கள்.
    குடும்ப தலைவிகள் தொலைக்காட்சியில் 12 மனி நேரம் செலவிடும் நேரத்தில் ஒரு சில மணி நேரத்தை, தெரு மேம்பாட்டிற்க்கு செலவிட வேண்டும்.
    சில யோசனைகள்:
    1) தெருவின் தேவைகளை பராமரிக்க ஒரு குழுவை உருவாக்குஙள்.
    2) ஆண்டு சந்தாவாக 100 - 200 வரை எல்லாரிடமும் வசூல் செய்யுங்கள்.
    3) பெண்களிடம் பண வசூல் மற்றும் பூங்கா சீரமைப்பை ஒப்படையுங்கள்.
    4) ஆண்கள் - சாலை பராமரிப்பு, சாலை ஒரத்தில் மரம் நடுதல், அதன் பராமரிப்பு, கழிவு நீர் பராமரிப்பு, தெரு விளக்கு பராமரிப்பை கவனியுங்கள்.
    5) 6 மாதத்திற்க்கு ஒருமுறை, அனைவரும் பூங்காவில் திரண்டு நன்கு வசிக்கும் சூழலை உருவாக்க நேரம் ஒதுக்குங்கள்.
    6) அரசு செய்து தர வேண்டிய வசதிகளை உடனுக்குடன் போராடி கேட்டு பெருங்கள்.
    7) மெத்தனத்தை குறையுங்கள்!!
    8) உங்களது பக்கத்து தெருக்களிலும், இதேபோல் செய்ய ஆவன செய்யுங்கள்.

    எல்லோரையும் குறை சொல்ல முடியாது. 'Leadership skill' இருப்பவர்கள் மற்றவர்களை ஒன்று திரட்டி வழி நடத்திச் செல்ல வேண்டும். நீங்கள் இது நாள் வரையில் பெற்ற அனுபவத்தை உஙகள் தெருவின் முன்னேற்றத்துக்கு பயன் பெறுமாறு ஆட்க்களை வழி நடத்தி செல்ல வேண்டும்.
    உங்களால் இயன்றதை உடனே செய்யுங்கள்.
    ==============================================

    Thursday, October 05, 2006

    MGR um, Karunanidhi um, Jayalalitha um NAASAMAI pogattum...(rel 2)

    (due to technical isues I had to repost this piece again. sorry for the inconvenience)

    தலைப்பு உங்கள் மனதை புண் படுத்தி இருந்தால் என்னை மன்னித்து விடுங்கள்.

    எதற்க்காக இந்த தலைப்பை வைத்தேன் என்று பார்போமா?

    கடந்த வாரம் நண்பர்கள் சிலருடன் சில ஆக்கபூர்வமான செயல்களை செய்ய சென்னை மாநகரை சுற்றினோம்.
    ஆக்க செயல்களில் ஒன்று, சில நூறு மரங்களை நட இடம் தேர்வு செய்வது.
    கோடம்பாக்கத்திலிருந்து தொடங்கி தாம்பரம் வரையிலான இடங்களில் ஒரு ஆட்டோவில் சுற்றினோம்.

    வழிதோறும் பல மாடிக்கட்டிடங்கள் கட்டப் பட்டு வருவதைக் கண்டோம். சென்னையின் வ்ளர்ச்சி ஒரு பக்கம் மகிழ்ச்சியை தந்தாலும் பயணத்தில் நான் கண்ட ம்ற்ற விஷயங்கள் மனதை மிகவும் பாதித்தது.

    உங்கள் பார்வைக்கு சில:

    சியாரச் சென்ற சிட்றுண்டியில் 10 வயது சிறுவன் 'table' துடைத்துக் கொண்டிருந்தான். படித்து சந்தோஷமாக இருக்க வேண்டிய வயதில் கடின வேலை செய்து கொண்டிருக்கிறான். அவனிடம் பேச முற்பட்டபோது அவன் முதலாளி குறுக்கிட்டு 'என்னடா வாய் பாத்துட்டு நிக்கே. போய் தட்ட எடுத்து வை' என்று முறைத்தார்.

    சாலையில் நாங்கள் சென்ற 'ஆட்டோ'வும் மற்ற வாகனங்களும் போட்டி போட்டுக் கொண்டு சாலை விதியை மீறிச் சென்றன.
    தெரு 'signal' விளக்குகள் வெறும் அலங்கார விளக்கை போலே ஒருவராலும் மதிக்கப்படாமல் இருந்தது. ஒட்டுணரிடம் கேட்டேன் "என்னப்பா இப்படி 'red' ல போறியே 'risk' இல்லையா?" அதர்க்கு அவன் பதில் 'அதெல்லாம் அப்படித்தான் சார்". ஒருவர் பின் ஒருவர் செல்லாமல் அனைவரும் ஒரு ஆட்டு மந்தயை போல் செல்கிறார்கள். நானும் இதே மாதிரி மந்தையில் ஒருவனாக சென்றவந்தான் என்பது நினைவுக்கு வந்தது.

    ல இடங்களில் தெருவின் பெயர் பலகைகள் மேலே சுவரொட்டிகள் ஒட்டப் பட்டு இருந்தன. வழி நெடுகிலும் எல்லா சுவர்களிலும், தொலைபேசி 'junction box' களிலும், மரங்களிலும், பேருந்து நிலயங்களிலும் சுவரொட்டிகளின் சாம்ராஜ்ஜியம் கண்ணுக்குத் தெரிந்தது.

    ங்காங்கே தோண்டப்பட்ட சாலைகள், பணி முடிந்ததும் மீண்டும் சரியாக மூடப்படாததால் அவதிப்படும் மக்களின் அவல நிலை.
    ஓரிடத்தில் பள்ளி விட்டு திரும்பும் பிள்ளைகள் சாலையில் நடைபாதை என்று தனியாக இல்லாததால் வாகனங்களுக்கும், பள்ளங்களுக்கும் நடுவில் கஷ்ட்டப்பட்டு புத்தக சுமயுடன் செல்லும் காட்சி மனதை வருத்தியது.

    புளி மூட்டையை ஏட்றி செல்வது போல், பிள்ளைகளும், பெண்களும், வயதானவர்களும் ஏறவும் முடியாமல், இறங்கவும் முடியாமல் அல்லல் படும் காட்சி பல பேருந்து நிலையங்களில் நடந்தேறியது.

    இன்னும் பல பல அவலங்கள் எல்லா இடத்திலும் - சொல்லிக்கொண்டே போகலாம் எழுத இடம் போறாது.

    அவைகளுக்கு நடுவே, முன்னேற்றங்களும் தென் படாமல் இல்லை - புதிய புதிய தொழிர்சாலைகள், புதிய 'technology' யின் வருககைள், 100 தொலைக்காட்சி 'channel' கள், அனைவரிடத்தும் 'cell phone' கள், எராளமான கார்கள், மற்றும் பல. ஆனால், இவைகளால் ஒரு சிலருக்கு மட்டுமே நன்மை கிடைக்கிறது. சாதாரண நிலையில் இருக்கும் மனிதன் இன்னமும் அன்றாட வாழ்க்கை வாழ மிகவும் கஷ்ட்டப்பட்டுக் கொண்டுதான் இருக்கரான். அவன் வாழ்க்கை தரம் உயரவே இல்லை. அவனை சுற்றி வளரும் வளர்சியால் அவனுக்கு ஒரு பயனும் பெரிதாக இல்லை.

    10 வயதில் வேலை செய்யும் சிறுவனின் எதிர்காலமும், சாலையில் பயணம் செய்ய கஷ்ட்டப்படும் மக்களும், சுவரொட்டியால் அசிங்கப்படும் இடங்களும், சுகாதாரமற்ற சூழலும், இன்னும் பல பல துயரங்களு்க்கும் யார் காரணம்?

    சுதந்திரத்திர்க்கு பிறகு, அரசு பொருப்பில் இருந்து கொண்டு இந்தத் துயரங்களை சரி செய்யாதவர்கள் தானே?
    சுயநலமும், கயமையும், சூதும், திருட்டும் சேர்த்து இவர்கள் நம் நாட்டையும், நம் வாழ்வையும் கெடுத்தவர்கள்/கெடுப்பவர்கள்.

    அதனாலேயே சாபம் இடுகிறேன் - M.G.R ரும், கருணாநிதியும், ஜெயலலிதாவும் அவர்கள் கூட்டாளிகளும் அறிந்து தவறு செய்திருப்பின் அவர்கள் அனைவரும் நாசமாய் போகட்டும்.

    சகோதர, சகோதரிகளே வாரத்தில் ஒரு சில மணி நேரத்தை பொது நலத்திற்க்கு செலவு செய்யுங்கள். சுயநலமாக இருக்காதீர்கள். கிடைக்கும் நேரத்தில், சினிமா பார்த்தொ, டிஸ்கோ ஆடியொ, தூங்கியோ நேரத்தை வீணாக்காதீர்கள். ஆக்க பூர்வமாக ஏதேனும் செய்து, வாழ்க்கையில் அடி மட்டத்தில் இருப்பவனும் நல்ல வாழ்க்கை வாழ உங்களால் இயன்றதை செய்யுங்கள்.

    வாழ்க வளமுடன்!!!