Wednesday, November 08, 2006

இலவசமாய் தந்துவிடு (கவிதை)

தூக்கம் இல்லை என்றால்
இலவசமாய் கூட பஞ்சணை வேண்டாம்

பசி இல்லை என்றால்
இலவசமாய் கூட உணவு வேண்டாம்

பார்வை இல்லை என்றால்
இலவசமாய் கூட நிறங்கள் வேண்டாம்

பாசம் இல்லை என்றால்
இலவசமாய் கூட சொந்தங்கள் வேண்டாம்

உண்மை இல்லை என்றால்
இலவசமாய் கூட நண்பன் வேண்டாம்

கண்ணே, உன் காதல் இல்லை என்றால்
மரணத்தை தந்து விடு. இலவசமாய்!!!


-BNI

பி.கு: போட்டிக்கு எழுதினது இல்ல. போட்டிகதை இங்கே - லாட்டரி கோவிந்தன் ( தேன்கூடு போட்டிக்கு )

9 comments:

said...

Good One.

said...

Thanks Sivabalan!

Anonymous said...

இலவசம் எனில்
மரணிக்கவும் தயங்கார்
இவ்வையகத்தார்.
இலவசம் கூட
ஒரு இலவசத்தை
எதிர்பார்கும் காலமிது
அன்பன்
ஈஸ்வர்சிவகிருஷ்ணன்

said...

நன்றி ஈஸ்வர்சிவக்ரிஷ்ணன்.

இலவசம் கூட இலவசத்தை எதிர்பார்க்கும் - டக்கர்!

Anonymous said...

simple and good.

said...

அனானி, நன்றி!

Anonymous said...

ALAGAA IRUKKU KAVIDHA.. KAVIDHAA..

said...

அனானி, நன்றி!

Anonymous said...

Kavuja kooda varumaa ungalku.
super thala.