Thursday, November 09, 2006

ஜாதிகள் இருக்குமடி பாப்பா...

இணையத்தில் நிலவி வரும் ஜாதி வெறித் 'தாக்குதல்கள்' பெரும் துயரத்தைத் தருகிறது.

ஒரு பக்கம் இவர் அவரை சாடுவதும்; இன்னொரு பக்கம் அவர் இவரை சாடுவதும்; நடுவில் சிலதுகள் என்னடா நடக்குது என்று புரியாமல் வருந்துவதும் தினமும் நடந்தேறுகிறது.

ஊரில் மக்களை ஏய்ப்பவர்கள் பலர் இருக்க இப்படி ஜாதி பற்றி விதண்டாவாதம் பேசி விவாதிப்பது எல்லாம் தேவையா?

அணைந்த பிரச்சனையை (அல்லது அணையும் நிலையில் உள்ள) பிரச்சனையை இணையத்தில் இப்படி அலசி அதை அணையவிடாமல் இருக்க செய்யும் முயற்சி மடத்தனம் இல்லையா?

பள்ளி, கல்லூரி மாணவர்கள் பலர் நம் பதிவுகளை படிக்கிறார்கள். உங்கள் வீட்டு பிள்ளை களும் இதில் உண்டு.
உங்கள் பதிவிலிருந்து அவர்கள் தெரிந்து கொள்ளும் பாடம் என்னவாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

"டேய் நான் சங்கரன் பையன் டா. நான் கடவுளுக்கு சமம் டா. நீ கீழ் ஜாதி. நீ தீட்டு டா"
"டேய் நான் குப்பனோட பையன் டா. என் குடும்பத்த கஷ்டப்படுத்தின பார்ப்பானை விட மாட்டேண்டா. ஒரு கை பாக்கரேண்டா அவன"
இப்படி இந்த வயதிலிருந்தே அவர்கள் 'தயார்' நிலையில் தான் வளர வேண்டுமா?

சிறு வயதில் ஏற்பட்ட ஜாதிக் கொடுமைகளால் தான், இணையத்தில் ஜாதியை பற்றி பேசி, தங்கள் ஒடுக்கப்பட்ட இனத்தவருக்கு தொண்டு செய்வதாக சிலர்.
சிலர், நான்தான் பெரியவன் என்ற ரீதியில் மற்றவரை மட்டம் தட்டியும் கிண்டலடித்தும் பொழுதை போக்குகிறார்கள்.
சிலர் 'பார்ப்பனீய' கலாச்சார அடையாளங்களை ஒழித்தால்தான் இரு பக்கமும் ஒன்றாக்க முடியும் என்கிறார்கள்.
பல குழப்பவாதிகள், மனதளவில் அழுக்கை வைத்துக் கொண்டு மிகவும் கேவலமான பதிவுகள் எல்லாம் கொடுக்கிறார்கள்.

எதை சாதிக்க முயல்கிறோம்?

நீங்கள் யார்?
1) ஜாதி வெறி இன்னும் இருக்கு. அதை ஒழிச்சுட்டுதான் மறு வேலை. இணையத்தில் 'உயர்' ஜாதிக்காரன தினமும் திட்டி அதை ஒழிப்பேன்.
2) நான் உயர்ந்த ஜாதி. கீழ் ஜாதி காரன் கீழ தான் இருக்கணும். எனக்கு சமமா அவன் வரக் கூடாது.
3) ஜாதி வெறி இருந்தது. இன்னும் கொஞ்ச இடத்தில் இருக்குது. ஒடுக்கப்பட்டவனுக்கு உண்மையான உதவி நேரிடையாகச் செய்வேன். இணைய தாக்குதல் எல்லாம் waste of time.
4) சும்மா டைம் பாஸுக்கு ஜாதி வெறி இருக்குன்னு பேசறேன். பேசுவதைத் தவிர வேற ஒண்ணும் செய்ய மாட்டேன்.
5) சும்மா டைம் பாஸுக்கு ஜாதி வெறி இல்லன்னு பேசறேன். பேசுவதைத் தவிர வேற ஒண்ணும் செய்ய மாட்டேன்.
6) என் வழி தனி வழி. யாருக்கும் தொல்லை இல்லா வழி.

ஜாதி யை வைத்து ஒடுக்குபவர்கள் இன்னும் இருக்கிறார்கள் என்று கூறுபவர்கள். உங்கள் ஊரிலோ உங்கள் அலுவலகத்திலோ இப்படி 'ஒடுக்கும்' கயவர்களின் பெயர்/முகவரி யை பதியுங்கள்.
என் சொந்த செலவில், அந்த நபருடன் தொடர்பு கொண்டு, அவர்கள் மன ஓட்டத்தை அறிந்து அவர்களை திருந்த என்ன வழி என்று பார்க்கிறேன்.

ஒருவரையாவது ( இன்னும் ஒடுக்கிக் கொண்டிருந்தால்) திருத்தலாமே ?


அதேபோல் இணையத்தில் நான் கூறிய மேலே உள்ள வகையராக்களில் எந்தெந்த பதிவுகள் உள்ளது என்றும் பின்னூடுங்கள். இதை எல்லாம் படித்து, கோர்த்து நமது மந்தையில் உள்ள கருப்பு ஆடுகள் யார் என்று ஒரு black-list பதிவு அடுத்ததாகக் போடுகிறேன்.

திருந்த/திருத்த வேறு என்னதான் வ்ழி? ஒரு பொதுவான OATH ரெடி செய்து எல்லாரையும் எடுக்கச் சொல்லலாமா?

தெளிவாகுங்கள் நண்பர்களே!

வருத்தத்துடன்,
-BadNewsIndia

பி.கு: இணையத்தில் எழுத ஆரம்பித்தது, ஊரில் ரோடு சரி இல்லை, தண்ணி இல்லை, லஞ்சம், ஊழல் இதைப் பற்றி எல்லாம் எழுதத் தான். இங்கே வந்தால், அதை விட பெரிய பிரச்சனையாக ஜாதி பேச்சு பெரிதாக நாறுகிறது. அரசியல்வாதியே பரவால்ல போலருக்கே.
GOOGLE'ல் உலகம் முழுவதும் படம் பிடித்து zoom செய்து பார்க்கும் படி செய்திருக்கிறார்கள் என்று ஒரு நண்பர் சொன்னார்.
ஆவலுடன், அமெரிக்காவையும், ஐரொப்பாவையும் மற்ற நாடுகளையும் கண்டு களித்தோம். அந்த ஊரில் உள்ள வசதிகளும், வாழ்வின் தரமும் உயரத்தில் இருந்து பார்த்தாலே 'பளிச்' என்று தெரிகிறது.
சென்னையையும் அதை சுற்றி உள்ள இடங்களையும் பார்த்த எனக்கு பெறுத்த அதிர்ச்சி. மற்ற நாடுகளில் எல்லாம் சாலைகள் கருப்பாக பார்ப்பதர்க்கு நேர்த்தியாகத் தெரிந்தது.
சென்னை மாநகரில் எங்கு பார்த்தாலும் ஒரு பொட்டு கருப்பு கூட கண்ணுக்கு தெரியவில்லை. சாலையெல்லாம் மண் நிறத்தில் வாயிளித்து பார்க்கும் அவலம் ஊர் முழுவதும்.
வருடா வருடம் கிடைக்கும் MLA யின் 1 கோடியும், MP யின் 2 கோடியும், பல கோடி வரிப் பணமும் எங்கய்யா போவுது ? ஹ்ம்!! இந்த பதிவுக்கு சம்பந்தம் இல்லாதது. அதை தனியா அலசறேன். இப்பொழுதைக்கு ஜாதி பிரச்சனைக்கு ஒரு முடிவு என்னன்னு பார்ப்போம்.

61 comments:

said...

ஜாதி என்று பதிவில் தலைப்பு வைத்தால் டகால் என்று படிக்க வரும் கூட்டமும் அதிகம்.

ஜாதியின் மேல் உள்ள ஈர்ப்பா, அல்லது சுவாரஸ்யமா ஏதாவது எழுதி சண்ட போட்டிருப்பாங்க என்ற நினைப்பா?

அதையும் சொல்லிட்டு போங்க.

Anonymous said...

ஜெய், மனசுக்குள்ள பெரிய பாரதியார்னு நெனைப்பா?

said...

பிழைப்புவாத அரசியல் இயக்கக் கொள்கை சார்ந்த/ ஊறிய பகுத்தறிவுப் பார்டிங்களுக்கு பேட் நியூஸா இப்படிப் பதிவு போட்டிருக்கீங்களே!

முதலில் ஒழிக்கப்பட வேண்டியது அவனவன் அசந்தா அடுத்தவன் மீது அநாவசியமாக எல்லாவற்றிலும் எப்போதும் ஆதிக்கம் செலுத்தவேண்டும் என்ற குணாதியத்தைத் தானுங்க!

ஆதிக்க குணம் இவனுக்கு மட்டும்தான்னு கூவி ஆதிக்கம் செலுத்துறவங்கதான் பகுத்தறிவுடையவர்கள்!

said...

அனானி, வருகைக்கு நன்றி.

நான் ஒரு சாதாரணன் சார்.

பாரதியார் மாதிரி இனி ஒருத்தன் வரப் போறதில்ல.

said...

அழகு தமிழில் ஒரு 3 அனானி பின்னூட்டங்கள் வந்தன.

பின்னூட்டத்திர்க்கு நன்றி.

தமிழில் போடாம ஏதோ பாஷைல போட்டிருக்கீங்க. ஒண்ணும் புரியல. அதனால மட்டுறுத்தப்பட்டது.

சாரி! whatever, same to you ;)

said...

hariharan,

//முதலில் ஒழிக்கப்பட வேண்டியது அவனவன் அசந்தா அடுத்தவன் மீது அநாவசியமாக எல்லாவற்றிலும் எப்போதும் ஆதிக்கம் செலுத்தவேண்டும் என்ற குணாதியத்தைத் தானுங்க!//

ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்று இரு தரப்பிலும் நினைப்பவர்கள் திருந்தத்தான் வேணும்.

அது சரி, 1,2,3,4,5 - நீங்க எங்க நிக்கறீங்கன்னு சொல்லலியே?

said...

'கருத்து' கூறிய மேலும் 2 அனானிக்கு நன்றி!

தமிழ் அல்லாத மொழியாதலால் மட்டுறுத்தப்பட்டது.

நல்ல கருத்தாழம் கொண்ட கருத்துக்கள். நீங்களும், நீங்கள் இருக்கும் இடமும், உங்கள் சுற்றமும் சிறக்கும்.

வாழ்த்துக்கு நன்றி! same to you!

said...

//அது சரி, 1,2,3,4,5 - நீங்க எங்க நிக்கறீங்கன்னு சொல்லலியே? //

தங்களது இந்த வகைப்படுத்தலில் நானில்லை!

என்னால் யாருக்கும் பாதிப்பில்லாமல் என்வழியில் ஓடிக்கொண்டிருக்கிறேன்!

said...

hariharan,

//அது சரி, 1,2,3,4,5 - நீங்க எங்க நிக்கறீங்கன்னு சொல்லலியே?

தங்களது இந்த வகைப்படுத்தலில் நானில்லை!
என்னால் யாருக்கும் பாதிப்பில்லாமல் என்வழியில் ஓடிக்கொண்டிருக்கிறேன்!
//

ஓ, அப்ப 6) என் வழி தனி வழி. யாருக்கும் தொல்லை இல்லா வழி. அப்ப்டின்னு ஒண்ண போட்டுடறேன்.

said...

சரி, இதுவரைக்கும் ஒருத்தர் தான் அவர் நிலையை சொல்லி இருக்காரு.
( அதுவும், என் வழி தனி வழின்னு சொல்லிட்டாரு ).

நிறைய பேர் படிக்கிறீர்கள் என்று தெரிகிறது. உங்கள் நிலையை சொல்ல விருப்பமில்லையோ? அல்லது நீங்களும் 6 ஆ?

சில/பல அனானிகள் மட்டும், அவ்வப்போது அவர்கள் சீரிய சிந்தனைகளை அனுப்பிக் கொண்டே இருக்கிறார்கள். எவ்வளவு கருத்தாழங்கள். சூப்பர். ( யாருப்பா அங்க, அந்த கொசு மருந்து எங்க? )

வாழ்க பாரதம்!

said...

BNI அய்யா,

எனக்கு தெரிந்து தமிழ் நாட்டில் "ஜாதி இரண்டொழிய வேறில்லை".

தமிழர்கள் என்று ஒரு ஜாதி; ஜாதி வெறி பிடித்து அலையும் திராவிட தமிழர்கள் என்பது மற்று மொரு ஜாதி.

பாலா

said...

bad news,
7.ஏழாவதா ஒரு பாய்ண்ட சேத்துக்கோங்க. என் வழி தனி வழிதான் ஆனா எவனும் வெரட்டுனா, மிரட்டுனா
பதிலுக்கு அவர்வழிதான் என்வழியும்.

நான் இருக்கறது சவுதிங்கண்ணா இங்க பல்லுக்கு பல்;கண்ணுக்கு கண்தான்.
எனக்கு இது ரொம்ப பிடிக்கும்.
என்றென்றும் அன்புடன்,
பா.முரளி தரன்.

Anonymous said...

ஜாதிய ஒழிக்கனும்னா, எல்லாரையும் ஒரு ஜாதி
ஆக்கீடனும். அதாவது, எல்லாருக்கும் பூணூலைப்
போட்டு எல்லாரையும். பிராமணராக்கீடுங்க.
அப்புறம் வேதங்கள சொல்லிக் கொடுங்க.
அப்ப எல்லாருக்கும் நல்லறிவு வந்திடும்.
அப்புறம் சண்டையே வராதுதானே.
நல்ல ஐடியாவா? :-)

said...

//சிறு வயதில் ஏற்பட்ட ஜாதிக் கொடுமைகளால் தான், இணையத்தில் ஜாதியை பற்றி பேசி, தங்கள் ஒடுக்கப்பட்ட இனத்தவருக்கு தொண்டு செய்வதாக சிலர்.
சிலர், நான்தான் பெரியவன் என்ற ரீதியில் மற்றவரை மட்டம் தட்டியும் கிண்டலடித்தும் பொழுதை போக்குகிறார்கள்.//
அதே! அதே!!

//இணைய தாக்குதல் எல்லாம் waste of time.//
ஆனால், இப்படியான விவாதமும் நல்லவைக்குத் தான். வலையுலகில் நுழைந்து தான் நான் பலவற்றை கற்றுக் கொண்டேன். ஆனால், too much of anything is good for nothing. டோண்டுவை திட்டுபவர்கள் போலியை திட்டுவதில்லை. போலியை திட்டுபவர்கள் டோண்டுவை விட்டுவிடுகிறார்கள்.

கடவுள் இருக்கிறார் என்று சொல்பவர்களை விட கடவுள் இல்லை என்று சொல்பவர்கள் தான் கடவுளை பற்றி நிறைய பேசுகிறார்கள். அதே தான் ஜாதி விஷயத்திலும். இதனால், தமிழ்மணத்தை விட்டு ஓடியவர்கள் ஏராளம். அவர்களில் சிலரிடம் நான் கேட்டபோது அவர்கள் பெரும்பாலும் சொல்வது சாதி சண்டையைத் தவிற அங்கு வேறெதுவும் இல்லை என்பது தான்.

//பாரதியார் மாதிரி இனி ஒருத்தன் வரப் போறதில்ல.//
பாரதியும் நம்மில் இருந்து வந்தவர் தான். அவர் கடவுள் இல்லை.

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
said...

மேலே உள்ளது, ஏதோ ஒரு அனானி, லக்கிலுக் என்ற பேரில் போட்டது.

nothing bad in the comment. just a line making fun of LuckyLook.

கெட்ட அனானிய ஒழிக்க ஒரு நிவாரணி இருக்கா?

Anonymous said...

ஜாதி இந்தியாவின் சாபக்கேடு,
ஜாதிகள் இருந்து விட்டுப் போகட்டும் ஆனால் , ஒருவன் பிறந்த ஜாதியைக் கொண்டு அவனை இழிவாகப் பார்க்கும் குணத்தை அழிக்க வேண்டும். மனிதனை மனிதனாகப் பார்க்கும் பண்பை வளர்க்க பெண்கள் முன் வரவேண்டும், இயல்பாக நடைமுறையில் உள்ளதைக் கூறுகிறேன் அம்மணிகள் பொறுக்க வேண்டும், முட்டாள் தனத்தையும், முடப்பழக்கங்களையும் ஆணாதிக்கவாதிகள் உண்டாக்கியிருந்தாலும் பெண்கள் தான் உரமூட்டி வளர்க்கின்றனர். குறிப்பாக பெண்கள் கல்லூரிகளில் இனம் பார்த்துத்தான் குழுவாகின்றனர் சிலர்இதை மறுக்கலாம் உண்மை எப்பவும் கசக்கும், நாம் இன்ன ஜாதி நீ இன்னாரோடு தான் பழக வேண்டும் என்பதைக் கூறி வழியனுப்பும் பெண்மணிகளைப் பார்த்திருக்கிறேன். ஒரு நூற்றண்டு முன்பு வரை அடிமையாக இருந்து வந்த இனம் மேலே வந்து இன்று நம்மையே இழிவாகப் பேசுகிறான்பார் நமக்கு இணையாக கல்வியில், வளரப்பார்க்கிறான் இவர்களுக்கு இடஒதுக்கிடு வேறு என மனம் புழுங்குவோர் உண்டா இல்லையா என்ற கேள்வியும் கூட எழுவதால்....
இன்னு மெரு பெரியார் தேவை போல் உள்ளது...
அன்பன்
ஈஸ்வர்சிவகிருஷ்ணன்

said...

bala, கருத்துக்கு நன்றி!

//எனக்கு தெரிந்து தமிழ் நாட்டில் "ஜாதி இரண்டொழிய வேறில்லை.
தமிழர்கள் என்று ஒரு ஜாதி; ஜாதி வெறி பிடித்து அலையும் திராவிட தமிழர்கள் என்பது மற்று மொரு ஜாதி.
//

மேலே சொன்னது போல ஒரு 'குத்தலாக' பேசுவதை தான் முதலில் குறைக்க வேண்டும் சார்.
எல்லா திராவிட தமிழர்களும் ஜாதி வெறி பிடித்தெல்லாம் அலைவதில்லை.
infact, இணையத்தை படிக்க ஆரம்பிக்கும் வரை ஊரில் என் சுற்றத்தில், எந்த வெறி பிடித்த ஆட்களும் இருந்ததாக நினைவில்லை.

இங்குதான் இரு தரப்பிலும் அழுக்குப் பார்வை பார்க்கும் ஒரு சிலர் இருக்கிறார்கள். அவர்கள் தானாக திருந்த வேண்டும்.

அது சரி பாலா சார், 1 ~ 6 ல் உங்கள் நிலைபாடு என்ன?

நன்றி!

said...

முரளி, கருத்துக்கு நன்றி.

ரொம்ப துடிப்பா இருக்கீங்க.

//7.ஏழாவதா ஒரு பாய்ண்ட சேத்துக்கோங்க. என் வழி தனி வழிதான் ஆனா எவனும் வெரட்டுனா, மிரட்டுனா
பதிலுக்கு அவர்வழிதான் என்வழியும்.
//

ஆளாளுக்கு ஒரு பாய்ண்ட் சேத்துட்டே போனா முடிவில்லாம போயிடுமே.
மனிதர்கள் பலவிதம்.ஒவ்வொன்றும் ஒருவிதம்தான்.

ஆனால், கூடி வாழணும்னா சில அட்ஜஸ்ட்மெண்ட் எல்லாருமே பண்ணணுமே.

//நான் இருக்கறது சவுதிங்கண்ணா இங்க பல்லுக்கு பல்;கண்ணுக்கு கண்தான்.
எனக்கு இது ரொம்ப பிடிக்கும்.//

சவுதி மாதிரி tit-for-tat செய்தால் பிரச்சனை குறையத்தான் செய்யும். ஆனால், அந்த வாழ்வில் ஒரு சுதந்திரமும் சுவையும் இருக்குமா?

said...

அனானி, வருக வருக.
அனானிகளில் கூட்டத்திலும் ஒரு நல்ல சிந்தனை இருக்கே. பரவால்ல.

//ஜாதிய ஒழிக்கனும்னா, எல்லாரையும் ஒரு ஜாதி
ஆக்கீடனும். அதாவது, எல்லாருக்கும் பூணூலைப்
போட்டு எல்லாரையும். பிராமணராக்கீடுங்க.
அப்புறம் வேதங்கள சொல்லிக் கொடுங்க.
அப்ப எல்லாருக்கும் நல்லறிவு வந்திடும்.
அப்புறம் சண்டையே வராதுதானே.
//

ரொம்ப நல்ல யோசனை. நடைமுறைக்கு தான் சரி வராது. நல்லறிவு வர வேதம் எல்லாம் படிக்க வேண்டாம். வேதம் படிச்சவனுக்கு எல்லாம் நல்லறிவு இருக்கும்னு சொல்ல முடியாது.

எல்லாரும் ஒரு ஜாதி ஆக வேண்டாம்க. எல்லா ஜாதிகளும் இருக்கட்டும் - மக்களுக்கி இடையே இருக்கர வேண்டாத வெறுப்பு தான் ஒழியணும்.
வினாயக சதுர்தி கொழுக்கட்டையும் வேணும், ஈத் பிரியாணியும், க்ரிஸ்மஸ் கேக்கும், மாரியம்மன் திருவிழா கூழும் வருஷா வருஷம் கெடைக்கணும்.
இதுக்கு நடுவில் பகுத்தறிவு பேசும் அறிவியல் வாதிகளும் வேணும்.
ஒண்ணோடு ஒண்ணு அடிச்சுக்காம இருக்கும் பக்குவமும் வேணும்.

said...

சீனு, வருகைக்கு நன்றி!

//ஆனால், இப்படியான விவாதமும் நல்லவைக்குத் தான். வலையுலகில் நுழைந்து தான் நான் பலவற்றை கற்றுக் கொண்டேன். ஆனால், too much of anything is good for nothing. டோண்டுவை திட்டுபவர்கள் போலியை திட்டுவதில்லை. போலியை திட்டுபவர்கள் டோண்டுவை விட்டுவிடுகிறார்கள்.
//

வலையுலகில் நல்ல விஷயங்களை கற்றுக் கொள்வது நல்லது. ஆனால், இந்த மாதிரி ஜாதிச்சண்டை வாதிகளின் கூவல்கள் படித்தால், நல்ல மனம் கொண்ட உங்களின் மனதிலும் ஒரு bias வந்துவிடும் அபாயம் இருக்கிறது. உறுதி மனம் படைத்தவராயின் அந்த அபாயம் இல்லை. ஆனால், பலர் ரொம்ப சுலபமா influence ஆயிடுவாங்க. (அதனால் தான் அரசியல் செய்றவனுக்கு ரொம்ப ஈசியா நெனச்ச காரியம் முடியுது).

//தமிழ்மணத்தை விட்டு ஓடியவர்கள் ஏராளம். அவர்களில் சிலரிடம் நான் கேட்டபோது அவர்கள் பெரும்பாலும் சொல்வது சாதி சண்டையைத் தவிற அங்கு வேறெதுவும் இல்லை என்பது தான்.//

ரொம்ப சரியான விஷயம். ஒரு ஆக்க பூர்வமா உபயோகிக்க வேண்டிய இணையத்தை இப்படி ஒருவரை ஒருவர் தூற்றிக்கொள்ள பயன் படுத்துதல் ரொம்பக் கொடுமை. நம் தலையில் நாமே மண்ணை வாரிப் போட்டுக்கொள்ளும் அவலம் இது.
எல்லாருமா சேந்து அன்றாட வாழ்க்கைக்கு வேண்டிய சுகாதாரம், தண்ணீர் மற்ற வசதிகள் இல்லாம இருக்கர நெலமைய பேசி highlight பண்ணி ஒரு noise எழுப்பினா, எல்லாருக்கும் நல்லதா முடியுமே.

//பாரதியும் நம்மில் இருந்து வந்தவர் தான். அவர் கடவுள் இல்லை.//

பாரதி போன்ற சுயநலம் கருதாத சீரிய கருத்துடைய படைப்பாளி இனி வரப்போவதில்லை என்பது என் கருத்து. அவர் கடவுள் எல்லாம் கிடையாது. ஆனால், அவர் வாழ்ந்ததும், தியாகம் செய்ததும், நமக்கு விட்டுச் சென்றதும் பார்க்கும் போது மற்றவரெல்லாம் எம்மாத்திரம்!

said...

/அது சரி பாலா சார், 1 ~ 6 ல் உங்கள் நிலைபாடு என்ன?

BNI அய்யா,

1 தான் என் நிலைப்பாடு.தாங்கள் தான் உயர்ந்த ஜாதி தமிழர்கள் என்று பறை சாற்றிக் கொள்ளும் பெரியார் சீடர்களான திராவிடத் தமிழர்கள் மனம் திருந்தி,மனிதர்களாக மாறி,நியாயமாக ,நேர்மையுடன் அனைவரையும் சமமாக பாவிக்கும் நிலைப்பாடு வரும் வரை "ஜாதி இல்லை" என்று என்னால் பம்மாத்து பண்ண முடியாது.
இவர்களின் ஜாதி வெறி ஒழிய வேண்டும் என்று, ஒடுக்கட்டப்பட்டவர்களுக்காக ஒலிக்கும் குரலாக என் குரல் ஒலிக்கும், அது வரை.

பாலா

Anonymous said...

//எல்லா ஜாதிகளும் இருக்கட்டும்//

நல்ல சிந்தனை BNI அவர்களே. ஜாதிகள் வாழ்க!

said...

ஈஸ்வர்சிவகிருஷ்ணன், கருத்துக்கு நன்றி சார்!

//ஒரு நூற்றண்டு முன்பு வரை அடிமையாக இருந்து வந்த இனம் மேலே வந்து இன்று நம்மையே இழிவாகப் பேசுகிறான்பார் நமக்கு இணையாக கல்வியில், வளரப்பார்க்கிறான் இவர்களுக்கு இடஒதுக்கிடு வேறு என மனம் புழுங்குவோர் உண்டா இல்லையா என்ற கேள்வியும் கூட எழுவதால்....
இன்னு மெரு பெரியார் தேவை போல் உள்ளது...
//

நூறாண்டு காலத்துக்கு முன் எதனால் ஒடுக்கப்பட்டிருந்தார்கள்? பணமும் படிப்பும் மதிப்பும் இல்லாததனால்.
பெரியார் மாதிரி ஆட்கள் வந்து தூக்கி விட்டு இன்று இட ஒதுக்கீடு எல்லாமே வந்தாச்சே. இனி வரும் காலங்களில் கிடைத்த சந்தர்பத்தை பயன் படுத்தி எல்லாரும் மேலே வரலாமே, மேலே வந்தவர்கள் (க்ரீம்) மற்றவர்கும் கை கொடுத்து தூக்கி விடலாமே.
அதை விட்டு ஒடுக்கியவர்களின் பேரனுக்கு பேரனை ஏன் இழிவாக பேச வேண்டும் என்று தான் கேட்க்கிறேன்.

மனதிருந்தால் மார்கமுண்டு இல்லையா?

said...

பாலா,

//1 தான் என் நிலைப்பாடு.தாங்கள் தான் உயர்ந்த ஜாதி தமிழர்கள் என்று பறை சாற்றிக் கொள்ளும் பெரியார் சீடர்களான திராவிடத் தமிழர்கள் மனம் திருந்தி,மனிதர்களாக மாறி,நியாயமாக ,நேர்மையுடன் அனைவரையும் சமமாக பாவிக்கும் நிலைப்பாடு வரும் வரை "ஜாதி இல்லை" என்று என்னால் பம்மாத்து பண்ண முடியாது.
//

உங்கள் நிலையை தெளிவாக கூறியதர்க்கு நன்றி. இப்படியே எல்லாரும் எதுக்காக இன்னும் ஜாதி பேசரீங்கன்னு சொன்னீங்கன்னா ஒரு 'round-table' மாநாடு போட்டு ஒற்றுமைக்கு வழி வகுக்கலாம்.

"அவனை நிறுத்த சொல்லு நான் நிறுத்தறேன்" என்ற மனோபாவம் இருக்கும் வரை, இது தீராதே சார்.

இதுவரை ஒரு தரப்பு பின்னூட்டம் மட்டும் தான் வந்திருக்கிறது. அடுத்த தரப்பில் வெறும் அனானிகள் வந்து தமிழ் அல்லாத புரியாத பாஷயில் ஏதோ எழுதி அனுப்பினார்கள்.

U.N மாநாடு போட்டா இரு பாலஸ்தீன் பிரச்சனையே சரி ஆயிடும்.

ஆனால், இங்கு ஒரே மொழி ஒரே கலாச்சாரம் உள்ள நண்பர்களுக்குள் இவ்வளவு வெறுப்பு இருப்பது பெரிய வேதனைதான்.

said...

அனானி, சூப்பர்ங்க. அதெப்படி நல்லத விட்டுட்டு வேண்டாதத கரெக்டா பிடிச்சுக்கிட்டீங்க?

////எல்லா ஜாதிகளும் இருக்கட்டும்//
நல்ல சிந்தனை BNI அவர்களே. ஜாதிகள் வாழ்க!
//

said...

பிஎன்ஐ சார்,

ரொம்ப நல்ல பதிவு.

முன்னம உசந்த சாதிக்காரன், நீ இழிவானவன், தாழ்ந்தவன்னு மட்டம் தட்டிட்டு இருந்தான். இப்ப அது மாறி, இவன், உசந்த சாதிக்காரன மட்டம் தட்டிகிட்டு இருக்கான்.

ஆக மொத்தம் இவனுங்களால, சாதி இல்லாம உயிர் வாழ முடியாது.

மனுசன மனுசனா மதிக்காம, படிச்ச பயலுகளும், படிக்காத முட்டாள்கள் மாதிரி நடந்துக்கிறாங்க.

ரொம்ப பின்னூட்டம்ல சொல்ல முடியாது, இத லிங்க் பண்ணி தனியா ஒரு பதிவுல போடறேன்.

இன்னமும் சாதி இருக்கு. நா உசந்த சாதிக்காரனுக்கும் துதி பாட மாட்டேன், தாழ்ந்த சாதிக்காரனுக்கு துணையா உசந்த சாதிக்காரன திட்டவும் மாட்டேன். சாதி பேசற எவனையும் எனக்குப் புடிக்காது. அத எதிர்ப்பேன். மனிதம்தான் என் வழி.

இது உங்க 1-6 ல எதுல வருதோ, அதுல சேத்துக்கவும்.

Anonymous said...

என் அக்கா அடிக்கடி ஒரு விஷயம் சொல்லுவார், சாதி என்பது பல ஆண்டுகளாக வேர் ஊன்றிப் போன ஒரு ஆலமரம். வெட்டினாலும் அது திரும்ப முளைக்கும், அதை வேரோடு பிடிங்கி எறிவது தான் புத்திசாலித்தனம். ஆனால் அதை ஒரே இரவில் மாற்ற நினைப்பது முட்டாள்த்தனம். என் பங்குக்கு அதைச் சுற்றி குழி வெட்டுகிறேன், நீயும் உன் பங்குக்கு அதை செய். ஒரு காலம் வரும் அதை வேரோடு பிடுங்கி சாய்க்கலாம் என்று. நம் பங்குக்கு எதாவது ஒரு விஷயம் செய்வோம்

said...

சோத்துக் கட்சி,

//இன்னமும் சாதி இருக்கு. நா உசந்த சாதிக்காரனுக்கும் துதி பாட மாட்டேன், தாழ்ந்த சாதிக்காரனுக்கு துணையா உசந்த சாதிக்காரன திட்டவும் மாட்டேன். சாதி பேசற எவனையும் எனக்குப் புடிக்காது. அத எதிர்ப்பேன். மனிதம்தான் என் வழி.
இது உங்க 1-6 ல எதுல வருதோ, அதுல சேத்துக்கவும்.//


ஹ்ம், நீங்க சொல்றத பாத்தா 3 தான் உங்க நிலை. நல்லது.


//மனுசன மனுசனா மதிக்காம, படிச்ச பயலுகளும், படிக்காத முட்டாள்கள் மாதிரி நடந்துக்கிறாங்க//

சரியா சொன்னீங்க!

அந்த காலத்துல ஒடுக்கணவனும் படிச்சவந்தான். ஏதோ ஒரு கெட்ட உந்துதலில் பண்ண வேலை அது.

யாருக்கும் இனி இந்த தப்பான உந்துதல் வர வேண்டாம். உந்துதல் தருகிற மாதிரி பேசவும் வேண்டாம்.

சரியாக விடறாங்களான்னு பாப்போம்.

said...

சார்லஸ்,

உங்கள் அக்கா ரொம்ப சரியா
சொல்லி இருக்காங்க.
இணையத்துல ஆலமரத்த சுத்தி
ப்ள்ளம் வெட்டாம , உறம்
போட்டு வளக்கப்
பாக்கறாங்க.

ஒரு வேளை போடறது உறம்
என்பது புரியலயோ?

-BNI

said...

//இணையத்துல ஆலமரத்த சுத்தி
ப்ள்ளம் வெட்டாம , உறம்
போட்டு வளக்கப்
பாக்கறாங்க//

BNI அய்யா,

ஆலமரம் நிழல் தரும் மரம்.அது சாதி பேதம் பார்க்காது அனைவருக்கும் நிழல் தரும்.

ஆனால் சாதி வெறியர்கள் வளர்ப்பது திராவிட கட்சிகள்/வன்னிய கட்சிகள் என்ற நச்சு மரங்கள்.

இந்த நச்சு மரங்களின் ஆணி வேரை பிடுங்காமல் சாதீய ஆணிவேர் வேறு எங்கோ ஆலமரத்தின் கீழ் உள்ளது என்று திசை திருப்பும் நாடகம் நடத்தப் படுகின்றது.

அது தான் பிரச்சனை.

பாலா

Anonymous said...

//நல்லறிவு வர வேதம் எல்லாம் படிக்க வேண்டாம்.//
உண்மையாவே நல்ல படி வேதத்தைப் படிச்சவங்க
நல்லறிவு, நல்லபண்பு உள்ளவங்களாத்தான் இருப்பாங்க.
1/2 வேக்காடுகதான் எல்லாத்தையும் குழப்புறது.
அதுக்காக வேத்தைக் குத்தம் சொல்லக் கூடாது,
மேடை கோணல் என்கிறமாதிரி.

//வினாயக சதுர்தி கொழுக்கட்டையும் வேணும், ஈத் பிரியாணியும், க்ரிஸ்மஸ் கேக்கும், மாரியம்மன் திருவிழா கூழும் வருஷா வருஷம் கெடைக்கணும்.//

சாப்பாட்டுக்காகவே சாதிய வச்சிருக்க விரும்பிறீங்க
நீங்க BAD தான்.

//இதுக்கு நடுவில் பகுத்தறிவு பேசும் அறிவியல் வாதிகளும் வேணும்.//

அவங்க எல்லாம் பையை நிரப்புறதுக்காக்
கத்துற அறிவில்லாவாதிங்க, தெரியுமா!
நல்லனானி

said...

பாப்பானுக்காக கண்ணீர் விடும் கெட்ட செய்தியாரே,

அது எப்படிங்க பாப்பான திட்டுனா கரெக்டா அந்த எடத்துல ஆஜராகி ஜாதி பேசாதே, பூணூல் ஒரு அடையாளம் என்று பஜனை பாடுகின்றீர்

சுந்தரவடிவேல் பதிவின் முக்கிய அம்சம் "they need respect". அதை உணர்ந்து கொள்ளாமல் அம்மிகள் பதிவுகள் போட்டு அதில் ஒரு நாதாரி சாபம் விடுகின்றதே - அங்கு போய் உங்கள் பிரசங்கத்தை ஏன் செய்யவில்லை?

said...

bala,

//இந்த நச்சு மரங்களின் ஆணி வேரை பிடுங்காமல் சாதீய ஆணிவேர் வேறு எங்கோ ஆலமரத்தின் கீழ் உள்ளது என்று திசை திருப்பும் நாடகம் நடத்தப் படுகின்றது.
//

உங்கள் கருத்து சரிதான். ஆணிவேரை பிடுங்குகிறோமோ இல்லையோ, atleast, தண்ணி ஊத்தாமலாவது இருக்கலாம் என்பதே என் எண்ணம்.


நல்ல கருத்து! இது எல்லா தரப்பினருக்கும் பொருந்தும்.

said...

அனானி,

////இதுக்கு நடுவில் பகுத்தறிவு பேசும் அறிவியல் வாதிகளும் வேணும்.//
அவங்க எல்லாம் பையை நிரப்புறதுக்காக்
கத்துற அறிவில்லாவாதிங்க, தெரியுமா!//

அப்படியும் ஒதுக்கிட முடியாது. எனக்கு தெரிந்த சில பகுத்தறிவாளர்கள், அவர்கள் கருத்தில் நம்பிக்கை கொண்டவர்கள்.
ஆனால், அவர்களின் கருத்துக்கு எதிர் கருத்து கொண்டவரை ஏளனம் செய்யாதவர்கள்.
ரோட்டுல மீட்டிங்க் போட்டு விநாயகரையும், சிவனையும், விஷ்ணுவையும் தராதரம் இல்லாமல் அரை கூவல் விட்டு தூற்றுபவர்கள் அல்ல.
இந்த ரோட்டுல மீட்டிங் போட்டு பகுத்தறிவ கத்தரவன் தான் பணப்பை ரொப்ப பார்க்கும் பார்ட்டி.

said...

அருண்மொழி,

//பாப்பானுக்காக கண்ணீர் விடும் கெட்ட செய்தியாரே,
அது எப்படிங்க பாப்பான திட்டுனா கரெக்டா அந்த எடத்துல ஆஜராகி ஜாதி பேசாதே, பூணூல் ஒரு அடையாளம் என்று பஜனை பாடுகின்றீர்
//

யாருக்காகவும் கண்ணீர் எல்லாம் விடலீங்க. அந்த அளவுக்கு நல்ல மனசெல்லாம் இல்லை.
இணையத்தில் எழுத ஆரம்பித்த பிறகு, ஒருவரை மட்டம் தட்டி எழுதும் மற்றவர் பதிவுகளை கண்ணில் படும்போதெல்லாம், என் எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறேன்.


நீங்க சொல்ற பதிவில் பூணூல் எல்லாம் கழட்ட தேவை இல்லை என்று சொன்னது சரிதான். பூணூல் அவர்களின் கலாசார அடையாளம். அதை ஏன் கழற்ற வேண்டும்? பொட்டும் யாரும் வெக்க வேணாமா? விபூதி? கழுத்தில் சிலுவை ( வெள்ளைக்காரன் செய்யாத அடக்குமுறையா) ?
முஸ்லிம்களின் குல்லா (பாபர் செய்யாத அடக்குமுறையா?) ?

அறிவு பூர்வமா இல்ல, உங்களின் எதிர் கேள்வி.

I give a damn, if the writer is a brahmin, or christian or muslim or dhalith or whoever. I just cant stand this stupid conflicts between these groups for stupid reasons.
sorry.

said...

Just saw this in a related blog by Sundara vadivel.

Selvas comments makes a lot of sense. READ this.

Sundaravadivels posting is here.

http://bhaarathi.net/sundara/?p=293

Selvas comments:
//
Yes, Sunddara vadivel is right. He told truth.We are facing this in the all kinda walks. And he did a good job. When a person ( Not a brahmin or anyone) give wrong expressions on other people , we should do like what sundara vadivel did. And such a thing is not need for this human society. But I want to know sundara vadivel’s caste. We (BC- backward caste) would like to destroy brahmin’s dominance on this society. I agree with this. But who likes to destroy our dominant on dalits( SC) . We are not facing like a isolation what SC are facing. I came from a small village which is in the Erode district. Mostly our villages have nearly 50 to 80 houses. In erode district dominant castes Gounder( Kongu Vellalar). Other caste people should respect this Gounder people . But this dominant caste don’t respect other caste people. Normally all villages have one or two houses of barber(nasuvan) , dress washer(vannan) , tree climber (Nadar) and people who are doing work on agriculture fields.All people of this Gounder community including childrens calls other caste people (though they are over 80 age) as singular (vada and poda) . And no one belongs to SC caste ride by vehicles into the Gounder area of village (mostly villages are separated by two areas). And they don’t have right to enter temples too. But dominant caste people can enter to lower caste ( sorry to call like this , but I have no idea how to identify people) areas and temple , but that people don’t want to do this. One time when a gounder guy was going on the way to his land ( this way over SC area) one SC guy was laying on his bed (kavutthu kattal) without knowldge , because of dark. For this incident a conference assembled and discussed what had to do. When this conference was going , a 10 people of gounder youngsters started to beat him. No one objected this. I was shocked. But I could not do anything.

Mr.sundara Vadivel you told about brahmins people’s looding over this society. You know most of the SC people are doing work in the farm land which belongs to dominant caste over the decades. But This people had been giving only waste food for that SC people instead of giving salary. So, you (dominant caste) are looding their great work over decades. But you did not give respect for that people, you did not give social status for that people. Even you don’t think they have a life.

Which brahmin beats other caste people. Which brahmin looding other people’s work over decades. I agree they are not doing hard work and they are having good money. But we are doing the same and doing much than them. Did you(sundara vadivel) give respect for lower caste people? Did you think about it when you called as singular . You faced only one day at only one incident , soon you got angry and posted this. Over decades they are called by very worst words and beated . If you really think thiss a worst think pls you should start a mission against this sin happening over dalits. You should give respect all dalit people. Congratulations.

Regards,
selva.
//

said...

My comment for Selva was this:

//
was really saddened by your comments. Its a pity that some people are still dominating others.
If you think you will understand that the dominance is not because of ‘caste’. Its only because of ‘power’ and ‘wealth’.
The only solution is to question the authority the dominating group has over the under privileged people.
The questioning should be done face-to-face in a decent manner which will make the dominator to realize his mistakes over time.
If you exchange bad words there is no way this issue will be resolved anytime soon.

Very thoughtful comments. Hope both the gangs here read and take value of it.
thanks,
BNI
//

said...

//வலையுலகில் நல்ல விஷயங்களை கற்றுக் கொள்வது நல்லது. ஆனால், இந்த மாதிரி ஜாதிச்சண்டை வாதிகளின் கூவல்கள் படித்தால், நல்ல மனம் கொண்ட உங்களின் மனதிலும் ஒரு bias வந்துவிடும் அபாயம் இருக்கிறது. உறுதி மனம் படைத்தவராயின் அந்த அபாயம் இல்லை. ஆனால், பலர் ரொம்ப சுலபமா influence ஆயிடுவாங்க.//
"ஆனால், பலர் ரொம்ப சுலபமா influence ஆயிடுவாங்க. " - அட! கரெக்டுங்க. முன்பெல்லாம் நான் திராவிடத்தில் ரொம்ப ஈடுபாட்டுடன் இருந்தேன். ஆனால், தமிழ்மணத்துக்கு வந்த பிறகு, வெறுத்திட்டேன்.

//பாரதி போன்ற சுயநலம் கருதாத சீரிய கருத்துடைய படைப்பாளி இனி வரப்போவதில்லை என்பது என் கருத்து.//
ம்ஹூம்...நினைத்தால் நாமளும் பாரதியாகலாம்ன்னு சொல்ல வந்தேன்.

said...

சீனு, வருகைக்கு நன்றி!

உங்களுக்கு திராவிடத்தின் மேல் ஈடுபாடு போச்சு.
இன்னும் பலருக்கு negative impact ம் ஏற்படலாம்.

அது சரி, உங்க profile'ல் இறுதி ஊர்வலத்தில் வரும் கூட்டம் வைத்துதான் நல்லவரா கெட்டவரா என்று தீர்மானிக்கப் படும் என்று சொல்லி இருக்கீங்க (பாரதி தவிர).
ஓரளவுக்கு சரிதான். ஆனா நிறைய பேர் மறைந்த பிறகு தான் அவங்களோட பெருமை தெரிஞ்சதாம். மொசார்ட், பாரதி மாதிரி இன்னும் நிறைய பேர் அந்த லிஸ்ட்ல இருக்காங்க.

என்ன கேட்டீங்கன்னா, மரண படுக்கைல இருக்கும் போது, இது வரை வாழ்ந்த வாழ்க்கையை யோசிக்கும் போது ஒரு 'வலி' வரக்கூடாது.

ஹிட்லர் மாதிரி ஆளுக்கு வலி எல்லாம் வராது. நம்பள மாதிரி சாதாரணனுக்கு சொல்றேன்.

Anonymous said...

செல்வா சொன்ன மாதிரி இன்னும் பல எடத்துல பெரிய ஜாதி ஆளுங்க பணம் இல்லாதவன அடக்கித்தான் வச்சிருக்காங்க ஐயா.

குணிந்து குணிந்து கூன் விழுந்துடுச்சு எங்க ஆளுங்களுக்கு.

நிமித்தி வைக்க யார் வருவான்னு தெரியல.

பெரியார் பாப்பான அடி பாப்பான அடி னு சொல்லிக் கொடுத்தாரே ஒழிய பணம் இல்லாதவன ஒடுக்காதேன்னு சொல்லாம போனவரு.

குத்தரவன் நிறுத்தணும். குணியரவன் நிமிறணும்.
வழி தெரியல ஐயா. காலம் தான் பதில சொல்லணும்.

நல்லா எழுதுங்க. படிச்சாவது ஒதவாக்கர திருந்துவானா பாப்போம்.

said...

//ஆனால், அவர்களின் கருத்துக்கு எதிர் கருத்து கொண்டவரை ஏளனம் செய்யாதவர்கள்.
ரோட்டுல மீட்டிங்க் போட்டு விநாயகரையும், சிவனையும், விஷ்ணுவையும் தராதரம் இல்லாமல் அரை கூவல் விட்டு தூற்றுபவர்கள் அல்ல.
இந்த ரோட்டுல மீட்டிங் போட்டு பகுத்தறிவ கத்தரவன் தான் பணப்பை ரொப்ப பார்க்கும் பார்ட்டி//

இந்த மாதிரியெல்லாம் செய்யாதவர்கள் உண்மையான, பெரியார் பாசறையில் கற்ற, செர்டிஃபைட், பகுத்தறிவாளனாக இருக்க முடியாது. அவர்கள் டூப்ளிகேட்.உள்ளே வருபவர்களை அறிவு சுத்தமாக நீக்கப்பட்டு வெளியே அனுப்பவது தான் பெரியார் பாசறை செய்யும் பகுத்தறிவு ட்ரைய்னிங்.இந்த ட்ரைய்னிங் இல்லாமல் திராவிட கட்சிகளில் உறுப்பினராக முடியாது.

பாலா

said...

தலைவா

படித்தவர்கள் இருக்கும் தமிழ்மணத்தில் குழாயடி சண்டை ரேஞ்சுக்கு ஜாதி சண்டைகளும், ஜாதி பெயர் சொல்லி வசைபாடுவதும் நடப்பதை கண்டால் மனது வெறுத்து போகிறது.

திருடனா பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது:-(

said...

செல்வன்,

//படித்தவர்கள் இருக்கும் தமிழ்மணத்தில் குழாயடி சண்டை ரேஞ்சுக்கு ஜாதி சண்டைகளும், ஜாதி பெயர் சொல்லி வசைபாடுவதும் நடப்பதை கண்டால் மனது வெறுத்து போகிறது.//

நீங்க சொன்னது ரொம்ப சரி. வசைபாடுபவர்களில் சிலர் சும்மா பொழுது போக்கிர்க்காக இப்படி செய்வதும் ரொம்ப நோக வைக்கிறது.

//திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது//

இதுவும் சரிதான்.

தூங்கரவங்கள எழுப்பலாம். தூங்கர மாதிரி நடிக்கரவங்கள?

said...

Bad News India,

முதலில் உங்களுக்கு இந்தியாவின் groung reality பற்றி அதிகம் அறிமுகமில்லையோ என்ற ஐய்யம் ஏற்ப்படுகிறது. ஏனெனில், சென்னை ரோடுகளைப் பற்றி அங்கலாய்த்து இருந்தீர்கள். ஆனால் உண்மையில் இந்த மண்ணின் ஆகப் பெரும்பான்மையான் மக்களின் வாழ்க்கை அதைவிட கேவலாமாக மாறியிருப்பது குறித்தல்லவா அங்காலாய்திருக்க வேண்டும். ஆம், கூகிள் சேட்டிலைட்டால் அந்த அவலங்களை சூம் செய்து காட்ட முடியாது என்பது உண்மைதான்.

சரி, சாதி விசயத்துக்கு வருவோம். முகவரி கேட்டிருந்தீர்கள் அல்லவா, முதலில் சில முகவரிகள் தருகிறேன், அங்கு சென்று உங்களது பிரச்சாரத்தை செய்யுங்களேன்:

#1) பாப்பட்டி, கீரிப்பட்டி, தின்னியம்.

#2) தமிழைப் பழிக்கும், தனது கல்வி நிலையங்களில் தனிப் பந்தி வைக்கும் - காஞ்சி மடம்.

#3) சிதம்பரத்தில் தமிழில் பாட விடாமல் செய்த கோயில்.

#4) சீரங்கத்தில் கருவறைக்குள் நுழையவிடாமல் செய்யும் சாதி வெறி.

#5) ராமேஸ்வரம் கோயிலின் சமையலறை வாயிலின் முன்பு (கோயிலின் வெளிப் பிராகரத்தில் இடது கைப்பக்கம்(8வது அல்லது 7 வது கிண்று அருகில் என்று நினைக்கிறேன் - 7 மாதத்திற்க்கு முன்பு பார்த்தது) மக்கள் கடந்து செல்லும் பாதையில் எல்லார் பார்வையிலும் படும் வகையில் - 'இங்கு பார்ப்பனர்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு' என்ற பலகை.


இவற்றுக்கு ஏதாவது வழி சொல்லுங்கள் Bad News India. அது தவிர்த்து ராஜவனஜின் பதிவில் சில பதில்கள் கொடுத்துள்ளேன். அங்கும் உங்களுடன் விவாதம் செய்ய ஆவலாக உள்ளேன்.

அசுரன்

said...

அசுரன்,

//முதலில் உங்களுக்கு இந்தியாவின் ground reality பற்றி அதிகம் அறிமுகமில்லையோ என்ற ஐய்யம் ஏற்ப்படுகிறது//

ground reality தெரியாமல் இல்லை. ஆனால், நான் எழுத ஆரம்பித்தது சுகாதாரப் பிரச்சனைகளும் மற்ற தேவையான (சாலை, தெருவிளக்கு,..) வசதிகளைப்பற்றித்தான்.
நீங்கள் கூறும் ground reality பற்றி எழுதி தீர்வு காணும் அளவிர்க்கு விவரங்கள் தெரியாதவன் என்றும் வைத்துக் கொள்ளலாம்.
இங்கு வந்து பார்த்த பிறகுதான், priority change ஆனது.

roads can wait. before that we have to address our indifferences within ourselves who is in the blog world.
ஓன்றுபட்டால்தான் ஒரு சில முன்னேற்றங்களாவது ஏற்படுத்த முடியும்.

We have to make enough noise to gain outside attention.

இங்கேயே முட்டி மொதிக்கிட்டு இருந்தா வெளியில் நம் சத்தம் கேட்க்காது அமுங்கி விடும் அபாயம்.

நல்ல கேள்விகளை தொடுத்துள்ளீர்கள். ஒவ்வொன்றுக்கும் யோசித்து பதில் அளிக்கிறேன்.

இதை படிக்கும் மற்றவர்களும், அசுரனின் கேள்விக்கு 'யோசித்து' ஒரு தீர்வு சொல்லக் கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி!

(நீங்கள் கூறிய #5 ராமெஸ்வர பிரச்சனை நானும் பார்த்த ஞாபகம் இருக்கிறது. நான் அதைக் கண்டு ஒதுங்கவில்லை. வரிசையில் நின்று செய்ய வேண்டியதை செய்ததாகத் தான் ஞாபகம்.)

(5 பிரச்சனையும் ஒரு சாராரையே சாடும் பிரச்சனை. பரவாயில்லை. பேதமின்றி அனைவரையும் நிறுத்திப் பார்க்க வேண்டும். அணுகுவதில், குறுகிய கண்ணோட்டம் இல்லாதிருந்தால் எல்லோரும் கை கொடுபார்கள் என்பது என் எண்ணம்)

நன்றி!

said...

என்னடா 30 பின்னூட்டங்களா இன்று என்ற வியப்பில் ஒவொன்னா பாத்தா, எல்லாமே நம்ப அனானித் தம்பி வேற வேற பேர்ல advice மழையா பொழிஞ்சிருக்காரு.
அவரும் அவர் குடும்பமும் வாழும் விதத்தை ஒரு role-model ஆ எடுத்துக்கிட்டு நம்மளயும் follow பண்ண சொல்றாரு.
நல்ல மனம்தான். but, I am happy with what I am now. No thanks :)

said...

அசுரன்,

நீங்கள் வரிசை படுத்திய 5 'ஜாதிப் பிரச்ச்னை'களிக்கு தீர்வு காண என் மனதில் தோன்றியது ஒவ்வொன்றாக...

//#1) பாப்பட்டி, கீரிப்பட்டி, தின்னியம்.
//
மேலே உள்ள ஊர்களில் நடக்கும் அடக்குமுறை வெறும் ஜாதியை வைத்து மட்டும் வருவது அல்ல. பணமும் வலிமையும் படைத்த கும்பல் செய்யும் பொறுக்கித்தனம்.
ஒருவன் வாயில் மலத்தை கரைத்து ஊற்றும் கொடுமைகள் செய்யும் மன நிலை கொண்டவன், நீங்களும் நானும் புத்திமதி கூறினால் விழித்துக் கொள்ளும் நிலையில் இருக்க மாட்டான்.
அந்த ஊர்களில் இருக்கும் ஒடுக்கப்பட்டவர்களின் ( ஒடுக்குபவர்களின் மேல் உள்ள) dependency ஐ குறைக்க வேண்டும். இது அரசு மட்டுமே செய்ய முடியும்.

வெறும் பண உதவியோ, விழிப்புணர்வோ மட்டும் போதாது.

அரசு சட்டத்தைக் கொண்டுதான் ஒடுக்குபவனை இருக்கி சமநிலையை உருவாக்க வேண்டும்.

உள்ளாட்சித் தேர்தல்களில் இட ஒதுக்கீடு வழங்கியது நல்ல விஷயம். ஒரு முன் உதாரணம்.

ஜெயித்து வரும் பஞ்சாயத்து தலைவர்களுக்கு, தகுந்த பாதுகாப்பும் தேவையான வசதிகளையும் உடனுக்குடன் செய்து கொடுத்தால், இந்த அடக்குமுறை ஆட்களிடம் இருந்து விடுபடும் நாள் கூடிய விரைவில் வரும்.

தலைவனும் பொது நலத்துக்கு பாடுபட்டால், அந்த மக்களுக்கு, வெளிச்சம் வெகு தூரத்தில் இல்லை.
ஆரம்பக் கல்வி பயின்றவர்கள் அந்த ஊர்களில் 50% க்கும் கீழ். அதை உயர்த்த வேண்டும்.
வாழ்வின் தரத்தை உயர்த்த வழி பிறந்தால், ஒடுக்குபவனையே ஒடுக்கலாம் ஒரு நாள்.

'பார்பனீயம்' பேசுவது #1 க்கு உதவாது.

சரிதானே?

said...

அசுரன்,

//#2) தமிழைப் பழிக்கும், தனது கல்வி நிலையங்களில் தனிப் பந்தி வைக்கும் - காஞ்சி மடம்.
//

சங்கர மடப் பள்ளிக்கூடங்களில் ஜாதி அடிப்படையில் 'கவனிக்கப்படுவது' கேவலம்தான்.
லக்கி லுக் அவர் பதிவில் சொன்னது போல் சிறு வயதிலே இந்த மாதிரி ஒதுக்கி வைத்தால் வாழ்க்கையே திசை திரும்பிப் போகும் அபாயம் இருக்கிறது.
50 வருடத்திர்க்கு முன்னர் நாம் இருந்திருந்தோம் என்றால், பார்ப்பனீயம் ஒழிக என்று கோஷம் போட்டு கையில் தீப்பந்தத்துடன் போய் சங்கர மட வாசலில் நின்று எதிர்ப்பை தெரியப்படுத்தலாம் என்றிருப்பேன்.

இருப்பது 2006.
ஆள்வது பகுத்தறிவாளிகள்.

சங்கர மடம் போன்று கல்வி நிலையங்களில் விஷம் சேர்ப்பவர்களை எதிர்த்து சட்டப்படி வழக்குத் தொடர்ந்து ரெண்டு வாத்தியாரை உள்ளே போட்டால் மற்றவர் எல்லாம் அடுத்தக் கணம் திருந்தி விடுவார்கள்.

யார் செய்வார்கள்? என்று நீங்கள் கேட்பது கேட்கிறது.
இதர்க்குத்தான் சொல்கிறேன் நம்முள் இருப்பவர்கள், நல்லது நடக்க வேண்டும் என்று உண்மையில் எண்ணுபவர்கள், time-pass க்காக எழுதாதவர்கள் ஒன்று பட்டு ஒரு குழு அமைத்து, இந்த மாதிரி சின்ன சின்ன விஷயங்களை (petition போடுவது மாதிரி )செய்ய ஆரம்பிக்கலாம்.

இப்படி ஓண்ணாகணும்னா, 'சுடு' பதிவுகளும், ஒரிவரை ஒருவர் சாடுவதும், இரு தரப்பிலும் குறைய வேண்டும் என்பது தான் என் கருத்து.

எல்லாருக்கும் வயசாகுது. 'வேடிக்கை மனிதரை போல் வீழாமல்' நம்மால் முடிந்த நல்ல மாற்றத்தை அமைக்க என்ன செய்யணும்னு பேசலாமே. அந்த கோணத்தில் சிந்தித்து எல்லாரும் எழுதணும்.
(வலை பதிவர் சந்திப்புகளில், இதைப் பற்றி பேசணும்)

பி.கு. இப்பதான் வந்தியத்தேவனின் பதிவில் தமிழ் சசி பற்றி எழுதியிருப்பதில் இடப்பட்டுள்ள பின்னூட்டங்களை எல்லாம் பார்த்து விட்டு வந்தேன். இந்த ரேஞ்சுல போனா விளங்குமா நம்ம ஊரு? பொழுத போக்கறதுக்காக என்ன வேணா எழுதுவதா? கஷ்டம்.
இந்த மாதிரி சைகோக்கள் வேண்டுமென்றால் என்ன வேணும்னாலும் எழுதலாம் (சொல்லித் திருந்தாது). நாமும் அந்த நிலைக்கு போகணுமா என்பதே என் பதிவின் சாரம்.

சரிதானே?

said...

bad News India,

எனக்கு சில கேள்விகள் உள்ளது,

//'பார்பனீயம்' பேசுவது #1 க்கு உதவாது//
// பணமும் வலிமையும் படைத்த கும்பல் செய்யும் பொறுக்கித்தனம்//
//அரசு சட்டத்தைக் கொண்டுதான் ஒடுக்குபவனை இருக்கி சமநிலையை உருவாக்க வேண்டும்//

1) ஏன் பொருளாதாரத்தில் தாழ்ந்த உயர் சாதியினர் மேல் மட்டும் தீண்டாமை கொடுமைகள் நிகழ்வதில்லை?
2) ஏன் தற்போதைய தீண்டாமை ஒழிப்பு சட்டங்கள் அங்கே செல்லவில்லை?
3)பொருளாதார சுயசார்பை அவர்கள் எட்டுவதற்கு எந்த உணர்வு தடையாக உள்ளது?

//சங்கர மடம் போன்று கல்வி நிலையங்களில் விஷம் சேர்ப்பவர்களை எதிர்த்து சட்டப்படி வழக்குத் தொடர்ந்து ரெண்டு வாத்தியாரை உள்ளே போட்டால் மற்றவர் எல்லாம் அடுத்தக் கணம் திருந்தி விடுவார்கள்//

நோயின் காரணத்தை தீர்க்காமல் அதன் வெளிப்பாட்டை மட்டும் மருந்து கொடுத்து மட்டுப் படுத்தினால், அந்த நோய் வேறு வேறு வடிவங்களில் மீண்டும் மீண்டும் வெளிப்படும் அல்லவா?
இப்படி ஒரு அடக்குமுறையை சங்கர மடத்தின் மேல் நடத்த இன்றய நீதி முறையும் போலீசும் தயாரா என்பது ஒரு புறம் இருக்க, பிரச்சினையின் இந்த வெளிப்பாட்டுக்கு காரணமான "மறைபொருள்" அடக்குமுறைக்கு பின் வேறு வடிவத்தில் வராது என்பதற்கு என்ன உத்திரவாதம்?

said...

பாப்பாபட்டி கீரிப்பட்டி சாதியினரின் அடக்குமுறைக்கு முக்கிய காரணம் நீங்கள் குறிப்பிட்டது போல வளங்களின்(பணம் அல்ல) மீதான் அவர்க்ளின்(ஆதிக்க சாதிகளின்) ஆளுமை(நிலம், கிணறுகள், குளம் etc). இந்த கள்ளர் சாதியினர் அங்குள்ள தலித்துக்களைப் போலவே வறுமையான வாழ்க்கையே வாழ்கின்றனர் என்பதை மனதில் கொள்க. ஆனால், இந்த ஆதிக்க கருத்தியலின் ஒரு புள்ளி பார்ப்பினியம்தான் ஏனெனில் இது போன்ற ஒரு சமூக அமைப்பு எப்படி உருவானது என்று ஆய்வு செய்யுமிடத்து, ஒரு எடுத்துக்காட்டுக்கு, குடவோலை முறைக் காலத்தில், ஒருவர் குடவோலை முறைப்படி தேர்ந்தெடுக்கப்படும் போட்டியில் பங்கேற்ப்பதற்க்கான விதிமுறைகள் அப்பட்டமான மனுநீதி வர்ணாஸ்ரம அடிப்படையில் இருப்பது குறித்து குமரி மைந்தன் கட்டுரை எழுதியுள்ளார். ஆக, இப்படி வர்னாஸ்ரம சாதி பிரிவினை என்பது அனைத்து பண்பாட்டு, பொருளாதார அம்சங்களிலும் வெளிப்படுவதை மறந்துவிட்டு நீங்கள் அதற்க்கு எதிரான நடவடிக்கைகளை எடை போடும் பொழுது தவறான முடிவுக்கு சென்றடைகிறீர்கள். பசும்பொன் முத்துராமலிங்க தேவர் காலத்தில் தலித் தலைவரின் படுகொலையை ஒட்டி நடந்த கலவரங்களீன் போது ஒரு பார்ப்பன இன்ஸ்பெக்டர் ஒரு கிராமத்து தேவர் சாதியினரை கைது செய்ய செல்கிறார். அந்த தேவர் சாதி வெறியர்கள் அவரிடம் கூறுகிறார்கள்: "அய்யா, நீங்க மேல்சாதி. உங்க பேச்சுக்கு கட்டுப்பட்டு நாங்க வந்தாத்தான். அவன் கீழ்சாதிக்காரனும் நாளைக்கு எங்க் சொல்ல கேட்டு நடப்பான்". இது இந்து மதத்தின் அடிப்படை சாரமான, நீ அடிமையாக இரு, இன்னொருவனை அடிமையாக வைத்துக் கொள் என்ற அடிப்படையை வெளிப்படுத்துவதை கவனிக்கவும்.

இதே போல, அனைவரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்திற்க்கு எதிராக என்ன இருந்தாலும் பிராமிந்தான் சுத்தமானவங்க, தலித் பூசாரியா இருக்கிறத எப்படி ஏத்துக்க முடியும் என்றூ பலவாறு இடைச்சாதி முதல் தலித்துக்கள் வரை கருத்து தெரிவித்திருந்தது, பார்ப்பினியம் ஒரு பண்பாடாக இந்திய சமூகத்தின் மீது படர்ந்து இருப்பதை காட்டுகிறதா இல்லையா?

இவையனைத்தும் சம்பிரதாயம், புனிதம் என்ற பெயரில்தான் செய்யப்படுகின்றன.

ஆயினும், அதெ சம்பிரதாயமான நாட்டார் வழிபாட்டு முறைகள் குறித்த ஏளனப்பார்வை பார்ப்பினியம் ஒரு ஆதிக்க கருத்தியலாக இருப்பதை காட்டுகிறதா இல்லையா?

விவேக் போன்ற கழிசடைகள் கடவுள், மூடநம்பிக்கை எதிர்ப்பதாக பெயர் செய்துகொண்டு உண்மையில் உழைக்கும் மக்களின் இத்தகைய பண்பாட்டைத்தானே எதிர்க்கிறார்கள். மறுபக்கம் சங்கராச்சாரியாரை சந்தித்து பார்ப்பினிய எதிர்ப்பை நான் செய்யவில்லை என்று அங்கீகாரம் கோரியது மட்டுமின்றி அதை ஆனந்த விகடனில் பெருமையாக இந்த நவீன கொலைவானர், விவேக் விளம்பரப்படுத்தியது உண்மையா இல்லையா?

இங்கும் கூட ஒரு டோ ண்டு ஐய்யங்கார் ராகவன், தனது சாதிப் பெருமை பேசி திரிந்து மா. சிவக்குமாராலேயே கடுமையாக கண்டிக்கப்பட்டார், எனது தளத்திலும் கூட தனது சாதிப் பெருமையை வெளிப்படுத்திச் சென்றார்.

இது தவிர்த்து, நாட்டார் வழிபாட்டு முறைகளை சம்ஸ்கிருதமயமாக்கி அழித்து செரிப்பது, பசு பற்றீய போலி புனித கருத்துக்களைப் பரப்புவது, இந்து தத்துவமரபையே இந்தியாவின் ஒரே தத்துவ மரபாக வரலாற்றைத் திரித்து, பிற தத்துவங்களின் சிறப்பான பகுதிகளையும் பார்ப்பினியத்தின் உள்ளே வைத்து அடைக்கும் முயற்சி அகில உலக அளவில் வெற்றிகரமாக செய்யப்பட்டு வருகிறதே, அதை என்னவென்று சொல்கிறிர்கள்?

கர்னாடக சங்கீதம் சிற்ப்பானது, டப்பாங்குத்து கீழானது, வேதங்களும் , மந்திரங்களும் அறிந்தவன் சான்றோன் போன்ற கருத்துக்கள் ஓரளவு ஜனநாயகப்படுத்தப்பட்ட்வனிடம் வேண்டுமானல் குறைவாக இருக்கலாம். ஆனால் இந்தியாவின் பெரும்பாலான நடுத்தர வர்க்கங்களின் பண்பாட்டு கனவு, ஏகாதிபத்திய நவீன கலாச்சாரத்தையும், அடையாளப் பிரச்சனைக்கு பாப்பினிய சம்ஸ்கிருத கலாச்சாரத்தையுமே சுவீகரிக்கிறார்கள் - சாதி வேறுபாடின்றி. இந்த பண்பாட்டு அடக்குமுறையை எங்கு சென்று பேச?

ஒரேயொரு விசயம்தான், நீங்கள் இன்னும் பார்ப்பினிய எதிர்ப்பை பிறப்பால பார்ப்பனர்களை எதிர்ப்பதுடன் குழப்பிக் கொள்கிறீர்கள்.

என்னால் சில நூறூ பிறப்பால் பார்ப்பனர்களான பார்ப்பினிய எதிர்ப்பு ஆட்களைக் காட்ட முடியும்.

மேலும், பாப்பாபட்டி கீரிப்பட்டி உள்ளிட்ட 5 விவகாரங்களை கொடுத்ததது பார்ப்பினிய கருத்தியல் எந்தளவுக்கு நமது சாதாரண வாழ்க்கையுடன் பின்னிபிணைந்துள்ளது என்று காட்டவேயன்றி அதன் தீர்வு குறித்தான விவாதங்களை பிரதானப்படுத்தியல்ல.

இத்துடன், எதோ ஒரு தளத்தில்(மறந்து விட்டேன்) தங்களுக்கு இட்ட பதிலையும் இங்கு இடுகிறேன்.

***************
அடக்குமூறை என்பது நேரடியான வடிவில்(பொருளாதார மற்றும் கலாச்சார) ஆதிக்க சாதியினரான தேவர், கவுன்டர் போன்றோரிடமிருந்தே வருகிறது. ஆனால் இந்த விசயத்துக்கு தேவையான அதாவது ஆதிக்க சாதியினரின் அந்த நேரடியான அடக்குமூறையை நியாயப்படுத்தும் அந்த தார்மீக நியாயக் கருத்தை உருவாக்கும் தத்துவ மூலமாக பார்ப்பினியம் உட்கார்ந்து கொண்டிருப்பதை எப்படி எதிர்ப்பது. அதற்க்கு எடுத்துக்காட்டாகத்தான் சில விசயங்களைக் கொடுத்தேன்.

எப்படி ஏகாதிபத்திய காலனியாதிக்கம் நேரடியாக ஆட்சி செய்வது இனி வாய்ப்பில்லை என்பதை உணர்ந்து ஏகாதிபத்திய சுரண்டலை உறுதிப்படுத்தும் யார் வேண்டுமானாலும் பதவியில் உட்காரும் பரிணாம வளர்ச்சியடைந்ததோ அதே போல பார்ப்பினியம் என்னும் தத்துவமும், அதன் அடித்தளம்(கலாச்சார, பொருளாதார) பாதிக்காவண்ணம் அது கோடிட்ட வட்டத்திற்குள்ளேயே பவணி வரும் எந்த சாதிக்காரனும் அதிகாரத்துக்கு வரலாம் என்று பரிணாம வளர்ச்சியடைந்துள்ளது. இதுதான் அம்பேத்காரின் அனுபவமும் கூட, இந்த சட்டமன்ற சலுகைகளால் பலன் பெற்ற யாரும் இதன் அடித்தள மக்களுக்கு எந்த உதவியும் செய்யமாட்டார்கள் என்று சில வரிகளில் தனது வாழ்க்கை அனுபவம் மொத்தத்ததையும் தொகுத்து கொடுத்தார் அம்பேத்கார. அதாவது கறுப்புப் பார்ப்பனர்கள்.

கர்நாடக சங்கீதத்தை எத்தனை பேர் ரசிக்கிறார்கள்? ஆயினும் அது ஏதோ சிறந்த கலைப் படைப்பாக இன்று மாறியுள்ளதே ஏன்?

நாட்டார் வழிபாட்டு தெய்வங்களையும் பார்ப்பனமயமாக்கி அது சார்ந்த கலாச்சாரங்கள் அழிகிறதே அதை எப்படி தடுப்பது?(DD-யில் சிறப்பு நிகழ்ச்சியாக ஒளிப்பரப்பியா?).

ஊடகங்கள் யார் கையில் இருக்கின்றன? யாருக்கு சாதகமான கருத்துக்கள் பொதுக் கருத்தாக உருவாக்கப்படுகிறது.

2003 இறுதியில்(அக்டோ பர் அல்லது நவம்பர்) ஆனந்த விகடனில் ஒரு சிறுகதை ரொம்ப நைச்சியாக கருவறை நுழைவு பாப்பனனுக்கு மட்டுமே என்று நியாயப்படுத்தி எழுதியிருந்தது அதே புத்தகத்தில் அதற்க்கு அடுத்த பக்கத்தில் இஸ்லாம பெண்கள் தனி மசூதி ஆரம்பித்தது குறித்து ஒரு கட்டுரை. வார்த்தை ஜாலங்கள் மூலம் ஆக பிற்போக்கான ஒரு சம்பிரதாயத்துக்கு புனித வட்டம் கட்டி அதே வேளையில் அதற்க்கு அடுத்த பக்கத்தில் விஜயகாந்த பாணியில் இஸ்லாம் மதம் மட்டுமே பிற்போக்கான மதம் என்ற பொதுக் கருத்தையும் வலுப்படுத்தியது. இந்த நைச்சியான வேலைகளுக்கு எதிரான போராட்டத்தை எந்த தளத்த்ல் நடத்துவது என்பதையும் நீங்களே சொல்லுங்களேன்.


ராமேஸ்வரம் கோயிலில் இன்னும் சமையல் செய்யும் இடத்தில் இங்கு பார்ப்பனர்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு என்று உள்ளதே அதன் பொருள் என்ன? அதை பார்த்துக் கொண்டே சாமி கும்பிடச் செல்லும் மக்களின் பண்பாட்டு அடிமைத்தன்ம, சுயமரியாதையின் சாவு எங்கு புதைந்துள்ளது?

அதை தோண்டியெடுத்து ஒரு பண்பாட்டு புரட்சிக்கு வித்திட வேண்டியது எமது கடமையில்லையா?

ஒரு ஊத்தைவாயன் தமிழில் பூசை செய்யக் கூடாது என்கிறான் தமிழ் நாட்டில் உட்கார்ந்து கொண்டே, தமிழ் பூசை செய்யாமல் தடுக்க போலிஸ் பாதுகாப்பு, கோர்ட் தடை உத்திரவு, கலெக்டர் பந்தோபஸ்து... என்ன பூ சுற்றுகிறேர்களா பார்ப்பினியம் செத்து விட்டது என்று?

ஆடு மாடு கிடா வெட்டு தடை சட்டத்தின் நோக்கம் என்ன? மனிதாபிமானமா?

ஆடு கிடா வெட்டு சட்டத்தை நியாயப்படுத்தி மதன் எனும் பார்ப்பன வெறியன் ஒரு கட்டுரை முதல் பக்கத்தில் எழுதியிருந்தான். அதில் வரலாற்றில் இல்லாத ஒரு பொய்யைச் சொல்லி கிடா வெட்டு சட்டத்தை நியாயப்படுத்தி அதே நேரத்தில் பெரிய தெய்வங்கள் சிறப்பானவை என்று எமது முன்னோர்களான உழைக்கும் தெய்வங்களை அவமானப்படுத்தியிருந்தானே அந்த விபச்சாரத்தனத்தை நான் எந்த தளத்தில் எதிர்ப்பது? எனது எழுத்தை பிரசூரிக்கும் வெகு சன ஊடகம் எது? எமது ஊடக வெளி என்பதன் பரப்பெல்லை வெகு சொற்பம். ஆனால் இந்த ஆதிக்க கருத்தியலின் சூத்திரதாரிகளின் ஊடக எல்லையோ எல்லையின்றி பரந்து விரிந்தது. யாரிடம் பூ சுற்றுகிறீர்கள் அடக்குமுறை இல்லையென்று? வேண்டுமானல் சொரனையின்றி இரு என்று கேட்டுக் கொள்ளுங்கள்.

சம்ஸ்கிருதமயமான நாட்டார் வழிபாட்டு தெய்வங்களின் கோயில்களில் பலியிட்டால்(ஆயிரம் வருட பாரம்பரியம்) அதை மூன்று நாள் வேத பாராயணத்துடன் தீட்டு கழிக்கும் சடங்கு யாரை அவமானப்படுத்துகிறது?

இதையே சட்டத்தின் மூலம் செய்ததுதானே பார்ப்பினியம்?

ஏன் இந்த தொன்மையான, விலங்குகளை பலி கொடுக்கும் சம்பிரதாயத்தை உங்களது பார்பினியம் பிடுங்கி அழிக்கும் பொழுது உங்களுக்கு கலாச்சாரம் அழிகிறது என்ற கோபம் வரவில்லை.

ஆனால், சக மனிதனை இழிவுபடுத்தும் அதை விட கேவலமான கருவறை நுழைவு, தமிழ் பூசை போன்ற விசயங்களுக்கு உங்கள் அரசு ஆதரவாக போலிஸ் பந்தோபஸ்து போடுகிறதே?


இவையெல்லாம உங்களுக்கு முக்கியமில்லை என்கிற பட்சத்தில் பெரும்பான்மையின் அந்த பண்பாட்டு சீதனங்களின் மிச்ச சொச்சத்தை பாதுகாக்க சிறுபான்மையின் பண்பாட்டு அடக்குமுறையை ஒவ்வொரு வடிவத்திலும் எதிர்ப்பது எமது தவிர்க்க இயலா வரலாற்றுக் கடமையாகிறது.

இயக்கவியலின் அடிப்படையான சில விசயங்களைச் சொல்லி விட்டு முடிக்கீறேன். ஒரு அம்சம் இருக்கிறது எனில் அது தவிர்க்க இயலாமல் அதன் எதிர் அம்சத்தின் சார்பில்தான் நிற்க்கும். இவை இரண்டையும் ஊக்குவிக்கும் சமூக பொருளாதார காரணியின் பலத்தில் இவை நிற்க்கும், ஒன்றையொன்று எதிர்த்துக் கொண்டு. இதை பார்ப்பினிய எதிர்ப்புக்கு பொருத்திப் பார்க்கவும். பார்ப்பினியம் ஆதிக்க கருத்தியலாக இருப்பதற்க்கு ஆதாரமாகத்தான் பல்வேறு உதாரணங்களை தருகிறோம். இதன் எதிர் கருத்தும் இந்த சமூகத்தில் இருக்கிறது. இவை இருப்பதின் அடிப்படை சமூக ஏற்றத்தாழ்வு. அதை உறுதிப்படுத்துவ பார்ப்பினிய கருத்தியல். ஆக தத்துவம், பொருளாதாரம் இரண்டு நிலையிலும் போராட்டம் செய்யாமல் மாற்றம் வந்துவிடாது. நீங்களோ தத்துவம் நிலையில் போராட்டம் தேவையில்லை என்கிறீர்கள். மெக்காலேயின் கல்வி திட்டம் பற்றி தெரியும் என்று நினைக்கிறேன். தத்துவ தளத்தில் போராட்டத்தின் தேவையை மெக்காலே கல்வி முறையின் சமீபத்திய வெற்றியான மன்மோகன்சிங் பார்க்கும் பொழுது புரிந்து கொள்வீர்கள்.

அசுரன்

said...

rajavanaj,

//1) ஏன் பொருளாதாரத்தில் தாழ்ந்த உயர் சாதியினர் மேல் மட்டும் தீண்டாமை கொடுமைகள் நிகழ்வதில்லை?//

அவர்களுக்கும் கண்டிப்பா கொடுமைகள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கும். பணம் இல்லாதவன சொந்த அப்பா அம்மாவே மதிக்காத காலம் இது.
ஆனால் அப்படி 'உயர் ஜாதிக்கு' நிகழ்ந்தாலும் வெளியல தெரியப்போறது இல்ல. 2% தான் அவா மொத்த பேருமே. அதில 0.25% ஆளுங்க பொருளாதாரத்தில் பின் தங்கி இருப்பாளா?

தின்னியம்,கீரிப்பட்டி யில் எல்லாம் இருக்கும் கொடுமை, 'கொழுப்பினால்' வருவது.
நீங்க சொல்ற மருந்து - இறை வழிபாடு கூடாது, ஐயர்கள் கடவுளுக்கும் மனுஷனுக்கு broker கிடையாது, சம்பிரதாயங்களை களைவது, artificial பகுத்தறிவு புகுத்துவது.
இதெல்லாம் மருந்து கிடையாது.
உங்கள் பதிவில் பார்ப்பனீயம் காலில் சுற்றிய பாம்பு என்று சாடி இருந்தீர்கள்.
அதில் பிராமணரை சாடுவது என்பது, சுண்டு விரலில் இருக்கும் செத்த தண்ணீர் பாம்பை அடிப்பதர்க்கு சமம்.
மலைப் பாம்பு உடம்பை விழுங்கிக் கொண்டிருக்கிறது. அதை ஒன்றும் யாரும் செய்வது போல் தோன்றவில்லை.
பல விஷயம் அறிந்த நீங்களும் (26 வயதுதானா உங்களுக்கு? amazing), அசுரன் போன்றவர்களும், உண்மையான மலைப்பாம்பினை அடித்துக் கொல்ல வேண்டியதை யோசித்து எழுத வேண்டும்.

தண்ணிப்பாம்பும் அடிக்கலாம், கடைசியா. :)

said...

அசுரன், அருமையான பதில்கள்.
சிலதில் உடன்பாடும், பலதில் மறு கருத்தும் உள்ளது.
இன்னொருமுறை படித்துவிட்டு பொருமையாக பதில் கூறுகிறேன். பதில் ரெடி ஆனதும் உங்களுக்குத் தெரிவிக்கிறேன் :)

நன்றி!

said...

BNI,

//அவர்களுக்கும் கண்டிப்பா கொடுமைகள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கும். பணம் இல்லாதவன சொந்த அப்பா அம்மாவே மதிக்காத காலம் இது.
ஆனால் அப்படி 'உயர் ஜாதிக்கு' நிகழ்ந்தாலும் வெளியல தெரியப்போறது இல்ல//

நன்பரே புதிதாக உள்ளதே தகவல்???!!! அதாவது உயர்சாதியினரான அய்யர் அய்யங்கார் தேவர், கவுண்டர்.. போன்றோர் தீண்டாமைக் கொடுமை அனுபவிக்கின்றனரா?? :)

அசுரன் சொன்னபடி அந்த சாதிகளில் உள்ள ஆதிக்க சக்திகள் ( கவனிக்க எல்லோரும் அல்ல ) பார்ப்பனர்களின் மேலாதிக்கத்தை மனமுவந்து ஏற்கிறார்கள்; ஏனென்றால் அது "நான் அவனுக்கு கீழே இருக்கிறேன்.. நீயும் எனக்கு கீழே இரு" என்று கீழ் சாதியினரின் உணர்வு தளத்தில் எழுதும் முயற்சி ( அசுரன் சுட்டிக் கட்டிய தேவர் சாதி சம்பவத்தை கவனிக்க )

சரி ஒரு நாள்... ஒரு வேளை.. எல்லா பார்ப்பனரும் தாங்களாகவே முன் வந்து பார்ப்பனீயத்தை எதிர்த்தால் என்னவாகும்??? ( இது நடக்க சாத்தியம் இல்லை என்பது என் என்னம் )simple... ஆதிக்க சக்திகள் பார்ப்பனீயத்தை காப்பாற்ற பார்ப்பனீயர்களை தூக்கிக் கடாசும் வாய்ப்பு உள்ளது...

//தின்னியம்,கீரிப்பட்டி யில் எல்லாம் இருக்கும் கொடுமை, 'கொழுப்பினால்' வருவது//

நாங்கள் கேட்பது எங்கிருந்து அவர்களுக்கு 'கொழுப்பு' கிடைத்தது என்பதே..

//நீங்க சொல்ற மருந்து - இறை வழிபாடு கூடாது, ஐயர்கள் கடவுளுக்கும் மனுஷனுக்கு broker கிடையாது, சம்பிரதாயங்களை களைவது, artificial பகுத்தறிவு புகுத்துவது//

இறைமறுப்பு artificial என்றால் மதம் எப்படி natural என்று விளக்க முடியுமா?

நீங்கள் வெளிப்படையாக சொல்லக் கூட வேண்டாம்.. உங்கள் மனதிலாவது சிந்தித்துப் பாருங்களேன்..

உலகம் தோன்றிய போதே கடவுள் கோட்பாடு தோன்றியதா? எப்போது மனிதனுக்கு 'கடவுள்' தேவைப் பட்டார்? இந்த கோட்பாடு எப்படி 'மதம்' என்னும் நிறுவனம் ஆனது? விஞ்ஞானம் சொல்வது என்ன?


// உண்மையான மலைப்பாம்பினை அடித்துக் கொல்ல வேண்டியதை யோசித்து எழுத வேண்டும்.

தண்ணிப்பாம்பும் அடிக்கலாம், கடைசியா. :) //

தண்னிப்பாம்பல்ல நன்பரே.. பாம்புகளின் ஊற்றுக்கண்... :)

said...

உங்கள் பதிவில் பார்ப்பனீயம் காலில் சுற்றிய பாம்பு என்று சாடி இருந்தீர்கள்.
அதில் பிராமணரை சாடுவது என்பது, சுண்டு விரலில் இருக்கும் செத்த //தண்ணீர் பாம்பை அடிப்பதர்க்கு சமம்.
மலைப் பாம்பு உடம்பை விழுங்கிக் கொண்டிருக்கிறது. அதை ஒன்றும் யாரும் செய்வது போல் தோன்றவில்லை.
பல விஷயம் அறிந்த நீங்களும் (26 வயதுதானா உங்களுக்கு? amazing), அசுரன் போன்றவர்களும், உண்மையான மலைப்பாம்பினை அடித்துக் கொல்ல //

BNI அய்யா,

நீங்க தண்ணிப் பாம்பு/மலைப் பாம்பு அப்படீன்னு எழுதின உடனே பளிச்சுனு அசுரன் அய்யாவோட master strategy
புரிஞ்சி போச்சுது.சொல்றன் கேளுங்க.

இப்போ, தமிழ் சமுதாயத்தின் கால்களை 3 வகையான பாம்புகள் சுத்திக்கொண்டுள்ளன.
அவையாவன
1) பார்ப்பனீய தண்ணிப் பாம்பு.
2)ரோசா அய்யா/ஞாநி அய்யா இவங்களெல்லாம் சொல்ற நவ பார்பனீய மலைப்பாம்புகள்.
3)மலைகளையெல்லம் முழுங்கிய
திராவிட ஆதிக்கசக்தி பாம்புகள்.

அசுரன் அய்யா வெச்ச ப்ளான் இது தான்.

1)முதலில் காலை சுத்திய பார்ப்பனீய தண்ணிப்பாம்புகளை நைஸா கழட்டி பாம்பு பண்ணையிலே விட்டு விட வேண்டியது.
2) தண்ணிப் பாம்புகளை பிரிந்து மனம் வாடும் நவ பார்ப்பனீய மலைப்பாம்புகள், உடல் மெலிந்து கூடிய சீக்கிரம் தண்ணிப் பாம்புகள் சைஸுக்கு வந்துரும்.அப்போ நைஸா அவைகளையும் கழட்டி, பண்ணைக்கு பார்சல் பண்ணிடலாம்.
3) மேலேயுள்ள சமாசாரங்களை நம்ம ராஜ்வனஜ் அய்யா செய்யறதுக்குள்ள,நம்ம அசுரன் அய்யா,
நம்ம சமூக அமைப்பின் அடிப்படை விதிகளை வெற்றிகரமா மாற்றி எழுதிடுவாரு.அதனால எழுச்சி பெற்ற
விவசாயிகள்/தொழிலாளிகள்/மருத்துவர்கள்/வழக்கறிஞர்கள்/ஆசிரியர்கள்/மாணவர்கள் மலைமுழுங்கி திராவிட தரகு முதலாளித்துவ பாம்புகளை ஆடொமேடிக்கா பிடறியில் அடித்து பண்ணையிலெ சேர்த்துடுவாங்க.

அப்புறம் என்ன, தமிழ்நாட்டில் தோழர் தியாகு தலைமையில் ராம ராஜ்யம் தான்.
மிஷனை வெற்றிகரமா முடிச்ச அசுரன் அய்யா ஒத்தாசைக்கு ராஜ்வனஜ் அய்யாவையும் கூட்டிகிட்டு வேற ஒரு மிஷனுக்கு தாவிடுவாரு.அது என்னன்னு அப்புறம் சொல்றேன்.

இந்த மலைப்பாம்பு/தண்ணிப்பாம்பு master strategy பழைய உத்தியானா கொக்கு தலையில் வெண்ணை உத்தியை மாடிஃபை செய்து அமுலாக்கப்பட்ட உத்தி.

பாலா

said...

ராஜவனஜ்,

//நன்பரே புதிதாக உள்ளதே தகவல்???!!! அதாவது உயர்சாதியினரான அய்யர் அய்யங்கார் தேவர், கவுண்டர்.. போன்றோர் தீண்டாமைக் கொடுமை அனுபவிக்கின்றனரா?? :)//

தீண்டாமை கொடுமை அனுபவிக்கின்றனரோ இல்லையோ, பணம் இல்லாத எல்லாவரும் அனுபவிக்கும் 'ஒடுக்கப்படுதல்' கண்டிப்பா அனுபவிக்கறாங்க.

//உலகம் தோன்றிய போதே கடவுள் கோட்பாடு தோன்றியதா? எப்போது மனிதனுக்கு 'கடவுள்' தேவைப் பட்டார்? இந்த கோட்பாடு எப்படி 'மதம்' என்னும் நிறுவனம் ஆனது? விஞ்ஞானம் சொல்வது என்ன? //

விஞ்ஞானம் என்ன சொல்லுது? ஒண்ணுத்தையும் இன்னும் ஒழுங்கா சொல்லலை.
எல்லாருக்கும் மேலே ஒரு 'சக்தி' இருக்கு. சிலருக்கு அது சூரியன், சிலருக்கு அது சிவன், சிலருக்கு பரமபிபதா, சிலருக்கு இயற்கை, சிலருக்கு ?????.
ஏதோ ஒரு விதத்தில் அனைவருக்கும் கஷ்ட காலத்தில் நம்பிக்கையை தரும் விஷயம் 'கடவுள்'.
பல ஆயிரம் வருஷமா, அலெக்ஸாண்டரும், நெபோலியனும், அசோகனும், புத்தனும், சோழனும், திருவள்ளுவரும், பாரதியும் காணாத ஒரு 'விஞ்ஞானப் பகுத்தறிவு மனம்' வேண்டாம்னு சொல்லலை.
(விஞ்ஞான conspiracy-theory ஒண்ணு பிள்ளையாரும் சிவனும் மற்றவரும், aliens னு கூட சொல்லுது. உண்மையாவும் இருக்கலாம்)

நீங்கள் சொல்லும் 'ஒடுக்கி வை' என்பதே லட்சியமா வாழும் பார்ப்பனீயம் கண்டிப்பா தேவை இல்லை.
இந்த ஒதுக்கலில், இறைவன், வழிபாடு முறைகள், கலாச்சாரம் இதெல்லாம் ஒதுக்குவதும் சரி அல்ல.

//சரி ஒரு நாள்... ஒரு வேளை.. எல்லா பார்ப்பனரும் தாங்களாகவே முன் வந்து பார்ப்பனீயத்தை எதிர்த்தால் என்னவாகும்??? ( இது நடக்க சாத்தியம் இல்லை என்பது என் என்னம் )simple... ஆதிக்க சக்திகள் பார்ப்பனீயத்தை காப்பாற்ற பார்ப்பனீயர்களை தூக்கிக் கடாசும் வாய்ப்பு உள்ளது... //

அப்படியா? ஆதிக்க சக்தி அடங்கி போக என்னதான் வழி என்கிறீர்கள்? உங்கள் பாணியில் விழிப்புணர்வு ஊட்டுகிறேன் என்று சூடா திட்டுவதா? விழிப்புணர்வு எல்லாம் பத்தாது. இப்பவும் விழிப்புணர்வு இருக்கே. அடி வாங்கரவனுக்கு கண்டிப்பா கோபம் வரும். என்னடா வாழ்க்கை இது. அடிக்கரவன திருப்பி எப்படி அடிப்பதுன்னு தோணும். எது தடுக்குது? அடுத்த வேளை சோத்துக்கு வழி இல்லாத நிலைதான் தடுக்குது.

அமெரிக்கா, சிங்கப்பூர், ஐரோப்பா இங்கெல்லாம் அவங்க கலாசாரத்தை எட்டி ஒதச்சதால முன்னேற்றம் வரல. எல்லாருக்கும் தரமான வாழ்க்கை வாழ திட்டமிட்டு மக்களை வழி நடத்தியால் கிடைத்த வெற்றி அது.
கல்வி, பணம் ரெண்டும் கிடைக்க வழி பண்ணினால் மற்ற பிரச்சனைகள் தானா போய் விடும்.

said...

bala,

பாம்பு strategy நல்லாதான் இருந்தது.

//
1) பார்ப்பனீய தண்ணிப் பாம்பு.
2)ரோசா அய்யா/ஞாநி அய்யா இவங்களெல்லாம் சொல்ற நவ பார்பனீய மலைப்பாம்புகள்.
3)மலைகளையெல்லம் முழுங்கிய
திராவிட ஆதிக்கசக்தி பாம்புகள்.
//

மேலே உள்ள மூணும் கண்டிப்பா இருக்கு. நான் சொல்றது, தண்ணிப்பாம்பையும் அடிக்கலாம், கடைசியா.
முதலில் ஆளுதல் புரியும் அரசியல் வாதிகளை அவர்கள் வேலையை ஒழுங்க செய்ய வைக்க இங்கு இருப்போரெல்லாம் கூடி தேர் இழுத்தா, மற்ற உயரங்கள் தானாக வந்தடையும்.
தண்ணி பாம்பதான் மொதல்ல அடிப்பேன்னு பேசிட்டு இருந்தா, உங்க வாழ் நாள் வீணா போயிடும்.

எல்லோர் வாழ்வும் பொருளாதார அடிப்படையில தழைக்கணும். அப்பதான் உண்மையான விடிவு வரும்.

may be, parallel ஆ வேணா தண்ணிப் பாம்பை அடிச்சுக்கோங்க. அப்பப்ப தீண்டாமை கொடுமை செய்யும் சங்கர மடத்துக்கும், சிதம்பரம் கோயிலுக்கும் ஒரு பெட்டிஷன், போராட்டம் இந்த மாதிரி ஏதாவது ஷாக் கொடுத்திட்டே இருக்கலாம்.

ஆனால், முக்கிய வேலை அதா இருக்கக்கூடாது.

இதை பத்தி தீர யோசிச்சு இன்னொரு பதிவு கூடிய விரைவில் போடுகிறேன்.
இதைப்படிக்கும் மற்றவர்களும். பிரச்சனைகள், இவற்றிர்க்கான practical/possible தீர்வுகள் என்னென்ன என்று நல்லா யோசிச்சு ஒரு பதிவா போடலாம்.

said...

BNI ,

//தீண்டாமை கொடுமை அனுபவிக்கின்றனரோ இல்லையோ, பணம் இல்லாத எல்லாவரும் அனுபவிக்கும் 'ஒடுக்கப்படுதல்' கண்டிப்பா அனுபவிக்கறாங்க//

இந்த 'ஒடுக்கப்படுதல்' பற்றி கொஞ்சம் விவரமாக சொல்ல முடியுமா?

//
விஞ்ஞானம் என்ன சொல்லுது? ஒண்ணுத்தையும் இன்னும் ஒழுங்கா சொல்லலை.
எல்லாருக்கும் மேலே ஒரு 'சக்தி' இருக்கு. சிலருக்கு அது சூரியன், சிலருக்கு அது சிவன், சிலருக்கு பரமபிபதா, சிலருக்கு இயற்கை, சிலருக்கு ?????.
ஏதோ ஒரு விதத்தில் அனைவருக்கும் கஷ்ட காலத்தில் நம்பிக்கையை தரும் விஷயம் 'கடவுள்'//

நான் கேட்டதற்கு இது நேரடி பதில் அல்ல... எனவே இதை கடைசியில் தொடுவோம் அதன் முன் -

உலகம் தோன்றிய போதே கடவுள் கோட்பாடு தோன்றவில்லை. இயற்கையின் பால் உண்டான பயத்தின் காரணமாக உண்டானதே கடவுள் கோட்பாடு. வெகு காலம் கழித்து தான் இந்த கடவுள் கோட்பாடு மதம் என்னும் நிறுவனம் ஆகியது.. விஞ்ஞானம் ஒவ்வொருமுறையும் மதத்தின் அடித்தளத்தை தகர்த்தே வந்துள்ளது.. ஒவ்வொருமுறையும் மதம் ஒன்று விஞ்ஞானிகளை ஒழித்துள்ளது அல்லது விஞ்ஞானத்தின் விடையைத் தாண்டி ஒரு சக்தியை நிறுவ முற்பட்டுள்ளது. மதம், கடவுள் இதெல்லாம் மாறாநிலை தத்துவத்தை அடித்தளமாகக் கொண்டது. ஆனால் இயற்கையின் போக்கு இடையறாத மாற்றங்களை உள்ளடக்கியது ' மாற்றம் ஒன்று தான் மாற்றம் இல்லாதது ' என்ற விஞ்ஞான பார்வை இயக்கவியலின் கூறுகளில் ஒன்று..

நிற்க.

நீங்கள் சொல்லும் 'மேலான சக்தி' ஆறுதல் அளிக்கிறது என்பது உண்மையே ஆனால் இந்த ஆறுதல் மிகுந்த போலித்தனமானதும் தற்காலிகமானதும் ஆகும்..

இதற்கு மேல் மதம் பற்றிய விவாதம் அவசியம் என்று நீங்கள் கருதினால் என்னுடைய 'மதம் என்னும் மாயப் பேய்' பதிவிற்கு வாருங்கள் அங்கே வைத்துக் கொள்ளலாம்


//நீங்கள் சொல்லும் 'ஒடுக்கி வை' என்பதே லட்சியமா வாழும் பார்ப்பனீயம் கண்டிப்பா தேவை இல்லை//

வாழ்த்துக்கள்!!

//இந்த ஒதுக்கலில், இறைவன், வழிபாடு முறைகள், கலாச்சாரம் இதெல்லாம் ஒதுக்குவதும் சரி அல்ல//

இந்த இறைவன், வழிபாடு முறைகள் கலாச்சாரம் - இதன் வேறான வேதங்கள் ஸ்மிருதிகளில் இருந்து தான் ஒடுக்குமுறைக்கான 'கொழுப்பு' ஆதிக்கவர்க்கத்துக்கு கிடைக்கிறது. இப்போது வாசிப்போர் முடிவு செய்து கொள்ளட்டும் இது தேவையா இல்லையா என்று.

//அப்படியா? ஆதிக்க சக்தி அடங்கி போக என்னதான் வழி என்கிறீர்கள்? உங்கள் பாணியில் விழிப்புணர்வு ஊட்டுகிறேன் என்று சூடா திட்டுவதா? விழிப்புணர்வு எல்லாம் பத்தாது. இப்பவும் விழிப்புணர்வு இருக்கே. அடி வாங்கரவனுக்கு கண்டிப்பா கோபம் வரும். என்னடா வாழ்க்கை இது. அடிக்கரவன திருப்பி எப்படி அடிப்பதுன்னு தோணும். எது தடுக்குது? அடுத்த வேளை சோத்துக்கு வழி இல்லாத நிலைதான் தடுக்குது.//

இல்லை நன்பா இன்னும் விழிப்புனர்வு இல்லை.. இதைத் தான் இன்று நிகழும் ஒவ்வொரு சம்பவங்களும் செய்திகளும் ஒட்டுக் கட்சி அரசியல் வாதிகளும் ஒவ்வொரு தேர்தலும், வாக்களிக்கும் மக்களும் நிரூபிக்கின்றனர்.

நீங்கள் முன் வைக்கும் 'தீர்வுகள்' உங்கள் மேட்டுக்குடி மனப் போக்கை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது BNI. பசித்தவயறுகளும் ஒட்டிய கன்னங்களும், வஞ்சனையக ஏமாற்றப் பட்ட விவசாயியும்,இந்த உலகமயமாக்கத்தால் வேலை இழந்த தொழிலாளியும், உள்நாட்டு அகதிகளாக அலைந்து திரியும் விவசாயக் கூலிகளும், நகரங்களின் கான்க்ரீட் வயல்களில் மனிதம் தேடும் கிராமப் புரத்தானும் - வசூலித்து ரோடு போட முடியாது சாமி!! அப்புறம் வரிப் பணம் வாங்கிக் கொண்டு இந்த அரசாங்கம் ஏன் தேவை?

இந்த கேள்வியின் விடையை மேலே சொன்ன உழைக்கும் மக்கள் உணரும் நாளில் அவர்களுக்கான அரசாங்கத்தை அவர்களே நிர்மானிப்பார்கள்.. வஞ்சித்தவர்களின் கணக்குகள் வீதியில் வைத்து தீர்க்கப் படும்..

said...

BNI,

பாலாவுக்கு கருத்தெல்லாம் கிடையாது முடிந்ததெல்லாம் கிண்டலும் கேலியும் மட்டும் தான் :))

எனவே அதையெல்லாம் நீங்கள் சீரியஸாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை.. Just Have fun with it :))

மற்றபடி என்னைப் பற்றிய கமெண்டுக்கு வழக்கம் போல் - No comments.. :)

said...

அசுரன், (sorry for the delay)

குடவோலை ஓட்டு முறையில் முறைகேடு இருந்திருக்கலாம். இப்பதான் காலம் மாறியாச்சே. எல்லாருக்கும் ஒரு ஓட்டு இருக்கே. அடிமைகள்னு 'லீகல்'ஆ ஒண்ணும் இல்லையே.

//இதே போல, அனைவரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்திற்க்கு எதிராக என்ன இருந்தாலும் பிராமிந்தான் சுத்தமானவங்க, தலித் பூசாரியா இருக்கிறத எப்படி ஏத்துக்க முடியும் என்றூ பலவாறு இடைச்சாதி முதல் தலித்துக்கள் வரை கருத்து தெரிவித்திருந்தது, பார்ப்பினியம் ஒரு பண்பாடாக இந்திய சமூகத்தின் மீது படர்ந்து இருப்பதை காட்டுகிறதா இல்லையா?
இவையனைத்தும் சம்பிரதாயம், புனிதம் என்ற பெயரில்தான் செய்யப்படுகின்றன. //

எல்லாரும் அர்ச்சகராகலாம்னு சட்டம் தான் போட்டாச்சே. நல்ல விஷயம்தான். யாரும் இப்பொழுது அவர்கள் குலத்தொழிலை மட்டும் செய்வதில்லையே.
புதிதாக எதை கொண்டுவந்தாலும் இந்த சலசலப்பு இருக்கத்தான் செய்யும்.
பயபக்தியுடன் உண்மையான நம்பிக்கையுடன் பூஜை செய்வது ப்ராமினா இருந்தாலும், தலித்தா இருந்தாலும் எனக்கு கவலை இல்லை. என் சில பிராமண நண்பர்களின் கருத்தும் இதுவே. ( இது வரைக்கும் எனக்கு தெரிந்த யாரும் இந்த தீர்வுக்கு கோபப்படலை. சிதம்பரம் கோவிலில் நடப்பது வேறு மாதிரியான பிரச்சனை. அங்கு தீக்ஷிதர்கள் என்ற பிரிவினர் காலம் காலமாக அவர்கள் குலத்தொழிலாக செய்து வரும் பணி தெய்வப் பணி. 70 வயது பெரியவர் அங்கு திருவாசகம் பாட நினைத்தது எல்லாம் நியாயம் தான். ஆனால் அதை கருவரைக்கு உள்ளே தான் செய்வேன் என்று அடம் பிடித்ததால் வந்ததுதான் பிரச்சனை. இது politis. உண்மையான பக்தி அல்ல.
இதுக்கு சரியான உதாரணம் சட்டுனு வர மாட்டேங்குது. how about this? பணி இடத்தில் ஒரு புதியவன் வந்தால் அவன் இயல்பு நிலைக்கு வர கொஞ்ச நாளாகும். பழைய ஆட்கள் புதியவனை அரவணைத்து உடன் கூட்டிச்செல்ல டைம் ஆகும்.
எடுத்த உடனேயே, நான் பாஸ் சேர்ல தான் உக்காருவேன் என்றெல்லாம் அடம் பிடித்தால் politics தான் இரு தரப்பின் இடையிலும். (உfff)

எனக்கென்னமோ விவேக் அவரால் முடிந்த நல்லதை திரைப்படம் மூலமாக செய்வதாகவே தோன்றுகிறது. எவ்ளோ பேர் இதை கூட செய்யாமல் இருக்காங்க.
முடிந்த வரைக்கும் மூட நம்பிக்கையையும் சில முறிபோக்கு கருத்தையும் சொல்றாரு. நல்லதை மட்டும் எடுத்துக்கிட்டா நல்லது தானே. ஆனா யாரு இதெல்லாம் பாத்து திருந்தரானு கேட்டா, ஒருத்தரும் இல்லன்றது தான் என் பதிலும். அவருக்கு முடிந்ததை செய்யட்டுமே.


//பசு பற்றீய போலி புனித கருத்துக்களைப் பரப்புவது, இந்து தத்துவமரபையே இந்தியாவின் ஒரே தத்துவ மரபாக வரலாற்றைத் திரித்து, பிற தத்துவங்களின் சிறப்பான பகுதிகளையும் பார்ப்பினியத்தின் உள்ளே வைத்து அடைக்கும் முயற்சி அகில உலக அளவில் வெற்றிகரமாக செய்யப்பட்டு வருகிறதே, அதை என்னவென்று சொல்கிறிர்கள்?//

சில பசுக்கள் பலி ஆகாமல் தடுக்கப்பட்டது நல்லது தானே. (அப்ப எருமை மாடு பாவம் இல்லையான்றீங்க - முதலில் மனிதனின் வாழ்வுக்கு வழி பாப்போம். எருமைஸ் can wait :) ).


//ஆனால் இந்தியாவின் பெரும்பாலான நடுத்தர வர்க்கங்களின் பண்பாட்டு கனவு, ஏகாதிபத்திய நவீன கலாச்சாரத்தையும், அடையாளப் பிரச்சனைக்கு பாப்பினிய சம்ஸ்கிருத கலாச்சாரத்தையுமே சுவீகரிக்கிறார்கள் - சாதி வேறுபாடின்றி. இந்த பண்பாட்டு அடக்குமுறையை எங்கு சென்று பேச?//

மேலே உள்ளதில் ஓரளவுக்கு நியாயம் உள்ளது.
presenter makes the difference. கர்நாடக சங்கீதம் பாடுபவனுக்கும் தெருக்கூத்து பாடுபவனுக்கும் உள்ள வித்யாசங்கள் அந்த கலையின் மேல் உள்ள ஈர்ப்பை கூட்டவும் குறைக்கவும் செய்யலாம் இல்லையா? அதுதான் ந்டக்குது. மத்தபடி nobody is marketing கர்நாடக சங்கீதம்தான் பெரியது என்று.

personally, I like நாட்டுப்புறப் பாடல்கள். but, I enjoy கர்நாடக சங்கீதம், kawali and other light music a lot more. எனக்கு அவ்வளவா விஷயம் தெரியாது. நண்பர் ஒருவரை கேட்டேன். இசையில் உள்ள ராக தாளங்கள் எல்லாம் வைத்துப் பார்க்கும்போது, rich ஆக இருக்கும் கலவை கர்நாடக சங்கீதமும் western classical உம் என்று சொன்னார். இப்ப அயல் நாட்டில் இருக்கும் RAP வகை பாடல்களில் 'சங்கதி' கம்மி. அந்த அளவு கம்மியான சங்கதிதான் நம்ம தெருக்கூத்திலும் இருக்கிறதாம் (ராகத்தின் அடிப்படையில்). அதனால் இருக்கலாமோ?

எனக்கும் முதலில் கர்நாடக சங்கீதம் கேட்டால் தூக்கம் தான் வரும். இரண்டு நாள் கேட்டீர்கள் என்றால் ஈர்த்து விடும். (இது பக்தி சார்ந்த பாடல்கள் என்பதால் கூட இருக்கலாம்) - the taste changes person to person.

(நீங்களும் முயன்று பாருங்களேன் - M.S பாடிய குறை ஒன்றும் இல்லை கேட்டுப்பாருங்க)

//ஒரேயொரு விசயம்தான், நீங்கள் இன்னும் பார்ப்பினிய எதிர்ப்பை பிறப்பால பார்ப்பனர்களை எதிர்ப்பதுடன் குழப்பிக் கொள்கிறீர்கள்.//

நான் மட்டும் அல்ல எல்லாரும் அப்படித்தான் நினைக்கராங்க. ஏன்னா இணையத்தில் இன்று அதுதான் நடக்குது. அருவருப்பான வார்த்தை பரிமாற்றங்கள் தான் தினமும் இங்கே நடக்குது.
decent ஆ உங்கள மாதிரி எழுதரவங்களும் 'தெளிவா to the point' எழுத மாட்றீங்க.
பர்ப்பனீய எதிர்ப்பு என்றாலே பூணூல் எதிர்ப்பு என்கிற மாதிரி ஒரு சூழல் உருவாகி இருக்கு.
அதைப் புரிந்து கொண்டு நீங்களும் ராஜவனஜ் போன்றோரும், இந்த சங்கதி பேசும்போது 'சூட்டைக் குறைத்து' கரெக்டா கோடிட்டு எழுதினீங்கன்னா நல்லது என்பது என் கருத்து.

டோண்டு பதிவுகள நான் படிச்சதுல்ல. அவர் வடகலை ஐயங்கார்னு அடிச்சு சொல்லி இருக்காரு. பிரச்சனை அங்கயும் இருக்கு. ஏதோ trigger செய்யப்பட்டிருக்கு. அவரை போலவே இந்த சைடில் விடாது கருப்பு என்று ஒரு பதிவு, அருவருப்பின் மொத்த உருவமா இருக்கு.

இவங்களுக்கு நடுவில் இருக்கும் கசப்பை தீர்க்கணும்னா, வார்த்தைகளால் ரணம் இல்லாம, பக்குவமா எழுதணும். இல்லியா? அதைப் பத்தி அக்கரம் எடுத்துக்காம எல்லாரும் எழுதினா, ரணம் ஆறாது என்பது என் கருத்து.

//வரலாற்றில் இல்லாத ஒரு பொய்யைச் சொல்லி கிடா வெட்டு சட்டத்தை நியாயப்படுத்தி அதே நேரத்தில் பெரிய தெய்வங்கள் சிறப்பானவை என்று எமது முன்னோர்களான உழைக்கும் தெய்வங்களை அவமானப்படுத்தியிருந்தானே அந்த விபச்சாரத்தனத்தை நான் எந்த தளத்தில் எதிர்ப்பது? எனது எழுத்தை பிரசூரிக்கும் வெகு சன ஊடகம் எது//

எனக்கு அந்த கார்டூன் பார்த்த நியாபகம் இல்லை. 'தாக்கி' எழுதி இருந்தா கண்டிப்பா கண்டிக்க வேண்டியது தான். அவருக்கே எழுதியும் போடலாம்.
அந்த மாதிரி மட்டம் தட்டுதல் என்ற நோக்கில் யாராவது எழுதினா, இங்கிருந்து எதிர்ப்பு குரல் எழுப்புவது கண்டிப்பா செய்யணும். கார்டூனிஸ்ட்டுக்க்கு மட்டும் அல்ல, MLA, MP, councilor, CM, PM எல்லாருக்கு எதிர்ப்பு குரல் கொடுத்துட்டே இருக்க, இந்த அருமையான இணையம் தந்த வாய்ப்பை கண்டிப்பா பயன் படுத்தணும்.
ஆனால், 'இரு பக்கமும்' தம்மில் தல்லாமல் சேர்ந்து ஓசை எழுப்பினா சீக்கிரம் கேக்க வேண்டியவங்களுக்கு கேக்கும் இல்லியா?

//பார்ப்பினியம் ஆதிக்க கருத்தியலாக இருப்பதற்க்கு ஆதாரமாகத்தான் பல்வேறு உதாரணங்களை தருகிறோம். இதன் எதிர் கருத்தும் இந்த சமூகத்தில் இருக்கிறது. இவை இருப்பதின் அடிப்படை சமூக ஏற்றத்தாழ்வு. அதை உறுதிப்படுத்துவ பார்ப்பினிய கருத்தியல். ஆக தத்துவம், பொருளாதாரம் இரண்டு நிலையிலும் போராட்டம் செய்யாமல் மாற்றம் வந்துவிடாது. நீங்களோ தத்துவம் நிலையில் போராட்டம் தேவையில்லை என்கிறீர்கள். //

நீங்களும், மற்றவர்களும் தரும் உதாரணங்கள் பூணூல் எதிர்ப்பு ஒன்றே குறிக்கோளாக கொண்டு சொல்லுவதை போன்ற தோற்றத்தை அளிக்கிறது.
ஆதிக்க சக்தி, ஒடுக்கும் சக்தி, மனிதனை மனிதனாக மதிக்காத சக்தி இதை எதிர்ப்பதை இனி வரும் பதிவுகளில், தெளிவாக 'கோடிட்டு' எழுதினால் உங்களின் வாதத்திர்க்கு எதிர்ப்புகள் கம்மி ஆகும்.
இணையதளத்தில் பார்ப்பனீயம், பார்ப்பனன் has become synonymous with பிராமின். so, உங்களின் நல்ல வாதங்களும் வலு இழந்து அனைவர் பார்வையிலும் படாமல் போய்விடும் சூழலை உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.

பொருளாதாரம் உயர வகை செய்தால், தத்துவ முன்னேற்றம் தானா வரும். நீங்க அப்படி இல்ல தலைகீழ செய்யணும் என்கிறீர்கள். இங்குதான் முரண்பாடே.:)

Anonymous said...

நல்ல கருத்துக்கள். யாரும் திருந்தப் போவதில்ல. நீங்க சொல்றத சொல்லுங்க.