Wednesday, November 01, 2006

20. என்னை போன்ற பலரை உந்திய பாரதியார் கவிதை...



பாரதியார் போல் இனி ஒரு கவிஞன் வரப் போவதில்லை.

அவன் புலமை ஆகட்டும், புரட்சிக் கருத்துக்கள் ஆகட்டும், தன்நலம் தேடாத மனிதம் ஆகட்டும் - அவனை மிஞ்ச ஒரு மனிதன் இருந்ததும் இல்லை, இனி இருக்கப் போவதும் இல்லை.

ஒவ்வொரு கவிதையும் படிப்பவர் உள்ளத்திலே ஒரு கிளர்ச்சியை உண்டு பண்ணும்.

இனிய நடை, தேர்ந்த கற்பனை, கூரிய கருத்து, நல்ல சிந்தனை - இதை எல்லாம் போட்டு, கலந்து கொடுத்த ஒவ்வொரு படைப்பும் திகட்டாத இன்பம்.

பாரதியார் கவிதைகளை ஆராய/விமர்சிக்க எனக்குத் தகுதி கிடையாது.

அவன் எழுதிய இந்தக் கவிதை என்னை போலே பலருக்கு ஒரு உந்துதல் கொடுத்து, routine-life ல் இருந்து சற்றே வெளியில் வந்து பொது நல சிந்தனை வேண்டும் என்று நினைவு படுத்தியது. ஏதாவது உருப்படியா செய்யலாமே என்று எண்ண வைத்தது.

அந்த அற்புதப் படைப்பு இதோ.

------ . ------ . ------ . ------ . ------ . ------
தேடிச் சோறு நிதந்தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடித் துன்பம் மிக உழன்று
பிறர் வாடப் பல செயல்கள் செய்து
நரை கூடி கிழப் பருவமெய்தி
கொடுங் கூற்றுக்கிரையெனப் பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வேனென்று நினைத்தாயோ
...
இனி புதியதோர் உயிர் கொண்டு
மதி தன்னை தெளிவாக்கி
என்றும் சந்தோஷம் கொண்டிருக்க செய்வாய் !!!
என்றும் சந்தோஷம் கொண்டிருக்க செய்வாய் !!!
------ . ------ . ------ . ------ . ------ . ------

உங்களையும் உந்தி இருக்கும் என்று நினைக்கிறேன் (ஏற்கனவே உந்தப்படாமல் இருந்திருந்தால்).

இதை ஒரு படத்தில் திரு. கமல்ஹாசன் படிப்பது போல் ஒரு காட்சி வரும். மிக அருமை.

எல்லா பாரதியார் கவிதைகளும் ஒலித் தட்டுகளாக வந்தால் நன்றாக இருக்கும். பாடல்களாக இல்லாமல், பாரதியின் மன ஓட்டம் என்னவாயிருந்திருக்கும் என்று உணர்ந்து அந்த கவிதைகளை கமல் மாதிரி ஆட்கள் யாராவது வாசித்துப் பதிய வேண்டும்.

பாரதிராஜா, கமல், மனோகர்,ஹெரான் ராமசுவாமி, கீரன், வைரமுத்து - இவர்களில் யாராவது இதை செய்தால் நன்றாய் இருக்கும்/இருந்திருக்கும். ( ஹெரான், கீரன், மனொகர் இப்பொழுது இல்லை)

வேறு யார் படித்தால் நல்லா இருக்கும்?

எஸ்.கே மாதிரி யாராவது ஏற்பாடு பண்ணுங்களேன் சார் :)

10 comments:

Anonymous said...

summaa time paasaaa machi ?

said...

இல்லை மச்சான்.
உணர்ந்து எழுதியதுதான்.

கவிதையை மனதில் படியுமாறு படித்துப் பார். உனக்கும் உந்துதல் வரும்.

said...

இந்தக் கவிதைகளுக்காக பாரதியார் புத்தகத்தை புரட்ட வேண்டு என்று நினைத்தேன்.

பதிவாக வெளியிட்டதற்கு நன்றி.

said...

மிக நல்ல பதிவு.

கருப்பு பின்னனியில் பச்சைவண்ண ஒல்லி எழுத்துக்கள் சற்று சிரமப் படுத்துகின்றன. மாற்றமுடியுமா?

said...

வெங்கட்ராமன்,
பாரதியார் புத்தகத்தை புரட்டாமல் விட்டு விடாதீர்கள். மேலும் பல அற்புதங்கள் கண்ணில் படும்.
நன்றி!

said...

ஓகை, நன்றி!
கலர் மாத்தியாச்சு.

Anonymous said...

innaadhu kamal padikkanumaa? avaru pesaradhe puriyadhu, idhula barathiar kavidha padicha therumaa?

said...

அனானி,
வருகைக்கு நன்றி!

கமலுக்கு என்னங்க குறை? நல்லாதான் இருக்கும் அவர் பேசினா.

said...

இது எந்த கவிதைத் தொகுப்பில் வந்த கவிதை?

Anonymous said...

இனியவர்கு,

இது என்னுடைய வலைபதிவு முகவரி.
www.mathimaran.wordpress.com
சமயம் கிடைக்கும்போது பார்த்து கருத்து சொல்லவும்.
அன்புடன்
வே. மதிமாறன்.