Tuesday, October 31, 2006

இலங்கை பிரச்சனை காஷ்மீர் பிரச்சனை - சரியா தப்பா?





(repost due to technical difficulties)

இது என் புரிதலுக்காகவும், தெளிவாக இல்லாத மற்ற சிலருக்கும் உதவும் என்ற எண்ணத்தில் கேட்க்கப்படும் கேள்வி.

1) காஷ்மீர் பிரச்சனை - தனி நாடு வேண்டும் என்று, இந்திய அரசை விரும்பாத ஒரு கூட்டம் தொடுக்கும் போராட்டம். ( மதம் சம்பந்தப்பட்டது? )

2) இலங்கை பிரச்சனை - தனி நாடு வேண்டும் என்று, சிங்கள அரசை விரும்பாத ஈழத் தமிழர்கள் தொடுக்கும் போராட்டம். ( இனம் சம்பந்தப்பட்டது? )

இந்திய/தமிழ் மக்களாகிய நம் கண்ணோட்டத்தில்:

காஷ்மீர் போராட்டம் - சரியா/தவறா - ஏன் ?
இலங்கை போராட்டம் - சரியா/தவறா - ஏன் ?

உங்கள் நிலையை கூறுங்களேன், சில வரிகளில்.

உங்களுக்கு தெரியாதென்றால், 'தெரியாது' என்று comments கொடுங்கள்.
உங்களுக்கு அக்கரை இல்லை என்றால், 'dont care' என்று comments கொடுங்கள்.

நன்றி! நன்றி! நன்றி!

50 comments:

BadNewsIndia said...

technical difficulaties.

sorry.

SARAV earlier said,
பாகிஸ்தான் இந்தியாவுக்கு தரும் தலைவலி காஷ்மீர் பிரச்சனை;
இலங்கை அப்படி அல்ல.

அனானி said,
இத்த தெரிஞுக்கினு இன்னாய்யா பண்ண போற.

I said to SARAV,
அப்ப, இலங்கை சரி, காஷ்மீர் தப்புன்றீங்க?

I said to அனானி,
உனுக்கென்னய்யா. கேட்ட கேள்விக்கு பதில் தெரிஞ்சா சொல்லு; இல்லீன்னா கம்முனு இருய்யா. உங்க தொல்ல தாங்க முடீல.

BadNewsIndia said...

comments test..

Anonymous said...

இலங்கையில் ஒடுக்கத்திற்கு எதிரான போராட்டம்..(சரி)
இங்கே அமைதியை சீர்குலைக்க ஆர்ப்பாட்டம்..(தவறு)

இவன் said...

காஷ்மீர் பிரச்சனை இரு நாடுகளுக்கு இடைப்பட்ட்து. ஒரு நாடு காஷ்மீர் என் தலை என்கிறது மட்டொன்று என் மக்கள் அங்கு அடிமைகளாக இருக்கிறார்கள் என்கிறது.
ஈழத் தமிழர் பிரச்சனை சிறுபான்மை இனத்தின் உரிமை பிரச்சனை. இது அடிப்படை உரிமைகள் மறுக்கப் பட்டதால் அவதரித்த பிரச்சனை.

காஷ்மீரில் வாழும் மக்களுக்கு அன்றாட தேவைகள் கூட சலுகை விலையில் கிடைக்கிறது, உரிமைகள் எதுவும் மறுக்கப்படவில்லை.
ஈழத்தில் எப்படி? அடிப்படை தேவையான கல்வி மற்றும் மின்சாரம்கூட மறுக்கப்படுகிறது.

காஷ்மீர் பிரச்சனை வேறு ஈழத்து பிச்சனை வேறு.

Anonymous said...

அன்றே இணைக்காமல் விட்டதால்
உருவானது காஸ்மீர் பிரச்சனை.

அன்றே பிரிக்காமல் விட்டததால்
உருவானது ஈழப் பிரச்சனை.

நான் கரக்டா பதில் சொல்லிட்டேன்லே.

BadNewsIndia said...

அனானி,

//இலங்கையில் ஒடுக்கத்திற்கு எதிரான போராட்டம்..(சரி)
இங்கே அமைதியை சீர்குலைக்க ஆர்ப்பாட்டம்..(தவறு) //

கருத்துக்கு நன்றி!
காஷ்மீரிலும் ஒடுக்கப்டுகிறார்கள் என்றுதான் அங்கு அமைதியை சீர்குலைக்கும் கும்பல் சொல்வது.
நாம் சரியான propaganda செய்தால் எல்லாம் சரியாக விடும்.

BadNewsIndia said...

ivan, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

ஈழப் பிரச்சனை, சிறுபான்மை இனத்தி உரிமை பிரச்சனைதான்.
ஆனால் அதர்க்கு தீர்வு தனி நாடு கோறுவது என்பதா?

நம் நாட்டுக்குள்ளும் சில இனத்தவர்கள் இன்னும் ஒடுக்கப்பட்டுதான் கிடக்கிறார்கள். அவர்கள் 'விழித்து' விட்டால், இங்கும் இதே பிரச்சனை வருமோ?

BadNewsIndia said...

அனானி,

//அன்றே இணைக்காமல் விட்டதால்
உருவானது காஸ்மீர் பிரச்சனை.
அன்றே பிரிக்காமல் விட்டததால்
உருவானது ஈழப் பிரச்சனை.
நான் கரக்டா பதில் சொல்லிட்டேன்லே.//

இனணத்ததால் தானே காஷ்மீர் பிரச்சனையே உருவானது - confuse ஆயிட்டீங்களா?

இலங்கைக்கு அன்று வேலை தேடி போனவர்கள் நம் தமிழர்கள். போன இடத்தில் தனி நாடு கோறுவது சரியா? இன வெறியர்கள் தாக்கினால், அதர்க்கு இதுதான் விடையா?

பெத்தராயுடு said...

//ஈழப் பிரச்சனை, சிறுபான்மை இனத்தி உரிமை பிரச்சனைதான்.
ஆனால் அதர்க்கு தீர்வு தனி நாடு கோறுவது என்பதா?//

அமைதியான வழியில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் யாவையும் பயனளிக்காத காரணத்தினாலேதான் ஈழ மக்கள் ஆயுதம் ஏந்தினார்கள்.

சற்று சிரமம் பாராமல் இணையத்தில் தேடினால் தமிழீழ போராட்டம் பற்றி அறிந்து கொள்ளலாம்.


//இலங்கைக்கு அன்று வேலை தேடி போனவர்கள் நம் தமிழர்கள். போன இடத்தில் தனி நாடு கோறுவது சரியா? இன வெறியர்கள் தாக்கினால், அதர்க்கு இதுதான் விடையா? //


இலங்கையில் உள்ள தமிழர் (broader level) இருவகைபட்டவர்கள். வடக்கு மற்றும் கிழக்கில் பல நூற்றாண்டுகளாக சொந்த மண்ணில் வாழ்ந்து வருபவர்கள்.

அடுத்தது, கண்டி, நுவர ஏலியா போன்ற தேயிலை தோட்டங்களில் வேலை செய்வதற்காக ஆங்கிலேயர்களால் அழைத்துச் செல்லப்பட்ட தமிழகத் தமிழர்கள்.

நீங்கள் முன்னவர்களைப் பின்னவர்களாகப் புரிந்து கொண்டீர்கள் என எண்ணுகிறேன்.

BadNewsIndia said...

பெத்த ராயுடு, வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சார்.

இணையத்தில் நடுநிலையாக தகவல் தரும் பதிவை சுட்டிக்காட்டினால் பயனாக இருக்கும்.

தகவலுக்கு நன்றி!

http://en.wikipedia.org/wiki/Hill_Country_Tamils

அருண்மொழி said...

badnewsindia,

//இலங்கைக்கு அன்று வேலை தேடி போனவர்கள் நம் தமிழர்கள். போன இடத்தில் தனி நாடு கோறுவது சரியா? //

மன்னிக்கவேண்டும், ஈழத்தினை பற்றி உங்களுக்கு எதுவுமே தெரியாது என்பதை தெளிவுபடுத்துகிறது. வழக்கம் போல தேசியவியாதிகளின் மட்டைஅடி இது. இணையத்தில் தேடுங்கள் பல செய்திகள் கிடைக்கும்.

BadNewsIndia said...

அருண்மொழி, வருகைக்கு நன்றி!

//மன்னிக்கவேண்டும், ஈழத்தினை பற்றி உங்களுக்கு எதுவுமே தெரியாது என்பதை தெளிவுபடுத்துகிறது. வழக்கம் போல தேசியவியாதிகளின் மட்டைஅடி இது. இணையத்தில் தேடுங்கள் பல செய்திகள் கிடைக்கும். //

எனக்கு ஈழத்தை பற்றி முழுதாக தெரியாது என்ற காரணத்தினால்தான் இந்த பதிவு போட்டிருக்கிறேன் என்று சொல்லி இருக்கிறேனே.
என்னை போலவே பலரும் 'உண்மை' எதுவென்று தெரியாமல் குழப்பத்தில் இருக்கலாம். அதை தெளிவு படுத்தவே விரும்புகிறேன்.
biased செய்திகள் தானே இப்பொழுதெல்லாம் எல்லா இடத்திலும் வலம் வருகிறது. உண்மை நிலை எங்கே என்று எடுதுக் கூறினால், படிக்க உதவும். நன்றி!

Anonymous said...

போன வாரப் பூங்காவில் இலங்கைப் பிரச்சனை பற்றி கட்டுரைகள் வந்திருந்தது

காஷ்மீர் பிரச்சனை பற்றி அறிய தமிழ்சசியின் பதிவுகளைப் படியுங்கள்

Jay said...

Heello Bad News India !!!உமக்கென்ன மண்டைக் கோளாறா?
ஈழத்தமிழன் என்ன வேலைக்காக வந்து இலங்கையில் குடியேறினவனா!
இதைச் சொல்ல உமக்கெவ்வளவு தைரியம்???
இந்தப் பொய்யைச் சொல்லி சிங்கள மக்களை ஏமாற்ற முடியும் எங்களை ஏமாற்ற முடியாது!!
ஈழத் தமிழர்கள் ஒன்றும் இந்தியாவில் இருந்து வந்து குடியேறிய குடியேறிகளோ சோழர் காலத்தில் வந்த ஆக்கிரமிப்பாளர்களோ அல்ல (இப்படித்தான் சிங்களவர் நினைக்கின்றனர்.) தமிழகத்தில் குடி தோன்றிய காலத்தில் இருந்தே நாமும் இங்கெ இருக்கின்றோம்... இதை முதலில் புரிந்து கொள்ளும்.

Anonymous said...

'காஷ்மீர் போராட்டம் - சரியா/தவறா - ஏன் ?
இலங்கை போராட்டம் - சரியா/தவறா - ஏன் ?'

எந்தவிதமான போராட்டம்? அரசியல் ரீதியான போராட்டமா? அல்லது ஆயுதபோராட்டமா?

தனிநாடு கேட்கும் போராட்டமா? அல்லது ஒரு இனத்தின் உரிமைகளை மட்டும் மீட்டெடுக்கும் போராட்டமா?

இரண்டுவிதமான போராட்டங்களும் இரண்டு இடங்களிலும் நடக்கின்றது.

எந்த ஒரு இனமும் மற்ற ஒரு இனத்தால் அடக்கப்படும்போது,அடக்கப்பட்ட இனம் தன் இனவிடுதலையை நோக்கித்தான் செல்லும்.இது உலகின் எந்த ஒரு பகுதி மக்களுக்கும் பொருந்தும்.

இலங்கைப் பிரச்சனை பற்றி தெரிந்துகொள்ள பொதுவான இணயத்தளங்களை மட்டும் படித்தால் போதாது.சிங்கள ஆதரவு பத்திரிக்கைகள்,தமிழ் பத்திரிக்கைகள்,LTTE ஆதரவு மற்றும் எதிர்ப்பு எழுத்துக்கள்,மற்ற அரசியல்,ஆயுத போராட்ட குழுக்களின் நடவடிக்கைகளையும் படிக்க வேண்டும்.

காஷ்மீர் பற்றி தமிழ்சசி சரியாகவே எழுதியிருக்கிறார்.இலங்கை பிரச்சனை என்று வரும்போது சற்று குழம்பி, சற்று LTTE-ஐ வலிக்காமல் கிள்ளுவது மாதிரி தெரியும்.எனவே இந்த விசயத்தில் இவரை மட்டும் படிக்காமல் வேறு வளைத்தளங்களையும் படிக்கவும்.

புலிஆதரவு பதிவுகள் ஆயிரக்கணக்கில் இணையத்தில் கிடைக்கும்..ஒரு மாறுதலுக்காக இதையும் படிக்கவும்..
http://www.satiyakadatasi.com/

Jay said...

ஐயா இந்தப் பதிவை வாசியுங்கள்
http://thamizhblog.blogspot.com/2006/10/33.html
கால ஓட்டத்துடன் உண்மைத் தகவல்களைத் தந்துள்ளேன்!
எனக்கு ஈழத் தமிழரைப் பற்றித் தெரியாதென்று சொல்ல உங்களுக்கு வெட்கமாக இல்லையா? ஈழத் தமிழரின் பாரம்பரிய இருப்பை கேள்வியாக்கும் உம் பதிலை கடுமையாகக் கண்டிக்கின்றேன்.

Anonymous said...

இலங்கைப் பிரசினை இனப் பிரசினையுமல்ல! கஷ்மீர் பிரசினை மதப்பிரசினையுமல்ல!!
அங்கே தமிழர்கள் என்ற முகமூடியில் ஹிந்துக்களால் பிரசினை... இங்கே முஸ்லிம்கள் என்ற முகமூடியில் கஷ்மீரிகளால் பிரசினை...

இந்தியா அன்றைய கஷ்மீர் மக்களின் விருப்பத்திற்கெதிராக கஷ்மீரை இணைத்துக் கொண்டது.... பிரசினைக்கு காரணமே அதுதான்.. பாகிஸ்தானும் இதற்கு ஊதுகுழல்...

BadNewsIndia said...

அனானி,

//போன வாரப் பூங்காவில் இலங்கைப் பிரச்சனை பற்றி கட்டுரைகள் வந்திருந்தது
//

தகவலுக்கு நன்றி!! படிக்கிறேன்!

BadNewsIndia said...

செல்வமணி, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
இதை பற்றி அலசும்போது, மீடியாவில் எல்லா இடத்திலும் 'ஒருதலை' பட்சமாகவே தகவல் கிடைத்தது.

உங்களின் தகவல்கள் உபயோகமாக இருந்தது.

BadNewsIndia said...

ஐயா மயூரேசன்,

//Heello Bad News India !!!உமக்கென்ன மண்டைக் கோளாறா?
ஈழத்தமிழன் என்ன வேலைக்காக வந்து இலங்கையில் குடியேறினவனா!
இதைச் சொல்ல உமக்கெவ்வளவு தைரியம்???
இந்தப் பொய்யைச் சொல்லி சிங்கள மக்களை ஏமாற்ற முடியும் எங்களை ஏமாற்ற முடியாது!!
ஈழத் தமிழர்கள் ஒன்றும் இந்தியாவில் இருந்து வந்து குடியேறிய குடியேறிகளோ சோழர் காலத்தில் வந்த ஆக்கிரமிப்பாளர்களோ அல்ல (இப்படித்தான் சிங்களவர் நினைக்கின்றனர்.) தமிழகத்தில் குடி தோன்றிய காலத்தில் இருந்தே நாமும் இங்கெ இருக்கின்றோம்... இதை முதலில் புரிந்து கொள்ளும்.
//

புரிதலுக்காக போட்ட பதிவு இது என்று முதலிலேயே சொல்லிவிட்டேன்.
உங்கள் கோபம் புரிகிறது. தகவல்களுக்கு நன்றி.
என்னை போன்ற பலர் பயன் பெறுவார்கள் என்று கருதுகிறேன்.

இன்று உள்ள தமிழர்கள், சோழர் காலத்தில் வந்து குடியேறியவர்கள் என்று தான் இதுநாள் வரையில் நான் 'படித்து' தெரிந்து வைத்திருந்த 'உண்மை'

தெளிவு படுத்தியதர்க்கு நன்றி!

BadNewsIndia said...

ஐயா மயூரேசன்,

//
கால ஓட்டத்துடன் உண்மைத் தகவல்களைத் தந்துள்ளேன்!
http://thamizhblog.blogspot.com/2006/10/33.html
//

தகவலுக்கு நன்றி. தெளிவான பதிவு உங்களுடயது.

//எனக்கு ஈழத் தமிழரைப் பற்றித் தெரியாதென்று சொல்ல உங்களுக்கு வெட்கமாக இல்லையா? ஈழத் தமிழரின் பாரம்பரிய இருப்பை கேள்வியாக்கும் உம் பதிலை கடுமையாகக் கண்டிக்கின்றேன்//

நான் ஒரு சாதாரணன். நான் ஏன் வெட்க்கப்பட வேண்டும்?
தெரியாததை தெரியாது என்று சொல்லி தெளிவு படுத்த நினைப்பதில் என்ன தவறு?

இது நாள் வரையில் பிரச்சனையை பிரச்ச்னையாகவே வைத்திருந்து, ஒரு தீர்வும் காணாது, இரு தரப்பிலும் பலர் மடிய காரணமாயிருக்கும் இலங்கை அரசும், தமிழ் ஈழ தலைவர்களும் தான் வெட்கித் தலை குனிய வேண்டும். நானல்ல! SHAME on them.

சரி, காஷ்மீரை பற்றி உங்கள் கருத்தென்ன?

BadNewsIndia said...

அனானி,

//இலங்கைப் பிரசினை இனப் பிரசினையுமல்ல! கஷ்மீர் பிரசினை மதப்பிரசினையுமல்ல!!
அங்கே தமிழர்கள் என்ற முகமூடியில் ஹிந்துக்களால் பிரசினை//

மயூரேசனின் பதிவை பார்க்கவும்.

நன்றி!

Anonymous said...

.ஒடுக்கப்பட்ட இனத்தின் எழுச்சி ஈழத் தமிழர்களின் போராட்டம். உரிமைக்கும்
சுதந்திரத் திற்கும் ஏங்கும் மானமறவர்களின் போராட்டம் தனியீழமே தீர்வு.
இழந்தவர்களுக்குத் தெரியும் வலியும் வேதனையும்...

Anonymous said...

முஸ்லீம் லீக் கோரிக்கைப்படி இரண்டு நாடுகள் கொடுக்கப்பட்டு விட்டன. உதர் சலோ!.
எனவே அவர்கள் போராட்டம் தவறானது.

ஈழ தமிழர்களுக்்கு எந்த நாடும் தரப்படவில்லை? அவர்கள் போராட்டம்
பொருத்தமானது.

Anonymous said...

இந்தியாவில் தமிழ் நாடு போல், இலங்கையில் தமிழீழம் இருக்கட்டுமே...நம்
பிரச்சனைகளை நம் தீர்வுகளை நாமே பார்த்துக்கொள்கின்றோம் என்பது தானே....நம்
விருப்பம்....வேண்டுகோள்.

Anonymous said...

இரண்டுக்கும் ஒரே ஒரு ஒற்றுமைதான் இரண்டுமே பிரச்சனையும் சண்டையும் நிறைந்த
பகுதிகள் ,


காஷ்மீர் போராட்டத்திற்கான காரணங்களில்
நிறைய காரணங்கள் அர்த்தம் இல்லாதவை!
அவர்கள் சொந்த மண்ணில் வாழ்வதற்க்கு சுதந்திரம் பாதிக்கப்படவில்லை, இந்திய
அரசால் அவர்கள் அடக்கி ஒடுக்கப்படவில்லை, இந்திய அரசு அவ்ர்களை அடிமைகளாக
நினைப்பதில்லை,அவர்கள் இருக்க வழியின்றி அகதிகளாக வேறு நாட்டிற்க்கு செல்வது
இல்லை ,இந்திய மக்கள் காஷ்மீர் மக்களையும் இந்தியர்களாகதான்
பார்க்கிறார்கள்!அங்குள்ள எல்லா மக்களின் போரட்டம் அல்ல அது , சில தீவிரவாத
குழுக்களின் உணர்ச்சிமயமான போராட்டம் இது!


ஆனால்


இலங்கையில் இருக்கும் பிரச்சனை அப்படி அல்ல,அது அங்குள்ள மொத்த தமிழ் மக்களின்
உரிமைப் போராட்டம், சொந்த மண்ணில் நிம்மதியாக வாழ வழிதேடும் போராட்டம்!அவர்களை
சிங்கள அரசு மிகவும் மோசமாகவே நடத்துகிறது, அவர்களின் நலனைப்பற்றி
எண்ணிப்பார்ப்பதே இல்லை ! சிங்களர்களில் பெரும்பான்மையானோர் தமிழர்களை
எதிரிகளாகதான் பார்க்கிறார்கள்,அங்குள்ள தமிழர்களின் உணர்வுப்பூர்வமான போரட்டம்
இது

Anonymous said...

காஷ்மீர் பற்றிய எனது
புரிதல்:

எந்த நாட்டுடனும் [இந்தியா,
பாகிஸ்தான்] சேர
விருப்பமில்லை என்று தான்
இந்தியா, பாகிஸ்தான்
சுதந்திரம் பெறப்பட்டபோது
கூறியது. கால அவகாசம்
கேட்டிருந்தது.
அதற்கிடையில், இருவரும்
தங்களுக்குத் தான்
தங்களுக்குத் தான் என்று
பேரம்பேசி உள்நாட்டுப்
பிரச்சினை உருவாகிவிட்டது.
ஒரு சிறு பிரதேசமாதலால்,
பலம் வாய்ந்த, அயல்
நாடுகளுடன் எதிர்க்க
முடியாமல் போய் இரு
நாடுகளுக்கிடையில்
கூறாய்ப்
பிரிந்திருக்கிறது.


இந்தப் பிரதேசத்தை இரு
நாடுகளும் ஒரு buffer zone ஆகத்
தான் உபயோகிக்கிறார்கள்.
கிட்டத்தட்ட ஒரு no man's land போல்
ஆகிவிட்டது. ஆதலால்
இனிமேல் இரு நாடுகளும்
இப்பிரதேசத்திற்கு
சுதந்திரம் கொடுப்பார்கள்
என்று நம்பவில்லை.


ஒரே வழி எதாவது ஒரு நாடு
தங்கள் கட்டுப்பாட்டில்
உள்ள பிரதேசத்திற்கு
சுதந்திரம் கொடுத்து முழு
உதவியும் கொடுக்க
வேண்டும். அதனால், மற்றய
பிரதேசம் புத்துணர்ச்சி
பெற்று சுதந்திரம் அடைய
முயற்சிக்கும்.
சுதந்திரம் பெற்ற பிரதேசம்
உதவியும் ஊக்கமும்
கொடுக்கலாம்.


தமிழீழம்:


எந்த நாடும் அங்கீகரிக்கத்
தேவையில்லை. தாய்வான்
எப்படி இருக்கிறதோ அப்படி
இருந்தாலே போதும்.
தாய்வான் ஐக்கிய நாடுகள்
சபையில் ஒரு நாடாக
அங்கீகரிக்கப்படாத நாடு!
[எல்லாம் அமெரிக்காவின்
சாகசம்]. பொருளாதார
தொடர்புகளுக்கு தமிழ்நாடு
தான் மிக அருகாமை.
இந்தியாவிடன் நட்புறவு
கொள்ள முயற்சிப்பதிலும்
இது தான் காரணமாக
இருக்கும். இராணுவ
உதவிக்கோ (அ) நாடு என்று
அங்கீகரிக்கவோ அல்ல.
தமிழ்நாட்டுடன் பொருளாதார
உறவை தமிழீழ மக்களே
மேற்கொள்ளலாம். இதனால்,
தமிழ்நாட்டில் ஒரு
பொருளாதார வளர்ச்சி
ஏற்படலாம். அப்படியும்
தமிழ்நாடு உதவி
செய்யாவிடில், வேறு
அயல்நாடுகளுடன் பொருளாதார
தொடர்பு மேற்கொள்ளப்படும்.
இது புலிகளால் மாத்திரமே
செய்யப்படலாம்.

அமிழ்து - Sathis M R said...

தாங்கள் க.ப. அறவாணனின் "ஈழம் -தமிழரின் தாயகம்" புத்தகத்தை ஒரு முறை வாசியுங்கள்.

இலங்கையில் தமிழ் பேசும் அனைவரும் இந்தியாவிலிருந்து சென்றவர்கள் என்ற கருத்து பெரும் வாரியானவர்களிடம் உள்ளது. எனக்கும் கூட சில காலம் முன் அப்படி ஒரு கருத்து தான் இருந்தது...

இலங்கையைப் பற்றிய எனது பதிப்பை இங்கே காணலாம்.

http://amizhthu.blogspot.com/2006/08/blog-post.html

போன இடத்தில் நாடு கேட்டவர்கள் அல்ல அவர்கள்! பறி போன நாட்டைக் கூட கேட்கவில்லை... உரிமைகளைத் தான் கேட்கிறார்கள்.

படித்த புத்தகங்களிலிருந்து நான் புரிந்து கொண்டது...

அயுதப் போராட்டமும், தனி நாடுக் கோரிக்கைக்கானக் காரணமும்:

அகிம்சை வழிப் போராட்டங்கள் பலனளிக்கவில்லை,

இளைஞர்களுக்கு தமிழைக் காரணம் காட்டி உயர்க் கல்வி மறுக்கப்பட்டதினால்,

இதர அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு படிப் படியாக இலங்கை அரசு அலுவலகங்களில் சிங்கள மயமானது...

நேரமின்மையால் மற்றவற்றை பின்னர் எழுதுகிறேன்..!

BadNewsIndia said...

அமிழ்து, வருகைக்கு நன்றி!

நீங்கள் சொல்லும் "க.ப. அறவாணனின் ஈழம் -தமிழரின் தாயகம்" புத்தகத்தை நேரம் கிடைக்கும்போது கண்டிப்பாக படிக்கிறேன்.

உங்கள் பதிவும் பார்த்தேன் - வில்லங்கமான யோசனை.

இங்கிருக்கும் ப்ரச்சனையும் பல பல.

Anonymous said...

'ஈழத் தமிழரைப் பற்றித் தெரியாதென்று சொல்ல உங்களுக்கு வெட்கமாக இல்லையா?'

என்ன ஒரு ஆணவமான ஒரு கேள்வி..ஏன் இங்குள்ள அனைவருக்கும் இலங்கை பிரச்சனை ஒரு கட்டாயப்பாடமா? சரி...ராமனாதபுர மாவட்ட அல்லது மொரீசியஸ் தமிழ்மக்களின் பிரச்சனை பற்றி நீங்கள் தெரிந்து வைத்துள்ளீர்களா?

என்னய்யா கொடுமை இது..ஒரு ஆள் ஒரு பிரச்சனை பற்றி தெரியாது என்று சொல்லிவிட்டு சில கேள்விகளை கேட்கிறார்...அதற்கு கேட்கப்படும் எதிர்கேள்விகளை பாருங்கள்.இந்த வாய்துடுக்கு அல்லது திமிர்த்ததனத்தை வன்மையாக கண்டிக்கிறேன்.

'ஈழத்தமிழன் என்ன வேலைக்காக வந்து இலங்கையில் குடியேறினவனா!
இதைச் சொல்ல உமக்கெவ்வளவு தைரியம்???'

என்ன மிரட்டலா? ஒருவர் ஒரு தவறான கருத்தை கொண்டிருந்தால், சரியான தகவல்களை கூறி தெளிவுபடுத்துவதை விட்டுவிட்டு என்ன ஒரு எழத்து வன்முறை....

Bad...இந்த மாதிரி திமிர் ஆசாமிகளால் தான் இலங்கை பிரச்சனை இன்னமும் தீராமல் இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்கள் இன்னலில் இருக்கிறார்கள்.

'மீடியாவில் எல்லா இடத்திலும் 'ஒருதலை' பட்சமாகவே தகவல் கிடைத்தது'

ஆமாம்..அப்பிடித்தான் இருக்கிறது.இணையத்தை பயன்படுத்தும் பெரும்பாலான ஈழத்தமிழர்கள் வெளிநாட்டில் தஞ்சம் அடைந்தவர்கள்.அவர்களில் பெரும்பாலானோர் LTTE-ஐ ஆதரிப்பார்கள்..அதற்கு ஒருவிதமான guilt கூட காரணமாக இருக்கலாம்.இவர்களில் சிலர் ஆர்வக்கோளாறினால் keyboard-மூலமாக ஆயுதபுரட்சி செய்யமுயலுவார்கள்...வெளிநாட்டில் இருந்துகொண்டே ஈழவிடுதலையை Fed-Ex-ல் அனுப்ப முடியுமா என்றும் பார்ப்பார்கள்.

இவர்களையும் கடந்துதான் நீங்கள் இலங்கை பிரச்சனையை புரிந்து கொள்ளவேண்டும்.

Anonymous said...

ஆணிவேர் படத்தைப் பாருங்கையா.

ஆண்டவரே சீக்கிரமா பூமில அவதரிங்க.

BadNewsIndia said...

செல்வமணி, தோள் கொடுத்ததர்க்கு ரொம்ப நன்றி.

நான் ஏற்கனவே சொன்னது மாதிரி ஈழப் பிரச்சனை பற்றி தெரியாததர்க்கு நான் வெட்க்கபட வேண்டிய அவசியமே இல்லை.
இதை இத்தனை நாள் தீர்த்து வைக்காத இலங்கை பிரதமரும், LTTE தலைமையும் தான் வெட்கப்பட வேண்டும்.

இணையத்தில் கேட்க்கப்படும் சின்ன கேள்விக்கே கொதித்தெழுபவர்கள் எழுதும் பதிவுகள் un-biased ஆக இருக்குமா என்று தெரியவில்லை.

BadNewsIndia said...

அனானி, ஆணிவேரா? என்னங்க சொல்லிருக்காங்க அதில?
எங்க கிடைக்கும்?

ஆண்டவர் அவதரிக்கர வரைக்குமெல்லாம் wait பண்ண முடியாதுங்க. நம்ப பிரச்சனைய நம்பதான் தீர்த்துக்கணும்.

Anonymous said...

இணையமெல்லாம் தவளும் உமக்கு ஆணிவேரைப் பற்றி தெரியவில்லையா?
மெய்யாலுமா?


//ஆண்டவர் அவதரிக்கர வரைக்குமெல்லாம் wait பண்ண முடியாதுங்க. நம்ப பிரச்சனைய நம்பதான் தீர்த்துக்கணும்//
அப்ப உடனடியா
காஷ்மீரையும், ஈழத்தையும் பிரிச்சு அவங்க அவங்களுக்கு
கொடுத்துடுங்க. புண்ணியமாப் போகூங்க உங்களுக்கு.

BadNewsIndia said...

அனானி,

//இணையமெல்லாம் தவளும் உமக்கு ஆணிவேரைப் பற்றி தெரியவில்லையா?
மெய்யாலுமா?//

எனக்கு பல விஷயம் தெரியாது. ஆணிவேர் trailer கிடைத்தது.
http://youtube.com/watch?v=n46iKtsOdXg

பார்த்துவிட்டு சொல்கிறேன்.

//அப்ப உடனடியா
காஷ்மீரையும், ஈழத்தையும் பிரிச்சு அவங்க அவங்களுக்கு
கொடுத்துடுங்க. புண்ணியமாப் போகூங்க உங்களுக்கு.//

அது சரி, கொடுக்க வேண்டியதுதான். என் சக்திக்கு உட்பட்டு இருந்திருந்தா பிரச்சனையே உருவாகி இருக்காதே சார்.

bala said...

//இணையமெல்லாம் தவளும் உமக்கு ஆணிவேரைப் பற்றி தெரியவில்லையா//

BNI அய்யா,

நீங்க நம்ம ராஜ வனஜ் அய்யாவை கேட்டீங்கன்னா ஆணிவேரைப் பத்தின முழு விவரமும் கிடைக்கும்.

பாலா

BadNewsIndia said...

Thanks Bala. I will check with RajVanaj.

edho bayangara matter irukko indha aaniverla?

இவன் said...

///என்ன ஒரு ஆணவமான ஒரு கேள்வி..ஏன் இங்குள்ள அனைவருக்கும் இலங்கை பிரச்சனை ஒரு கட்டாயப்பாடமா? சரி...ராமனாதபுர மாவட்ட அல்லது மொரீசியஸ் தமிழ்மக்களின் பிரச்சனை பற்றி நீங்கள் தெரிந்து வைத்துள்ளீர்களா?///


//என்ன மிரட்டலா? ஒருவர் ஒரு தவறான கருத்தை கொண்டிருந்தால், சரியான தகவல்களை கூறி தெளிவுபடுத்துவதை விட்டுவிட்டு என்ன ஒரு எழத்து வன்முறை....

Bad...இந்த மாதிரி திமிர் ஆசாமிகளால் தான் இலங்கை பிரச்சனை இன்னமும் தீராமல் இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்கள் இன்னலில் இருக்கிறார்கள்//

திரு செல்வமணி தங்களது கண்டனம்கூட சற்று கடுமையாகத்தான் உள்ளது. தங்களது அதங்கம் எனக்கு புரிகின்றது. ஆனால் சற்றே கடுமையை குறைதிருக்கலாம்.

//ஆமாம்..அப்பிடித்தான் இருக்கிறது.இணையத்தை பயன்படுத்தும் பெரும்பாலான ஈழத்தமிழர்கள் வெளிநாட்டில் தஞ்சம் அடைந்தவர்கள்.அவர்களில் பெரும்பாலானோர் LTTE-ஐ ஆதரிப்பார்கள்..அதற்கு ஒருவிதமான guilt கூட காரணமாக இருக்கலாம்.இவர்களில் சிலர் ஆர்வக்கோளாறினால் keyboard-மூலமாக ஆயுதபுரட்சி செய்யமுயலுவார்கள்...வெளிநாட்டில் இருந்துகொண்டே ஈழவிடுதலையை Fed-Ex-ல் அனுப்ப முடியுமா என்றும் பார்ப்பார்கள்.//

நீங்கள் சொல்வதில் உன்மை இருக்கதான் செய்கிறது அதற்காக அனைவறையும் யுத்த பூமியிலே இருக்கவைக்க முடியாது. இடம் பெயர்ந்த தமிழர்கள் தான் புலிகளின் பொருளார பலம் என்பது நம் ஆனைவருக்கும் தெரிந்திருக்க நியாம்மில்லைதான். இவர்கள் ஈழவிடுதலையை Fed-Ex ல் தான் அனுப்பிகொண்டுள்ளனர்.

விடுதலை புலிகளுக்காக வக்காலத்து வாங்கி சிறைசென்ற வைகோ-வை விடுவிப்பதற்காகவும் வழக்காடுவதற்கான செலவை சமளிப்பதற்காகவும் ஆஸ்த்ரேலியாவில் வசிக்கும் ஈழத்தமிழர்கள் பணம் அனுப்பியது Fed-Ex ல்தான்.

இத்திய விடுதலை போரட்ட்தில் ஈடுபட்டு ஒருமுறை சிறைவாசமும் அனுபவித்த பின். இந்தியாவிற்கு சுதந்திரம் மட்டும் எல்லா வளத்தையும் வழகிவிடமுடியாது அதன் வளர்சிக்கு தொழில் வளமும் தேவை என்ற தொலை நோக்கு பார்வையுடன் தொடங்கப்பட்டதுதான் டாடா நிறுவனம். அதுவே சுதந்திர இந்தியாவின் முதல் மிகப் பொரிய தொழில் நிறுவனமும் பொருளதார பலமும்கூட.

அதனால் அயல் தேசத்தில் வாழும் தமிழனால் Fed-Exல்கூட சுதந்திரதை அனுப்பமுடியும் என்பது அடியேனின் தாழ்மையான கருத்து.

BadNewsIndia said...

வருகைக்கு நன்றி இவன்!

//அதனால் அயல் தேசத்தில் வாழும் தமிழனால் Fed-Exல்கூட சுதந்திரதை அனுப்பமுடியும் என்பது அடியேனின் தாழ்மையான கருத்து//

நல்ல கருத்து. தூரம் என்றும் ஒரு முட்டுக்கட்டையாக இருந்ததில்லை. உண்மையான எண்ணத்துடன் பொதுநலம் வேண்டி செய்யும் செயல்களால் நிச்சயம் பலன்கள் கிடைக்கும்.

Anonymous said...

இவன்...என்னுடைய பதில் கடுமையாக இருந்ததற்கு காரணம் அது ஒரு எதிர்வினை.

'விடுதலை புலிகளுக்காக வக்காலத்து வாங்கி சிறைசென்ற வைகோ-வை விடுவிப்பதற்காகவும் வழக்காடுவதற்கான செலவை சமளிப்பதற்காகவும் ஆஸ்த்திரேலியாவில் வசிக்கும் ஈழத்தமிழர்கள் பணம் அனுப்பியது Fed-Ex ல்தான்.'

இது நான் எங்கும் படிக்காத செய்தி.நீங்களும் சரி பார்க்கவும்.அப்படியே இருந்தாலும் இது ஒரு நியாயமான செயலா? அவர்கள் பணம் அனுப்பினாலும் வைகோ போன்றவர்கள் அதை ஏற்றுக் கொள்ளலாமா?

'அயல் தேசத்தில் வாழும் தமிழனால் Fed-Exல்கூட சுதந்திரதை அனுப்பமுடியும் என்பது அடியேனின் தாழ்மையான கருத்து.'

Fed-Ex-ல் அனுப்பும் பணம் மட்டும் ஒரு நாட்டில் விடுதலையை பெற்று தந்துவிடுமா என்ன? அங்கு நடக்கும் உயிர்சேதத்தை எளிதாக தவிர்த்து இருக்கலாமோ?அப்படியென்றால் இன்னேரம் பாலஸ்தீனம் விடுதலையை பெற்றிருக்கவேண்டுமே...அரபிகளிடம் இல்லாத பணமா..

இவன்..வெளிநாட்டில் வேலை பார்க்கும் உங்களை போன்றவர்கள் அனுப்பும் Fed-Ex பணத்தையும் இதையும் குழப்பிகொள்கிறீர்கள்.

'நீங்கள் சொல்வதில் உன்மை இருக்கத்தான் செய்கிறது அதற்காக அனைவறையும் யுத்த பூமியிலே இருக்கவைக்க முடியாது.'

நான் எல்லோரையும் சொல்லவில்லை.. எழுதியதை மறுபடியும் படிக்கவும்.நான் எழுதியது ஆர்வக்கோளாறினால் இணையத்தில் வந்து போர் முழக்கமிடும்
ஒரு சிலரை பற்றி.

மற்றபடி நானும் ஈழப் பிரச்சனையை நெடுநாட்களாய் கூர்ந்து கவனித்து வருபவன்..ஈழத் தமிழர்களின் அமைதி வாழ்க்கை மறுபடியும் தழைக்க வேண்டும் என்று விரும்பும் எண்ணற்ற தமிழர்களில் நானும் ஒருவன்.

டாடா நிறுவன விசயத்திற்கும் இந்த பின்னூட்டங்களுக்கும் என்ன சம்பந்தம் என்று விளங்கவில்லை.

ஒரு விசயம்...

Fed-Ex நிறுவனம் பொருட்களை,தபால்களை அனுப்பும் ஒரு பெரிய நிறுவனம் என்றுதான் நான் அறிந்தது.அதன் அடிப்படையில் தான் அந்த பதத்தையும் பயன்படுத்தினேன்.பணமும் அனுப்பமுடியும் என்ற தகவல் புதிதாக இருந்தது.

BadNewsIndia said...

செல்வமணி,

நீங்கள் சொன்னது போல் பணம் மட்டும் விடுதலை வாங்க போறாது.
சில தடங்கல்களுக்கு, விடுதலை மட்டுமே ஒரு நிவாரணமும் அல்ல.

பாலஸ்டீனியர்களோ, ஈழத்தமிழர்களோ விடுதலை கிடைத்தால் மட்டும் நிம்மதியாக இருக்க முடியுமா என்ன? இரண்டு இனத்தவர்க்கும் (சிங்களம், தமிழ், ஜூயிஷ்,அராபியர்) இருக்கும் கசப்புணர்வு நீக்கப்பட வேண்டும்.

இது அந்தந்த இனத்தவரின் தலைவர்கள் இணைந்து, 'ego' களைந்து செயல்பட்டால் மட்டுமே முடியும். ஏட்டிக்கு போட்டியாக போராடி பெறப்படும் சுதந்திரத்தினால் ஒரு பயனும் கிட்டாது.

இவன் said...

"///இது நான் எங்கும் படிக்காத செய்தி.நீங்களும் சரி பார்க்கவும்.அப்படியே இருந்தாலும் இது ஒரு நியாயமான செயலா? அவர்கள் பணம் அனுப்பினாலும் வைகோ போன்றவர்கள் அதை ஏற்றுக் கொள்ளலாமா?///
"

இது நீங்கள் எங்கும் படித்திருக்க இயலாது காரணம். நான் ஆஸ்திரேலியா சென்று இருந்த போது அங்கு எனக்கு கிடைத்த ஈழத்து நண்பர் 'நாதன்' கூறியது. இதற்கான ஆதாரம் என்னிடம் தற்போது இல்லை. தகுந்த ஆதாரம் அற்ற செய்தியை பொது இடத்தில் வெளியிட்டமைக்காக நான் தார்மீக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

FedEx என்பது விரைவு தபால் சேவை நிறுவனம் மட்டுமே. இதன் மூலம் காசோலை/வரைவோலை மற்றும் ஆவணங்களை அனுப்பமுடியும் என்பதாலே 'FedEx-ன் மூலம் சுதந்திரத்தையும் அனுப்பமுடியும்' என்று கூறினேன்.
கனடா, ஐரோப்பியா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் இதர நாடுகளில் வசிக்கும் ஈழத்தமிழர்கள் (ஆரம்ப காலத்தில்) தபால் சேவையை தங்களது தொலைதொடர்புக்கு பெரிதும் பயன்படுத்தினர்(கின்றனர்) என்பதாலும். மற்றும் இவர்களே ஈழம் மற்றும் புலிகளின் இன்றைய பொருளதார தூண்கள் என்பதாலும் அவ்வாறு கூறினேன்.


அயல் தேசத்தில் வாழும் தமிழர்கள் ஈழத்து பிரச்சனைய்யை தீர்பதற்கு எவ்வாறு உதவிகின்றனர் என்பதை விளக்குவதற்காக நான் ஒரே ஒருவரின் பெயரை மட்டும் குறிப்பிடுகின்றேன். அவர் விடுதலை புலிகளின் அரசியல் ஆலோசகர் மற்றும் ராஜதந்திரியும்மான ஆன்டன் பாலசிங்கம் அவர்கள். அவரைப் பற்றிய சிறு குறிப்புக்கு கிழ் கண்ட சுட்டியை தொடரவும். http://en.wikipedia.org/wiki/Anton_Balasingham. மற்றும் எண்னற்ற அயல் தேசத்து தமிழரின் பெயர்களை இங்கு குறிப்பிட முடியாதது ஒரு வருத்தம்தான்.


டாடாவிற்கு இங்கு என்ன வேளை ? சொல்கிறேன்…

இது டாடாவின் வாழ்க்கை வரலாற்றை படிக்கையில் தெரிந்து கொண்டது. "ஒரு நாட்டின் அரசியல் சுதந்திரம் பொருளாதார தன்னிறைவுடன் பெறவேண்டிய ஒன்று" இந்த கொள்கை பிடிப்புடனே சுதந்திர போரட்டதில் ஆர்வம் இருந்தும் தனது தொழில் துறையிலே முழுகவனமும் செலுத்தினார் டாடா. அதனால் தான் சுதந்திர இந்தியா பிறந்தபொழுது அதனிடம் தொழில் துறைக்கான குறைந்த பட்ச தொழில் கட்டமைப்பாவது இருந்த்து.


மேலே கூறியது போல அயல் தேசத்து ஈழத்தமிழர்கள் தங்களது தொழில் துறையில் கவனம் செலுத்துவதின் மூலம் ஈழசுதந்திரத்தின் பொழுது ஈழமும் தொழில்துறை/பொருளாதாரதில் தன்னிறைவு பெற்றதாக விளங்கமுடியும் என்பது என் கருத்து.

இவ்வாறு கூறுவதற்கு மற்றோர் காரணமும் உண்டு. அது என்னவெனில் நான் பார்த்து பழகிய ஈழத்து தமிழர்கள் பெரும்பான்மையோர் அமைதிக்குபின் தங்களது தாயகம் திரும்புவதே குறிக்கோள்ளாக கொண்டுள்ளனர். அவ்வாறு செல்கையில் தாங்கள் ஈட்டிய செல்வத்தையும் கொண்டு செல்வர்!

பொருளாதார தூண்களாக மட்டுமின்றி அறிவிக்கபடாத தூதுவராகவும் சிலர் செயல்படுகின்றனர்.

இவையனைத்தும் எனது கருத்துகணிப்பே. இவற்றில் எதாவது ஓவ்வாமை இருந்தால் தெரியப்படுத்துங்கள்.

இவன்

Anonymous said...

//தகுந்த ஆதாரம் அற்ற செய்தியை பொது இடத்தில் வெளியிட்டமைக்காக நான் தார்மீக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.\\

செய்தி பரிமாற்றத்தில் இப்படியான தவறுகள் சாதாரணமாக நடக்கக்கூடியதுதான்.இதில் உங்கள் நேர்மைதான் பாராட்டுக்குறியது.

//இவர்களே ஈழம் மற்றும் புலிகளின் இன்றைய பொருளதார தூண்கள் என்பதாலும் அவ்வாறு கூறினேன்\\

புலிகளுக்கு வேண்டுமானால் இவர்களின் பணம் போதுமான அளவுக்கு உதவலாம்.ஒரு நாட்டை கட்டி எழுப்புவற்கு இதெல்லாம் போதாது.அதெற்கெல்லாம் பெரிய திட்டம்,பெரிய அளவில் முதலீடு செய்யவேண்டும்.தனி நாடு அமையும் பட்சத்தில் முதலீடுகளும்,உதவிகளும் இயல்பாகவே குவியும்.

//அயல் தேசத்தில் வாழும் தமிழர்கள் ஈழத்து பிரச்சனைய்யை தீர்பதற்கு எவ்வாறு உதவிகின்றனர் என்பதை விளக்குவதற்காக நான் ஒரே ஒருவரின் பெயரை மட்டும் குறிப்பிடுகின்றேன். அவர் விடுதலை புலிகளின் அரசியல் ஆலோசகர் மற்றும் ராஜதந்திரியும்மான ஆன்டன் பாலசிங்கம் அவர்கள்.\\

உங்கள் பதிவை பார்க்கும் போது மிக சமீபத்தில்தான் ஈழப் பிரச்சனையை கவனிக்க தொடங்கியிருக்கிறீர்கள் போல தெரிகிறது.பாலசிங்கத்திற்கு இன்னொறு முகம் உள்ளது.அவருடை 'தமாஷ்' பேச்சை கேட்கவேண்டுமனால் சென்ற வருட 'மாவீரர் தின'உரையின் விளக்கவுரையை கேட்டுப் பாருங்கள்.80-களின் மத்தியில் அனுராதபுரம் படுகொலை என்ற ஒன்று நடந்தது. அதன் சூத்திரதாரி யார் என இணைய பக்கங்களில் தேடி பார்க்கவும்.

டாடா விசயம் இந்த பதிவு,இந்த பின்னோட்டம் போன்றவற்றிக்கு சம்பந்தமில்லாதது என்று இப்போதும் நினைக்கிறேன்.

//நான் பார்த்து பழகிய ஈழத்து தமிழர்கள் பெரும்பான்மையோர் அமைதிக்குபின் தங்களது தாயகம் திரும்புவதே குறிக்கோள்ளாக கொண்டுள்ளனர். அவ்வாறு செல்கையில் தாங்கள் ஈட்டிய செல்வத்தையும் கொண்டு செல்வர்\\

கனடாவின் டொரோண்டோ நகரில் மட்டும் மூன்று இலட்சம் இலங்கை தமிழர்கள் இருப்பதாக ஒரு செய்தி.சிறுது நாட்களுக்கு முன்பு, அங்கு ஒரு புள்ளிவிவர கணக்கு எடுக்கப்பட்டது.தனி நாடு கிடைத்தால் எத்தனை சதவீத மக்கள் நாடு திரும்ப விருப்பம் என்ற புள்ளிவிவர கணக்கு.பெறுவாரியான மக்கள் கனடாவில் தங்கியிருக்கவே விருப்பம் தெரிவித்திருக்கிரார்கள்.ஆனால் தனி நாடு கிடைத்தால் அங்கு சென்றுவர விருப்பம் தெரிவித்திருக்கிறார்கள்.இது நான் Toronto Star என்ற பத்திரிக்கையில் முன்பு படித்த செய்தி.இதற்கான சுட்டி யை தர முயற்சிக்கிறேன்.

//பொருளாதார தூண்களாக மட்டுமின்றி அறிவிக்கபடாத தூதுவராகவும் சிலர் செயல்படுகின்றனர்.\\

ஆயுத போராட்ட குழுவுக்கு, அறிவிக்கபடாத தூதுவர் பதவி மட்டுமல்ல..வேறு சில அறிவிக்கபடாத நடவடிக்கைகளும் இருக்கும்.

கொழுவி said...

//இலங்கைக்கு அன்று வேலை தேடி போனவர்கள் நம் தமிழர்கள். போன இடத்தில் தனி நாடு கோறுவது சரியா? இன வெறியர்கள் தாக்கினால், அதர்க்கு இதுதான் விடையா?//

சரியான அறிவு உங்களுக்கு இல்லையென்பது பெரிய பிரச்சனையில்லை. ஆனால் இலங்கையில் இன்று தனிநாடு கேட்டு போராடும் தமிழர்கள் இந்தியாவில் இருந்து வேலைக்கு போனவர்களா என நீங்கள் கேட்டுத்தெரிந்து கொண்ட பின்னர் இதை பற்றி பேசியிருக்கலாம். உங்குள்ள சாதிப்பிரச்சனைகள் அரசியல் பிரச்சனைகள் குறித்து எமக்கு எதுவும் சரியாக தெரியாது. அதனாலேயே அவை பற்றி எதுவும் கதைப்பதில்லை. நீங்களும் அவ்வாறு இருக்கலாம்.

இலங்கையில் சிங்கள இனம் வருவதற்கு முன்பாகவே தமிழர்கள் இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளில் வாழ்ந்திருக்கிறார்கள். அவர்கள் தான் தனிநாடு கேட்டு போராடுகிறார்கள். இந்தியாவிலிருந்து வேலைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்கள் இலங்கையின் மத்திய பகுதியில் தனியான பிறிதொரு அரசியல்த் தலைமைகளின் கீழ் வாழ்கிறார்கள்.

இலங்கை காலணித்துவ ஆட்சிகளின் முன்பு தமிழ் இராசதானி. சிங்கள இராச தானி என்ற இரண்டு தேச அலகுகளாக தான் இருந்தது. ஆயினும் போர்த்துக்கீசர் ஒல்லாந்தர் ஆங்கிலெயர்கள் தமது நிர்வாக வசதிக்காக இவையனைத்ததையும் ஒன்றாக்கினர்.

உண்மையில் சுதந்திரம் கிடைத்த போதே பாகிஸ்தான் போல நாமும் கேட்டுப் பிரிந்திருக்க வேண்டும்.

ஆயினும் சிலர் சிங்கள அரசுகளிடம் பேச்சுவார்த்தை மூலமாக பிரச்சனையை தீர்க்கலாம் என்கிறார்கள். அவர்கள் கதையை நாங்கள் கேட்பதாய் இல்லை.

BadNewsIndia said...

கொழவி, வருகைக்கும் விளக்கத்திர்க்கும் நன்றி.

//சரியான அறிவு உங்களுக்கு இல்லையென்பது பெரிய பிரச்சனையில்லை. ஆனால் இலங்கையில் இன்று தனிநாடு கேட்டு போராடும் தமிழர்கள் இந்தியாவில் இருந்து வேலைக்கு போனவர்களா என நீங்கள் கேட்டுத்தெரிந்து கொண்ட பின்னர் இதை பற்றி பேசியிருக்கலாம்//

தவறுதான். இப்படியும் அப்படியமாக பல மாதிரி இணையத்தில் இருப்பதை படித்து குழம்பியதால் வந்த வினைதான்.
எல்லோரும் அளித்த பதிலால் உண்மை புரிந்தது. உங்கள் வலியும் நன்றாக புரிகிறது.
விடை கிடைக்கட்டும் கூடிய விரைவில்!

நன்றி!

மியாவ் said...

இதில் வங்காள தேச விடுதலை போராட்டம் எந்த வகையைச் சேர்ந்தது?

Anonymous said...

ஜயா இலங்கையில் மலையகத் தமிழர் வேறு இலங்கைத் தமிழ்ர் வேறு ஆனால் இன்று மலையகத் தமிழர் படும் துன்பங்கள் வெளியுலக மக்களுக்கு தெரிவதில்லை. மலையகத் தமிழரின் இந்த பிரச்சினைகளுக்கு ஏன் இலங்கைத் தமிழரின் முழுக்கார
ணமும் யார் தெரியுமா இலங்கைத் தமிழர் தான் இதைப் பற்றி முழுமையாக பிறகு சொல்கிறேன்

BadNewsIndia said...

Indian, வங்காள தேச விடுதலை நடந்து முடிந்த ஒன்று. அதை இப்போ பேசி இந்த டாபிக்கை திசை திருப்ப வேண்டாமே.

இருந்தாலும், கேட்டதால சொல்றேன். வங்காள தேச விடுதலைப் போராட்டத்து காரணம் இரண்டு துண்டு பாகிஸ்தானுக்கும் இடையே இருந்த இடைவெளிதான். எல்லாம் வெள்ளைக்காரன் அவசரமா எடுத்த கடைசி கால முடிவுகளினால் ஏற்பட்ட குழப்பங்கள் தான்.

BadNewsIndia said...

அனானி, வருகைக்கும் கருத்துகும் நன்றி.

மலயகத் தமிழரை இலங்கை தமிழர் ஒடுக்கறாங்களா?
விவரத்தை பதியுங்கள்.

வெயிட்டிங்க்.
-BNI

Unknown said...

http://www.youtube.com/watch?v=rZytIZPzbKA
ithai paarungal..! piragu purinthu kolveergal naangal yean tamil elathirku poradukirom endru...!!

 
Statcounter