Monday, October 23, 2006

சுவரொட்டி அல(சி)ங்காரம் - தடுப்பது எப்படி? (part 2)

எனது முந்தைய பதிவான "சுவரொட்டி அல(சி)ங்காரம் - தடுப்பது எப்படி?", சில பல நல்ல உள்ளங்களை தட்டி இருக்கிறது.

வெறும் வாயளவில் இல்லாமல் செயலிலும் நமது நண்பர்கள் சிலர் களம் இறங்கி உள்ளார்கள்.

என் பதிவில் சுட்டிக்காட்டிய சுவரொட்டி அசிங்காரம் செய்யும் "APOLLO COMPUTER EDUCATION" க்கு, எனக்குத் தெரிந்து இது வரை 8 பேர் தொலைபேசியில் அழைத்து, பொது இடத்தில் மக்களுக்கு இடைஞ்சல் தரும் சுவரொட்டி விளம்பரங்களை அப்புறப்படுத்த கேட்டிருக்கிரார்கள்.

சூட்டோடு சூடாக மேலும் சிலர் அழைத்தால், வெற்றி நிச்சயம்!
( இல்லை என்றால், நானே பல குரலில் பேசவும் தயார்! )

அவர்கள் தொலைபேசி எண் - 44-22640291
முகவரி:
No-4/31 Pillayar Koil Street
Pallavaram, Chennai 600043

சுவரொட்டி இருக்கும் இடம் - குரொம்பேட்டை பஸ் ஸ்டாண்ட்.

என் முந்தைய பதிவு இங்கே - http://badnewsindia.blogspot.com/2006/10/blog-post_15.html



நாட்டில் எவ்வளவோ பிரச்சனை இருக்கிறது, சுவரொட்டி ஒழிப்பதா முக்கியம் என்று நண்பர் ஒருவர் கேட்டார் - ஒவ்வொரு ஓட்டையாக அடைக்க வேண்டும். மொத்தமாக செய்ய நம்மால் முடியாது. சின்ன ஓட்டையை முதலில் அடைக்கலாமே.

என்ன சொல்றீங்க? நீங்க அழைத்து பேசிய போது அவர்கள் கூறிய பதிலை பின்னூட்டம் இடவும். நன்றி!!!

நன்றி வெங்கட், பாபு, நடராஜன், சீமாச்சு, daylight, goodbadugly, தருமி, அனானி1

16 comments:

Anonymous said...

vera velai illiya unakku?

said...

Dharumi's comments from my previous post:

இப்போதான் (23.10.'06 காலை 11.07மணி) அப்பல்லோவுக்கு தொலைபேசினேன். மேனேஜரிடம் பேசுங்கள் என்று பணிவாகக் கூறி அவரின் கைத்தொலைபேசி எண்ணும் கொடுத்தார் குரலுக்குரிய பெண்மணி.

அந்த எண்: 99426 64366; பெயர்: முத்து.

அந்த எண்ணுக்குப் பேசினேன். முத்து பிரச்சனையைப் புரிந்துகொள்ள மறுக்கிறார். இதில நான் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும்? என்று கேட்கிறார். இதப் பத்தி உனக்கென்ன என்பது போன்ற மனப்பான்மையுடன், எல்லோரும் ஒட்டுகிறார்கள் நாங்களும் ஒட்டுகிறோம் என்கிறார். நாளிதழ், ப்ளாக் இங்கு உங்கள் பெயரோடு சேர்த்து இந்தப் பிரச்சனை உள்ளதால் உங்களுக்கு, உங்கள் கம்பெனியின் பெயருக்கு ஏற்பட்டுள்ள களங்கத்தை நீக்க செய்யுங்கள் என்றேன். "ஆகட்டும் பார்க்கலாம்" என்பது போன்ற ஒரு பதில்.

போஸ்டர் பிரச்சனையை விட நான் யார், என் எண் என்ன, எதற்காக நான் இதைப் பற்றிப் பேசுகிறேன் என்பது போன்ற கேள்விகளே முத்துவிடமிருந்து வந்தன...மற்றபடி அவர் ஏதும் இதற்கு முயற்சியெடுப்பார் என்று தோன்றவில்லை.

கல்லைவிட்டு எறிவோம்...விழுந்தால் மாங்காய்... - இது பழமொழி.

said...

Dharumi also says,

இனி தொலைபேசுவோர் நான் மேலே கொடுத்துள்ள எண்ணுக்கு மானேஜர் முத்துவிடம் பேசலாமே...

said...

Seemachu said,

இப்பொழுது போன் பண்ணி என் கண்டனத்தைத் தெரிவித்தேன். அவர்களிடம் என் இமெயில் முகவரியையும் தந்துள்ளேன்.. மானேஜர் இல்லையென்று எடுத்த பெண்ணொருவர் சொன்னார்.

என் பெயர் மற்றும் முகவரியைத் தந்துள்ளேன். இது போல் இன்னும் பலரும் போன் செய்தால் ஒருவேளை திருந்துவார்களாயிருக்கும்.

என் இமயிலுக்கு ஏதாவது பதில் வந்தால் பகிர்ந்து கொள்கிறேன்.

பப்ளிக் இந்தமாதிரி எதிர்மறையாக நினைக்கிறார்களென்று தெரிந்தால் ஏதாவது நல்லெண்ணம் ஏற்படலாம்.

இதற்காக அமெரிக்காவிலிருந்து போன் செய்தேன் என்று சொல்வதை மறைத்துவிட்டேன். இதுவே அவர்களின் விளம்பரத்துக்கு ஒரு வெற்றியாக அவர்கள் நினைத்துவிடக்கூடாது பாருங்கள்...


என்றென்றும்
அன்புடன்,
சீமாச்சு..

Anonymous said...

I called Mr. Muthu at 9942664366 given by Darumi.

Muthu was very courteous and admitted that his people who posted the posters are not educated and hence they have mistakenly pasted it on bus stops and public places.

He promised me that he will ask them to remove it immediately.

Good work Bad news india.

It gives me great satisfaction after making that call.

said...

/// vera velai illiya unakku ?

பொரம்போக்கு(anonymous) அன்பரே

உங்கள் வீட்டு சுவற்றில் ஒட்டினால் தான் தெரியும . . . . . .

said...

அனானி,

உங்களுக்கு 'satisfied' ஆக இருக்கிறது என்பது நல்ல செய்தி.
பொது நலத்திர்க்கு வேலை செய்யும்போது வரும் சந்தோஷம் அலாதி தான். தொடரட்டும் இது போல் பல முயற்சிகள்.

Everyone, please do not be harsh when you call Muthu.

Ofcourse, they wont know that they are committing a mistake. We are immersed in dirt so much that we dont feel the stench anymore.

said...

அனானி சொல்வதைப் பார்த்தால் இன்றைக்கே இன்னும் சிலர் போன் செய்தால் முத்துவிடம் கொஞ்சம் தாக்கம் இருக்கும்போல் தெரிகின்றதே.

said...

இன்னும் 10 பேர் கூப்பிட்டால் முத்துவே நேரில் சென்று கிழித்தாலும் கிழித்து விடுவார்.

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு!

said...

வெங்கட்ராமன்,
சரியாக சொன்னீர்கள்.

நான் சொல்வதை போல், தவறுகள் தவறு என்று தெரியாத அளவுக்கு இன்று நிலமை இருக்கிறது.
(அதர்க்கு வேறொரு பதிவுதான் இட வேண்டும். உதாரணத்திர்க்கு, பத்திர பதிவகத்தில், லஞ்சம் வாங்குவதும் கொடுப்பதும், எழுதாத சட்டமாகவே ஆகிவிட்டது).

said...

விட்ட பாணம் மேலே சென்று வெடிக்காமல் புஸ் என்று திரும்பி விடுமோ?

சலசலப்பு குறைந்து விட்டதே.

பார்ப்போம், இல்லை என்றால், வெள்ளிக்கிழமை, முத்துவை திரும்ப அழைத்து ஞாபகப் படுத்தப் பார்க்கிரேன்.
அதுவும் நடக்க வில்லை என்றால், அருகில் இருக்கும் நண்பர்களில் ஒருவரை கிழித்து எரியச் சொல்கிறேன்.

வேரென்ன செய்ய?

said...

இன்றைய status:
இன்று முத்துவின் number கு அழைத்து பார்த்தேன். என் எண் என்று தெரிவதாலோ என்னவோ, அவர் எடுக்கவில்லை.
வெள்ளிக் கிழமை திரும்ப முயன்று பார்க்கிறேன்.

குரொம்பேட்டை அருகே வசிக்கும் நண்பர்கள் யாராவது பஸ் ஸ்டாண்டை எட்டிப் பார்த்து சுவரொட்டிகள் இன்னும் இருக்கின்றதா என்று தெரிய படுத்தினால் உதவியாக இருக்கும்.

said...

மீண்டும் அந்த பஸ் ஸ்டேண்ட் சுவரொட்டியால் அலங்கரிக்கப்பட்டுளதாக நண்பர் சொன்னார். :(

said...

திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்..?

சென்ஷி

said...

அது சரி இதே மாதிரி மக்கள் பிரச்சனைகளுக்கு Bad News India போராடுனா சுப்பராத்தான் இருக்கும்.

அப்பல்லோவோ சுப்பல்லோவோ ஒரு சாதாரண ஆள்(அல்லது கொஞ்சமே கொஞ்சம் செல்வாக்கான ஆள்) அதனால அவரை எதிர்த்து போராடுனா, பிரசர் கொடுத்தாக்க அரசு இய்ந்திரம் கூட தட்டிக் கொடுத்து அதோட முதுக சொறிஞ்சிக்கறதோட இந்த விசயத்தில் வீறாப்பா இறங்கன நடுத்தரவர்க்கத்தோட முதுகையும் சொறிஞ்சி விட்டுக்கும்.

ஏன் இதே சென்னையிலே இரண்டு பக்கமும் விளம்பர பலகை கொண்டு சீர்கேட்டை பரப்பி வரும் பன்னாட்டு மற்றும் தரகு கம்பேனிகளுக்கு எதிராக போராட்டம் நடத்த வேண்டியதுதானே BNI?

ஏன் கிட்னி பிரச்சனை நடந்த சென்னையிலே இதே போல சம்பந்தப்பட்ட ஆட்களை மிரட்டும் அளவு இணைய இயக்கம் எடுக்க வேண்டியதுதானே BNI?

ஏன் கல்லுரியில் சம்ஸ்கிருத ஸ்லோகன் சொல்லுவது உள்ளிட்ட கொடுமைகளை செய்ததை எதிர்த்து மாணவர்கள் போராடினார்களே அத்ற்க்கு ஒரு தொலைபேசி போராட்டம் நடத்த வேண்டியதுதானே BNI?

அப்படி ஒன்று எடுத்தால் இங்கு பின்னூட்டம் போட்டதில் முக்கால்வாசி பேர் இருந்த இடம் தெரியாமல் அப்ஸ்காண்ட் ஆகியிருப்பார்கள்.

உங்களுக்கு ஒருத்தன் மாட்டிகிட்டான். சமூக சேவகன் என்ற பெயர் வாங்க இப்ப பலரும் BNI தளத்தில் போட்டி போட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.... :-)))

அசுரன்

said...

அசுரன்,

ஒவ்வொரு படியாதான ஏற முடியும்?

முதல் படியே ஏறலியே இன்னும்.

கண்ணில் படும் அவலங்களை தட்டிக் கேட்ப்போம். நீங்க சொல்லும் விஷயங்களையும் தட்டிக் கேட்க்கலாம்.

ஒன்று பட்டால் ஏதாவது சாதிக்க வழியிருக்கு.