Wednesday, October 04, 2006

MGR um, Karunanidhi um, Jayalalitha um NAASAMAI pogattum...

(due to technical difficulties I had to repost this piece. sorry for inconvenience)

தலைப்பு உங்கள் மனதை புண் படுத்தி இருந்தால் என்னை மன்னித்து விடுங்கள்.

எதற்க்காக இந்த தலைப்பை வைத்தேன் என்று பார்போமா?

கடந்த வாரம் நண்பர்கள் சிலருடன் சில ஆக்கபூர்வமான செயல்களை செய்ய சென்னை மாநகரை சுற்றினோம்.
ஆக்க செயல்களில் ஒன்று, சில நூறு மரங்களை நட இடம் தேர்வு செய்வது.
கோடம்பாக்கத்திலிருந்து தொடங்கி தாம்பரம் வரையிலான இடங்களில் ஒரு ஆட்டோவில் சுற்றினோம்.

வழிதோறும் பல மாடிக்கட்டிடங்கள் கட்டப் பட்டு வருவதைக் கண்டோம். சென்னையின் வ்ளர்ச்சி ஒரு பக்கம் மகிழ்ச்சியை தந்தாலும் பயணத்தில் நான் கண்ட ம்ற்ற விஷயங்கள் மனதை மிகவும் பாதித்தது.

உங்கள் பார்வைக்கு சில:

சியாரச் சென்ற சிட்றுண்டியில் 10 வயது சிறுவன் 'table' துடைத்துக் கொண்டிருந்தான். படித்து சந்தோஷமாக இருக்க வேண்டிய வயதில் கடின வேலை செய்து கொண்டிருக்கிறான். அவனிடம் பேச முற்பட்டபோது அவன் முதலாளி குறுக்கிட்டு 'என்னடா வாய் பாத்துட்டு நிக்கே. போய் தட்ட எடுத்து வை' என்று முறைத்தார்.

சாலையில் நாங்கள் சென்ற 'ஆட்டோ'வும் மற்ற வாகனங்களும் போட்டி போட்டுக் கொண்டு சாலை விதியை மீறிச் சென்றன.
தெரு 'signal' விளக்குகள் வெறும் அலங்கார விளக்கை போலே ஒருவராலும் மதிக்கப்படாமல் இருந்தது. ஒட்டுணரிடம் கேட்டேன் "என்னப்பா இப்படி 'red' ல போறியே 'risk' இல்லையா?" அதர்க்கு அவன் பதில் 'அதெல்லாம் அப்படித்தான் சார்". ஒருவர் பின் ஒருவர் செல்லாமல் அனைவரும் ஒரு ஆட்டு மந்தயை போல் செல்கிறார்கள். நானும் இதே மாதிரி மந்தையில் ஒருவனாக சென்றவந்தான் என்பது நினைவுக்கு வந்தது.

ல இடங்களில் தெருவின் பெயர் பலகைகள் மேலே சுவரொட்டிகள் ஒட்டப் பட்டு இருந்தன. வழி நெடுகிலும் எல்லா சுவர்களிலும், தொலைபேசி 'junction box' களிலும், மரங்களிலும், பேருந்து நிலயங்களிலும் சுவரொட்டிகளின் சாம்ராஜ்ஜியம் கண்ணுக்குத் தெரிந்தது.

ங்காங்கே தோண்டப்பட்ட சாலைகள், பணி முடிந்ததும் மீண்டும் சரியாக மூடப்படாததால் அவதிப்படும் மக்களின் அவல நிலை.
ஓரிடத்தில் பள்ளி விட்டு திரும்பும் பிள்ளைகள் சாலையில் நடைபாதை என்று தனியாக இல்லாததால் வாகனங்களுக்கும், பள்ளங்களுக்கும் நடுவில் கஷ்ட்டப்பட்டு புத்தக சுமயுடன் செல்லும் காட்சி மனதை வருத்தியது.

புளி மூட்டையை ஏட்றி செல்வது போல், பிள்ளைகளும், பெண்களும், வயதானவர்களும் ஏறவும் முடியாமல், இறங்கவும் முடியாமல் அல்லல் படும் காட்சி பல பேருந்து நிலையங்களில் நடந்தேறியது.

இன்னும் பல பல அவலங்கள் எல்லா இடத்திலும் - சொல்லிக்கொண்டே போகலாம் எழுத இடம் போறாது.

அவைகளுக்கு நடுவே, முன்னேற்றங்களும் தென் படாமல் இல்லை - புதிய புதிய தொழிர்சாலைகள், புதிய 'technology' யின் வருககைள், 100 தொலைக்காட்சி 'channel' கள், அனைவரிடத்தும் 'cell phone' கள், எராளமான கார்கள், மற்றும் பல. ஆனால், இவைகளால் ஒரு சிலருக்கு மட்டுமே நன்மை கிடைக்கிறது. சாதாரண நிலையில் இருக்கும் மனிதன் இன்னமும் அன்றாட வாழ்க்கை வாழ மிகவும் கஷ்ட்டப்பட்டுக் கொண்டுதான் இருக்கரான். அவன் வாழ்க்கை தரம் உயரவே இல்லை. அவனை சுற்றி வளரும் வளர்சியால் அவனுக்கு ஒரு பயனும் பெரிதாக இல்லை.

10 வயதில் வேலை செய்யும் சிறுவனின் எதிர்காலமும், சாலையில் பயணம் செய்ய கஷ்ட்டப்படும் மக்களும், சுவரொட்டியால் அசிங்கப்படும் இடங்களும், சுகாதாரமற்ற சூழலும், இன்னும் பல பல துயரங்களு்க்கும் யார் காரணம்?

சுதந்திரத்திர்க்கு பிறகு, அரசு பொருப்பில் இருந்து கொண்டு இந்தத் துயரங்களை சரி செய்யாதவர்கள் தானே?
சுயநலமும், கயமையும், சூதும், திருட்டும் சேர்த்து இவர்கள் நம் நாட்டையும், நம் வாழ்வையும் கெடுத்தவர்கள்/கெடுப்பவர்கள்.

அதனாலேயே சாபம் இடுகிறேன் - M.G.R ரும், கருணாநிதியும், ஜெயலலிதாவும் அவர்கள் கூட்டாளிகளும் அறிந்து தவறு செய்திருப்பின் அவர்கள் அனைவரும் நாசமாய் போகட்டும்.

சகோதர, சகோதரிகளே வாரத்தில் ஒரு சில மணி நேரத்தை பொது நலத்திற்க்கு செலவு செய்யுங்கள். சுயநலமாக இருக்காதீர்கள். கிடைக்கும் நேரத்தில், சினிமா பார்த்தொ, டிஸ்கோ ஆடியொ, தூங்கியோ நேரத்தை வீணாக்காதீர்கள். ஆக்க பூர்வமாக ஏதேனும் செய்து, வாழ்க்கையில் அடி மட்டத்தில் இருப்பவனும் நல்ல வாழ்க்கை வாழ உங்களால் இயன்றதை செய்யுங்கள்.

வாழ்க வளமுடன்!!!

4 comments:

Anonymous said...

vaathiyaara poyi ippadi sollitteengale sir. evlavo nalladhu panni irukkaaru avaru.

ooru ippadi irukkaradhukku namba ellaarum kaaranam.

Anonymous said...

yaaraithaan nambuvudhu? ellaarum soozhchikkaarargaldhanaa?

Anonymous said...

நன்றாக சொன்னீர்கள் போங்கள்.
இயன்றதை செய்கிறேன்.

said...

தேன்கூட்டில் அதிகம் பேர் படிக்கப் பட்டதாக, இருந்த தலைப்பு என்று உள்ளே வந்து பார்க்கிறேன். நல்ல கருத்துக்களைச் சொல்லியிருக்கிறீர்கள். விழிப்புணர்வு வரவேண்டும். பழம் தின்று கொட்டை போட்டவர்களை அவ்வளவு எளிதாக திருத்த முடியாது.

தனி மனித ஒழுக்கம் உயரவேண்டும். இன்றைய இளைய சமுதாயமும் உணரவேண்டும்.

எல்லோரையும் எல்லாக் காலமும் ஏமாற்ற முடியாது.

நிறையபேர் உங்களின் இந்தப் பதிவைப் படித்திருக்கிறார்கள். ஆனால், பின்னூட்டமிட தயங்கியிருக்கலாம், உங்கள் தலைப்பின் காரணமாய். :)