Tuesday, September 19, 2006

மெத்தனமாக இருக்காதீர்கள்!!!

செப்டம்பர் 2, 2006

அன்புடயீர்,

( following text was sent as a circular to a Nagar I visited recently.)

வணக்கம். நான் ஒரு ஒய்வு பெற்ற அரசு அதிகாரி. அடயாரை சேர்நதவன். உஙகள் தெருவிற்க்கு 3 மாதங்களூக்கு முன்னால் உறவினர் ஒருவரை சநதிக்க வநதிருந்தேன். இதற்க்கு முன்னால் 1999ல் ஒரு முறை வந்திருக்கிறேன்.
உங்கள் தெரு, 1999ல் இருந்ததை விட இப்பொழுது மிகவும் மோசமாக காட்சி அளிக்கிறது.

99ல் இருந்ததை விட நமது நாட்டின் தரம் இன்று பல மடங்கு பெருகி இருப்பினும், உங்கள் நகரின் நிலமை பல மடங்கு கீழ் போயிருப்பதை உணர்கிறேன்.
காட்டில் இருப்பதை பொல மேடு, பள்ளம், கற்கள் நிறைந்த சாலை. திறந்த கழிவு நீர் பாதை. முற்றிலும் பொருப்பற்ற நிலயில் வாழும் மக்கள். இவ்வளவு அழுக்கு வாழ்க்கை வாழ்கிறோம் என்பது கூட தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்.

உங்கள் பிள்ளைகள் விளயாட ஒரு சிரு பூங்கா கூட இல்லை. இருக்கும் ஒரிரு இடமும் புதர்கள் அடர்ந்து பராமரிக்கபடாமல் இருக்கிறது.
இந்த பேரழிவிர்க்கு காரணம் அரசு அதிகாரிகள் மட்டுமல்ல் - ஒரு பொருப்பற்ற நிலையில் வாழும் நீஙகளும் இதற்கு முழு காரணம்.

சாலையில் எவ்வளவு குண்டு குழிகள் இருந்தாலும், புலம்பிக்கொண்டு வளைந்து நெளீந்து தினமும் சென்று விடுகிறீர்கள். சரியாக கட்டப்படாத கழிவு நீர் கால்வாயில் எவ்வளவு துர்நாற்றம் வந்தாலும், மூக்கை மூடி கொண்டு அடுத்த வேலைகளை பார்க்கிறீர்கள். உங்கள் இல்லத்தை பெருக்கி குப்பையை தெருவில் கொட்டுகிறீர்கள்.

இப்படி ஒரு பொருப்பற்ற வாழ்க்கை வாழ்ந்தால், இன்னும் 5 வருடங்களில் உங்கள் நகரம் மனித வாழ்க்கைக்கு ஒவ்வாத ஒரு இடமாக வெகு விறைவில் மாறிவிடும். ஆனால், அது தெரியாமல் எருமை மாட்டுக் கூட்டம் போல் நீங்களும் ஒரு மந்த வாழ்க்கை வாழ்வீர்கள்.

சாக்கடைகளை திறந்த வெளியில் விட்டால், மழையில் கெட்ட நீர் ஊரி, உங்கள் வீட்டுக்கிணற்று நீர் கெட்டுப்ப்போகும். மூன்று கிணறுகள் இது போல் கெட்டு போய் இருக்கிறது. இன்னும் மற்றவைகளுக்கும் இதெ நிலை வர வெகு நாட்கள் இல்லை.

எல்லாவற்றிர்க்கும் காரணம், சுலபமான வழியை கைய்யாண்டு, எதிர் காலத்தை பற்றி கவலை இல்லாத மெத்தன வாழ்கை வாழ்வதே ஆகும். நாளை உம் பிள்ளைகளும் பேரன் பேத்திகளும் பெரும் துயரத்துடன் வாடும் நிலயை உருவாக்கி இருக்கிறீர்கள்.

இவ்வளவு படித்தவர்கள் வாழும் தெருவிலே ஒரு மரம் கூட சாலையில் இல்லை. சாலை ஒர மரங்களிருந்தால், அதனால் கிடைக்கும் பயன் தெரிந்தும் கூட இதை செய்யாமல் இவ்வளுவு வருட காலம் எப்படி இருந்தீர்கள்?
அப்படி என்ன உஙகளுக்கு அவ்வளவு ஒரு அலட்சியம் உங்கள் பிள்ளைகளின் எதிர் காலத்தில் அக்கறை இல்லையா?

தெருவின் அன்றாட பிரச்சனைகளை அலசி பராமரிக்க ஒரு குழு அமைத்து சாலை துப்புறவு, மரம் நடுதல், போன்ற சின்ன சின்ன தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டாமா?
'கலாம்' களும், 'நாராயண மூர்த்தி' களும், 'மன்மொகன் சிங்' களும் ஒரு பக்கம் நாட்டை உயர்த்த பாடு படுகிறார்கள். உங்களால் ஆனதை நீங்களும் செய்து, வாழும் இடத்தை நல்ல இடமாக வைத்துக் கொள்ளுதல் உங்கள் கடமை இல்லையா?

ஒரு குழு அமைத்து மாதத்திர்க்கு ஒரு முறை ஒன்று சேருங்கள் - சாலையை சுத்தம் செய்யுங்கள் - கழிவு நீரை தேங்க விடாதீர்கள் - மரங்களை வளருங்கள் - பூங்காவை பராமரித்து உம் பிள்ளைகள் விளயாட வழி செய்யுங்கள்.

உங்களில் பலர் என்னை போலே ஒய்வு பெற்ற அதிகாரிகள் தாம். இன்னும் 10 அல்லது 20 வருடங்கள் தான் நாம் இந்த மண்ணில் இருக்கப் போகிறொம். ஒரிரவு உறங்கி மருநாள் உணராமல் உயிர் பிரியும். அதற்க்கு முன்னால் உங்களுக்கு நல்ல வாழ்க்கை வழங்கிய இந்த சமுதாயத்திற்க்கு ஏதாவது நல்லது செய்ய முயற்சி செய்யுங்கள்.

குடும்ப தலைவிகள் தொலைக்காட்சியில் 12 மனி நேரம் செலவிடும் நேரத்தில் ஒரு சில மணி நேரத்தை, தெரு மேம்பாட்டிற்க்கு செலவிட வேண்டும்.

சில யோசனைகள்:
1) தெருவின் தேவைகளை பராமரிக்க ஒரு குழுவை உருவாக்குஙள்.
2) ஆண்டு சந்தாவாக 100 - 200 வரை எல்லாரிடமும் வசூல் செய்யுங்கள்.
3) பெண்களிடம் பண வசூல் மற்றும் பூங்கா சீரமைப்பை ஒப்படையுங்கள்.
4) ஆண்கள் - சாலை பராமரிப்பு, சாலை ஒரத்தில் மரம் நடுதல், அதன் பராமரிப்பு, கழிவு நீர் பராமரிப்பு, தெரு விளக்கு பராமரிப்பை கவனியுங்கள்.
5) 6 மாதத்திற்க்கு ஒருமுறை, அனைவரும் பூங்காவில் திரண்டு நன்கு வசிக்கும் சூழலை உருவாக்க நேரம் ஒதுக்குங்கள்.
6) அரசு செய்து தர வேண்டிய வசதிகளை உடனுக்குடன் போராடி கேட்டு பெருங்கள்.
7) மெத்தனத்தை குறையுங்கள்!!
8) உங்களது பக்கத்து தெருக்களிலும், இதேபோல் செய்ய ஆவன செய்யுங்கள்.

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை!

--------------------------------
தேடி சோரு தினம் தின்று
பல சின்னஞ்சிரு கதைகள் பேசி - மனம்
வாடி துன்பம் மிக உழன்று
பிறர் வாட பல செயல்கள் செய்து
நரை கூடி கிழ பருவம் எய்தி
கொடும் கூட்றுக்கு இறையென பின் மாயும்
சில வேடிக்கை மனிதரை போலே
நானும் வீழ்வேன் என்று நினைத்தாயோ?
....
இனி புதியதோர் உயிர் கொண்டு
மதி தன்னை தெளிவாக்கி
என்றும் சண்தோஷம் கொண்டிருக்க செய்வாய் !!!
என்றும் சண்தோஷம் கொண்டிருக்க செய்வாய் !!!

- பாரதியார் -------------------------------

எல்லோரையும் குறை சொல்ல முடியாது. 'Leadership skill' இருப்பவர்கள் மற்றவர்களை ஒன்று திரட்டி வழி நடத்திச் செல்ல வேண்டும். நீங்கள் இது நாள் வரையில் பெற்ற அனுபவத்தை உஙகள் தெருவின் முன்னேற்றத்துக்கு பயன் பெறுமாறு ஆட்க்களை வழி நடத்தி செல்ல வேண்டும்.

உங்களால் இயன்றதை உடனே செய்யுங்கள்.

படித்தமைக்கு மிக்க நன்றி. உங்கள் கருத்துக்களை வரவேற்க்கிறேன்.

வாழ்க வளமுடன்!

Reach me at: badnews_india@yahoo.com

6 comments:

பாரதிய நவீன இளவரசன் said...

நல்ல கருத்துக்கள்; நல்ல சிந்தனைகள்; என்னால் ஆனதைச் செய்கிறேன்.

BadNewsIndia said...

நன்றி வெங்கடேஷ். உங்களை போன்ற இளைஞர்க்ள் தான் நாட்டு மக்களின் மெத்தனத்தை குறைத்து வீட்டையும் சுற்றத்தையும் உயர்த்த வேண்டும்.

ரிஷி (கடைசி பக்கம்) said...

நிச்சயமாக நான் பார்த்த பதிவுகளில் மிகச்சிறந்த சமூக பொறுப்புள்ள ஒரு பதிவு.

hats off!!!

அருமையான ஒரு பதிவு. தினமும் அரசியல்வாதிகளின் நாடகங்களை பார்த்துக்கொண்டில்லாமல் உருப்படியாக ஏதாவது செய்யலாமே!

இதை ஒரு இயக்கமாக ஆரம்பிக்கலாம்

Yuvraj Sampath said...

கோவையில் ராக் ( RAAC ) என்கிற அமைப்பு இதய் செய்து வ‌ருகிரது..

BadNewsIndia said...

'கடைசி பக்கம்' - உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி.
ஒரு இயக்கம் தொடங்க வெண்டும் என்பது நல்ல சிந்தனை.

யோசிக்கிறென்.

சம்பத், RAAC பற்றி மேலும் விவரம் அளித்தால் நன்றாக இருக்கும்.

ப்ளாக்-ல், சமூக நலன் கொண்ட ஆக்கங்கள் இடம் பெற அனைவரும் முயற்ச்சி செய்ய வேண்டும். நமது நாட்டிற்க்கு இப்பொழுது தேவை, சினிமா அல்ல - நல்ல சிந்தனைகள்தாம்.

Anonymous said...

சில பெயர்கள் சரியா தெரியலியே? என்ன பண்ணனும்?

 
StatCounter - Free Web Tracker and Counter