Thursday, October 05, 2006

MGR um, Karunanidhi um, Jayalalitha um NAASAMAI pogattum...(rel 2)

(due to technical isues I had to repost this piece again. sorry for the inconvenience)

தலைப்பு உங்கள் மனதை புண் படுத்தி இருந்தால் என்னை மன்னித்து விடுங்கள்.

எதற்க்காக இந்த தலைப்பை வைத்தேன் என்று பார்போமா?

கடந்த வாரம் நண்பர்கள் சிலருடன் சில ஆக்கபூர்வமான செயல்களை செய்ய சென்னை மாநகரை சுற்றினோம்.
ஆக்க செயல்களில் ஒன்று, சில நூறு மரங்களை நட இடம் தேர்வு செய்வது.
கோடம்பாக்கத்திலிருந்து தொடங்கி தாம்பரம் வரையிலான இடங்களில் ஒரு ஆட்டோவில் சுற்றினோம்.

வழிதோறும் பல மாடிக்கட்டிடங்கள் கட்டப் பட்டு வருவதைக் கண்டோம். சென்னையின் வ்ளர்ச்சி ஒரு பக்கம் மகிழ்ச்சியை தந்தாலும் பயணத்தில் நான் கண்ட ம்ற்ற விஷயங்கள் மனதை மிகவும் பாதித்தது.

உங்கள் பார்வைக்கு சில:

சியாரச் சென்ற சிட்றுண்டியில் 10 வயது சிறுவன் 'table' துடைத்துக் கொண்டிருந்தான். படித்து சந்தோஷமாக இருக்க வேண்டிய வயதில் கடின வேலை செய்து கொண்டிருக்கிறான். அவனிடம் பேச முற்பட்டபோது அவன் முதலாளி குறுக்கிட்டு 'என்னடா வாய் பாத்துட்டு நிக்கே. போய் தட்ட எடுத்து வை' என்று முறைத்தார்.

சாலையில் நாங்கள் சென்ற 'ஆட்டோ'வும் மற்ற வாகனங்களும் போட்டி போட்டுக் கொண்டு சாலை விதியை மீறிச் சென்றன.
தெரு 'signal' விளக்குகள் வெறும் அலங்கார விளக்கை போலே ஒருவராலும் மதிக்கப்படாமல் இருந்தது. ஒட்டுணரிடம் கேட்டேன் "என்னப்பா இப்படி 'red' ல போறியே 'risk' இல்லையா?" அதர்க்கு அவன் பதில் 'அதெல்லாம் அப்படித்தான் சார்". ஒருவர் பின் ஒருவர் செல்லாமல் அனைவரும் ஒரு ஆட்டு மந்தயை போல் செல்கிறார்கள். நானும் இதே மாதிரி மந்தையில் ஒருவனாக சென்றவந்தான் என்பது நினைவுக்கு வந்தது.

ல இடங்களில் தெருவின் பெயர் பலகைகள் மேலே சுவரொட்டிகள் ஒட்டப் பட்டு இருந்தன. வழி நெடுகிலும் எல்லா சுவர்களிலும், தொலைபேசி 'junction box' களிலும், மரங்களிலும், பேருந்து நிலயங்களிலும் சுவரொட்டிகளின் சாம்ராஜ்ஜியம் கண்ணுக்குத் தெரிந்தது.

ங்காங்கே தோண்டப்பட்ட சாலைகள், பணி முடிந்ததும் மீண்டும் சரியாக மூடப்படாததால் அவதிப்படும் மக்களின் அவல நிலை.
ஓரிடத்தில் பள்ளி விட்டு திரும்பும் பிள்ளைகள் சாலையில் நடைபாதை என்று தனியாக இல்லாததால் வாகனங்களுக்கும், பள்ளங்களுக்கும் நடுவில் கஷ்ட்டப்பட்டு புத்தக சுமயுடன் செல்லும் காட்சி மனதை வருத்தியது.

புளி மூட்டையை ஏட்றி செல்வது போல், பிள்ளைகளும், பெண்களும், வயதானவர்களும் ஏறவும் முடியாமல், இறங்கவும் முடியாமல் அல்லல் படும் காட்சி பல பேருந்து நிலையங்களில் நடந்தேறியது.

இன்னும் பல பல அவலங்கள் எல்லா இடத்திலும் - சொல்லிக்கொண்டே போகலாம் எழுத இடம் போறாது.

அவைகளுக்கு நடுவே, முன்னேற்றங்களும் தென் படாமல் இல்லை - புதிய புதிய தொழிர்சாலைகள், புதிய 'technology' யின் வருககைள், 100 தொலைக்காட்சி 'channel' கள், அனைவரிடத்தும் 'cell phone' கள், எராளமான கார்கள், மற்றும் பல. ஆனால், இவைகளால் ஒரு சிலருக்கு மட்டுமே நன்மை கிடைக்கிறது. சாதாரண நிலையில் இருக்கும் மனிதன் இன்னமும் அன்றாட வாழ்க்கை வாழ மிகவும் கஷ்ட்டப்பட்டுக் கொண்டுதான் இருக்கரான். அவன் வாழ்க்கை தரம் உயரவே இல்லை. அவனை சுற்றி வளரும் வளர்சியால் அவனுக்கு ஒரு பயனும் பெரிதாக இல்லை.

10 வயதில் வேலை செய்யும் சிறுவனின் எதிர்காலமும், சாலையில் பயணம் செய்ய கஷ்ட்டப்படும் மக்களும், சுவரொட்டியால் அசிங்கப்படும் இடங்களும், சுகாதாரமற்ற சூழலும், இன்னும் பல பல துயரங்களு்க்கும் யார் காரணம்?

சுதந்திரத்திர்க்கு பிறகு, அரசு பொருப்பில் இருந்து கொண்டு இந்தத் துயரங்களை சரி செய்யாதவர்கள் தானே?
சுயநலமும், கயமையும், சூதும், திருட்டும் சேர்த்து இவர்கள் நம் நாட்டையும், நம் வாழ்வையும் கெடுத்தவர்கள்/கெடுப்பவர்கள்.

அதனாலேயே சாபம் இடுகிறேன் - M.G.R ரும், கருணாநிதியும், ஜெயலலிதாவும் அவர்கள் கூட்டாளிகளும் அறிந்து தவறு செய்திருப்பின் அவர்கள் அனைவரும் நாசமாய் போகட்டும்.

சகோதர, சகோதரிகளே வாரத்தில் ஒரு சில மணி நேரத்தை பொது நலத்திற்க்கு செலவு செய்யுங்கள். சுயநலமாக இருக்காதீர்கள். கிடைக்கும் நேரத்தில், சினிமா பார்த்தொ, டிஸ்கோ ஆடியொ, தூங்கியோ நேரத்தை வீணாக்காதீர்கள். ஆக்க பூர்வமாக ஏதேனும் செய்து, வாழ்க்கையில் அடி மட்டத்தில் இருப்பவனும் நல்ல வாழ்க்கை வாழ உங்களால் இயன்றதை செய்யுங்கள்.

வாழ்க வளமுடன்!!!

15 comments:

சுப்ரமணி said...

நல்ல பதிவு. அது என்னமோ தெரிலீங்க, படிக்கும்போது ஒரு ரோஷம் வருது, ஆனா கொஞ்ச நேரத்துல திரும்ப பழே மாதிரி டி.வி பாத்துட்டு பொழுத கழிச்சிடறேன்.
வெட்டியா போவுது வாழ்க்க.

Anonymous said...

SUBRAMANI SAME WITH ME.

said...

//நல்ல பதிவு. அது என்னமோ தெரிலீங்க, படிக்கும்போது ஒரு ரோஷம் வருது, ஆனா கொஞ்ச நேரத்துல திரும்ப பழே மாதிரி டி.வி பாத்துட்டு பொழுத கழிச்சிடறேன்.
வெட்டியா போவுது வாழ்க்க.//

அட! ஆமாங்க!! ஒரு வேளை இது ஒரு வியாதியோ???

said...

சீனு,

//அட! ஆமாங்க!! ஒரு வேளை இது ஒரு வியாதியோ???
//

வியாதி எல்லாம் இல்லீங்க.
இதுக்கு பேர்தான் மெத்தனம்.

அதாவது, "அடப்போங்கப்பா. நான் பிரச்சனை இல்லாம நல்லா இருக்கேன். அடுத்தவன் எக்கேடு கெட்டா என்னா" என்னும் மன நிலை.
:)

said...

அடுத்ததாக ஆப்ரஹாம் லிங்கனும், ரீகனும், புஷ்ஷும் நாசமாகப் போகட்டும் என்று ஒரு பதிவு போடுங்கள். அமெரிக்காவிலும் 12 சதவிகிதம் மக்கள் வறுமைக்கோட்டுக்கு கீழே மோசமான நிலையில் வாழ்கிறார்கள்.

said...

லக்கிலுக், வருகைக்கும் ஐடியாவுக்கும் நன்றி!

கடல் கடந்து போய் சாபம் வேலை செய்யுமான்னு தெரியலயே?
ட்ரை பண்றேன்.

"அமெரிக்காவில் 12% மக்களை வறுமைக் கோட்டுக்குக் கீழ் இன்னும் வைத்திருக்கக் காரணமான ஆப்ரஹாம் லிங்கனும், ரீகனும், புஷ்ஷும் நாசமாகப் போகட்டும்"

ஆனா, அங்க எல்லாம் நம்ம ஏழைப் பாழைங்க மாதிரி, பசிக் கொடுமையால தற்கொலையெல்லாம் பண்ணிக்கர அளவுக்கு இல்லீங்க. அரசாங்கமே ஷெல்டர் எல்லாம் வச்சு முடிந்த வரைக்கும் காப்பாத்துதாம்.
இங்க தான் ஒருத்தனுக்கும் ஒரு அக்கரையும் இல்ல.
பணமும் பதவியும் தான் பிரதானம் நம்ப ஆளுங்களுக்கு.
ஜாதி அரசியல் பேசி, எல்லா வளமும் இருக்கும் என் நாட்டை இப்படி கெடுத்து வச்சிருக்காங்க.

said...

//ஆனா, அங்க எல்லாம் நம்ம ஏழைப் பாழைங்க மாதிரி, பசிக் கொடுமையால தற்கொலையெல்லாம் பண்ணிக்கர அளவுக்கு இல்லீங்க.//

அப்படியா? அங்கே இருந்த பூர்வகுடி இனமான செவ்விந்தியர்கள் 2 கோடி பேர் இப்போது எங்கே?

said...

லக்கிலுக்,

//அப்படியா? அங்கே இருந்த பூர்வகுடி இனமான செவ்விந்தியர்கள் 2 கோடி பேர் இப்போது எங்கே? //

நல்ல கேள்வி. ஆனால், செவ்விந்தியனை போரில் விரட்டி நாடு பிடித்ததும்,
நம்பிய ஏழையை முன்னேற்றாமல் பட்டினி போட்டு வயிற்றில் அடிக்கும் கயமையும் ஒன்றாகாது சார்.

said...

அனானி, அனுப்பிய தகவுலுக்கு நன்றி.
அதெல்லாம் பாத்து நேரம் வீணாக்காதீர்கள்.
இதுதான் அது என்று ஏற்கனவே ஒரு உதவாக்கரை எழுதி எல்லாரிடமும் வாங்கிக் கட்டிக் கொண்டது.
நான் இன்னொரு பதிவில் குறிப்பிட்டது போல், இதுவரை ஒருத்தர் இந்த வேலைகள் செய்து வருவது தெரியும். புகாரும் செய்தாயிற்று. ஒரு மாதம் கண்காணிப்பு, பிறகு செயல்பாடு.

said...

//நல்ல கேள்வி. ஆனால், செவ்விந்தியனை போரில் விரட்டி நாடு பிடித்ததும்,
நம்பிய ஏழையை முன்னேற்றாமல் பட்டினி போட்டு வயிற்றில் அடிக்கும் கயமையும் ஒன்றாகாது சார். //

வெரிகுட். இங்கிருக்கும் திராவிடர்களையெல்லாம் போரில் அடிச்சு விரட்டி விட்டுடலாம்... நாடு சரியாகிடும் :-)

said...

லக்கிலுக்,

//வெரிகுட். இங்கிருக்கும் திராவிடர்களையெல்லாம் போரில் அடிச்சு விரட்டி விட்டுடலாம்... நாடு சரியாகிடும் :-) //

:) அவ்ளோ மோசம் கிடையாது நம்ம திராவிட கட்சிகள். விரட்டி எல்லாம் விட மாட்டாங்க. என்ன இருந்தாலும் ஒரே ரத்தம் இல்லையா.
உருப்பட வழியும் பண்ண மாட்றாங்க. அதான் பிரச்சனை.

Anonymous said...

//அனானி, அனுப்பிய தகவுலுக்கு நன்றி.
அதெல்லாம் பாத்து நேரம் வீணாக்காதீர்கள்.
இதுதான் அது என்று ஏற்கனவே ஒரு உதவாக்கரை எழுதி எல்லாரிடமும் வாங்கிக் கட்டிக் கொண்டது.
நான் இன்னொரு பதிவில் குறிப்பிட்டது போல், இதுவரை ஒருத்தர் இந்த வேலைகள் செய்து வருவது தெரியும். புகாரும் செய்தாயிற்று. ஒரு மாதம் கண்காணிப்பு, பிறகு செயல்பாடு. //

ஒருவேளை உங்களது இந்த பதிவால் நடுக்கம் அடைந்திருக்கிறார்களோ?

http://badnewsindia.blogspot.com/2006/11/if-you-are-abused-on-internet.html

said...

அனானி,

//ஒருவேளை உங்களது இந்த பதிவால் நடுக்கம் அடைந்திருக்கிறார்களோ?
http://badnewsindia.blogspot.com/2006/11/if-you-are-abused-on-internet.html
//

அப்படியெல்லாம் பயப்படும் ஆள் இல்லை அது.
இளரத்தம் 'தான் செய்வது இன்னதென்று அறியாமல் செய்யும் பிழை'. பட்டால் தான் புத்தி வரும்.
mis-adventure செய்து வாழ்க்கையை தொலைக்காமல் இருந்தால் சரி.

Anonymous said...

//அப்படியெல்லாம் பயப்படும் ஆள் இல்லை அது.
இளரத்தம் 'தான் செய்வது இன்னதென்று அறியாமல் செய்யும் பிழை'.//

கனடாவில் சைபர் க்ரைம் ஸ்ட்ராக் தானே?

said...

அனானி,

//அப்படியெல்லாம் பயப்படும் ஆள் இல்லை அது.
இளரத்தம் 'தான் செய்வது இன்னதென்று அறியாமல் செய்யும் பிழை'.//
கனடாவில் சைபர் க்ரைம் ஸ்ட்ராக் தானே?
//


கனடா அமெரிக்கா மாதிரிதான். very strict!

இப்பதான் கவனிக்கிறேன். உங்கள் பின்னூட்டத்தை என் புதிய பதிவுக்கு மாற்றுக்கிறேன். அங்க வாங்க. இது சம்பந்தம் இல்லாத பதிவு. நன்றி!