Friday, October 27, 2006

அவசர சந்திப்பு - கருணாநிதி, ஜெயலலிதா, விஜயகாந்த், வை...



உளவுத் துறையில் இருக்கும் நண்பர் ஒருவரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு.
அவர் சொன்ன விஷயம் கேட்டு பயங்கரமான ஆச்சரியம் எனக்கு. அவரை உடனே புறப்பட்டு என் வீட்டுக்கு வரச் சொன்னேன்.
"ஆமா, சோனியா அதுக்கு என்ன சொன்னாங்க" என்றேன்.

"ok. Mr. Karunandhi. I respect your decision and my support will always be there for you. Your plans when established will stand as a good example for others. I know you are a poet, but your imagination and creativity has reached new proportions. Make sure you provide Vasaaan what we agreed earlier. Once you finish your meeting with your folks, meet me and Mr.Singh on Sunday evening at my place. Don't bring Maran with you." இதுதான் அவங்க அனுப்பின fax ல இருந்தது.

"அட, கருணாநிதி சொன்ன மாதிரி மீட்டிங் எற்பாடு பண்ணி பேசிட்டாரா" என்ற என் கேள்விக்கு.
"எல்லாம் முடிச்சாச்சு. இதுவரை உலக அரசியல்லயே நடக்காத உன்னத விஷயமிது. நடந்தத கவனமா சொல்றேன் கேளு" என்று ஒரு நாவலில் வருவதை போல எல்லாத்தையும் சொல்ல ஆரம்பித்தார் நண்பர்.

---- o ---- o ---- o ---- o ---- o ---- o ---- o ----


மகாபலிபுரம் செல்லும் வழியில் கடலோரத்தில் சவுக்கு தோப்பின் அடர்த்திக்குள் வெளியில் இருந்து பார்த்தால் தெரியாத ஒரு பெரிய கட்டிடம்.
உள்ளே வெள்ளை நிற அம்பாஸிடர் கார்கள் பல வரிசையாக இல்லாமல் அவசரத்துக்கு பார்க் செய்தது போல் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்தது.
மேல் மாடியில் ஒரு பெரிய round-table ஐ சுற்றி வெள்ளைச் சட்டைக் காரர்கள் பலர் அமர்ந்திருந்து கோப்புகளை புரட்டிக் கொண்டிருந்தார்கள்.
மேசையை சுற்றிய, இருக்கையில் கருணாநிதியும் அவரருகில் அன்பழகனும் இருக்க, அவர்களுக்கு பின்னால் மாறனும், ஸ்டாலினும் பவ்யமாக நின்றிருந்தார்கள்.
வைகோ அடுத்தும், அதற்கடுத்து ராமதாஸும் இருந்தார்கள். ராமதாசுக்கு பின்னால் அன்புமணி பவ்யமாக நின்றிருந்தார். அவ்வப்பொழுது தொலைபேசியில் "வேணுகோபால், வேணுகோபால்" என்று ஏதோ பேசிக்கொண்டிருந்தார்.
அதனை அடுத்த இருக்கையில் விஜயகாந்த் வழக்கத்து மாறாக கோட் ஸூட்டில் வந்திருந்தார்.
"ஏசி கூட்டி வைங்கப்பா. புழுங்குது" என்று அங்கிருந்த IAS அதிகாரியிடம் கட்டளை இட்டுக் கொண்டிருந்தார்.
IAS உம் "shooting முடிச்சுட்டு dress change பண்ணாம யாரு வரச் சொன்னா" என்று முனகிக் கொண்டே ஏசி யை கூட்டினார்"
திருமாவளவன், விஜயகாந்துக்கு அருகே அமர்ந்து கொண்டு "ஒரு படத்துல எவ்வளவு லாபம் கெடைக்கும்? நம்ப மச்சினனுக்கு உங்க படத்துல ஒரு வேஷம் கெடைக்குமான்னு பாருங்களேன். அப்படியே என் ஒண்ணு விட்ட சித்தப்பு பையனுக்கு உங்க கட்சில ஒரு எடம்" என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
தொல்லை தாங்காமல் விஜயகாந்த் ஒரு இருக்கை தள்ளி பிஜேபி கணேசனின் அருகில் அமர்ந்தார்.
அறையின் உள்ளே அவசர அவசரமாக நுழைந்த கி.வீரமணி "தலைவரே, எதுக்கு உடனே புறப்பட்டு வான்னு SMS அனுப்பனீங்க, அதுவும் emergency mahal க்கு" என்று கேட்டவாரே உள்ளே நுழைந்தவர் சுற்றி அமர்ந்திருக்கும் எல்லோரையும் பார்த்தவுடன் அவசரமாக நெற்றியில் இருக்கும் விபூதியை அழித்தார். கருணாநிதியின் அருகில் அமர்ந்து "எல்லாரும் இருக்காங்க உஷார்னு ஒரு SMS அனுப்பக் கூடாதா? நம்ப மட்டும் தான்னு நெனச்சு வர வழில சிவன் கோயிலுக்கு போய் அர்ச்சன பண்ணி சுண்டல் கொண்டு வந்துட்டேன்" என்று அசடினார்.
அதைப் பார்த்து வைகோ இளித்துக் கொண்டிருந்தார்.

பொறுமை இழந்த விஜயகாந்த் "Mr. கலைஞர் என்ன விஷயம்? மீட்டிங் எப்போ ஆரம்பிக்க போறீங்க? ஷூட்டிங் இருக்குய்யா. நமிதா வெயில் தாங்க முடியலண்ணு வேற சொல்லிச்சு. சீக்கிரம் விஷயத்துக்கு வாங்க'' என்றார்.

கருணாநிதி: வைகோ தம்பி, உங்க மேடத்துக்கு SMS அனுப்பி ரொம்ப நேரம் ஆவுது. எங்கப்பா அவங்க கூப்பிட்டு கேளு.
வைகொ: இப்பத்தான் பேசினேன். வந்துட்டே இருக்காங்க. cell phone range இல்லியாம் போயஸ் தோட்டத்துல. ஆளும் கட்சி சதி னு சொல்லிட்டு இருந்தாங்க. வர வழில சசி மேடம பிக்-அப் பண்ணிட்டு வராங்க, அதுதான் லேட்டு. வந்துருவாங்க.
ராமதாஸ்: (வைகோவின் காதருகே) என்ன மாட்டரா இருக்கும்? இது நாள் வரைக்கும் எல்லாரையும் இப்படி ஒண்ணா கூப்புட்டதே இல்லியே? சிக்கன் குனியா ஒழிப்புக் கூட்டமா?

அதர்க்குள் வாசலில் ஏதோ பரபரப்பு. சைரன் சத்தம் ஒலிக்க 10 கார் புடை சூழ ஜெயலலிதாவும், சசிகலாவும் வந்து சேர்ந்தனர்.
சசிகலா நொண்டி நொண்டி வருவதை கண்ட கருணாநிதி. "என்ன சகோதரி. ஏன் நொண்டறீங்க" என்று கிண்டலடித்தார்?

"எல்லாம் உங்க ஆட்சியின் அஜாக்ரதை தான். கொசு அடிக்க தெரியல உங்களுக்கு. சசிக்கு சிக்குன் குனியா வந்து பாடா படுத்துது" என்று உடனே பதிலடித்தார் ஜெயலலிதா.

சிக்குன் குனியா என்றதும், அன்புமணியும், மாறனும் round-table அடியிலே டகால் என்று பதுங்கி மூக்கை கைக்குட்டையால் கட்டிக் கொண்டார்கள்.

"மானத்த வாங்காதடா மவனே" என்று அன்புமணியின் காதை பிடித்து வெளியே இழுத்தார் ராமதாஸ்.

"Uncle நான் கொஞ்சம் urgentaa வெளில போணும். Zimbabwe யில இருந்து மந்திரி வராரு. 10 ஏக்கர் வேணுமாம் என்னமோ பண்ண. போயிட்டு வந்துடவா" என்று முகமூடியுடன் எழுந்து நின்று மாறன் கெஞ்சினார்.

"உக்காருடா தயா. சசிய கடிச்ச கொசு பறந்து நம்பள கடிக்கறதுக்குள்ள, அவங்க சென்ட் வாசனையிலேயே செத்து போயிரும். பதறாம உக்காரு" என்றார் கருணாநிதி.

சசியும், ஜெயாவும் கருணாநிதியின் நேரெதிரே அமர்ந்தார்கள்.
"பங்களா புதுசா இருக்கு. யாரு பேருல இருக்கு பாரு. கருணாநிதி பேர்லன்னா சொத்து குவிப்பு வழக்கு ஒண்ணு புதுசா போடலாம்" என்று சசி ஜெயலலிதாவின் காதை கடித்தார்.

"சசியம்மா, இது கட்சியின் சொத்தம்மா.
இதை வாங்க எனக்கேது பணமம்மா?
சொத்து பல வாங்கினது ஜெயாம்மா
ஊர காத்து நிற்பதே என் விருப்பமம்மா
"
என்றார் கருணாநிதி.
"வாரே வா" என்று விசிலடித்த திருமாவை, அமரச் சொல்லி கேட்டுக் கொண்டார் அன்பழகன்.

"லூசு பெண்ணே லூசு பெண்ணே" என்று cell phone சிணுங்க அதை எடுத்து பேசினார் கணேசன்.
அது வரை அமைதியாயிருந்த பிஜேபி கணேசன் சட்டென்று எழுந்து, "எனக்கு நேரம் ஆகுது. தாம்பரத்துல ஜவுளி கடை தொறக்க வரேன்னு சொல்லி இருக்கேன். சீக்கிரம் சொல்லுங்க சொல்ல வந்தத. 4 மணினு SMS ல இருக்கு. 6 மணி ஆச்சு" என்று அங்கலாய்த்தார்.

"பொறு கணேசன் சார். பாற்கடலை கடையும் போது அந்த கணபதியே பொறுத்தான். உனக்கென்ன அவசரம் கணேசா" என்றார்.
"உவமை எல்லாம் தப்பு தப்பா சொல்றீங்க" என்று அன்பழகன் காதை கடித்தார்.

தொண்டையை adjust பண்ணியபடி கருணாநிதி பேச ஆரம்பிக்க எல்லாரும் அமைதியாக கேட்க ஆரம்பித்தனர்.










..தொடரும்..

பிகு: ஊரைத் திருத்த கருணாநிதி கூட்டிய meeting ல் இருந்து மற்ற விஷயங்கள், கூடிய விரைவில்.
(சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே. ofcourse :) Friday ஆச்சே, lightaa கொடுக்கலாம் என்று எண்ணியதால் இப்படி. கருணாநிதியின் ஆக்க திட்டங்கள் அடுத்த பதிவில் தொடரும்.)

-BNI

22 comments:

Anonymous said...

Friday moodaa?
Good imagination for you.

When is the remaining Going to be Published?

Anonymous said...

INNA BADNEWSU
THODARUM POTTUTTU SODHAPPITTIYE

said...

மொக்கை மோகன்,

வருகைக்கு நன்றி சார்!
//இனி நீங்களே இருங்கள் நான் போறேன்.//

என்ன சொல்ல வரீங்க? நானும் மொக்கை போடுகிறேன் என்றா?

அடுத்த பதிப்பில் matter இருக்கும். இது சும்மா விளம்பரம் மாதிரி. உள்ளே இழுப்பதர்க்கு மட்டுமே :)

said...

அடுத்த பதிவுக்கு, அடுத்த வெள்ளி வரை காத்திருக்கனுமா . . . . ?

நல்லா இருக்கு, தொடருங்கள்.

said...

வெங்கட்ராமன்,
வருகைக்கு நன்றி!
வெள்ளி வரைக்கும் தேவை இருக்காது. இதை முடித்தால்தான் அடுத்தது எழுத மனது வரும்.
கூடிய விரைவில் முடித்து விடுகிறேன்.

எப்படி முடிக்கலாம் என்று டிப்ஸ், இருந்தா கொடுங்க :)
நான் இன்னும் யோசிக்கல.

Anonymous said...

It was truely comic. great fun.

veeramani joke was VERY good.

said...

அனானி,

வீரமணியை விட, அன்புமணி தயாநிதிக்கு எழுதிய காமெடி எனக்கு எழுதும்போதே பிடித்துப் போனது

:)

said...

// உள்ளே நுழைந்தவர் சுற்றி அமர்ந்திருக்கும் எல்லோரையும் பார்த்தவுடன் அவசரமாக நெற்றியில் இருக்கும் விபூதியை அழித்தார். கருணாநிதியின் அருகில் அமர்ந்து "எல்லாரும் இருக்காங்க உஷார்னு ஒரு SMS அனுப்பக் கூடாதா? நம்ப மட்டும் தான்னு நெனச்சு வர வழில சிவன் கோயிலுக்கு போய் அர்ச்சன பண்ணி சுண்டல் கொண்டு வந்துட்டேன்" என்று அசடினார்.
//
தோடா வந்துட்டாரு வீரமணிக்கு விபூதி எடுத்துக்குடுத்தவரு.... இன்னா இது காமெடி தானேனு சொல்ல போறிங்க, ஏன் அப்படியே காஞ்சி காமக்கோடிக்கு கஞ்சாவோ வேற ஏதோ ஒரு எழவு வாங்கித் தந்ததா காமெடி எழுத முடியாதோ?

said...

குழலி சார்,
எப்பவுமே ஒரு 'hyper state' ல தான் இருப்பீங்களா?
சும்மா டமாசு சார்.

'நாலு பேர சிரிக்க வைக்க முடியும்னா', ஜெயேந்திரருக்கு கஞ்ஜா என்ன, வேற என்ன வேணா கொடுக்கலாம்.

நீங்க வீரமணி சார், கொள்கையை பின்பற்றவரா? தீபாவளி கொண்டாடி போடோ போட்டிருந்தீங்க?

சசிக்கு குனியாவும், மாறன்/அன்புபணிக்கு முகமூடியும், கணேசனுக்கு லூஸு பெண்ணும், விஜ்யகாந்துக்கு கோட்டும் கொடுத்தேனே பிடிச்சிருந்ததா?

வருகைக்கு நன்றி. நான் உங்க பதிவுல கேட்ட tech கேள்விகளுக்கு இன்னும் பதில் வரல.

said...

//நீங்க வீரமணி சார், கொள்கையை பின்பற்றவரா? தீபாவளி கொண்டாடி போடோ போட்டிருந்தீங்க?
//
இதான் இதான் பிரச்சினையே, வீரமணியை கிண்டல் அடிப்பதை கேட்டால் உடனே நான் அவர் கொள்கையை பின்பற்றுபவனா என்று கேட்கின்றீர்? ஏன் கொள்கையை பின்பற்றாமல் தவறாக செய்யப்படும் கிண்டலை கேட்கக்கூடாதா?
//குழலி சார்,
எப்பவுமே ஒரு 'hyper state' ல தான் இருப்பீங்களா?
சும்மா டமாசு சார்.
//
நீங்க வீரமணியை செய்திருப்பதற்கு பெயர் டமாசா? டமாசு எல்லோருக்குமே வரும் எனக்கும் வரும்.

said...

வீரமணி அவர் கொள்கையில் எவ்வளவு தீவிரம் என்பது எனக்கும் தெரியும்.

செய்யாததை செய்வதாக சொல்வதுதானே கிண்டல்.

தவறுகள் கண்டிப்பாக கேட்க்கப்பட வேண்டும், தப்பாக இருந்திருந்தால்.

கிண்டலாக இப்படி எழுதுவதை படிக்கவே உங்களுக்கு தட்டிக் கேட்க்க தொன்றுகிறதே, நீஞ்களும், மற்றும் பலரும் serious ஆக, சொல்லும் காரியங்கள் பலர் மனதை நோகச் செய்யும் என்பதும் நினைவில் கொள்ளுங்கள்.

ஜெயேந்திரருக்கு கஞ்சா கொடுக்க சொன்னத சொல்லல -- பிரிவனை விவாதங்களை சொல்கிறேன்.

மாதம் ஒரு நைய்யாண்டி எழுதலாம் என்று முடிவு. அடுத்த பதிவில் ஜெயேந்திரருக்கு கஞ்சாவும், போப்புக்கு அபினும், முல்லாவுக்கு தம்மும் கொடுக்கலாம். என்ன சொல்றீங்க? யார் மனதையும் புண்படுத்தாது என்றால்.

said...

/***************************/
ஏன் அப்படியே காஞ்சி காமக்கோடிக்கு கஞ்சாவோ வேற ஏதோ ஒரு எழவு வாங்கித் தந்ததா காமெடி எழுத முடியாதோ?
***************************/

தல அப்படியே காஞ்சி காமகோடி யையும் இழுத்துடுங்க அடுத்த பதிவில். டிப்ஸ் கொடுத்த குழலிக்கு நன்றி.

said...

வெங்கட்ராமன்,
குழலியின் விருப்பத்தை பூர்த்தி செய்ற மாதிரி ஒரு பதிவு போட்டுடலாம்.

He reminds me of a friend, who always lives in a disaster mode. Though he seem hyper all time, my friend is really a nice sweet man. He is just 'open' and dont filter his thoughts before expressing, which is good most of the time, bad sometimes.

நன்றி!

Anonymous said...

அட என்னா சார் நீ,

நம்ம குழலி அண்ணாத்த பேசறதயெல்லாம் பெரிசா எடுத்துக்கினு. அது பாரு, ரவுடிய சுடுதறது கூட பாவம்னு சொல்லுது. அது புனிதமகானுங்க..விடுங்க

said...

வாங்க அருண். கருத்துக்கு நன்றி!

அப்படி யாரையும் விட்ற முடியாது அருண்.
அவர் சொல்வதையும் கேட்டு யோசிக்கணும். சில நல்லதும் அப்பப்போ சொல்றாரு.

என்ன, அப்பப்போ, கீழ் நோக்கி செல்லும் வழிகளும் எழுதறாரு. அதான் பிரச்சனை.

ஒண்ணா இருந்தாதான் எல்லாருக்கும் நல்லது. எல்லாருக்கும் புரியணும் அது.

said...

எதுனாச்சும் நல்லது செய்வாங்களாய்யா?

said...

சோத்துக்கட்சி,
தெரிலீங்க.நம்ம உளவு துறை நண்பர் வந்து சொன்னாதான் மீதி விஷயத்த போட முடியும்.
இது வரைக்கும் அவரு சொன்னத பாத்தா எல்லாருக்கும் வேளா வேளைக்கு சோறாவது கெடைக்க வழி பண்ணுவாருன்னு நெனைக்கறேன்.

பாப்போம்.

Anonymous said...

இது உண்மையா இருந்து ஒரு நல்ல விசயத்திற்காக என்றால்!!!!
அருமையாக இருக்கு அடுத்த பதிவு எப்பொழுது!!!!

jv

said...

அனானி, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்.

இணையத்தில் சமீக நாட்களில், அரசியல்வாதியையே தூக்கிப் போடும் அளவுக்கு, ஜாதி வெறியாட்டம் நடக்குது.
இதுக்கு நடுவில் 'காமெடி' பண்ண நேரம் கிடைக்கல.

பதிவை இந்த வாரம் முடிக்க முயல்வேன்.

நன்றி!

Anonymous said...

what happened to this post? no more sarakku ?

said...

//நம்ம குழலி அண்ணாத்த பேசறதயெல்லாம் பெரிசா எடுத்துக்கினு. அது பாரு, ரவுடிய சுடுதறது கூட பாவம்னு சொல்லுது. அது புனிதமகானுங்க..விடுங்க //

BNI அய்யா,

அருண் அய்யா சொன்ன மாதிரி குழலி அய்யா வன்னிய cum திராவிட கட்சி காரரா இருந்தாலும் ரொம்ப தங்கமானவருங்க..
அவர் சொன்னதை மனசுலெ வெச்சி காஞ்சி காமகோட்டி/வீரமணி/மருத்துவர் அய்யா/கருணாநிதி/பின் லேடன் எல்லாரையும் வெச்சி ஒரு டமாஸ் சீரியல் எழுதிருங்க.குழலி அய்யா குஷி ஆயிடுவாரு.

பாலா

said...

bala,

//அருண் அய்யா சொன்ன மாதிரி குழலி அய்யா வன்னிய cum திராவிட கட்சி காரரா இருந்தாலும் ரொம்ப தங்கமானவருங்க..
அவர் சொன்னதை மனசுலெ வெச்சி காஞ்சி காமகோட்டி/வீரமணி/மருத்துவர் அய்யா/கருணாநிதி/பின் லேடன் எல்லாரையும் வெச்சி ஒரு டமாஸ் சீரியல் எழுதிருங்க.குழலி அய்யா குஷி ஆயிடுவாரு.
//

இதோட அடுத்த பகுதிய எழுத நேரமும் மூடும் சரியா அமையல இன்னும். ஜாதி பத்தி எழுதினா எங்க காமெடி வருது. அடப்போங்கப்பா என்ற அயற்சி தான் மிஞ்சுது.
எழுதும்போது, கண்டிப்பா குழலி சொன்ன ஐடியா incorporate செய்யப்படும் :)

(கொஞ்ச நாளா குழலி நடவடிக்கை சரி இல்ல. தனி மனித தாக்குதல் செய்யும் பக்கங்களில் பின்னூட்டறாரு, ஊக்குவிக்கும் செயல்களும் செய்யறாரு. சரி இல்ல.)