Thursday, October 12, 2006

நல்ல காலம் பொறக்குது! நல்ல காலம் பொறக்குது!

என்னடா இவன் Bad News India னு பேரு வச்சுக்கிட்டு நல்ல காலம் பொறக்குதுன்றானேன்னு பாக்கறீங்களா?

ஊர்ல இப்ப நடக்கற சில நல்ல விஷயங்கள பாக்கும் போது ஒரு நம்பிக்க வருது நம்ம நாட்டு எதிர்காலத்து மேல.

உள்ளாட்சி தேர்தல்ல இந்த தடவை சில Ward ல, இது வரைக்கும் ஊர கெடுத்து குட்டிச் சுவர் ஆக்கிட்டிருக்கற அரசியல் கட்சி ஆளுங்கள எதிர்த்து சாதாரண மக்கள் சுயேட்சயா நிக்கறாங்களாம்.
இந்த மாதிரி மாற்றங்கள்தான் நமக்கு தேவை. சும்மா அது சரியில்ல, இது சரியில்லனு பொலம்பிட்டு அடுத்த வேலய பாக்காம, சிலர் தைரியமா களத்துல குதிச்சிருக்கறது ரொம்ப நல்ல விஷயம்.

பொது நலம் காக்க வந்த நல்லவர்களை இரு கரம் கூப்பி வரவேற்க்கிறேன்.

அனைத்து கடவுளர்களும் அவர்களுக்கு துணையிருக்கட்டும்.

வாழ்க பாரதம்!!!

அடுத்த உள்ளாட்சி தேர்தலில் இந்த நிலை தொடர வேண்டும், பன்மடங்கு!!!

சென்னையில் உள்ள பம்மலில் சுயேச்சை வேட்பாளர்கள் பற்றி வந்த செய்தி - http://www.hindu.com/2006/10/12/stories/2006101216660400.htm

சென்னையில் உள்ள மாதவரம் சுயேச்சை வேட்பாளர்கள் பற்றி வந்த செய்தி - http://www.hindu.com/2006/10/12/stories/2006101215610300.htm

இது தொடற்பாக உங்களுக்கு தெரிந்த சேதியையும், யு.ஆர்.எல் லையும், பின்னூட்டதில் இடுக. நன்றி!!!


நல்ல காலம் பொறக்குது! நல்ல காலம் பொறக்குது! நம் நாடு சுதாரித்துக் கொண்டு வீரு கொண்டு எழும் நாள் ரொம்ப தூரத்தில் இல்லை!!!

2 comments:

said...

திமுக ஆட்சியில் வன்முறை,ஜாதிக்கலவரம் எல்லாம் சகஜம் தான். வார்டு, வட்டம், மாவட்டம் எல்லாம் நாட்டாமைதான்.

சென்னையில் சட்டமன்ற தேர்தலில் தோற்றுள்ளதால், மேயர் பதவி அதிமுக-விற்கு போய்விடும் என்கிற பயத்தில் மேயர் மற்றும் நகராட்சித்தலைவர்களை வார்டு கவுன்சிலர்களே தேர்ந்தெடுப்பார்கள் என்ற நிலையை திமுக அரசு (கருணாநிதி தன் குடும்ப நலன் கருதி) எடுத்துள்ளது. இவர்கள் ஆளும் கட்சியாக இருப்பதால், தேர்தலுக்கு பிறகு கட்சி சாரா (சுயேட்சை) கவுன்சிலர்களை மிரட்டியும், பணம் கொடுத்தும் மேயர் மற்றும் நகராட்சி தலைவர் பதவிகளை பிடிக்க திட்டமிட்டுள்ளனர். இதெற்கெல்லாம் ஒரு ஒத்திகை தான் இன்று நடந்துள்ளது.

said...

லொள்ளு சபா,
வருகைக்கு நன்றி!

கருணாநிதி தந்திர வேலை வருந்தத்தக்கது. மகனுக்கு ஆற்றும் கடன் என்றாலும், ஊர் நலத்தை அல்லவா முதலில் பார்க்க வேண்டும்?

இதை ஜெயலலிதாவும் தடுக்க முடியாதது துரதிர்ஷ்டம். ஆனால் ஜெயலலிதவுக்கும் இது சாதகமாக முடியலாம். பெட்டி, அவங்க கிட்டதான நெறைய இருக்கு.