Tuesday, October 17, 2006
பெறுதர்க்கரியன் பெருமானே - இளையராஜாவின் தேனமுது!
சென்ற வாரத்தில் ஒரு நாள் வீட்டில் தனியாக இருக்கும் பொழுது நமது ராஜாவின் திருவாசகம் பாடல்களை கேட்க்க ஆவல் பிறந்தது.
இதற்க்கு முன் எவ்வளவோ முறை இந்த பாடல்களை கேட்டிருந்தாலும், தனியாக அமர்ந்து, மற்ற எந்த ஒரு சிந்தனையும் இல்லாமல், இதனை கேட்டால் கிடைக்கும் சுகத்தை வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது.
திருவாசகம் ராகம் இல்லாமல் படிக்கும் போதே இனிமையாக இருக்கும். அதர்க்கு ராஜாவின் இசையும் சேர்த்தால் கேட்க்க வேண்டுமா?
முதல் பாடலிலேயே 'பெருதர்க்கரியன் பெருமானே' என அவர் உருகும்போது நமக்குள் நிகழும் பரவசம் விவரிக்க இயலாதது.
அமாடியஸ் (Amadeus) என்ற Mozart ன் வாழ்க்கை வரலாரை சித்தரிக்கும் அருமையான படம். அதில் ஒரு காட்சியில் Mozart 20 நிமிடங்கள் தொடர்சியாக வரும் ஒரு புதிய பாடலை பற்றி அற்புதமாக விவரிப்பார்.
அதன் தாக்கமோ என்னமோ (ராஜாவும் கமலும் இந்த படத்தை பல முறை பார்த்ததாக எங்கோ படித்த நினைவு), ராஜா திருவாசகத்தில் 'பொல்லா வினையேன்' பாடலை 20 நிமிட ப்ரவாகமாக அள்ளித் தெளித்திருக்கிரார்.
'நமச்சிவாய வாழ்க. நாதன் தாழ் வாழ்க' என்று உருகும் இடத்திலும் நாமும் சேர்ந்து உருகித்தான் போகிறோம்.
எல்லோருக்கும் இந்த 'பரவசம்' வருமா என்று தெரியவில்லை - என் சூழலை போல், நீங்களும் தனியாக இருக்கும் பொழுது கேட்டுப்பாருங்களேன்.
சரி BadNewsIndia பேர் வச்சிருக்கரதால, இன்றைய அறிவுரை இதுதான் -
[
ராஜா, ரஹ்மான், விஸ்வநாதன், மஹாதேவன்,... என்று பொக்கிஷங்கள் பலரை பெற்ற நாம், அவர்களையும் அவர்கள் படைப்புக்களையும் ஆதரிக்க வேண்டும்.
பணம் கொடுத்து வாங்காமல் MP3 ல் ஓசியில் எல்லா பாடல்களையும் கேட்க்கும் பழக்கம் மாற வேண்டும்.
இவ்வளவு திறமை படைத்தவர்கள், நமது பொக்கிஷங்கள்.
அவர்கள் படைப்புகள் நமக்கு அளவிட முடியாத இன்பத்தை பல வருடங்களாக தந்து கொண்டிருக்கிறது.
கொட்டிக் கொடுங்கள் அவர்களுக்கு.
மேன் மேலும் திருவாசகம் போல் பல படைப்புகள் வந்தால் நமக்குத்தானே லாபம்?
வரட்டும் - ரஹ்மானின் குரானும், ஹாரிஸின் பைபிளும், ராஜாவின் கீதையும் வந்து ஜாதி மத பேதமின்றி நம் எல்லோருள்ளும் கலக்கட்டும்!!
இசையாலாவது உடைந்த்தை ஒட்ட முயற்ச்சிக்கலாம்.
]
என்ன சொல்றீங்க?
இதோ என்னருமை ராஜா இன்னொருமுறை -
Please add a comment if you read this - will help us know what kind of articles to concentrate more on. Thank you.
Subscribe to:
Post Comments (Atom)
11 comments:
ராஜா என்றுமே ராஜாதான்.
ஆனா காசு கொடுத்து பாட்ட வாங்க சொல்றதேலாம் கொஞம் ஓவர்.
//ஆனா காசு கொடுத்து பாட்ட வாங்க சொல்றதேலாம் கொஞம் ஓவர்//
ஒரு நல்ல விஷயத்திற்கு 100 ரூபாய் செலவு செய்தால் தப்பில்லை
நல்ல கட்டுரை நண்பரே
இளையராஜாவின் திருவாசகத்தை வெளிவர செய்ய பேரூதவி புரிந்த பதிவர் ஒருவர் நம்மிடையே இருக்கிறார். ஆத்திகம் எஸ்.கே தான் அவர்.
www.aaththigam.blogspot.com
அட நம்ப எஸ்.கே.
தெரியுமே அவர. எங்க ஊர்காரர்தான் அவர்.
அவர் ராஜாவிர்க்கு திருவாசகம் அமைக்க துணை நின்ற விஷயமும் தெரியும்.
அவர் ப்ளோக் பற்றி இவ்வளவு நாள் தெரியாது. விவரத்திர்க்கு நன்றி!
எஸ்.கே அடுத்த வெளியீடு எப்பங்க? ராஜா கிட்ட கேட்டு சொன்னீங்கன்னா நல்லா இருக்கும்.
வேந்தன், சரியா சொன்னீங்க!
இசைஞானியின் திருவாசகம் பற்றி எழுதியதற்கு மிக்க நன்றி நண்பரே!
பெறுதற்கரிய பெரிய பொக்கிஷத்தை இசை வடிவில் தந்திருக்கிறார் அவர் நமக்கெல்லாம்.
இந்த முயற்சியில் என்னையும் ஈடுபடச் செய்தது இறையருளே அன்றி வேறில்லை.
ஒலிவடிவம் வந்து ஓராண்டுக்குப் பிறகும் இது பேசப் படுவதே இதற்கு சாட்சி.
மரபை மீறி, மக்களைச் சென்றடைய அவர் ஆற்றிய இப்பணி அவரது இசைப் பணியிலேயே தலையாயது என்றுதான் நான் கருதுகிறேன்.
இளைஞர்கள் இதனை வாங்கிக் கேட்டு பயனுற வேண்டுமென்றும் வேண்டுகிறேன்.
அடுத்த பணியைப் பற்றிய விவரம் ஏதும் இன்னமும் தெரிய வரவில்லை.
வந்ததும், தெரிந்தவுடன் உங்களுக்கெல்லம் சொல்லாமலா?
:))
நன்றி.
எஸ்.கே, வருகைக்கு நன்றி.
அடுத்த பணி பற்றி யோசிக்க வில்லையென்றால், சீக்கரம் யோசிக்க சொல்லுங்க.
actually, மத நல்லிணக்கதிர்க்கு ஏத்த மாதிரி கீதை, பைபிள், குரான் இது எல்லாத்திலயும் ஒரு மூணு பாட்டு போட்டு ஒரு சி.டி வந்தா ரொம்ப நல்லா இருக்கும்.
ராஜா மனசுல இந்த மாதிரி ஐடியா வர உங்கள் முருகன் அருள் புரியட்டும்.
/*************************
இசையாலாவது உடைந்த்தை ஒட்ட முயற்ச்சிக்கலாம்.
*************************/
அழகான சிந்தனை.
//ஆனா காசு கொடுத்து பாட்ட வாங்க சொல்றதேலாம் கொஞம் ஓவர்//
ஒருவனின் உழைப்பை அவனுக்கு தெரியாமல் உறிஞ்சுவது, எந்த விதத்தில் நியாயம்.
இளையராஜாவின் திருவாசகம் ஒரு நல்ல முயற்சி. சமீபத்தில்தான் கேட்டேன்.
ஆனால், இசையில் பக்திரசம் குறைவு போலவே இருந்தது. இசையும்,அவரது குரலும் சில பழைய திரைப்படப் பாடல்களை நினைவு படுத்துவது போலிருந்தது.
பக்தி இசை என்பது, பாடப்படுகையிலேயே தெரியவேண்டும், அது இதில் மிஸ்ஸிங் போன்ற உணர்வு.
நெல்லை சிவா, நீங்க சொல்றதும் புரியுது.
ஆனாலும், இது ஒரு different style of music.
பழகி பிடித்துப் போக நேரம் ஆகலாம்.
நான் சொன்னது போல, தனியாக இருக்கும் பொழுது பாடலை கேட்டு கூடவே பாடியும் பாருங்கள். இசைக் கலவையின் அருமை புலப்படும்.
வெங்கட்ராமன், வருகைக்கு நன்றி.
இசை மட்டும் அல்ல - எல்லா துறைகளிலும் அடுத்தவன் உழைப்பை திருடுவது ஒரு வெட்க்ககேடான குற்றம்.
Post a Comment