Friday, October 20, 2006

என் புருஷனை கொண்ணுட்டேன் சார்! ஒரு tricky situation!

காலை 6 மணி இருக்கும். கையில் ப்ரூ காபி யுடன் பேப்பர் காரன் விசிரி எறிந்த இந்து பேப்பருடனும் பால்கணியில் அமர்ந்து கொண்டிருந்தேன்.
வழக்கம் போல் இன்றும், நடந்து முடிந்த தேர்தலில் நடந்த வன்முறையை பற்றி அலசி இருந்தார்கள்.
வன்முறையை செய்தது அவர் என்றும், இல்லை இவர் என்றும் உயர்நீதி மன்றத்தில் இரு தரப்பும் வாதாடியதை போட்டிருந்தார்கள்.
யார் செய்தால் என்ன, ஆட்சி பொறுப்பில் இருந்தவர்கள்தானே இதர்க்கு பொறுப்பேர்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டே, விளையாட்டுச் செய்திகள் படிக்க தாவினேன்.

அந்த நேரம் பார்த்து cell phone ல், ரஹ்மானின் வந்தே மாதரம் ring tone அலறியது.
"ஹலோ" என்றேன் நான்.
"ஐயா, என் பேரு கௌரி. ராயப்பேட்டைலேருந்து பேசரேன். உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்" என்று பதட்டதுடன் பேசினார்.
கௌரிக்கு ஒரு 35-40 வயது இருக்கும் போல் தோன்றியது. பேசுவதை பார்த்தால் ஏதொ பெரிய ஆபத்தில் இருப்பதை போல் தோன்றியது.

"நீங்க உடனே பொறப்பட்டு ராயப்பேட்டை அரசினர் பள்ளி கிட்ட வரணுங்க" என்றாள் பதறியபடி.

"நான் எதுக்கும்மா அங்க வரணும். என் நம்பர் உனக்கு எப்படி கடச்சுது. பதறாம விஷயத்த சொல்லு. ஏன் இப்படி அழற???" என்று கேள்விகளை அடுக்கினேன்.

"நீங்க BadNewsIndia எழுதரவர்தான? உங்க நண்பர் ஜெயபால் மூலமா நீங்க பண்ற விஷயங்களெல்லாம் தெரியும். உங்க பதிவுகளையும் தவறாம படிப்பேன். ஜெயபாலன் சார் தான் இந்த நம்பர் கொடுத்தாரு. நீங்க தான் சார் என்ன காப்பாத்தணும்" என்று மீண்டும் பலமாக அழத்தொடங்கினாள்.

ஜெயபாலனை மனதில் நொந்தபடி என்னடா வம்பு இது என்று, "சரி சரி, அழாம விஷயத்த சொல்லு" என்றேன்.

"ஐயா இங்க ஸ்கூல்ல வாத்தியாரா இருக்கேன். 3ஆம் வகுப்புக்கு தமிழ் சொல்லித்தரேன். என் புருஷன் மளிகை வியாபாரம் வச்சிருந்தாரு. எல்லாமே நல்லாதான் போயிட்டிருந்தது. எங்க பள்ளிக் கூடத்து சத்துணவு கூடத்துக்கு இவருதான் அரிசி, காய்கறி எல்லாம் வித்துட்டிருந்தாரு.
சந்தோஷமா தான் இருந்தோம். சத்துணவு கூடத்துல புதுசா ஒரு சமையல் காரன் வந்தான். என் புருஷன் அவன் கூட தெனமும் அரட்டை அடிக்க ஆரம்பிச்சாரு. அப்பறம் ரெண்டு பேரும் சேந்து சாரயக் கடைக்கு போக ஆரம்பிச்சாங்க.
அதுக்கப்பறம் ரெண்டு பேரும் சேந்து சத்துணவு கூடத்துக்கு விக்கர அரிசி காய்கரிகள்ல எல்லாம் தில்லு முல்லு பண்ண ஆரம்பிச்சாங்க.
ரொம்ப மட்ட ரக அரிசி, பருப்பு, அழுகி போன காய்கறி னு ஒண்ணுத்துக்கும் உதவாத எல்லாத்தையும் சின்ன பசங்க சாப்பிடர உணவுக்கு பயன் படுத்த ஆரம்பிச்சாங்க.
லாபத்துல ரெண்டு பேருக்கும் பங்கு வேற." என்று மூச்சிரைக்க சொல்லிக் கொண்டிருந்தாள் கௌரி.

"சரிம்மா. இதுக்கும் நான் அங்க வரதுக்கும் என்னம்மா சம்பந்தம்?", என்றேன் தயக்கத்துடன்.

"இப்படி கலப்படம் பண்ணி லாபம் சம்பாதிக்க ஆரம்பிச்சதும், ஆசைல, தேதி முடிஞ்சு போன பால் பௌடர், எண்ணை னு, இவங்க அநியாயம் ஜாஸ்தி ஆயிட்டே இருந்தது.
போன வாரம் கெட்டு போன உணவை சாப்டதால 4 ஆம் வகுப்பு பசங்க வாந்தி பேதி ஆயி ஆஸ்பத்திரில சேத்துட்டாங்க.
நான் இவர் கிட்ட எவ்வளவோ தடவ சொல்லியும் கலப்படத்த விடர மாதிரி தெரீல. சில தடவ இத கேக்கும் போது என்னையும் அடிக்க ஆரம்பிச்சிடுவாரு.

நேத்தும் பால் பௌடர் டப்பாக்கள வண்டீல எடுத்து வச்சுட்டிருந்தாரு. பல டப்பாக்கள் 'seal' எல்லாம் போயி திறந்த மாதிரி இருந்தது. ஒண்ண எடுத்து பாத்தா உள்ள புழுவெல்லாம் இருந்தது. அத காமிச்சு சத்தம் போட்டேன். ஏங்க சின்ன பசங்க சாப்பிடறதுக்கு புழு இருக்கரத கொடுக்கறீங்களேன்னு கேட்டேன். உடனே அவரு, ஒரு ஜல்லடயால பால் பௌடர ஜலிச்சு திருப்ப டப்பால போட்டு மூடிட்டு பேய் சிரிப்பு சிரிச்சாரு." என்று கூறிக்கொண்டே பலமாக அழுதாள் கௌரி.

ஸ்தம்பித்துப் போன நான், "சரிம்மா அழாத, உன் புருஷனுக்கு நான் வேண்ணா வந்து புத்தி மதி சொல்லட்டுமா" என்றேன் நான்.

மேலும அழுதவளாக, "இல்லீங்க ஐயா, கொழந்தைங்க சாப்பிடற பாலுக்கு, புழு இருக்கர விஷத்த அனுப்பராரேனு எனக்கு பயங்கர கோபம் வந்துடுச்சு.
நேத்துதான் வேற உங்களோட கனம் கதைல பாக்யலக்ஷ்மி, அவ புருஷனோட நலனுக்காக, புருஷனையே கொண்ணத படிச்சேன். அது தப்புல்லன்ணா, கொழந்தைங்க நலனுக்காக என் புருஷன கொல்றது தப்பில்லண்ணு பட்டுது. பக்கதுல இருந்த கட்டைய எடுத்து என் புருஷன் தலைல ஒங்கி அடிச்சிட்டேன். ரத்தம் சொட்ட சொட்ட கீழ சாஞ்சுட்டாரு" என்று சொன்னவள் அழுகை இன்னும் அதிகரித்தது.

"நான் செஞ்சது தப்பா" என்று கதறினாள்.

என்னடா வம்பு இது, நம்ப கதை இவ்வளவு inspire பண்ணுமா ஒருவரை என்று கலங்கியபடி,
"நாலு பேருக்கு நல்லது செய்யறதுண்ணா, எதுவும் தப்பில்லம்மா" என்று நாயகன் கமல் போல் கூறினேன்.

................ .......... ........... ............

இன்னிக்கு என்ன எழுதலாம்னு யோசிக்கும்போது, கற்பனை குதிரை கொஞ்சம் track மாறி ஒடியதால் இப்படி. btw, மேலே உள்ள அனைத்தும் கற்பனையே ( இத சொல்லலண்ணா மட்டும் உங்களுக்கு தெரியாதா என்ன. நம்மாளுங்க அரசியல் வாதி கிட்ட வருஷம் மாறி வருஷம் ஏமாந்துகிட்டே இருப்போம். மத்ததுல கெட்டி ).

இதை மாதிரி பல மடங்கு கற்பனை வளம் உள்ள நண்பர்கள் தேன்கூடு போட்டிக்காக எழுதிய கதையை படிக்க இங்கே சொடுக்கி படித்து மகிழ்ங்கள். - தேன் கூடு போட்டிக் கதைகள்

படித்த கதைக்கு விமர்சனமும், பிடித்த கதைக்கு வாக்கும் அளிக்க மறவாதீர்.

பலகை அவர்களின் அருமையான விமர்சனங்கள் இங்கே - பலகை கதை விமர்சனம்

பாக்யலக்ஷ்மி, சச்சிதானந்தன் நடித்த கனம் கதை இங்கே - கனம் by BadNewsIndia

அடுத்த மாத போட்டிக்கு நீங்களும் எழுதி அனுப்புங்க.

Winning is secondary - participation is the key.

எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும்! வாழ்க வளமுடன்!

[sorry, if I wasted your time ;) ]

12 comments:

said...

மனசு பகீர்ன்னு ஆய்டுச்சு..படிச்சு முடிச்சதும் சிரிப்பு வந்துடுச்சு.

ஆனாலும் ஓவர் குசும்பு தான் போங்க :-)

said...

ஹ்ம், நடிகை ஸ்ரீவித்யா அவர்களின் மறைவுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்!
நல்ல தாயின் நல்ல மகள். நல்ல நடிகையும் கூட!

ஆடி அடங்கும் வாழ்க்கை.
அது புரியாமல் இன்னும் ஆடும் பலரை நினைத்து, இந்தக் கணத்தில் வருத்தம் தான் தோன்றுகிறது.

said...

:))) அது சரி..

said...

செல்வன், பொன்ஸ்,

;) முயற்சி வெற்றிதான்றீங்க.

சட்டுனு படிச்சுட்டீங்க. வருகைக்கு நன்றி!

செல்வன், 200 அடிச்சுட்டீங்க. வாழ்த்துக்கள்!

said...

சரளமான நடை. சரியான உள்குத்துதாங்க..ஓட்டும் .....
(ஓட்டு போட்டத சொல்றது தப்புன்னு சொல்லுறீவீயளோ?)

said...

நெல்லை சிவா, வருகைக்கு நன்றி.
உள்குத்துதான். எல்லாம் சக நண்பர்களின் பதிவை பார்த்து கற்றுக் கொண்டதுதான்.
ஓட்டாங்க முக்கியம் ;)

said...

கொஞ்சம் மிரட்டல்.. ஆனால் சுவாரசியம்...

நல்லாயிருந்துங்க...

நன்றி.

Anonymous said...

ஒரே நகைச்சுவைதான் போங்க. பொறுப்பானவர் என்று பார்த்தால் நீங்களும் சின்ன பசங்க மாதிரி களத்துல எறங்கறீங்க?
நடத்துங்க.

said...

சிவபாலன், வருகைக்கு நன்றி.

உங்கள் 'ஜாலியான' பதிவும் பார்த்தேன். கலக்குங்க.

தீபாவளி வாழ்த்துக்கள்!

said...

அனானி, வாழ்க்கைக்கு உப்பு, காரம், இனிப்பு,கசப்பு எல்லாமே வேணும்க.

நானும் ஆரம்பத்துல கசப்ப மட்டும் சொல்லலாம்ணுதான் நெனச்சேன்.

ஆனா, இனிப்ப மட்டும் படிக்க வரவங்க அப்பறம் நம்ப சைட் வராம போயிடுவாங்க. அவங்களுக்கு வலை வீசதான் இந்த ஏற்பாடு.

happy diwali!

said...

அரசு ஊழியர்களின் துணையில்லாமல் வியாபாரிகள் ஊழல் செய்யமுடியாது என்கிற உண்மையை கதை சொல்கிறதா?

said...

ஓகை, அப்படியும் ஒரு செய்தி வருதோ கதைல.
அப்படியே வச்சுக்கலாம்.
அதுவும் சரிதானே.