Thursday, October 26, 2006

என் பேரு நந்தினி. நான் மேலே போயிட்டேன்!!


மெத்தனத்தால் உயிரிழந்தவள்
நந்தினி என்ற 4 வயது DAV பள்ளிக் குழந்தை சுற்றுலா சென்ற இடத்தில் ஆசிரிய/அதிகாரிகளின் கவனக் குறைவால், பாசி படர்ந்த தண்ணீர் தொட்டியில் மூழ்கி, இறந்து போன செய்தி ப்ளாகில் படித்து மனது மிகவும் வேதனை அடைந்தது.

சபாபதி சரவணன் இதைப்பற்றி எழுதியது இங்கே - இதோ மற்றொரு குழந்தை நமது வன்முறைக்கு பலியாகிவிட்டது

Accidents can happen and sometimes cannot be prevented என்றாலும், 4 வயது குழந்தைகளை அழைத்துச் செல்லும் போது 100 மடங்கு அதிகமான கவனம் இருக்க வேண்டாமா?

பெற்றோர்களின் வலி, இனி அவர்கள் மரிக்கும் வரை தீருமா? எவ்வளவு எவ்வளவு கனவுகள் இருந்திருக்கும்?

விபத்து நடந்த இடத்தில் இருந்த தண்ணீர் திடலை சுற்றி காப்பு சுவர் கட்டப்படாமல் இருந்ததே இந்த துயரம் நடக்கக் காரணம்.
அந்தத் தண்ணீர் திடலை தடுப்பு சுவர் இல்லாமல் கட்ட ஒப்புதல் அளித்தவனை என்ன செய்வது?
குழந்தை இறந்த செய்தி அறிந்து அவன் மனம் வருந்தி இருந்திருக்குமா? அல்லது இந்த மாதிரி பல அவலங்கள் செய்தும் அதனால் ஏற்பட்ட பல கெட்ட விஷயங்களை அறிந்தும் மறத்துப் போயிருப்பானா அந்த ஜடம்? என்னதான் செய்வது இந்த உதவாக்கரைகளை?

இப்பொழுதைக்கு என்னால் முடிந்தது, அந்த பெற்றோரின் துயரத்தில் பங்கு எடுத்துக்கொள்வது தான்.

ஆனால், அதனால் ஒன்றும் மாறப் போவதில்லையே?

இந்த பெரும் துயரத்திர்க்கு பல விதிகளை மீறி முதல் வடிவம் கொடுத்த பள்ளி நிர்வாகத்திர்க்கு சூடாக நம் வேதனையையும் கோபத்தையும் சொன்னால் அடுத்த சுற்றுலா செல்லும் போதாவது கவனமாக இருப்பார்கள் இல்லையா? இனியும் ஒரு நந்தினியை DAV ல் இருந்து இழக்க வேண்டாமே?

இதோ அவர்கள் முகவரி. ஒரு 4 ரூபாய் செலவு செய்து தபாலோ, தந்தியோ கொடுங்கள்
"நிர்வாகமே. குழந்தைகளைக் கொல்லாதே. ஒரு நந்தினி பலி கொண்டது போதும். இனியாவது ஒழுங்காயிரு!" என்று

DAV Matriculation Higher Secondary School,
25 Lloyds Road Gopalapuram,
Chennai 600086
Phone: 28351988

நான் செய்துவிட்டேன். நீங்கள் ?

தகவலுக்கு நன்றி: சபாபதி சரவணன்.

பி.கு: அண்ணா நகர் டவரில் உள்ள பூங்காவிர்க்கு குழந்தை நந்தினியின் பெயர் வைக்கவும் சொல்லலாம். அங்கு வேலை செய்பவர்களுக்கும் வருபவர்களுக்கும் அது இந்த சம்பவத்தை நினைவு படுத்தும்.

10 comments:

Anonymous said...

//விபத்து நடந்த இடத்தில் இருந்த தண்ணீர் திடலை சுற்றி காப்பு சுவர் கட்டப்படாமல் இருந்ததே இந்த துயரம் நடக்கக் காரணம்.
அந்தத் தண்ணீர் திடலை தடுப்பு சுவர் இல்லாமல் கட்ட ஒப்புதல் அளித்தவனை என்ன செய்வது?
//

இதற்கு யார் பொறுப்பேற்பது? அதிகாரிகளின் மெத்தனத்திற்கும் கண்டனம் தெரிவிக்க வேண்டும்.

BadNewsIndia said...

நகராட்சி அதிகாரிகளுக்குத் தான் கண்டனம் தெரிவிக்க வேண்டும்.
ஆனால் அவனுக்கெல்லாம் கடுதாசி போட்டா சுருட்டி போட்டுடுவான்.

அவனையெல்லாம் வேறு மாதிரியாகத் தான் கவனிக்க வேண்டும்.
அவன் வீட்டின் முன் நின்று 'குழந்தையை கொன்றவன்' என்று placard பிடித்து நிற்கலாம்.

Anonymous said...

யார் பொறுப்பு ஏற்பார்கள்?

அவன் வீட்டு முன்னால் போய் நிற்பதற்கு ஆள் அடையாளம் காட்டினால்
இதை செய்யலாம்.

சபாபதி சரவணன் said...

BNI, தங்களின் தீவிர அக்கறைக்கும், செயல்பாடுகளுக்கும் நன்றி,

தவிரவும், அக்ரமத்திற்கு எதிராக மிக நேர்த்தியாக, அமைப்பு ரீதியாக நீங்கள் ஆதரவு திரட்டுகிறீர்கள். பாராட்டு.

BadNewsIndia said...

//அவன் வீட்டு முன்னால் போய் நிற்பதற்கு ஆள் அடையாளம் காட்டினால்
இதை செய்யலாம்.//

அண்ணா நகர் டவர் இருக்கும் இடத்தின் நகராட்சி அமைப்பு பற்றி தெரியவில்லை.
அந்த தண்ணீர் திடலை எப்பொழுது கட்டினார்கள், அப்பொழுது யார் பொறுப்பில் இருந்தார் என்பது கண்டு பிடிப்பது சுலபமா?

வேண்டுமென்றால் இப்பொழுது இருக்கும் அதிகாரிகளின் முன் நின்று முறையிடலாம்!

ஹ்ம், செய்ய முடியாததை நினைத்து வருந்துவதை விட்டு விட்டு, செய்ய முடிந்ததை உடனே செய்யலாமே?

BadNewsIndia said...

நன்றி சபாபதி,
இந்த பிரச்சனையை பற்றி முதலில் எழுதிய உங்களுக்கு நன்றி.

நம்மால் முடிந்ததை செய்வோம்.

உங்கள் எழுத்தும் அருமை.

எளிய நடையில், படிக்கும்போது மனதில் வலி ஏற்பட வைக்க வேண்டும். அப்பொழுது தான் படிப்பவர்கள் சிந்திப்பார்கள், செயல்படுவார்கள்.

தொடர்ந்து இதை போல் எழுதுங்கள்!

Anonymous said...

Anne,

Konjam unga thamizhai kavanikkappadathaa?

BadNewsIndia said...

தம்பி, முதலில் தமிழனை கவனிக்கலாம் என்று எண்ணம்.
எழுத எழுத தமிழ் தானாக சரி ஆகிவிடும் என்ற நம்பிக்கை.

கொஞ்சம் பொறுத்துக்கோங்க :)

ஆதரவுக்கு நன்றி!

BadNewsIndia said...

==========================
I REQUEST each and every one of you to send the LETTER to DAV school today.
Just spend 10 minutes to accomplish it today itself.

Imagine, by sending your protest, you are saving another 4 year old Nandini from dying miserably at an young age!!!

please act now!!

BadNewsIndia said...

இது தொடர்பாக சபாபதியின் இன்னொரு பதிவு இங்கே - துள்ளி வருகுது வேல்: இன்னுயிர் தந்து அரசை எழுப்பிய குழந்தை நந்தினி