இந்தியனின் மூளை இல்லை என்றால், பல நிறுவனங்கள் ஸ்தம்பித்துவிடும் நிலையும் பல இடங்களில் காணக் கிடைக்கிறது.
முதல்வரும், பிரதமரும், ஜனாதிபதியும், தொழிலதிபர்களும் 2020 ல், இந்தியா வல்லரசு ஆகிவிடும் என்று தினமொரு கதை சொல்லுகிறார்கள்.
பங்கு சந்தை அமெரிக்காவுக்கு போட்டியாக மேலேறுகிறது.
இதை எல்லாம் பார்க்கும் போது, எனக்கும் நம்பிக்கை துளிர் விடத்தான் செய்கிறது. வல்லரசு ஆயிடுவோமோ?
ஆனால்,
எங்கே சென்று கொண்டிருக்கிறோம்? வலைப்பதிவில் எழுதுபவர்/படிப்பவர்களாகிய நாம் நல்ல உத்யோகத்தில் இருக்கிறோம். இதை எல்லாம் படித்து சப்புகொட்டி அடுத்த வேலையை பார்க்க கிளம்பி விடுவோம்.
இப்படி எல்லோரும் இருப்பதால் தான், மேலே உள்ள குறைபாடுகள் நம் ஊரில் பஞ்சமில்லாமல் த்ழைத்து வாழ்கிறது.
5 ஸ்டார் ஓட்டலில் சாப்பாடும், plasma டி.வி யும், Hyundai காரும், தாய்லாந்து சுற்றுப்பயணமும் கொண்டு சொகுசு வாழ்க்கை மட்டும் வாழ்ந்தால், நாளை உங்கள் குழந்தைகளுக்கு நல்ல சமுதாயமும் வாழும் இடமும் கிடைக்குமா?
atleast, ஓய்வு பெற்றவர் யாரேனும் இருப்பீராயின், களமிறங்கி இந்த குறைபாடுகள் நடக்குமிடத்தில், அவ்வப்போது எதிர்ப்பை காட்டவேண்டும்.
மற்றவர்கள், தங்களால் முடிந்ததை செய்ய வேண்டும்.
உங்களால் முடிந்தது என்ன?
சிங்கபூர், அமெரிக்கா, ஐரோப்பா மாதிரி எல்லாம் வளரலன்னாலும், எல்லா இந்தியனும் உடுத்த துணியும், உண்ண உணவுமாவது கிடைக்குமா 2020ல் ?
கலாம் மாதிரி (பொதுநலத்தை மட்டும் எண்ணும்) 1000 MLA/MP கிடைத்தால் நடக்கலாம். கிடைப்பாரா?
What is your take on this? Please DO comment. Thanks!
பி.கு. படித்த இளைஞர்கள் சிலர் வலையில் தேவை இல்லா சண்டை போட்டு நேரத்தை விரையம் செய்யாமல், கூட்டு முயற்சியுடன் ஒரு வலைதளம் தொடங்குங்களேன் (தேன்கூடு,தமிழ்மணத்துக்கு போட்டியாக அல்ல). வலை தளத்தில், நாட்டில் நடக்கும் அக்கிரமங்களை எல்லாம் பட்டியலாக சேர்க்கும்படி செய்தால், உபயோகமாக இருக்கும். (உ.ம் லஞ்சம் வாங்குபவன், ஏய்ப்பவன், ஒன்றும் செய்யாத MLA/MP, விவசாயியை கவனிக்காத உள்ளூர் தலைவர், etc.. ). பின்னூட்டத்தில் ideas தெரிவியுங்கள்.
47 comments:
உள்ளேன் ஐயா.
வாங்க singapooraan.
எல்லாரும் சவுக்கியமா?
கருத்து சொல்லலியே ?
*மின் இணைப்புக்கு வீடுகட்டி எல்லாம் தயாராகியும் இன் இணைப்புக்கு பத்துமாதம் லஞ்சம் தராமல் நேர்மையாகப் போராடியும் லஞ்சம் தந்த பின்பே இணைப்பைப் பெற்றேன்!
*இதுவரை நான் ஓட்டே போட்டதில்லை. சமூகக் குற்றவாளி?
அயல் நாட்டில் வேலை செய்து பிழைப்பவர்கள் ஓட்டுப் போடும்படி வழி செய்யுங்கப்பா!
*என்னால் முடிந்த அளவுக்கு பொது இடத்தில் குப்பைகள் போடுவது, மூச்சா போவது இல்லை :-)))
*கல்விக்காக ஏழைகளுக்கு நிதி உதவி செய்கிறேன். கல்வியால் மட்டுமே வல்லரசுக் கனவு சாத்தியப்படும்.
*கல்வியின் அவசியத்தை உழைப்பாளிகளிடம் அடுத்த தலைமுறையைப் படிக்கவைக்க வள வள என்று பேசுகிறேன்!
BNI,
//ஜனாதிபதியும், தொழிலதிபர்களும் 2020 ல், இந்தியா வல்லரசு ஆகிவிடும் என்று தினமொரு கதை சொல்லுகிறார்கள்.
பங்கு சந்தை அமெரிக்காவுக்கு போட்டியாக மேலேறுகிறது//
பங்குச் சந்தையில் நடக்கும் சூதாட்டத்திற்கும் அங்கே உயரும் புள்ளிகளுக்கும் நாட்டின் வளர்ச்சிக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. சமீபத்தில் பங்குச் சந்தை புள்ளிகள் உயர்ந்த அதே நேரத்தில் தான் inflation rate அதிகரித்தது. உலகமய சூழலுக்குப் பின் இந்தியாவின் பொருளாதாரம் முன்னேறியதா இல்லையா என்று சமீபத்தில் முத்தமிழ் குழுமத்தில் நடந்த விவாதத்தை வாசித்துப் பாருங்கள்..
மேலும் தகவல் வேண்டுமானால் - www.righttofood.org என்கிற தளத்திற்கு சென்று இந்தியாவிற்கான PDF ஐ download செய்து படித்துப் பாருங்கள்.. பெரும் சதவீதத்திலான இந்தியக் குழந்தைகள் சஹாரா பாலைவனத்தில் வசிக்கும் பழங்குடியினரை விட குறைவான ஊட்டச்சத்தைத் தான் உட்கொள்கின்றனர்.
//எங்கே சென்று கொண்டிருக்கிறோம்? வலைப்பதிவில் எழுதுபவர்/படிப்பவர்களாகிய நாம் நல்ல உத்யோகத்தில் இருக்கிறோம். இதை எல்லாம் படித்து சப்புகொட்டி அடுத்த வேலையை பார்க்க கிளம்பி விடுவோம்.
இப்படி எல்லோரும் இருப்பதால் தான், மேலே உள்ள குறைபாடுகள் நம் ஊரில் பஞ்சமில்லாமல் த்ழைத்து வாழ்கிறது.
5 ஸ்டார் ஓட்டலில் சாப்பாடும், plasma டி.வி யும், Hyundai காரும், தாய்லாந்து சுற்றுப்பயணமும் கொண்டு சொகுசு வாழ்க்கை மட்டும் வாழ்ந்தால், நாளை உங்கள் குழந்தைகளுக்கு நல்ல சமுதாயமும் வாழும் இடமும் கிடைக்குமா?//
உங்கள் ஆதங்கத்தையும் வருத்தத்தையும் புரிந்து கொள்ள முடிகிறது என்னால்.. ஆனால் இதற்கு என்ன தீர்வென்று நினைக்கிறீர்கள்? உண்மைதான் வலைப்பதிவில் எழுதுவது சமூகத்தில் பெரிய அளவிலான மாற்றத்தை உண்டாக்கி விடாதுதான். ஆனால் ஒன்றே ஒன்று சாத்தியம் - அது ஒரு பொதுக்கருத்தை உருவாக்குவது.
//என்னிடம் இதர்க்கு தீர்வு இல்லை. அவர்களே புரட்சி செய்தால் தான் உண்டு(?)//
அந்தக் கேள்விக்குறி தேவை இல்லை BNI.. அதற்கான சூழலை கண்முன்னாள் நாம் காண்கிறோ. சமூகத்தில் உள்ள பிளவு அதிகரித்துக் கொண்டே போகிறது. முரண்பாடுகள் கூர்மையாகிக் கொண்டே போகிறது. அடுத்த நிகழ்வு நிச்சயம் மக்களின் எழுச்சிதான்.
-ராஜாவனஜ்
பி.கு-பீட்டா பிளாக்கருக்கு மாறியபின் சாதாரண அக்கவுண்டுகளில் பின்னூட்டமிட முடியவில்லை எனவே அனானிமஸ் ஆப்ஷனை பயன்படுத்துகிறேன்.. இது நான் தான் என்று உறுதிப்படுத்திக் கொள்ள நினைத்தால்/விரும்பினால் - rajavanaj@gmail.com முகவரிக்கு மடல் அனுப்பி உறுதி செய்து கொள்ளலாம். நன்றி.
BNI,
சிறப்பான பதிவு!
பதிவுக்கு நன்றி
//பி.கு. படித்த இளைஞர்கள் சிலர் வலையில் தேவை இல்லா சண்டை போட்டு நேரத்தை விரையம் செய்யாமல், கூட்டு முயற்சியுடன் ஒரு வலைதளம் தொடங்குங்களேன் (தேன்கூடு,தமிழ்மணத்துக்கு போட்டியாக அல்ல). வலை தளத்தில், நாட்டில் நடக்கும் அக்கிரமங்களை எல்லாம் பட்டியலாக சேர்க்கும்படி செய்தால், உபயோகமாக இருக்கும். (உ.ம் லஞ்சம் வாங்குபவன், ஏய்ப்பவன், ஒன்றும் செய்யாத MLA/MP, விவசாயியை கவனிக்காத உள்ளூர் தலைவர், etc.. ). பின்னூட்டத்தில் ideas தெரிவியுங்கள்.// இதை பத்தி நான் எழுதிய பதிவுகள், "உன்னால் முடியும் தம்பி!
- ப்ளாக்கர்களின் சாம்ராஜ்யம்", "சீனாவில் ப்ளாக்கர்களின் சாம்ராஜ்யம்" நீங்கள் காணலாம்!
hariharan,
கருத்துக்கு நன்றி!
//மின் இணைப்புக்கு வீடுகட்டி எல்லாம் தயாராகியும் இன் இணைப்புக்கு பத்துமாதம் லஞ்சம் தராமல் நேர்மையாகப் போராடியும் லஞ்சம் தந்த பின்பே இணைப்பைப் பெற்றேன்!//
இது வரை இப்படி செய்திருக்கலாம், இனி இப்படி நிகழாமல் பார்த்துக் கொள்ளலாமே? இனி எவனாவது லஞ்சம் கேட்டால் பதிவாக போடுங்கள். லஞ்சம் கேட்பவனை பற்றி எழுதி அவனை சந்தி சிரிக்க வைக்கலாம். அவன் உறவினர்கள் யாராவது படித்து அவனுக்கு சொன்னாலாவது புத்தி வரட்டும்.
நீங்கள் செய்யும் மற்ற மூன்று நல்ல காரியங்களுக்கும் என் வணக்கங்கள். தொடரட்டும். கல்வி ஒன்றுதான் முன்னேற்றும். விழிப்புணர்வு தரும்.
நன்றி!
ராஜவனஜ்,
//பங்குச் சந்தையில் நடக்கும் சூதாட்டத்திற்கும் அங்கே உயரும் புள்ளிகளுக்கும் நாட்டின் வளர்ச்சிக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது//
மிக்க சரி. பங்கு விலை உயரும் ஒரு சில நிறுவனங்களின் வளர்ச்சியை காட்டினாலும், நாடு முன்னேறுகிறது என கணக்கில் கொள்ள முடியாது.
//உங்கள் ஆதங்கத்தையும் வருத்தத்தையும் புரிந்து கொள்ள முடிகிறது என்னால்.. ஆனால் இதற்கு என்ன தீர்வென்று நினைக்கிறீர்கள்? உண்மைதான் வலைப்பதிவில் எழுதுவது சமூகத்தில் பெரிய அளவிலான மாற்றத்தை உண்டாக்கி விடாதுதான். ஆனால் ஒன்றே ஒன்று சாத்தியம் - அது ஒரு பொதுக்கருத்தை உருவாக்குவது.
சமூகத்தில் உள்ள பிளவு அதிகரித்துக் கொண்டே போகிறது. முரண்பாடுகள் கூர்மையாகிக் கொண்டே போகிறது. அடுத்த நிகழ்வு நிச்சயம் மக்களின் எழுச்சிதான்.
//
நல்ல சிந்தனை. எல்லோரிடமும் முன்னேறணும்/முன்னேற்றணும் என்ற எண்ணம் கண்டிப்பாக இருக்கிறது.
அடுத்த கட்டம் என்ன என்பதுதான் மிகப்பெரிய கேள்வி.
நீங்கள் சொல்வது போல் மக்கள் எழுச்சி நம்மூரில் வருவது மிக மிக கடினம்.
பல ஊர் மக்களை கண்ட அனுபவத்தில் சொல்கிறேன். ஒரு சீனாக்காரனுக்கோ, ஒரு ப்ரென்ச் காரனுக்கோ, ஒரு ஜப்பானியனுக்கோ, இஸ்ரேலியனுக்கோ, இரானியனுக்கோ இருக்கும் மன திடம் நம்மில் இல்லை.
நாம் ரொம்ப சாதுக்கள். வளைந்து நெளிந்து வாழும் தன்மை கொண்டவர்கள்.
நம் முதுகெலும்பு நிமிற வேண்டுமானால் ஒரு லீ-க்வான்-யூ, ஒரு பெஞ்சமின் ப்ரான்க்ளின் போன்று யாராவது வந்து தூக்கி விட்டால்தான் உண்டு.
அஹிம்சை மருந்து சாப்பிட்டு சாப்பிட்டு இந்த மனநிலையோ நமக்கு?
சிவபாலன்,
கருத்துக்கு நன்றி!
வெளிகண்ட நாதர்,
உங்கள் பதிவுகளை படித்தேன்.
//எதுக்கு நான் இதை எழுதுனேனா, நம்ம பலம் என்னான்னு நமக்கு இன்னும் தெரியல. சும்மா வெட்டியா கதை பேசி, சில சமயம் பைசா புரோஜனம் இல்லாத விஷயங்களை எழுதி நேரம் போக்கிகிட்டு இருக்கோம். நான் என்னையும் சேர்த்து தான் சொல்றேன். அதுனால, இனி வரும் நாட்கள்ல நம்மால எதுவும் பண்ணமுடியும், சில பல நல்ல காரியங்களுக்கு, ஆக்கப் பூர்வமாண பணிகளுக்குங்கிற நம்பிக்கை இருக்கு! அதான்,//
மிகச்சரியாக சொன்னீர்கள்.
பார்ப்போம், நம்ம முன்கோபத் தம்பிகள் யாராவது இதர்க்கு வழி செய்கிறார்களா என்று.
//முன்கோபத் தம்பிகள் யாராவது இதர்க்கு வழி செய்கிறார்களா என்று.//
BNI அய்யா,
முன் கோபத் தம்பிகள் என்று யாரைச் சொல்கிறீர்கள்? தரகு முதலாளிகளான தி மு க, பா ம க ,திராவிட கும்பலையா? அல்லது சமுதாய மாற்றத்துக்காக பாடு படும் எனது புரட்சிகர கட்சியின் தலைமையையா?
வழி, எனது கட்சி தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறது என்று அடக்கத்தோடு சொல்லிக்கொள்கிறேன்.
பாலா
இங்கு வசிக்கும் அனைத்து தரப்பினரும் முன்னேற்றத்தின் லாபங்களில் பங்கு கொள்ளாதவரை, நாம் முன்னேறவில்லை என்பதை பெருங்குரலில் சொல்ல நான் தயார்.
இலஞ்சம் வாங்காதே... கொடுக்காதே என்பதெல்லாம் சரியா வராது பிரதர்...! சட்டங்கள் கடுமையாக்கப்படாத வரை இதையெல்லாம் ஒழிக்க முடியாது! இலஞ்சம் வாங்குவது கொடுப்பதிலெல்லாம் அறிவு பூர்வமான முடிவுகள் அல்ல; மாறாக உணர்வு பூர்வமான முடிவுகள். இதற்கெல்லாம் கண்ணுக்குக் கண் - பல்லுக்குப்பல் மாதிரியான சட்டங்கள் தான் தேவை!...
ஏனென்றால்... இலஞ்சம் வாங்கும்/கொடுக்கும் அனைவருக்கும் தெரியும் அது தவறு என்று... இருந்தாலும் தெரிந்தே செய்வது யார் நம்மை என்ன செய்ய முடியும் என்பதே...
namathu oorkalil oru road kuta olungu kitaiyathu .atleast namathu veetirku mun potum pothum,namathu office allathu kadai yin mun potum pothu nam kalavai sariyaka ullatha yena parkalame.antha katai kararkalum therukararkalum. thatti kekalame.beach road il verum manalil karkal pathippathai parthen.oru malai yil yelam poyitru.yevvalauv panam ullaippu.veenaga.athaivita kotumai medu pallamaga iruthathil oru vayathanavar balance panna mutiyamal kele vilunthar.yethanai vipathukal.athil uririlanthavarkal yetthnai per. yar mun varuvar. oor kutinal matume vidivu
பாலா,
//முன் கோபத் தம்பிகள் என்று யாரைச் சொல்கிறீர்கள்? தரகு முதலாளிகளான தி மு க, பா ம க ,திராவிட கும்பலையா? அல்லது சமுதாய மாற்றத்துக்காக பாடு படும் எனது புரட்சிகர கட்சியின் தலைமையையா?
வழி, எனது கட்சி தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறது என்று அடக்கத்தோடு சொல்லிக்கொள்கிறேன்.
//
முன்கோபத் தம்பி என்று யாரையும் மனதில் வைத்து சொன்னதல்ல. வலையில் சண்டை மட்டுமே போடும் எல்லாருக்கும் பொருந்தும் அது :)
உங்கள் புரட்சிகர கட்சி நல்ல வழி காட்டுமென்றால் சந்தோஷமே.
நல்லதை செய்வோம்.
அனானி,
//இங்கு வசிக்கும் அனைத்து தரப்பினரும் முன்னேற்றத்தின் லாபங்களில் பங்கு கொள்ளாதவரை, நாம் முன்னேறவில்லை என்பதை பெருங்குரலில் சொல்ல நான் தயார்.//
புரியலையே?
அஞ்சாநெஞ்சன், வாங்க வாங்க. அஞ்சாநெஞ்சம் தான் வேணும் நம் எல்லாருக்கும்.
//ஏனென்றால்... இலஞ்சம் வாங்கும்/கொடுக்கும் அனைவருக்கும் தெரியும் அது தவறு என்று... இருந்தாலும் தெரிந்தே செய்வது யார் நம்மை என்ன செய்ய முடியும் என்பதே... //
தவறு என்று தெரிந்தேதான் எல்லாரும் எல்லா தவறுகளையும் செய்கிறோம்.
நம் ரத்தத்தில் ஊரி விட்டது இது. அந்த அளவுக்கு 'சகஜமாகிவிட்டது' தவறு செய்வது. ரொம்ப கஷ்டம்.
அடுத்த தலைமுறை சரியாக வளர்க்க வேண்டும். எனக்கு தெரிந்து அது ஒன்று தான் வழி.
அனானி,
//namathu oorkalil oru road kuta olungu kitaiyathu .atleast namathu veetirku mun potum pothum,namathu office allathu kadai yin mun potum pothu nam kalavai sariyaka ullatha yena parkalame//
very well said. நமக்கு ஏன் அந்த வேலை. வீட்டுக்குள்ள போயி சிம்ரன் ஆட்டத்தையும், ரஜினி சண்டையும் சீரியல் மங்கைகளையும் பாக்கலாமே.
மண்டை உளுத்து போற அளவுக்கு ஒரு மந்தநிலையில் இருக்கோம் எல்லோரும்.
நீங்க சொல்ற மாதிரி, ரோடு போடும்போது, போதிய தார் சேர்க்காமல் போடுவது.
ஏற்கனவே இருக்கும் ரோட்டை தோண்டி எடுத்து புதிய ரோடை போடாமல், அதர்க்கு மேலெயே போட்டு ஒரு பொருப்பற்ற வேலை செய்வது. இதையெல்லாம் பாத்துட்டு, சாயங்காலமா பக்கத்து வீட்டு ஆசாமியுடன் அங்கலாய்ப்பது ஒன்று தான் நம்மாளுங்களுக்கு தெரியும்.
விளங்காது இந்த ஜென்மங்கள்.
BNI,
நல்ல பதிவு வாழ்த்துக்கள். பிரச்சனைகள் பற்றிய உங்களது கருத்தில் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை ஆனால் தீர்வு குறித்து நீங்கள் குறீப்பிடுவது பிரச்சனையின் மூல காரணத்தை தவிர்த்துவிட்டு வரும் பார்வையாக உள்ளது.
எந்த அடிப்படையில் அப்துல் கலாமையெல்லாம் ஒரு ஆள் என்று முன்னாதரணமாக காட்டுகிறீர்கள் என்று தெரியவில்லை.
இந்திய சமூகத்தில் அவர் என்னவிதமான மாற்றத்தை கொண்டு வந்துள்ளார் என்று பார்த்தால் ஒன்றூம் இல்லை. அவர் ஒரு சுய விளம்பர விஞ்ஞான எம்.ஜி.ஆர். அவ்வளவுதான்.
மேலும், மக்களின் எழுச்சிக்ர மனோநிலை குறித்தும் உங்களது பார்வை சரியல்ல. ஏனெனில், இந்திய இன்னும் ஒரு அரை நிலபிரபுத்துவ நாடு(ஜனநாயக வளர்ச்சி கம்மி) என்ப்தால் நீங்கள் குறிப்பிட்ட பண்புகள் பரவலாக இருக்கும். ஆயினும் இந்த மக்கள் தான் 1800 களில் பல தொடர் ஆயுதம் தாங்கிய கிளர்ச்சிகளை நடத்தினர், 1940 களில் பல் ஆயுதம் தாங்கிய மற்றும் பெருந்திரள் எழுச்சிகளை நடத்தினர். அதற்க்கு பிறகும் இன்று வரை பல்வேறூ போர்குணமிக்க போராட்டங்களை நடத்தியுள்ளனர். அதனால் பிரச்சனை ஒரு புரட்சிகர அமைப்பு வலுவாக இல்லாததுதான்.
அதை கட்டியமைப்புதுதான் இன்றைய கடமையாக இருக்க முடியும். ஆனால் நீங்களோ பிரச்சனைகளை சுட்டிக் காட்டிவிட்டு அடுத்த வரிகளிலேயே விவசாயிகள் அவர்களே கிளர்ந்தெழுந்து கொள்வார்கள். நாம் ஏதோ வயித்துக்கு சாப்பிட்டது போக ப்ளாக், பத்திரிக்கை என்று பிரச்சனை வராத வகைகளில் எதாவது சின்ன லெவல் அசிங்களை அம்பலப்படுத்துவதோடு நின்று கொள்வோம் என்று சொல்கிறீர்கள்.
இது எந்த வகையிலும் பயனளிக்காது, ஒன்றே ஒன்றை தவிர - அந்த சம்ப்ந்தப்பட்ட மனிதரின் சமூக அரிப்பை சொறிந்து விடுவதை தவிர்.
மற்றபடி, இந்தியாவின் பிரச்சனைகள் வெறும் தெரு விளக்கு எரிவது, குப்பை என்பதை தாண்டிய ஒன்று என்ற அளவில் உங்களது புரிதல் வளர்ந்துள்ளது எனக்கு பெருத்த மகிழிச்சியை அளிக்கிறது.....
தொடர்ந்து இது போல இந்தியாவின் அடிப்படை பிரச்சனைகளை ஆய்வு செய்து எழுதுக...
அசுரன்
தாராளமயம் ஒரு சாபக்கேடா ?
இல்லை.
இல்லை என்று தான் சொல்வேன். முன்பு அரசுத்துரையின் ஏகபோக சொத்தாக இருந்த தொலைபேசி நிறுவனத்தால் ஒரு கனெக்ஷன் கொடுக்க 10 ஆண்டுகள் க்யூவில் நின்ற காலம் போய் இன்று நொடிப்பொழுதில் செல் போனில் பேசி ஆட்டோக்காரனை அழைத்து வீட்டம்மாவை அனுப்பிவைக்கிறோம்.
ஒரு காலத்தில் BSNL மட்டுமே இந்தியாவிற்கான internet வழி என்றிருந்தது போய் இன்று வீட்டுக்கு வீடு அகலப்பட்டை வந்திருக்கிறது. எதனால் ? போட்டியினால் தான்.
போட்டியிருந்தால் தான் முன்னேற்றம் இருக்கும்.
எல்லாவற்றிர்க்கும் அரசை எதிர் பார்ப்பது என்பது தவறான செயல். அரசு சோப்பும் விற்கவேண்டும், அனுகுண்டும் தயாரிக்கவேண்டும் என்பது அபத்தம்.
எல்லாவற்றையும் அரசு செய்ய முடியாது.
The Government that Governs Best, Governs Least.
..
இந்திய ஜனநாயகத்தின் நிலை,
பிரியாணிக்கும் க்வாட்டருக்கும் வோட்டு போடுவது, வெள்ளைத்தோலைப் பார்த்து வோட்டு போடுவது, சினிமாவில் பேசுபவனுக்கு வோட்டு போடுவது, என்ற நிலையில் தான் நாம் இன்னும் இருக்கிறோம்.
We trust Rabble rousers more than real thinkers.
அதற்காக ஜனநாயகமே வேண்டாம், கம்யூனிசத்திற்கு போவோம் என்றால் அதைவிட கேவலமான செயல் எதுவுமே இல்லை.
அசுரன், வணக்கம்.
//எந்த அடிப்படையில் அப்துல் கலாமையெல்லாம் ஒரு ஆள் என்று முன்னாதரணமாக காட்டுகிறீர்கள் என்று தெரியவில்லை.
இந்திய சமூகத்தில் அவர் என்னவிதமான மாற்றத்தை கொண்டு வந்துள்ளார் என்று பார்த்தால் ஒன்றூம் இல்லை. அவர் ஒரு சுய விளம்பர விஞ்ஞான எம்.ஜி.ஆர். அவ்வளவுதான்.//
என்னத்த சொல்ல, கலாம் மாதிரி சுயநலம் முற்றிலும் இல்லாத வேற யாராவது இருக்காங்கன்னா சொல்லுங்க.
(காந்தி உண்மையில் மஹாத்மா அல்ல. வரலாறு திருத்தி எழுதப்பட்டு காந்தி மஹாத்மா ஆக்கப்பட்டார் என்று சொல்பவரும் உண்டு. ஆனால், கலாமை பொறுத்தமட்டில் நம் கண் முன் வளர்ந்தவர் அல்லவா அவர்)
//இது எந்த வகையிலும் பயனளிக்காது, ஒன்றே ஒன்றை தவிர - அந்த சம்ப்ந்தப்பட்ட மனிதரின் சமூக அரிப்பை சொறிந்து விடுவதை தவிர்.//
மிக்க சரி. இது தான் நடந்து கொண்டு இருக்கிறது. எழுதுவதில் பலர் வெளிநாடுகளில் சொகுசு வாழ்க்கை வாழ்பவர்கள். உண்மையான கவலை அவர்களுக்கு இருக்கு. ஆனால், நல்லதை செயல் படுத்த ஒன்று செய்ய மாட்டார்கள். நல்லது நடக்கலன்னாலும் பெரிய கவலையும் பட மாட்டார்கள். சப்புக்கொட்டி அடுத்த வேலை பார்ப்பார்கள்.
sepoy mutiny எல்லாம் செய்தவர்கள்தான் நம்மவர்கள். சுதந்திர இந்தியாவில் அந்த திடம் எல்லாம் மறைந்து போய், மெத்தனம் கூடிவிட்டது அனைவருக்கும்.
ஐரோபாவில், தனி மனித சுதந்திரம் பறிக்கப்பட்டால் எதிர்க்கக் கூடும் கும்பலை பார்த்திருப்பீர்கள். கடும் குளிரிலும் மெழுகுவர்த்தியுடன் வரும் போராளிகள் அவர்கள்.
நம்மாளுங்க, டி.வி யில் மயங்கி வாழும் சாமானியர்கள்.
//மற்றபடி, இந்தியாவின் பிரச்சனைகள் வெறும் தெரு விளக்கு எரிவது, குப்பை என்பதை தாண்டிய ஒன்று என்ற அளவில் உங்களது புரிதல் வளர்ந்துள்ளது எனக்கு பெருத்த மகிழிச்சியை அளிக்கிறது..... //
நான் முன்னர் சொன்னது போல், ஊரில் பல பிரச்சனைகள் உண்டு. என்னால் முடிந்தது, ஊரில் இருக்கும் சுகாதாரப் பிரச்சனையும், basic வசதிகளும் கிடைக்க் வழி செய்ய பாடு படுவது. முடிந்தவரை இதை எல்லோரையும் செய்ய வைக்க எழுதுவது.
ஒவ்வொருவருக்கு ஒரு priority வச்சு பன்முகத்தாக்குதல் செய்வோமே :)
வஜ்ரா,
//தாராளமயம் ஒரு சாபக்கேடா ?
இல்லை.
இல்லை என்று தான் சொல்வேன். முன்பு அரசுத்துரையின் ஏகபோக சொத்தாக இருந்த தொலைபேசி நிறுவனத்தால் ஒரு கனெக்ஷன் கொடுக்க 10 ஆண்டுகள் க்யூவில் நின்ற காலம் போய் இன்று நொடிப்பொழுதில் செல் போனில் பேசி ஆட்டோக்காரனை அழைத்து வீட்டம்மாவை அனுப்பிவைக்கிறோம்.
//
செல்போனும், Hyundai காரும், computerஉம், கலர் டி.வி யும் பெருகினால் போதாதே. இது ஒரு குறிப்பிட்ட கும்பலுக்கு மட்டுமே நல்லது.
கிராமத்தில் இன்னும் ஒரு வேளை கூட உண்ண முடியாமல் பலர் இருக்கிறார்கள்.
coke, pepsi, hyundai, motorola, என்று வரிசையாக அனைவரும் உள்ளே புகுந்து factory's ஆரம்பிப்பது நல்லது தான். ஆனால், இவர்களுக்கு விவசாய நிலத்தை தூக்கிக் கொடுத்து, விவசாயிகளுக்கு வேறு வழி பண்ணாமல் இருந்தால் வருங்காலம் என்னாகும்?
( அமெரிக்காவிலும் இதே பிரச்சனை இருப்பதாக எங்கேயோ படித்த ஞாபகம். Floridaவில் வளர்ச்சி பெறுகுவதால், Orange தோட்டமெல்லாம் தொழிர்சாலையாகவும், பல அடுக்கு வீடுகளாகவும் மாறுதாம்.
இன்னும் கொஞ்ச ஆண்டில் ஆரஞ்சு கிடைக்காதாம்.
நிலத்தை விற்கும் ஆட்கள், அடுத்து என்ன செய்வது என்று தலையை பிய்த்துக் கொண்டிருக்கிறார்களாம். ) யாரை குற்றம் சொல்ல?
Administrators are at fault in both places. Balanced approach செய்து எல்லாரின் நலனும் பேண வேண்டும்.
வஜ்ரா,
//அதற்காக ஜனநாயகமே வேண்டாம், கம்யூனிசத்திற்கு போவோம் என்றால் அதைவிட கேவலமான செயல் எதுவுமே இல்லை.//
ரொம்ப சரி.கம்யூனிசம் இருக்கும் இடங்கள் ஒன்றும் சொர்க பூமியாக இல்லை என்பது உண்மைதானே.
மே.வங்காளம், கேரளம் பெரிதாக ஒன்றும் சாதித்ததாக தெரியவில்லை.
BNI,
மேற்கு வங்கம் கேராளாவில் எந்த அடிப்படையில் கம்யுனிசம் உள்ளது என்று கருதுகிறேர்கள்?
கட்சியின் பெயர் கம்யுனிஸ்டு கட்சி என்பதாலா?
அப்படியெனில் ஹிட்லரின் நாசிக் கட்சியின் பெயர் சோசலிச கட்சிதான். அதற்க்காக அவனை சோசலிசடு என்றோ அவன் நடைமுறைப்படுத்திய பொருளாதார திட்டம் சோசலிசம் என்றோ எப்படி சொல்ல முடியும்?
தயவு செய்து ஒரு விசயத்தை கம்யுனிசமா இல்லையா என்று சொல்லும் முன் அது என்ன விதமான் பொருளாதாரத்தை ஆதரிக்கிறது என்பதை கவனிக்கவும்.
நீங்கள் குறிப்பிட்ட மே.வா அரசுதான் உலகமயத்தை செம்மையாக தனது மாநிலத்தில் செய்து வருகிறாது.
பிறகு எப்படி அவர்கள் கம்யுனிஸ்டுகள் ஆவார்கள் என்றூ நீங்களே குறிப்பிடுங்கள்
அசுரன்
//
முடிந்தவரை இதை எல்லோரையும் செய்ய வைக்க எழுதுவது.
ஒவ்வொருவருக்கு ஒரு priority வச்சு பன்முகத்தாக்குதல் செய்வோமே :)..
///
அது ஒன்றே போதும் என்று கருதுகிறீர்களா?
அப்போ ம்க்கள் தங்களோட ஒவ்வொரு பிரச்சனைக்கும் ஒரு BNI உருவாக காத்திருக்க வேண்டும் என்கிறீர்களா?
**********
///
//அதற்காக ஜனநாயகமே வேண்டாம், கம்யூனிசத்திற்கு போவோம் என்றால் அதைவிட கேவலமான செயல் எதுவுமே இல்லை.//
ரொம்ப சரி.கம்யூனிசம் இருக்கும் இடங்கள் ஒன்றும் சொர்க பூமியாக இல்லை என்பது உண்மைதானே
////
அவர் ஜனநாயகம் குறித்து தனக்கு தெரிந்த எதோ ஒன்றின் அடிப்படையில் (இந்துத்துவ, இஸ்ரேலிய ஜனநாயகத்தின் அடிப்படையில்) ஒரு கருத்தை வைத்துச் சென்றுள்ளார்.
நீங்களோ மிகச் சரி என்கிறீர்கள்
ஜனநாயகம் என்றால் என்ன என்று ஒரு கேள்வியை இங்கு கேட்ப்பது தகும் என்று கருதுகிறேன்.
BNI please answer this question
அசுர்ன்
/*************************
எந்தத் தலைவனை நம்பியும் பிரயோஜனமில்லை
****************************/
எல்லா அரசியல் தலைவர்களும், நல்ல குடும்ப தலைவர்களாக மட்டுமே உள்ளனர்.
----------------------------------
/*******************************
என்னால் முடிந்த அளவுக்கு பொது இடத்தில் குப்பைகள் போடுவது, மூச்சா போவது இல்லை :-)))
*******************************/
நானும் உங்களைப் போல்தான், ஊரை சுத்தப்படுத்தா விட்டாலும், அசிங்கப் படுத்தாமலாவது இருக்கலாமே என்று தான்.
அசுரன்,
//மேற்கு வங்கம் கேராளாவில் எந்த அடிப்படையில் கம்யுனிசம் உள்ளது என்று கருதுகிறேர்கள்?
கட்சியின் பெயர் கம்யுனிஸ்டு கட்சி என்பதாலா?
//
கட்சியின் பெயரை வைத்து அவர்களின் கொள்கையை கண்டுபிடிக்க முடியாது என்பது மிகச்சரி.
எந்த X.தி.மு.க வும் முன்னேற்றத்துக்காக பாடுபடுவதாக தெரியவில்லையே.
கம்யூனிசக் கட்சிகள் ஆட்சிக்கு வெளியில் இருப்பது வரை எல்லா 'ஸிசமும்' பேசுகிறார்கள். ஆட்சி கிடைத்த இடத்தில் பெரிய சாதனை ஒன்றும் செய்யவும் இல்லை.
நம்மூரை விடுங்கள், கம்யூனிசம் வித்திட்டு உருவாக்கிய நாடுகள் கூட இன்று விளங்காமல் தானே இருக்கிறது?
(உங்கள் பார்வையில் கம்யூனிசம் பற்றி ஒரு ten commandments பதிவு ஒண்ணு போடுங்களேன். எனக்குத் தெரிந்த கம்யூனிசம் உழைப்பவனுக்கு அவன் உழைப்புக்கேற்ற ஊதியம் தடங்கலில்லாமல் கிடைக்க வேண்டும். அவன் உழைப்பு சுரண்டப் படக்கூடாது)
அசுரன்,
//அப்போ ம்க்கள் தங்களோட ஒவ்வொரு பிரச்சனைக்கும் ஒரு BNI உருவாக காத்திருக்க வேண்டும் என்கிறீர்களா?
//
மக்களுள் பலவகை மனிதர்கள் உண்டு. ஒவ்வொரு பிரச்சனைக்கும் ஒரு BNI வரணுமோ இல்லியோ, ஆனா கண்டிப்பா மக்கள் குழுக்கு ஒரு பொதுநலத் தலைவன் வரணும். தலைவன் இருந்தாதான் சக்தியை திரட்டி வழி நடத்த முடியும்.
வெறும் அடங்கா கூட்டங்களின் போராட்டம் பேரிழப்பில்தான் போய் முடியும்.
நம் மக்களின் இன்றைய மனநிலையை வைத்து சொல்கிறேன். நல்ல தலைவன் வரலன்னா, தானா கிளர்ந்தெழுந்து தடைகளை உடைப்பதெல்லாம் நம்மாளு தானா செய்ய மாட்டான்.
//ஜனநாயகம் என்றால் என்ன என்று ஒரு கேள்வியை இங்கு கேட்ப்பது தகும் என்று கருதுகிறேன்.//
சிம்பிளா சொல்லணும்னா 'அனைத்து' சுதந்திரமும் எல்லா மனிதனுக்கும் சமமாக அமைத்துக் கொடுக்கும் ஒரு அமைப்பு.
வெங்கட்ராமன், வருகைக்கு நன்றி.
உங்களால் முடிந்ததை செய்தல் நல்லதுதான். தொடரட்டும் :)
I am aasath
1. FOr Hari:
Are you hope that the bribe is a unique property for our society. It is the residu from this system.
Education shouldn't change the country to the Super Power. Before 2000 years, Nalandha gave education to Chanakkya and Chandhragupta to destroy their higher civilizationn by innocent approach. Kalam and his middle-class followers need to learn a lesson from Thadchaseela.
2. Without Ten Comments try to understand the society of Socilism and Communism.
Socialism: Fix the salary depend on the work. So if anyone have ready to work should be change as Wealthy. Work and consumption will goes to the whole society. SO individual rights on properties havn't destroyed. But we will educate to form a paradise through the next stage of Communism.
Communism: State leave from the earth due to the annihilation of the class deviation. Arts & Lit., Science will grow highly as well as the politics.
Work will define by individuals requirement. So the productivity of a nation should be defined. Extra Commadity haven't required. So, Advt. to buy the PETER ENGLAND, NIKE, RABON ... has not required. Varunashramadharma will destroy from world by Proliterarian Dictatership. Yes, It should be paradise. We have a plan to this agenda.
3. Dont try to least work. Nation wants Planned work.
4. Kalam: He is the Baboon for this drama. He has used to form a virtual water on a desnity. He can speak with childrens only. Also, he had a sword to RSS.
5. Kuppai Kottuvathu, Veetirkku arugil podum roadugalai sariyaga poda vaipathu eanpathellam oru samuga unarvu illatha individualism thanae!.
6. We have a history to revolt. Kattabomman, Thippu, Marudhu, Thuntha-ji Wag, Khan-i-kha jahn, Krishnappa nayak, Viruppatchi Gopal Nayak, Vellore Rebellions (1806), Hazruth Mughal, Lakshmi Bhai, Thanthia Thope, Ashi Mulla, Mabblah Peasants (1871-1921), VOC< S. Siva, Bagath, Karthar singh, Utham singh, Rajaguru, Sugdev, Thalvar rebellions, Kakkorians, ... lot of unnameed persons.
aasath from Alfred Park
BNI,
Both the answers are wrong...
The society Creates it's own Leader.... You believe the opposite.... Which is not true.
#2)
Democracy is the Totalitarian rule by majority on Minority...
It is not the one you said...
And if that is the case(My definition) our present country is democratic?
Or the so called communists states are democratic...
First, before criticise those communist states try to read a lot about them....
Don't fall brey to biased views from the ruling class Media...
Asuran
//அப்போ ம்க்கள் தங்களோட ஒவ்வொரு பிரச்சனைக்கும் ஒரு BNI உருவாக காத்திருக்க வேண்டும் என்கிறீர்களா//
அசுரன் அய்யா,,
அப்படி கோவமா சொல்லாதீங்க..
மக்கள் பிரச்சனைகள் தீர உங்களையும், நம்ம இளைய தளபதி ராஜ் வனஜ் அய்யாவையும் தான் மலை போல நம்பிக்கொண்டுள்ளனர்.
நம்ம கட்சி ஒன்று தான் நாட்டுக்கு நல்ல ஆட்சியை தரும்னு நான் உறுதியா நம்புகிறேன் அய்யா.
பாலா
//Don't fall brey to biased views from the ruling class Media//
Dear BNI,
Yes, please fall prey, only to my party's views.For your information, my party is called "Puratsikara Katchi" and is headed by none other than Mr Asuran.
//Democracy is the Totalitarian rule by majority on Minority...//
Thats true, whereas communism is the democratic rule imposed on the majority by the minority .
We are proud to say that we are the only true communists in India.
bala
//
தாராளமயம் ஒரு சாபக்கேடா?
//
இல்லை.
ஆனால், இந்தியாவின் சாபக்கேடு தான் என்ன ?
கம்யூனிசம், சோஷியலிசம், அதன் வெவ்வேறு வடிவங்களிலும் வண்ணங்களிலும் திரியும் நேரு காலத்து "செக்குலர்" மடையர்கள்.
ஆசாத், வருகைக்கு நன்றி!
//5. Kuppai Kottuvathu, Veetirkku arugil podum roadugalai sariyaga poda vaipathu eanpathellam oru samuga unarvu illatha individualism thanae!.//
சுகாதாரம் பேணுதலும், அத்யாவசிய வசதிகள் கோருவது ஏன் சுயநலத் தேவை என்கிறீர்கள் என்பது புரியவில்லை.
பத்தில், ஐந்து இருப்பவன், ஆறாவது தேவை என்பான்.
பத்தில் ஒன்று இருப்பவன், இரண்டாவதை கேட்பான்.
என் சுற்றத்தில், ஐந்து இருக்கிறது, மீதி ஐந்தை தேடித்தான் என் எழுத்து தொடங்கியது.
6. We have a history to revolt. Kattabomman, Thippu, Marudhu, Thuntha-ji Wag, Khan-i-kha jahn, Krishnappa nayak, Viruppatchi Gopal Nayak, Vellore Rebellions (1806), Hazruth Mughal, Lakshmi Bhai, Thanthia Thope, Ashi Mulla, Mabblah Peasants (1871-1921), VOC< S. Siva, Bagath, Karthar singh, Utham singh, Rajaguru, Sugdev, Thalvar rebellions, Kakkorians, ... lot of unnameed persons.
//
மேலே கூறிய (எனக்குத் தெரிந்த) பேர்கள் எல்லாம் வெள்ளைக்காரனை எதிர்த்தவர்கள்.
வெள்ளைக்காரனை எதிர்க்க வரும் துணிவும் ரோஷமும், சொந்த ஊர்காரனை எதிர்ப்பதில் இருக்காது என்று நினைக்கிறேன்.
இங்கே நடப்பது, நம் மக்களே நம் மக்களை தாழ்த்துவதும், சூழ்சியில் தள்ளுவதும் ஆகும்.
உங்கள் கன்னத்தில் அடிப்பவன் உங்கள் கூட்டத்தில் ஒருவனாக இருந்தால் கோபம் வரும். ஆனால் இன்னொரு கூட்டத்தை சேர்ந்தவன் அடித்தால் கோபம் பன் மடங்காக வரும் என்பது என் கருத்து.
அசுரன்,
//Both the answers are wrong...
//
நீங்கள் இதை சொல்வீர்கள் என்று எதிர்பார்த்ததுதான் :)
so, in your view, communism வேண்டும். ஆனால், தலைவனை தெரிவு செய்வதில் democracy இருக்கக்கூடாது என்கிறீர்களா?
democracy இல்லாமல் வேறு எந்த மாதிரி ஆள்பவர்களை முடிவு செய்ய வேண்டும்? dictatorship அல்லாத வழி வேறு என்ன?
பாலா, வாங்க வாங்க
//Yes, please fall prey, only to my party's views.For your information, my party is called "Puratsikara Katchi" and is headed by none other than Mr Asuran.//
என்ன உள்குத்தா? அசுரனும் ராஜவனஜும் ஒரு நல்ல agenda வோடுதான் எழுதறாங்க. சில பல முரண்பாடுகள் இருக்கு அவங்க எழுத்துல.
I think, most of us want the same ending, but out paths and thoughts are being different :)
வாழ்க்கை ஒரு சினிமா, வருக.
//ஆனால், இந்தியாவின் சாபக்கேடு தான் என்ன ?
கம்யூனிசம், சோஷியலிசம், அதன் வெவ்வேறு வடிவங்களிலும் வண்ணங்களிலும் திரியும் நேரு காலத்து "செக்குலர்" மடையர்கள்.
//
சரியான பதில். We need to cleanse our leaders and systems.
பொதுநலம் மட்டுமே agenda என வைத்திருக்கும் கட்சிகளும் தலைவர்களும் வேண்டும்.
BNI,
//so, in your view, communism வேண்டும். ஆனால், தலைவனை தெரிவு செய்வதில் democracy இருக்கக்கூடாது என்கிறீர்களா?
democracy இல்லாமல் வேறு எந்த மாதிரி ஆள்பவர்களை முடிவு செய்ய வேண்டும்? dictatorship அல்லாத வழி வேறு என்ன?//
முதலில் ஒரு அரசு யாருக்கு ஜனநாயகமாக இருக்கிறது யாருக்கு சர்வாதிகாரமாக இருக்கிறது என்று கவனித்துப் பாருங்கள். ஒரு கம்யூனிஸ்டு அரசு பெரும்பான்மையான உழைக்கும் மக்களுக்கு ஜனநாயகமாகவும் அதுகாறும் சுரண்டி வந்த சிறுபான்மையானோருக்கு சர்வாதிகாரமாகத்தான் இருக்கும்.
நிற்க.
சமூகத்தில் உருவாகும் அழுத்தம் தான் ஒரு தலைவனை முடிவு செய்கிறது. நாய்க்குப் பிறந்தது நாய்க்குட்டி என்பது போல் தலைவனுக்குப் பிறந்தவன் அடுத்த தலைவன் என்பதெல்லாம் இந்தியா போன்ற போலி ஜனநாயகம் கொண்ட நாடுகளில் தான் உருவாகும்.
கலாம் மேலான உங்கள் பாசத்தை புரிந்து கொள்கிறேன். மீடியாக்களால் பலமாக பாதிக்கப் பட்டுள்ளீர்கள்.. அவருடைய பார்வை பரந்துபட்டது அல்ல. வெறும் கனவுகள் ஒரு நாட்டை முன்னேற்றி விடாது. Ignited minds ஐ அவர் எந்த வர்க்கத்துக் குழந்தைகளிடம் கான்கிறார் என்று கவனமாகப் பாருங்கள். அவர் எந்தவிதமான பள்ளிகளுக்கு பெரும்பாலும் விசிட் அடிக்கிறார் என்று கவனியுங்கள். உங்களுக்கே புரியும்.
நன்றி
ராஜாவனஜ்
rajavanaj@gmail.com
//நீங்கள் இதை சொல்வீர்கள் என்று எதிர்பார்த்ததுதான் :)
so, in your view, communism வேண்டும். ஆனால், தலைவனை தெரிவு செய்வதில் democracy இருக்கக்கூடாது என்கிறீர்களா?
democracy இல்லாமல் வேறு எந்த மாதிரி ஆள்பவர்களை முடிவு செய்ய வேண்டும்? dictatorship அல்லாத வழி வேறு என்ன?
///
ஹா.... ஹா....
நான் முன்பே குறிப்பிட்டதுதான் கம்யுனிச நாடுகளின் ஜனநாயக மரபுகள் குறித்து சரியான புரிதலின்றிதான் பெரும்பாலனரவர்க்ள் விமர்சிக்கீறார்கள். மாறாக ஏகாதிபத்தியத்தைப் பற்றி தெளிவான புரிதலுடந்தான் நாங்கள் பேசுகிறோம்.
யார் சொன்னது கம்யுனிசத்தில் democracy கிடையாது என்று...... இது இந்த பதிவிற்க்கு சம்பந்தமில்ல விசயம் என்பதால் இத்துடன் விட்டு விடுவோம். இது குறித்து ஏற்கனவே ஒரு பதிவு முன்பொருமுறை இட்டிருந்தேன். அதில் விவாதத்தை தொடரலாம விருப்பட்டால்.
http://poar-parai.blogspot.com/2006/07/blog-post_115375045154005106.html
கம்யுனிஸ்டுகள் பாட்டாளீ வர்க்க சர்வாதிகாரம் என்று சொலவது அவர்களின் நேரமையைக் காட்டுகிறது. ஏனெனில் முதலாளிகள் முதலாளி வர்க்க சர்வாதிகாரம் என்று சொல்வதில்லை, ஏகாதிபத்தியவாதிகள் தரகு வர்க்க/நிலபிரபுத்துவ சர்வாதிகாரம் என்று சொலவதில்லை. ஆயினும் நடைமுறையில் அது அவ்வாறுதான் உள்ளதைத்தான் நாங்கள் வளைத்து வளைத்து எழுதி அம்பலப்படுத்துகிறோம்... நீங்களோ ஐந்து வருடத்துக்கு ஒருமுறை நடக்கும் ஒரு பொறுக்கிகளின் விழாவில் இந்த அனைத்து கேவலஙகளையும் மறந்து விடச் சொல்லி புனித வட்டம் கட்ட முயல்கிறீர்கள்.
ஜனநாயகம் என்பது என்னவென்றூ வேறு சில இடங்களில் கூறியுள்ளேன்.
ஜனநாயகம் என்பது பெரும்பான்மையின் சர்வாதிகாரம்தான்.... இத்ற்க்கு எத்தனை மிளிரும் முகமூடி போட்டாலும் உள்ளடக்கம் இதுதான்... இதை இங்கு இத்துடன் நிறுத்திக் கொண்டு இந்த பதிவின் முக்கிய தலைப்புக்கு செல்வோம்
இந்தியா மறுகாலனியாகிறதா இல்லையா?....
***********
//பொதுநலம் மட்டுமே agenda என வைத்திருக்கும் கட்சிகளும் தலைவர்களும் வேண்டும்///
பொது நலம் மட்டுமே அஜென்டா என்றால் யார் இந்த பொது என்ற கேள்வி வருகிறது... இதற்க்கும் உறுதியாக BNIயிட்ம் தெளிவான பதில் இருக்க வாய்ப்பில்லை..... இந்த சமூகம் வர்க்கஙகளாக பிளவுண்டு உள்ளது இதை எந்த முகமூடி கொண்டும் மூடி மறைக்க இயலாது....
அசுரன்
ராஜவனஜ்,
எல்லோருக்கும் நல்லவனாக இருக்கும் அரசு நமக்கு வேண்டும். சிறுபான்மையினரை மட்டும் தூக்கி, (உழைத்து) கொழுத்தவனை தாக்கும் அரசு வேண்டாம். நடுநிலையானவர்கள் தேவை.
//கலாம் மேலான உங்கள் பாசத்தை புரிந்து கொள்கிறேன். மீடியாக்களால் பலமாக பாதிக்கப் பட்டுள்ளீர்கள்.. அவருடைய பார்வை பரந்துபட்டது அல்ல. வெறும் கனவுகள் ஒரு நாட்டை முன்னேற்றி விடாது. Ignited minds ஐ அவர் எந்த வர்க்கத்துக் குழந்தைகளிடம் கான்கிறார் என்று கவனமாகப் பாருங்கள். அவர் எந்தவிதமான பள்ளிகளுக்கு பெரும்பாலும் விசிட் அடிக்கிறார் என்று கவனியுங்கள். உங்களுக்கே புரியும்.
//
so, கலாம் has an agenda? What is that? whatever it is, his concern is the welfare of the society and nothing else (i think) :)
அசுரன்,
//பொது நலம் மட்டுமே அஜென்டா என்றால் யார் இந்த பொது என்ற கேள்வி வருகிறது... இதற்க்கும் உறுதியாக BNIயிட்ம் தெளிவான பதில் இருக்க வாய்ப்பில்லை..... இந்த சமூகம் வர்க்கஙகளாக பிளவுண்டு உள்ளது இதை எந்த முகமூடி கொண்டும் மூடி மறைக்க இயலாது.... //
யார் இந்த பொது? சுத்தி சுத்தி வந்து மடக்கிடறீங்க கடைசியில்.
தேர்தல் அமைப்பே தப்பு என்கிற உங்கள் நிலைப்பாடு புரிகிறது.
அரசனே அடுத்த அரசனை உருவாக்காமல், சாதாரண மக்களிலிருந்து அடுத்த தலைவனை உருவாக்கும் அருமையான முறை ஏன் உங்களுக்கு பிடிக்கவில்லை?
நம்மூர் தேர்தலில் இருக்கும் ஓட்டை உங்களை இப்படி சொல்ல வைக்கிறதா இல்லை, அதன் அடிப்படையிலேயே உங்களுக்கு உடன்பாடு இல்லையா?
காட்டுமிராண்டித் தனமா வெட்டிட்டு சாவாம அழகா வரிசையில் நின்னு தனக்கு பிடித்தவனை தேர்ந்தெடுப்பது நல்ல முறைதான்.
தேர்ந்தெடுப்பவன் வேலையை ஒழுங்கா செய்ய வைக்க வேண்டிய system தான் சரியில்லை. தேர்தல் சரிதான்.
BNI,
//எல்லோருக்கும் நல்லவனாக இருக்கும் அரசு நமக்கு வேண்டும். சிறுபான்மையினரை மட்டும் தூக்கி, (உழைத்து) கொழுத்தவனை தாக்கும் அரசு வேண்டாம். நடுநிலையானவர்கள் தேவை//
A government cannot be good to criminals, Lalu's, JJ's & corrupted officials.. It should face these kind of people Iron handedly.
//so, கலாம் has an agenda? What is that? whatever it is, his concern is the welfare of the society and nothing else (i think) :)//
offcourse kalam has an agenda.. but for whom? he is meeting children in BVB scool and other scools in that level.. Not the children who works in agri fields and in small industries. you can show one in a thousand instance where he met the students of Government high schools. Now I leave this to your thinking - " Kalam cares for whom??"
//சாதாரண மக்களிலிருந்து அடுத்த தலைவனை உருவாக்கும் அருமையான முறை ஏன் உங்களுக்கு பிடிக்கவில்லை?//
imm... better joke than kalam's one.. ;-)).. Do you beleive this government is formed by common men? no!! common men in our pseudo-democratic setup does not have a fair choise. If they had that choise.. you could not find MGR, JJ, MK, LALU... so on and so forth. The list doesn't end.
//நம்மூர் தேர்தலில் இருக்கும் ஓட்டை உங்களை இப்படி சொல்ல வைக்கிறதா இல்லை, அதன் அடிப்படையிலேயே உங்களுக்கு உடன்பாடு இல்லையா?//
Any government should represent the majority of its citizens.. Dont you read the news about Ambanis gave a "pattai namam" to BSNL & MTNL? Ofcourse with the support of MP's? I can list a lot of examples Right from Enron to Sasi's Saraya Factory. Now Tell me - Whom does this government represents?
//காட்டுமிராண்டித் தனமா வெட்டிட்டு சாவாம அழகா வரிசையில் நின்னு தனக்கு பிடித்தவனை தேர்ந்தெடுப்பது நல்ல முறைதான்//
Like scape goats??
___________________________________
Wishes,
Rajavanaj
rajavanaj@gmail.com
( Sorry for the english - I am out of station )
//A government cannot be good to criminals, Lalu's, JJ's & corrupted officials.. It should face these kind of people Iron handedly.//
You got me wrong. I didnt mean to say it should be good to corrupts. I meant to say government should be good to both majorities and minorities.
//offcourse kalam has an agenda.. but for whom? he is meeting children in BVB scool and other scools in that level.. Not the children who works in agri fields and in small industries. you can show one in a thousand instance where he met the students of Government high schools. Now I leave this to your thinking - " Kalam cares for whom??"//
No, my friend. I think you are getting it wrong. I am sure he is not filtering anyone. He has visited tons of village schools in the last few years.
You are trying to say that he only cares about the 'higher' class students? I dont think so.
//Any government should represent the majority of its citizens.. Dont you read the news about Ambanis gave a "pattai namam" to BSNL & MTNL? Ofcourse with the support of MP's? I can list a lot of examples Right from Enron to Sasi's Saraya Factory. Now Tell me - Whom does this government represents?//
again, I am not supporting our current government system. But that doesnt mean, I would like a way outside of democracy.
We should find ways to cleanse the existing system. The way it is designed is good. We need to enforce that the system is followed.
அத விட்டுட்டு தேர்தல் வேணாம், democracy வேணாம் என்பதெல்லாம் சரி அல்ல.
BNI,
Your Understanding that Communism Will not have democracy is wrong.
Your understanding of Democracy as just the form of present election is wrong.
Your understanding of Democracy itself is wrong Please read my Previous comment in this Post itself regarding this.
Will your election give the privilage to the people to recall their representatives? Will your election give the privilage to people to elect their Officers(VAO, Collector, police officers etc)?
This is available in Socialist soceity apart from whatever available in your electoral system.
//தேர்தல் அமைப்பே தப்பு என்கிற உங்கள் நிலைப்பாடு புரிகிறது. //
This also your wrong perception. I am against the present Psudo(Fake) demoicratic Parliament Electoral system wherein People are just rupper stamps. Who has no option but some bunch of 'Porikies'to elect.
I request you to read my Article and it's comments:
"Annonykku oru pathil - communisam, puratchi '
Thanks,
Asuran
BNI,
///Will your election give the privilage to the people to recall their representatives? Will your election give the privilage to people to elect their Officers(VAO, Collector, police officers etc)?
This is available in Socialist soceity apart from whatever available in your electoral system. ///
Just let me know will your system have the courage to include this basic reforms... ?
It(ur System) even reluctant to give the privilage to people to have option of not to vote(49O).
So, your unfounded criticism on Communism about it's Democratic practices become invalid....
and now you have to tell me whether your system is democratic or not?
Are sure it is democratic?
Thanks,
Asuran.
I just realised I didn't answer your last 2 questions. I am not ignoring it. I will answer in a while.
Post a Comment