Wednesday, February 14, 2007

சாகரன் - அஞ்சலி

சாகரன் கல்யாணை நேரில் கண்டதில்லை.

பதிவு எழுத ஆரம்பித்த போது இருந்த சில technical கஷ்டங்களை உடனுக்குடன் நிவர்த்தி செய்து கொடுத்தார். அந்த அளவில் மட்டுமே பரிச்சயம். கேட்க்கும் கேள்விகளுக்கு உடனுக்குடன் பதில் வரும். அவர் உலகின் வேறு மூலையில் இருந்தது இப்போழுதுதான் தெரியும்.

32 வயது இளைஞன் என்ற விஷயமும் இப்பொழுதுதான் தெரியும். மற்ற பதிவர்கள் அவர் மறைவு குறித்து வேதனைப் படுவதைப் பார்த்தால், அவர் எவ்வளவு இனியவர் என்பது நன்கு புரிகிறது.

திறமைசாலிகள் சிறு வயதில் மறைவது ஒன்றும் புதிதில்லை - விவேகானந்தன் தொட்டு, பாரதி, ராமானுஜன் என்று தொடர்ச்சியாக நடக்கும் ஒரு விடயம் தான் இது. ஏன் என்றுதான் இன்று வரை புரியவில்லை.

அவர் மனைவியும், குழந்தையும், பெற்றோரும், நண்பர்களும், இன்று அனுபவிக்கும் கொடுமை, அப்பப்பா, நினைத்தால் நெஞ்சு நின்று விடும் அளவிர்க்கு கனமாகிறது. எவ்வளவு கொடுமையான ஒரு இழப்பு இது!

இறைவா, இதை தாங்கும் வல்லமையைக் கொடு அவர்களுக்கு.

மனிதர்களை மனிதர்களாய் பாவித்து, ஜாதி மதம் பாராமல் பழகி இருக்கிறார் மனிதர்.
பணம் ஈட்டுவதை முதல் குறிக்கோளாக்காமல், நட்பு, சேவை என்ற ரீதியில் வாழ்ந்திருக்கிறார்.

தமிழ் வளர்க்கும் ஆர்வத்தை, தன் அறிவை உபயோகித்து திறம் பட பல முனைகளில் முடுக்கி விட்டு, ஆலமரம் போல் நமக்கெல்லாம் விட்டுச் சென்றுள்ளார்.

பரஞ்சோதியின் இரங்கல்பா படியுங்கள். மற்ற பதிவர்களின் பதிவுகளையும் படியுங்கள்.

சாகரன் கல்யாணின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டிக் கொள்ளுங்கள்.
கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள்... ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்துங்கள்.

இந்த வாரத்திலேனும், அமைதி காத்து, ஒருவரை ஒருவர் சாடாமல், இணையத்தில் சுத்தம் பேணுங்கள் நண்பர்களே! அவரை பற்றித் தெரிந்தவர்கள் பதிவுகள் எழுதினால் உங்களுக்கும் மற்றவர்களுக்கும் ஆறுதல் கிடைக்கும்.

When You Go Home, Tell Them Of Us And Say,
For Their Tomorrow, We Gave Our Today


நன்றி.


பி.கு: அவர் குடும்பத்தாருக்கு இந்த சமயத்தில் உடன் இருந்து மன பலம் கொடுப்பதே முக்கியம். உடன் இருக்கும் நண்பர்கள் அதை செய்வார்கள். வரும் காலத்தில், அவர் குடும்பத்திர்க்கு தேவை என்ன என்பதை உடன் இருக்கும் நண்பர்கள் அறிந்து தெரிவித்தால், நம்மில் பலர் இணைந்து தேவையானதை செய்யக் காத்திருக்கிறோம்.
அவர் குடும்பத்தை மறந்து விடக் கூடாது நண்பர்களே!!

2 comments:

said...

32 இல்லையாங்க.. 29 தானாம்!

said...

அப்படியா? July 22nd 1975 என்பதுதான் அவர் பிறந்த நாள் என்று இங்கு குறிப்பிருக்கே http://djanakiraman.googlepages.com