Monday, February 05, 2007

அனானிமஸாக வரும் அழுக்கு மடல்களும், சில STAR பதிவர்களும்...

நம் இணையத்தில் நடக்கும் 'அசிங்க' தாக்குதல்கள் பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கும்.

ஒருவர் பதிவின் கருத்துக்கு எதிர் கருத்து உள்ளவர்கள், அந்த எதிர் கருத்தை கண்ணியமான முறையில் பின்னூட்டமாகவோ/பதிவாகவோ எழுத வேண்டும்.

இப்படிச் செய்யாமல், கெட்ட கெட்ட வார்த்தைகளில், அனானிமஸாக பின்னூட்டம் இடுவதும், மடல் அனுப்புவதும், இந்த எதிர் கருத்து ஆசாமிகளால் செய்யப்படுகிறது.

வக்கிர மனம் படைத்த சிலர், அனானி முகமூடி போட்டுச் செய்யும் இந்த செயல் கண்டனத்துக்குரியது. எதைச் சாதிக்க இப்படி செய்கிறீர்கள்?
இப்படி எல்லாம் ஒருவருக்கு எழுதி அனுப்ப எப்படி மனம் வருகிறது?

கண்ணியம் இல்லாத இந்த அசிங்க psycho வாழ்க்கைக்கு காரணம் என்ன? உங்களின் வளர்ப்பு? தாய்/தந்தை/பாட்டி/தாத்தா வழி வந்த 'gene'? நட்புச் சூழல்?
எதய்யா உன்னை இப்படி செய்யத் தூண்டுவது.

நம் நாடு அழகான வளமையும், கலாச்சாரமும் மிக்க நாடு. இருக்கும் சில கேடுகளும் குறைந்து ஒளிமயமான திக்கை நோக்கி நடை போட்டுக் கொண்டிருக்கிறது.
உன்னால் ஒன்றுக்கும் உதவ முடியவில்லையா? பரவாயில்லை. முன்னேறுபவர்களையும், முன்னேற்றுபவர்களையும் உபத்திரவம் செய்யாமல் தூரக் கிட!!!

மா.சிவகுமார் ஒரு பெண் பதிவருக்கு வந்த அசிங்க மடல் பற்றி பதிவெழுதியிருந்தார். இப்படி எல்லாம் ஒரு பெண்ணுக்கு மடல் அனுப்பிய அனானி, உண்மையில், மன நலம் பாதிக்கப் பட்டவனாகத் தான் இருக்க முடியும். இவ்வளவு வக்கிர புத்தி உடையவன், வாழ்க்கையில் என்ன சாதிக்கப் போகிறானோ? அவன் இல்லத்தார், உற்றார், உறவினர் அனைவருக்கும் இவனால் என்னென்ன கேடுகள் வருமோ.

அனானி நண்பரே - வேண்டாமய்யா இந்த வேலையெல்லாம். மாட்டிக் கொண்டால் வாழ்க்கையே திசை மாறிப் போகும். படித்தது வீணாகும். நண்பர், தாய், தந்தையர் முகத்தையெல்லாம் பார்க்கவே கூசும். யோசித்து செயல் படு!

இந்த மாதிரி தாக்குதலை சந்திக்கும் நண்பர்கள், இதை துச்சமாக மதித்து உதாசீனப் படுத்தலாம்.
உதாசீனப் படுத்த விரும்பாதவர்கள், இதற்காக நியமிக்கப்பட்டுள்ள காவல் நிலையங்களில் தைரியமாக புகார் கொடுக்கலாம் (அமெரிக்கா, சிங்கப்பூர், இந்தியா வில் இதற்கு வழி வகைகள் உண்டு). இன்று புகார் கொடுத்தால் நாளை விடை கிடைக்காது. பொறுத்திருந்து, பொறி வைத்து மெதுவாக செயல்படுவார்கள்.

இன்னொரு விஷயம், இந்த மாதிரி controversy topics பற்றி யாராவது பதிவு எழுதினால், நம் வலையுலகில் இருக்கும் சீனியர் பதிவர்கள் பல பேர் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்வதில்லை. ஏன் இப்படி ஒதுங்கி இருக்கிறீர்கள்?

நமக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகள் மறந்து, இந்த வக்கிர தாக்குதலுக்கு எதிராக அனைவரும் குரல் கொடுக்க வேண்டும்! எல்லோரும் சொன்னாலாவது, வக்கிரங்கள் குறையுமா என்று பார்க்கலாம்.

சிவகுமாரின் அந்த பதிவு இங்கே.
உங்கள் SUPPORT காட்டுங்கள் பார்ப்போம்.

நன்றி நண்பர்களே!

அனானி,
சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து

58 comments:

said...

அங்கேயே சொல்லிவிட்டேன்.
இருந்தாலும்..நீங்கள் சொன்னமாதிரி மாட்டினா..உன் வாழ்கையே ????யாகிவிடும்.
கொடுமையடா சாமி.
எனக்கென்னவே இதை எக்ஸ்போஸ் பண்ணவே கூடாது என்று தோனுகிறது.
ஒருவரின் எழுத்தை புறந்தள்ளுதல் இதைப்போல் பல மடங்கு வலி தரக்கூடியது.
எழுத்து என்பது தாய்,தந்தை மற்றும் ஆசானிடம் காட்டக்கூடிய மாதிரி இருக்கவேண்டும்.
மா.சிவக்குமார் சொன்ன மாதிரி திருத்தலாம் தான்!! கஷ்டமான காரியம்.
முகத்தை காட்டட்டும் முதலில்.

said...

//இன்னொரு விஷயம், இந்த மாதிரி controversy topics பற்றி யாராவது பதிவு எழுதினால், நம் வலையுலகில் இருக்கும் சீனியர் பதிவர்கள் பல பேர் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்வதில்லை. ஏன் இப்படி ஒதுங்கி இருக்கிறீர்கள்? //

நண்பரே!

http://madippakkam.blogspot.com/2007/02/blog-post_05.html

இதைப் பற்றி உங்கள் கருத்தென்ன? :-))))

said...

நல்ல பதிவுதான். ஆனால் என்னை (அ எல்லோரும் எதிரி போல் பார்க்கிறார்கள் என்று கூறும் ஒரு பதிவரும் அனானியாக அலைகிறாராமே இது பற்றி உங்கள் கருத்தென்ன?

said...

வடுவூர் குமார்,

//எனக்கென்னவே இதை எக்ஸ்போஸ் பண்ணவே கூடாது என்று தோனுகிறது.
ஒருவரின் எழுத்தை புறந்தள்ளுதல் இதைப்போல் பல மடங்கு வலி தரக்கூடியது.
//

புறந்தள்ளுகிறோம் என்று தெரியாதே அவனுக்கு. படித்து பயந்து ஒடுங்கியிருப்போம் என்றல்லவா நினைப்பான்.

கேடு கெட்டவர்கள் திருந்துவார்கள் என்று நம்புவோம்.

said...

லக்கி, வாங்க வாங்க. என்ன ரொம்ப நாளா காணோம்?

//நண்பரே!

http://madippakkam.blogspot.com/2007/02/blog-post_05.html

இதைப் பற்றி உங்கள் கருத்தென்ன? :-)))) //

உங்க பதிவையும் பார்த்தேன். அங்கு இட்ட பின்னூட்டம் பார்த்து பதில் அனுப்பவும்.

நன்றி!

said...

சென்ஷி,

//நல்ல பதிவுதான். ஆனால் என்னை (அ எல்லோரும் எதிரி போல் பார்க்கிறார்கள் என்று கூறும் ஒரு பதிவரும் அனானியாக அலைகிறாராமே இது பற்றி உங்கள் கருத்தென்ன?//

யாரைப்பற்றி சொல்லுகிறீர்கள்?
லக்கிலுக் பதிந்திருப்பதைப் பற்றியா?

அதுவாக இருந்தால், இதுதான் என் நிலை

'இவர் அவர்தான் என்று அவர் ஒத்துக் கொண்டால் நல்லது.
அனானியாக அவர் பின்னூட்டங்கள் இட்டதில், 'அசிங்க' பின்னூட்டம் எங்காவது உள்ளதா. இருந்தால் URL கொடுங்கள். அவரை பகிரங்க மன்னிப்பு கேட்க்க சொல்லலாம்.

'அசிங்கமாய்' ஒன்றும் இல்லாத பட்சத்தில், பெரிய தவறொன்றும் இதில் இல்லை. '

said...

//'அசிங்கமாய்' ஒன்றும் இல்லாத பட்சத்தில், பெரிய தவறொன்றும் இதில் இல்லை. '//

நண்பரே!

உங்கள் சப்பைக்கட்டு நன்றாக இருக்கிறது. இவ்வளவு கோல்மால் செய்தவர் 'அசிங்கமாய்' அனானியாய் பின்னூட்டம் இட்டிருக்க மாட்டார் என்று உங்களால் உறுதியாக சொல்ல முடியுமா?

said...

டோண்டு பலபேரில் எழுதலாம். ஆனால் மத்தவன் எழுதக் கூடாதா? நல்லா இருக்கு பாப்பானின் நியாயம்.

said...

BNI,

மா.சிவகுமாரின் பதிவில் இட்ட பின்னூட்டத்தை இங்கும் இடுகிறேன்.

எனக்கு முற்றிலும் புரியாதது இவர்களது செய்கை. இப்படியான மடல்கள் ஏராளம் எனக்கு வந்திருக்கிறது. இவர்கள் பின்பற்றும் ஐடியாலஜியால் வரும் வினை இது என்பது எனது கருத்து.


பெரும்பாலும் நான் ஈவெரா, கருணாநிதி பற்றி விமர்சனமாக எழுதும் போதும், வேதம், இந்துமதம் என்று எழுதும் போதும் இந்தமாதிரியான கீழ்த்தரமாக தமிழ்த்தாயே வெட்கித் தலைகுனியும் படியான அழுகல் தமிழில் மடல்கள் எனக்கு வருவது வாடிக்கை.

இவர்களது மித மிஞ்சிய அரசியல் சார்புநிலை என நான் கருதுகிறேன்.

என் கண்டனத்தைப் பதிவு செய்கிறேன் இங்கு.

said...

லக்கி,

//நண்பரே!

உங்கள் சப்பைக்கட்டு நன்றாக இருக்கிறது. இவ்வளவு கோல்மால் செய்தவர் 'அசிங்கமாய்' அனானியாய் பின்னூட்டம் இட்டிருக்க மாட்டார் என்று உங்களால் உறுதியாக சொல்ல முடியுமா? //


இதில் எங்கு சப்பைக்கட்டு இருக்கிறது?
நானும், நீங்களும் கூட சொந்தப் பெயரில் எழுதவில்லையே.
nickname வைத்து எழுதுபவர்கள் அனானியாக போய் அசிங்க பின்னூட்டம் இடுவார்கள் என்று எப்படி ஞாயப்படுத்துகிறீர்கள்?

அவர் அனானியாக அப்படி செய்தால், நான் மேலே சொன்ன 'அசிங்க' அனானிக்கு சொன்னதெல்லாம் அவருக்கும் பொருந்தும்! சரிதானே?

said...

கொசுபுடுங்கி,

//டோண்டு பலபேரில் எழுதலாம். ஆனால் மத்தவன் எழுதக் கூடாதா? நல்லா இருக்கு பாப்பானின் நியாயம்.//

இதில் எங்கிருந்து பாப்பானின் நியாயம் வந்தது?
பல பேரில் யார் வேண்டுமானாலும் எழுதலாம். ஓசியில் தான் கூகிளில் கணக்கில்லாமல் பதிவு எழுத வழியிருக்கிறதே.

எவ்வளவு பெயரில் வேண்டுமானாலும் எழுதட்டும், அசிங்கமாய் எழுதாதே!!!! சரிதானே?

said...

ஹரிஹரன்,

உங்கள் கண்டனத்தை பதிவு செய்ததர்க்கு நன்றி.

(லக்கியும், கொசுபுடுங்கியும் கண்டனம் சொல்லவில்லை - சொல்லுங்க ப்ளீஸ்)

//இவர்களது மித மிஞ்சிய அரசியல் சார்புநிலை என நான் கருதுகிறேன்.
என் கண்டனத்தைப் பதிவு செய்கிறேன் இங்கு//

அரசியல் சார்பினால் எல்லாம் இப்படி எழுத மனம் வராது. basic brought-up problem இது!

said...

நானும் கண்டம் தெரிவிக்கிறேன் பேடு நியூஸ்.

பாப்பான் நியாயம் எங்கிருந்து வந்தது என்று கேட்டீர்கள்.

முரளி மனோஹர் என்ற பெயரில் டோண்டு அசிங்கமாக ஆபாசமாக இஸ்லாமியரையும் பெரியாரையும் திட்டி எழுதி இருந்ததை நீங்கள் பார்க்கவில்லையா நண்பரே? அல்லது பார்க்காததுபோல நடிப்பா?

said...

//நானும் கண்டம் தெரிவிக்கிறேன் பேடு நியூஸ்.

//

நன்றி கொசுபுடுங்கி!


ஆபாசமாக, இஸ்லாமையும், பெரியாரையும் தாக்கி எழுதுதல் தவறு தான். கண்டனத்துக்குரியது.
என் கண்ணில் பட்டிருந்தால், அங்கேயே என் எதிர்ப்பை சொல்லி வந்திருக்கிறேன் நண்பரே.

அந்த மாதிரி ஆபாச பின்னூட்டத்தின் URL கொடுங்களேன்? நன்றி!

said...

BNI,

இந்த சீர்கேட்டை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்து கண்டனம் செய்வதற்கு மிக்க நன்றி.

பல வேலைகள் உள்ள, காலத்தின் மதிப்பறிந்த, "Time is Money" என்பதை அறிந்து கொண்ட இந்தியக் குடிமகன் நான். கிடைக்கும் கொஞ்ச நேரத்தில் சில விஷயங்களைப் பதிவு செய்து வருகிறேன்.

என்னுடைய ஒவ்வொரு பதிவுக்குப் பின்னரும் இத்தகைய கீழ்த்தரமான அசிங்கப் பின்னூட்டங்கள் வந்துள்ளன. இது நாள் வரை இவற்றைப் புறந்தள்ளி மட்டுமே வந்துள்ளேன். இவற்றை செய்பவர்கள் வேறு வேலை வெட்டியில்லாத சைக்கோ ஆசாமிகள் என்பதில் சந்தேகமே இல்லை.

பதிவுலகில் உலவும் இத்தகைய நச்சுப் பாம்புகளையும், வைரஸ்களையும் உங்களுடன் இணைந்து வன்மையாகக் கண்டிக்கிறேன்.

said...

ஜடாயு, கண்டனத்திர்கு நன்றி!

'Time is Money' - மிகச் சரி!
கிடைக்கும் நேரத்தில் பல்சுவையாகவும், நாட்டுக்குத் தேவயானதாகவும் பலர் எழுதுகிறார்கள்.

அவர்களை ஊக்கப்படுத்தவில்லை என்றால் கூட பரவாயில்லை. இந்த மாதிரி வக்கிர மடல்கள் அனுப்பாமல் இருக்கலாம்.
குறிப்பாக பெண் பதிவர்கள் என்றும் பாராமல் ஆபாசமாக இப்படி செய்வது மட்டமான செயல்.
பதியும் பதிவர் பள்ளிக்குச் செல்லும் சிறுவராயிருந்தால் இன்னும் கொடுமை. சிந்திக்க வேண்டும் இந்த ஜந்துக்கள்!

பார்ப்போம் எங்கே போய் முடியுமென்று!

Anonymous said...

இதில் மிகக் கொடுமை என்னவென்றால் தமிழ்மணத்திற்கு புதிதாக வருபவர்களுக்கு வரும் இத்தகைய தாக்குதல். தலையும் புரியாமல் வாலும் புரியாமல் "என்ன கருமம்டா சாமி"னு தமிழ்மணத்திற்கே முழுக்கு போட்டுவிடுகிறார்கள்.

இதற்கு ஒரு வழி இருக்கிறது. ஒரு ப்ளாக்கை திரட்டியில் சேர்க்கும் போது என்னென்ன தற்காப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதை முகப்பிலெயே தமிழ்மணம் stickyயாக வைக்க வேண்டும். மேலும் அதை முதலில் சேர்பவர்களுக்கு மின் அஞ்சலும் செய்யவேண்டும்.

எனக்கு தெரிந்த தற்காப்புகள்.
- உண்மையான பெயரில் எழுதாதீர்கள்.
- e-mail idயை ப்ளாகரில் மறைத்து வையுங்கள்.
- தங்கள் ஊர், உற்றார் உறவினர், மனைவி, மக்கள் பெயர்கள் மற்றும் விபரங்களை தெரிவிக்காதீர்கள்.
- தங்கள் புகைப்படத்தைப் போடதீர்கள்.
- கமெண்ட் மாடரேஷன் கட்டாயம் செய்யவும்.
- இணைய உலகம் நல்ல மனம் உடையது என்ற மனப்பான்மையை தூக்கியெறியுங்கள். இன்றைக்கு நல்லவர் போல் எழுதும் ஒருவர் போலியான பெயரில் அவதூறாக எழுதுபவராகக் கூட இருக்கலாம்.

முன்பு ஒரு முறை இவர் தான் போலி என்று ஒருவரை கைகாட்டி தாக்கினர் பலர். ஆனால் அவரோ தன்னுடைய ப்ளாகில் தான் அப்படி எழுதியது உண்மை தான் எனவும். ஆனால் அதே முறையில் புனித பிம்பமாக வலம் வரும் பலர் அவரைப் போல தரக்குறைவாக போலியாக எழுதுகின்றனர் என்றும் குறிப்பிட்டார்.

இங்கு பல புலிகள் பசுத்தோல் போர்த்தி உள்ளன.

said...

//'அசிங்கமாய்' ஒன்றும் இல்லாத பட்சத்தில், பெரிய தவறொன்றும் இதில் இல்லை. '//

என் கருத்து உங்களுக்கு சரியாய் புரியவில்லை போல.
நன்று. நான் அவர் ஆபாச பின்னூட்டம் இட்டாரா என்று கேட்கிறீர்கள். நான் "நாளை" அவர் அவ்வாறு மாற மாட்டார் என்பதற்கு என்ன நிச்சயம் என்று கேட்கிறேன்.
தவறு செய்தவர்கள் சரியாய் செய்கிறார்களா, சின்ன தவறுதானா என்பதில் என்ன சமரசம் வேண்டியுள்ளது..

சென்ஷி

said...

சென்ஷி,

//தவறு செய்தவர்கள் சரியாய் செய்கிறார்களா, சின்ன தவறுதானா என்பதில் என்ன சமரசம் வேண்டியுள்ளது..
//

nickname வைத்து எழுதுவது தவறொன்றுமில்லை.
நானும் கூட என் சொந்தப் பெயரில் எழுதவில்லை, பல காரணத்தினால்.

முகமூடி போட்டு எழுதுவதை, தவறாய் பயன் படுத்தினால் கண்டிப்பாய் தவறு தான்.

said...

இரட்டை வேடமிடுபவர்கள் யாராக இருந்தாலும் கண்டிப்பா காண்டிக்கனும் என்பது என் கருத்து!

இதில் ஆரிய திராவிட வித்தியாசம் எதுக்கு! உள்ளொன்று புறமொன்று பேசும் மனிதர்கள் தான் இங்கே அதிகம்! ஆனாலும் திரு டோண்டுவும் அந்த கோஷ்டியிலிருக்காருன்னு நினைக்கும் போது வயசுக்கு ஏத்த வேலையில்லைன்னு தான் சொல்லனும்.

அவரவராய் திருந்தாவிட்டால் ஒன்று செய்ய முடியாதுங்க பிஎன்ஐ!

சிலரது விசயம் வந்து விட்டது! இன்னும் பலர் எனக்கு தெரிந்தும் இதை செய்கிறார்கள்!! அவர்களும் இது போல பழம் பெரும் பதிவர்களே!!

ஆனாலும் கேவலமா எழுதும் சைக்கோ பதிவர்கள், பெண்களை கொச்சை படுத்தும் கேவலமானவர்களை அப்படியே ஒழிந்துபோன்னு விட்டுவிடுவது மேல்... இதற்காக நம்ம என்ன செய்ய முடியும்ன்னு சொல்லுங்க நானும் ரெடி!

said...

Some people donot undersntad the difference between "difrence of opinion while having an argument" and "to get into a fight as in brawl"..
Its is infact possible to have a sane-sensible exchange of differing-oinions instead of getting involved in "name calling" and hurling abuses.

This will only lead to deaviate away from the topic of discussion ans result in ego-boosting and ego bashing.

Sorry for writing in english..
ரொம்ப உணார்ச்சிவசபட்டுட்டேன்..

said...

We The People,

//இரட்டை வேடமிடுபவர்கள் யாராக இருந்தாலும் கண்டிப்பா காண்டிக்கனும் என்பது என் கருத்து!
//

NickName வைத்துக்கொண்டு எழுதுபவர்களில் பலரும் இருவேஷம் இடுபவர்கள் தான். நான் உள்பட.
இருவேஷம் இட்டு ஒவ்வொரு வேஷத்துக்கும் ஒரு கருத்து சொன்னால், கேவலம் தான்.

அசிங்கமாய் எழுத இந்த மற்ற வேஷங்களைப் பயன் படுத்தினால், கண்டனத்துக்கும் தண்டனைக்கும் உரியது.

டோண்டிவின் தன்னிலை விளக்கத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறேன். அவர் அசிங்க பின்னூட்டங்கள் போட்டாரா என்பது கருத்தில் கொள்ள வேண்டும்.

கேவலமாய் எழுதும் சைகோ பதிவர்களை திருத்த வேண்டும். திருந்தாதவர்களை தூர வைக்க வேண்டும்.
நமக்கெல்லாம் கிடைத்த அருமையான வாய்ப்பு, தமிழில் பதிவெழுதுவது. அதை நாசம் செய்ய முற்படும் ஒவ்வொருவனையும் தூரக் கிடாச வேண்டும்!

ஒத்துழைப்புக்கு நன்றி!

said...

Deepa,

//Its is infact possible to have a sane-sensible exchange of differing-opinions instead of getting involved in "name calling" and hurling abuses.
This will only lead to deaviate away from the topic of discussion ans result in ego-boosting and ego bashing.
//

opinion sharing is not the goal for these imbeciles.
Their notion is to showcase their inner vulgarity and attain a cruel satisfaction out of it.

We will face them and deter them from our homes.
The best thing to do is ignore them, but then, you and I don't deserve to wake up on a vulgar email, for no reasons.

பலநாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்!
தெரியாமயா சொல்லிருக்காங்க!

said...

இதுவரை வெறும் 17 பேர் மட்டுமே, சிவகுமாரின் பதிவில், தங்கள் கண்டனத்தை தெரிவித்துள்ளார்கள்.
அவரவருக்கு வரும்வரை காத்திருக்காமல் ஒரே குரலில் அனைவரும் கண்டனத்தை பதியுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

said...

///இரட்டை வேடமிடுபவர்கள் யாராக இருந்தாலும் கண்டிப்பா காண்டிக்கனும் என்பது என் கருத்து!
//

இதை நான் வழிமொழிகிறேன்.

//கேவலமாய் எழுதும் சைகோ பதிவர்களை திருத்த வேண்டும். திருந்தாதவர்களை தூர வைக்க வேண்டும்.
நமக்கெல்லாம் கிடைத்த அருமையான வாய்ப்பு, தமிழில் பதிவெழுதுவது. அதை நாசம் செய்ய முற்படும் ஒவ்வொருவனையும் தூரக் கிடாச வேண்டும்!//


இணணயத்தின் வாயிலாக உலகத்தமிழகர்கள் அனைவரும் ஒன்றுகூடி விவாதிக்கும் தளங்களில் இது போன்று அருவருக்கத்தக்க வகையில் ஆபாசமாக எழுதும் ஆசாமிகளை குறைந்தபட்சம் நாம் கண்டிக்கவாவது செய்யவேண்டும்.

//டோண்டிவின் தன்னிலை விளக்கத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறேன். அவர் அசிங்க பின்னூட்டங்கள் போட்டாரா என்பது கருத்தில் கொள்ள வேண்டும்//

அவர் அசிங்கப் பின்னூட்டங்கள் இடுபவர் இல்லை என்பது என் எண்ணம். நம்பிக்கை. அவரிடம் பிடிக்காத ஒன்று அடுத்தவர் கருத்துக்களை ஏற்றுக் கொள்ளாமல் (ஏற்றுக்கொள்ள முயலாமலும்) தன் கருத்தே சரியென அடம் பிடிப்பதுதான்.

சாதிவெறிக்கு எதிராக குரல் கொடுக்கும் அதே வேளையில் ஆபாசமாக எதிர்க்கும் முறையையும் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

Anonymous said...

//இன்னொரு விஷயம், இந்த மாதிரி controversy topics பற்றி யாராவது பதிவு எழுதினால், நம் வலையுலகில் இருக்கும் சீனியர் பதிவர்கள் பல பேர் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்வதில்லை. ஏன் இப்படி ஒதுங்கி இருக்கிறீர்கள்?//

மாற்றுக்கருத்தை சற்று தீவிரமாக ஆதாரத்துடன் எழுதினால் சில நாட்களில், போலி(யோ) அட்டாக் நடக்கும் என்கிற பயம்தான்.

இதில் என்னைபோல பலர் அனுபவப்பட்டுள்ளதால் பலர் மாற்றுக்கருத்து வைக்க பயப்படுகின்றனர். சிலர் வேறு பெயர்களில்(வெறும் பின்னூட்டதிற்காக மட்டும்) வந்து தங்கள் கருத்துக்களை சொல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால், திருட்டை ஒழிக்க முடியாது என்பது போலத்தான் இதுவும்

said...

நாமக்கல் சிபி,

//சாதிவெறிக்கு எதிராக குரல் கொடுக்கும் அதே வேளையில் ஆபாசமாக எதிர்க்கும் முறையையும் வன்மையாகக் கண்டிக்கிறேன்.//

ஒத்துழைப்பிர்க்கு நன்றி!

said...

//ஒத்துழைப்பிர்க்கு நன்றி!//
நன்றி BNS!

இது என் எண்ணம் மட்டுமல்ல! தமிழ்மணத்தில் பெரும்பான்மையான பதிவர்களின் உள்ளக் குமுறல்!

said...

//இதில் தன்னிலை விளக்கம் ஏற்கனவே கொடுத்தாகி விட்டது. யுத்த நடவடிக்கைக்காக மன்னிப்பு கேட்பதாக இல்லை. என்னை புரிந்து கொண்டவர்கள் புரிந்து கொள்வார்கள். புரியாதவர்கள் என்ன செய்தாலும் கேட்கப் போவதில்லை//

இப்போது புரிந்து கொண்டீர்காளா? நான் கூறியதை!

//அவரிடம் பிடிக்காத ஒன்று அடுத்தவர் கருத்துக்களை ஏற்றுக் கொள்ளாமல் (ஏற்றுக்கொள்ள முயலாமலும்) தன் கருத்தே சரியென அடம் பிடிப்பதுதான்.
//

Anonymous said...

Long LIVE ANONIS CLUB.

said...

நாமக்கல் சிபி,

//இப்போது புரிந்து கொண்டீர்காளா? நான் கூறியதை!//

தெளிவாகப் புரிந்தது. :)

said...

அனானியாக வந்திருக்கும் பதிவரே,

//மாற்றுக்கருத்தை சற்று தீவிரமாக ஆதாரத்துடன் எழுதினால் சில நாட்களில், போலி(யோ) அட்டாக் நடக்கும் என்கிற பயம்தான்.//

இதுக்கெல்லாம் பயந்தா எப்படிங்க. அந்த பெண் பதிவாளர் தைரியமாக தனக்கு வந்த மடலை வெளியிடவில்லையா?
அந்த தைரியம் அனைவருக்கும் வரணும்.
இந்த மறைமுக விகாரத்தையே சந்தித்து எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றால், இன்னும் நம்மூரில் நேர்முகமாக நடக்கும் பல செயல்களை எப்படி தட்டிக் கேட்ப்பது?

அச்சம் தவிர்!

said...

அனானி,

//Long LIVE ANONIS CLUB. //

why not? I dont have any problems with that as long as you post comments in a healthy way.

said...

அனேகமாக இது போன்ற ஆபாசப் பின்னூட்டங்களால் பாதிக்கப்படாத வலைப்பதிவரே இருக்க முடியாது என நினைக்கிறேன்.

சொல்ல வேண்டிய ஆலோசனைகளை எல்லாரும் சொல்லி இருக்கிறார்கள் ஏற்கெனவே!

நான் இட்ட ஒரு சில பின்னூட்டங்களை அப்படியே 'காப்பி' அடித்து அனானியாக சில பதிவுகளில் இடும் விஷமக்காரர்களை எந்த லிஸ்டில் சேர்ப்பது!?
:))

இது தற்போது எனக்கு நடந்துவரும் ஒரு நிகழ்வு!

படிப்பவர்களுக்கு நான் இட்டது போன்ற ஒரு மாயத் தோற்றத்தை இது உருவாக்குகிறது!

மிகவும் தெரிந்த ஒருவரால்தான் இவ்வாறு செய்ய முடியும் என நம்புகிறேன்.

அப்படியானால்.... இது மிகவும் ஆபத்தான போக்கு.

பதிவெழுதுவதையே கூட விட்டுவிடலாம் என பல நேரங்களில் தோன்றுகிறது!

எனது கண்டனங்களை இங்கு பதிகிறேன்.

said...

இந்த கிரிமினலகளை கண்டிப்பதில் நான் உங்களுடன் கை கோர்க்கிறேன்

said...

SK, கண்டனம் பதிந்ததர்க்கு நன்றி!

விஷமக்காரர்கள் எல்லா ஸ்தாபனங்களிலும் இருப்பார்கள். பெரிய தொல்லைகள் இல்லாத வரையில் அவர்களை உதாசீனப்படுத்திவிட்டு நம் பணி பார்க்கலாம். மன உளைச்சலும், வேண்டா வெறுப்பும் தரும்போது, கொஞ்சம் எதிர்ப்பை காட்டுதல் நலமே!

ஏசு சொன்னது போல் "தான் செய்வது தவறென்று தெரியாமல் செய்யும் இந்த நீசர்களை மன்னிப்போம்".
தவறை திருத்திக் கொள்ளவில்லை என்றால், தண்டிப்போம்!

இந்த குசும்பர்களின் போக்கைக் கண்டு துவண்டு விடாமல் தொடர்ந்து அனைவரும் பதிவுகள் எழுதுவதே சிறந்தது!

said...

நானும் என் கண்டனத்தை இங்கே பதிகின்றேன்.

said...

உங்கள் பதிவு மூலமாக, சிவகுமாரின் பதிவைப் படிக்க நேர்ந்தது, உங்களின் கண்டனக் குரலோடு கை கோர்க்க, இங்கேயும் பதிகிறேன்..

said...

ஜெய்,
அனானியா அசிங்க அசிங்கமா பின்னூட்டம் போடுவதில் நட்சத்திரங்களும் மின்னுதா? ஒரே கலக்கல் தான் போங்க. என்னத்த சொல்ல இதுங்க எல்லாம் எப்படி தான் திருந்த போகுதோ. உங்களுக்கு அப்படி யாராவது தெரிந்து இருந்தால் பொதுவில் அவர்களது முகத்திரையை கிழிக்கலாமே? அப்படியாவது ஒரு பயம் வரும் இல்லையா?

said...

கால்கரி சிவா,

உங்கள் ஒத்துழைப்புக்கு நன்றி.

said...

tulsi, உங்களுக்கும் நன்றி.

said...

நெல்லை சிவா,

நன்றி. நீங்கள் அங்கு உங்கள் கருத்தை சொன்னதையும் பார்த்தேன். நம்மில் பலர் இந்த மாதிரி விவகாரமான பதிவுகளை படிப்பதோடு நிறுத்தி விடுகிறார்கள்.
நம் எதிர்ப்பை தெரிவிப்பது நன்று.

said...

சந்தோஷ்,

//உங்களுக்கு அப்படி யாராவது தெரிந்து இருந்தால் பொதுவில் அவர்களது முகத்திரையை கிழிக்கலாமே? அப்படியாவது ஒரு பயம் வரும் இல்லையா?//

ஜெய் திரும்ப வந்து இங்க படிப்பாரான்னு தெரியல. அவர் பதிவிலயும் இதைப் பத்தி கேளுங்க. நட்சத்திர வாரத்தில் சுடச் சுட இன்னும் ஏதாவது முகத்திரைகள் கிழிந்தாலும் கிழியலாம்.

said...

இந்த மனநோயாளிகள் இனியாவது; திருந்துவது நன்று!
இந்த மெத்தப் படித்தவர்கள்;" நன்மை செய்யப் பிறந்த நீ;நன்மை செய்யாவிடினும் தீமையாவது செய்யாதிரு!" படிக்கவில்லையா?
யோகன் பாரிஸ்

said...

johan-paris,

நல்ல புத்திமதி. திருந்துவாரா பார்ப்போம்!

said...

"அவர் அசிங்கப் பின்னூட்டங்கள் இடுபவர் இல்லை என்பது என் எண்ணம். நம்பிக்கை".
Thanks.

"அவரிடம் பிடிக்காத ஒன்று அடுத்தவர் கருத்துக்களை ஏற்றுக் கொள்ளாமல் (ஏற்றுக்கொள்ள முயலாமலும்) தன் கருத்தே சரியென அடம் பிடிப்பதுதான்".
When I am convinced that my stand is correct. I abide by it. I feel that I dont need to post a separate topic for explaining myself as suggested in a gentle manner by my friend BNI. I explained to him why it is so. I am happy to note that he accepted my stand.

Here, I will give you one more aspect in this affair. In my second Jom Kippur Post at http://dondu.blogspot.com/2006/10/blog-post_12.html I had clearly mentioned that as far as I am concerned Poli is no more.

In this matter of my second identity, the one thing which saddened me was that it is now forcing me to talk again of a person, who has been declared by me as being no more. Ok, the damage is done. But I draw a line at dedicating another post to that person, who is no more.

In the same Jom Kippur post I had suggested to my friends to come and comment after taking new ID's, with suitable protections. This resulted in my friends coming under various names such as Harry Potter,Cervantes et al. Funny thing is, I myself asked them not to reveal their new ID's real persons even to me. This is another war strategy. What I dont know, I cannot reveal even inadvertently. This is "need-to-know" concept recommended in ISO certified firms. I call it in jest as "need-not-know" concept.

By the way, now that I have gone in for anony options, this strategy is no longer required. My friends will no longer come, I think. At the same time, they might find this useful and use it to comment wherever they please. It is upto them.

Regards,
Dondu N.Ragahvan

said...

Thanks for the explanations.
I, now, fully understand the history and anatomy of your stance.

said...

இந்த 'அசிங்க' ஈ.மடல் பற்றி தகவல் தெரிந்தவர்கள் எனக்கு தனி மடலாக அனுப்புங்க்ளேன். முடிந்ததை முடுக்கிப் பார்க்கிறேன்.

said...

anony சொன்னது:

இதை எழுதியவனை எனக்கு நன்றாகத் தெரீயும், அவன் ஐ பி தெரியும். போலீசில் கம்ப்ளெயிண்டும் கொடுத்துள்ளோம். மலேசிய ஐ பி ப்ரொவைடருக்கும் கொத்துத்துள்ளோம். அது சரி எல்லோரும் வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று வெற்று வாய்ச் சவடால் விடுகிறீர்களே, அனைவரும் சேர்ந்து ஒரு பெட்டிஷன் தயார் பண்ணி என்னிடம் இருக்கும் ஐ பி ஆதரங்களை அளித்து தமிழ் நாட்டு போலீஸுக்கு ஒரு பெட்டிஷன் ஏன் கொடுக்கக் கூடாது ? அப்படி ஒரு பெட்டிஷன் எழுதினால் கையெழுத்துப் போட இங்கு எத்தனை பேர் ரெடி ? பாதி பேர் காணாமல் போய் விடுவீர்கள். இங்கு வெற்றுச் சவடால் வீசும் பல பதிவர்கள் பெண் பதிவர்கள் உட்பட அவனிடம் தனி மடலில் கெஞ்சி தங்களைப் பாதுகாத்துக் கொண்டவர்கள்தான்.

ஒரு பொது பெட்டிஷன் ரெடி பண்ணி அதனை போலீஸிடம் கொடுத்து அவர்களை நடவடிக்கை எடுக்க உங்களில் யாருக்கும் தைரியம் உள்ளதா ? இருந்தால் அப்படி துணிவு இருப்பவர் அனைவரும் இங்கு தங்கள் பெயர்களை வெளிப்படையாக அறிவிக்கவும். அதன் பின் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொல்லவும், அதற்கு தைரியம் இல்லாதவர்கள் தயவு செய்து சும்மா வீராப்புப் பேசாமல் ஒதுங்கவும்ம். எத்தனை பேர் துணிந்து இங்கு வருகிறீர்கள் என்பதை பார்த்த பின்பு நான் மீண்டும் இங்கு வருகிறேன்.

இந்த பெட்டிஷனை பெரிய மனிதரான ஒரு தருமியோ அல்லது மூத்த பதிவரான ஒரு பத்ரியோ தயார் செய்யலாம். ஒரு 100 பதிவர்களாவது கையெழுத்துப் போட வேண்டும், தொடர்ந்து ஃபாலோ அப் செய்ய வேண்டும். செய்ய உங்களில் எத்தனை பேருக்குத் துணிவிருக்கிறது ? 100 பேர் வேண்டாம் ஒரு பத்து பேராவது துணிந்து வருவீர்களாயின் நான் என்னைப் பற்றிய தகவல்களையும் என்னிடம் உள்ள தகவல்களையும் நான் நம்பும் பதிவர்களான கால்கரி சிவா, பி கே எஸ், பத்ரி, தருமி போன்றவர்களிடம் தரத் தயாராக இருக்கிறேன். போலீஸுக்கு நான் தனி நபராகக் கொடுத்த பெட்டிஷனுக்கு ஆக்ஷன் ஏதும் இல்லை. ஆகவே ஒரு 100 பதிவர்கள் சேர்ந்து நடவடிக்கை எடுத்து முழுப் பிரஷர் கொடுத்தால் ஏதும் நடவடிக்கை எடுக்கப் படலாம்.

நான் ரெடி, உங்களில் யார் யார் ரெடி, சும்மா வெட்டிப் பேச்சுக்கள் வேண்டாம் நடவடிக்கை தேவை . உங்கள் பதிலைப் பொறுத்து என் பதில் வரும். என்னிடம் உள்ள தகவல்களைப் பொதுவில் வைக்க மாட்டேன் ஆனால் மேற்குறிப்பிட்ட பதிவர்களிடம் அளிக்கத் தயாராக உள்ளேன்.

எங்கே பார்ப்போம் எத்தனை பேர் வருகிறீர்கள் என்று ?

said...

Count me in.

இதைப் பற்றி தனி பதிவாக எழுதி ஆள் சேர்க்கலாமா?
என்னிடமும் சில ஆதாரங்கள் இருக்கிறது.
எல்லோரிடமும் உள்ளதை சேர்த்து கொடுத்தால், சுலபமாக கண்டறியலாம்.

பொது மன்னிப்பு கேட்கவும் அந்த 'அனானி'க்கு ஒரு வாய்ப்பு கொடுத்த மாதிரியும் இருக்கும்.

????

said...

நான் பெட்டிஷனில் கையொப்பமிட தயாராயயுள்ளேன்

Anonymous said...

பெட்டிஷன் போட்டு என்ன பயன்?
போலி என்ற உருவம் இல்லாத ஒருவனிடம் மோதுவதை விட மூர்த்தி என்ற இழிபிறவியை பலவீனபடுத்த வேண்டும்.

said...

IP ஆதாரங்கள் பலரிடமிருப்பதாக அறிவேன். அதை வைத்துக் கொண்டு புகார் கொடுத்தால் போதுமானது.
யார் மூர்த்தி? URL ?

said...

anony, மூர்த்தி யாரு?

ஹி.. ஹி.. said...

மூர்த்தி யாரா? ஹா ஹா... நீங்களெல்லாம் வலைப்பூவுக்கு பச்சா... இந்த வலையுலகத்துல அசிங்கமா எழூதுற ஆள் மூர்த்தி அய்யா மட்டுமே... விடாது கருப்பு, ஆப்பு என்ற அனானி பெயருடன், முத்தமிழ் மன்ற தலைவர் என்ற கவுரவ வேடத்திலும் பின்னி பெடலுடுக்கிறார் எங்க தலீவர் மூர்த்தி. நட்டு போல்ட்டு கம்பெனியில வேலை பார்க்கிறாராம்... ஹி ஹி....

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

Where are you with this issue?

said...

உத்தப்புரத்தில் பாப்பான் வந்தானா ? இல்லை
அம்பேத்கர் சட்டக்கல்லூரியில்? இல்லை..
கீரிப்பட்டியில் ? இல்லை

ஏன்? எப்படி? தமிழ்நாட்டில் உள்ள தெலுங்கு அரசியல் வாதிகளுக்குத்தன் தெரியணும்...