Monday, February 05, 2007

சாந்தி, முதல்வர், பெண்மை, துயரம், உயரம், நம்பிக்கை !

ஓட்டப் பந்தைய வீராங்கனை சாந்தி சந்தித்த பிரச்சனைகள் எல்லோருக்கும் ஞாபகம் இருக்கும். அவரின் பேட்டி ஒன்று விகடனில் படிக்கக் கிடைத்தது.

அதிலிருந்து சிலவற்றை இங்கு பதிகிறேன்.

மனதை கனமாக்கும் அவரின் அனுபவங்கள் வேதனையத் தந்தாலும், தடைகளைத் தாண்டி அவர் அடைந்துள்ள உயரம் வியக்க வைக்கிறது.

பி.கு. படத்தின் மேல் தட்டினால், படம் பெரிதாகத் தெரியும்.


---

---

---

---




வாழ்க பாரதம்!

நன்றி: விகடன்

6 comments:

bala said...

BNI அய்யா,

சாந்தி அம்மா செய்த சாதனை பிரம்மாண்டமானது என்பதில் சந்தேகம் இல்லை.எத்தனை போராட்டங்களை சந்தித்து இந்த சாதனையை நிகழ்த்தியிருக்கிறார்.அதே போல் மஞ்ச துண்டு அய்யா சாந்தி அம்மாவை கெளரவித்து ஒரு நல்ல காரியம் செய்திருக்கிறார்.அவர் செய்த ஓரிரு நல்ல செயல்களில் இதுவும் ஒன்று.

பாலா

VSK said...

ஓரிரு நல்ல காரியம் என வம்பாகச் சொன்னாலும், கருணாநிதி செய்த மிக நல்ல காரியம் இது.

எத்துணை பேருக்கு வரும் இது போல ஒரு தைரியம்?

சாந்தி என்பவர் ஆணா பெண்ணா எனப் பார்க்கமல் அவர் ஒரு தமிழர் எனப் பார்த்து அவரைப் பெருமைப் படூஹ்திய கருணாநிதி... இல்லை இல்லை.. கலைஞர்.. என் மனதில் மிகவும் உயர்ந்து நிற்கிறார்..... இப்போதாவது உணர்ந்தாரே என்று!

BadNewsIndia said...

மிகச் சரி!

அரசியல் லாபம் இல்லாமல், மனிதாபிமான அடிப்படையில் முதல்வர் கருணாநிதி செய்த நல்ல விஷயம் இது.

பாராட்டுக்குரியது!

Bala, SK, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

Anonymous said...

vetti ottaradhu copyright violation illiyaa?

வடுவூர் குமார் said...

ஏனோ தெரியவில்லை,தமிழ்நாட்டில்.. இல்லை இந்தியா முழுவதும் விளையாட்டு துறையில் அவ்வளவு ஆர்வம் காட்டுவதில்லை.
ஒரு ஹாக்கி ஸ்டிக் இருந்திருந்தா நான் இந்திய டீம் உள்ளே போய் இருப்பேன் என்று சொல்வது என்னை அதால் மண்டையில் அடித்தது போல் இருந்தது.
இதே மாதிரி சில மாதங்களுக்கு முன்பு ஆனந்தவிகடனில் போட்டுக்கொள்ள சரியான ஸூ இல்லாமல் காற்பந்து விளையாடி பேர் வாங்கிய தமிழரின் கதையை படித்த போது..
நான் மேலே சொன்னது தான் திரும்ப ஞாபகம் வருகிறது.
சிங்கப்பூரில் இந்த ஏசியன் கேமில் ஜெயித்தவர்களுக்கு 250000x28 ரூபாய்.

BadNewsIndia said...

//ஒரு ஹாக்கி ஸ்டிக் இருந்திருந்தா நான் இந்திய டீம் உள்ளே போய் இருப்பேன் என்று சொல்வது என்னை அதால் மண்டையில் அடித்தது போல் இருந்தது.
//

எனக்கும் அப்படித்தான் இருந்தது. யாரை குறை சொலது என்று தெரியவில்லை.
Cricket க்கு இருப்பது போல் ஹாக்கிக்கு அவ்வளவு பாபுலாரிட்டி நம்மூரில் இல்லாதது குறைதான்.


//சிங்கப்பூரில் இந்த ஏசியன் கேமில் ஜெயித்தவர்களுக்கு 250000x28 ரூபாய். //

பெருமூச்சுதான் வருது. ஒலிம்பிக்ல பதக்கங்கள் வாங்கலியேனு ஒவ்வொரு முறையும் வருத்தம் வரும். ஆனால், அதர்க்கு வீரர்களை மட்டும் குறை சொல்லி ஒண்ணும் ஆகாப் போறதில்ல. கல்விக்கு நிறைய வாய்ப்புகள் உருவாக்கின மாதிரி விளையாட்டுத்துறைக்கும் ஒதுக்கணும். but, it seems like it is not a priority right now for our governments.

 
Statcounter