Monday, January 29, 2007

விளம்பரம்: தமிழ்மணம் - நம்மால் ஏன் முடியவில்லை!

தமிழ்மணத்தில் 'நம்மால் ஏன் முடியவில்லை?' என்று அழகான தலைப்புடன் ஒரு விவாத களம் அமைத்துள்ளார் மா.சிவகுமார்.

ஜப்பான் குறுகிய காலத்தில் அடைந்த வளர்ச்சியை நம்மால் ஏன் அடைய முடியவில்லை என்பதே களத்தின் கரு.

அருமையான தலைப்பு. அனைவரும் சென்று தங்களின் கருத்துக்களை தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
நம்மால் ஏன் இதுவரை முடியவில்லை, என்ன செய்தால் முடியும், என்ன செய்தால் முடியாது என்று நன்றாக சிந்தித்துப் பதியுங்கள்.

சிங்கப்பூர், அமெரிக்கா போன்ற அயல்நாடுகளில் சுற்றும் போது, அவர்களின் வளர்ச்சியும் வாழ்க்கைத் தரமும் பெரும் வியப்பைத் தரும். நம் வாழ்க்கைத் தரத்தை எண்ணி பெருமூச்சு வரும். இவ்வளவு உயர்வான சுலப வாழ்க்கை அமைத்துக் கொடுத்த அவர்களது அரசாங்கத்தையும் தலைவர்களையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

அதே சமயம், அவர்களின் மக்களும் (பெரும்பான்மை) பொது வாழ்வில் ஒழுக்கமானவர்கள். சட்டதிட்டத்தை மதிப்பவர்கள். நேர்மையானவர்கள்.

உதாரணம்:
பேருந்து நிலையங்களிலும் இன்னும் பல இடங்களிலும், செய்தித்தாள் விநியோகிக்கும் பெட்டிகள் இருக்கும். ஒரு செய்தித்தாளுக்கு வேண்டிய $1 அங்கிருக்கும் 'உண்டியலில்' போட்டுவிட்டு தனக்கு வேண்டிய செய்தித்தாளை எடுத்துச் செல்வர். 'Honor system' என்று நம்பிக்கை அடிப்படையில் இயங்கும் இந்த முறை, நம்மூரில் நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒன்று.

இதே போல், இரவு 12 மணி ஆனாலும், வாகனங்களில் செல்பவர்கள், சிக்னலை மதித்துச் செல்வார்கள்.

நம்மிடம் என்ன இல்லை?
1) திறமையுள்ள பொதுநலம் விரும்பும் தலைவன் ( சிங்கப்பூரின் லீ-க்வான்-யூ மாதிரி )
சில நல்ல தலைவர்கள் இருந்தார்கள். அவர்களிடம், பொது நலம் இருந்தால், ஆட்சியாளும் திறமை இல்லை; ஆட்சி ஆளும் திறமை இருந்தால் பொது நலம் இல்லை; இரண்டும் இருந்தால், மக்களால் தேர்ந்தெடுக்கப் படுவதில்லை;
We lack visionories. தொலை நோக்குப் பார்வை கொண்டு நம்மை கரை ஏற்றும் வல்லமை யாரிடமும் இருந்ததில்லை.
அரசியலில் மட்டுமல்ல. வணிக நிறுவனங்களிலும் பெரிய சாதனை படைத்ததில்லை. Toshiba, sony, toyota, hitachi, panasonic, sharp போன்ற நிறுவனங்கள் படைத்த சாதனையில் இம்மி அளவும் நம் நிறுவனங்கள் படைத்ததில்லை. இந்த நிறுவனங்கள் எல்லாம் வானத்தில் இருந்து வந்ததல்ல. உழைப்பை மட்டுமே கொண்டு முன்னேறி இன்று உலகத்தைக் கைக்குள் வைத்திருக்கும் நிறுவனங்கள் இவை. நம்மால் முடிந்திருக்காதா? எது தடுக்கிறது. IIT, IIM, IISC எல்லாம் உருவாக்கும் புத்திசாலிகள் நினைத்தால் செய்யலாம். சிலர் செய்தும் வருகிறார்கள். ஆனால், ஜப்பானிய வளர்ச்சி அடைய எது தடையாக இருக்கிறது? Creativity? அரசியல்? இதுவரை பெயர் சொல்லும்படி ஒரு PRODUCT கூட நம்மூரில் இருந்து வெளிவரவில்லை.
Sony, toyota மாதிரி கூட வேண்டாம். கணினித் துறையில், out-sourcing வல்லரசாகி இருக்கும் நாம் ஒரு Windows போன்றோ, SAP போன்றோ ஏன் உருவாக்கவில்லை?

2) மக்களுக்குள் ஒற்றுமை
சாதீயமும் வர்ண பேதமும் பேசிப் பேசி நம்மை பிரித்தவர்கள், அவர்கள் பணி முடிந்து அவர்களுக்கு வேண்டியதை சாதித்து விட்டார்கள். அவன் ஏற்படுத்திய விரிசலை அடைய விடாமல், சில சக்திகள், அந்த விரிசலை பெரிது படுத்தி அதில் குளிர் காயத் துவங்கி உள்ளார்கள்.
ஜப்பானிலும், சிங்கப்பூரிலும் இந்த வர்ண பேதமெல்லாம் இல்லை. வீழ்ந்திருந்த காலத்தில் தலைவன் காட்டிய வழியில், ஒரு சக்தியாக பாடுபட்டு அவர்கள் இந்நிலையை அடைந்து உள்ளார்கள். ஊர் மக்களுக்குள் அங்கு காழ்புணர்ச்சி கிடையாது.
இந்தியாவில் அப்படியா? சாதி, மதத்தின் பேரில் நாம் நமக்குள் வளர்த்திருக்கும் பகை நம்மை கூடி வாழ விடாமல் செய்கிறது. ஒரெ சக்தியாக சேர்ந்து முயற்சி செய்யாமல், பெரிய சாதனைகளை அடைவது கடினம்.

3) தனி மனித ஒழுக்கம்
இரத்தத்தில் வந்த வியாதியா? இல்லை நம் இனத்தின் சாபக்கேடா தெரியவில்லை. பெரும்பான்மையான (நான் பார்த்தவரை) இந்தியர்கள் சுயநலவாதிகள். தன் வீடு, தன் பிள்ளை, தன் தேவை இது ஒன்றைப் பற்றித் தான் கவலை அவனுக்கு. அவன் வீட்டுக்கு வெளியே எது எப்படி இருந்தாலும் அவனுக்குக் கவலை இல்லை.
வீட்டுக்கு வெளியில சாக்கட ஓடுதா? கதவை அடைத்துக் கொண்டு மூக்கில் துணி கட்டிக் கொண்டு வாழ்ந்து விடுவான்.
தெருவில் ஒரு அப்பாவியை பத்து பேர் போட்டு அடிக்கிறார்களா? நமக்கு ஏன் வம்பு, வானத்தை பார்த்து பொழுதை கழிப்பான்.
தன் வேலை முடிய வேண்டுமா? சுலப வழியில் சென்று முடித்துக் கொள்வான்.
ரோட்டில் அடிபட்டு ஒருத்தன் கிடக்கிறானா? யாராவது பார்த்துக் கொள்வார்கள். நாம் ஏன் வம்பை விலை கொடுத்து வாங்க வேண்டும் என்று ஒதுங்குவான்.
ஏய்ப்பு - வரி ஏய்ப்பு முதல் வேலையில் ஏய்ப்பு வரை அனைத்தையும் அத்துப்படியாக எல்லா குறுக்கு வழிகளிலும் செய்வான்.

என்னதான் செய்வது?
நாம் இன்று இருக்கும் நிலையில், பெரிய ஆசையெல்லாம் படக்கூடாது. சிங்கப்பூர், அமெரிக்கா போல் வாழ்க்கை தரம் கிடைக்க பல ஆண்டுகள் ஆகும்.
அதுவும், நீங்களும் நானும் இன்று முயற்சியை தொடங்கினால்தான் கிட்டும்.
பெரிய புரட்சி எல்லாம் நாம் செய்யப் போவதில்லை.

நான், எனக்கு, என் குடும்பம் என்ற வட்டத்தை விட்டு பொதுஜனத்திர்க்காக வாழும் புனிதர்களாக over-nightல் மாறிவிட முடியாது.

உங்களால் முடிந்தது, தனி மனித ஒழுக்கம். அதை இம்மியளவும் பிசகாமல் கடை பிடியுங்கள்.
சட்ட திட்டங்களை மதியுங்கள்; தண்ணீரைச் சேமியுங்கள்; உங்கள் வீட்டுக்குள்ளாவது மரம் நடுங்கள்; முடிந்தவரை லஞ்சம் கொடுக்காதீர்கள்; உங்கள் நட்பு வட்டாரத்தை பெருக்கி, உங்கள் தெரு, உங்கள் அக்கம் பக்கத்தை சுத்தமாய் வைத்திருங்கள்; இல்லாதாருக்கு இயன்றதைக் கொடுங்கள்.

உங்கள் சுற்றம் சரியானால், உங்கள் வட்டத்தை பெருக்கி பக்கத்து வீடு, பக்கத்து தெரு என்று உங்கள் சேவையை தொடருங்கள்.
குழந்தைகளுக்கு நல்லொழுக்கமும், சீரிய சிந்தனையும் வர வகை செய்யுங்கள்.

நல்லவற்றை படியுங்கள். சாதனயாளர்கள் பற்றியும், அவர்கள் கையாண்ட விதம் பற்றியும் படியுங்கள். நல்ல ஊக்க டானிக் இவை.

உங்களால் முடிந்ததை செய்யுங்கள்!

அமெரிக்கனோ, சிங்கப்பூர்காரனோ அவன் வேலையை மட்டும் செய்து முடித்து விட்டு week-end சந்தோஷமாக கழிக்கலாம். அவன் இன்று நல்ல வாழ்க்கை வாழ அவனுக்கு முன்னிருந்த தலைமுறை வழி செய்துள்ளது.
நாம் அப்படி இருந்தால், நம் சந்ததியின் week-day கூட ஒழுங்காக இருக்காது. சில தியாகங்களை செய்து, மெத்தனத்தை குறைத்து, சோம்பலை முறித்து உங்களால் இயன்றதை செய்தால்தான், உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல வாழ்க்கை வாழும் சூழல் கிட்டும்.

வரும் தமிழ் புத்தாண்டுக்குள், உங்களால் முடிந்த ஏதாவது நல்லவை செய்து உங்கள் வெற்றிக் கதையையும், கையாண்ட விதத்தையும் பதியுங்களேன்? முடியுமா?

நானும் முயல்கிறேன்.

(தமிழ்மணம் தொடர்ந்து இது போல் உபயோகமான தலைப்பை விவாதகளத்தில் அமைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். அனைவரையும் பங்கு பெறுமாறும் கேட்டுக் கொள்கிறேன்). ஒருவரை ஒருவர் இகழ்ந்து நேர விரையம் செய்வதை குறையுங்கள்!

...வேடிக்கை மனிதரை போல் வீழ்ந்து விடாதீர்கள்...'


-BNI

8 comments:

said...

O.P. Nayyar இயற்கை எய்தினார்.

said...

மிகவும் ஆக்கபூர்வமான பதிவு நண்பரே
லியோ சுரேஷ்
துபாய்

Anonymous said...

இங்கு நான் வந்த காலத்தில் இருந்து தேசிய நாள் விழாவுக்கு இங்குள்ள பிரதம மந்திரி நாட்டுமக்களுக்கு என்று சொற்பொழிவாற்றுவார். சுமார் 1 1/2 மணி நேரம்,உட்காராமல்.வைத்த கண்ணை தொலைக்காட்சியில் இருந்து எடுக்க முடியாது.நாட்டு நடப்பில் இருந்து செய்யப்போவது பற்றி பல விஷயங்கள் வரும்.
நான் கேட்டதெல்லாம் திரு கோ சோ தோங் என்பவரின் பேச்சை தான்.
வெளிநாட்டவரை ஏன் நாம் இங்கு வரவழைக்கவேண்டும் என்பதை பற்றி விளக்கமாக சொல்லி நாட்டு மக்களின் ஏகோபித்த கருத்தை பெருபவர்கள்.
சொல்வதற்கு இருக்கின்றன பல.
இந்த தடவை சென்னை வந்திருந்த போது ஒரு வலைப்பதிவர் கேட்டது "உங்கள் பையனை படிக்க வைக்க கல்லூரில் லஞசம் கேட்டால் கொடுப்பீர்களா?"
வேறு வழியில்லாததால் கொடுத்துதான் ஆக வேண்டும் என்றேன்.இந்த பதில் அவருக்கு பிடிக்கவில்லை என்றாலும்.
எனது கொள்கைக்காக பையனின் படிப்பை அடகு வைக்க என் மனம் ஒப்பவில்லை.
படிப்பவனுக்கு கிடைக்கும் இட ஒதுக்கீடின் பிரம்ம்படி இது.

said...

லியோ சுரேஷ்,

//மிகவும் ஆக்கபூர்வமான பதிவு நண்பரே
லியோ சுரேஷ்
துபாய்//

நன்றி!

said...

வடுவூர் குமார்,

கோ-சோ-டாங்கின் பேச்சை நானும் பலமுறை கேட்டிருக்கிறேன். லீ-க்வான்-யூவின் கட்டுரைகள் பலவும் படித்திருக்கிறேன்.
மக்களின் நலனுக்காக இயங்கும் அற்புதத் தலைவர்கள் இவர்கள்.
out-sourcing செய்வதால் வரும் நன்மை தீமை எல்லாம் பட்டியலிட்டு, இன்றைய யுகத்தில் அது இல்லாமல் சிங்கப்பூர் இயங்க முடியாது, அதன் மூலம் வேலை இழக்கும் நிலை ஏற்படும் சிங்கப்பூரியன், எப்படி தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றெல்லாம் அழகான அறிவுரைகள் சொல்லி இருந்ததைப் படித்தேன்.
தொலை நோக்குத் தலைவனுக்கு சிறந்த எடுத்துக்காட்டு சிங்கப்பூர் தலைவர்கள்.


//இந்த தடவை சென்னை வந்திருந்த போது ஒரு வலைப்பதிவர் கேட்டது "உங்கள் பையனை படிக்க வைக்க கல்லூரில் லஞசம் கேட்டால் கொடுப்பீர்களா?"
வேறு வழியில்லாததால் கொடுத்துதான் ஆக வேண்டும் என்றேன்.இந்த பதில் அவருக்கு பிடிக்கவில்லை என்றாலும்.
எனது கொள்கைக்காக பையனின் படிப்பை அடகு வைக்க என் மனம் ஒப்பவில்லை.
//

தவறான முடிவு இது. லஞ்சம் கேட்கிறான், அதை கொடுத்தால் தான் சீட் கிடைக்கும், அதனால் கொடுக்கிறேன் என்று சுலப வழியை பின்பற்றாமல் நேர் வழியில் முயன்று பாருங்கள்.
atleast, college1ல் லஞ்சம் கேட்டால், அங்கு உங்கள் பிள்ளையை சேர்க்காமல், college2ல் ( லஞ்சம் கொடுத்து? ) சேருங்கள். பின்னர், college1 ஊழியர் மீது புகார் கொடுங்கள்.
இப்படி எல்லோரும் செய்ய ஆரம்பித்தால், உங்கள் வேலையும் நடக்கும், வருங்காலத்தில் லஞ்சம் குறைக்க வித்திட்டது போலவும் ஆகும்.

எங்கே தொடங்குவது என்று எனக்கும் சரியாய் தெரியவில்லை. கூடி வாழ்ந்தால் கோடி நன்மை. நாம் எல்லாம் சேர்ந்து குழுவாக செயல்பட்டால் சில வெற்றிகள் காணலாம்.

உ.ம். உங்களிடம் லஞ்சம் கேட்கும் college1 அதிகாரிகள் மீது, ஒரு பொதுநல வழக்கு தொடரலாம்; அல்லது ஒரு பொதுநல விளம்பரம் அவர்களுக்கு எதிராக பத்திரிகையில் கொடுக்கலாம்.

சரிதானே?

said...

அழகு தமிழில் கொஞ்சிக் குலாவிய அனானி நண்பருக்கு நன்றிகள் பல.

thanks for the wishes, same to you!!

Anonymous said...

உங்கள் அட்வைஸ்க்கு நன்றி.
நிச்சயமாக!! நல்ல வழி இருக்கும் பட்சத்தில் அதை தான் முதலில் தேர்ந்தெடுப்பேன்.

said...

நன்றி வடுவூர் குமார்.

முயன்றால் முடியாதது எதுவும் இல்லை.