Sunday, January 21, 2007

அழகான விநாயகப் பெருமானும், வீண் விதண்டாவாதங்களும்...


சமீபத்தில் படித்த ஒரு பதிவில் திரு.பெரியார் அவர்கள் ஆற்றிய உரையை காபி/பேஸ்ட் செய்து, பெரியாரின் கொள்கைகளை பரப்ப முயன்றிருந்தார்கள். உரையில் வழக்கம் போல் இறை மறுப்பும், இறை அவமதிப்பும் அடங்கி இருந்தது. திரு. பெரியார் பல நல்லவைகளை செய்ததாகத்தான் நான் எண்ணுகிறேன். சில விஷயங்களை மட்டும் வழக்கமான அரசியல்வாதியை போல் கையாண்டு வேண்டா வெறுப்பை வளர்த்துக் கொண்டவர்.

அவரின் சொற்பொழிவு இணையத்தில் பதிவது நல்லதுதான். ஆனால், அவற்றில் நல்ல கருத்துக்கள் சொல்லப்பட்டவைகளை மட்டும் பதியலாம். விதண்டாவாதங்கள் நிறைந்ததை ஒதுக்குதல் நலம்.

பலராலும் தாய் தந்தையருக்கு நிகராக எண்ணி வணங்கப்படும் தெய்வங்களை ஏளனம் செய்வதும், விபச்சாரிகள் என்பதெல்லாம் சிறு பிள்ளைத்தனம். வீண் விதண்டாவாதம்!

anyway, அந்த பதிவில் இட்ட பின்னூட்டம் பதிவாக இங்கே கொடுத்திருக்கிறேன்:

உங்களின் சுய கருத்துன்னு நெனச்சு 'அசிங்கமாய் எழுதுவதை தவிருங்களேன்' என்று சொல்ல வந்தேன்.

பாத்தா பெரியார் பேசினதா சொல்றீங்க. அட ராமச்சந்திரா, அவரே இப்படின்னா, தொண்டர்கள குறை சொல்லி ஒண்ணும் பிரயோஜனம் இல்லை.
அவரவர் நம்பிக்கை அவரவர்க்கு.
கடவுள் இல்லை என்பதும் ஒரு நம்பிக்கை. அதையும் மதிக்க வேண்டும்.

கடவுள் இல்லைன்னு சொன்னவர் என்பதர்க்காக அவர் சிலையை போய் செருப்பால் அடித்தால் நல்லாவா இருக்கும்? கோடி மக்கள் நம்பிக்கை வைத்திருக்கும் கடவுளர்களை விபச்சாரி என்பதெல்லாம் இங்கிதம் தெரியாத வரட்டு அரை கூவல்கள்.

உங்களுக்கு நம்பிக்கைகள் இல்லையா என்ன? உங்கள் குடும்பத்தினர் மீது இருக்கும் பாசம்; உங்கள் மனைவி மக்கள் மீது இருக்கும் நம்பிக்கை - இதெல்லாம் கண்ணில் தெரியாது தம்பி - மனதளவில் உணர்வது.

இந்த உணர்வை போன்றுதான் -கடவுள் இருக்கிறார்; ஆபத்தில் உதவுவார்; என்ற நம்பிக்கையும்.

கண்ணுக்கு தெரியாது என்பதால், சுற்றம்/நட்பு மீது பாசம்/நம்பிக்கை இல்லை என்றால் வாழ்வதே வீண்!

நடுக்கடலில் யாரும் இல்லாத ஒரு தீவில் மாட்டிக் கொண்டு (god forbid) வெளியே வர வழி தெரியாமல் இரண்டு நாள் தவித்தால், கடவுள் நம்பிக்கை தானாய் வரும். :)

கோயில்கள் இருப்பதால் தான் இன்னும் 'இழி' பிறப்பாக இருக்கிறீர்கள் என்பதெல்லாம் சுத்த மடமை. கையாலாகாத்தனம். சோம்பேறிப் பேச்சு.

அம்பேத்கார் எல்லாம் முன்னுக்கு வரலியா? கடவுள் சிலைகளை செருப்பால் அடிப்பதர்க்கு முன்னரே வளர்ந்து உயர்ந்தவர்தானே அவர். அவரை எந்த 'பார்ப்பானும்' தடுக்கவில்லையே. அவர் எழுதிய சட்ட திட்டங்களை தானே இன்னும் பின்பற்றுகிறோம்.

முயன்றால் முடியும்.

வாய் சொல்லில் வீரர்களாக மட்டும் இருக்காதீர்கள். விபூதி பூசிக் கொள்வதால், கீழ் நிலை மக்கள் இன்னும் கீழ் நிலையிலேயே இருக்கிறார்கள், விபூதி அவர்களை கட்டிப்போடுகிறது என்பதெல்லாம் பிதற்றல்கள்.
உழைப்பு உயர்வுக்கு வழி. இதை உலகிற்க்கு காட்டியவர்கள் பலர் இருக்கிறார்கள், அம்பேத்கார் உள்பட.

அவர்கள் எல்லாம் மூலையில் அமர்ந்து கொண்டு என்னை ஒதுக்குகிறான், என்னை இழிவு படுத்துகிறான் என்று கூறிக் கொண்டு நேர விரையம் செய்யவில்லை. வாழ்ந்து காட்டினார்கள்.

வெட்டிப் பேச்சை குறைத்து, ஆக்கபூர்வமாக ஏதாவது செய்யுங்கள்.
இறைவன் இல்லை என்ற நம்பிக்கை இருக்கிறதா - ஒ.கே. உண்டியலில் காசை போடாதீர்கள். இலவசக் கல்விச் சாலை அமைக்க பண உதவி கொடுங்கள்.
கீழ் நிலையில் உள்ள குடும்பங்களை தத்தெடுங்கள். அவர் குழந்தைகளின் கல்விக்கு உதவுங்கள். ஆளுக்கு ஒரு குடும்பத்தை கரை ஏற்றுங்கள்.

பொருளாதாரமும், கல்வி அறிவும் உயர்ந்தால் ஏற்றத் தாழ்வுகள் தானாய் மறையும்.

நம்மில் பலர், தாய் தந்தையரை விட விநாயகக் கடவுள் மீது அதிகம் பற்றும், பாசமும், பக்தியும் கொண்டவர்கள். உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ, இவ்வளவு கேவலமாக அந்தக் கடவுளை பற்றி பேசுவதும் எழுதுவதும் மிகத் தவறு. நாகரீகமான செயல் அல்ல இது.

முகமது பற்றி கிண்டலாக வந்த கார்டூன் ஏற்படுத்திய தாக்கம் நினைவிருக்கிறது இல்லையா? அமைதியாகப் பொறுத்துப் போவதால் சொறிந்து கொண்டே இருப்பது சரி அல்ல.

சிவன் ஏன் மண்டை ஓடு வைத்திருக்கிறான்; ஏன் பாம்பை அணிந்திருக்கிறான்; கிருஷ்ணன் ஏன் கோபிகைகளுடன் குலாவினான் -- எல்லாத்துக்கும் ஒரு காரணமும் அர்த்தமும் இருக்கு - தெரியாமல் ஹா ஹா ஹா என்று நையாண்டி செய்வது சிறு பிள்ளைத் தனம்.

பெரியார் ஏன் மணியம்மையை திருமணம் செய்து கொண்டு வீட்டம்மையாக்கினார்? திருமணம் செய்து கொண்டு ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ வேண்டும். விலங்கு போல் ஊருக்கு ஒன்று என்று வாழக் கூடாது என்ற கோட்பாடெல்லாம் எங்கிருந்து வந்தது. அதில் ஏன் நம்பிக்கை வைத்து அதை பின்பற்றினார் அவர்? இதெல்லாம் கூட நம் கலாசாரத்தில் இருந்து வந்ததுதானே. கடவுளை மட்டும்தான் இந்துக்கள் படைத்தனரா. வாழ்வியலை வேறு ஒருவன் படைத்தானா?

நல்ல கூத்து போங்க!

கண்ணுக்குத் தெரியாத கடவுள் மேல் பயமும் பக்தியும் இருக்கும்போதே நாட்டில் இவ்வளவு பிரச்சனைகள். இதில் பெரியார் வழியை ஊரே பின்பற்றி, கடவுள் இல்லை என்று வெற்று வாழ்க்கை எல்லாரும் வாழத் தொடங்கினால், காட்டுமிராண்டித்தனம் மிகுந்து ஒருவரை ஒருவர் அடித்துக் கொல்லும் நிலைதான் மிஞ்சும்.

முதலில் கல்வி அறிவு எல்லோருக்கும் கிட்டட்டும். கடவுள் வேண்டுமா வேண்டாமா என்பது பின் அவனவன் முடிவு செய்து கொள்ளட்டும். அதுவரை விநாயகனை பழிப்பதும், முகமதை நையாண்டி செய்வதும், பெரியாரை ஏளனம் செய்வதும், இன்னும் எரிந்து கொண்டிருக்கும் சாதீய வாதங்களும் வேண்டாமே!

ஆண்டவன் அருள் புரியட்டும்!"


-BNI

நான் படித்த விவகாரப் பதிவு இங்கே: Click

28 comments:

Anonymous said...

பொட்டில் அடிச்சா மாதிரி சொல்லியிருக்கீங்க. இவனுங்க திருந்த மாட்டானுங்க.

சிலை கலாசாரம் வேண்டாம்னு சொன்னவருக்கே, சிலை வச்சு சாமி மாதிரி கொண்டாடுவானுங்க, பாதியிலே இருந்து கும்பிட ஆரம்பிச்சவனுங்களுக்கே அம்புட்டு இருக்கும்னா, ஆரம்பத்தில இருந்து சாமி கும்பிட்டு இருக்கிறவனுங்களுக்கு எப்படி இருக்கும்னு யோசிக்கிறதுக்கு புத்தி வேணும், காட்டுமிராண்டி கூட்டத்துக்கு யோசிக்க எங்க நேரம் இருக்கப் போவுது?

said...

//பலராலும் தாய் தந்தையருக்கு நிகராக எண்ணி வணங்கப்படும் தெய்வங்களை ஏளனம் செய்வதும், விபச்சாரிகள் என்பதெல்லாம் சிறு பிள்ளைத்தனம். வீண் விதண்டாவாதம்!//

ரிப்பீட்டு...

said...

அனானி, வருகைக்கு நன்றி.

//சிலை கலாசாரம் வேண்டாம்னு சொன்னவருக்கே, சிலை வச்சு சாமி மாதிரி கொண்டாடுவானுங்க, பாதியிலே இருந்து கும்பிட ஆரம்பிச்சவனுங்களுக்கே அம்புட்டு இருக்கும்னா, ஆரம்பத்தில இருந்து சாமி கும்பிட்டு இருக்கிறவனுங்களுக்கு எப்படி இருக்கும்னு யோசிக்கிறதுக்கு புத்தி வேணும்//

சரியாச் சொன்னீங்க. அவனவனுக்கு உள்ள விருப்பு,வெறுப்பு,வலி எல்லாம் அடுத்தவனுக்கும் இருக்கும் என்ற உணர்வில்லாமல் இருக்கிறார்கள்.

திருந்தினால் நல்லது!

said...

மரைக்காயர்,

வருகைக்கு நன்றி சார்!

Anonymous said...

இவனுங்க திருந்த மாட்டானுங்க தலைவா.இவனுங்களுக்கு தேவை ஒரு நல்ல டாக்டர்.

Anonymous said...

//பாதியிலே இருந்து கும்பிட ஆரம்பிச்சவனுங்களுக்கே அம்புட்டு இருக்கும்னா, ஆரம்பத்தில இருந்து சாமி கும்பிட்டு இருக்கிறவனுங்களுக்கு எப்படி இருக்கும்னு யோசிக்கிறதுக்கு புத்தி வேணும், காட்டுமிராண்டி கூட்டத்துக்கு யோசிக்க எங்க நேரம் இருக்கப் போவுது?//

இது தான் சரியான பதில்.

said...

கெரெக்டுங்க. இவனுங்களோட முட்டாள் கொள்கைகள் அரசு அதிகாரத்தைப் பயன்படுத்திப் பரப்பிக் கெடுக்குறதை விட்டுட்டு படிக்க ஆசைப்படுகிற இளையசமுதாயத்துக்கு 99.98862% முதல் 97.97765% க்குள்ளேயே முடிந்துவிடும் உயர்கல்வி சூழல் உணர்த்துவது ஏராளமான இளையவர்கள் படிக்க ஆசைப்படுகிறார்கள் என்பதை உணர்ந்து ஏராளமான உயர்கல்வி நிலையங்கள் படிக்க ஆசைப்படும் மாணவர்களுக்கு படிக்கும் வசதியைச் செய்து தாருங்கள்.

குரங்கு அப்பம் ரேஞ்சில் இடஒதுக்கீடு / இடப்பங்கீடுன்னு படிக்கிற புள்ளைங்களை படிக்கவைக்க ஆக்கமாச் செய்யுங்கப்பா!

சாமி இல்லைன்றதை நிறுவக் காட்டும் முனைப்பை படிக்க வசதி செஞ்சுதாங்கப்பூ!

எல்லோரும் அவர் விரும்பும் உயர் கல்வி கற்று வேலையில் அமர்ந்து முன்னேற ஆரம்பித்தால் ரெண்டே தலைமுறையில தமிழ்நாட்டுல இடப்பற்றாக்குறையால் இட ஒதுக்கீடு, பங்கீட்டு அவலம் நீங்கித் தன்னிறைவு பெற்ற முன்மாதிரியாக்கி நம்பர் 1 ஆக்குங்க சாமிகளா!

உருப்படியானதைப் படிச்சா மட்டுமே முன்னேறலாம்!

said...

அனானி,

//இவனுங்க திருந்த மாட்டானுங்க தலைவா.இவனுங்களுக்கு தேவை ஒரு நல்ல டாக்டர்.//


திருந்துவாங்க அனானி.
தான் செய்வது தவறென்று தெரியாமல் செய்பவர் இவர். தெரிஞ்சா திருந்திடுவாங்க.

said...

Nice post...

Anonymous said...

பாப்பான்,பாப்பாத்தி,பாப்பான் கடவுள்
இதைப்பற்றி யாராவது எழுதினால்,பூணூலை வைத்து முதுகு சொறிந்துகொண்டே ஓடிவந்து நல்ல பிள்ளை மாதிரி தத்துவம் பேசும் பாப்பான் சாமி அவர்களே,கீழே உள்ள பதிவை எழுதிய பாப்பாரப் பயலுக்கு நீங்க போய் நறுக்குன்ன நாலு வார்த்தை சொல்லுவீகளா?


http://arvindneela.blogspot.com/2007/01/blog-post_116917074479877300.html

said...

சீனு, நன்றி!

said...

anony,

//பாப்பான்,பாப்பாத்தி,பாப்பான் கடவுள்
இதைப்பற்றி யாராவது எழுதினால்,பூணூலை வைத்து முதுகு சொறிந்துகொண்டே ஓடிவந்து நல்ல பிள்ளை மாதிரி தத்துவம் பேசும் பாப்பான் சாமி அவர்களே//

பூணூல் எல்லாம் போட்ட சாமி இல்ல. நான் வெறும் ஆசாமி. ஏன், பூணூல் போட்டவன் மட்டும் தான் நல்லது சொல்லுவான்னு நெனைப்பா?

நீங்க கொடுத்த பக்கத்தை பாத்தேன். என் கண்ணில் படும் கேடுகளை எதிர்த்து என் எண்ணத்தை பதிந்து கொண்டுதான் வருகிறேன்.

எல்லாரும் திருந்தணும்.

said...

ஹரிஹரன்,

//
எல்லோரும் அவர் விரும்பும் உயர் கல்வி கற்று வேலையில் அமர்ந்து முன்னேற ஆரம்பித்தால் ரெண்டே தலைமுறையில தமிழ்நாட்டுல இடப்பற்றாக்குறையால் இட ஒதுக்கீடு, பங்கீட்டு அவலம் நீங்கித் தன்னிறைவு பெற்ற முன்மாதிரியாக்கி நம்பர் 1 ஆக்குங்க சாமிகளா!
//

ஆக்கிடுவொம்! நீங்களூம் சில நையாண்டியை குறைத்துக் கொள்ளுதல் நலம்.

said...

BNI ஐயா,

ஈவேரா போன்றோரின் பேச்சைக் கேட்கும், பின்பற்றும் அறிவிலிகளுக்குக் கூட, இவ்வளவு பக்குவமாக, மென்மையாக எடுத்து சொல்லியிருக்கிறீர்கள். உங்கள் பொறுமையையும், அரவணைத்துச் செல்லும் பாங்கையும் இது வெளிப் படுத்துகிறது. நல்ல பதிவு.

ஆனால், பெரியார் ஏதோ நல்லது செய்துவிட்டு கடவுள் மறுப்பையும் பரப்பியது போல எழுதியிருக்கிறீர்கள். ஈவேரா இது போன்று எந்தப் புகழுரைக்கும் தகுதியானவர் அல்ல, ஒரு சாதாரண மனிதனிடத்தில் இருக்கும் நல்ல குணங்கள், நேர்மை, தன்னலமின்மை போன்ற குணங்கள் கூட இல்லாத வடிகட்டிய கயவர் அவர்! என் நண்பர் ஒருவர் பேரில் எழுதிய கவிதையை என் பதிவில் போட்டிருக்கிறேன் இங்கே -
http://jataayu.blogspot.com/2007/01/blog-post_24.html

said...

ஜடாயு, வருகைக்கு நன்றி!

//ஆனால், பெரியார் ஏதோ நல்லது செய்துவிட்டு கடவுள் மறுப்பையும் பரப்பியது போல எழுதியிருக்கிறீர்கள். ஈவேரா இது போன்று எந்தப் புகழுரைக்கும் தகுதியானவர் அல்ல//

பல லட்சம் மக்கள் போற்றும் தலைவனாக இருந்தவர். அவர் சமுதாயத்தில் தாழ்ந்த நிலையில் இருந்த சிலருக்கு உதவ முற்பட்டதாகவே நானும் கருதுகிறேன். ஆனால், கையாண்ட விதங்களில் எனக்கும் ஒப்புதல் இல்லை. அவர் இருந்த காலகட்டத்தில், may be that was the only choice. We wont know that.

//ஒரு சாதாரண மனிதனிடத்தில் இருக்கும் நல்ல குணங்கள், நேர்மை, தன்னலமின்மை போன்ற குணங்கள் கூட இல்லாத வடிகட்டிய கயவர் அவர்//

பலர் போற்றும் தலைவரை கயவர் என்று சொல்வதையும், பலர் வணங்கும் தெய்வங்களை விபச்சாரி என்று சொல்வதையும் தான் வேண்டாம் என்கிறேன்.
நாகரீகம் ஏன் மறக்க வேண்டும். சொல்லும் கருத்தை நல்ல படி சொல்லலாமே சார்.

ஹிட்லருக்கே மரியாதை கொடுத்துதான் பேசுவார்கள் நாகரீகம் தெரிந்தவர்கள்.

நம் மக்களில் ஏன் எல்லாம் குறைந்து வருகிறது ?

Anonymous said...

//கடவுள் இல்லை என்பதும் ஒரு நம்பிக்கை./

இது நம்பிக்கை கிடையாது. உண்மை. கடவுள் இருப்பதைத்தான் இது வரை யாரும் நிரூபிக்கவில்லை.//கோடி மக்கள் நம்பிக்கை வைத்திருக்கும் கடவுளர்களை விபச்சாரி என்பதெல்லாம் இங்கிதம் தெரியாத வரட்டு அரை கூவல்கள்.//

கோடி மக்கள் நம்பிக்கை வைத்திருந்த வர்ணாஸ்ரம தீண்டாமையை அன்றைக்கு முற்போக்காளர்கள் எதித்த போதும் நீங்கள் இப்படித்தான் பேசியிருப்பீர்களா?


//நடுக்கடலில் யாரும் இல்லாத ஒரு தீவில் மாட்டிக் கொண்டு (god forbid) வெளியே வர வழி தெரியாமல் இரண்டு நாள் தவித்தால், கடவுள் நம்பிக்கை தானாய் வரும். :)//

அப்படியா விந்தைதான். ஆனால் கடவுள் நம்பிக்கைக்கு அடிப்படை சமூக பிரச்சனைகள் என்ற அம்சத்தி நீங்கள் சரியாக்வெ சொல்லியுள்ளீர்கள்.

ஆனால், அந்த சமூக பிர்ச்சனைகளுக்கு தீர்வு தேடாமல் அதை மறக்கடிக்கும் கடவுள் என்ற அபினுக்கு வக்காலத்து வாங்குவதுதான் விந்தையாக இருக்கீறது.


//அம்பேத்கார் எல்லாம் முன்னுக்கு வரலியா? கடவுள் சிலைகளை செருப்பால் அடிப்பதர்க்கு முன்னரே வளர்ந்து உயர்ந்தவர்தானே அவர். அவரை எந்த 'பார்ப்பானும்' தடுக்கவில்லையே. அவர் எழுதிய சட்ட திட்டங்களை தானே இன்னும் பின்பற்றுகிறோம்.//

அம்பேத்கார் பற்றியும் அவர் பார்ப்பனர்களை எந்தளவுக்கு அம்பலப்படுத்தி கடும் கோபத்துடன் எழுதியிருக்கிறார் என்பது பற்றியும் தெரியாமலேயே இப்படி பேசுகிறீர்கள்.

சட்டம் இயற்றிய அம்பேத்கர் அத்ன் பிறகு அதில் பார்ப்பனர்கள் தமது திட்டத்தைதான் ஏற்றியுள்ளனர் என்று அவர் விசனபட்டு சொன்னது, பதவியை ராஜினாமா செய்தது, இந்த சட்டதிட்டங்களால் தாழ்த்தப்பட்ட சமூகத்துக்கு விடிவு கிடைக்காது என்று சொன்னது இதையெல்லாம் மறந்துவிட்டால் இப்படி சொல்வது சுலபமே.

விபூதி பூசுவதுதான் அவர்களின் இழிநிலைக்கு ஒரே காரணம் என்பது, கடவுள் நம்பிக்கைதான் சமூக பிர்சசனையின் ஒரே காரணம் என்பது வறட்டு வாதம் எனப்தில் தப்பில்லை. ஆனால் இவை பிர்ச்சனையை மக்கள் உணரவிடாமல் தடுக்கும் வலி நிவாரணி போதை வஸ்துக்கள் என்பதிலும் அவை எதிர்க்கப்பட வேண்டும் என்பதிலும் எமக்கு மாற்றுக் கருத்தில்லை.


//பொருளாதாரமும், கல்வி அறிவும் உயர்ந்தால் ஏற்றத் தாழ்வுகள் தானாய் மறையும்.//

எப்படி? BNI ரொம்ப நல்லவர் அதனால் அவர் சொலறது ஏத்துக்கனும்னு நாங்க ஏத்துக்குறதா? அய்யா இந்த அம்சத்தில் நாங்கள் எழுப்பிய ஒரு கேள்விக்குகூட நேர்மையாக இது வரை நீங்கள் பதில் சொன்னதில்லை ஆனால் ஜல்லியடிப்பதை மட்டும் நிப்பாட்டக் காணும்.//ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ வேண்டும். விலங்கு போல் ஊருக்கு ஒன்று என்று வாழக் கூடாது என்ற கோட்பாடெல்லாம் எங்கிருந்து வந்தது. //

முந்தைய சமூகம் நல்ல விசயங்களையும் கொண்டுள்ளது கெட்ட விசய்ங்களையும் கொண்டுள்லது சமூகம் அடுத்தக்கட்டத்துக்கு போகும் இவற்றில் தனது புதிய சமூகத்துக்கு தேவையானதை மட்டும் எடுத்துச் செல்லும்(எ-கா: பொதுவுடைமை சமூகம் to ஆண்டான் அடிமை சமூகம் மாற்றத்தில் பொதுவுடைமை, ஆண்-பெண் சம உரிமை ஆகியன் விடுபட்டன, மாறாக தனியுடைமை, பெண்ணாடிமைத்தனம், நிறுவனப்படுத்தபட்ட மதம் ஆகியன் உருவாகி சென்றன.

இதையெல்லாம் சுத்தமான ஒரு ஸ்கேல் கொண்டு அளந்து இது போகலாம் போகக் கூடாது என்று பார்ப்பது சிறுபிள்ளைத்தனம். சமூக பரிணாமத்தின் உண்மைகளை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் வேண்டும். அதனடிப்படையில் இது ஆத்திகத்திற்க்கான் காலம் அல்ல. விசயம் அவ்வள்வுதான். விஞ்ஞான வளர்ச்சி ஏற்கனவெ கடவுளின் இருப்பை பெரும் பங்கு கேள்விகுறியாக்கியுள்ளது. மீது கடவுள் ஒழிய மிச்சமிருக்கும் இடம் சமூக பிரச்சனைகள்தான் அது சோசலிச சமூகத்தில் சரி செய்யப்படும் போது கடவுள் என்பதன் தேவை தானே ஒழிந்து விடும்.
//இல்லை என்று வெற்று வாழ்க்கை எல்லாரும் வாழத் தொடங்கினால், காட்டுமிராண்டித்தனம் மிகுந்து ஒருவரை ஒருவர் அடித்துக் கொல்லும் நிலைதான் மிஞ்சும்.//

கடவுள் இல்லை என்று பெரும்பான்மையினர் நம்பும் ஐரோப்பிய நாடு(நார்வே அல்லது அயர்லாந்து என்று நினைக்கிறேன் - 70%) ஒன்றில் இப்படி பிரச்சனை வந்தமாதிரி தெரியவில்லை. பூசாரிகளின் வருமானம், ஆளும் வர்க்கத்தின் அதிகாரம் பறி போய்விடும் என்று சொல்லுங்கள் அதுதான் உண்மை.


மற்றப்டி இந்து பார்ப்பனிய கடவுளரில் பெரும்பகுதி ஆதிக்க அடக்குமுறையின் வரலாறூ என்பதேலேயே அவை மிக அசிங்கமான பின்புலத்தை கொண்டுள்ளன. இது நாத்திகர்களின் குற்றம்ல்ல. அந்த கடவுளர்களை உருவாக்கிய அல்லது அவற்றின் உண்மையான வரலாற்றை சிதைத்து உருமாற்றிய(ex: முருகன்) பார்ப்ப்னியத்தின் குற்றம். எனவே இந்த குற்ற்ச்சாட்டுகளை அவர்களை நோக்கி ஏய்யவும். :-))//முதலில் கல்வி அறிவு எல்லோருக்கும் கிட்டட்டும். //

நல்ல எண்ணம் ஆனால் அனைவருக்கும் கல்விய்றிவு எப்படி சாத்தியம் என்பதை BNI விளக்கினால் நாம் மன நிம்மதியடைய வழி கிடைக்கும்.

"புரட்சி வாழ்க!!, கடவுளும் அவரால் காப்பாற்றப்படும் சுரண்டல்க்காரர்களும் ஒழிக!!"

அசுரன்

Anonymous said...

//பலர் போற்றும் தலைவரை கயவர் என்று சொல்வதையும், பலர் வணங்கும் தெய்வங்களை விபச்சாரி என்று சொல்வதையும் தான் வேண்டாம் என்கிறேன்.
//

பெரியார் மக்களின் விடுதலைக்கு தனது வாழ்நாள் முழுவதும், இறந்த பின்னும் கூட போராடுகிறார். உங்கள் கடவுளகள் யாருக்காக எங்கு போராடினார்கள். இருவரையும் ஒன்றாக வைத்து பெரியாரை அவமானப்படுத்துவதை வன்மையாக கண்டிக்கிறேன்.

அசுரன்

Anonymous said...

BNI,

தனிப்பட்ட கடவுள் நம்பிக்கையை எதிர்ப்பதும் அந்த முரன்பாட்டை முன் கொண்டு வருவதும் எமக்கு விருப்பமில்லாத விசயம் ஆனால் கடவுள் ந்ம்பிக்கைக்கு அடிப்படையின்றி வக்காலத்து வாங்கிக் கொண்டு நாத்திகம் முதலான விசயங்களை விமர்சனம் செய்யும் போது பார்த்துக் கொண்டிருக்க முடியாது.

இதே தமிழ்மணத்தில் கடவுளைப் பற்றி பேசும் பலரை நாங்கள் தொந்தரவு செய்வதில்லை. அவை அவர்களின் தனிம்னித நம்பிக்கைக்கள்.

So, Please stop here the discussion. You put your view. and I put my view. It is tallied. We have lots more issues(like tha one we have on globalisation) to discuss.

making this issue of God come in to fore will deviate the life threating problems of our people.

If my understanding is correct then we both came to Thamizmanam to discuss people problem. And this article is not in the purview of our Aim. Correct..

hope you understand. :-))


அசுரன்

said...

அசுரன்,

//இது நம்பிக்கை கிடையாது. உண்மை. கடவுள் இருப்பதைத்தான் இது வரை யாரும் நிரூபிக்கவில்லை.//

கடவுள் இல்லை என்பதையும் யாரும் நிரூபிக்கவில்லை. துன்பம் நீங்கி இன்பம் வந்தால், கடவுள் செய்தது என்பது சிலர் நம்பிக்கை, சிலருக்கு வேறு மாதிரி நம்பிக்கை.

//கோடி மக்கள் நம்பிக்கை வைத்திருந்த வர்ணாஸ்ரம தீண்டாமையை அன்றைக்கு முற்போக்காளர்கள் எதித்த போதும் நீங்கள் இப்படித்தான் பேசியிருப்பீர்களா//

கடவுளை ஏளனம் செய்யாதே என்பதை சாதீய ஒடுக்குதலுடன் சேர்த்து பார்ப்பது தவறு. எனக்கு பிடித்த கடவுளை ஏளனம் செய்யாதீர்கள் என்பது மட்டும்தான் நான் சொல்வது.

//ஆனால், அந்த சமூக பிர்ச்சனைகளுக்கு தீர்வு தேடாமல் அதை மறக்கடிக்கும் கடவுள் என்ற அபினுக்கு//

கடவுள் சமூக பிரச்சனையை மறைக்கும் அபினா? அதெப்படி சார்? கடவுளை வழிபடும் ஒரு குறிப்பிட்ட இனத்தினரை பழிக்கவே நம் பதிவுலகில் கடவுளை நையாண்டி செய்கிறார்கள். நான் சொல்வது போல் வீண் விதண்டாவாதம் செய்கிறார்கள்.

//விபூதி பூசுவதுதான் அவர்களின் இழிநிலைக்கு ஒரே காரணம் என்பது, கடவுள் நம்பிக்கைதான் சமூக பிர்சசனையின் ஒரே காரணம் என்பது வறட்டு வாதம் எனப்தில் தப்பில்லை. ஆனால் இவை பிர்ச்சனையை மக்கள் உணரவிடாமல் தடுக்கும் வலி நிவாரணி போதை வஸ்துக்கள் என்பதிலும் அவை எதிர்க்கப்பட வேண்டும் என்பதிலும் எமக்கு மாற்றுக் கருத்தில்லை.//

கடவுள் போதை வஸ்து என்பதில் எனக்கு துளி கூட உடன்பாடில்லை. விளக்கமாக பதிவு போட்டால் படித்து கருத்து கூறுகிறேன். ஒருவன் கடவுளை கும்பிட்டு 'அவன் காப்பாத்துவான்' என்று ஒரு நம்பிக்கையில் வாழ்வது, எப்படி அவனின் 'இழி' நிலைக்குக் காரணமாகும்?

//எப்படி? BNI ரொம்ப நல்லவர் அதனால் அவர் சொலறது ஏத்துக்கனும்னு நாங்க ஏத்துக்குறதா? அய்யா இந்த அம்சத்தில் நாங்கள் எழுப்பிய ஒரு கேள்விக்குகூட நேர்மையாக இது வரை நீங்கள் பதில் சொன்னதில்லை ஆனால் ஜல்லியடிப்பதை மட்டும் நிப்பாட்டக் காணும்.//

ஜல்லின்னா? ஜால்ராவா? சரி விடுங்க. நான் யாருக்கும் ஜால்ரா போடுவதில்லை. என்னாலான ஒரு கடுகளவு நன்மையேனும் செய்ய ஆசைப்பட்டு எழுத ஆரம்பித்ததுதான். ஆமாம், பொருளாதாரமும்/கல்வியும் கிடைக்க வழிபண்ணா தானா முன்னேறுவாங்க என்பதில் என்ன தவறு? அந்த வழிபண்ணுதலை அரசையும்/அதிகாரியையும் செய்ய வைக்கணும் - அங்க தான் GAP இருக்கு.
இதில் கடவுள் நம்பிக்கை எங்கே புகுந்து கெடுக்குது என்பது எனக்கு விளங்கவில்லை.

//சமூக பரிணாமத்தின் உண்மைகளை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் வேண்டும். அதனடிப்படையில் இது ஆத்திகத்திற்க்கான் காலம் அல்ல. விசயம் அவ்வள்வுதான். விஞ்ஞான வளர்ச்சி ஏற்கனவெ கடவுளின் இருப்பை பெரும் பங்கு கேள்விகுறியாக்கியுள்ளது//

நீங்கள் சொல்லும் விஞ்ஞான வளர்ச்சியை வழங்கும் பழுத்த விஞ்ஞானிகளில் பெரும்பான்மையானவர்களும் கடவுள் அன்பர்கள் தான் என்பதை நினைவில் கொள்க. பூமி, பூமியில் முதல் உயிர் எப்படி உருவானது என்பது எல்லாம் இன்னும் பல theory வடிவில் தான் உள்ளது என்பதையும் நினைவில் கொள்க.

//நல்ல எண்ணம் ஆனால் அனைவருக்கும் கல்விய்றிவு எப்படி சாத்தியம் என்பதை BNI விளக்கினால் நாம் மன நிம்மதியடைய வழி கிடைக்கும்//

வீண் விதண்டாவாதங்களில் நேர விரையம் செய்யாமல், அனைவரும் ஆக்க பூர்வமாக பணி செய்தால் சாத்தியங்கள் தானாய் தெரியும். கடவுளைப் பழிப்பதையும், பெரியாரை இகழ்வதையும் விட்டு விட்டு ஊரில் இருக்கும் உண்மையான பிரச்சனைகளை எழுத வேண்டும்.

இணையத்தில் இருக்கும் படித்தவரையே convince செய்ய முடியவில்லை என்றால் எல்லாமே வீண் விதண்டாவாதங்கள்தானே ?
அதைத் தான் குறைக்க சொல்கிறேன்.


//"புரட்சி வாழ்க!!, கடவுளும் அவரால் காப்பாற்றப்படும் சுரண்டல்க்காரர்களும் ஒழிக!!"//

கடவுள் பெயரால் சுரண்டுபவர்கள் ஒழியட்டும் சரி. கடவுள் ஏன்யா ஒழியணும்?
இதுக்கு கண்டிப்பா ஒரு ஆராய்ச்சி பதிவு நீங்க போட்டே ஆவணும். கடவுள் பக்தி ஏன் ஒருவனை கல்வி/பொருளாதாரத்தில் இருந்து தள்ளி வைக்கும்?

ஓம் நமச் சிவாய!! :)

said...

//பெரியார் மக்களின் விடுதலைக்கு தனது வாழ்நாள் முழுவதும், இறந்த பின்னும் கூட போராடுகிறார். உங்கள் கடவுளகள் யாருக்காக எங்கு போராடினார்கள். இருவரையும் ஒன்றாக வைத்து பெரியாரை அவமானப்படுத்துவதை வன்மையாக கண்டிக்கிறேன்//

நல்ல நகைச்சுவை இது. பெரியாரை படைத்ததே என் கடவுள் தானே அசுரன்!
பெரியார், கடவுள் சிலைகளை செருப்பால் அடித்ததெல்லாம் நாகரீகம் இல்லாத செயல். என்ன சாதித்தார் அதனால்? சில மக்களை முன்னேற்றினார் சரி. ஆனால், அதர்க்கு கடவுளை பழிப்பதுதான் வழியா?

80 வருட பகுத்தறிவு வாழ்க்கை வாழும் கருணாநிதிக்கு இருக்கும் பக்குவம் ( அவர் வீட்டம்மையை பக்தையாக இருக்க அனுமதித்தது ) ஏன், இணையத்தில் இருக்கும் இளைஞர் படைக்கு இல்லை?

கடவுள் இல்லை என்பது ஒரு fashio statement ஆகி விட்டது தான் காரணம் என்று நினைக்கிறேன்.

said...

//தனிப்பட்ட கடவுள் நம்பிக்கையை எதிர்ப்பதும் அந்த முரன்பாட்டை முன் கொண்டு வருவதும் எமக்கு விருப்பமில்லாத விசயம் ஆனால் கடவுள் ந்ம்பிக்கைக்கு அடிப்படையின்றி வக்காலத்து வாங்கிக் கொண்டு நாத்திகம் முதலான விசயங்களை விமர்சனம் செய்யும் போது பார்த்துக் கொண்டிருக்க முடியாது.//

நான் சொல்வது போல் ஆத்தீகமும் நாத்தீகமும் அவரவர் நம்பிக்கை. ஒருவர் மற்றொருவரை தேவையற்ற நையாண்டி பண்ணாமல், இரு தரப்பையும் மதித்து போங்கள் என்பதே என் பதிவின் கரு.

//If my understanding is correct then we both came to Thamizmanam to discuss people problem. And this article is not in the purview of our Aim. Correct..//

Obsolutely. I came in 4 months back to try and spread some positive air and do some positive things. I didnt get a chance to write about anything useful yet. I took a diversion after seeing all the useless chats here.

For a country like us, where there is no system to take care of the welfare of regulars, every one of us should join hands to create the system and make it work.

I will continue my rants and hope someone somewhere is affected positively someday.

-BNI

Anonymous said...

ellaam surveysanukke velicham!

said...

anony,

//ellaam surveysanukke velicham! //

enna solreenga? surveysan surveyla kadavul irukkarnu illa neraya per solli irukkaanga?

inga prachanai adhu illa. vevveru nambikkai iruppavargal adichukkaadheenga enbadhe.

Anonymous said...

உங்கள் சமாதானப் பேச்சிற்குப் பெரியாரின் பதில்...அவருடைய நெருங்கிய நண்பர்கள் தயவுசெய்து கடவுள் மறுப்பை மட்டும் விட்டு விடுங்கள் நாங்களும் உங்கள் மற்ற கொள்கைகளை ஆதரிக்கிறோம் என்று சொன்னபோது அவர் சொன்னார்.என்ன சொன்னாலும் அவர்கள் மந்திரம் கடவுள் என்று சொல்லி கடவுள் பின்னாடித்தானே ஒளிந்து கொள்கிறார்கள்,அதைவைத்துத்தானே நம்மை ஏமாற்றிப் பயமுறுத்தி நமது மூளைக்கே விலங்கு போட்டிருக்கிறார்கள்.அதை உடைக்காமல் நாம் எப்படி மனிதர்களாக வாழமுடியும் என்றார்.
பெரியாரால் எந்த ஒரு தனி மனிதருக்காவது கெடுதல் நடந்திருக்கிறதா?தனிச்சொத்தோ பொதுச்சொத்தோ சேதம் என்று சொல்லுங்கள் பார்க்கலாம்?

இவ்வளவு உத்தமம் பேசுகிறவர்கள் சிதம்பரம் கோவிலிலே ஒரு வாழ்நாள் சிவபக்தன் தமிழிலே திருவாசகம் பாடமுடியாமல் தவிக்கின்றாரே அதற்கு என்ன பெயர் அப்பட்டமானத்திமிரா அயோக்கியத்தனமா?யார் கட்டிய கோவில்?
பெரியார் பக்தி என்பது தனி-சொந்த விசயம் ஆனால் ஒழுக்கம் என்பது பொது அனைவரையும் பாதிக்கின்ற விசயம்.எப்பொழுது சொந்தவிசயம் பொதுவாக எல்லோரையும் பாதிக்கிறதோ அப்போது அனைவரும் சமம் ஆணும் பெண்ணும் சமம் என்றுதானே போரடினார்.இதற்கு ஏனய்யா அவரை இந்தத் திட்டு படித்த பெரியமனித வேசம் போடுபவர்கள் எல்லாம் திட்டுகிறீர்கள்?
உங்க அப்பாவை,தாத்தாவை ஒரு பொடியன் டேய் அதைக்கொண்டுவாடான்ன உங்க ரெத்தம் கொதிக்காதா?
கடவுள்னு பேரைச்சொல்லிக்கொண்டு இன்றைக்கு நாட்டிலே எவ்வளவு அநியாயம் நடக்குது?யாரவது கேட்கிறீர்களா?படித்தவன் மேதாவியெல்லாம் கால்லே விழுந்த்துலே கும்பிடுகிறீர்கள்?
எல்லாம் அவன் செயல் என்று நம்பிக்கையில்லாமல் பயந்து வாழ்ந்த மந்தைகளை தன்னம்பிக்கையுள்ள மனிதர்களாக்குவதற்காக அவர்கள் காசு போட்டு வாங்கிய பிள்ளையார் சிலைகளை உடத்தார்கள்.
ஊர்வல்த்தில் அமைதியாகப் போய்க்கொண்டிருந்த பெரியார் மீது செருப்பை வீசினார்கள்.அவரது தொண்டர்கள் அந்த செருப்பையே ராமசாமிமேலே வீசினதை ராமர் மேலேவீசினார்கள்.அதப்பெரிய தேர்தல் பிரச்சினையாக்கி மூக்குடை பட்டார்கள்.
பார்ப்பனர்களையும் சாதிவெறியர்களையும் மனிதர்களாக வாழக்கற்றுக் கொடுங்கள் பெரியார் தானாகவேப் போராட்டங்களை நிறுத்திவிடுவார்.

said...

தமிழன்,

//அவர்கள் மந்திரம் கடவுள் என்று சொல்லி கடவுள் பின்னாடித்தானே ஒளிந்து கொள்கிறார்கள்,அதைவைத்துத்தானே நம்மை ஏமாற்றிப் பயமுறுத்தி நமது மூளைக்கே விலங்கு போட்டிருக்கிறார்கள்.அதை உடைக்காமல் நாம் எப்படி மனிதர்களாக வாழமுடியும் என்றார்.
//

எனக்கு புரியாத ஒன்று இதுதான். கடவுளை வைத்து மூளைக்கு விலங்கு போட்டது எப்படி? உதாரணத்துடன் விளக்க முடியுமா?
ஊரில் இருக்கும் சாதிமுறை ஒடுக்குதல் எல்லாம் கடவுள் நம்பிக்கையால் வருவதா?

சாதீய ஒடுக்குமுறை எல்லாம் பொருளாதாரமும், கல்வியும் இன்மையினால் வருவது இல்லையா?
படித்த அம்பேத்காருக்கும் கலாமுக்கும் கிடைக்கும் மரியாதை படிக்காத பிராமண பூசாரிக்கு கிடைக்குமா?

எவனாவது, எழைகளிடம் போய், "டேய், நீ உழைத்து சம்பாதித்ததெல்லாம் இந்த உண்டியலில் போடு. கடவுள் தான் எல்லாம். கடவுளுக்கு பயந்து கிட. முன்னேறாதே" என்று சொல்கிறார்களா?

புரியவில்லை எனக்கு.
புரிந்தால் உங்கள் வழிக்கு வர முயற்சிப்பேன்.

எதை வைத்து கடவுள் நம்பிக்கை ஒருவன் வாழ்வை கெடுக்கிறது என்று கூறுகிறீர்கள்? So, உங்கள் கூற்றுப்படி, தமிழ்நாட்டில் கோயில் குளமெல்லாம் மூடிவிட்டால், ஒளிமயமான எதிர்காலம் வந்துவிடும் என்கிறீர்களா?
நல்லா யோசிச்சு ஒரு பதில் சொல்லுங்க சார்.

அவரவர் நம்பிக்கை அவரவர்க்கு என்று எண்ணி வாழும் பக்குவம் அனைவருக்கும் வரவேண்டும்.

Anonymous said...

உங்கள் கேள்விகள் நியாயமானவை.அவற்றிகுப் பதில் சொல்ல வேண்டியது கடமை.
சதுர் வர்ணம் மாயா சிருஷ்டம் என்ற சுலோகம் கீதையில் வருகிறது.அதன் சுருக்கமான பொருள் நான்கு வருணங்களை நான் தான் படைத்தேன்,நானே நினைத்தால்கூட மாற்ற முடியாது என்று வருகிறது.
அடுத்து இன்னொரு சுலோகத்தில் கடவுள் மந்திரத்திற்குக் கட்டுப்பட்டவர் மந்திரம் பிராமணனுக்குக் கட்டுப்பட்டது ஆகவே பிராமணந்தான் எல்லாம் என்ற மாதிரி வருகிறது.
இவை வெறும் சுலோகங்களாக இருந்திருந்தால் பரவாயில்லை அதுவே வாழ்க்கை முறையாய் இருப்பதுதான் பிரச்சினை.
நீங்கள் சொன்ன அதே கேள்விதான்.ஒரு படித்த அறிவாளியா இல்லை நூல் அணிந்த பார்ப்பனரா என்று எந்தக் கோவிலில் வேண்டுமானாலும் கேட்டுப்பாருங்கள் அங்கே நூலுக்குத்தான் மரியாதையே தவிர மனிதருக்கு அல்ல.
பெரிய குடும்பத்தைச் சேர்ந்த படித்த பண்பாடுள்ள முன்னாள் சபாநாயகராக இருந்த பக்தியுள்ள பழனிவேள் ராஜன் மதுரையிலே சொன்னார் முன்பு பத்தடி தள்ளி நிற்கச்சொல்வார்கள் அதிமுக ஆட்சியிலே என்னை இன்னுங்கொஞ்ச்ம் தள்ளி நின்னுங்கோ என்கிறார்கள் என்று.
பாபு ஜகஜீவன்ராம் ஆரம்பமுதல் இந்தியாவின் பலதுறைகளில் அமைச்சராக இருந்தவர்.அவரை அழைத்து சிலைதிறக்கச் சொன்னார்கள் ஆனால் அந்த சிலை தீட்டுப் பட்டுவிட்டதென்று பெனாரச் இந்துப் பல்கலைக் கழக மாணவர்கள் கங்கை ஜலத்தைக் கொண்டு கழுவினார்கள்.
அண்மையிலே ஒரு நீதிபதி ஒரு தாழ்த்தப்பட்டவர் நீதிபதியாக அந்த நாற்காலியிலே அமர்ந்திருந்தார் என்பதற்காக அதை மாற்றச்சொன்னாராம்.
சரி நமது மிக்க மரியாதைக்குரிய படித்த அறிஞர் ஜனாதிபதி கலாமுக்கு வருவோம்.ஒருவர் அவரைக் கீழே உட்காரவைத்து அவர் நாற்காலியிலே உட்க்கார்ந்து அதை வேண்டுமென்றே படம் எடுத்துப் பத்திரிக்கைகளில் போட்டால் அவர் யாராக இருக்கக்கூடும் சொல்லுங்கள்.இப்போது அவமானப்பட்டிருக்கும் நடமாடுங் கடவுள்தான்.
கடவுள் நம்ம்பிக்கையால் என்ன குறை என்று கேட்கிறீர்களே எவ்வளவு பொருள் நேரம் உழைப்பு தேர் திருவிழா என்று என்ன பணக்காரர்களா செலவு செய்கிறார்கள்?
காந்தியார் கோவில்கள் பற்றி என்ன சொன்னார் தெரியுமா?விபச்சாரங்கள் ஆரம்ப்மாகுமிடம் என்றார்.
கடவுளும் பெரும்பான்மை சினிமாக்களும் தமிழ்நாட்டில் விளைவிக்கும் கேடுகள் பற்றி யோசித்துப் பாருங்கள்.

said...

தமிழன்,

விளக்கம் கொடுத்ததர்க்கு நன்றி.

//சதுர் வர்ணம் மாயா சிருஷ்டம் என்ற சுலோகம் கீதையில் வருகிறது.அதன் சுருக்கமான பொருள் நான்கு வருணங்களை நான் தான் படைத்தேன்,நானே நினைத்தால்கூட மாற்ற முடியாது என்று வருகிறது.
அடுத்து இன்னொரு சுலோகத்தில் கடவுள் மந்திரத்திற்குக் கட்டுப்பட்டவர் மந்திரம் பிராமணனுக்குக் கட்டுப்பட்டது ஆகவே பிராமணந்தான் எல்லாம் என்ற மாதிரி வருகிறது.
//

சுலோகமெல்லாம் தெரியாது எனக்கு. பிராமணன் மட்டும் தான் எல்லாம் என்று சுலோகம் சொல்லி இருந்தால், அந்த சுலோகம் நமக்கு தேவை இல்லாத ஒன்று என்று ஒதுக்க வேண்டியதுதான்.

இந்த சுலோகத்தை உருவாக்கி, கள்ளத் தனமாக மக்களை இவ்வளவு காலமாக கடவுளின் பெயர் சொல்லி ஏமாற்றி இருக்கிறார்கள் என்கிறீர்கள்.

கடவுளின் messenger நான் தான், so, என் பேச்சைக் கேட்டுக் கிட என்று சொல்லியதை, பலர் நம்பி ஏமாந்திருக்கலாம்.

கடவுள் இல்லை என்றே வைத்துக் கொள்வோம். இல்லாத ஒன்றை இருக்கிறது என்று சொல்லி, இவ்வளவு காலம் குளிர் காய்ந்திருக்கிறது ஒரு இனம். ஆகட்டும் சரி. ஆனால், அதனால் எப்படி ஒருவன் முன்னேற்றத்துக்கு தடை வந்தது?

நீங்கள் சொல்வது போல் கலாமை, மதிக்காமல், நம்ம மடாதிபதி சார், கலாமை கீழே உட்கார வைத்து இவர் இருக்கையின் மேல் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருக்கலாம்.
கலாம், இறை நம்பிக்கை உடையவர். அவருக்கு உண்மையில், மடாதிபதி மேல் பற்று கூட இருந்திருக்கலாம். அவர் அவமதிக்கப்பட்டார் என்று அவர் நினைத்தாரா என்ன?

கலாமை யார் மதிக்காலும் மதிக்காவிட்டாலும், அவர் முன்னேறியவர். பலருக்கு எடுத்துக் காட்டு அவர்.

காந்தி கோயில்களைப் பற்றிச் சொன்னதாக நீங்கள் எழுதியிருப்பது உண்மையா? இணையத்தில் ஆதாரம் உள்ளதா? நான் படித்த சுயசரிதையில், அவர் பெரிய ஆன்மீக வாதி என்றல்லவா எனக்குத் தோன்றியது.

//கடவுள் நம்ம்பிக்கையால் என்ன குறை என்று கேட்கிறீர்களே எவ்வளவு பொருள் நேரம் உழைப்பு தேர் திருவிழா என்று என்ன பணக்காரர்களா செலவு செய்கிறார்கள்?//

தேர், திருவிழா எல்லாம் ஒரு கலாச்சார சம்பவமாக ஏன் பார்க்கக் கூடாது. அழகான வைபவங்கள் அவை. பண விரயம் இருந்தாலும், பலருக்கு வேலை வாய்ப்பும் சந்தோஷமும் தருகிறது.
கேளிக்கைகளும், நமக்கு என்று அடையாளம் சொல்லும்படியான மிச்சம் இருக்கும் சில கலைகளை, இந்தத் திருவிழாச் சமையத்தில் மட்டும் தானே பார்க்க முடிகிறது.

திருப்பதிப் பெருமாளின் உண்டியல் இல்லையென்றால், நமது கோடீஸ்வரர்கள் பலரின் கள்ளப் பணமும், நல்லப் பணமும், அவ்வளவு சுலபத்தில் ஏழைகளை சென்றடையுமா?

said...

அரவிந்த் நீலகண்டன் அவர்களே!

உங்கள் தமிழ் வெறியை பார்த்தல் நீங்களே ஒரு ‘தமிழனா’ என சந்தேகம் வருது.
இல்லையென்றால் நீங்களும் தமிழ்நாட்டுக்கு குடிவந்த தெலுங்கா இந்திக்காரரா?

தமிழ் OBC பட்டியல் இடம் பெரும் ‘தமிழ்ர்கள்’ உண்மையாக தமிழர்களே கிடையாது. இந்தி தெலுங்கு கன்னடம் பேசுபவர் ஏராளம்.

கருணாநிதி வீட்டில் பேசும் மொழி எது? தமிழா? இல்லை தெலுங்கு!
வைகோ வீட்டில் பேசும் மொழி எது? தமிழா? இல்லை தெலுங்கு!
ராமதாஸ் வீட்டில் பேசும் மொழி எது? தமிழா? இல்லை தெலுங்கு!
பெரியார் ? - கன்னடம்
பெரும்பாலுமான முஸ்லீம் OBCகள் ? -இந்தி

நீங்கள் வெறுக்கும் ’பாப்பான்’கள் வீட்டில் என்ன மொழி பெசுபாவர்கள்? தமிழே!

சரி, விமானநிலையம் சென்றால் அங்கு இட ஒதுக்கீட்டில் வந்த ஊழியர்கள் எந்த மொழி பேசுவார்கள்? தமிழா? இல்லை இந்தி!!!

தி மு க தேர்தலில் என்ன தமிழுக்கு என்ன உறுதிமொழி அளித்தார்கள் ?
விமாங்களில் தமிழ் அறிக்கைகள் கொண்டுவருவது.

வந்ததா? இல்லை.

இன்னொரு உண்மை. கருணாநிதி அவர் வாழ்நாளில் சாடும் சமூகம் எது? தமிழ் பேசும் சமூகம் பெரும்பாலுமானோர்.

அவர் தலையில் தூக்கி போற்றும் பெரும்பாலும் யார்? இந்தி அரசியல் வாதிகள்.

இப்போது தெலுங்கு அரசியல் வாதிகள் நடத்தும் சாதி கலவரத்தை சிந்திப்போம் :

உத்தப்புரத்தில் பாப்பான் வந்தானா ? இல்லை
அம்பேத்கர் சட்டக்கல்லூரியில்? இல்லை..
கீரிப்பட்டியில் ? இல்லை

ஏன்? எப்படி? தமிழ்நாட்டில் உள்ள தெலுங்கு அரசியல் வாதிகளுக்குத்தான் தெரியணும்...