
உயிர்வலி என்ற பதிவை இன்று படித்தேன்.
Balachandran என்ற பத்திரிகையாளரின் பதிவு அது.
அவர் profileல் "கிராமத்தான் என்பதில் பெருமை கொள்கிறேன். பத்திரிகையாளனாக பணி. முகத்தில் தாடியுடனும், கையில் காமிராவுடனும் எங்கேயாவது அலைந்து கொண்டிருப்பேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.
உயிர்வலி என்ற பதிவில் தெரு ஓரத்தில் படுத்துக் கிடந்த ஒரு 105 வயது முதியவரின், கஷ்டங்களையும், அவருடன் நடந்த உரயாடலையும் எளிமையாக எழுதி இருக்கிறார்.
கவனிக்க ஆள் இல்லாத முதியோர்கள் படும் துயரங்கள் பற்றி எடுத்துக் காட்டும் மிக நல்ல பதிவு. படித்து முடித்தவுடன் ஒரு 'கனம்' மனதை அழுத்தியது உண்மை.
அவர் எடுத்த புகைப்படங்களும் மிக மிக அருமை.
பின்னூட்டங்கள் ஒன்றும் அந்தப் பதிவில் காணாததால், I thought, you guys might have not seen the post.
So, உங்களுக்காக அந்த பதிவின் லிங்க் இங்கே: உயிர்வலி
இவரது பதிவில் இருக்கும் எல்லா புகைப் படங்களும் அருமை. (well, he is a professional, it better be அருமை :) )
பாலச்சந்தர், இதைப் படிக்க நேரிட்டால், நல்ல புகைப்படம் எடுப்பது எப்படின்னு ஒரு பதிவையும் போடுங்களேன். ரொம்ப உதவியா இருக்கும். நன்றி!
4 comments:
velambaram mattumdhaana ippellaam?
http://tvpravi.blogspot.com/2007/01/blog-post.html
அன்புள்ள BNI,
மகாலட்சுமி பற்றிய இறுதி பதிவு. பாருங்களேன்.
அன்புடன்
ரவி
அய்யா தீச்செய்தி இந்தியா. இது நல்ல பேருய்யா. எனக்கு இலவச விளம்பரம் அளித்ததற்க்கு மிக்க நன்றி.
குமுதம் ரிப்போர்ட்டர்'ல் ஒரு செய்தி. பன்னாட்டு நிறுவனம் ஒன்று சோளக் கொல்ல விளம்பரம் வெளியிட்டிருக்கு. எப்படித் தெரியுமா. ஒர்த்தவம் முதுவு மேல ஒத்த சோளப் பயிரு ஒன்னு இருக்குது. அவனால தூக்கவே முடியல. அவ்ளோ பெரிசு. அதாவது அவம் தர்ர சோள வெதெய வெதச்சா ஒரு மணி அம்மாம் பெருசா இருக்குமாம். அப்பனா ஒரு சோளத் தட்டை எம்மாம் பெருசு இருக்கும்? அத்த ஒரு யானை தூக்கிம் போவுது, மேல ஒர்த்தவம் ஒக்காந்துனு ஓட்டிம் போறாம்.
இத்தப் பாத்தாம் பாருங்க நம்மூரு விவசாயிங்க. ஒரே அறுவடையில பணக்காரனா ஆயிடலாம்னு வெதச்சி இன்னக்கி ஓட்டாண்டியா பூட்டானுங்க. அக்ரிகல்ச்சர் டிபார்ட்மென்ட் ஆபீசருங்கள்ளாம் வெள்ளக்காரம் மயிர ஒவ்வொன்னாப் புடிங்கி கத்தகட்டி வித்துக்கிட்டிருந்தாங்கன்னு தகவல்.
உங்களோட இனையதள வண்ணம் எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது. எனக்கு கம்ப்யூட்டரைப் பற்றி ஒன்னும் தெரியாது. ஆங்கிலமும் அவ்ளவா வராது. எதை எதுங்கூட இனைக்கனும்'ன்ற வெவரமும் பத்தல. அதனால இன்னா அதான் நீங்க கீறீங்களே!
பாலா @ திங்கள் சத்யா,
//அக்ரிகல்ச்சர் டிபார்ட்மென்ட் ஆபீசருங்கள்ளாம் வெள்ளக்காரம் மயிர ஒவ்வொன்னாப் புடிங்கி கத்தகட்டி வித்துக்கிட்டிருந்தாங்கன்னு தகவல்.
//
இந்த மாதிரி ஆளுங்கள தோலிரிச்சு காட்டத்தான் பேட்நியூஸ்னு பேரு வச்சு எழுத ஆரம்பிச்சேன்.
//உங்களோட இனையதள வண்ணம் எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது. எனக்கு கம்ப்யூட்டரைப் பற்றி ஒன்னும் தெரியாது. ஆங்கிலமும் அவ்ளவா வராது. எதை எதுங்கூட இனைக்கனும்'ன்ற வெவரமும் பத்தல. அதனால இன்னா அதான் நீங்க கீறீங்களே!
//
உங்கள் இணையதளத்துக்கும் இந்த மாதிரி கலர் ஒத்து வரும். பொட்டு வா டெம்ப்ளேட் அந்த புகைப்படங்களுக்கு
ஒரு கம்பீரம் தராது.
நீங்க தொடர்ந்து எழுதுங்க. என்னாலான விளம்பரம் கண்டிப்பாக தருகிறேன். இப்போதைக்கு தமிழ்மணம்,தேன்கூடு மாதிரி இடத்துல பதிவை இணைங்க.
'நல்ல புகைப்படம் எடுப்பது எப்படி'ன்னு ஒரு தொடர ஆரம்பிச்சு, சந்துல அப்பப்போ 'உயிர் வலி' மாதிரி போட்டீங்கன்னா நிறைய பேர ரீச்சாகும்.
Post a Comment