Tuesday, February 20, 2007

மரணத்துக்கு பயந்திடு, தயாராகு, திட்டமிடு, உடனே!

மரணத்தை எண்ணிக் கலங்கிடும் விஜயா, மானிடர் ஆன்மா மரணம் எய்தாது. மறுபடிப் பிறந்திருக்கும், என்று கண்ணன் அர்ஜுனனைப் பார்த்து பாடுவது போல் ஒரு காட்சி கர்ணன் படத்தில் வரும். அடுத்தவரின் மரணத்துக்கு காரணமாவதைப் பற்றி கலங்காதே, கடமையை செய், என்று எடுத்துக் கூறும் பாடல்.

மரணம் ஒரு சாதாரண விதிக்கப்பட்ட நிகழ்வுதான். அதை எண்ணிப் பயந்து, நம் வாழ் நாளில், வாழ வேண்டிய நாட்களை அனுபவிக்காமல் இருப்பது முட்டாள் தனம்.

ஆனால், மரணம் அப்படியே புரம் தள்ள வேண்டிய விஷயமுமல்ல.

நாம் முற்றும் துறந்த சன்யாசிகளாக இருந்தால், மரணத்தை கண்டு பயப்படத் தேவையில்லை.

நம்மை சுற்றி ஒரு சார்பு வட்டம் இருக்கும் போது, மரணத்தை பயந்து தான் ஆக வேண்டியிருக்கிறது.

ஒரு பத்து நிமிடம் தனியாக அமர்ந்து சிந்தித்துப் பாருங்கள். இந்தக் கணம், உங்களுக்கு மரணம் வாய்த்தால் (god forbid), உங்களைச் சுற்றி என்ன நடக்கும்?

உங்கள் வாழ்க்கைத் துணை, பிள்ளைகள், பெற்றோர், உறவினர் என்று உங்களை சுற்றி இருக்கும் வட்டத்தில் வாழ்பவர்களின் அடுத்த சில நாட்கள் எப்படி இருக்கும்?

மனதளவில் துக்கம் வாட்டி எடுக்கும் அவர்களை.
அதர்க்கு உங்களால் ஒன்றும் செய்ய முடியாது.
ஒரு விதத்தில், அவர்கள் துக்கப் படுதலால், நீங்கள் வாழ்ந்த வாழ்வு அர்த்தமானது என்று புலப்படும்.
பலர் துக்கப்பட்டால், நீங்கள் வாழ்ந்த விதம் ஒரு எடுத்துக்காட்டாக இருந்தது என்றும் புலப்படும்.

உங்கள் பிரியமானவர்கள் மனதளவில் படும் துன்பத்திர்க்கு உங்களால் ஒன்றும் செய்ய முடியாது. செய்யத் தேவையுமில்லை. காலம் அதர்க்கான மருந்தை தினம் கொடுத்து, அவர்கள் வேதனையை மறையச் செய்யும்.

ஆனால், இது நாள் வரையில் நீங்கள் தூணாக இருந்து, பொருளாதார ரீதியில் அந்த வட்டத்தை தாங்கிப் பிடித்தவராயிருந்தால் உங்கள் மறைவுக்குப் பிறகு, உங்கள் பிரிய வட்டத்திர்க்கு, வாழ்க்கை பாரமாகிவிடும் அபாயம் இருக்கிறது.

தூணாக இருப்பவர்கள், இந்த 10 நிமிட சிந்தனையில், உங்கள் அன்பு வட்டத்தில் இருப்பவர்களின் பாரம் குறைய என்ன செய்ய வேண்டும் என்று சிந்திக்க வேண்டும்.

நம்மில் பலர், வங்கிக் கணக்கு, பங்குச் சந்தையில் முதலீடு, வீடு, மனை, காப்பீடு, என்று இன்னும் பல வகைகளில் நம் சம்பாத்யத்தை சேர்ப்பவர்கள்.
இன்னும் சிலர், சுய தொழில் செய்தும் வருபவர்கள் - இதில் வரவேண்டியவை, தர வேண்டியவை என்றும் பெரிய கணக்குகள் இருக்கும்.

இந்த கணக்குகள், முதலீடுகள் பற்றி எல்லாம் உங்களுக்கு மட்டும் தெரிந்தால் போதுமா?

அறிவியல் வளர்ச்சி, கணிப்பொறி, internet என்று வளர்ந்து வழும் சூழலில், முன்னர் இருந்தது போல், கையில் ஒரு 'திட' சாட்சியங்கள் கூட இருக்காது (bank passbook, deposit certificates, stock certificate,etc...). எல்லாமே e-வடிவில் தான் இருக்கும்.

திடீரென்று நீங்கள் விட்டுச் சென்றால், உங்களை நம்பி இருப்பவர்கள் நிலை?

அவர்களுக்கு தெரியாத இடங்களில் நீங்கள் முதலீடு செய்து வைத்திருக்கும் பொருள், அவர்களுக்கு கிடைக்காமலேயே போய்விடும் அபாயம் இருக்கிறது.

உங்களை வேதனைப் படுத்த எழுதிய பதிவில்லை இது.

இணைய நண்பன் சாகரன் கல்யாணின், மறைவு எழுப்பிய கேள்விகள் இவை.
என்ன செய்கிறார்கள் அவர் குடும்பத்தினர்?
தேன்கூடு ஆரம்பித்து, வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கிறதே, இப்படி ஒன்று இருப்பது அவர்களுக்குத் தெரியுமா? இன்னும் பல பல கேள்விகள் நெஞ்சில் எழுந்ததால் வந்த பதிவு இது.

நண்பர்களே, வேக வாழ்க்கை இது. ஒரு பத்து நிமிடம் ஒதுக்கி, முதலீடுகளை பட்டியலிட்டு, உங்களைச் சுற்றியுள்ள நம்பிக்கையானவர்களிடம் கொடுத்து வையுங்கள்.


தேவைப் படலாம்! தேவைப் படாமல் இருக்க ஆண்டவன் அருளட்டும்.

வேறு சுலப வழி தெரிந்தவர்கள், உங்கள் கருத்துக்களைத் தெரிவியுங்கள்.

இணையத்தில் வேறு ஏதோ தேடப் போனபோது கண்ணில் பட்ட: மரண கடிகாரம்.

நன்றி!

13 comments:

said...

BNI,

நல்ல பதிவு!

ஒவ்வொருவரும் அதிக பட்சம் 20 மடங்கு ஆண்டு வருமானத்தை ஆயுள் இன்சூரன்ஸ் செய்யலாம். ( எதற்கும் கேட்டு தெரிந்துகொள்ளலாம்)

வீட்டையும் இன்சூரன்ஸ் செய்யுங்கள்.

நீண்ட கால திட்டம் மற்றும் குறுகிய கால திட்டம் இருக்க வேண்டும்.

வீட்டில் மரணத்தை பற்றி பேசுவது தவறு கிடையாது. குழந்தைகள் முன் வேண்டாம்.

said...

சிவபாலன்,

இன்ஷூரன்ஸ் கண்டிப்பா செய்ய வேண்டிய ஒன்று.

செய்து விட்டு, மறவாமல், அந்த விவரங்களை, மற்றவருக்கு தெரிவித்தல் மிக முக்கியம்.

யாருக்கும் தெரியாமல் நன்கொடைகள் செய்யலாம், ஆனால் சேமிப்பு சிலருக்கு தெரிந்துதான் இருக்க வேண்டும்.

Anonymous said...

யோசிக்க வச்சுட்டீங்க.
பயமாவும் இருக்குது.

said...

மிகவும் சிந்திக்க வேண்டிய விசயந்தான். படிச்ச‌தோட இல்லாம கொஞ்சம் ஆச்ஷனும் எடுக்க‌லாம்னு இருகேன்...நன்றி!

Anonymous said...

நான் செய்வது என்னவென்றால், அனைத்து வங்கி, கிரெடிட் கார்ட் கணக்குகள், டிமேட் , ஷேர் விவரங்கள் எல்லாவற்றையும் ஒரு எxசெல் டாகுமென்ட்டாக சேமித்து - பாஸ்வேர்ட் உடன் - மிக மிகநெருங்கிய குடும்பத்தினர்களுக்கு அவர்கள் கணிணியிலோ, மெய்ல் மூலமோ அளிப்பது. அதோடு மட்டுமல்லாமல் அடிக்கடி அதுபற்றி அவர்களிடம் அதுகுறித்து விளக்கமபளிப்பதும் முக்கியம். இதில் பாஸ்வேர்ட் மிக பாதுகப்பாக இருப்பது அவசியம். கணிணி வசதி இல்லாதவர்கள் இந்த டாகுமென்ட்டை ப்ரின்ட் எடுத்து சீல் செெய்து பத்திரமாக வைக்கலாம். மிக மிக அவசியமானதொரு செயலாகும் இது. இன்ஸ்யூரன்ஸ் டாகுமென்ட்டுகளை வீட்டில் அனைவருக்கும் தெரிந்த இடத்தில் அவர்களுக்கு தெரிவித்து விட்டு வைக்கலாம்.

said...

அனானி

--யோசிக்க வச்சுட்டீங்க.
பயமாவும் இருக்குது.--

யோசிப்பது நல்லதே. பயம் தேவை இல்லை.

said...

மாறன்,

--மிகவும் சிந்திக்க வேண்டிய விசயந்தான். படிச்ச‌தோட இல்லாம கொஞ்சம் ஆச்ஷனும் எடுக்க‌லாம்னு இருகேன்...நன்றி!--

என்ன ஆக்ஷன் எடுக்கறீங்கன்னு மத்தவங்களுக்கும் சொல்லுங்களேன். உபயோகமா இருக்கும்.

said...

அனானி,

--ஒரு எxசெல் டாகுமென்ட்டாக சேமித்து - பாஸ்வேர்ட் உடன் - மிக மிகநெருங்கிய குடும்பத்தினர்களுக்கு அவர்கள் கணிணியிலோ, மெய்ல் மூலமோ அளிப்பது.--

நல்ல idea சார். சுலபமா செயல் படுத்தக் கூடியதும் கூட. நன்றி.

said...

இப்போதைக்கு EXcel மாதிரி ஏதாவது ஒண்ணுல கணக்கு வழக்க போடறதுதான் உசிதம்னு தோணுது.

said...

Its sad, not many provided more valuable thought to this?

said...

மிக மிக தேவையான பதிவு...

நம்மில் பலர்... என்னையும் சேர்த்து இப்படித்தான்...

எதுதான் ரகசியம் என்பதில்லை...

said...

நல்ல பதிவு! நன்றி!!

said...

டிபிஆர். ஜோசப், தென்றல்,

நன்றி.