Wednesday, August 15, 2007

தேன்கூட்டில் சில புற்றீசல்கள்

எப்படியெல்லாமோ கஷ்டப்பட்டு, உழைப்பையும், பணத்தையும், சொந்த நேரத்தையும் செலவு செய்து ஒரு அழகான தேன்கூடு கட்டப்பட்டது.

கூட்டைக் கட்டியதும் தன் கடமை முடிந்ததென ராஜாத் தேனீ பறந்து வேறிடம் சென்றது.

தேனீக்களும் தன்னால் முடிந்த தேனை சேகரித்து, கூட்டை நன்றாகவே பேணிக் காத்தன.

ஆனால், யார் கண் பட்டதோ, புற்றீசல்கள் சில அந்த தேன்கூட்டை சூழ்ந்து, தேன் கெட்டுப் போகும் அளவுக்கு தங்கள் விகாரங்களை வித்திட்டன.

கூடு பிழைக்குமா? புற்றீசலின் கனம் தாங்காமல், தரையில் விழுந்து உடையுமா?

ராஜாத் தேனீ, வருத்தத்துடன் மேலிருந்து வட்டமிட்டுப் பார்த்துக் கண் கலங்குகிறது.

...................................................
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்.

புற்றீசல்களை பிய்த்தெடுத்து, தேனீக்கள் வாழ வழி பிறக்கட்டும்!

ஜெய்ஹிந்த்!
...................................................

13 comments:

Anonymous said...

time waste. திருந்தாத ஜென்மங்கள் தேன்கூட்டையும் கெடுக்கும், சொந்த நாட்டையும் கெடுக்கும்.

said...

ஒரு 30 வருடமாக கலங்கிகிட்டு இருக்குமா?

said...

*************************************
புற்றீசல்களை பிய்த்தெடுத்து, தேனீக்கள் வாழ வழி பிறக்கட்டும்!
*************************************

தேனீக்கள் கூட் புற்றீசல்களாக மாறிக்கொண்டிருக்கின்றன. . . .

said...

தேஸிய ஸ¤தந்த்ர தின கங்ராஜுலேஷன்ஸ்-ஜி
வந்த்தே மாத்ரம்
ஜெய் ஹிந்த்

...........
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-'07)
என் வாழ்க்கை இணையம் முழுவதும் கழிந்து கிடக்கிறது.

said...

வழக்கமான அனானி சைக்கோக்களின் பின்னூட்டங்கள் களையப்பட்டன.

அனானி, உறுப்படர வழியப் பாரு.

Anonymous said...

//time waste. திருந்தாத ஜென்மங்கள் தேன்கூட்டையும் கெடுக்கும், சொந்த நாட்டையும் கெடுக்கும்.//

வருதம் தான். தேனீக்கள் வலுப் பெற வேண்டும். தன் கூட்டை தான் தான் காக்க வேண்டும்.

வடுவூர், கலங்கிக்கிட்டுதான் இருக்கோம். விடிவு கண்ணுல தெரியல.

வெங்கட்ராமன், தேனீக்களும் புற்றீசலாய் தெரியுமளவுக்கு, புற்றீசலின் தாக்கம் அதிகமாய் இருக்கிறது போலும்.

தருதலைக்கும், இனிய சுதந்திரதின வாழ்த்துக்கள் உரித்தாகுக.

said...

//time waste. திருந்தாத ஜென்மங்கள் தேன்கூட்டையும் கெடுக்கும், சொந்த நாட்டையும் கெடுக்கும்.//

வருதம் தான். தேனீக்கள் வலுப் பெற வேண்டும். தன் கூட்டை தான் தான் காக்க வேண்டும்.

வடுவூர், கலங்கிக்கிட்டுதான் இருக்கோம். விடிவு கண்ணுல தெரியல.

வெங்கட்ராமன், தேனீக்களும் புற்றீசலாய் தெரியுமளவுக்கு, புற்றீசலின் தாக்கம் அதிகமாய் இருக்கிறது போலும்.

தருதலைக்கும், இனிய சுதந்திரதின வாழ்த்துக்கள் உரித்தாகுக.

said...

மட அனானியே, வழக்கம் போல் உன் அழகு தமிழ் பின்னூட்டம் தூக்கிப் போட ஒரு விநாடியே எனக்கு செலவானது.

நீங்க‌ தான் பாவ‌ம் ரொம்ப‌ யோசிச்சு, ர‌த்த‌ம் கொதிப்புட‌ன் எழுதியிருக்கீங்க‌.
ஆமாம், உங்களுக்கேன் மூக்கில் வேக்குது? புற்றீசல் நீங்களா?

பொழப்பப் பாருப்பா. பல நாள் திருடன், ஒரு நாள் நன்றாகவே அகப்படுவான்.

Anonymous said...

Watching everything?

said...

நல்ல வேளை நீங்க திரும்ப பதிவு எழுதியிருக்கீங்க..
எல்லாம்..நீங்க தான் நான் என்று சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்...

said...

அமரர் சாகரனுடன் போனது அந்த அட்மின் பாஸ்வேர்ட். இப்போது அதை மெயிண்டெயின் செய்யும் நன்பரிடம் அட்மின் பாஸ்வேர்டும் இல்லை, ஒன்றும் இல்லை. அடுத்த ஆண்டு தேன் கூடு இருக்குமா என்பது சந்தேகமே..

said...

வணக்கம் நண்பரே,

தனிமனித தாக்குதல்கள் நிறைந்த சட்னிவடை பதிவு முழுமையாக நீக்கப்பட்டுவிட்டது.

- தேன்கூடு

said...

அனானி,

//Watching everything? //

yes.

tbcd,

//நல்ல வேளை நீங்க திரும்ப பதிவு எழுதியிருக்கீங்க..
எல்லாம்..நீங்க தான் நான் என்று சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்//

அப்படியா? கவலப் பட நான் வக்கிரமான பதிவுகள் எழுதுவதில்லையே. கவலைப் பட வேண்டாம். இதுக்கு முன்னாடி நாலஞ்சு பேர இப்படி கை காமித்திருக்கிறார்கள்.


செந்தழல் ரவி,
தேன்கூட்டிடம் இருந்து வந்த பின்னூட்டத்தின் படி, கழிவுகள் அகற்றப்பட்டதாகத் தான் தெரிகிறது.

தேன்கூடு,
மிகவும் நன்றி. தாமதமானாலும், இப்பொழுது செய்ததற்கு மிக்க நன்றி!