Monday, August 06, 2007

ஆதிமூலம், சென்னை - by, மரக்காணம் பாலா

இன்னொரு துப்புரவுத் தொழிலாளியின் கண்ணீர் கதை. மரக்காணம் பாலாவின் புகைப்படங்களை மேயும் பொழுது கண்ணில் பட்டது.

யாராவது இந்த வேலை செய்தாகவேண்டுமே, இதை ஏன் இவ்வளவு பெரிது படுத்த வேண்டும் என்று எனக்கும் தோன்றியுள்ளது.
அமெரிக்காவிலும் கூட‌ இந்த வேலையை செய்பவர்களை டி.வியில் பார்த்திருக்கிறேன்.
ஆனால், அவர்களெல்லாம் உடல் முழுக்க மூடிக்கொள்ளும் ரப்பர் உடையும், முகத்தில் முகமூடியும் போட்டு பத்திரமாகத் தான் செய்வார்கள்.

ஆதிமூலம் உடம்பில் துணியும் இல்லை.
வேலை முடிந்து அவர் பேருந்தில் செல்ல முடியாதாம்.
நடந்தேதான் செல்வாராம். மற்றவர்களுக்கு நாற்றம் எடுக்கும் என்ற கவலை அவருக்கு.
கண்பார்வையும் சரியில்லையாம்.

ஹ்ம். பாவம், என்று தான் விடியுமோ இவர்களுக்கெல்லாம்.

நாமும் கூட, இந்த மாதிரி ஆட்களை வழியில் பார்த்தால், தூர விலகி நடந்து போய்விடுவோம்.

இனியாவது, ஒரு நிமிடம், அந்த மனிதர்கள் படும் வேதனையை சிந்தித்துப் பார்த்து, உங்களால் முடிந்தால், உங்கள் ஊரில் பொருப்பில் உள்ள‌ மேலாளர்களுக்கு எடுத்து கூறி ஏதாவது செய்யப் பாருங்கள்.

பூனைக்கு ஒருவர் மணி கட்டினால், பல ஊரிலும், பல ஆதிமூலர்கள் பயன் பெறுவார்கள்.

முழு சோகத்தையும் படிக்க இங்கே செல்லுங்கள்.

More Pictures - here & here.

ஹ்ம். இந்தியா ஒளிருமா?

மரக்காணம் பாலா, தொடரட்டும் உங்கள் பணி.
இப்படிப்பட்ட உண்மை சோகங்கள் படித்துப் படித்து, என்றாவது ஒரு நாள் நமக்கு சுரணை வந்து ஏதாவது நல்லது நடக்கும்.

3 comments:

said...

நீண்ட இடைவேளைக்கு பிறகு வந்திருக்கிறீர்கள், மகிழ்ச்சி.
ஆனால் நீங்கள் தந்த செய்தி வேதனையை அளிக்கிறது. . . .

said...

நன்றி வெங்கட்ராமன்.

வேளைப் பளு, தினசரிப் பயணம் போன்ற காரணங்களால், முன்னம் போல் படிக்கவோ எழுதவோ முடிவதில்லை.

வேதனையையும் இயலாமையையும் பகிரவே இந்தப் பதிவு.

Anonymous said...

மன்னிக்கனும். எனது முகவரியை மார்றி ரொம்ப நாளாகிவிட்டது..

marakkanambala.blogspot.com