Wednesday, June 27, 2007

நல்ல பதிவுகளை யாரும் சீண்டுவிதில்லையோ?

துப்புரவு தொழிலாளர்களின் வலியை நமக்கு உரைக்கும்படி இதைவிட யாரும் தெளிவாக எழுத முடியாது.

படித்துப் பாருங்கள்.

இந்தக் கையால தான சோறு அள்ளித் தின்றோம்

நம்மைச் சுற்றியுள்ள சுய தேவைகளை கவனித்துச் சுகிக்கவே நேரம் சரியாக இருக்கிறது.
ஹ்ம். மற்றவர்கள் குறைகளைக் காணும்போது, ஏக்கப் பெருமூச்சு விட்டே நம் வாழ்க்கை முடிந்து விடும்.

மற்றவர்களுக்காகவும் சிந்திக்கப் பழக வேண்டும்!

நம் சுய நலச்சிந்தனையை மாற்ற என்ன வழி?

16 comments:

said...

///////////////////////////////
மற்றவர்கள் குறைகளைக் காணும்போது, ஏக்கப் பெருமூச்சு விட்டே நம் வாழ்க்கை முடிந்து விடும்.

மற்றவர்களுக்காகவும் சிந்திக்கப் பழக வேண்டும்!

நம் சுய நலச்சிந்தனையை மாற்ற என்ன வழி?
///////////////////////////////

நண்பரே நீங்க சொல்றது சரிதான்.

ஒவ்வொருத்தனும் இத சிந்திக்க ஆரம்பிச்சாலே போதும் வழியே தேவை இல்லை. . . .

said...

வெங்கட்ராமன், வெறும் மனதளவில் வருத்தப்பட்டு ஒன்றுமே ஆகிவிடாதே.

செயல்முறையில் எதையாவது செய்தாக வேண்டும் சார்.

சிலர் சொல்வதைப் போல், நம் சமுதாய அரிப்பை, 'சொறிந்து' விட்டால் மட்டும் போதாது.

மாற்றம் வர ஓரளவுக்கு உண்மைத் தொண்டு செய்யணும்.

யோசிப்போம், வ‌ழி பிற‌க்கும். நன்றி.

Anonymous said...

மொதல்லே உன்ன ஒரு நாயாவது சீண்டுதான்னு பாருடா தருதலை

said...

அனானி, உங்க உள் மனதின் விகாரம், அழகா உங்க பின்னூட்டத்துல தெரியுது.

நல்லதே சிந்திக்கவும். மனதை சுத்தப் படுத்திக் கொள்ளுங்கள்.
உங்களை மாதிரி இருப்பவர்கள் சிலர் திருந்தினாலே, ஊரு விளங்கிவிடும் :)

said...

BNI. எப்டி இருக்கீங்க. Long Time No See.
ஒரு நல்ல பதிவுக்கு வழி காட்டினீங்க.
நன்றி.

said...

///நம் சுய நலச்சிந்தனையை மாற்ற என்ன வழி?//

தனி மனிதன் சிந்திக்கனும்.

//மற்றவர்களுக்காகவும் சிந்திக்கப் பழக வேண்டும்!//

இது கண்டிப்பாக தேவை!!

Anonymous said...

நல்லது எது? கெட்டது எது? என்றே அறிஞ்சுக்க முடியல்ல....

நல்லவர் யார்? கெட்டவர் யார்? என்றே தெரிந்து கொள்ள முடியவில்லை!.....

உண்மை எது? பொய் எது? புரிந்து கொள்ள முடியவில்லை!...

இந்த லட்சணத்தில் எதைச் சிந்திப்பது, எதைச்செய்வது......

ஆண்டவனே எல்லாருக்கும் நல்ல புத்திய கொடுப்பா வேண்டிக்கிறேன்.

said...

Sarav,

--BNI. எப்டி இருக்கீங்க. Long Time No See.
ஒரு நல்ல பதிவுக்கு வழி காட்டினீங்க.
நன்றி--

நல்லா இருக்கேங்க. புதியதாக சொல்ல ஒன்றும் தோன்றாததா, ஒதுங்கியே இருக்கேன் :)

ஆனா, இப்பவும், வந்தவுடன் உபசரிக்கும் அனானிகள், மறவாமல் ஆஜர் ஆயிடராங்க :)

உங்க 'சாதா சிவாஜி' பாத்தேன், அதை மாதிரி ஆட்களை வெளிச்சம் போட்டு காட்டுவோம். அருமை.

said...

குட்டிபிசாசு, வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்.

அனானி,
--ஆண்டவனே எல்லாருக்கும் நல்ல புத்திய கொடுப்பா வேண்டிக்கிறேன். --

கொடுப்பாராக :)

said...

news india,

உங்கள் பதிவில் கொடுத்த இணைப்பு பதிவு மிக நன்றாக இருந்தது உண்மையை உண்மையாக , கொடுத்து இருந்தார்கள். பல நல்லப்பதிவுகள் மொக்கைபதிவுகளின் கூட்ட நெறிசலில் சிக்கி கவனிப்பு இல்லாமல் போய்விடுகிறது. தோராயமாக எல்லாப்பதிவையும் நோட்டமிட்டப்போது உங்கள் பதிவு சிக்கியது, நல்ல வேலை செய்தீர்கள! நன்றி!

said...

ரொம்ப நாளா கெட்ட செய்தியைக் காணோமே?

said...

நல்ல விஷயங்கள், சமுதாயத்திற்கான சிந்தனைகள் அவரவர் அளவிற்கு இருந்து கொண்டேதான் இருக்கிறது.

வெளியில் தெரிவதில்லை அவ்வளவே!

said...

நல்ல பதிவுகளை படித்து, மற்றவர்கள் கவனிக்காமல் போய்விடுவார்களோ என்று அதற்காக ஒரு பதிவுப் போட்ட உங்கள் அக்கறை பாராட்டுக்குரியது. நல்ல பயனுள்ள, நல்ல எழுதப்பட்ட பதிவுகள் என்று தோன்றுவதை 'பூங்கா'விற்கு அனுப்பி வைக்கலாமே இந்த மின்னஞ்சலில் select@thamizmanam.com உங்கள் தேர்வு அவர்களுக்கும் பிடித்திருந்தால் வெளிவரும். விட்டுப் போகும் நிறைய நல்ல பதிவுகளை உங்களைப் போன்றவர்கள் எடுத்து தந்தால் அவர்களுக்கும் உதவியாக இருக்கும். அதே போல எழுதுபவர்களுக்கு ஒரு அங்கீகாரம் கிடைத்தாற் போலவும், படிக்காமல் விட்டுப் போனதை பூங்கா மூலம் படிக்கவும் நிறைய வாய்ப்புகள் உண்டு.

said...

உங்களை எட்டு விளையாட்டுக்கு அழைச்சிருக்கேன் முடிஞ்சப்போ எழுதுங்க......

said...

கருத்தளித்த அனைவருக்கும் நன்றி.

ராதா ஸ்ரீராம், அழைப்புக்கு நன்றி. நேரம் கிடைக்கும்போது கண்டிப்பாக எழுதுகிறேன்.

said...

இந்தப் பதிவைச் சுட்டிக்காட்டியமைக்கு நன்றி BNI.