Thursday, April 19, 2007

REAL HEROES are BORN, not MADE

1) நம் அனைவருக்கும் உள்ள சில முக்கிய குணாதிசியங்கள், பிறப்பிலேயே நிச்சயிக்கப்படுகிறதாம்.

நாம் அமைதியானவரா, சாதனை செய்யத் துடிப்பவரா, கொடுமைக்காரரா, வீரரா, கோழையா, சோம்பேரியா என்ற நிர்ணயங்கள் 99% பிறக்கும்போதே நடந்து விடுகிறது என்பது உண்மையா?

உண்மையாகத்தான் இருக்கும்.

எங்கோ பிறந்து எப்படியோ வளர்ந்து பெரிய நிலைக்கு வளர்பவர்களும், தாழ்பவர்களும், அவர்களின் உழைப்பை மட்டுமே கொண்டு அந்த நிலை அடைகிறார்கள் என்பது உண்மைதான்.
ஆனால், அந்த உழைப்பை செய்ய வைப்பதும், செய்யாமல் இருக்கச் செய்வதும், தன் உடம்பில் உள்ள ஏதோ ஒரு காரணியின் வேலையாகத் தான் இருக்க வேண்டும் என்பது கணிப்பு.

ஒருவரின் இயற்க்கையான சக்தி என்ன (natural talent) என்பதை கண்டறிய, பல ஆராய்ச்சியாளர்கள், பல விதங்களில் வழிமுறைகளை வகுத்துள்ளார்கள்.
'Personality tests' எனப்படும் இவை, management நிலை ஆட்களை வேலைக்கு அமர்த்தும் முன்னர் அவர்களின் இயற்க்கை சக்தியை கண்டறிய பயன்படுத்தப் படுகிறது.

அதென்ன இயற்க்கை சக்தி, செயற்க்கை சக்தி என்று இருவித சக்தி இருக்கிறதா என்ன?

இருக்கிறதாம்.

ஒருவனுக்கு 'தலைவனாக' வேண்டிய குணாதிசியங்கள் இயற்க்கையில், இல்லாமல் போகலாம். ஆனால், தன் கடின முயற்ச்சியால், தன் இயற்க்கை குணாதிசியத்திலிருந்து சற்று மாறுபட்டு (bend from natural abilities), தலைவனாகும் திறமையை கற்றுணர்ந்து உண்டாக்கலாம் (acquired talent).
ஆனால், இந்த கற்றுணர்ந்து உண்டாக்கிய திறமையை நீண்ட காலம் பிரயோகித்தல், ஒருவருக்கு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ப்ரச்சனையை (stress) உண்டாக்கலாம்.

சிலரை பார்க்கும்போது, எப்பொழுதும், சிரித்த முகத்துடன், சந்தோஷமாக இருப்பார்கள்.
சிலர், எப்பொழுதும், ஒரு மன உளைச்சலுடன் இருப்பார்கள்.

இந்த முதல் ரகம், தங்கள், 'இயற்க்கை சக்தி'க்குட்பட்ட வேலையை செய்பவர்கள்.
இரண்டாம் ரகம், 'இயற்க்கை சக்தி'யால் செய்ய முடியாத வேலையை கொஞ்சம் சிரமப்பட்டுச் செய்பவர்கள். வெளியில் அப்பட்டமாக தெரியாவிட்டாலும், இது தான் இவர்கள் இருவருக்கும் இருக்கும் வித்யாசமாம்.

குப்பைமேட்டில் இருந்து, தலைவன் உருவாவதர்க்கும்,
அரண்மனையில் உதவாக்கரை உருவாவதர்க்கும் இந்த 'இயற்க்கை சக்தி' யே காரணமாய் இருக்கும்.

Nature has reasons for everything. நமக்குப் புலப்படாதவை பல இருக்கு.

ஒருவனின் திறமை, பிறப்பிலேயே முடிவு செய்யப்பட்டால், பிறகு எதர்க்கு உழைக்க வேண்டும் என்று நீங்கள் எண்ணலாம்.
வைரமே ஆனாலும், பட்டை தீட்டினால் தான் பிரகாசிக்கும்.
வைரம்தானே என்று அப்படியே விட்டுவிட்டால், கரிக்கட்டையாகத்தான் தோற்றமளிக்கும்.

வைரத்தைவிட சற்று குறைந்த ரக கல்லாயிருந்தால். அதை ஓரளவுக்குத்தான் பட்டை தீட்ட வேண்டும். நாமும் வைரம் ஆகலாம் என்று பட்டை தீட்டிக் கொண்டே இருந்தால், கல் உடைந்து விடும்.

எதையோ படிக்கப் போய், வேறு எதுவோ கண்ணில் பட வந்த வினை இந்த பதிவு.

புரிந்தவர்கள், மேல் விவரங்கள் கொடுங்கள்.
புரியாதவர்கள், கேள்விகளைக் கேளுங்கள்.

2) தலைப்புக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?

இந்த வார badnews, அமெரிக்காவில் உள்ள ஒரு கல்விச்சாலையில், 23 வயது "சோ" என்ற மாணவன், தன் சக மாணவர்களை சுட்டுக் கொன்றது.
காரணமே இல்லாமல், ஒரு வித மன உளைச்சலால் பாதிக்கப்பட்டு, இந்தக் கொடூரச் செயலைச் செய்துள்ளான் என்று சொல்கிறார்கள்.

Librescu என்ற எழுபது வயது பேராசிரியர், துப்பாக்கியுடன் வந்த "சோ"வை தன் வகுப்பறைக்குள் நுழைய விடாமல், வாசலை மறித்து நின்று தன் மாணவர்களை காப்பாற்றி தன் உயிரைக் கொடுத்தாராம்.
அதைப் படிக்கும்போதே கண்ணில் நீர் பெருகியது.
இந்த மனதிடம் உங்களுக்கும் எனக்கும் வருமா என்று தெரியாது.
நம்மில் பலர், தெருவில் ஒருவனுக்குத் துன்பம் என்றால், எதிர் திசையில் அவனை பாராமல் நடக்கப் பழகியவர்கள்.
Librescu போன்ற பெரியவர்கள், பெரியவராகவே பிறக்கிறார்கள். உருவாக்கப் படுவதில்லை.

911 சம்பவம் நடந்த அன்று United-93 என்ற விமானம் மட்டும், தீவிரவாதிகள் எண்ணப்படி, Washington Capitol கட்டடத்தில் இடிபடாமல், அதர்க்கு பல மைல் முன்னாலேயே விழுந்து நொறுங்கியது.
தன்னுயிர் பற்றிக் கவலைப் படாமல், பிற உயிருக்காக போராடிய, சில விமானப் பயணிகளின் தீரச் செயலால் நிகழ்ந்தது அது.
மிகவும் கடினமான சூழ்நிலையிலும், பிறரைப் பற்றி எண்ணி, தன்னுயிர் பற்றி கவலைப்படாமல் இருந்த HEROES நிச்சயம் பிறப்பிலேயே அப்படி வந்தவர்களாகத் தானிருக்க வேண்டும்.
(United93 என்ற திரைப்படம் கிடைத்தால் பாருங்கள்).

எஸ்.கே அவர்களின் கவிதையில் அனுஷா என்ற 10 வயது சிறுமியை பற்றிச் சொல்லியிருந்தார். பள்ளிக்குச் சென்ற வழியில், வாகனத்தில் அடிபட்டு மறைந்த துயரம் கொடுமை.
ஆனால், இந்த வயதிலேயே "நல்லவராய் இருந்தால் பத்தாது. நல்லது செய்ய வேண்டும்" என்ற உணர்வைக் கொண்டவளாய் இருந்திருக்கிறாள்.
அவள் மறைவுக்குப் பிறகு, அவளின் உடல் உருப்புக்களை தானமாய் கொடுத்த, அவளின் பெற்றோரின் மனம் எவ்வளவு உயர்வானது பாருங்கள். They are HEROES too, and they are born that way.

3) நாம் HEROES எல்லாம் ஆக வேண்டாம். ஆனால், நமக்குக் கிடைத்த இயற்க்கை சக்தியை வைத்து, கண்டிப்பாய், ஒரு மரம் நடுதலோ, ஒரு ஏழைக்கு கல்வி அறிவு கிடைக்கச் செய்வதோ, துப்புரவாக நம் சுற்றத்தை வைத்துக் கொள்வதோ செய்ய முடியும், சின்ன விதயாசங்கள் காட்டி 'வேடிக்கை மனிதனாக' வாழ்ந்து கழியாமல் இருக்க முடியும்.

நீங்கள் உயிரைக் கொடுக்க வேண்டாம். உங்கள் குழந்தைகளும், பேரக் குழந்தைகளும் வாழ நல்ல சூழலை உருவாக்கினால் போதும்.
GLOBAL WARMING என்ற slow poisoning வளர்ந்து கொண்டிருக்கிறது. 100 வருடங்களுக்குப் பிறகு தாக்கும் என்பதெல்லாம் போய், இப்பொழுது, 30 வருடத்துக்குள்ளரே, பெரிய சீற்றங்கள் நடக்கப் போகிறது என்கிறார்கள்.

நமக்கென்ன என்று மெத்தனமாய் இல்லாமல், உங்களால் முடிந்த 'சேமிப்பை' செய்து, இயற்க்கையை காப்பாற்றுங்கள்.

நானும் செய்கிறேன்.

Belated, தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

ஜெய்ஹிந்த்!

பி.கு: BadNewsIndia பக்கத்தில், ஊருக்கு உபயோகமான, நல்ல விஷயங்களை எடுத்துச் சொல்ல கட்டுரைகள் வரவேற்க்கப்படுகின்றன. உங்கள் பெயருடனோ, அனானிமஸாகவோ எப்படி வேண்டுமானாலும், உங்கள் விருப்பப்படி பிரசுரிக்கலாம்.
விருப்பம் உள்ளவர்கள், உங்கள் கட்டுரையை எழுதி எனக்கு அனுப்புங்கள். badnews_india at yahoo.com என்ற முகவரிக்கு. நீங்கள் எழுதுவதை மறு பிரசுரமாகவும் ஆக்கலாம். தெரியப் படுத்துங்கள்.

9 comments:

said...

வேலை இருக்கிறது. பின்னூட்டங்கள், சிறிது நேரத்திர்க்குப் பிறகு பிரசுரிக்கிறேன்.

நன்றி.

said...

//இயற்க்கை சக்தியை வைத்து, கண்டிப்பாய், ஒரு மரம் நடுதலோ//
எங்கள் சிங்காரச் சென்னையில் இப்போதெல்லாம் 100 வருட மரங்களை வெட்டுவது தான் பேஷன். சர்தார் பட்டேல் ரோடு என்ற ஒரு அருமையான சாலையை படுபாவிகள் பாலைவனமாக்கி விட்டனர். அடுத்த குறி திநகர் தான். மறுபடியும் துளிர் விட்டுவிடக் கூடாது என்று அடிவேர் வரை நோண்டி எடுத்துவிட்டு கான்க்ரீட் போட்டு அடைத்து விடுவது இந்த இயக்கத்தின் கூடுதல் சிறப்பு. எக்ஸ்னோரா போன்ற அமைப்பினர் 'மரங்கட்டி' போராட்டங்கள் நடத்தியும் பயனில்லை.

இந்த காலத்தில் போய், குளோபல் - வார்மிங்ன்னு சொன்னா உங்களை ஒரு மாதிரி தான் பார்பார்கள்.

said...

Krishna,

சென்னை சென்று கொண்டிருக்கும் பாதை மிகவும் ஆபத்தான ஒன்று.
நீங்கள் சொன்னதைப் போல் மரங்களை அழித்து, விளையாட்டு மைதானங்களை அழித்து, குளம் குட்டைகளை அழித்து, வளர்ந்து வரும் இந்த பேய் வளர்ச்சி, பேராபத்தானது.

மக்களின் சுயநலம் பெருகி, தன் வருங்கால சந்ததிக்கு நஞ்சை விதைக்கிறோம் என்று புலப்படாமல் வாழும் வாழ்க்கை வேதனையான உண்மை.

அரசு, அதிகாரிகளும், துளியேனும், அக்கரையுடன் செய்லாற்றினால், பல கேடுகளை தவிர்க்கலாம்.

said...

அசுரன்,

பார்ப்பனீய சாயலில் எழுதுபவன் நான், என்று குறிப்பிட்டுள்ளீர்கள் (உங்கள் பதிவில்).

பிறப்பிலேயே ஒருவனிடம் தங்கும் சில குணாதிசியங்கள் பற்றி, விவரம் தெரிந்தவர்கள் ஆராய்ந்து கூறி இருக்கிறார்கள். இதில், பார்ப்பனீய சாயல் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

யோசித்து பார்த்தால், அதில் (பிறப்பிலே வரும் திறமைகள்) ஓரளவுக்கு உண்மை இருப்பது புலப்படும்.
Training cannot teach you everything. There are certain things that are beyond our grasp.

Anonymous said...

Can you post relevant URLs to substantiate your theory?

said...

இப்பொழுதுதான் உங்கள் பதிவை பார்த்தேன். ( 'Bad News India' என்பதால் தவற விட்டுவிட்டேனா? :( ) ...

நல்ல முயற்சி... வாழ்த்துக்கள்!

said...

தென்றல்,

BadNews தெரிவிக்கவும் ஒரூ ஆள் வேண்டுமே.

said...

Dear BNI,

I have given what has been mentioned in my Article:

//இதோ பார்ப்பனியத்தின் சாயலுடன் எழுதும் Bad News India கூட இந்த அம்சத்தில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார் - நான் இங்கு BNIயை பார்ப்ப்னியவாதி என்று குறிப்பிடவில்லை//

I didn\'t say you are பார்ப்ப்னியவாதி.

I still believe you are a Democratic force, though we have some serious contradiction in our veiws.

**********

About this article, I have already had an argument in Muthamiz group, I will give you part of that argument.

There are certain informations being passed by Birth(Genes), But it is the circumstance that plays crucial role in establishing once character.

This doesn\'t mean I deny the concept of Genes.

I just deny the concept that \'Leaders are born by birth\'.

Indeed it is both the \'Birth\' and the \'Circumstance\' are deciding factor.

Definetely the \'Circumstance\' is dominant than \'Birth\'.

I said yours veiw is a view of parpiniyam. Because this is the concept of Varnasrama. If you believe this(By birth) then you would end up believing Varnasrama.

My comments in Muthamiz Group:
http://groups.google.com/group/muththamiz/browse_thread/thread/1abb3f35f30793e3/89aa97a3aeca370a?q=%E0%AE%85%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D&lnk=ol&
*************
///


>>இந்து மதம் பிறப்பின் அடிப்படையில் பண்பு/குண வேறுபாடுகள் இருப்பதை


ஆதரிக்கிறதா >>இல்லையா?
(பகவத் கீதை - நான்கு
குணங்கள்)

கண்டிப்பாக உரைக்கிறது.
பிறப்பின் அடிப்படையில்
ஒருவனது குணங்கள் மாறபடும்


என்பதற்கு தற்சமய
அறிவியலின் சான்று. .
ஒவ்வொரவர் மரபணுவே அரவது
நடத்தை, உடல்
பண்பு, குணம், மற்ற
எல்லாவற்றிற்கும் காரணம்
என உறியாகச்சொல்வது
இந்துமதம்
மட்டுமல் தற்சமய
அறிவியலும் தான்.


ஆனால்.........
இந்த மாற்றங்கள் அவரது
உடல் மனத்தைப்பாதிக்குமே
ஒழிய உயிரை எவ்வகையிலும்
பாதிக்காது. ஒருவன் எந்த
குணத்துடன் பிறந்தாலும்
அவனது குணத்தை மரபணு
மாற்றுவதன் மூலம்
மாற்றமுடியும். இதை நாம்
மறுக்கமுடியாது. அன்று
மரபணு
மாற்றுவதை சில விதிகள்
மூலம்
சாத்தியப்படுத்துகிறது
நீதி.


////


நண்பர் வினோத்துக்கு
ஒரேயொரு பதில்தான்....
நான்கு குணங்களையும்
அவற்றின் கடமைகளையும்
படைத்த பரமாத்மாவை
அறிவியல்
அங்கீகரிக்கவில்லை.....
அவ்வளவுதான் விசயம்...
அதனாலேயே இந்து மதத்தின்
அடிப்படை தவறு என்பதுடன்
மனித குல வீரொத
தத்துவமாகவும் ஆகிறது...
இத்துடன் இந்தியாவில் சாதி
வந்ததன் காரணம் குறித்து
நண்பர் விளக்கினால் அதில்
உள்ள குறைகளையும் களையும்
வாய்ப்பு கிடைக்கும்..


பொதுவாக மரபணு அதன் ஊடாக
தகவல் அடுத்த கட்ட
சந்ததிக்கு பரப்பபடுவது
குறித்த உயிரியல்
விசயங்களில் நம்மைப் போல
சாரசரிகளின் புரிதல் அதல்
பாதாளம். அதனாலேயே
உங்களைப் போல வேதத்தில்
உள்ள வர்ணாஸ்ரமம் சரிதான்
என்ற மாயையை பொய்யை பலரும்
சொல்லி வருகிறார்கள்
உங்களுக்காக இந்த
அம்சத்தில் தேடியதில்
கிடைத்த தகவலை இங்கு
பரிமாறிக் கொள்கிறேன்.


பிறப்பின் அடிப்படையில்
நான்கு குணங்க்ள் உள்ளன
எனும் வர்ணாஸ்ரம் தத்துவம்
கற்பனையானது. உண்மையில்
ஒரு சமூக பொருளாதார
சூழ்நிலையே ஒவ்வொரு மனிதனி
குணத்தையும்
தீர்மானிக்கிறது.


சுட்டி:
http://www.ornl.gov/sci/techresources/Human_Genome/elsi/behavior.shtml


///
. The search for genes associated with characteristics such as sexual
preference and basic personality traits has been even more frustrating.


A growing scientific and popular focus on genes and behavior has
contributed to a resurgence of behavioral genetic determinism஗the
belief that genetics is the major factor in determining behavior.
////


அதாவது,குணநலன் தொடர்புடைய
மரபணுக்களை
கண்டுபிடிக்கும்
ஆராய்ச்சி மிக மிக
சலிப்படையச் செய்வதாக
உள்ளது என்று சொல்கிறது
மேலேயுள்ள வரிகள். மேலும்,
மரபணு ஆராய்ச்சியின்
வளர்ச்சி \'பழக்க வழக்கத்தை
மரபணுக்கும் பெருமளவு
பாதிக்கிறது\' என்ற
நம்பிக்கையையுடைய பிடிவாத
புரிதலை வளர்த்துள்ளது
என்கிறது இந்த கட்டுரை.


அப்ப்டியெனில் உண்மையில்
பழக்க வழக்கத்துக்கும்
மரபணுவுக்கும் தொடர்பு
இல்லையா? இதை கீழே உள்ள
வரிகள் ஓரள்வு
தெளிவுபடுத்துகிறது.


///
Are behaviors inbred, written indelibly in our genes as immutable
biological imperatives, or is the environment more important in shaping
our thoughts and actions? Such questions cycle through society
repeatedly, forming the public nexus of the \"nature vs. nurture
controversy,\" a strange locution to biologists, who recognize that
behaviors exist only in the context of environmental influence.
Nonetheless, the debate flares anew every few years, reigniting in
response to genetic analyses of traits such as intelligence,
criminality, or homosexuality, characteristics freighted with social,
political, and legal meaning.
///


அதாவது சமூக பொருளாதாரம்
வினையாற்றுகிறதா அல்லது
மரபணு வினையாற்றுகிறதா
என்ற போராட்டதில்,
உயிரியலாளர்கள்
நிலைப்பாடு பின்வருமாறு:
\'பழக்க வழக்கம் என்பது
குறிப்பிட்ட
சுற்றுச்சூழலின்
பாதிப்பில் மட்டுமே
நிலைபெறூகிறது\'
என்பதுதான். ஆக, வர்ணாஸ்ரம
தர்மம் அறிவியலுடன்
முரன்படும் இடம் இது.
ஏனெனில் ஒவ்வொரு
வர்ணத்திற்க்கும் ஒரு கடமை
நிர்ணயித்த வேதம், அந்த
வர்ணத்தை முடிவு செய்வது
கடவுளாக இருப்பதாகத்தான்
சொல்கிறதேயொழிய சுற்றுச்
சூழலை சொல்லவில்லை.


////
There are several scientific obstacles to correlating genotype (an
individual\'s genetic endowment) and behavior. One problem is in
defining a specific endpoint that characterizes a condition, be it
schizophrenia or intelligence. Another problem is in identifying and
excluding other possible causes of the condition, thereby permitting a
determination of the significance of a supposed correlation. Much
current research on genes and behavior also engenders very strong
feelings because of the potential social and political consequences of
accepting these supposed truths. Thus, more than any other aspect of
genetics, discoveries in behavioral genetics should not be viewed as
irrefutable until there has been substantial scientific corroboration.
///


மேலும், ஒரு மரபணு அதனுடன்
அடையாளப்படுத்தப்படும்
பழக்க வழக்கம் இவற்றை
இணைத்துப் பார்ப்பதில் பல
சிக்கல்கள் உள்ளன.
அதற்க்கடுத்த உள்ள்வை
அவரவர் மொழிபெயர்த்து
கொள்ளவும்...


ஆக, மரபணு என்பது தகவல்களை
சேகரித்து அடுத்த
சந்ததிக்கு
ப்ரப்புவதுதான் ஆயினும்
அது வர்ணாஸ்ரமம் சொல்லும்
அம்சத்தில் வரவில்லை.
******************Asuran

said...

And My thanks for your Wishes on my Star week. :-)

Your suggestion to publish Small articles is really a good suggesstion. But unfortunately I have prepared all my articles last week itself. So unable to follow your suggestion.

Thanks and Regards,
Asuran