Monday, April 02, 2007

பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு - உதவி தேவை

Merit அடிப்படையில் இல்லாமல், ஒருவரின் சாதி அடிப்படையில் வழங்கப்படும் இட ஒதுக்கீடு எனக்கு சிறுவயதிலிருந்தே புரியாத புதிராகத்தான் இருந்தது.

ஓரளவுக்கு விவரங்கள் புரிய ஆரம்பித்த கல்லூரி நாட்களில், ஒடுக்கப்பட்டவர்களுக்காக உருவான இந்த இட ஒதுக்கீட்டின் அவசியம் புரியத் துவங்கியது.

ஆனால், 8 லாரி சொந்தமாக வைத்துக் கொண்டு 'தொழிலதிபராக' வாழ்ந்து வந்த 'ராஜாங்கம்' என்பவரின் மகனுக்கும் இந்த இட ஒதுக்கீட்டினால் லாபம் கிட்டியது.

சின்னக்கண்ணு என்ற வண்டிக்காரர். ஒரே ஒரு குதிரை வண்டி அதை இழுக்கும் நோஞ்சானான ஒரு குதிரைக்கும் சொந்தக்காரர். Mortuary யிலிருந்து, பிணத்தை வீட்டுக்கு எடுத்துச் செல்ல உதவும் கடின வேலை. இவர் மகனுக்கும் இந்த இட ஒதுக்கீட்டினால் லாபம்.

சின்னக்கண்ணுவுக்கு, கண்டிப்பாக இந்த இடஒதுக்கீட்டின் பலன் கிடைக்க வேண்டும். அவர் மகன் படிக்க உதவ வேண்டும். அவர் மகன் நல்ல வேலையில் சுலபமாகச் சேரவும் உதவ வேண்டும்.

ஆனால், ராஜாங்கத்திற்க்கு இந்த 'சுலப' வழி எதற்க்கு? அவர் பிள்ளை merit அடிப்படையில், survival of the fittest உலக நியதிப்படி, போராடி முன்னேறட்டுமே?

அவரை ஒதுக்கினால், சின்னக்கண்ணுவை போல் உண்மையாக கஷ்டப்படும் இன்னொரு நல்லக்கண்ணு பிழைப்பான் இல்லையா?

பொருளாதார அடிப்படையில், இட ஒதுக்கீடு வழங்குவதில் என்ன பிழை இருக்கிறது?
இதை முறைப்படுத்துவது கஷ்டமான காரியம்தான் - அதற்க்காக செய்யாமல் இருப்பது நியாயமா?

am I missing something?

தெளிவு படுத்துங்களேன். வேறு யாராவது இதைப்பற்றி பதிவு எழுதியிருந்தால் பின்னூட்டத்தில் தெரியப்படுத்தவும்.

எனக்குத் தெரிந்த யாருமே, இட ஒதுக்கீட்டுக்கு எதிராளி கிடையாது.

சரியான புரிதல் கிடைத்தால், அனைவரும் ஒரே குரல் எழுப்பலாமே?

உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்.

நன்றி.

12 comments:

said...

I will publish the comments a little later.

Anonymous said...

பாப்பார நாதாறி நாய்கள் வேறு எப்படி சிந்திக்கும்?

Anonymous said...

பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு நியாயமானதே.

இதை தவிர்க்க மற்றவர்கள் சொல்லும் காரணங்கள் சில, பொருளாதார அடிப்படையை நிர்ணயம் செய்வது சுலபமில்லை என்பது. இது ஒரு ஒவ்வாத வாதம். இதை சரியான முறையில் அழகாக முடிவு செய்யலாம்.

மேலும், பொருளாதார நிலைமை என்பது மாறிக்கொண்டே இருப்பது என்பதும் ஒரு வாதம். இதற்கு விடை, இவ்வாறு மாறிக்கொண்டே இருப்பது நல்லதே. பொருளாதார முன்னேறியவர்கள் இந்த இட ஒதுக்கீட்டில் இயல்பாக வெளியேறுவார்கள்.

பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீட்டுக்கு இரண்டு லாபங்கள். முதலாவது, இன்றைய தேதியில் உண்மையான வர்க்க பேதம் பணம் இருப்பவர்களால் பணம் இல்லாதவர்களுக்கு செய்யப்படுவதே. பல வாய்ப்புகளும், முன்னேற்பாடுகளும் வசதி உள்ளவர்களுக்கே சாத்தியம். அதனால், இதுவே ஒரு நியாயமான கொள்கை.

இரண்டாவது, பொருளாதார அடிப்படையில் தானாகவே இந்த இட ஒதுக்கீடு ஒரு முடிவுக்கு வரும் ஒரு சுய கட்டுப்பாடு விதியாக இது இயங்கும். இப்போதைய சாதி அடிப்படையில் சாதிகள் இன்னும் வேரூண்றும் ஒரு பெருத்த அபாயம் இருக்கிறது. தங்கள் நல்ல பதிவுக்கு நன்றி

said...

**பாப்பார நாதாறி நாய்கள் வேறு எப்படி சிந்திக்கும்? **

அனானி, உங்கள் அழுக்கு மனத்தை காட்டுகிறது உங்கள் பின்னூட்டம்.
புரிதலுக்காக கேட்ட கேள்விக்கு பதில் இதுவா?

said...

**பொருளாதார அடிப்படையில் தானாகவே இந்த இட ஒதுக்கீடு ஒரு முடிவுக்கு வரும் ஒரு சுய கட்டுப்பாடு விதியாக இது இயங்கும். இப்போதைய சாதி அடிப்படையில் சாதிகள் இன்னும் வேரூண்றும் ஒரு பெருத்த அபாயம் இருக்கிறது**

சாதிகள் ஒழிய வேண்டும் என்று ஒரு பக்கம் கூக்குரலும், இன்னொரு பக்கம், சாதிக்கு எரு போட்டு வளர்க்கும் விதமும் வியப்பாகத் தான் இருக்கிறது.

இந்த இரு துருப்புச் சீட்டையும் தேவைக்கு ஏற்றாற் போல் பயன் படுத்தும் நிலை ஒழிய வேண்டும்.

said...

I am expecting some really thoughtful comments from people on both sides of this equation.

பாப்பார நாதாறி நாய், பேய் என்றெல்லாம் என்னைத் திட்டிக் கொள்ளுங்கள். ஆனால், உங்களின் என் கேள்விக்கும் நல்ல பதில் தாருங்கள்.
நன்றி.

Anonymous said...

ஐயா BNI காரு, நீங்க கேக்கர கேள்விக்கு ஒருத்தன் கிட்டயிருந்தும் ஒழுங்கான பதில் வராது.
அவனுங்களுக்கே தெரியும் பொருளாதார அடிப்படையில ஒதுக்கீடு குடுக்கரதுதான் சரின்னு.
ஆனா, திராவிட பெத்தட்டின் மயக்கம் தீர இன்னும் 50 வருஷம் ஆகும், அதுக்கப்பரம் சுதாரிச்சு வரதுக்குள்ள, ஊர் துண்டாகி சுடுகாடாயிடும் :)

Anonymous said...

நான் ஒரு இந்து. தாழ்த்தப்பட்ட ஹரிஜன வகுப்பை சேர்ந்தவன். என்னையும் உயர்ஜாதி என்று ஏற்றுக் கொள்வார்களா பார்ப்பனர்கள்? அவர்கள் போட்டுக் கொள்ளும் பூனூலை நானும் போட்டுக்கலாமா? நான் அவர்கள் வீட்டு திண்ணையில் கொஞ்ச நேரம் அமர்ந்தால் திண்ணையை கழுவாமல் இருப்பார்களா பார்ப்பனர்? எனக்கு பார்ப்பனர் பெண் கட்டித்தருவார்களா?

said...

அனானி,

***ஐயா BNI காரு, நீங்க கேக்கர கேள்விக்கு ஒருத்தன் கிட்டயிருந்தும் ஒழுங்கான பதில் வராது.
***

இன்னும் சரியான பதில் யாரும் தரலை என்பது உண்மையே.
நான் புரியாத மாதிரி நடிக்கவும் இல்லை.
உண்மையில் விளங்கவில்லை, ஏன் ஒருவனிடம் இருக்கும் பொருள் வசதியை கணக்கில் கொண்டு, அவனுக்கு உதவலாமா வேண்டாமா என்று முடிவு செய்யக் கூடாது?

said...

அனானி,

**நான் ஒரு இந்து. தாழ்த்தப்பட்ட ஹரிஜன வகுப்பை சேர்ந்தவன். என்னையும் உயர்ஜாதி என்று ஏற்றுக் கொள்வார்களா பார்ப்பனர்கள்? அவர்கள் போட்டுக் கொள்ளும் பூனூலை நானும் போட்டுக்கலாமா? நான் அவர்கள் வீட்டு திண்ணையில் கொஞ்ச நேரம் அமர்ந்தால் திண்ணையை கழுவாமல் இருப்பார்களா பார்ப்பனர்? எனக்கு பார்ப்பனர் பெண் கட்டித்தருவார்களா?**

சும்மா argument செய்ய சொன்னதா, இல்லை உண்மை நிலையா?

பூனூலை, நீங்க என்ன யார் வேணா போட்டுக்கலாம். இன்றைய யுகத்தில், நீங்க சாப்டாச்சா, பசியா இருக்கீங்களான்னு கூட ஒருத்தனுக்கும் கவலை இல்லாத போது, நீங்க பூணூல் போட்டிருக்கீங்களான்னா கவல படப் போறாங்க?

சில கிராமங்களில், தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள், செருப்பே போடக் கூடாதாம். அங்கு அதை செய்பவர்கள், பூனூல் போட்டவர்கள் அல்ல. அதற்காக ப்ராமணன் உத்தமன் என்று வாதம் செய்ய வரவில்லை.
செருப்பே போடக்க் கூடாது என்று ஒடுக்கப்பட்ட நிலையில் இருப்பவனுக்கு, கல்வி கிட்ட வழி செய்தும், மற்ற 'ஒதுக்கீட்டு உதவி'செய்தும் தான் தூக்கி விடணும்.
அரசின் கடமை இது. அதை அரசுக்கு ஞாபகப் படுத்துவது, நம் கடமை.


திண்ணைல ஒக்காந்தா தண்ணி ஊத்தி கழுவறாங்களா?
சாதியின் பேரால் அப்படி செய்கிறார்கள் என்றால், பிரம்பால் அடியுங்கள் அப்படி செய்பவர்களை.
இல்லன்னா அஹிம்சா வழியில், "மதியாதார் பக்கம் தலை வைக்காமலும் இருக்கலாம்".

said...

i have posted a comment on this subject on Jataayu's blog... please read...
http://jataayu.blogspot.com/2007/03/blog-post_30.html

said...

Anonymous said:
"நான் ஒரு இந்து. தாழ்த்தப்பட்ட ஹரிஜன வகுப்பை சேர்ந்தவன். என்னையும் உயர்ஜாதி என்று ஏற்றுக் கொள்வார்களா பார்ப்பனர்கள்? அவர்கள் போட்டுக் கொள்ளும் பூனூலை நானும் போட்டுக்கலாமா? நான் அவர்கள் வீட்டு திண்ணையில் கொஞ்ச நேரம் அமர்ந்தால் திண்ணையை கழுவாமல் இருப்பார்களா பார்ப்பனர்? எனக்கு பார்ப்பனர் பெண் கட்டித்தருவார்களா?"
I have a few points to the anonymous postman who's certain comments are completely deranged:
I don't understand the importance of the sacred thread here! The thread as per mythology is to imbibe knowledge into the person who wears it.
Even this discussion is to bring education and knowledge to all.
Anyways, it is not going to be the barring to you. You, me and anyone is obviously entitled to wear it. But, on wearing it, we must take up promise towards certain things of righteousness - again here, you can raise a question, that are all those who wearing it taking the promise and abiding by that! Certainly, in anything there'll be exceptions, and exceptional occurrences - this ground rule must be understood.
Did we ever give respect to Kannappa Nayanar for wearing this thread, or for Pamban Swamigal for doing so? They are seers, with divine blessings. Such persons, in any form must be respected, and were indeed respected.
So, kindly don't feel the absence of the thread lets you underprivileged, if so, you can approach Asthiga Samaj, or Arya Samaj, who are taking up this as an activity of enrolling everyone to the list of the sacred thread wearers. Being a sacred thread wearer, never makes a man Brahmanan. Even I'm a wearer; note - just a 'wearer'. Someone who's understood Brahma is a Brahmanan - which is eternally impossible for a common man of today like you and me.

My comment is running pages! Am, sorry...
I'm delighted with the response to this comment, by the creator of this blog. You can stage even a dharna for doing the washing kind of stuff, after you leaving.
Again, how many in the city practice this. I've a number of guests coming to my house every day or at least every week. I've friends; my parents, my sister everyone have friends, who are from such underprivileged communities - in your words, "not the thread wearers". Everytime, if we were to wash our house for that, all our family members should have got our properties bestowed to a well renowned orthopedist, for treating our broken backs. One more, we dont shoo them at our thinnai - they definitely have all privieges to enter our drawing room and even to our pooja room. We let them in not because of religion, community, etc., but, because of their social and educational standards. I swear, even if a person of the thread wearing group is at our doorstep, but not with any of those social or educational standards, our treatment will be different. Here, you can understand what makes the importance for caste and education, and the importance for distancing them from each other.

My last point to this anonymous blogger who made this comment:

"பாப்பார xxx xxxx வேறு எப்படி சிந்திக்கும்?"
Assume I make the same comment, with the first word replaced with your background; And the treatment you can offer to me legally will be different. But, I'm not given such a privilege to bestow the same treatment on you. NOW TELL ME WHO'S UNDERPRIVILEGED.
Thanks for the blogger for his efforts in building up the thought revolution among the blogging community.
Regards,
Mukunthan L