செய்திகளை பிரித்து கட்டம் கட்டி அழகாக காட்டும் google news முகப்புப் பக்கம் உபயோகமான ஒன்று.
அதில், ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு பக்கம் அமைத்து அந்த நாட்டுக்கான செய்தியை பிரித்து வழங்கி வந்தனர்.
சைனா, ப்ரான்ஸ் போன்ற நாடுகளுக்கு அவர்கள் மொழியிலேயே பக்கம் அமைந்திருக்கும்.
இந்தியாவுக்கான பக்கம் ஆங்கிலத்தில் அமைத்திருந்தார்கள். சட்டென்று ஒரே பக்கத்தில் முக்கிய நடப்புகளை அறிந்து கொள்ள உதவிய பக்கம், இன்று பார்த்தால் 'ஹிந்தி'க்கு உருமாறியிருந்தது.
'ஹிந்தி' தெரியாத என்னைப் போன்ற பலருக்கு இது ஏமாற்றம் அளிக்கிறது. வரும் நாட்களில், மற்ற மாநில பாஷைகளுக்கும் பக்கம் அமைக்க முயற்சி செய்வார்கள் என்று நம்புகிறேன்.
Sensationalize செய்வதர்க்காக இடப்பட்ட தலைப்பு அல்ல; தெரிந்தவர்களிடம் விவரம் அறியலாம் என்ற அவாவில் வைத்தது. விவரம் தெரியாதவர்கள் என்னைப் போல் Google news உபயோகிப்பவர்கள், கூகிளிடமே முறையிடலாம் - Google Contact Us page.


6 comments:
தேவையில்லாத பதிவு இது.
தமிழில் படிக்க ஆயிரம் தளங்கள் இருக்கும்போது என்ன கவலை?
MSN also giving news in tamil
முக்கியமான பதிவு தான். முதலில் உங்கள் தலைப்பை பார்த்து கொஞ்சம் பதறிப்போய்ப் பார்த்தேன்..ஆனால், நீங்கள் பயப்படுகிற அளவுக்கு கவலை இல்லை. இந்தியைத் திணிக்க கூகுளுக்கு தேவையும் இல்லை. கூகுளில் பல சேவைகள் உள்ளூர் மொழிகளுக்கு மாற்றப்படுவது தன்னார்வ மொழிபெயர்ப்பால் தான். இதில் இந்தி ஆர்வலர்கள் கொஞ்சம் முந்தி இருக்கிறார்கள். ஜிமெயில் கூட இந்தியில் கிடைக்கிறது. தமிழிலும் இந்த தமிழாக்கத் தன்னார்வ வேலை நடக்கிறது. கூடிய சீக்கிரம் பல சேவைகள் முழுக்கத் தமிழில் கிடைக்கலாம். இப்பொழுதே கூகுள் முகப்புப் பக்கம், தேடல் தமிழில் கிடைக்கிறது. இது குறித்த என் பழைய இடுகை -
http://thamizhthendral.blogspot.com/2005/12/google.html
நிச்சயம், இந்தியப் பதிப்புக்கு இந்தியை கூகுள் முன்னிறுத்தாது. தவிர, Google news personalised பதிப்பில் இந்தியச் செய்திகளை நீங்கள் ஆங்கில இடைமுகப்பிலும் படிக்கலாம்.
எனவே, இந்தித் திணிப்பு இல்லை. இந்தி முந்தி இருக்கிறது. அவ்வளவு தான். பல தன்னார்வலர்கள் சேர்ந்தால் தமிழிலும் விரைவில் வரும்.
மற்றபடி மேலே உள்ளவர் குறிப்பிட்டபடி யாகூ தமிழ் ஒரு மாற்று ஆகாது..அதில் வெறும் மசாலா செய்திகள் தான் வருகின்றன. கூகுள் செய்திகள் தரத்துக்கு ஈடாகாது
தலைப்பு அவசரத்தில் வைத்ததுதான்.
இந்தி திணிப்பு சரியான வார்த்தை அல்ல. இந்தி பிரதானப்படுத்தல் என்று வேண்டுமானால் கொள்ளலாம்.
yahoo, msn , google news போல் வராது. பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
தமிழார்வலர்கள் வேண்டியதை செய்வார்கள் என்ற நம்பிக்கையுடன்,
-BNI
திராவிட கழகங்கள் ஆரம்ப நாளில் செய்த ஹிந்தித் 'திணிப்பு' எதிர்ப்பு மேல் எனக்கு பெரிய வெறுப்பு இருந்தது.
நல்ல ஒரு பாஷையை சிறு வயதில் சரியாக படிக்க முடியாமல் போனது வருத்தம்.
ஆனால், இன்று கூகிளில், இந்தியா என்றால் ஹிந்தி மட்டுமே என்பது போல் தெரிந்த பக்கம், ஒரு பதட்டத்தை கொடுத்தது - தேவையில்லாத பதட்டமோ இது?
இதே பதட்டம் தான் அன்று தி.கழகங்களுக்கு இருந்திருக்குமோ?
மொழியில் தான் இப்படியென்றால்..
லினக்ஸ்(உபுண்டு) நிறுவும் போது "உங்கள் இடத்தை" தேர்வு செய்யச்சொல்லி வரும்.இந்தியா என்று குறிப்பிட "கல்கத்தா" வரும் , ஆதாவது நமது தலைநகரத்தையே மாத்திட்டாங்க!!
அங்கு வேலை செய்யும் யாரோ அவுங்க ஊர் பற்றை காண்பிச்சிட்டாங்க போல.
ஹிந்தி படிக்க ரொம்ப கவலைப்படவேண்டாம்,வடக்க கொஞ்ச நாள் இருந்தா போறும்,அவுங்களே சொல்லி கொடுத்துடுவாங்க.
Post a Comment