Friday, March 02, 2007

ஏமாற்றாதே, ஏமாற்றினாலும் ஏமாறாதே!

மாற்றப்படுதல் என்பது நாம் அனைவரும் வாழ்க்கையில் பல இடங்களில் சந்தித்த ஒன்றே.

சிறு வயதில் 'காக்கா தூக்கிட்டு போச்சு' என்று, அம்மா விளையாட்டாக, நம் கையில் சிக்கக் கூடாத பொருட்களை, ஒளித்து வைத்ததில் இருந்து தொடங்குகிறது இந்த ஏமாறுதல்.
அம்மா, நம் நன்மைக்காகச் செய்யும் ஏமாற்றுதல் போல், சின்ன சின்ன ஏமாற்றுதல்கள் பெரிய அளவில் பாதிப்புத் தராது.

பள்ளிப் படிப்பில், சில ஆசிரியர்கள், தனக்கு பிடித்த மாணவனுக்கு எப்பொழுதும் சற்று தூக்கலாகவே மதிப்பெண் போட்டு, நம்மை 'கீழேயே' வைத்திருக்கும்போதும், ஏமாற்றம் பெரிய அளவில் புரியாது.

வளர்ந்து வயதாகி, கல்லூரி, வேலை என்று எத்தனிக்கும் போது கிடைக்கும் பல ஏமாற்றங்கள் வேதனையையும் விரக்தியையும் தரத் துவங்கும்.
சமுதாயம் ஏற்படுத்திய ஏமாற்றங்கள் ஒரு பக்கம், தனி மனிதனால் தொடுக்கப்படும் துரோகங்கள் ஒரு பக்கம்.
மகளின் திருமணம், பிள்ளையின் கல்வி, வீடு வாங்க சேமிப்பு என்று குருவி போல் பார்த்துப் பார்த்து சேமித்ததெல்லாம், அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு, துரோகிகளிடம் கொடுத்து ஏமாந்த கூட்டம் பெரிது.

அரசியல் ஏமாற்றங்கள் சொல்லி மாளாது. இந்தப் பதிவு அதற்காக அல்ல.

இந்த ஏமாற்றங்களை வடிவமைத்து ஒரு தொழிலாகவே செய்பவனை என்னதான் செய்வது? இவர்கள் இப்படித் துணிய யார் காரணம் - அவர்களுக்கு ஏற்பட்ட ஏமாற்றங்களும் விரக்திகளும் இருக்குமோ? அல்லது, சுலப வழியில் நோண்டித் தின்னும் கேவல மனம், இயற்கையே அவனுக்குத் தந்ததா?

இப்படி ஏமாற்றிப் பிழைக்கும் கூட்டத்துக்கு உண்ணும் உணவு ஜீரணிக்குமா?
மன நிம்மதி கிட்டுமா?
கிட்டுமென்றால், நாம் மட்டும் என்ன முட்டாள்களா -- நேர்மை தவறாமல் வாழ்வதர்க்கு?

ஒரு வேளை, இந்த உதவாக்கரைகளை தெய்வம் நின்று கொல்லுமோ?

எது எப்படியோ, ஏமாற்றுபவர்களின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. அவன் தானாய் திருந்தப் போகும் சூழல் நம் வாழ்நாளில் இல்லை.
ஒட்டு மொத்த சமுதாய முன்னேற்றமும், கல்வி அறிவும், விழிப்புணர்வுகளும் தான் நம் மக்களை ஏமாளிகள் ஆகாமல் இருக்க உதவும்.

அதிக வட்டி ஆசையூட்டி, நுட்பமான வழியில் கொள்ளை அடிப்பவனிடம் படித்தவனும் ஏமாந்துதான் போகிறான்.
இதே ரீதியில், Internet மூலமாக phishing எனப்படும் திருட்டு நுட்பம் கொண்டு பல கோடிக் கணக்கில் களவு நடக்கிறது.

இதே போல் (இந்த பதிவு எழுதக் காரணமான), 1-million dollar லாட்டரி விழுந்ததாகவும், அந்தப் பணம் நமக்கு வந்து சேர, ஒரு சிரிய தொகையை ( $100 ) அவர்களுக்கு processing fee அனுப்ப வேண்டும் என்றும் விதம் விதமான கதைகளுடன் ஈ.மெயில் அனுப்பும் ஒரு திருட்டுக் கூட்டமும் உண்டு.
அயல் நாடுகளில் இருக்கும் பலருக்கு, இது ஏமாற்று வேலை என்று தெரிந்திருக்கும்.

இந்தியாவில் இருக்கும் நண்பர்களுக்கு, இந்தப் புதிய திருட்டு நுட்பம் பற்றி, அதிகம் தெரியாததால், ஏமாறும் வாய்ப்பும் அதிகம். (ஒரு நண்பன் ஏமாறும் விளிம்பில் நின்று கொண்டிருந்தான். நல்ல வேளை மற்றவரிடம் விசாரித்ததால் பிழைத்தான்).

நண்பர்களே, ஒன்று தெரிந்து கொள்ளுங்கள் -
In this world, absolutely NOTHING comes for FREE.

இந்த மாதிரி மடல்கள் மூலம் வரும் மறைமுகத் திருடர்களிடமோ அல்லது நிஜ வாழ்க்கை திருடர்களிடமோ உங்களின் கடின உழைப்பால் வந்த பணத்தையோ, பொருளையோ கொடுத்து ஏமாறாதீர்கள்.
If its too hard to be true, it is probably a fake!

நண்பர்களே, உங்கள் சுற்றத்தில் இதுபோல் யாரும் ஏமாறாமல் இருக்க விழிப்புணர்வு கொடுங்கள்.

இதோ ஒரு சாம்பிள் திருட்டு மடல், உங்கள் பார்வைக்கு:
NO_22 ORANGE GROVE
JOHNNESSBURG
SOUTH AFRICA
+27-782-630-326

EMAIL:livinusjomo
ATTN:

Dear sir/madam,

With all due respect My good friend. My name is MR.LIVINUS JOMO, the eldest son of MR FRANK JOMO of ZIMBABWE. It might be a surprise to you where I got your contact address, I got it from the South African Information Network Online (SAINO)/South Africa Trade Centre.And it is coming to you with good intention. During the current crises against the farmers of Zimbabwe by the supporters of our President,ROBERT MUGABE to claim all the white owned farms in our country, he ordered all the white farmers to surrender their farms to his party members and their followers.

My father was one of the great and best farmers in the country and knowing that he did not support the president’s political ideology, the president’s supporters invaded my father’s farm burnt down everything, shot him and as a result of the wounds sustained, he became sick and died after five days.

And after his death, I with my younger brother decided to move out of Zimbabwe for the safety of our lives to South-Africa which is a neighbouring country. BUT, before he died HE WROTE HIS WILL, which reads"(MY BELOVED SON ,I WISH TO DRAW YOUR ATTENTION TO THE SUM OF($20,000,000=00).TWENTY MILLION U.S DOLLARS WHICH I DEPOSITED IN A BOX WITH A SECURITY COMPANY IN JOHANNESBURG (SOUTH-AFRICA). IN CASE OF MY ABSENCE ON EARTH CAUSED BY DEATH ONLY". You should solicit for reliable foreign partner to assist you to transfer this money out of SOUTH AFRICA for investment purpose. I deposited the money in your name and it can be claimed by you alone with the deposit code. your mother has all the documents. Take good care of your mother and brother."

From the above, you will understand that the lives and future of my family depends on this money as much, I will be very grateful if you can assist us. I with my younger brother are now living in South-Africa as POLITICAL ASYLUM SEEKERS and the financial law of SOUTH-AFRICA does not allow ASYLUM SEEKERS certain financial rights to such huge amount of money .In view of this, I cannot invest this money in South-Africa, hence I am asking you to assist me transfer this money out of South-Africa for investment purposes. For your efforts,

I am prepared to offer you 20% of the total fund,5% for charity, while 5% will be set aside for local and international expenses and 70% will be kept for me and my family . Finally modalities on how the transfer will be done will be conveyed to you once we establish trust and confidence between ourselves. Looking forward to your urgent reply .For detailed information, please contact me on my e-mail address or via my telephone.

NOTE: THE KEY WORD TO THIS TRANSACTION IS ABSOLUTE CONFIDENTIALITY AND SECRECY. THIS TRANSACTION IS 100% RISK FREE. YOUR URGENT RESPONSE WILL BE HIGHLY APPRECIATED.

REMAIN BLESSED.

LIVINUS JOMO
{for the family}

7 comments:

said...

இந்த மாதிரி லாட்டரி ஃப்ராடுக்கு '419 Fraud'னு பேரே இருக்குங்க. நைஜிரியாவில இருந்து தான் இந்த மாதிரி திருட்டு மெயில் அதிகமா வருது. இதை தடுக்க அந்த நாட்டு குற்றவியல் சட்டத்தில பிரிவு 419ல கடுமையான தண்டனைகள் இருக்கு. அதனால் அந்த நம்பரையே இந்த திருட்டுக்கு பெயரா வச்சிட்டாங்க.

said...

மணிகண்டன், தகவலுக்கு நன்றி.
நைஜீரியாவில், சட்டங்கள் மதிக்கப்படுவதும் இல்லை, காக்கப் படுவதும் இல்லை.
copyright violation செய்யும் திருட்டு இணையதளங்கள் பல அங்கிருந்துதான் இயங்குவதாக எங்கோ படித்த நினைவு.

said...

for me also lot of like this mails coming!!!

said...

இது இப்படி என்றால்,இங்கு ஏமாந்தவர்கள் வேறு விதமாக.
ஆதாவது எங்க தாத்தா போய்ட்டார்,அவருடைய சொத்து இங்கு வங்கியில் அமெரிக்க டாலரா இருக்கு,அதை நாங்க எடுக்கமுடியாது ஆனா உங்க அக்கவொண்டுக்கு மாத்தமுடியும்.அப்படி மாத்திரத்துக்கு நீங்க அவருடைய நெருங்கியவர் என்ற சான்றிதழ் வேண்டும்,அதை தயாரிக்க முதலில் கொஞ்சம் பணம் அனுப்பவும்,பிறகு உங்களுக்கு நாங்கள் செலுத்தும்பணத்தில் இருந்து கழித்துக்கொள்ளலாம்.
இப்படி சொல்லி வாங்கி ஏப்பம் விட்டிருக்கிறார்கள்,இங்குள்ள மக்களிடம்.

said...

இதுல்லாம் கம்மி. என் மெயிலுக்கு வரது கணக்ககே இல்லை. 4 நாளுக்கு முன்னாடி யுகோ லாட்டிரில 4மில்லியன் பரிசுந்னு சொல்லி பல மெயில்வந்தது. ip address வச்சு இது எங்க் இருந்து வந்ததுனு ஒதிக்கிரலாம்.அதுகூட தேவையில்லை பாத்தவுடன் ஒதுக்கிடனும்.

இதுகூட பராவயில்லை .ஆபிஸ் ஐடில "வயாக்கரா வாங்கலையோ வயாக்காரானு","எங்க பேங்க்குல....." அப்படினு spam மெயிலா வந்து தொலைக்கும்
:)

இந்த மாதிரி மெயில ஓப்பன் பண்ணக்கூடாது. அப்படியே ஓப்பன் பண்ணாலும் எந்த லிங்கையும் கிளிக் பண்ணிரக்கூடாது. முக்கியமா எதாவது படம் இருந்து அது மேல கிளிக் பண்ணிரக்கூடாது. ஏன்ன ஒருதடவை அந்த லிங்க்கு போனா தெரிந்துவிடும் இந்த மெயில் ஐடி ஆக்டிவா இருக்குனு. அப்புறம் நீங்களே விருந்துவச்சு உங்க கம்யூட்டருக்கு ஹேக்கர கூட்டி வந்துருவீங்க.

"Phising " அவ்வளவாக கணினி அறிவு இல்லாம நெட்டுல பணம் பரிவர்த்தம் பண்ணா கோவிந்தா ஆக வேண்டியதுதான். இந்த மாதிரி பணம் சம்பந்தப்பட்ட பக்கங்களுக்கு IE உபயோகிக்ககூடாது. ஏன்னா அதுதான் ரொம்ப ஈஸி "பிஸ்" பண்ணுவதற்கு.
ஆனா ஏன்ன பண்ண நெறைய பக்கம் IE ல மட்டும்தான் ஒழுங்கா வேலைபாக்கும். Firefox,mozilla products ல சரியாவேலை செய்யாது. நம்ம தலைவிதி அவ்வளவுதான்.

said...

mohamed, வடுவூர் குமார், நாடோடி

உங்கள் கருத்துக்கு நன்றி.
ஏமாற்றும் கில்லாடிகள் பல வித்மாக ஏமாற்றிவருகிறார்கள்.
நாம் நமக்குள் இதைப் போன்ற புதிய உத்திகளை பகிர்ந்து கொண்டு, உஷாராக இருக்க வேண்டும்.

கஷ்டப்பட்டு தேடியது அடுத்தவன் திருடிச்செல்ல அனுமதிக்கக் கூடாது.

said...

'ஓசியில் எதுவும் வேண்டாம். நாம் உழைத்துக் கிடைப்பதே, நிலைத்தால் போதும்' என்ற எண்ணமிருந்து விட்டால், இந்த மாதிரி எத்தனை கொம்பன்கள் வந்தாலும் நம்மை வீழ்த்த முடியாது.