
பிற்படுத்தப்பட்டோர் இந்த திட்டத்தினால் முன்னேறிய பிறகு, இட ஒதுக்கீட்டின் அவசியம் இருக்காது என்று இதை நிறுவும் போதே அன்றைய தலைவர்கள் கூறியிருந்தார்கள்.
ஆனால், ஒவ்வொரு தேர்தலின் போதும் அரசியல் கட்சிகள் இடஒதுக்கீட்டை, துருப்புச் சீட்டாக பயன் படுத்தி, இதை அணையா விளக்காக காத்து வருகிறார்கள்.
தேர்தலில் ஓட்டு சேகரிக்கும் தந்திரமாக இதை பயன் படுத்த துவங்கியதால், அதற்க்கு பங்கம் விளைவிக்கும் எல்லா ஏற்பாட்டையும், இரும்பு கரம் கொண்டும், குள்ள நரி வித்தைகள் கொண்டும் தடுத்து வருகிறார்கள் நம் இன்றைய தலைவர்கள்.
100 குழந்தைகள் படிக்கும் பள்ளியில், 80 நோஞ்சான் குழந்தைகளும் 20 புஷ்டியான குழந்தைகளும் இருந்தார்கள்.
இந்த 80 நோஞ்சான் குழந்தைகளுக்கு புஷ்டி ஆகாரம் கொடுத்தால் நன்றாய் படித்து முன்னுக்கு வருவார்கள் என்று பல வருடங்களுக்கு முன் சட்டம் தீட்டி செயல் படுத்தினார்கள்.
இந்த நல்ல திட்டத்தினால் 80 குழந்தைகளும் புஷ்டி ஆனார்கள், முன்னேறினார்கள்.
பள்ளியில் மேலும் 100 குழந்தைகள் சேர்ந்தனர். இதிலும் 80 நோஞ்சான், 20 புஷ்டி.
இப்பொழுது, ஒட்டு மொத்தமாக 120 புஷ்டியும், 80 நோஞ்சான் பிள்ளைகளும் இருந்தனர்.
இதில், புஷ்டி ஆகாரம் 80 நோஞ்சான் பிள்ளைகளுக்கு வழங்கினால், ஏற்கனவே உண்டு கொழுத்த 80 பிள்ளைகளும் இதில் பங்குக்கு வருகிறார்கள்.
குழம்பிய நிர்வாகமும் இருக்கும் 80 உணவு பொட்டளத்தை 160 குழந்தைகளுக்கு பிரித்து வழங்கியது.
ஏற்கனவே புஷ்டியாகிய பிள்ளைக்கு பெரிய பாதிப்பில்லை. புதிதாக சேர்ந்த நோஞ்சான் பிள்ளை பாவம், புஷ்டியாக வழியே இல்லாமல் நலின்தே கிடக்கிறது.
ஏற்கனவே புஷ்டியாக உள்ளவர்களையும், சத்துணவு வழங்கி புஷ்டி ஆக்கப்பட்டவர்களையும், சரியாக பிரித்து அறிந்து உண்மையான நோஞ்சான் பிள்ளைக்கு சத்துணவு வழங்க வேண்டும்.
இதைச் சரியாக செய்யத் தெரியாமல் இருப்பது பள்ளிக்கூடத்தின் நிர்வாகக் கோளாறு.
பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள் பலர் முன்னேறி இருக்கிறார்கள். (கலாம், நாராயணன் உள்பட) இந்த முன்னேறியவர்களில் பலர், நாம் தான் முன்னேறிவிட்டோமே, இனி இந்த இட ஒதுக்கீட்டை நம் பிள்ளைகளுக்கு பயன் படுத்தாமல், உண்மையிலேயே நலிந்தவர்களுக்கு வழி விடுவோம் என்று தானாய் எண்ணி வழி விட மாட்டார்கள்.
பிற்படுத்தப்பட்டோரில் முன்னேறியவர்கள், முன்னேறாதவர்கள் யாரென கண்டறிந்து உண்மையில் வாடுபவனுக்கு சலுகைகள் கிடைக்கச் செய்வது அரசின் கடமை அல்லவா?
சாதி அடிப்படையில் வழங்கி வரும் சலுகைகள், பொருளாதார ரீதியில் வழங்கச் செய்தல் எப்படித் தவறாகும்?
அப்படி வழங்கினால் தானே, இடஒதுக்கீட்டின் உண்மைப் பலன் கிட்டும்?
இந்தியா மாதிரி ஒரு பெரிய நாட்டில், பொருளாதார ரீதியாக மக்களை அளவெடுத்து, வரிசை படுத்துவது கடினம் தான்.
கடினம் என்பதால், ஒரு செயலை செய்யாமல் இருப்பது சரியா?
இதைக் கூட செய்ய முடியாத நாம் எப்படி வளர்ந்து வல்லரசாகப் போகிறோம்? இதற்க்கு ஒரு திட்டம் தீட்டி செயல் படுத்த முடியாத மடையர்களா நாம்? நம்மை நம்பியா அயல் நாட்டிலிருந்து வேலைகள் வந்து குவிகின்றன?
இந்த மாதிரி சர்ச்சை கிளம்பும்போதெல்லாம், பந்த், கடை அடைப்பு, போராட்டம் என்று திசை திருப்பி, முன்னேற்றத்துக்கான வழி கிடைக்காமலே செய்து வரும் கொடுமை என்று தான் மாறும்?
அரசியல்வாதி தானாய் திருந்துவானா? உச்ச நீதிமன்றம் இதையெல்லாம் சரியான பாதையில் வழி நடத்தத்தானே இருக்கிறது? உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமிக்கவே இட ஒதுக்கீடு வேண்டுமென்பது, கண்மூடித்தனமான, சிறுபிள்ளைத் தனம்.
இணையத்திலும், எல்லா சர்ச்சைகளுக்கும், கண்மூடித்தனமாக எதிர்ப்பையோ ஆதரவையோ வழங்காமல், அறிவுபூர்வமாக ஒவ்வொன்றையும் அலசவேண்டும்.
ஊருக்குள் இருக்கும், அரசியல் சார்பானவர்களின் நெறிகெட்ட செயல், இணையத்திலும் பரவ வேண்டாம்.
பாவம் நமது ஏழைகள். அவர்கள் வஞ்சிக்கப்பட்டவர்கள். நமது அரசாலும், நம்மாலும். அவர்களுக்கு தேவயான சலுகைகள் கொடுத்து, அதை அவர்களுக்கு மட்டுமே முழுதாகக் கிடைக்குமாறும் வழி செய்வோம்.
இன்னும் எத்தனை காலம்தான், ஏழைகளை ஏழைகளாகவே வைத்திருக்கப் போகிறோம்?
Happy April 1st!
thoughts?
-BNI
தினகரனில் ப்ரசுரமான, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் சாரம்:

More links on this topic:
ஏன் வேண்டும் இடஒதுக்கீடு - குழலி
வாழ்க சனநாயகம் - நாகை சிவா
இட ஒதுக்கீடும், இடைக்காலத்தடையும் - ravi srinivas
இடஒதுக்கீடு இடைக்காலத் தடை: நம் கடமை - Prince Ennares Periyar.S
என் சமுதாயமே விழித்தெழு!! - சிவபாலன்
பந்த் - யார் முட்டாள் - IdlyVadai