Sunday, September 07, 2008
நாடும் நாட்டு மக்களும் அதன் தலைவர்களும்
நம் இன்றைய அரசியல்வாதிகளைப் பற்றி பெரிதாய் சொல்வதர்க்கு ஒன்றுமில்லை. அவர்கள் சுயநலப் பெருச்சாளிகள் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான்.
அரசியல் வாழ்க்கைக்கு வருவது பொதுநலத்துக்காக கிடையாது.
பணத்தை அள்ளிக் குவிக்கும் ஒரு மார்கமாக்கவே, இன்றைய தலைமுறை இளைஞர்களும், அரசியலில் சேர்வது கண்கூடு.
கவுன்சிலர் தேர்தல் முதல், பிரதமர் தேர்தல் வரை கோடிகள் செலவு செய்து, வன்முறைகளைத் தூண்டி, மக்களை முட்டாளாக்கி, ஆட்சிபீடத்தில் அமர்வது எதற்கு? ஒவ்வொரு வாய்ப்பு கிட்டும்போதும் ஒரு தொகையை கையகப் படுத்த அரசியல் பதவியை விட சிறந்த இடம் எது?
நாமும் இவர்களின் கேடுக்கு மறைமுகமாக துணை போகிறவர்கள்தான். கேள்வி கேட்டால்தானே அவர்களுக்கு பயம் வரும்?
நாம் முதுகெலும்பில்லா சோம்பேறிகள் தானே.
நாம் இப்படி இருக்கும் வரை நாடும் நாட்டு மக்களும் நாசமாய்த்தான் போவார்கள்.
ஒவ்வொரு வருடமும், இந்தப் பெருசாளிகள், மக்களை ஏமாற்றும் வித்தையை மேலும் மெருகேற்றி நம்மை பாதாள லோகம் இட்டுச் செல்கிறார்கள்.
தற்சமயம் நடந்து கொண்டிருக்கும் அணுமின் நிலையம் சார்பான விஷயங்கள் நம்மை அடிமுட்டாளாக்கிய கேலிக் கூத்து போல் தெரிகிறது.
பெரிய அளவில் நாட்டுக்கு நன்மை தரப் போகாத இந்தத் திட்டம் ஏன் தேவை என்ற முதல் கேள்வி ஒரு புறம்.
இந்தத் திட்டத்தில் கையெழுத்தாகப் போகும் அடிப்படை விதிகள் என்று அரசு தரப்பில் பிரதமர் பட்டியிலிட்ட பெரும் பொய்கள் ஒரு புறம்.
நாட்டையும் நாட்டு நலனையும் மண்ணில் புதைக்கவா இந்த படித்த மகானை சிம்மாசனத்தில் ஏற்றினோம்?
திட்டம் ஆரம்பிக்கப்பட்டாலும், அதனால் விழையும் கழிவை வெளியேற்ற என்ன செய்வது, விபத்து நடந்தால் பேரழிவு ஏற்படுமே அதைப் பற்றியெல்லாம் எண்ணியிருப்பார்களா இந்த பொய்யர்கள்? இனி எப்படி நம்புவது இவர்களை?
அமெரிக்க அணுசக்தி கழிவெல்லாம் இனி இந்தியாவில் எங்காவது ஒரு கிராமத்தில் கொட்டப்படாது என்று எப்படி நம்புவது?
இவர்களை நம்பி எப்படி இந்தியாவில் நிம்மதியாக வாழ்வது?
என்னடா உங்கள் தேவை? கோடிகள் செலவு செய்து 4% மின்சாரம் தயாரிப்பதற்கு பதில், நாட்டில் காட்டைப் பெறுக்கி, நீர்வளத்தை அதிகப்படுத்தி, நிலத்தடி நீரை உயர்த்தி, தொலைநோக்குப் பார்வையுடன் எதையாவது செய்ய முயற்சி செய்யாமல், ஏன் இந்த கேடுகெட்ட விபரீத புத்தி?
செய்யத் தெரியாதென்றால் உங்களுக்குத் தெரிந்த கணக்கு எழுதுவதோ, பாடம் எடுப்பதோ, வேறு ஏதாவது ஒரு வேலையை ஏதாவது பன்நாட்டு நிறுவனத்தில் சேர்ந்து செய்து தொலைக்கலாமே?
அட்டை மாதிரி இன்னும் எத்தனை காலம்தான் இந்த பதவி வெறியும் பண வெறியும் கொண்டு எங்களை உரியப் போகிறீர்கள்?
மன்மோகன் சிங் மக்களை முட்டாளாக்கிய விவரங்கள் இங்கே தருமியின் பதிவில் இருக்கிறது - மன்மோகன் சிங் - எட்டும் எட்டப்பனும்
நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும், இந்த வீணாய்ப் போனவர்களை கேள்விகள் கேட்காமல் கோரத் தாண்டவம் ஆட விடும் நாம் இருக்கும்வரை.
Subscribe to:
Posts (Atom)