Monday, January 29, 2007

விளம்பரம்: தமிழ்மணம் - நம்மால் ஏன் முடியவில்லை!

தமிழ்மணத்தில் 'நம்மால் ஏன் முடியவில்லை?' என்று அழகான தலைப்புடன் ஒரு விவாத களம் அமைத்துள்ளார் மா.சிவகுமார்.

ஜப்பான் குறுகிய காலத்தில் அடைந்த வளர்ச்சியை நம்மால் ஏன் அடைய முடியவில்லை என்பதே களத்தின் கரு.

அருமையான தலைப்பு. அனைவரும் சென்று தங்களின் கருத்துக்களை தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
நம்மால் ஏன் இதுவரை முடியவில்லை, என்ன செய்தால் முடியும், என்ன செய்தால் முடியாது என்று நன்றாக சிந்தித்துப் பதியுங்கள்.

சிங்கப்பூர், அமெரிக்கா போன்ற அயல்நாடுகளில் சுற்றும் போது, அவர்களின் வளர்ச்சியும் வாழ்க்கைத் தரமும் பெரும் வியப்பைத் தரும். நம் வாழ்க்கைத் தரத்தை எண்ணி பெருமூச்சு வரும். இவ்வளவு உயர்வான சுலப வாழ்க்கை அமைத்துக் கொடுத்த அவர்களது அரசாங்கத்தையும் தலைவர்களையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

அதே சமயம், அவர்களின் மக்களும் (பெரும்பான்மை) பொது வாழ்வில் ஒழுக்கமானவர்கள். சட்டதிட்டத்தை மதிப்பவர்கள். நேர்மையானவர்கள்.

உதாரணம்:
பேருந்து நிலையங்களிலும் இன்னும் பல இடங்களிலும், செய்தித்தாள் விநியோகிக்கும் பெட்டிகள் இருக்கும். ஒரு செய்தித்தாளுக்கு வேண்டிய $1 அங்கிருக்கும் 'உண்டியலில்' போட்டுவிட்டு தனக்கு வேண்டிய செய்தித்தாளை எடுத்துச் செல்வர். 'Honor system' என்று நம்பிக்கை அடிப்படையில் இயங்கும் இந்த முறை, நம்மூரில் நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒன்று.

இதே போல், இரவு 12 மணி ஆனாலும், வாகனங்களில் செல்பவர்கள், சிக்னலை மதித்துச் செல்வார்கள்.

நம்மிடம் என்ன இல்லை?
1) திறமையுள்ள பொதுநலம் விரும்பும் தலைவன் ( சிங்கப்பூரின் லீ-க்வான்-யூ மாதிரி )
சில நல்ல தலைவர்கள் இருந்தார்கள். அவர்களிடம், பொது நலம் இருந்தால், ஆட்சியாளும் திறமை இல்லை; ஆட்சி ஆளும் திறமை இருந்தால் பொது நலம் இல்லை; இரண்டும் இருந்தால், மக்களால் தேர்ந்தெடுக்கப் படுவதில்லை;
We lack visionories. தொலை நோக்குப் பார்வை கொண்டு நம்மை கரை ஏற்றும் வல்லமை யாரிடமும் இருந்ததில்லை.
அரசியலில் மட்டுமல்ல. வணிக நிறுவனங்களிலும் பெரிய சாதனை படைத்ததில்லை. Toshiba, sony, toyota, hitachi, panasonic, sharp போன்ற நிறுவனங்கள் படைத்த சாதனையில் இம்மி அளவும் நம் நிறுவனங்கள் படைத்ததில்லை. இந்த நிறுவனங்கள் எல்லாம் வானத்தில் இருந்து வந்ததல்ல. உழைப்பை மட்டுமே கொண்டு முன்னேறி இன்று உலகத்தைக் கைக்குள் வைத்திருக்கும் நிறுவனங்கள் இவை. நம்மால் முடிந்திருக்காதா? எது தடுக்கிறது. IIT, IIM, IISC எல்லாம் உருவாக்கும் புத்திசாலிகள் நினைத்தால் செய்யலாம். சிலர் செய்தும் வருகிறார்கள். ஆனால், ஜப்பானிய வளர்ச்சி அடைய எது தடையாக இருக்கிறது? Creativity? அரசியல்? இதுவரை பெயர் சொல்லும்படி ஒரு PRODUCT கூட நம்மூரில் இருந்து வெளிவரவில்லை.
Sony, toyota மாதிரி கூட வேண்டாம். கணினித் துறையில், out-sourcing வல்லரசாகி இருக்கும் நாம் ஒரு Windows போன்றோ, SAP போன்றோ ஏன் உருவாக்கவில்லை?

2) மக்களுக்குள் ஒற்றுமை
சாதீயமும் வர்ண பேதமும் பேசிப் பேசி நம்மை பிரித்தவர்கள், அவர்கள் பணி முடிந்து அவர்களுக்கு வேண்டியதை சாதித்து விட்டார்கள். அவன் ஏற்படுத்திய விரிசலை அடைய விடாமல், சில சக்திகள், அந்த விரிசலை பெரிது படுத்தி அதில் குளிர் காயத் துவங்கி உள்ளார்கள்.
ஜப்பானிலும், சிங்கப்பூரிலும் இந்த வர்ண பேதமெல்லாம் இல்லை. வீழ்ந்திருந்த காலத்தில் தலைவன் காட்டிய வழியில், ஒரு சக்தியாக பாடுபட்டு அவர்கள் இந்நிலையை அடைந்து உள்ளார்கள். ஊர் மக்களுக்குள் அங்கு காழ்புணர்ச்சி கிடையாது.
இந்தியாவில் அப்படியா? சாதி, மதத்தின் பேரில் நாம் நமக்குள் வளர்த்திருக்கும் பகை நம்மை கூடி வாழ விடாமல் செய்கிறது. ஒரெ சக்தியாக சேர்ந்து முயற்சி செய்யாமல், பெரிய சாதனைகளை அடைவது கடினம்.

3) தனி மனித ஒழுக்கம்
இரத்தத்தில் வந்த வியாதியா? இல்லை நம் இனத்தின் சாபக்கேடா தெரியவில்லை. பெரும்பான்மையான (நான் பார்த்தவரை) இந்தியர்கள் சுயநலவாதிகள். தன் வீடு, தன் பிள்ளை, தன் தேவை இது ஒன்றைப் பற்றித் தான் கவலை அவனுக்கு. அவன் வீட்டுக்கு வெளியே எது எப்படி இருந்தாலும் அவனுக்குக் கவலை இல்லை.
வீட்டுக்கு வெளியில சாக்கட ஓடுதா? கதவை அடைத்துக் கொண்டு மூக்கில் துணி கட்டிக் கொண்டு வாழ்ந்து விடுவான்.
தெருவில் ஒரு அப்பாவியை பத்து பேர் போட்டு அடிக்கிறார்களா? நமக்கு ஏன் வம்பு, வானத்தை பார்த்து பொழுதை கழிப்பான்.
தன் வேலை முடிய வேண்டுமா? சுலப வழியில் சென்று முடித்துக் கொள்வான்.
ரோட்டில் அடிபட்டு ஒருத்தன் கிடக்கிறானா? யாராவது பார்த்துக் கொள்வார்கள். நாம் ஏன் வம்பை விலை கொடுத்து வாங்க வேண்டும் என்று ஒதுங்குவான்.
ஏய்ப்பு - வரி ஏய்ப்பு முதல் வேலையில் ஏய்ப்பு வரை அனைத்தையும் அத்துப்படியாக எல்லா குறுக்கு வழிகளிலும் செய்வான்.

என்னதான் செய்வது?
நாம் இன்று இருக்கும் நிலையில், பெரிய ஆசையெல்லாம் படக்கூடாது. சிங்கப்பூர், அமெரிக்கா போல் வாழ்க்கை தரம் கிடைக்க பல ஆண்டுகள் ஆகும்.
அதுவும், நீங்களும் நானும் இன்று முயற்சியை தொடங்கினால்தான் கிட்டும்.
பெரிய புரட்சி எல்லாம் நாம் செய்யப் போவதில்லை.

நான், எனக்கு, என் குடும்பம் என்ற வட்டத்தை விட்டு பொதுஜனத்திர்க்காக வாழும் புனிதர்களாக over-nightல் மாறிவிட முடியாது.

உங்களால் முடிந்தது, தனி மனித ஒழுக்கம். அதை இம்மியளவும் பிசகாமல் கடை பிடியுங்கள்.
சட்ட திட்டங்களை மதியுங்கள்; தண்ணீரைச் சேமியுங்கள்; உங்கள் வீட்டுக்குள்ளாவது மரம் நடுங்கள்; முடிந்தவரை லஞ்சம் கொடுக்காதீர்கள்; உங்கள் நட்பு வட்டாரத்தை பெருக்கி, உங்கள் தெரு, உங்கள் அக்கம் பக்கத்தை சுத்தமாய் வைத்திருங்கள்; இல்லாதாருக்கு இயன்றதைக் கொடுங்கள்.

உங்கள் சுற்றம் சரியானால், உங்கள் வட்டத்தை பெருக்கி பக்கத்து வீடு, பக்கத்து தெரு என்று உங்கள் சேவையை தொடருங்கள்.
குழந்தைகளுக்கு நல்லொழுக்கமும், சீரிய சிந்தனையும் வர வகை செய்யுங்கள்.

நல்லவற்றை படியுங்கள். சாதனயாளர்கள் பற்றியும், அவர்கள் கையாண்ட விதம் பற்றியும் படியுங்கள். நல்ல ஊக்க டானிக் இவை.

உங்களால் முடிந்ததை செய்யுங்கள்!

அமெரிக்கனோ, சிங்கப்பூர்காரனோ அவன் வேலையை மட்டும் செய்து முடித்து விட்டு week-end சந்தோஷமாக கழிக்கலாம். அவன் இன்று நல்ல வாழ்க்கை வாழ அவனுக்கு முன்னிருந்த தலைமுறை வழி செய்துள்ளது.
நாம் அப்படி இருந்தால், நம் சந்ததியின் week-day கூட ஒழுங்காக இருக்காது. சில தியாகங்களை செய்து, மெத்தனத்தை குறைத்து, சோம்பலை முறித்து உங்களால் இயன்றதை செய்தால்தான், உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல வாழ்க்கை வாழும் சூழல் கிட்டும்.

வரும் தமிழ் புத்தாண்டுக்குள், உங்களால் முடிந்த ஏதாவது நல்லவை செய்து உங்கள் வெற்றிக் கதையையும், கையாண்ட விதத்தையும் பதியுங்களேன்? முடியுமா?

நானும் முயல்கிறேன்.

(தமிழ்மணம் தொடர்ந்து இது போல் உபயோகமான தலைப்பை விவாதகளத்தில் அமைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். அனைவரையும் பங்கு பெறுமாறும் கேட்டுக் கொள்கிறேன்). ஒருவரை ஒருவர் இகழ்ந்து நேர விரையம் செய்வதை குறையுங்கள்!

...வேடிக்கை மனிதரை போல் வீழ்ந்து விடாதீர்கள்...'


-BNI

Sunday, January 21, 2007

அழகான விநாயகப் பெருமானும், வீண் விதண்டாவாதங்களும்...


சமீபத்தில் படித்த ஒரு பதிவில் திரு.பெரியார் அவர்கள் ஆற்றிய உரையை காபி/பேஸ்ட் செய்து, பெரியாரின் கொள்கைகளை பரப்ப முயன்றிருந்தார்கள். உரையில் வழக்கம் போல் இறை மறுப்பும், இறை அவமதிப்பும் அடங்கி இருந்தது. திரு. பெரியார் பல நல்லவைகளை செய்ததாகத்தான் நான் எண்ணுகிறேன். சில விஷயங்களை மட்டும் வழக்கமான அரசியல்வாதியை போல் கையாண்டு வேண்டா வெறுப்பை வளர்த்துக் கொண்டவர்.

அவரின் சொற்பொழிவு இணையத்தில் பதிவது நல்லதுதான். ஆனால், அவற்றில் நல்ல கருத்துக்கள் சொல்லப்பட்டவைகளை மட்டும் பதியலாம். விதண்டாவாதங்கள் நிறைந்ததை ஒதுக்குதல் நலம்.

பலராலும் தாய் தந்தையருக்கு நிகராக எண்ணி வணங்கப்படும் தெய்வங்களை ஏளனம் செய்வதும், விபச்சாரிகள் என்பதெல்லாம் சிறு பிள்ளைத்தனம். வீண் விதண்டாவாதம்!

anyway, அந்த பதிவில் இட்ட பின்னூட்டம் பதிவாக இங்கே கொடுத்திருக்கிறேன்:

உங்களின் சுய கருத்துன்னு நெனச்சு 'அசிங்கமாய் எழுதுவதை தவிருங்களேன்' என்று சொல்ல வந்தேன்.

பாத்தா பெரியார் பேசினதா சொல்றீங்க. அட ராமச்சந்திரா, அவரே இப்படின்னா, தொண்டர்கள குறை சொல்லி ஒண்ணும் பிரயோஜனம் இல்லை.
அவரவர் நம்பிக்கை அவரவர்க்கு.
கடவுள் இல்லை என்பதும் ஒரு நம்பிக்கை. அதையும் மதிக்க வேண்டும்.

கடவுள் இல்லைன்னு சொன்னவர் என்பதர்க்காக அவர் சிலையை போய் செருப்பால் அடித்தால் நல்லாவா இருக்கும்? கோடி மக்கள் நம்பிக்கை வைத்திருக்கும் கடவுளர்களை விபச்சாரி என்பதெல்லாம் இங்கிதம் தெரியாத வரட்டு அரை கூவல்கள்.

உங்களுக்கு நம்பிக்கைகள் இல்லையா என்ன? உங்கள் குடும்பத்தினர் மீது இருக்கும் பாசம்; உங்கள் மனைவி மக்கள் மீது இருக்கும் நம்பிக்கை - இதெல்லாம் கண்ணில் தெரியாது தம்பி - மனதளவில் உணர்வது.

இந்த உணர்வை போன்றுதான் -கடவுள் இருக்கிறார்; ஆபத்தில் உதவுவார்; என்ற நம்பிக்கையும்.

கண்ணுக்கு தெரியாது என்பதால், சுற்றம்/நட்பு மீது பாசம்/நம்பிக்கை இல்லை என்றால் வாழ்வதே வீண்!

நடுக்கடலில் யாரும் இல்லாத ஒரு தீவில் மாட்டிக் கொண்டு (god forbid) வெளியே வர வழி தெரியாமல் இரண்டு நாள் தவித்தால், கடவுள் நம்பிக்கை தானாய் வரும். :)

கோயில்கள் இருப்பதால் தான் இன்னும் 'இழி' பிறப்பாக இருக்கிறீர்கள் என்பதெல்லாம் சுத்த மடமை. கையாலாகாத்தனம். சோம்பேறிப் பேச்சு.

அம்பேத்கார் எல்லாம் முன்னுக்கு வரலியா? கடவுள் சிலைகளை செருப்பால் அடிப்பதர்க்கு முன்னரே வளர்ந்து உயர்ந்தவர்தானே அவர். அவரை எந்த 'பார்ப்பானும்' தடுக்கவில்லையே. அவர் எழுதிய சட்ட திட்டங்களை தானே இன்னும் பின்பற்றுகிறோம்.

முயன்றால் முடியும்.

வாய் சொல்லில் வீரர்களாக மட்டும் இருக்காதீர்கள். விபூதி பூசிக் கொள்வதால், கீழ் நிலை மக்கள் இன்னும் கீழ் நிலையிலேயே இருக்கிறார்கள், விபூதி அவர்களை கட்டிப்போடுகிறது என்பதெல்லாம் பிதற்றல்கள்.
உழைப்பு உயர்வுக்கு வழி. இதை உலகிற்க்கு காட்டியவர்கள் பலர் இருக்கிறார்கள், அம்பேத்கார் உள்பட.

அவர்கள் எல்லாம் மூலையில் அமர்ந்து கொண்டு என்னை ஒதுக்குகிறான், என்னை இழிவு படுத்துகிறான் என்று கூறிக் கொண்டு நேர விரையம் செய்யவில்லை. வாழ்ந்து காட்டினார்கள்.

வெட்டிப் பேச்சை குறைத்து, ஆக்கபூர்வமாக ஏதாவது செய்யுங்கள்.
இறைவன் இல்லை என்ற நம்பிக்கை இருக்கிறதா - ஒ.கே. உண்டியலில் காசை போடாதீர்கள். இலவசக் கல்விச் சாலை அமைக்க பண உதவி கொடுங்கள்.
கீழ் நிலையில் உள்ள குடும்பங்களை தத்தெடுங்கள். அவர் குழந்தைகளின் கல்விக்கு உதவுங்கள். ஆளுக்கு ஒரு குடும்பத்தை கரை ஏற்றுங்கள்.

பொருளாதாரமும், கல்வி அறிவும் உயர்ந்தால் ஏற்றத் தாழ்வுகள் தானாய் மறையும்.

நம்மில் பலர், தாய் தந்தையரை விட விநாயகக் கடவுள் மீது அதிகம் பற்றும், பாசமும், பக்தியும் கொண்டவர்கள். உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ, இவ்வளவு கேவலமாக அந்தக் கடவுளை பற்றி பேசுவதும் எழுதுவதும் மிகத் தவறு. நாகரீகமான செயல் அல்ல இது.

முகமது பற்றி கிண்டலாக வந்த கார்டூன் ஏற்படுத்திய தாக்கம் நினைவிருக்கிறது இல்லையா? அமைதியாகப் பொறுத்துப் போவதால் சொறிந்து கொண்டே இருப்பது சரி அல்ல.

சிவன் ஏன் மண்டை ஓடு வைத்திருக்கிறான்; ஏன் பாம்பை அணிந்திருக்கிறான்; கிருஷ்ணன் ஏன் கோபிகைகளுடன் குலாவினான் -- எல்லாத்துக்கும் ஒரு காரணமும் அர்த்தமும் இருக்கு - தெரியாமல் ஹா ஹா ஹா என்று நையாண்டி செய்வது சிறு பிள்ளைத் தனம்.

பெரியார் ஏன் மணியம்மையை திருமணம் செய்து கொண்டு வீட்டம்மையாக்கினார்? திருமணம் செய்து கொண்டு ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ வேண்டும். விலங்கு போல் ஊருக்கு ஒன்று என்று வாழக் கூடாது என்ற கோட்பாடெல்லாம் எங்கிருந்து வந்தது. அதில் ஏன் நம்பிக்கை வைத்து அதை பின்பற்றினார் அவர்? இதெல்லாம் கூட நம் கலாசாரத்தில் இருந்து வந்ததுதானே. கடவுளை மட்டும்தான் இந்துக்கள் படைத்தனரா. வாழ்வியலை வேறு ஒருவன் படைத்தானா?

நல்ல கூத்து போங்க!

கண்ணுக்குத் தெரியாத கடவுள் மேல் பயமும் பக்தியும் இருக்கும்போதே நாட்டில் இவ்வளவு பிரச்சனைகள். இதில் பெரியார் வழியை ஊரே பின்பற்றி, கடவுள் இல்லை என்று வெற்று வாழ்க்கை எல்லாரும் வாழத் தொடங்கினால், காட்டுமிராண்டித்தனம் மிகுந்து ஒருவரை ஒருவர் அடித்துக் கொல்லும் நிலைதான் மிஞ்சும்.

முதலில் கல்வி அறிவு எல்லோருக்கும் கிட்டட்டும். கடவுள் வேண்டுமா வேண்டாமா என்பது பின் அவனவன் முடிவு செய்து கொள்ளட்டும். அதுவரை விநாயகனை பழிப்பதும், முகமதை நையாண்டி செய்வதும், பெரியாரை ஏளனம் செய்வதும், இன்னும் எரிந்து கொண்டிருக்கும் சாதீய வாதங்களும் வேண்டாமே!

ஆண்டவன் அருள் புரியட்டும்!"


-BNI

நான் படித்த விவகாரப் பதிவு இங்கே: Click

Friday, January 19, 2007

Art Buchwald - மரணத்தை வென்றவர்!




Art Buchwald - ஆங்கில தினசரிகளை படிக்கும் பலருக்கு பரிச்சயமான பெயர் இது. குறிப்பாக இந்து நாளிதழில் இவரின் ஹாஸ்ய துணுக்குகள் மிகப் பிரபலம்.

எழுத்துலகின் Oscarஆக கருதப்படும் Pulitzer பரிசை வென்றவர் என்ற சிறப்பும் இவருக்கு உண்டு.

சர்கரை வியாதியால் kidney பாதிக்கப்பட்ட நிலையில் dialysis முறையை கையாண்டு வாழ்ந்து வந்த Art B, கடந்த ஆண்டின் தொடக்கத்தில் dialysis தொடர வேண்டாம் என்று முடிவெடுத்து மரணத்தை வரவேற்றார்.

Dialysis நிறுத்திய நிலையிலும் கூட, பல நேர்காணல் மூலமாகவும், புத்தகம் மூலமாகவும் தன் நகைச்சுவைத் திறனை வெளிக்காட்டினார்.

கடந்த புதன் கிழமை திரு. Art Buchwald காலமானார்.

NPRல் இவரைப் பற்றி வந்த செய்தி ஸ்வாரஸ்யமானது: Columnist Art Buchwald Leaves Us Laughing

இவரின் துணுக்குகளில் இருந்து சில quotes:

  • As a humor columnist, I need President Nixon more than he needs me. I worship the quicksand he walks on.
  • Whether it's the best of times or the worst of times, it's the only time we've got.
  • Dying is easy; parking is impossible
  • The best things in life aren't things.
  • If you attack the establishment long enough and hard enough, they will make you a member of it.

Friday, January 05, 2007

உயிர்வலி by PhotoBala - விளம்பரம்



உயிர்வலி என்ற பதிவை இன்று படித்தேன்.
Balachandran என்ற பத்திரிகையாளரின் பதிவு அது.
அவர் profileல் "கிராமத்தான் என்பதில் பெருமை கொள்கிறேன். பத்திரிகையாளனாக பணி. முகத்தில் தாடியுடனும், கையில் காமிராவுடனும் எங்கேயாவது அலைந்து கொண்டிருப்பேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.

உயிர்வலி என்ற பதிவில் தெரு ஓரத்தில் படுத்துக் கிடந்த ஒரு 105 வயது முதியவரின், கஷ்டங்களையும், அவருடன் நடந்த உரயாடலையும் எளிமையாக எழுதி இருக்கிறார்.

கவனிக்க ஆள் இல்லாத முதியோர்கள் படும் துயரங்கள் பற்றி எடுத்துக் காட்டும் மிக நல்ல பதிவு. படித்து முடித்தவுடன் ஒரு 'கனம்' மனதை அழுத்தியது உண்மை.

அவர் எடுத்த புகைப்படங்களும் மிக மிக அருமை.

பின்னூட்டங்கள் ஒன்றும் அந்தப் பதிவில் காணாததால், I thought, you guys might have not seen the post.

So, உங்களுக்காக அந்த பதிவின் லிங்க் இங்கே: உயிர்வலி

இவரது பதிவில் இருக்கும் எல்லா புகைப் படங்களும் அருமை. (well, he is a professional, it better be அருமை :) )

பாலச்சந்தர், இதைப் படிக்க நேரிட்டால், நல்ல புகைப்படம் எடுப்பது எப்படின்னு ஒரு பதிவையும் போடுங்களேன். ரொம்ப உதவியா இருக்கும். நன்றி!

Thursday, January 04, 2007

point is to Return - நற்செய்தி!

நான் முன் ஒரு பதிவில் GoodNewsIndia.com நடத்தும் திரு.ஸ்ரீதரன் பற்றி சொல்லி இருக்கிறேன்.

மனிதர் 64 வயதிலும் துள்ளித் திரிந்து, நமது நாட்டின் பல மூலைகளில் அலட்டலில்லாமல் நல்லது செய்யும் Heroeக்களை தேடிப் பிடித்து அவர்களின் சாதனையை எழுதி வருகிறார்.

2006ல் இவர் தொடங்கி இருக்கும் ஒரு முயற்சி தான் 'point Return... point is to Return'.

17 ஏக்கர் கரிசல் நிலத்தை வாங்கி, அதை செம்மை படுத்தி, மரம் நட்டு, உதவாத நிலத்தை வளமான நிலமாக மாற்றுவதுதான் நோக்கம்.
சென்னையின் அடுத்துள்ள 'ஜமீன் எண்டதூர்' என்ற இடத்தில் இதற்கான நிலத்தை வாங்கி முதல் கட்ட வேலையை செய்து வருகிறார்.

இதை ஒரு 'ஆராய்சி' போல் செய்து, இது வெற்றி பெற்றால் இதைப் போல் பரவிக் கிடக்கும் பல கரிசல் பூமிகளை செம்மை படுத்த முடியும் என்பது அவர் கணிப்பு.
இதன் மூலம் சிலருக்கு வேலை வாய்ப்பும், பலருக்கு in-direct உபயோகங்களும் கிட்டும்.

இவர் எடுத்த இந்த முயற்சியின் முதல் கட்டம் முடிவடைய இன்னும் 5 வருடங்கள் பிடிக்கும். முழுவதும் முடிய 12 வருடங்கள் ஆகும் என கணக்கிட்டுள்ளார்.

இவர் மாதிரி பொது சேவை செய்வது மட்டுமே வாழ்க்கையாக வாழ்வது எல்லாராலும் முடியாத ஒன்று.
இவருக்கு இந்த மன ஓட்டத்தை கொடுத்தது எவரோ/எதுவோ, அதற்கு நன்றி.

இந்த புத்தாண்டில், இவர் எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெற, எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

நீங்களும், அவ்வப்பொழுது அவர் வலைத்தளத்திர்க்கு சென்று மற்ற விவரங்களை அறிந்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

வாய்ச் சொல்லில் மட்டுமே வீரராக நம்மில் பலர் இருக்கிறோம். ஸ்ரீதரன் போல் வெகு சிலரே அதிகம் பேசாமல் களமிறங்கி செயல் புரிபவர்கள்.
ஸ்ரீதரன் போல் பலர் கிடைக்க இறைவன் அருளட்டும்.

point Return வலைத்தளம் இங்கே: Click here

point Return பற்றி, ஸ்ரீதரனின் எண்ணங்கள் சில:

pointReturn aims to be a campus self-sufficient in water, energy, food and cash, created on land that was abandoned as useless.
Objectives of the project are many. These follow in random order:

♦Demonstrate techniques to reclaim wasteland
♦Demonstrate conservation and optimal use of natural resources, ecological sensitivity and sustainable consumption for living well
♦Become a profit centre
♦Inspire people to return to land
♦Revive sound practices of rural India, that have been over-run by ‘progress’
♦Document the pointReturn experience so that it serves as a guide for prospective back-to-landers
♦Serve as a retreat for people to recharge and re-inspire themselves
♦Serve as a learning centre for children and adults
♦Be a well-equipped facility for hands-on experimenters to develop their practical ideas in architecture and building, energy, useful devices, teaching and learning, solutions for vexatious municipal problems and marketable products derived from nature’s surpluses
♦Conceive, develop and perfect micro-businesses that differently-educated young people can take away and run
♦Demonstrate how when one plans for local geographies, alternatives to petro-fuels, food retail chains and distributed water supplies are possible