Saturday, April 21, 2007

நீங்கள் சிகப்பா, நீலமா, வெள்ளையா, மஞ்சளா ?

இதற்க்கு முந்தைய பதிவில், ஒரு மனிதனின் குணாதிசியங்கள் எப்படி பிறப்பிலேயே நிச்சயிக்கப் படுகிறது என்பதைப் பற்றி எழுதியிருந்தேன்.

அதில் வந்த பின்னூட்டத்தில், இதைப் பற்றிய மேல் விவரங்கள் தேடிப் பகிருமாறு கேட்டுக் கொண்டார் அனானிமஸ் ஒருவர்.

இணையத்தில் அலசியபோது, சுவாரஸ்யமான ஒரு பக்கம் கண்ணில் பட்டது.

நான் முந்தைய பதிவில் கூறியிருந்த 'Personality test' ஒன்று இலவசமாக எடுத்துக் கொள்ள அந்தப் பக்கத்தில் வசதி உள்ளது.

அதில் கேட்க்கும் சின்ன சின்ன கேள்விகளுக்கு விடை அளித்தால், நிங்கள் சிகப்பு, நீலம், வெள்ளை, மஞ்சள் நிறப்பிரிவுகளில் எந்தப் பிரிவை சேர்ந்தவர் என்பதை சொல்வார்கள்.

இந்தப் பிரிவின் விளக்கங்கள் இங்கே:

RED (Motive: POWER)—These are the power wielders. Power, the ability to move from point A to point B, and get things done is what motivates and drives these people. They bring great gifts of vision and leadership and generally are responsible, decisive, proactive and assertive.

BLUE (Motive: INTIMACY)—These are the do-gooders. Intimacy, connecting, creating quality relationships and having purpose is what motivates and drives these people. They bring great gifts of quality and service and are generally loyal, sincere, and thoughtful.

WHITE (Motive: PEACE)—These are the peacekeepers. Peace, or the absence of conflict, is what motivates and drives these people. They bring great gifts of clarity and tolerance and are generally kind, adaptable, good-listeners.

YELLOW (Motive: Fun)—These are the fun lovers. Fun, or the joy of doing something just for the sake of doing it, is what motivates and drives these people. They bring great gifts of enthusiasm and optimism and are generally charismatic, spontaneous, and sociable.

என் நிறம் நீலம். நீங்களும் முயன்று பார்த்து உங்கள் நிறத்தை தெரிவியுங்களேன். - Click here.


ஜெய்ஹிந்த்!

Thursday, April 19, 2007

REAL HEROES are BORN, not MADE

1) நம் அனைவருக்கும் உள்ள சில முக்கிய குணாதிசியங்கள், பிறப்பிலேயே நிச்சயிக்கப்படுகிறதாம்.

நாம் அமைதியானவரா, சாதனை செய்யத் துடிப்பவரா, கொடுமைக்காரரா, வீரரா, கோழையா, சோம்பேரியா என்ற நிர்ணயங்கள் 99% பிறக்கும்போதே நடந்து விடுகிறது என்பது உண்மையா?

உண்மையாகத்தான் இருக்கும்.

எங்கோ பிறந்து எப்படியோ வளர்ந்து பெரிய நிலைக்கு வளர்பவர்களும், தாழ்பவர்களும், அவர்களின் உழைப்பை மட்டுமே கொண்டு அந்த நிலை அடைகிறார்கள் என்பது உண்மைதான்.
ஆனால், அந்த உழைப்பை செய்ய வைப்பதும், செய்யாமல் இருக்கச் செய்வதும், தன் உடம்பில் உள்ள ஏதோ ஒரு காரணியின் வேலையாகத் தான் இருக்க வேண்டும் என்பது கணிப்பு.

ஒருவரின் இயற்க்கையான சக்தி என்ன (natural talent) என்பதை கண்டறிய, பல ஆராய்ச்சியாளர்கள், பல விதங்களில் வழிமுறைகளை வகுத்துள்ளார்கள்.
'Personality tests' எனப்படும் இவை, management நிலை ஆட்களை வேலைக்கு அமர்த்தும் முன்னர் அவர்களின் இயற்க்கை சக்தியை கண்டறிய பயன்படுத்தப் படுகிறது.

அதென்ன இயற்க்கை சக்தி, செயற்க்கை சக்தி என்று இருவித சக்தி இருக்கிறதா என்ன?

இருக்கிறதாம்.

ஒருவனுக்கு 'தலைவனாக' வேண்டிய குணாதிசியங்கள் இயற்க்கையில், இல்லாமல் போகலாம். ஆனால், தன் கடின முயற்ச்சியால், தன் இயற்க்கை குணாதிசியத்திலிருந்து சற்று மாறுபட்டு (bend from natural abilities), தலைவனாகும் திறமையை கற்றுணர்ந்து உண்டாக்கலாம் (acquired talent).
ஆனால், இந்த கற்றுணர்ந்து உண்டாக்கிய திறமையை நீண்ட காலம் பிரயோகித்தல், ஒருவருக்கு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ப்ரச்சனையை (stress) உண்டாக்கலாம்.

சிலரை பார்க்கும்போது, எப்பொழுதும், சிரித்த முகத்துடன், சந்தோஷமாக இருப்பார்கள்.
சிலர், எப்பொழுதும், ஒரு மன உளைச்சலுடன் இருப்பார்கள்.

இந்த முதல் ரகம், தங்கள், 'இயற்க்கை சக்தி'க்குட்பட்ட வேலையை செய்பவர்கள்.
இரண்டாம் ரகம், 'இயற்க்கை சக்தி'யால் செய்ய முடியாத வேலையை கொஞ்சம் சிரமப்பட்டுச் செய்பவர்கள். வெளியில் அப்பட்டமாக தெரியாவிட்டாலும், இது தான் இவர்கள் இருவருக்கும் இருக்கும் வித்யாசமாம்.

குப்பைமேட்டில் இருந்து, தலைவன் உருவாவதர்க்கும்,
அரண்மனையில் உதவாக்கரை உருவாவதர்க்கும் இந்த 'இயற்க்கை சக்தி' யே காரணமாய் இருக்கும்.

Nature has reasons for everything. நமக்குப் புலப்படாதவை பல இருக்கு.

ஒருவனின் திறமை, பிறப்பிலேயே முடிவு செய்யப்பட்டால், பிறகு எதர்க்கு உழைக்க வேண்டும் என்று நீங்கள் எண்ணலாம்.
வைரமே ஆனாலும், பட்டை தீட்டினால் தான் பிரகாசிக்கும்.
வைரம்தானே என்று அப்படியே விட்டுவிட்டால், கரிக்கட்டையாகத்தான் தோற்றமளிக்கும்.

வைரத்தைவிட சற்று குறைந்த ரக கல்லாயிருந்தால். அதை ஓரளவுக்குத்தான் பட்டை தீட்ட வேண்டும். நாமும் வைரம் ஆகலாம் என்று பட்டை தீட்டிக் கொண்டே இருந்தால், கல் உடைந்து விடும்.

எதையோ படிக்கப் போய், வேறு எதுவோ கண்ணில் பட வந்த வினை இந்த பதிவு.

புரிந்தவர்கள், மேல் விவரங்கள் கொடுங்கள்.
புரியாதவர்கள், கேள்விகளைக் கேளுங்கள்.

2) தலைப்புக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?

இந்த வார badnews, அமெரிக்காவில் உள்ள ஒரு கல்விச்சாலையில், 23 வயது "சோ" என்ற மாணவன், தன் சக மாணவர்களை சுட்டுக் கொன்றது.
காரணமே இல்லாமல், ஒரு வித மன உளைச்சலால் பாதிக்கப்பட்டு, இந்தக் கொடூரச் செயலைச் செய்துள்ளான் என்று சொல்கிறார்கள்.

Librescu என்ற எழுபது வயது பேராசிரியர், துப்பாக்கியுடன் வந்த "சோ"வை தன் வகுப்பறைக்குள் நுழைய விடாமல், வாசலை மறித்து நின்று தன் மாணவர்களை காப்பாற்றி தன் உயிரைக் கொடுத்தாராம்.
அதைப் படிக்கும்போதே கண்ணில் நீர் பெருகியது.
இந்த மனதிடம் உங்களுக்கும் எனக்கும் வருமா என்று தெரியாது.
நம்மில் பலர், தெருவில் ஒருவனுக்குத் துன்பம் என்றால், எதிர் திசையில் அவனை பாராமல் நடக்கப் பழகியவர்கள்.
Librescu போன்ற பெரியவர்கள், பெரியவராகவே பிறக்கிறார்கள். உருவாக்கப் படுவதில்லை.

911 சம்பவம் நடந்த அன்று United-93 என்ற விமானம் மட்டும், தீவிரவாதிகள் எண்ணப்படி, Washington Capitol கட்டடத்தில் இடிபடாமல், அதர்க்கு பல மைல் முன்னாலேயே விழுந்து நொறுங்கியது.
தன்னுயிர் பற்றிக் கவலைப் படாமல், பிற உயிருக்காக போராடிய, சில விமானப் பயணிகளின் தீரச் செயலால் நிகழ்ந்தது அது.
மிகவும் கடினமான சூழ்நிலையிலும், பிறரைப் பற்றி எண்ணி, தன்னுயிர் பற்றி கவலைப்படாமல் இருந்த HEROES நிச்சயம் பிறப்பிலேயே அப்படி வந்தவர்களாகத் தானிருக்க வேண்டும்.
(United93 என்ற திரைப்படம் கிடைத்தால் பாருங்கள்).

எஸ்.கே அவர்களின் கவிதையில் அனுஷா என்ற 10 வயது சிறுமியை பற்றிச் சொல்லியிருந்தார். பள்ளிக்குச் சென்ற வழியில், வாகனத்தில் அடிபட்டு மறைந்த துயரம் கொடுமை.
ஆனால், இந்த வயதிலேயே "நல்லவராய் இருந்தால் பத்தாது. நல்லது செய்ய வேண்டும்" என்ற உணர்வைக் கொண்டவளாய் இருந்திருக்கிறாள்.
அவள் மறைவுக்குப் பிறகு, அவளின் உடல் உருப்புக்களை தானமாய் கொடுத்த, அவளின் பெற்றோரின் மனம் எவ்வளவு உயர்வானது பாருங்கள். They are HEROES too, and they are born that way.

3) நாம் HEROES எல்லாம் ஆக வேண்டாம். ஆனால், நமக்குக் கிடைத்த இயற்க்கை சக்தியை வைத்து, கண்டிப்பாய், ஒரு மரம் நடுதலோ, ஒரு ஏழைக்கு கல்வி அறிவு கிடைக்கச் செய்வதோ, துப்புரவாக நம் சுற்றத்தை வைத்துக் கொள்வதோ செய்ய முடியும், சின்ன விதயாசங்கள் காட்டி 'வேடிக்கை மனிதனாக' வாழ்ந்து கழியாமல் இருக்க முடியும்.

நீங்கள் உயிரைக் கொடுக்க வேண்டாம். உங்கள் குழந்தைகளும், பேரக் குழந்தைகளும் வாழ நல்ல சூழலை உருவாக்கினால் போதும்.
GLOBAL WARMING என்ற slow poisoning வளர்ந்து கொண்டிருக்கிறது. 100 வருடங்களுக்குப் பிறகு தாக்கும் என்பதெல்லாம் போய், இப்பொழுது, 30 வருடத்துக்குள்ளரே, பெரிய சீற்றங்கள் நடக்கப் போகிறது என்கிறார்கள்.

நமக்கென்ன என்று மெத்தனமாய் இல்லாமல், உங்களால் முடிந்த 'சேமிப்பை' செய்து, இயற்க்கையை காப்பாற்றுங்கள்.

நானும் செய்கிறேன்.

Belated, தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

ஜெய்ஹிந்த்!

பி.கு: BadNewsIndia பக்கத்தில், ஊருக்கு உபயோகமான, நல்ல விஷயங்களை எடுத்துச் சொல்ல கட்டுரைகள் வரவேற்க்கப்படுகின்றன. உங்கள் பெயருடனோ, அனானிமஸாகவோ எப்படி வேண்டுமானாலும், உங்கள் விருப்பப்படி பிரசுரிக்கலாம்.
விருப்பம் உள்ளவர்கள், உங்கள் கட்டுரையை எழுதி எனக்கு அனுப்புங்கள். badnews_india at yahoo.com என்ற முகவரிக்கு. நீங்கள் எழுதுவதை மறு பிரசுரமாகவும் ஆக்கலாம். தெரியப் படுத்துங்கள்.

Monday, April 02, 2007

பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு - உதவி தேவை

Merit அடிப்படையில் இல்லாமல், ஒருவரின் சாதி அடிப்படையில் வழங்கப்படும் இட ஒதுக்கீடு எனக்கு சிறுவயதிலிருந்தே புரியாத புதிராகத்தான் இருந்தது.

ஓரளவுக்கு விவரங்கள் புரிய ஆரம்பித்த கல்லூரி நாட்களில், ஒடுக்கப்பட்டவர்களுக்காக உருவான இந்த இட ஒதுக்கீட்டின் அவசியம் புரியத் துவங்கியது.

ஆனால், 8 லாரி சொந்தமாக வைத்துக் கொண்டு 'தொழிலதிபராக' வாழ்ந்து வந்த 'ராஜாங்கம்' என்பவரின் மகனுக்கும் இந்த இட ஒதுக்கீட்டினால் லாபம் கிட்டியது.

சின்னக்கண்ணு என்ற வண்டிக்காரர். ஒரே ஒரு குதிரை வண்டி அதை இழுக்கும் நோஞ்சானான ஒரு குதிரைக்கும் சொந்தக்காரர். Mortuary யிலிருந்து, பிணத்தை வீட்டுக்கு எடுத்துச் செல்ல உதவும் கடின வேலை. இவர் மகனுக்கும் இந்த இட ஒதுக்கீட்டினால் லாபம்.

சின்னக்கண்ணுவுக்கு, கண்டிப்பாக இந்த இடஒதுக்கீட்டின் பலன் கிடைக்க வேண்டும். அவர் மகன் படிக்க உதவ வேண்டும். அவர் மகன் நல்ல வேலையில் சுலபமாகச் சேரவும் உதவ வேண்டும்.

ஆனால், ராஜாங்கத்திற்க்கு இந்த 'சுலப' வழி எதற்க்கு? அவர் பிள்ளை merit அடிப்படையில், survival of the fittest உலக நியதிப்படி, போராடி முன்னேறட்டுமே?

அவரை ஒதுக்கினால், சின்னக்கண்ணுவை போல் உண்மையாக கஷ்டப்படும் இன்னொரு நல்லக்கண்ணு பிழைப்பான் இல்லையா?

பொருளாதார அடிப்படையில், இட ஒதுக்கீடு வழங்குவதில் என்ன பிழை இருக்கிறது?
இதை முறைப்படுத்துவது கஷ்டமான காரியம்தான் - அதற்க்காக செய்யாமல் இருப்பது நியாயமா?

am I missing something?

தெளிவு படுத்துங்களேன். வேறு யாராவது இதைப்பற்றி பதிவு எழுதியிருந்தால் பின்னூட்டத்தில் தெரியப்படுத்தவும்.

எனக்குத் தெரிந்த யாருமே, இட ஒதுக்கீட்டுக்கு எதிராளி கிடையாது.

சரியான புரிதல் கிடைத்தால், அனைவரும் ஒரே குரல் எழுப்பலாமே?

உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்.

நன்றி.